என்னைப் பற்றி

வியாழன், டிசம்பர் 09, 2010

நாடகவிமர்சனம்

கலைப்படைப்புக்கள் மனிதர்களது வாழ்வு பற்றியும் அவர்களது புரிதல்கள், ஏக்கங்கள், கனவுகள்,கற்பனைகள், எனப் பல்வேறு விடயங்களினை புலப்படுத்தி நிற்கும். நாடகீய படைப்புக்களானவை தன் இயங்கியலை இன்று வரை நீட்ச்சித்து செல்வதற்கான காரணமாக அதன் நேரடி உயிர்ப்பு விசையினை குறிப்பிடலாம். இவ்வகையில் யாழ்ப்பான பல்கலைக்கழக கைலாசபதி கலையரங்கில் 10.09 .09 அன்று வெறுவெளி அரங்க்கக்குளுவினால் நாடகமும் அரங்கக்கலைகளும் ௦.15 ம் அணி மாணவர்களின் தயாரிப்பில் நிகழ்த்தப்பட்ட ஏழு நாடகங்கள் தொடர்பான கருத்துப்பகிர்வாக அமை கின்றது. பரிதாபம்,சுத்துமாத்து,நெறிப்பாடு,பரிகாரம்,சகிர்தயம்,தவிப்பு,வேர்,எனும் நாடகீய படைப்புக்களை எழுத்துருவாக்கதுடன் நெறியாள்கையினை அ.அஜிந்தன்,சு.தமயந்தி,வ.கிருஷ்ணகுமார்,பொ.சிவரஜசிவம்,த.சந்திரா,ச.நிதர்சன்,க.ரமணன்,எனும் மாணவ படைப்பாளிகள் படைத்துள்ளனர்.எமது வாழ்வியல் நீரோட்டத்தில் துன்பச் சிலுவையினைச் சதா சுமந்து கொண்டு கண்ணீருக்குள் வாழ்வியலினை தொலைத்துவிட்டு ஏதிலிகளாக உள்ள மக்களது வழ்வுப்பரிமானத்தில் சிரிப்பு விதையினை தூவுவதற்கு இச் சிறு நாடகங்கள் முயன்றபோதிலும் சோகங்களும் இழையோடிகளாக இணைந்து செல்கின்றன.பரிதாபம் நாடகமானது யதார்த்தத்தினை உடறுத்த வகையில் கதையமைப்பு காணப்படுகின்றது. இதன் கதையாக தந்தை (தேநீர் கடை உரிமையாளர்) வெளிநாட்டில் உள்ளமகன் மீது நம்பிக்கை வைத்து திருமண அலுவல்களினை மேற்கொள்கின்றார்.மாறாக மகன் வெள்ளைக்காறியினை திருமணம் புரிந்துவிட்டதாக தந்தைக்கு தொலைபேசியில் அறிவிக்கின்றான். அவ்வேளை தந்தை மிகவும் மனமுடைந்து உறவு பற்றிய புரிதலில் நம்பிக்கைஜீனம் கொள்வதாக அமைகின்றது. இந்நாடகத்தில் நடிப்பியல் சார்ந்து நோக்கும் போது முதலாளியாக நடித்தவரது நடிப்பு யதார்த்தத்துடன் இணைந்து செல்வதுடன் தரகராக பாகமாடியவர் இணை கொடுத்து நடித்துள்ளார்.அசைவியல்(Movement )சார்ந்தும் சிறப்பாக உள்ளது.மாறாக முடிவுறு கதையோட்டத்துடன் ஒட்டுறவாகாததகவும்விளங்குகின்றது. தொழிலாளி முதலாளியுடன் நடந்து கொண்ட முறை முதலாளி தொழிலாளி யுடன் நடந்து கொண்ட முறை என்பவற்றை குறிப்பிடலாம்.எனினும் சில குறைகளை தவிர்த்து நோக்கும் போது இப்படைப்பின் நெறியாளர் பாராட்டுக்குரியவர்.
நம்பிக்கையின் ஏமாற்றத்தினை கதையாடல் வெளியாக்கியுள்ளது சுத்துமாத்து."சுத்துமாத்து" எனும் நாடகம் அப்பாவித்தனமாக இருத்தல் ஏமாலியாக்கிவிடும் என்பதை /உறவுகளை உணர்வு பூர்வமாக நேசித்தல் என்பது ஏமாலியக்கிவிடுவார்களோ என்பதாக கதை அமைக்கப்பட்டுள்ளது. கடன்வாங்கியவராக பாகமடியவரது நடிப்பு இயல்பியலாக இருந்தது.தொலைத்தொடர்பு நிலைய பெண்ணாக நடித்தவர் பாத்திரத்தினை உணர்ந்து நடித்துள்ளார்.தொலைத் தொடர்புநிலையங்களில் பணியாற்றும் பெண் எதிர் நோக்கும் பிரச்சினை வெளிப்படுத்தப்பட்டுள்ளது.
"நெறிப்பாடு" எனும் நாடகமானது போதனைப்பன்புடன் வெளிப்படுகின்றது.அநீதிக்கு அநிதி தீர்வல்ல என்பதனை உளம் சார் அனுகளாக விளக்குகின்றது.

