என்னைப் பற்றி

சனி, நவம்பர் 19, 2022

ஈழத்து நாடக உலகில் தவிர்க முடியாத ஆளுமை!
நெறியாளர், அரங்கு சார்ந்த தனது ஆற்றலினால் கற்றலில் ஈடுபடுகின்றவர்களது திறன்கள் வெளிவருவதற்கு ஆதார புள்ளியானர்கள்! அரங்கினை வலிமை மிக்க சாதனமாக சமூகமாற்றத்திற்கான கருவியாக பயன்படுத்த முடியும் என குறிப்பிடுகின்றவர்! நாம் அரங்கில் செயற்படுவதற்கு அரங்கு தொடர்பாககற்ற காலத்தில் நம்பிக்கை தந்தவர்களில் ஒருவரான கலாநிதி க. சிதம்பரநாதன் சேர் அண்மையில்இடம்பெற்ற செ.விந்தனின் கண்டாவளையான் வயது அறுபது எனும் பணிநயப்பு நூல் வெளியீட்டு விழாவில் கலந்து கொண்டுஉரையாற்றிய ஒளிப்பதவு ஆவணம் ஊடகவியலாளரும் அரங்கில் ஊடக பிரிவில் செயற்பட்டவருமான யாழ்.தர்மினி பத்மநாதன்[தர்மினி அக்காவின்] முகநூலினூடாக அவ் ஒளி ஆவணத்தை பார்க்ககூடியதாக இருந்தது. அவ் ஒளி ஆவணத்தில் கலாநிதி க.சிதம்பரநாதன் சேர் குறிப்பிடுகின்ற அரங்கு வலிமையான சாதனம் எனும் கருத்து சிறப்பான கருத்தாகும். ஆயினும் அவர் குறிப்பிடுகின்ற பலர் கருத்துக்கள் கலந்துரையாடல்களிற்கு உரியன. அப்பகைப்புலத்தில்அவ் ஒளி ஆவணத்தை முதல் நிலை தரவாக கொண்டு சில கருத்துக்கள் இங்கு முன்வைக்கப்படுகின்றன. இவை கருத்துக்களை கருத்துக்களால் முறியடித்து கருத்து சமர் புரிவதற்கான களமாக இல்லாது ஆக்க பூர்வமான கருத்துக்களை வெளிப்படுத்துவதற்கான களவெளியாக கொள்ளப்படுவதே ஆரோக்கியமாணதாகும். அவரது கருத்துக்களை முன்னிறுத்தி சில கருத்துக்கள் பதியப்படுகின்றன. இவைஎதிர்க்கருத்துக்கள் அல்ல புரிந்து கொள்ள முனைவதற்கான சந்தேகங்களாக கொள்ளமுடியும். நாடகம் சீரழிந்து விட்டது என எதை வைத்து சேர்குறிப்பிடுகின்றார். சீரழிந்து போனது எனின் அதற்கு யார் எல்லாம் பொறுப்பு? என்ன காரணங்களால் சீரழிந்து போனது? சீரழிந்து போகும் வரை தடுக்கமுடியாமல் போனதுக்கான காரணம் என்ன ? ஏன் அதை உங்களால்தடுக்கமுடியாமல் போனது என்பதற்கான நியாமான காரணங்கள் பற்றி கலந் துரையாடுவதே நாடகதுறையின் எழுச்சிக்கான அடிப்படையாகும். அரங்கு வலிமையான சாதனம் அதை ஏற்க நாடக துறை சார்ந்வர்கள் தயாரில்லை என்றால் அந்த நாடக காரர் யார்? நாடக துறை சார்ந்து கற்றவர்கள் தயார் இல்லையா? யார் அந்த நாடககாரர்? நாடக துறை சார்ந்தவர்களில் பெரும்பாலானவர்கள் உங்களது நெறியாழ்கையில் நாடகம் நடித்திருப்பார்கள் அல்லது உங்களது வழிகாட்டலில் அரங்க செயற்பாடு சார்ந்நு ஏதோவெருவிடயத்தில் பங்கெடுத்திருப்பார்கள். நாடகத்தை கற்று வெளியேறியவர்கள் நாடக துறை சார்ந்து செயற்படவில்லையா? அவர்களது செயற்பாடு நாடக துறையின் அழிவிற்கு காரனமா? எது என்பதை தெளிவு படுத்தப்பட வேண்டியது நீண்ட நெடிய நாடக செயற்பாட்டாளர் என்கின்ற வகையில் உங்களது கடமையாகின்றது. "நாடகம் படிக்கிற ஆட்களுக்கு அரங்கின்ர வலிமை தெரியாது." என குறிப்பிட்டால் அந்த வலிமைய உணரும் வகையில் பாடசாலை கலைத்திட்டத்தில் பாடத்திட்டங்கள் வடிவமைக்கப்படவில்லையா? அவ்வாறு வடிவமைக்கப்படவில்லை எனில் அப்பாடத்திட்டத்தினை வடிவமைத்தவர்களது தவறாக கொள்ளமுடியுமா? அதற்கு பொறுப்பு சொல்ல வேண்டியவர் யார்? பரீட்சை மையமாக வடிவமைக்கப்பட்டுள்ள பாடத்திட்டத்தில் பரீட்சை மைய செயற்பாட்டில் இருந்து வெளிவராத வகையில் நீங்கள் குறிப்பிடுகின்ற வலிமையினை எவ்வாறு உணர முடியும்? "நாடக ஆசிரியர்கள்கூடுகிற இடங்களில டிஸ்கசன் நடக்கிறேலை. அவர்களுக்கு இங்கு நடக்கிற மாற்றத்தை படிக்க ஆசை இல்லை." எதை வைச்சுக்கொண்டு நீங்கள் இந்த முடிவுக்கு வந்தீர்கள்? டிஸ்கசன் நடக்கிற இடங்களை தீர்மாணிப்பவர்கள் யார்? யார் நடத்துவதை டிஸ்கசனாக ஏற்றுக்கொள்கின்றீர்கள்? எந்தவகையில் டிஸ்கசன் நடந்தப்படவேண்டும் என நினைக்கின்றீர்கள்? ஏன் இத்தகைய ஓப்பின் போறத்தை உருவாக்க முடியாதா? "நாடகம் சிரழிஞ்சு போச்சுது." எண்டால் அந்த சீரழிவுகளில் இருந்து தப்பிப்பதற்கு வலிமையான சாதனமான அரங்கினை அரங்கிற்கே முதலில் பயன்படுத்தி வெற்றிகொள்வோம். இங்கே டிஸ்கசனங்களை ஏற்படுத்தலாம். நாடக ஆசிரியர்களை உருவாக்கிவர்கள் யார்? சீரழிச்சு போச்சு தெண்டால் அச்சீரழிவிகளுக்கு பொறுப்பு கூறவேண்டியவர்கள் யார்? அது சார்ந்த உரையாடல்களுக்கு தயார் நிலையில் எத்தனை பேர் உள்ளனர்? இத்தகைய நிலை க்கு காரணமாணவர்கள் யார்? நாடகம் இருவழி கலை வடிவம் எனில் தோல்விகளுக்கும் வெற்றிகளுக்கும் இரு வழி சார்ந்த வகையில் பொருள் கொள்ளப்படுவதே பொருத்தமான தாக இருக்க வேண்டும். குற்றம் சாட்டுதல்களினால் எதை சாதிக்க முடியும். ஏனைய துறைசார்ந்தவர்களுக்கும் இத்துறை சார்ந்தவர்களுக்கும் இடையிலான வேறு பாடு என்னவாக இருக்கும்? என பல வினாக்கள் எழுவது தவிர்க இயலாது. உரையாடல்களுக்கு நாம் தயார். புத்தாக்க அரங்க இயக்கம் இணையவெளியில் கதையாடப்படுகின்ற கதையாடல்களில் பல விடயங்கள்பேசப்படுகின்றது. வேடதாரியில் எழுதப்படுகின்றன. உரையாடல்கள் நடத்தப்பட்ட போது திறந்த மனநிலையுடன் எத்தனை பேர் பங்கு பற்றினார்கள் என்பதையும் உணர்ந்து செயற்படுதல் அவசியமானதாகும்..
எஸ்.ரி.அருள்குமரன்) நூல் -ஒளவை (நாடகபனுவல்) நாடக ஆசிரியர் இன்குலாப்.
இலக்கியங்கள் மறுவாசிப்பிற்கு உட்படுத்தப்படுகின்றபோது வேறு பரிணாமம் கொள்ளப்படுகின்றன. புரானிய காலப்படைப்புக்களை தற்காலத்தின் நோக்குநிலையில் மறு வாசிப்பிற்கு உட்படுத்தப்பட்ட வகையில் பல படைப்புக்கள் வெளிவந்திருக்கின்றன. நாடக பனுவல்களில் பல மறு வாசிப்பிற்கு உட்படுத்தப்பட்ட வகையில் எழுதப்பட்டுள்ளன. பிரளயனது உபகதை ஏகலைவனை வேறு கோணத்தில் பதிவு செய்கின்றது. இன்குலாப்பின்ஒளவை நாடகப்பிரதி ஒளவையினை முற்போக்கு ரீதியான பாத்திரமாக படைத்துள் ளார் . சங்ககாலத்தில் இருந்து பல காலங்களில் ஒளவை எனும் பெண் கவிஞர்கள் பாடல்களை யார்த்தபோதும் எல்லோரையும் ஒன்றாக்கி பாடல்களையும் யாரே ஒளவை எழுதிதை யாரோ ஒளவைக்குரியதாக பிற்கால சினிமாக்காரர் ஒன்றாக்கி குழப்பநிலையினை ஏற்படுத்தியதை சுட்டிக்காட்டும் நாடகஆசிரியர் தனித்துவமாக ஒளவையினை வேறொரு கோணத்தில் பதிவு செய்கின்றார். இவ்விடயம் பற்றி பின்வருமாறு பதிவு செய்கின்றார். 'ஒளவையைப்பற்றித் தமிழ்ச் சிந்தனையில் திணிக்கப்பட்ட பிரமையை உடைக்கவேண்டும் என்ற நோக்கத்திலேயே நாடகம் எழுதுவது பற்றி சொன்னேன்.வெவ்வேறு கலங்களில் வாழ்ந்ததாக சொல்லப்படும் ஒளவைகளைக்கலவையாக்கி ஒரே ஒளவையாக்கித்தந்தார்கள்.அல்லது வேறுபட்டகாலங்களில் வாழ்ந்த பெண்புலவர்கள் இஒளவைஎன்ற பெயரில் தங்களை அழைத்துக்கொண்டதாகவும் ஆய்வாளர் சுட்டுவர்.இந்தக்கலவையில் சங்ககால ஒளவை தொலைந்து போய்விட்டாள்.ஆடவரின் ஆதிக்கங்களை அறநெறிகளாக ஏற்றுக்கொண்ட பிற்கால ஒளவைகள் முன்னிறுத்தப்பட்டனர். ஒளவை இஒளவையாராக மாற்றப்பட்டாள்.இந்த மாயைகளை உடைத்துத் தொல் ஒளவையை மீட்கப்படவேண்டும் '....... (பக்7) இந்நாடக பனுவலில் உள்ள சில உரையாடல்கள் 1-சிறுமி:உண்டி சுருங்குதல் பெண்டிருக்கழகு ஏனையோர்: உண்டி சுருங்குதல் பெண்டிருக்கழகு 2-சிறுமி : உண்டி சுருங்குதல் ஆண்களுக்கு அழகோ சட்டாம் பிள்ளை:பாடம் படிக்கும் போது கேள்வ எல்லாம் கேட்டக்கூடாது 2-சிறுமி:பெண்களுக்கு ஏன் உண்டி சுருங்கவேனும்? ................................................ சட்டாம்பிள்ளை :எங்களை எதுத்துபேசக்கூடாது.மத்தபடி நாங்கள் சொல்லுறதை திரும்ப சொல்லனும். 2-சிறுமி: கிளிப்பிள்ளை மாதரி (பக்14) ஒளவை : இந்த வீரன் உனக்கு ஒரே மகனா? மூதாட்டி : ஆமாம்...அவன் நான் பெற்ற பிள்ளை...இதோ இவர்கள் அனைவரும் (நடுகற்களை காட்டி) நான்பெறாத பிள்ளைகள்..இவர்களை கருவுற்ற காலத்தில் மண் திண்றோம். இப்பொழுது இவர்களை மண் திண்று கொண்டிருக்கிறது. ஒளவை : அம்மா..உன் ஒரே மகனைக்களப்பலி கொடுத்ததில் உனக்கு வருத்தமில்லையா? மூதாட்டி : மக்களுடைய களச்சாவு எங்களை வருத்தப்படுத்துமோ? (பக் 50) பாணர் 1- என்ன ஒளவை...இந்த வம்பனிடம் என்ன பூசல்? ஒளவை : ஒன்றுமில்லை அதியனைப்பற்றி நான் எப்பொழுதும் பேசுவதால் அதியனை நான் காதலிக்கிறேனாம். பாணர் 1-அப்படி காதலித்தால் தான் என்ன தவறு ஒளவை :காதலிப்பது ஆண் பெண் இயல்புஇஆனால் ஆணிடம் பெண்ணும் இபெண்ணிடம் ஆனும் அன்பு காட்டுவது காதலாகிவிடுமா? (பக் 73) அதியனுக்காய் தொண்டைமானிடம் தூது சென்ற ஒளவையினது ஆளுமையினை புலப்படுத்துவதாக உள்ளது. ஒளவை :நாடு கவரவேண்டும் என்பது ஒன்று தான் அரசுகளுக்கிடையில் ஏற்படும் பகைக்குக் காரணம் இல்லையா? அதியன் : சரியாகச்சொன்னாய் ஒளவை ! தகடூர் குறித்துத் தொண்டைமானுக்கும் புதுபசி ஏற்பட்டிருக்கிறது ஒளவை போரில் மடிவதை மன்னனாகிய பெருமைக்குரியதாக கருதுகின்றேன்.என் மக்கள் இந்த பொருட்டு சாவது என்னை வருத்துகிறது.தொண்டைமானின் பகையால் என் மக்களுக்கு நேரும் கேடு கூடுவது குறித்து கவலைப்படுகின்றேன்...அத்துடன் தொண்டை நாட்டு மக்களுக்கு நேரிடும் துன்பத்தையும் நினைத்துப்பார்க்கின்றேன்.இதைத்தவிர்க நீதான் உதவ வேண்டும். ஒளவை : நான் என்ன செய்யவேண்டும்? அதியன்: தொண்டைமானும் பாட்டிலும் கூத்திலும் விருப்பமுடையவனாம்.அதிலும் உன் பாடல்களில் அளவற்ற ஈடுபாடு உடையவனாம்.அதனால்..அமைதிக்கான என் பொருட்டு அவனிடம் தூது செல்ல வேண்டும். (பக் 85) ஒளவை : பகைவரை குத்துதால் கங்கும் நுனியும் முறிந்து விட்டன....... (பக்89) பெண்ணிய நோக்கில் நாடக ஆசிரியரால் படைக்கப்பட்ட இப்பனுவல் நல்ல பனுவலாக காணப்படுகின்றது.