பரிகாரம் எனும் நாடகமானது எம் தேசத்தில் நடைமுறையில் நடந்தேறும் விடயங்களினைப் பேசிநிர்க்கின்றது. களவும் களவு தரும் வலியும் இதன் பேசு பொருளாகின்றன. நடிகர்களின் நடிப்பு சிறப்பானதாக இருந்தது.சில அதீத கற்பனை சார் புலப்படுத்தல்கள் காட்சிகளில் இடம் பெற்ற போதிலும் சிறப்பானதாக அமைகின்றது.
தவிப்பு நாடகமானது. சோகத்தின் இளையோட்டத்தின் ஊடாக கதை நகர்த்தப்படுகின்றது.இங்கே உறவு பற்றிய புரிதல்கள் கேள்விக்குள்ளாகின்றது?தேவைகளும் அத் தேவைகளை நிறைவு படுத்தி கொள்வதற்கு மட்டுமே உறவுகளின் துணையும் இல்லாதபோது உறவுகள் உருவளிப்பு செய்வது சமூகத்தில் சில மனிதர்களது சிறப்பியல்பு என்பதனை கோடிட்டு காட்டியுள்ளது.
சாகிர்தயம் எனும் நாடகமானது அதீத யதார்த்த காட்சியமைப்பும் அதீத கற்பனை நடிப்புடனும் நகர்த்தப்பட்டுள்ளது. கணவன் மனைவியிடையே காணப்படுகின்ற சண்டையும் திடீர் கோபமாற்றலும் சினிமாத்தனமே தவிர வேறொன்றுமில்லை. ஆனால் இசையோட்டம் சிறப்பானதாக இருந்தது.இது நாடக வோட்டத்தில் துணை நின்றது.மாறாக கதை தெளிவாக வடிவமைக்கப்படவில்லை.
வேர் எமது வாழ்வியலில் வேர்களினை தேடுதல் என்பதும் அத் தேடலில் உள்ள தாகங்களும் அத் தாகத்தில் கலைஞர்களின் பாகமாடல்களும் முதன்மையான பங்கு வகிக்கின்றன கலைஞன் என்பவன் காலத்தின் குறி காட்டி,பிரதிநிதி அவன் வாழ்வியல் என்பது சமூகத்திற்காகவும் சமூகத்தினை ஊடறுத்து அமைவதாகவும் விளங்கும்.
இவ்வகையில் தனிமைக்கலைஞனின் ஏக்கத்தினை படையல் ஆக்கியுள்ளார் இளம் படைப்பாளி.பழமைக்குள் புது முயற்சியாக வெளிக்கிளம்பியுள்ளது.இப் படைப்பு கலைஞர்களின் வலி நிறைந்த வாழ்வுகளிற்கு மருந்திடும் ஒத்தடங்கள் நினைவுகள் என்பதாக அமைகின்றது.
மனிதர்கள் நிராகரித்தாலும், காலங்கள் நிராகரித்தாலும் அவனது நினைவுகள் நிராகரியாது என்பதாகப் படைக்கப்பட்ட காட்சி சிறப்பானதாக உள்ளது. மாறாக சில குழப்பங்கள் ஏற்ப்பட்டன. அதாவது இக் கலைஞன் பெண் பாகமாடியா?ஆண் பாகமாடியா? எத் துறையில் தேர்ச்சி பெற்ற கலைஞன் என்பன ஐயுறு வினாக்களாக பார்வையாளர்கள் மனதில் மேற்கிளம்பியது.எனினும் வித்தியாசமான படையலாக உள்ளது.எமது மரபுகளை தேடுகிறோம் எனும் போர்வையில் மறைந்து போன எத்தனையோ கலைஞர்களின் வாழ்வில் இங்கே ஒரு கலைஞனின் தனிமையும்,உறவுகளால் தவிக்கவிடப்பட்ட அவனது வலியினையும் புடம் போட்டு காட்டியமை பாராட்டுக்குரியது. மேலும் யார் நிராகரித்தாலும் அதிகாரவர்க்கத்தினால் சாகடிக்கப்பட்டாலும் அவன் சாதித்தவற்றையும் அவனது நினைவுகளையும் எவனாலும் அளிக்க முடியாது என்பதினை இப்படையல் எடுத்து காட்டி நிற்கின்றது.இந் நாடக பகமாடிகளின் நடிப்பு சிறப்பானதாக இருந்தது.எமது மரபு சார் இசைக்கருவிகளான பறை,மணி போன்றன பயன்படுத்தப்பட்டமை சிறப்புக்குரியது.
ஏழு நாடகங்களும் வேறுபட்டதும் புதிய சிந்தனையுடனும் புதிய கருத்து நிலையுடனும் உருவாக்கப்பட்டுள்ளது.
S .T .அருள்குமரன்
வெள்ளிமலை இதழ் -08 மார்கழி 2009