சனி, நவம்பர் 12, 2022

(எஸ்.ரி.அருள்குமரன்) ஆயிஷா ஒருவிஞ்ஞான நூலுக்கு அதன் ஆசிரியை எழுதிய முன்னுரை
ஆசிரியர்.இரா.நடராசன் வெளியீடு- புக்ஸ் ஃபார்சில்ரன் 21ம் அச்சு –செப்ரெம்பர் 2016 ஆயிஷா இந்தப்பெயருக்குள் புதைந்து கிடக்கின்ற துயரங்கள் ஏராளம். கேள்விகளால் உலகை ஆழ்பவர்கள் குழந்தைகள். கேள்விகளில் தான் தங்களது உலகம் எனநினைப்பவர்கள் மாணவர்கள். தேடல் உள்ள உயிர்களுக்கு தினமும் வாழ்வில் பசியிருக்கும் என்றார் கவிஞர் வைரமுத்து தனது பாடலொன்றில். கேள்விகள் பல விடைதிறப்பிற்கான களங்கள். இல்லையேல் மேலும் வினாக்கள் உருவாக்கப்படுவதற்கான வாய்ப்பு திறக்கும்.இதுஒரு தொடரிச்செயற்பாடு. உலகம் எப்போது உருவாகியது எப்போது முடிவுறும் என்கின்ற வினாக்களிற்கு மிக கட்சிதமாக விடைபகிரமுடியாதோ அதுபோன்று குழந்தைகள் உலகத்தினர்கேட்கின்ற கேள்விகளிற்கு விடை பகிரா முடியாதிருக்கின்றது என்பது யதார்த்தம்.ஆனால் அவர்களது கேள்வி கேட்கின்ற தாகத்தினை அதிகரிக்கவேண்டும் அத்தாகமே அவர்களை உயிர்ப்புள்ளவர்களாக வைத்திருக்க உதவும் ஆனால் வெறுமனே மனனமாக்குகின்ற கல்விப்புலச்சூழலிற்குள் இது எவ்வளவு தூரம் சாத்தியம் என்பது கூட எழுவினாவே. ஆயிஷாகுறுநாவலா? சிறுகதையா? எந்த வகுதிக்குள் உட்படுத்துவது? ஆனால் மாற்றத்திற்கான வாயில் திறப்பிற்கான முகவரி. ஆயிஷா இந்தப்பெயர் இன்று பலரது உதடுகளிலும் உச்சரிக்கப்படுகின்றது. இக்கதை ஏற்படுத்துகின்ற அதிர்வலைகள் ஏராளம். கதையைப்படிக்கின்றபோது ஏற்படுகின்ற நுன்துயர் வார்த்தைகளிற்கு அப்பாற்பட்டது. இதை வெறும் கதை என புறம் தள்ளிவிட்டு செல்ல முடியாத மனப்பிரமை ஏற்படுகின்றது. மாற்றத்திற்கான மடைதிறப்பினை ஏற்படுத்தவேண்டியவர்களே மாற்றமற்ற புறச்சூழ்நிலையை ஏற்படுத்துகின்றனர் என்கின்ற வலி நிறை மன உணர்வு மேலெழுகின்றது. இலக்கியம் மாற்றத்திற்கான செயலிஎனும் வகையில் இப்படைப்பு பல மாறுதல்களை கொண்டு வந்திருக்கும் அல்லது கொண்டு வரும்என்கின்ற நம்பிக்கையுடன்... இந்த ஆயிஷா எனும் படைப்பு அறிமுகமாகிய கணபொழுதினை நினைத்துப்பார்க்கின்றேன். பல்கலைக்கழகத்தில் கற்றுக்கொண்டிருந்த காலத்தில் நன்பர் மூலம் இந்த புத்தகம் வாசிப்பதற்கான வாய்ப்பு ஏற்பட்டது. ஒரே மூச்சில் என்று குறிப்பிடுவார்களே அதே போன்று வாங்கிய கனத்திலே புத்கத்தை வைத்துவிடாமல் வாசித்து முடித்த புத்தகம். இதற்கு காரனம் ஆயிஷாவின் துயரா?இ எழுத்தாளரா எழுத்துவன்மையா? பேசப்பட்ட விடயமா? எது என்று அப்போது சொல்ல முடியாத நிலை. ஆனால் அக்கதை பல செய்திகளை கிளறிவிட்டிருந்தது. அதன் அதிர்வலைகள் இன்றுவரை தொடர்கின்றது. அந்த புத்தகத்தை எனது தனிப்பட்ட நூலகத்திற்குசேமிப்பதற்காக தேடியபோது அதை பெற்றுக்கொள்ள முடியவில்லை. ஆயினும் 2017ம் ஆண்டில் பெற்றுக்கொள்ள முடிந்தது. சரி அவ்விடயம் நிற்க விடயத்திற்கு வருகின்றேன். இந்நூல் பற்றி டாக்டர் ஆர்.ராமானுஐம் பின் அட்டையில் பின்வருமாறு குறிப்பிடுகின்றார். 'இந்தக்கதையில் வரும் ஆயிஷh அவ்வளவு சுலபமாக எதையும் நம்பிவிடமாட்டாள். கேள்விகளைக்கேட்டு பூரணமாக விளக்கம் தேடுபவள். ஆயிஷாவின் அறிவுத்தாகம் ஆசிரியர்களுக்கு எரிச்சலை ஊட்டுகிறது. தாகம் இருந்தாலும் கல்வி மறுக்கப்படும் பெண் குழந்தைகள் எத்தனையோ அவர்களுக்கும் இந்தக்கதையில் வரும் ஆசிரியை போன்ற உறுதுணை கிடைக்க வேண்டும். நூலாசிரியர் இவ்வாறு பதிவு செய்கின்றார். 'இத்தனை வருடத்தில் பத்தாம் வகுப்பு அறிவியல் புத்தகத்தில் என்ன பெரிதாக மாறிவிட்டதுஇகாலையில் எழுந்து பல்துலக்குவதைஉற்சாகத்தோடவா செய்கிறோம்?எப்போதாவது புதிய பிரஷ;.அல்லதுபேஸ்ட்! இங்கே அதுவும் இல்லை.அதே ஓம்ஸ் விதி; ஒரோ சொல் பிரிதல் புதிதாகத்தெரிந்துகொள்ளும் ஆர்வமற்று ஓர் எந்திரமாய் கிரீச்சிட்டுக்கொண்டிருந்த என்னை என்முகத்தில் கேள்விகளால் ஓங்கி அறைந்தாள் ஆயிஷh.'( பக் 5) என குறிப்பிடுகின்றார் வகுப்பறையில் கற்றல்செயற்பாட்டினை வழமை போன்று மேற்கொண்ட ஆசிரியைக்குஆயிஷhவின் கேள்விக்கனைகள் வேறொரு பரிமானத்தை ஏற்படுகின்றது. வகுப்பறையில் வினவப்பட்ட வினாவின் தொடர்ச்சியாக கதையில் நகர்கின்ற போது... ' 'முடிவுறா எண்ணிக்கையிலான காந்தங்களை ஒரே நேர்கோட்டில் வெச்சா..எதிர் துருவங்களை கவரும் அதன் இயல்பு என்ன ஆகும்.' '..........' 'ஒரு காந்தத்தின் வடக்கு மறு காந்தத்தின் தெற்கை இழுக்கும்.ஆனால் இழுபடும் காந்தத்தின் வடக்கே அடுத்துள்ள காந்தம் ஏற்கனவே இழுத்துகிட்டிருக்கும் இல்லையா..மிஸ்?' 'ஆமா அதுக்கென்னன்ற?' 'என் சந்தேகமே அங்கதான் இருக்கு.எல்லாக்காந்தங்களின் கவர்திறனும் உன்றெனக்கொண்டால் அவை ஒட்டிக்கொள்ளத்தான் வாய்பே இல்லையே..எப்புறமும் நகராமல் அப்படியே தானே இருக்கும்' '................' 'ஏன் நாம இந்தப்பிரபஞ்சம் முடிவுறா எண்ணிக்கையிலான காந்தங்களை நேர்கோட்டில் வைத்ததுபோல் அமைக்கப்பட்டதா வெச்சிக்கக்கூடாது? அந்தக்கோணத்தில் பூமிங்கற காந்தத்த ஆராயலாம் இல்லையா? பதின்மூன்று வருடப்பள்ளி வாழ்கை பின் மூன்றாண்டு இயற்பியல்-பல்கலைக்கழகத்தில் இப்படியொருகேள்விளை நான் கேட்டுக்கொண்டதாக நினைவில்லை.'எங்கோ படித்ததாக ஞாபகம் என்றேன்.ஏதாவது சொல்லவேண்டுமே! 'வுhந வுசரவா ழுக ஆயபநெவள வெட்ரோட் ஸ்ரூடண்ட கிங்லீங் எழுதியது அருமையா இருக்கு.. படிக்கிறீங்களா மிஸ்..' 'இந்த புத்தகமெல்லாம் நீ படிக்கிறியா?' அவ்வளவு தான் -என் ஆயிஷh கிடைத்துவிட்டாள்.அந்த அதிர்ச்சியில் இருந்து இன்றுவரை மீள முடியவில்லை.அறை வாங்கியவளைப்போல புத்தகத்தை வாங்கிக் கொண்டு சரசரவெண ஆசிரியர் அறைக்கு நடந்தேன்.' (பக் 6-8) கல்விமுறைமையில் ஆசிரியர்களது நடத்தை முறை வன்முறையாக மாறிச்செல்வதனை வேதனையுடன் பதிவசெய்கின்றார் இவர் இதற்கு அடிப்படையாக பின்வரும் கூற்றினை குறிப்பிடலாம் 'கடவுளே எங்கள் குழந்தைகளை ஆசிரியரிடமிருந்து காப்பாற்றும்' (பக் 12) 'ஆயிஷாவின் உறவில் தான் நான் உனர ஆரம்பித்தேன்.எவ்வளவுதூரம் விஞ்ஞானமற்ற முறையில் நாம் நம் குழந்தைகளுக்கு விஞ்ஞானம் போதிக்கிறோம்என்று. நாம் எங்கே குழந்தைகளுக்கு ஒரு குறிப்பிட்டவிஷயத்தை உணர்ந்து கேள்வி கேட்க அவகாசம் தருகிறோம்? அவர்கள் கேட்கத்தொடங்கும் முன்னரே நாமாக முன்தயாரிக்கப்பட்ட கேள்விகளால் அவர்களை மூழ்கடித்து விடுகின்றோம்.அறிவும் வளருவதில்லை.பள்ளியில் ஆசிரியர் அதிகம் சொல்வது எதை? கையைக்கட்டு...வாயைப்பொத்து...' (பக் 17) '... கடவுளே ...அவரவர் அறிவைப்பயன்படுத்த அனுமதியுங்களேன்...'(பக்19) ..... ஆட்டோவில் ஆஸ்பத்திரிக்கு போவதற்குள் என் ஆயிஷh பிரிந்துவிட்டாள்.எப்பேர்பட்ட ஆயிஷh.நான் தாங்கிக்கொள்ள முடியாதவளாய் குழந்தைமீது பரண்டு அழுதேன்.இனி என்ன? உங்களுக்கு திருப்ப்தி தானே மிருகங்களே..என் ஆயிஷhவைஇஒப்பற்ற அந்த அறிவுக்கொழுந்தைக்கொன்று தீர்த்துவிட்டீர்களே.போங்கள்இஇனி உங்கள் வகுப்புக்கள் எளிமையானவை...அறிவுக்கு அங்கே வேலை இல்லை.' (பக் 22) இந்நாவல் எழுதுவதற்கான அடிப்படையாக திண்டிவனத்துக்கு அருகில் ஒரு கல்லூரி மாணவன் பாம்புக்கடிக்கு மருந்துகண்டு பிடிக்கத் தன் உடலையே பரிசோதனைச்சாலையாக மாற்றிக்கொண்டு மரணத்தை தழுவினான். இந்த உண்மைசம்பவத்தை அடிப்படையாகக்கொண்டு ஆயிஷா நாவலை இவர் எழுதியுள்ளார். 1985ம் அண்டு எழுதப்பட்டு பல வருடங்களாக பலராலும் ஏற்றுக்கொள்ளப்படாது இருந்த இந்நாவல் 1995 ம்ஆண்டு கனையாளிகுறுநாவல் போட்டியில்இரா.முருகன்இசுஐhத்தா ஆகியோர் நடுவர்களாக இருந்து கொண்டு தெரிவுசெய்யப்பட்டதாக அறியமுடிகின்றது. இன்று லட்சம்பிரதிகளை தாண்டி விற்பனையிலும் சாதனை படைத்து வருகின்றது. ஆயிஷாவை வெறுமனே கதையாகக்கொள்ளாது கற்றலில் ஆர்வம் இருந்தும் கல்விமுறைமையினாலும் சில ஆசிரியர்களது நடத்தையினாலும் கற்றலில் இருந்து தூரப்படுத்தப்பட்ட ஒவ்வொரு மாணவர்களது வலிநிறை வாழ்வியலில் ஆயிஷh இருப்பாள் என்பது துயர்மிகு கதை.....

ஞாயிறு, நவம்பர் 06, 2022

நூலின் பெயர்- ரோஸ் நூலாசிரியர்- ஆயிஷஇரா-நடராசன் வெளியீடு – புக்ஸ் ஃபார் சில்ரன்
ரோஸ் அதாவது றோசாப்பூ. பூக்களின் மீதான பிரியம் அலாதியானது.மரங்களை நாட்டுவதும் அவை வளர்ந்துவருகின்றபோது நாம் அடைகின்ற புளகாங்கிதமும் இபூத்துக்குளுங்குகின்றபோது அவற்றை பார்க்கின்றபோது மதில் ஏற்படுகின்ற மனமகிழ்சியும் உணர்ந்துகொண்டவர்களால் தான் அதை புரிந்துகொள்ளமுடியும். இங்கும் பூவின் மீது சிறுவன் காட்டுகின்ற பிரியமும்.அப்பூவின் ஸ்பரிசத்தினை உணரமுடியாது போகின்ற ஏக்கமுமே இக்கதை. இயந்திரமயமாகிப்போன வாழ்வியல் சூழலுக்குள் ஊடாhட முடியாமல் போன ஏக்கமும்.ஏட்டுச்சுரைக்காய் கறிக்குதவாது என்பதுபோன்ற குறிப்புநிலைக் கல்வி முறைமையில் உள்ள பலவீனங்கள் சுட்டிக்காட்டப்படுகின்றன. காலைவேளை மகனை பாடசாலைக்கு அனுப்புவதற்காக வேலைக்கு செல்கின்ற பெற்றோர் படுகின்ற சிரமத்தில் ஆரம்பிக்கின்றது.அவன் எழுந்து ரோஸ் பூத்திருக்கிது அம்மா அதைபாக்கவேனும் என மகன் ஆசைப்படல்.தாய் பள்ளிக்கு நேரமாகிறது என்கிறாhட.அவ்வேளை அவன் வீட்டுப்பாடம் செய்யவில்லை எனக்குறிப்பிடல். அவன் வீட்டுப்பாடம் செய்ய உதவுதல் உணவு தயாரித்தல் எனபரபரப்பானதான வீட்டுச்சூழல் காணப்படுகின்றதுஇத்தகைய படபடப்பிற்கு மத்தியில் அவனை தயார்ப்படுத்தி பள்ளிக்கு அனுப்பிவிட்டு தாம் அலுவலகம் செல்கின்றனர். பள்ளியில் ரோஸ் பற்றி ஒவ்வொரு பாட ஆசிரியரும் தமது பாடத்திற்கு ஏற்றவாறு கற்பிக்கின்றனர். அவன் எங்கட வீட்டில றோஸ் பூத்திருக்கிது மிஸ் என்கின்றான். அதற்கு அவர்கள் அந்த கதையை விட்டிட்டு படிப்பில கவனம் செலுத்து என்கின்றனர். ஒவ்வொரு நிலையிலும்அவன் முகம்கொடுக்கின்ற ஏக்கங்கள் கதையில் பதிவு செய்யப்படுகின்றன. பள்ளி நிறைவடைந்த பின்னர் கராத்தே வகுப்பிற்குசெல்லல்.அலுவலக கடமை நிமிர்தம்பெற்றோர் காலதாமதமாகவரல். இனி இரவு உணவுசமைத்தல் கடினம் என ஹொட்டல் ஒன்றில் உணவருந்துதல். வீட்டிற்கு வருகின்ற போது அம்மா றோஸ் வாடிச்சிது எனக்குறிப்பிடல். இந்த ஏக்கத்திலோ என்னவோ அவனுக்கு ஜீரம் (காய்ச்சல்) அடிக்கின்றது. அவன் அம்மா ரோஸ் இனியும் பூக்குமா எனக்கேட்டல்..தாய் பூக்கும் என சொல்லல். அவனுக்குமருந்து கொடுத்தல் நாளைக்கு என் ஆபீஸ் போச்சா எனக்கேட்ட்டல் என்பதாக அமைகின்றது. மிஸ்... மிஸ்...நான் சொல்லுறன்மிஸ்..எங்க வீட்டில ஒரு செடில நிஜமாகவே ரோஜாபூத்திருக்கிது மிஸ்...நான்பாhத்தேன்மிஸ்..ரெட் கலர் மிஸ்;.. செடில ரோஸை பார்க்கிறதுபெரிசில்லை.. ரோஸ்.ரோஸ்ன்னு எழுதிப்பாரு ஸ்பெல்லிங் மிஸ்டேக் இல்லாம...கரெக்டா எழுதிப்பழகு..புரியுதா..உட்காரு..உடனே ரோஜாவோட சிவப்பும் இல்லாம லில்லியோட வெள்ளையும் இல்லாம ஃப்ளோரா புதுசா ஒர பூவை உருவாக்கியதாம்...அதுதான் லோட்டஸ்..சொல்லங்க.. ஆர்...ஓ..எஸ்..இ..ரோஸ்....எல்..ஐ..எல்.ஓய்...லில்லி..(பக்23) பூக்காத தாவரம் அதுக்கு மேல வளராதா மிஸ்.. அதை வெட்டி எடுத்து வைக்க வேண்டி வரலாம்..உதாரணத்துக்கு ரோஜா ரோஜா செடியை வளர்க்க பதியம் போடுவார்கள் . அதெல்லாம் எனக்கு வேண்டாம்.. புக்குல இருக்கிறத படி..போதும். மிஸ்... என்னடா.. பூக்காத செடிய வெட்டி வைக்க வேண்டி வரும்னு சொல்றீங்க..வெட்டி வைச்ச ரோஜ பூக்குதே.. அது எதுக்கு மிஸ்... ஆமா மிஸ் ரோஜா எதுக்கு பூக்குது.. மிஸ்...மிஸ்.. எங்கவீட்ல ஓரு செடில நிஜமாவே ஒரு ரோஜா பூத்திருக்கு மிஸ்..ரொம்ப அழகா இருக்கு மிஸ்.. நான் பாத்தேன்... கொஞ்சம் விட்டா..ரொம்ப நான்சென்ஸா கேள்வி கேப்பீங்களே..எடு..புக்க..படி... ரோஸ்..ஈஸ்...எ..ஃப்ளவரிங் பிளான்ட்.(பக் 29-30) ........................................................................................... மிஸ் ரெட் சாயில்லதானே ரோஜா வெடி வளரும்... ஆ..ஆமாம்.. மிஸ்..தேவா வீட்டில இன்னிக்கு ஒரு செடில ரோஜாப்பூ பூத்திருக்கு மிஸ்... ஆமா மிஸ்..அழகா இருக்கு..நான் பாத்தேன் மண் வளம்.. சாயில் பவர்..நல்லாயிருந்தா ரோஜா பூக்கர்துக்கு என்ன?நல்லாவே பூக்கும்.. ரோஜா என்ன கலர்மிஸ்.. ஏய் சாயில் பத்தி பாரு..கண்ட கண்ட கேள்வியெல்லாம் கெட்டுக்கிட்டு..ஸோ..ரெண்டு வகையான சாயில்..அலுவியல சாயில்..ரெட் சாயில்..அலுவியல்...ஸ்.பெல்லிங் சொல்லுங்க பார்ப்போம்.(பக் 37) அம்மா நம்ம ரோஜா செடி இன்னொரு பூ பூக்குமா.. ஏம்மா அந்தப் பூ வாடிப்போச்சு.. நீஇன்னும் தூங்கலியா..மணி.. என்ன? அம்மா எனக்கு ரோஜாவ பாக்கனும்மா...நிஜரோஜா ..மிருதுவான ரோஜா..வாசனை வர்ற ரோஜா..அதை தொட்டுப்பாக்கணும்மா.. என்னங்ககொழந்தைக்கு நல்லா ஐPரம்அடிக்குது எழுந்திருங்க.. நம்ம வீட்டிலயே செடில பூத்த அழகான ரோஜாஜா..எனக்கு வேணும்ம. ஆமா..ஜீரம் அடிக்குது.. ரோஜாக்காரன் கார்த்தால வந்தான் இல்ல..ஒண்ணு வாங்கிக் கொடுத்தா என்ன? பாருங்க.. கொழந்தையை எப்படி பாதிச்சிருக்கு.. எழுந்து இந்த மாத்திரய போட்டுக்கடா..அழக்கூடாது.. நாளைக்கு என் ஆபிஸ்போச்சா.. எனக்க நிஐ ரோஜா தான் வேனும்.. நம்ம வீட்டில செடில மறுபடி ஒரு ரோஜாப்பூ பூக்குமாம்ம..சொல்லுமா.. உம்..உம்.. கட்டாயம்பூக்கும்டா..என் செல்லமே.. இப்ப தூங்கும்மா..தூங்கு..நேரு மாமா மாதிரி தினமும் ஒரு ரோஜா குத்திக்கிட்டுகோகலாம்..எல்லாம் உணக்குத்தான். தூங்கு..அழாதப்ப.. (பக்62-64) இந்நூலாசிரியர் ஆயிஷா .இரா.நடராசன் 2014ம் ஆண்டிற்கான சாகித்ய அகாதமி (சிறுவர் இலக்கியம்) விருது பெற்றவர்.தமிழின் முன்னனி அறிவியல் வரலாற்றாளர்.இயற்பயில்இகல்விஇமேலான்மைமற்றும் உளவியல் ஆகியவற்றில் முதகலைப்பட்டம் பெற்ற இவரது நூல்களில் உள்ள எளிமையும்.அங்கதம் கலந்த நகைப்புணர்வும் முக்கிய அறிவியல் எழுத்தாளராக அறியவைத்துள்ளது. நூல் பற்றி அட்டைப்படத்தில்பின்வரும் குறிப்பு உள்ளது. 'இன்றைய கல்வி முறையும் வாழ்க்கைச்சூழலும் வளர்ச்சி குறித்த சமூக மதிப்Pடுகளும் எப்படி கேள்விகளையேவிரும்பாமலும் தேடலை முன்வைக்காததுமாக இயங்கி வருகின்றது என்பதையும்அறிவுசார் தேடல் உள்ள ஒரு குழந்தை எப்படி இந்த கல்வி முறையால் வதைபட வேண்டியிருக்கின்றது என்பதையும்ஆசிரியர் ஆயிஷா இரா.நடராசன் தனத 'ரோஸ்'என்ற கதை மூலம் முன்வைக்கின்றார்.'
நூலின் பெயர்- செகவ் வாழ்கிறார் நூலாசிரியர்- எஸ்.ராமகிருஷனன் வெளியீடு – உயிர்மை பதிப்பகம் கலைப்படைப்பாளிகளிற்குமரணம்இல்லை.அவர்களது உயிர் உடலில் இருந்து பிரிந்தாலும் உணர்வுகளில் வாழ்ந்துகொண்டிருப்பார்கள். அவர்களது படைப்புக்களின் ஊடாக அவர்கள் எப்போதும் ஜீவிக்கப்படுவார்கள். எழுத்தாளர்களது எழுத்தின் உயிர்பு அவர்களை தலைமுறை தாண்டி இருப்புக்கொள்ளவைக்கின்றது. அவர்கள் எழுத்தாக்கத்தில் பதிவுசெய்தவிடயங்கள் ,சமூகநேசிப்பு, சமூகம் எவ்வாறு எழுர்ச்சியடைந்து மாற்றமுறவேண்டும்,சமூகத்தில் புரையோடிப்போயுள்ள பிரச்சினைகள் எவ்வாறு களையப்படவேண்டும் என்கின்ற ஏக்கங்கள் , தமது படைப்பில் இழையோட விட்டிருப்பதன் ஊடாக அவர்கள் காலம் ,தேசம்கடந்து வாழ்ந்துகொண்டிருப்பார்கள். இவ்வாறு காலம் கடந்து மக்கள் மனங்களில் சிம்மானம் போட்டமர்ந்திருக்கின்ற எழுத்தாளராகஅன்ரன்செகவ் விளங்குகின்றர். இவர் சிறுகதையாசிரியர்,நாவலாசியார்,நாடகஆசிரியர்,மருத்துவர், தனது எழுத்துக்களின் ஊடே சமூகமாற்றத்தை நேசித்தவர். ரஷ;யாவில் பிறந்த இவர் உலகெங்கும் கொண்டாடப்படுகின்ற எழுத்தாளன். இவர் எழுத்துக்களின் ஊடே மெல்லிதான துயரம் அழுத்திச்செல்வதனை வாசிப்பவர்கள் புரிந்துகொள்ள முடியும். யாழ்.பல்கலைக்கழகத்தில் படிக்கின்ற காலம் முதலே செகவ் மீது இனம்புரியாத ஈர்ப்பு இருந்தது. .காரணம்தெரிவதில்லை.அவரது சிறுகதைகள்,நாவல்களை விரும்பி எடுத்துப்படிப்பதுண்டு. அவரது கதைகளில்இழையோடிப்போயுள்ள உளவியல் ரீதியான பார்வை ஏதோ ஒரு வகையில் ஈப்பினை ஏற்படுத்தியிருந்தது. அவர் எழுதிய செறிப்பழத்தோட்டம் நாடகம் மிக அற்புதமான படைப்பு. அவர் எழுதிய பச்சோத்தி எனும் சிறு கதையினை பல தடவை வாசித்திருக்கின்றேன். அக்கதை ஏற்படுத்திய தாக்கத்தினால் நாடகமாக்கி பலதடவைகள் மேடையேற்றியுள்ளேன். இவ்வாறு ஆதர்சனமான படைப்பாளி பற்றிய நூலினை வாசிப்பதற்கான வாய்ப்பு கிடைக்கின்றபோது அதை எப்படி சொல்லுவது. அது ஆணந்தம்.பேரானந்தம். செகவ் வாழ்கிறார் எனும் நூலினை தேர்ந்த எழுத்தாளர் எஸ்.ராமகிருஷ;னன் எழுதியுள்ளார். இவர் பற்றி அறிமுகங்களே தேவையில்லை என்கின்றளவிற்கு மிக காத்திரமான பல நூல்களை எழுதியுள்ளார். நாவல்,சிறுகதை ,நாடகம்,சினிமா என இவர் தொட்டுப்பார்க்காத துறைகளே இல்லை எனலாம். அவ்வளவு தூரம் மிக நேர்த்தியாக தனது எழுத்தின் வன்மை மூலம் இலக்கியஉலகிற்கு கனதியான பங்களிப்பினைநல்கிக்கொண்டிருப்பவர். .அவரது எழுத்தில் செகவ் வாழ்கிறார் புத்தக்தினை படிக்கின்ற போது செகவ் இன்னொரு பரினாமத்தில் தெரிகின்றார். பின் அட்டையில் இப்படியொரு குறிப்புள்ளது. 'பெண்கள் துணியில் பூவேலைகளை செய்வது போல நுட்பமான அழகுணர்ச்சியுடன், தனித்துவத்துடன் சிறுகதைகளை எழுதியவர் ஆண்டன் செகவ் என்று ரய இலக்கியத்தின் சிகரமான லியோடால்ஸ்டாய் வியந்து கூறியிருக்கிறார்.