திங்கள், டிசம்பர் 06, 2010

பள்ளிக்கூடம் திரைப்படம் ஒரு நோக்கு

மனிதன் காலம் தோறும் தனது அறிவு செலுமையினால் பல தொழில் நுட்ப சதனங்களினை வழங்கிக்கொன்டிருக்கின்றான். அத் தொழில் நுட்ப்ப சாதனங்கள் கலை நடவடிக்கை களுக்கு அடிப்படை ஆகின்றன.
தொழில் நுட்ப்ப சாதனங்களின் அடிப்படை உற்பத்தியாக விளங்கும் திரைப்படம் இன்று மனிதனை தனது ஆளுகைக்குள் கையகப்படுத்தியுள்ளது.
இத் திரைப்படங்களின் ஒரு பிரிவாக குறுந் திரைப்படங்கள் விளங்குகின்றன. இக் குறுந் திரைப்படங்கள் ஈழத்திலும் வளர்ந்து வரும் துறையாக விளங்குகின்றன.இதற்கான உற்பத்திவெளிகளாக பாடசாலைகள், பல்கலைக்கழகங்கள் ,கல்வியர்கல்லூரிகள் .......... ,என்பன விளங்குகின்றன.
இவ்வகையில் கந்தையா ஸ்ரீ கந்தவேள் அவர்களின் நெறியாள்கையில் வெளி வந்த "பள்ளிக்கூடம்" எனும் திரைப்படம் பற்றிய அனுபவப்பகிர்வாக இது அமைகின்றது.
தந்தை ,தாய்,மகள் என்பதாக ஓர் ஏழைக்குடும்பம். இக் குடும்பத்தில் மகள் புலமைப்பரிசில் பரீட்சை சித்தியடைகின்றாள். பெற்றோர் தமது மகளை நகர பாடசாலையில் கல்வி கற்பிக்க விரும்பு கின்றனர். ஆயினும் பொருளாதார நெருக்கீடு குறுக்கீடாக அமைகின்றது . பெற்றோர் தமது நிலையினை அதிபருக்கு தெரிவித்து குறைந்த நிதியுடன் பாடசாலையில் மகளை இனத்துக்கொள்கின்றனர். ஆயினும் நிறைய கனவுகளுடன் பாடசாலையினுள் நுழையும் மாணவிக்கு வகுப்பறையில் இடம் பெறும் சம்பவங்கள் அதிர்ச்சியானதாகவும் ,மன விரக்த்தியானதகவும் அமைகின்றது. இதனால் மனவிரக்தியடைந்து பாடசாலைக்கு போகமறுக்கின்றாள்.அவளுக்கு நினைவுகள் வலி தருவனவாகவும் விளங்குகின்றன.எனவே அவளுக்கு உளநிவர்த்தி அளிப்பதவும் அதன் பின்பு அவள் வைத்தியராக வருவதாகவும் இக் குறுந்திரைப்படம் அமைகின்றது.
கதையானது உளவியல் அணுகுமுறையுடன் அமைக்கப்பட்டுள்ளமையானது சிறப்பானதாகும்.ஆயினும் கதை வளர்க்கப்பட்ட முறையும் முடிவும் சில குறை பாடுடையதாக விளங்குகின்றது. ஆயினும் உளவியல் ரீதியான அணுகுமுறையில் கதை அமைத்தமை புதிய முயற்சியாக காணப்படுகின்றது.
சினிமா என்பது எப்போதும் கமெராவினால் உருப்பெருவதாகும் .எனவே கமெர கோணங்களிலேயே சினிமாவின் உயிர் காணப்படுகின்றது. இத் திரைப்படத்தில் கமெராவினால் கதை சொல்லும் உத்தி குறைவானதாகவே காணப்பட்டது. மேலும் ஒளியூட்டல் கட்சிகளுக்கனா நீட்டிப்பு தொடர்ச்சி என்பவற்றில் கவனக் செலுத்த வேண்டும் .
ஆயினும் புதிய துறை எனும் வகையில் இவை குறை பாடுகள் என்பதில் இருந்து புதிய படைப்பிற்கான ஓர் அடித்தளமாக கொள்ளமுடியும். எனவே இப்படைபளியின் முயற்சி வரவேற்கத்தக்கதாகும்.
S .Tஅருள்

புதன், டிசம்பர் 01, 2010

'உடையார்மிடுக்கு நாடகம்'

பேராசிரியர் க.கணபதிப்பிள்ளை அவர்களின் உடையார் மிடுக்கு எனும் நாடகமானது திரு க .ரதிதரன் அவர்களுடைய நெறியாள்கையில் கடந்த முப்பது பதின்ஒன்று இடண்டயிரத்து பத்து அன்று கைலசப தி கலையாரங்கில் இடம் பெற்றது . இன் நாடகமானது யதார்த்த வாதத்தினை அடிப்படையாக கொண்டு இடம்பெற்றது .கடந்தகால வாழ்வியலினை நிகழ்காலத்தில் தரிசிக்க கூடியதாக இருந்தது.