கார்க்கியும் இவன்புனினும்,குப்ரினும்,செகாவை ஷேக்ஸ்பியருக்கு நிகரான படைப்பாளியாகக் கூறுகிறார்கள்.உலகெங்கும் சிறுகதை எழுதுபவர்கள் செகாவை தங்களின் ஆசானாக கருதுகிறார்கள். இந்நூல் செகாவின் வாழ்க்கையை ,அவரது படைப்புலகை ,அவரது நண்பர்களை ,சக எழுத்தாளர்களை விரிவாக அறிமுகம் செய்கின்றது.' இந்நூலில் செகவின் வாழ்கை வரலாற்றினை மிக சுவாரசியமான முறையில் பதிவு செய்துள்ளார் நூலாசிரியர். '1860 ஜனவரி 29 (பழைய கலன்டர் முறைப்படி ஜனவரி 17) அன்று தெற்கு ரஷ;யாவின் துறைமுகமான டாஹன்ராக்கில் செகவ் பிறந்தார்'.(பக் 7) 'உலகெங்கும் சிறுகதைஎழுதுபவர்கள் செகாவைத் தங்களின் ஆசானாகக்கருதுகிறார்கள்,புதிதாக சிறுகதை எழுத விரும்புபவர்களுக்கு அவர் சொல்லும்ஆலோசனைகள் முக்கியமானவை. உங்களைசுற்றிய வாழ்க்கையை உன்னிப்பாக பாருங்கள். அதில்உங்களுக்கான கதாபாத்திரம் கிடைக்கக்கூடும். அதிகப்படியான வர்னணை,தகவல்கள்,உரையாடல்கள், கதையின் இயல்பைக்கெடுத்துவிடும் நம்பும்படியான கதாபாத்திரங்கள்,எளிய,நேரடியான விவரிப்புக்கள்,உணர்வுகளை துல்லியமாக விவரிக்கும் விதம்.,தனித்துவமான கதைசொல்லும் முறை இவையே சிறந்த கதையை உருவாக்குகின்றன. கதையில் ஒரு துப்பாக்கி இடம்பெற்றால் கதை முடிவதற்குள் அதுவெடித்தாக வேண்டும் என்பது செகவ் சொன்ன அறிவுரைகளில் முக்கியமானது.அதன்பொருள் தேவையற்ற எதையும்கதையில் எழுத வேண்டாம் என்பதே' (பக்9) 13 பகுதிகளில் செகாவினுடைய வாழ்வை இந்நூலினூடாக நூலாசிரியர் பேசுகின்றார். அவ்பிரிப்பு வருமாறு. 1.என்பெயர்செகவ்.2.ஐந்துரூபில்காதலி3.தண்டனைத்தீவு,4.கலாரா காலத்தில் செகாவ், 5.செர்ரி தோட்டங்கள் அழிவதில்லை,6.டால்ஸ்டாயும் செகாவும்,7.செகாவின் காதலிகள்,8.செகாவின் தோழர்கள்,9.செகாவின் கடைசி தினங்கள்,10.செகாவின் கதையுலகம்,11.கார்வரும் செகாவும்,12.திரையில் ஒளிர்ந்த செகாவ்,13.செகாவ்சில விமர்சனங்கள் ஆகியனவே இப்பிரிப்புக்கள். 'சிறுகதைக்கலையில் தனக்கென தனித்துவமான கதை சொல்லும் முறையை கொண்டிருந்த செகாவ்,நாடககலையிலும் ஒரு புதிய போக்கினை உருவாக்கினார்.அவரது சம்பிரதாயமான நாடகங்களைப்போல மிகைஉணர்ச்சியும் திருப்பங்களுடன் கூடிய கதைகளும் கொண்டிருக்கவில்லை.செகாவின் நாடகங்களில்கதைகுறைவு என விமர்சகர்கள் கூறுமளவு அது நிகழ்வுகளை மையப்படுத்தி அங்கதச்சுவையோடு உருவாக்கப்பட்டிருந்தது. நாடகத்தில் ஒற்றை கதாநாயகன் கதாநாயகி கிடையாது.அது மாறுபட்ட கதாபாத்திரங்களின் ஊடாட்டமாக நிகழ்வெளியாக அமைக்கப்பட்டிருந்தது. ஆகவே,நாடகத்தின் எல்லா பாத்திரங்களும் சமமாகஉருவாக்கப்பட்டிருந்தன.' பக்(57-58) 'செகாவின் மரணம் 1904 இல் நிகழ்ந்தது. ரஷ;யாவை அவரைப்போல்நேசித்தவர் எவருமில்லை.ஆனால் செகாவின்மரணம் ரஷ;யாவில் நிகழவில்லை. ஜெர்மனியின்பேடன்வீலர் என்ற சுகவாசஸ்தலத்தில் அவர் இறந்து போனார் காசநோய் முற்றியநிலையில் 1904 ஆம் ஜெர்மனிக்கு சிகிச்சை செய்துகொள்வதற்காக செகவ் புறப்பட்டார். அந்த யோசனையை சகோதரி மரியா ஏற்றுக்கொள்ளவில்லை.ஆனாலும் செகாவ் தனது மரணத்தை தேடி புறப்பட்டார். இந்த பணயத்தில் அவரோடு உடனிருந்தவர் மணைவிஒல்கா'(பக் 99-100) அவர் கண்ட பல கனவுகளில் இதுவும் ஒன்று.. 'இந்த இடத்தில் ஒரு கல்வி நிலையம் அமைக்க விரும்புகின்றேன் அங்கே ரஷ;யா முழுவதும் உள்ள ஆசிரியர்களை அழைத்து வந்து தங்கவைத்து அவர்களுக்கு கல்வி குறித்த ஆழ்ந்த புரிதலையும் முக்கியத்துவத்தையும் சொல்ல ஆசைப்படுகின்றேன். இன்றுள்ள ஆசிரியர்களை ஒரு நோய்பற்றியிருக்கிறது.அது கல்வி குறித்த அலட்சியம் அதுகளைந்து எறியப்படவேண்டிய நோய்.ஆகவே ஆசிரியர்கள் இங்கு தங்கிக்கொண்டு நிறைய படிக்க வேண்டும் விவாதிக்க வேண்டும். அத்துடன் இசை,ஓவியம்,பாடல்,இலக்கியம் என்று தனித்திறமைகளை வளர்த்துக்கொள்ளவேண்டும் அருகில் உள்ள நிலத்தில் விவசாயம் செய்துநேரடி அனுபவம் பெற்றுக்கொள்ளவேண்டும். ஒருவன் ஆசிரியராக பணியாற்றுவது என்றால் சகல விஷயங்களிலும் நேரடியான அனுபவம் உள்ளவன். அது குறித்து ஆழ்ந்துசிந்திப்பவன் என்றுதான்பொருள்.ஆகவே ஆசிரியர்கள் தங்களை தொடர்ந்து மேம்படுத்திக்கொள்ளவேண்டும்.அதற்கென தனியான முகாம்கள் அமைக்கப்படுவது அவசியம். ஒவ்வொரு ஆசிரியரும் தன்னை ஒரு கலைஞனாகவே மதிக்கவேண்டும்.எப்படி ஒரு பாடகன் தன்னுடைய பாடும் திறனைத்தினமும் வளர்த்துக்கொள்வானோ அப்படி கற்றுத்தருவதை நுட்பமாக வளர்த்தெடுக்கவேண்டும். அதுபோலவே பொதுமக்களிடம் ஆசிரியர்கள் மீது எப்போதுமே இளக்காரம்,கேலியே உள்ளது.அதுமாறவேண்டும். மக்கள் ஆசிரியர்களை மதிக்கவேண்டும்.ஒரு ஊருக்குள் வரும் கான்ஸ்டபிளுக்குக்கிடைக்கும் மரியாதை ஆசிரியர்களுக்கு கிடைப்பதில்லை.போலிஸ்காரன் குற்றவாளிகளை பிடிக்க வருகின்றான். அவனை நாம் வரவேற்று மரியாதை செய்கின்றோம்.ஆசிரியர்கள் நம் குழந்தைகளின் எதிர்காலத்தை வளர்த்து எடுக்கமுயற்சிக்கின்றார். அவரை நாம்மதிப்பதேயில்லை. அதுமாற வேண்டும். முதலில் ஆசிரியர்கள் மதிக்கப்படவேண்டும்குறிப்பாக ஆசிரியர்களுக்கு எதிராக யாரும் கை நீட்டி பேசவோ,பரிகாசம் செய்யவோ கூடாது.தன்னுடைய பணி இடத்தில் ஆசிரியர் சக ஆசிரியர்களுடன் இணக்கமாகப்பழகவேண்டும்.எப்படி காவல் நிலையத்தை கண்டவுடன் எவ்வளவு பெரிய ரௌடியும் அடங்கி ஒடுங்கி அமைதியாக போகிறானோ அப்படி பள்ளியை கண்டதும் அது அறிவு நிலையம் எண்று மதித்து நடக்கவேண்டும். ஒரு கிராம பள்ளியில் பணிபுரியும் ஆசிரியர் அந்த கிராமத்தின் வளர்ச்சி தன் கையில் ஒப்படைக்கப்பட்டிருக்கிறது என்ற பொறுப்புணர்ச்சி கொள்ளவேண்டும்.மாறாக,வகுப்பறை மட்டுமே தனது உலகம் என்று ஒதுங்கிக்கொள்ளக்கூடாது அதுபோலவே படிக்காத கிராமத்து மக்களை ஆசிரியர் ஒருபோதும் குறைவாக மதிக்கக்கூடாது. கேலி செய்யவோ,படிக்காதவர் என்று சுட்டிக்காட்டிபேதமாக நடத்தவோ கூடாது ஆசிரியர்களின் பணி என்பது ஒருவகையில்போர் வீரணை விடவும் சவால் நிறைந்தது.ஆகவே அவர்களின் அன்றாடத்தேவைகள் குறிப்பாக குடும்பத்திற்கான அடிப்படைத்தேவைகளை ,அரசு முழுமையாக ஏற்றுக்கொள்ளவேண்டும் பணம் சம்பாதிப்பதற்காக மட்டுமே வேலை செய்கின்றோம் என்று ஆசிரியர் உணரும்போது தான் கல்விநலிவடையத்துவங்குகின்றது.அது மாற்றப்படவேண்டும்.பள்ளியில் சேர்ந்துபடிக்க இயலாத குழந்தைகளுக்குப் பள்ளிக்கு வெளியில் கற்றுத்தருவதற்கு ஆசிரியர்கள் முன்வரவேண்டும். அலங்காரமான ஆடைகளை அணிந்து பகட்டுத்தனமாக ஆசிரியர்கள் நடந்துகொள்ளக்கூடாது.முறையான வெளிச்சம்,நல்ல குடிநீர்,காற்றோட்டம் உள்ள வகுப்பறை அடிப்படையானபுத்தகங்கள் ஒவ்வொரு பள்ளிக்கும் அவசியம்.ஆசிரியர்கள்நல்ல உடல்ஆரோக்கியத்துடன்இருக்க வேண்டும் கிராமப்பள்ளி ஆசிரியர்களை நகரப்பள்ளியில் பணியாற்றும் ஆசிரியர்கள் வந்து பார்வையிடுவது கிடையாது.இது மாற்றப்படவேண்டும்.கிராமத்து ஆசிரியர்கள் நகரத்திற்கும் மாநகரில் உள்ள ஆசிரியர் சிறிய கிராம பள்ளிக்கும் வருகை தந்து கற்றுத்தரும் முறைமைகளைப் பகிர்ந்து கொள்ளவேண்டும்' என்று மாபெரும்கனவுத்திட்டங்களை அடுக்கிக்கொண்டு போனார் செகவ் இதை எல்வாம் கேட்ட கார்க்கிஇவை எல்லாம் எப்படி சாத்தியமாகும் என்பது போல சிரிக்க செகவ் அதை புரிந்து கொண்டு 'இவை எல்லாம் என்னுடைய கனவுகள்.வெறும் கனவுகள். இவை நடந்தால் அன்றி ரஷ;யா முன்னேற முடியாது.முறையான ஆசிரியர்கள் இல்லாத சமூகம் மேம்படவேமுடியாது.ஒருவேளை என்காலத்திற்குள் இதில் சில மாற்றங்களாவது நடந்தால்சந்தேஷப்படுவேன்.இல்லாவிட்டால் ஏங்கி ஏங்கியே சாக வேண்டியதுதான்.வழியில் தென்படும் ஆசிரியர்களைக்கானும்போது நான் மிகுந்தவெட்கப்படுகின்றேன்.காரணம் அவர்களில் எவரும் உரிய முறையில் பேசவோ ,எழுதவோ அறிந்திருக்கவில்லை. ஆசிரியர்என்ற தோற்றத்திற்குகூட அவர்கள் முக்கியத்துவம் தருவதில்லை ,அதை விடவும் மக்களின் மேம்பாடு குறித்து ஒருபோதும்சிந்திப்பதேயில்லை. தன்னை சுற்றிய மனிதர்களின் மீது அக்கறை கொள்ளாதவன் எப்படி ஆசிரியராகப்பணியாற்றி முடியும்? ரஷயா மிகவும் பின்தங்கிப்போயிருக்கிறது.இங்கே கல்விக்கு அதிக முக்கியத்துவம் கிடைக்கவேயில்லை.பிரெஞ்சுதேசம்உலகம் முழுவதும்பெயர்பெற்றிருப்பதற்கு காரணம் அங்குள்ள கல்வி முறையும் அதனால்உருவான கலாச்சார சூழலும்தான்.அதை நாம் பெற்றாக வேண்டும்இல்லாவிட்டால் அடித்தளம் இல்லாத கட்டிடம் போலஇந்த சமூகம் நொறுங்கி விழுந்துவிடும்' என்று சொல்லிவிட்டுசெகவ்'இப்படியாக நான் புலம்பிக்கொண்டிருக்கிறேன்.இதையார் எடுத்துக்கொள்ளப்போகிறார்கள்.வாருங்கள் தேநீர் அருந்தலாம்' என்று சொல்லி கார்க்கியை தன்னோடு அழைத்துக்கொண்டு சென்றார் செகவ். கல்வி குறித்த செகாவின் ஆதங்கம் அவரது சகோதரி பள்ளியைத்துவங்கிய போது சற்று தணிந்தது.தன்னால் முடிந்த பொருளுதவிகளை அதற்காகத்திரட்டிதந்தார் செகவ்' (பக்84-86) இந்நூலின் ஊடாக செகவ்வினுடைய வாழ்வை புரிந்துகொள்ளமுடிகின்றது.

வியாழன், நவம்பர் 03, 2022

அரங்கவிளையாட்டுக்களும் ஆளுமைதிறன்விருத்தியும்

(எஸ்.ரி.அருள்குமரன்) அரங்கவிளையாட்டுக்கள்அரங்கசெயற்பாடுகளில்மிகமுக்கியமான இடத்தினைபெறுகின்றன. விளையாட்டுக்கள் உடல்திறனிற்கான அடிப்படையாகவிளங்குகின்றன. விளையாட்டுக்களில்ஈடுபடுதல்உடல்பயிற்சிக்குமுதன்மையானதாகவும்,அப்பயிற்சியின்ஊடாக உடலினை தகவமைத்தக்கொள்வதிற்குஏற்புடையதாகவும்கொள்ளப்படுவதனைப் போன்று அரங்கவிளையாட்டுக்கள் நடிகனை தயார்ப்படுத்துவனை நோக்கமாகக்கொண்டு மேற்கொள்ளப்படுகின்றது.
அரங்கவிளையாட்டுக்கள் என்றால் என்ன என நோக்குவோமாயின் நடிகனதுதிறன்விருத்தியினை இலக்காகக்கொண்டு உடல்,உளம்,குரல்ஆகியவற்றிற்கானபயிற்சியாக மேற்கொள்ளப்படுகின்ற விளையாட்டுக்கள் அரங்கவிளையாட்டுக்கள் ஆகும். இவ்விளையாட்டுக்கள் பல்வேறுதேவைகளை அடிப்படையாகக்கொண்டவகையில் பயிற்சியியாக நிகழ்த்தப்படுகின்றன. நடிகன் நடிப்பினை சிறந்தமுறையில்வெளிப்டுத்துவதற்கு,மேடையில் ஏனைய நடிகனுடன்சிறந்ததொடர்பாடல் திறனை விருத்திசெய்துகொள்வதற்கு என தன்னை தயார்ப்படுத்திக்கொள்வதற்காக அரங்கவிளையாட்டுக்களில் ஈடுபடுகின்றான். நடிகனைபொறுத்தவரையில் நடிப்பினை வெளிப்படுத்துவதில் மூலகங்கள் முதன்மைபெறுகின்றன. இந்தவகையில் முதற்தரமூலங்கள்,இரண்டாம்தரமூலகங்கள் முக்கியம்பெறுகின்றன. முதற்தரமூலகம்என்பதுஉடல்,குரல்,உளம் என்பனவாகும்..இரண்டாம்தரமூலகங்கள்என்பது துணைக்கலைகளான வேடஉடை,ஒப்பனை,இசை போன்ற மூலக்கூறுகள். இவ்விருவிடயங்களிலும்நடிகனை தன்னை சுயாதீனமாகவெளிப்படுத்திக்கொள்வதற்கும்,பார்ப்போருடன் தனதுஆளுமையினைவெளிப்படுத்திக்கொள்வதற்குமான களமாக முதல்தரமூலகங்களை நடிகன் பயன்படுத்திக்கொள்கின்றான். அரங்கவிளையாட்டுக்கள் உடல்,உளம்,குரல்சார்ந்த பயிற்சியாக விளையாடப்படுகின்றன. உடல்சார்ந்த பயிற்சிக்குரிய அரங்கவிளையாட்டுக்களாக ஆடும்வீடும், நண்டு,றால்,மீன் ,தலைவரைகண்டுபிடித்தல்,எலியும்வளையும் போன்ற சில விளையாட்டுக்களை குறிப்பிடமுடியும். இவ்விளையாட்டுகளில் ஈடுபடுவதன்மூலம் உடல்சார்ந்தவலிமையினைபெற்றுக்கொள்ளஉதவுகின்றது. நடிகன்அரங்கில் நீண்டநேரம்இயங்குவதற்கும்,பாத்திரத்தினை சிறந்தமுறையில் வெளிப்படுத்துவதற்கும்உடற்திறனை வளர்த்துக்கொள்வதற்கு இவ்விளையாட்டுப்பயிற்சி உறுதுணையாக அமைகின்றது. குரல்சார்ந்த பயிற்சிக்குமுதன்மைகொடுக்கம்வகையில்விளையாடப்படுகின்ற அரங்க விளையாட்டுக்களிற்கு உதாரனமாக பசுவும்புலியும்,குலைகுலையாhய்முந்திரிக்காய்,சங்குவெத்திலை சருகுவெத்திலை,நாராய்நாராய்,போன்றவிளையாட்டுக்களை குறிப்பிடலாம். நடிகன்அரங்கில்தன்னைவெளிப்படுத்திக்கொள்வதற்கு குரல்சார்ந்தவெளிப்பாடு இன்றியமையாததாகும்.காரணம் சொல்லாடல்களை வெளிப்படுத்துகின்றபோதுதெளிவாகவும்,சிறந்தஉச்சரிப்புடனும்,இறுதியில் இருக்கின்றபார்வையாளருக்கு தெளிவாகவிளங்கக்கூடியவகையிலும் வெளிப்படுத்தவேண்டும்.எனவேகுரலை சரியானமுறையில்பயன்படுத்திக்கொள்வதற்கும்,உணர்வுநிலையினை வெளிப்படுத்திக்கொள்வதற்கும் குரல்சார்ந்த அரங்க விளையாட்டுக்கள் துணையாகின்றன. உளம்சார்ந்த அரங்கவிளையாட்டிற்கு கரடியும்கிராமமக்களும், பஸ், ,குருவானவர்வீட்டில் கள்ளன்எனும் அரங்கவிளையாட்டுக்களைகுறிப்பிடலாம்.
இவ்விளையாட்டுக்களின்நோக்கம் உளம் சார்ந்தவகையில் அதாவது மனதிற்கான பயிற்சியாக ; கொள்ளப்படுகின்றன. நடிகன் உணர்வுகளை கட்டுப்பாட்டுக்குள்வைத்திருந்துபொருத்தமான நேரத்தில்வெளிப்படுத்துவதற்கு மனம்சார்ந்த பயிற்சிஅவிசயமாகின்றது.உதாரனமாக சோக உணர்வினை வெளிப்படுத்துகின்றபோது பாத்திரத்தினது சூழ்நிலைக்கு எற்பவெளிப்படுத்தவேண்டும்.தேவையற்றவகையில்வெளிப்படுத்தப்படுகின்ற போதுபார்வையாளருக்கு சலிப்பினை ஏற்படுத்தும். மனதை தனது கட்டுப்பாட்டிற்குள்வைத்திருப்பதற்கும்,நினைவாற்றலினை வளர்த்தக்கொள்வதற்கும்நினைவாற்றலை வளர்த்துக்கொள்வதன்மூலம் நீண்டவசனங்களைஞபகப்படுத்திக்கொள்வதற்கும் இவ்வகையான அரங்க விளையாட்டுக்கள்நடிகனுக்கு பெரும்துணையாகின்றன. அரங்க விளையாட்டுக்கள் விளையாடுவதன் மூலம் பல்வேறு திறன்கள் விருத்தியாக்கப்படுகின்றன.அந்தவகையில் அரங்கவிளையாட்டுக்களில் ஈடுபடுகின்றவர்களிடையே அவர்களது அனுபவத்திற்கு ஏற்றவகையில் பல்வேறு திறன்களைபெற்றுக்கொள்கின்றனர். அற்தவகையில்பொதுவாகபின்வரும் திறன்களை குறிப்பிடமுடியும். கற்பனைத்திறன்,மனதைஒருநிலைப்படுத்தல்,தொடர்படல்,தலைமைத்துவம், கனப்பொழுதில் தீர்மானம் எடுக்கும் திறன்,மனனம், போன்ற திறன்கள் விருத்தியாக்கப்படுகின்றன். மேலும் இவ் விளையாட்டுக்களில் ஈடுபடுவதினால் ஏற்படும் நன்மைகளாக மனமகிழ்வு ஏற்படும், உடல்,உளதளர்வுநிலை,கூட்டாக இயங்கும்பண்பு,வெட்கம்பயம்நீங்கிஇயல்பாகநடிக்கஉதவுதல்,விட்டுக்கொடுக்கும்மனப்பாங்குவளரும், போன்ற பண்புகள் வளர்சியடைகின்றன. நடிகன் தான் ஏற்கின்றபாத்திரத்தினை சிறந்தமுறையில் வெளிப்படுத்துவதற்கு பயம்,வெட்கம் அற்றவனாகஇருக்கவேண்டும். பயம்,வெட்கம் காணப்படுகின்றபோதுஅவனால்சுயாதீனமாக செயற்படமுடியாது .பயம்,வெட்கம் நீக்கப்படுகின்றபோதுகற்பனைத்திறன்விருத்தியாக்கப்படுகின்றது.கற்பனைத் திறன்விருத்தியாகின்றபோது படைப்பாகக் மனநிலை ஏற்படுகின்றது. இப்படைப்பாக்கமனநிலையே அவனை சிறந்த நடிகானாக்குகின்றது. இப்பின்னனியில் நடிகன் தனது பல்வேறு ஆற்றல்களை வளர்த்துக்கொள்வதற்கு அரங்கவிளையாட்டுக்கள் துணைசெய்கின்றன.

புதன், நவம்பர் 02, 2022

உயர்தரப்பரீட்சையினை எதிர்கொள்ளப்போகின்ற மாணவர்களுக்கு!

பரீட்சை என்பது நீங்கள்  இரண்டு வருடங்களாக கற்ற முழுவதையும் ஒப்புவிக்கின்ற இடம் அல்ல. குறித்த மணித்தியாலத்தினுள் வினாத்தாளை அனுகிகொள்ளலும் அவ்வினாக்களிற்கு மிகப்பொருத்தமான  பதிலை அளிப்பதுமாகும். வினாக்களை சரியான முறையில்  அனுகிக்கொள்வதற்கு மொழித்தேர்ச்சி மிக அவசியமானதாகும். உங்கள் அனைவரதும் அடிப்படை விருப்பம் மூன்று பாடங்களிலும் சித்தியடைவதாக இருக்கட்டும். மேற் குறிப்பிட்டவிருப்பு உங்கள் மனதில் உதயமானால் அடுத்த கட்டம் உங்களுக்கு மிகப்பிடித்த பாடத்தில் ஏ சித்தியினை பெற்றுக்கொள்வதற்கு மனம் ஆசைப்படும் இது உங்கள் வெற்றியில் வளர்ச்சியாகும். இவ்விடயம் மனதில் முளை கொண்டால் ஏனைய பாடங்களில் திறமைச்சித்தியினை பெற்றுக்கொளவேண்டும் என மனம் உந்தும். இது சாத்தியமானால் மூன்று பாடங்களிலும் திறமைச்சித்தியினை பெற வேண்டும் என உள் மனம் சொல்லும். மூன்று பாடங்களிலும் அதி திறமைச்சித்தியினை பெற்றுக்கொண்டால் பல்கலைக்கழகம் செல்கின்ற கனவு உங்கள் கண் எதிரே சாத்தியம் ஆகும். பல்கலைக்கழகம் செல்லுதல் என்பது உங்களது உயரிய கனவாக இருக்கட்டும். கனவு நனவாகின்ற போது வாழ்வில் வெற்றி பெற்றவர்களாகின்றீர்கள்.. வாழ்வில் வெற்றி பெறுவதற்கும் தோல்வி பெறு வதற்கும் நீங்கள் தான் பொறுப்பாளிகள் என்பதை உணர்ந்து கொண்டு பயணியுங்கள். ஏனெனில் உங்களை செதுக்குகின்ற சிற்பிகள் நீங்கள் தான். வெற்றிபெற்றால் உங்களை தேசம் கொண்டாடி உங்களதுவெற்றிக்கும் சாதனைக்கும்  முழு உலகமே தங்களது கோணத்தில் உரிமை கோருவர். நீங்கள் இலக்கில் இருந்து தோற்றுப்போனால் முழு உலகமேமே உங்கள் மீது பழி போடும். முழு உலகமும் உங்களை உரிமை கோருவதா? உங்கள் மீது பழி போடுவதாக என்பதை  தீர்மானிக்கின்ற மாபெரும் சக்தி நீங்கள் என்பதை புரிந்து கொண்டு பயணியுங்கள். நீங்கள் பரீட்சையில் வெற்றி பெறுகின்ற போது உங்களது இலட்சியம் வெற்றிபெறும். இலட்சியம் வெற்றி பெறுகின்ற போது நீங்கள் வெற்றி பெற்றவர்களாக மாறுவீர்கள். வாழ்வில் வெற்றி பெற்றவர்களுக்கும் தோல்வியடைந்தவர்களுக்கும் இடையில் நூலிடை  வித்தியாசம் தான் உண்டு. நீங்கள்வெற்றி பெற்றால் உங்களுக்கு பிடித்தமாதிரி வாழ்க்கையில் வாழ முடியும். தோல்வி அடைந்தால் மற்றவர்களுக்கு பிடித்தமாதிரி வாழ வேண்டும். எதை தெரிவுசெய்யப்போகின்றீர்கள் என்பதை தீர்மானிக்கின்ற வலுப்பொருந்தியவர்கள் நீங்கள் என்பதை உணர்ந்து கொள்ளுங்கள். இளைய தலைமுறை மீது எம் தாய் நாடு பெரும் மதிப்பினை கொண்டிருக்கின்றது. எம் தாய் நாடு மதிப்பு வைத்துள்ள இளைய தலைமுறையினர் நீங்கள் என்பதை மறந்துவிடாதீர்கள். தன்னம்பிக்கையுடன் இலட்சியக்கணவுடன் பயணித்த யாரும் தோற்றுப்போனதாக சரித்திரம் இல்லை. நீங்கள் உங்களது இலட்சியத்தில் துணிவுடன் சென்று வெற்றி பெற எனது நல்வாழ்த்துக்கள். கனவுடன். எஸ்.ரி.அருள்குமரன்..
(எஸ்.ரி.அருள்குமரன்) யாழ்ப்பாணப்பல்கலைக்கழக நாடக நினைவுகள் .... நினைவு  01 கனவுகளுக்கு களம் திறந்து விட்டிருந்தகாலம்.. கல்லாசனங்கள் பல தள கதையாடல்களிற்கும்இசிந்தனைத்திறப்பிற்கும்இ அறிவு விகாசிப்பிற்குமான தளங்களாக இருந்தன. அலப்பறைகளுக்கான இடமாக அல்லாது அறிவுத்திறப்பிற்கான வெளியாக மாற்றிக்கொண்டமை மனதிற்கு மகிழ்வானதாக இருந்தது. பல்கலைக்கழகமுதல் நாள் அனுபவம் நெஞ்சில் இருந்து அகலாத பசுமையாக இருக்கின்றது. அரங்கக்கற்கைகளுக்கான வாய்ப்பும் அங்கு அரங்கச்செயற்பாடுகளின் ஊடாக கற்றுக்கொண்ட அனுபவங்கள்இ பட்ட அவமானங்கள்இஎல்லாம் சேர்ந்து என்னை முழுமையாக்கியது. நாடகங்களில்  பங்குபற்றுகின்ற போது ஏற்பட்ட  மகிழ்ச்சிக்கும் அவை தந்த  அனுபவங்களுக்கும் ஈடாக எவற்றையும் வாழ்வில் பெற்றுக்கொள்ளவில்லை. அங்கு இடப்பட்ட விதை பல தடைகளை  தாண்டி இன்று விருட்சமாக இருக்கின்றது. என்னை உருவாக்கியவர் பலர். அரங்க துயைில் நான் உயிர்ப்புடன் இயங்குவதற்கு பலரது வழிகாட்டல்களும்இஅரவனைப்புக்களும் இருந்திருக்கின்றது. எனக்கு சிறு வயதில் இருந்தே நாடகங்களில் இருந்த பிரியம் அலாதியானது. ஆனால் அவற்றுக்கான களங்கள் இருந்ததில்லை.. பல்கலைக்கழகத்தில் கற்ற காலங்கள் நாடகத்தை கற்பதற்கும் அத்துறையில் இயங்குவதற்குமான வாய்ப்பாக இருந்தன. பல்கலைக்கழக்தில் நடித்த முதல் நாடகம் சிகப்பு விளக்கு எனும்நாடகம் ஆகும். இந்நாடகம் சீனா நாடகம். தமிழில் மொழி பெயர்த்தவர் குழந்தை ம.சண்முகலிங்கம்.. நெறியாளர் விரிவுரையாளர் க.ரதிதரன். இந்நாடகம் மூன்றாம் வருட மாணவர்கள்தமது  பயில் நிலை அனுபவத்தை பெற்றுக்கொள்வதற்காக தயாரிக்கப்பட்டநாடகம் ஆகும். மூன்றாம் வருட மாணவர்களுடன் கனிஷ்ர பிரிவினரும் பங்கு பற்றுவதற்கு வாய்ப்பு ஏற்படுத்தப்பட்டிருந்தது. இந்தவகையில் முதலாம்  வருடமானவர்களும்  சிறியபாத்திரங்களுக்காக உள்ளீர்க்கப்பட்டனர். அதன் அடிப்படையில் நாமும் இணைந்து பணியாற்றுவதற்கான சூழ்நிலை உருவாகியது. இந்நாடகத்தில் பொறுப்பாகவும் துனை நெறியாளராகவும் கேதீஸ் அண்ணா இருந்தார்.  அவர் மிகவும் இறுக்கமானவராக இருந்தார். அவரது கண்டிப்புடன்கூடிய  நடத்தல்கள் ஆரம்பித்தல் சலிப்பாகவும் அவர் மீது வெறுப்பாகவும் இருந்ததாலும் பிற்காலத்தில் நினைத்து பார்க்கின்றபோது பல கற்றுக்கொள்ளலுக்கான களங்களை திறந்து விட்டனவாக இருந்தது. நாடக ஒத்திகைகள் குறித்தநேரத்திற்கு ஆரம்பமாகி இடம்பெறும் அப்பொழுதுகள் மகிழ்ச்சிக்குரியனவாக இருந்தன. நாடகஒத்திகைகள்இடம்பெறுகின்ற ஒருநாள் ரதிதரன் சேர் ஒத்திகையின் நிறைவில் கலந்து கொள்கின்றார். அவர்குறிப்பிட்ட விடயங்கள் இன்றும் நினைவில் இருக்கின்றது. முதலாம் வருடத்தில் உள்ளவர்கள்  குறைந்தது சிறிய பாத்திரங்களாவது ஏற்று நடிக்கவேண்டும் பைனல் இயரில் வரும்போது பெரிய பாத்திரம் ஏற்று நடிப்பது உங்களது வளர்ச்சியினை காட்டும் என்றார். இவாலுவேசன் நடைபெறுகின்ற போது ஒவ்வொருவரையும் இன்றைய நாள் அனுபவங்கள் எப்படி என கேட்கிறார்.ஒவ்வொருவரும் குறிப்பிடுகின்றனர்.என்னுடைய முறை வருகின்றது. என்னால் அனுபவங்களை  குறிப்பிட முடியவில்லை. தயக்கமாக வும் ஒருவிதமான பயஉணர்வு காணப்பட்டபோது நான் ஒண்டும் சொல்லாமல் இருந்தேன். அப்போது பேசாது .. அவர்  சரி நீர் எல்லாரும் சொன்ன பிறகு சொல்லும் எண்று குறிப்பிட்டு விட்டு அடுத்தவரை கேட்டார். இந்த நிகழ்வு எனக்கு அவர் மீதான மதிப்பினைஏற்படுத்தியது. காரனம் திருப்பி கேட்டிருந்தால்  அல்லது பேசியிருந்தால்  பயத்தால அடுத்தநாள் றிகர்சலுக்கு போகாமல் விட்டிருக்க கூடும் மாறாக இப்பிடி நடந்து கொண்டது என்னிடையே தன்னம்பிக்கையினை ஏற்படுத்தியிருந்தது. இந்நாடக ஒத்திகை காலத்தில் முகுந்தன்இமதன் அண்ணாஇ ரதி அக்காஇ தர்மினி அக்காஇ அருந்தா அக்காஇ சந்திரிக்கா அக்காஇ எனபலரது அன்பும் வழிகாட்டலும் சிறப்பாக  இருந்தது. இந்நாடகத்தில் உளவாளி மற்றும் போர்வீரர் ஆகிய இரு பாத்திரங்களில் நடித்திருந்தேன். மேடை அளிக்கை எனும் வகையில் திட்டமிடப்பட்ட அசைவுஇ உரையாடல் வெளி என்பன காணப்பட்டன. ஒத்திகை காலங்கள் பல்வேறு அனுபவங்களை பெற்றுக்கொள்வதற்கான வாய்ப்பாக இருந்தது. ஆற்றுகையானது யாழ்.பல்கலைக்கழக முகாமைத்துவ கட்டடத்தொகுதியுடன் இணைந்தவகையில் காணப்படுகின்ற திறந்தவெளி அரங்கில் இடம்பெற்றது. குழந்தை ம.சண்முகலிங்கம் அவர்கள் நாடகத்தை பார்த்து நல்ல கருத்துக்களை குறிப்பிட்டிருந்தார். இந்நாடகத்தில் பங்குபற்றியமை சிறப்பானதாக இருந்தது. நாடகத்தை பார்வையிட்டபலரும் நாடகம் தொடர்பான நல் அபிப்பிராயங்களையும்இ திருத்தவேண்டிய விடயங்களையும் குறிப்பிட்டதுடன் நான் பங்குபற்றியபாத்திரங்கள் தொடர்பாகவும் குறிப்பிட்டிருந்தனர். இத்தகைய அனுபவங்கள் நாடக துறை சார்ந்த வகையில் இயங்குவதற்கான அடிப்படையில் தன்னம்பிக்கையினை வளர்த்து விட்டிருந்தது. (தொடரும்.........)

ஞாயிறு, அக்டோபர் 30, 2022

காலப்பெருவெளியினுள் கலைச்செயற்பாடுகளில் ஈடுபட்ட அனுபவங்கள்.

(எஸ்.ரி.அருள்குமரன்) காலப்பெருவெளியினுள் கலைச்செயற்பாடுகளில் ஈடுபட்ட அனுபவங்களை நினைத்துப்பார்க்கின்றபோது ஏற்படுகின்ற மனமகிழ்விற்கு ஈடாக வாழ்வியலில் ஏதுமில்லை. கலை அனுபவம் கனதியானது. அதில் ஈடுபட்டதினால் கற்றுக்கொண்டவை ஏராளம். பெற்றுக்கொண்ட உறவுகள் பெறுமதியானவை. சேமித்தசொத்துக்கள் அப்படைப்புக்களின் பின்னரான மனநிம்மதி. இவ்வாறு சொல்லிக்கொண்டே செல்லலாம் கலைப்பயணங்களின் அனுபவங்கள். நாம் எங்கிருக்கவேண்டும் என்பதையும் ,எதில் இயங்கவேண்டும் என்பதையும் காலம் நிர்ணயிக்கின்றது. நினைத்துப்பார்க்கின்ற போது நாம் இவ்வாறெல்லாம் செயற்பட்டோமா என்கின்ற பிரமிப்பினை ஏற்படுத்துகின்றன சில நிகழ்வுகள். அத்தகைய செயற்பாட்டு தளமாக அளவெட்டி மகாஐன சபை கலைஞர் வட்டத்துடனான உறவினைப்பும், அங்கே செயற்படுத்திய கலைச்செயற்பாடுகளும் மனத்திரையி்ல் விரிகின்றன. போருக்கு பின்னரான பொழுதுகளில் இராப்பொழுதுகளை பயனுள்ளதாகசெயற்படுத்தவேண்டும் என பலரும் சிந்தித்துக்கொண்டிருந்த தருணங்களில் செயல் முனைப்புள்ள வகையில் இயங்கியலுக்கு முதன்மை கொடுக்கின்றதாக அளவெட்டி மகாஐனசபை கலைஞர் வட்டத்தினர் செயற்பட்டனர். ஊர் கூடுவதற்கும், கூடிக்கதையாடுவதற்குமான பொழுதுகளாக கலைச்செயற்பாடுகள் தகவமைக்கப்பட்டன. அப்பொழுதுகளை மிகப்பெறுமதியானதாக்கி, மூத்த படைப்பாளிகளிற்கான அடையாளமாகவும், இளைய படைப்பாளிகளிற்கான வாய்ப்பாகவும் ஊர் வரலாற்றினை ஆவணப்படுத்துகின்றதாகவும்  செயற்பாடுகள் விரிந்தன. இவ் விரிதளத்தினுள் சிறிய புள்ளியாக நாமும்  பயணித்தமை பாக்கியமே. மகிழ்வான மாலைப்பொழுதுகள் எனும் தொனிப்பொருளில் பௌர்னமி தினங்களில் முத்தமிழிற்கு முதன்மை கொடுத்து  நாடகம்,வில்லிசை,கவியரங்கம்,       விவாதம், நடனம் ,இசை நிகழ்ச்சி,பாடல் என பல நிகழ்வுகள் நிகழ்த்தப்பட்டன. சிறுவர்கள் முதல் பெரியவர்கள் வரை பங்குபற்றுனர்களாகவும், பார்வையாளர்களாகவும் செயற்பட்டனர். இது ஒரு வித்தியானமான பொறிமுறையாக இருந்தது. இத்தளம் பலருக்கு அடையாளத்தினை பெற்றுக்கொடுத்ததுடன், தமது திறன்களை வெளிப்படுத்தி கற்றுக்கொள்வதற்கான களங்களை திறந்து விட்டிருந்தன. கலைஞர்களது உருவாக்கத்திற்கு   களங்களும் தளங்களும் அவசியம் என்பர்.  அந்த வகையில் பலரது வளர்ச்சிக்கான களங்களை  ஏற்படுத்தியிருந்தன. எமது இயங்கியல் பரிமானத்தில் அளவெட்டி மகாஜனசபை கலைஞர் வட்டத்தினது வாய்பளிப்பு ஆதாரமானது.மகாஐனசபை கலைஞர் வட்டத்துடன் இனைந்து இயங்கு வதற்கான வாய்ப்பு பல்கலைக்கழகம் பெற்றுத்தந்த மிக உன்னதமான நட்பர் சர்வேஸ் மூலம்  சாத்தியமானது. சொல்லுக்கும் செயலுக்கும் வேறுபாடு இல்லாது இயங்குகின்ற ஆளுமையாளர் இவர். இவரதுகோரிக்கைக்கமைவாக நாடகம் பழக்குவதற்கான இணைவின் மூலம் மகஜனசபை சபை கலைஞர் வட்டத்துடணான பயண உறவாரம்பித்தது. நல்லூர் திருவிழாவில் கண்டபோது நிலாக்கால கலை நிகழ்வு நிகழ்த்தப்போவதாகவும் அந்நிகழ்வில் இனணந்துசெயற்படுமாறும் சர்வேஸ் அழைப்பு விடுத்திருந்தார். அவ்வழைப்பினூடே சாட்சி எனும் நகைச்சுவை நாடகம் பழக்க சென்று  பல நல்ல உறவுகளை  பெற்றுக்கொண்டேன். "சாட்சி" எனும் நகைச்சுவை நாடகமானது யாழ்ப்பாண பல்கலைக்கழகத்தில்   பரீட்சைக்காக மேடையிடப்பட்டது. அந்நாடகத்தை பார்வையிட்டு நல்ல கருத்துக்களை பகிர்ந்திருந்தார்சர்வேஸ். அவ் நாடகத்தை மேடையிடுவோம் என கேட்டுக்கொண்டார். இவர்இத்தகைய செயற்பாடுகளின் மூலம் பல நிலைகளில் உள்ளவர்களை இணைத்திருந்தமை சிறப்பான விடயமாக இருந்தது. இந்நாடகத்தை பழக்கியபோது விஜயபாஸ்கரன் சேர் சில ஆலோசனைகள் குறிப்பிட்டு வழிகாட்டியிருந்தார். நூலகர் க.சௌந்தரராஐன் ஜயா வினது வேண்டுகோளிற்கு ஏற்ப "செவிட்டு ராமு "எனும் நகைச்சுவை நாடகத்தில் நடிகனாக பங்குபற்றியிருந்தேன். இந்நாடகத்தில் சகோதரர் குமரன் சௌந்தரராஜன் ஐயா, ஆகியோர் ஆற்றுகையாளராக செயற்பட்டிருந்தோம். அதேபோன்று ஐயாவின் வழிகாட்டலில் "வைத்தியருக்கு வைத்தியம்" எனும் நகைச்சுவை  நாடகத்தில் மேற்படி நாடகத்தில் பங்கு பற்றியவர்களுடன் துவாரகன் இணைந்து கொண்டு பெண்பாத்திரத்தினை ஏற்று சிறந்த முறையில் அளிக்கை செய்திருந்தார். இங்கு நகைச்சுவை நாடகங்கள் பெரும்பாலும் நிகழ்தப்பட்டது. நகைச்சுவை நாடகங்களது  நிகழ்த்துகைக்கான காரனமாக இறுகிப்போயுள்ள மக்களிடையே சிரிப்பினை ஏற்படுத்துவதன் மூலம் அவர்களது மனங்களில் மகிழ்வினை ஏற்படுத்த முடிவதுடன் அவர்களிடையே மாற்றத்தினை கொண்டு வர முடியும் என்பதினால் அத்தகைய அளிக்கைகளுக்கு முதன்மை கொடுத்து அளிக்கை செய்யப்பட்டன. அத்தகைய அளிக்கைகளுக்கு பார்ப்போரிடம்  வரவேற்பு கிடைக்கப்பபெற்றதை அவர்களிடம் இருந்து கிடைத்த எதிர் வினையின் மூலம் அறிந்து கொள்ளமுடிந்தது. "மாயவலை "எனும் குறியீட்டு நாடகம் எனது நெறியாழ்கையில் மகிழ்வான மாலைப்பொழுதொன்றில் நிகழ்த்தப்பட்டது. குறியீட்டின் ஊடாக  பல விடயங்களை அந் நாடகம் வெளிப்படுத்தியிருந்தது. இவ்வாறு அங்கு நிகழ்த்திய கலை அளிக்கையின் நினைவுகள் விரிகின்றன. இப்பதிவு அங்கு நிகழ்த்தப்பட்ட நிகழ்வுகளில்  ஒரு சிறு பகுதி மட்டுமேயாகும்.

வெள்ளி, அக்டோபர் 28, 2022

காலத்தை வசப்படுத்தியவன் வாழ்வில் வெற்றி பெற்றவனாகின்றான்

காலம் யாரையும் தூக்கி வைத்துக்கொண்டாடுவதும் இல்லைவீழ்த்திவிட நினைப்பதும் இல்லை. அவர் அவர் நடந்து கொள்கின்ற நிலைப்பாட்டின் அடிப்படையில் காலத்தால் கொண்டாடப்படுவதாகவும் நிராகரிக்கப்படுவதாகவும் அமைகின்றது. எதிரிகளும் துரோகிகளும் தோற்றுவிட்டதாக எக்களாம் கொட்டுகின்ற போது காலம் வெற்றி பெற்றதாக புன்னகைக்கின்றது. நேரம் என்பது ஓடிக்கொண்டிருக்கின்ற பொறிமுறை. நேரத்தை கையகப்படுத்தி நேரத்தின் கரம் பிடித்து நாமும் ஓடிச்செல்வதன்மூலம் காலத்தை வெல்ல முடியும். நேரத்தை நாம் தவற விடுகின்ற போது காலத்தால் தோற்கடிக்கப்படுகின்றோம். ஆனால் நேரத்தை கையகப்படுத்தி வாழ்வில் வெற்றி பெறுகின்றவர்களை சக மணிதன் கொண்டாடுவதில்லை. ஆனால் அரங்கில் இருந்து அப்புறப்படுத்துவதிலேயே குறியாக இருக்கின்றது. காலம் யாருக்கும் வாய்ப்புக்கொடுப்பதற்காக கங்கனம் கட்டிக்கொண்டிருப்பதில்லை. மாறாக ஒவ்வொருவரும் தமது முயற்சியினால் தம்மை அர்ப்பணித்து தமக்கென இடத்தை தகவமைத்து அச்சூழலை பெரும் போராட்டங்களின்  மத்தியில்  தக்கவைத்துக்கொண்டிருக்கின்ற வேளையில்  முயற்சியே அற்றவர்கள் முன்னுக்கு வர பின்நிற்பவர்களை மேடையேற்றி பார்க்கவேண்டும் எனும் பொய்வழிகாட்டலின் மத்தியில் திறமையுடனும் அர்ப்பணிப்புடனும் செயற்பட்டுக்கொண்டிருப்பவர்களை ஓரம்கட்டி செயல் முனைப்பற்றவர்களிற்கு வாய்ப்பு கொடுக்க வேண்டும் என்கின்ற மனோபாவம் எத்தகையது என்பது சிந்திக்கவேண்டியது. எல்லாவற்றிற்கும் காலம் தன் சிறகசைப்பில் பதில் பகரும்

திங்கள், அக்டோபர் 24, 2022

 

 இதயக்கோவிலில் வைத்து பூஜிக்கப்படவேண்டியவர்கள் ஆசிரியர்கள்

 கற்பிப்பவன் ஆசிரியன் அல்ல கற்றுக்கொடுப்பவனே நல்ல ஆசிரியன்.வாழ்வை அளிப்பவன் ஆசிரியன். வாழ்வை அழிப்பவன் அல்ல.

ஆசிரியத்துவம் என்பது மகத்துவமானது.தன்னலமற்றது.தன்னிடம் கற்றவர்கள் தன்னை விட எப்போதும் உயர்வாக இருக்கவேண்டும்.சமூகத்தில் தம்மை விட மேலோங்கி வரவேண்டும் நினைக்கின்ற ஆத்மாக்கள் ஆசிரியர்கள்.

இவர்களது அர்ப்பணிப்பான இயங்குதல் இல்லையெனில் சமூகம் உயிர்ப்பு பெறுவது எங்கனம்.

தன்னிடம் கற்றவன்சித்திபெறுகின்றபோது காட்டுகின்ற மகிழ்ச்சியும் அவன் தோற்றுப்போகின்ற போது படுகின்ற துயரினையும் வார்த்தைகளினால் வடித்துவிடமுடியாதவை.


இதயக்கூட்டிற் இதயக்கோவிலில் வைத்து பூஜிக்கப்படவேண்டியவர்கள் ஆசிரியர்கள்குள் இருந்து உயிர் பிரிகின்ற கனங்கள் வரை அவர்களது நினைவுகள் உயிர் வாழ்ந்துகொண்டிக்கும்.

அவர்கள் எப்போதும் இதயக்கோவில்களில் வைத்து பூஜிக்கப்படவேண்டியவர்கள்.அவர்கள் இட்ட வழிச்சுவடுகளினை பின்பற்றியே எமது பாதைகள் தகவமைக்கப்பட்டன.

நாம் எமக்கான பாதையில் பயணித்தாலும் நாம் துவண்டு போனபோது அவர்கள் எமக்களித்த வார்த்தைகள் ஒதுங்கியிருந்தபோது முன்னுக்கு கொண்டுவருவதற்காக பொய் கலந்து சொன்ன  உண்மைகள் எமக்குள்ளே விசை கொண்டு எமது வாழ்வியல் பயணத்தினை உந்தித்தள்ளிக்கொண்டிருக்கின்றது.

நாம் பெற்றுக்கொண்ட வெற்றிகள் எல்லாம் உங்களால் சாத்தியமானவை.நாம் அடைந்து கொண்ட தோல்விகள் எல்லாம் எமது அசன்டையீனங்களாய் வந்துதித்தவை .

நினைவுச்சொடுக்கினுள் வந்து செல்கின்ற ஆசிரியர்களை நினைத்துப்பார்க்கின்றபோது அத்தகைய நாட்கள் மீண்டும் வராதா என்கின்ற ஏக்கப்பெருமூச்சு இதயத்தி்னுள் இருந்து வலி மிகுந்து வெளித்தள்ளுகின்றது.

அவை வசந்த காலங்கள்.கனவுகளை உற்பத்தியாக்கிவிட்ட காலங்கள்.

தன்னம்பிக்கையுடன் நாமும் இந்த பூமிப்பந்தில் பயணிக்க முடியும் எனும் உத்வேகத்தை அளித்தபொழுதுகள்.

நீங்கள் இல்லையேல் நாம் இல்லை.எங்களது பலவீனங்களை கூட பலமாக்கி விட்ட பவித்திரமானவர்கள்.

நீங்கள் செய்த சேவைக்கு உதவிக்கு பிரதியுபகாரமாக நாம்  என்ன செய்துவிட்டோம் .

ஆனாலும் உங்கள் பெயர்களை  எம்மோடு அடுத்த தலைமுறை நோக்கி கொண்டு செல்கி்ன்றோம்.

இதுவே நாம் உமக்கு செய்கின்ற  உதவி.

நான் எப்போதோதொலைந்து விடுவேன் அல்லது அழிந்து விடுவேன் அல்லது அழித்துவிடலாம் என்றவர்களது செயல்ப்புல வெளிக்குள்ளும் மூச்சு முட்டி வலி நிறைந்த பயணங்களை மேற்கொள்கின்ற போதெல்லாம் நீங்கள் அருகில் இருந்து என்னை வழிநடத்துவதாய் என் ஆன்மா சொல்லிக்கொள்கின்றது.

இவ்வாறு எனது கூட்டிற்குள் பசுமையாக இருக்கின்ற எனது ஆசிரியர்களது நினைவுகளை மீட்டிப்பார்க்க முயல்கின்றேன்.

(மீட்டல்கள் தொடரும்...)


ஞாயிறு, அக்டோபர் 23, 2022

 (எஸ்.ரி.அருள்குமரன்)

காலம் சிலவற்றை அரங்கேற்றிவிடுகின்றது.கனவு சில விடங்களை துடைத்தெறிகின்றது.

கற்றுத்தந்தவர்களிடம் இருந்து எம்மையறியாமலே கற்றுக்கொண்ட விடயங்கள் எம்மை வழி நடத்துகின்றன.

ஆசான் என்பவன் அறியாமை நீக்குபவர் என்கின்றார்கள். எம்மை அறிவுத்தேடலிற்கு வழிவகையினை ஏற்படுத்துபவர்களாக இருக்கின்றனர்.
நாம்பயணப்படவேண்டிய வழி எதுவென தெரியாது சிலவேளைகளில்தடுமாறிக்கொண்டிருக்கின்ற நிலையில் எம்கரம் பற்றி நகர்த்திச்செல்பவர்கள்இவர்கள்.



நாம் கற்ற துறையிலேயே பயணிக்கின்றபோது ஏற்படுகின்றமன மகிழ்ச்சி வார்த்தைகளிற்கு அப்பாற் பட்டவை.

அரங்கு சார்ந்த கற்றல் அறிமுகமாகியது கந்தவேள் சேரிடம் இருந்தே.

அவர் வகுப்பறைக்குள்ளேயும் வெளியேயும் கற்றுனர்த்திய விடயங்கள் இன்றையஇயங்கியலுக்கான ஆதார்சமான புள்ளிகள்.ஆழப்பாயும் வேர்கள்.விதைதத்தவன் உறங்கினாலும் விதை உறங்குவதில்லை.
யூனியன்கல்லூhயில் உயர்தரத்தில் நாடகமும் அரங்கியலும் எனும் பாடத்தினை கற்ற வேளையிலே அவருடைய அறிமுகமும் அதன் தொடர்ச்சியாக பல விடயங்களை கற்றுக்கொள்வதற்கும் வாய்ப்பு ஏற்பட்டது.

இதற்கு முன்னர் 1998 ம் ஆண்டு யூனியன் கல்லூரியில் இடம்பெற்ற பரிசளிப்பு விழாவில் 'காணல் வரி நாடகம் இவரது நெறியாழ்கையில் மேடையிடப்பட்டபோது பார்வையிட்டுள்ளேன்.

மாதவியின் கதையை அடிப்படையாகக்கொண்டு எழுதப்பட்ட நாடகக்காட்சிகள் மனக்கண்முன் இன்றும் நிற்கின்றது.

நாடகம் பார்ப்பதில் விருப்பமான எம்மைபோன்றவர்களுக்கு நாடகம் ரசனைக்குரியதாக இருந்ததுடன்பரலது வரவேற்பினை பெற்றுக்கொண்டது.
அந்நாடகத்தின் காட்சி இன்றும் மனக்கண் முன் விரிகின்றது முரசறைசபவனது செய்தியோடு நாடகம் ஆரம்பமாகும்.நிசாந்தராகினி அக்கா (இன்று அவர் தேசிய கல்வி நிறுவகத்தின் நடனத்துறை விரிவுரையாளராக இருக்கின்றார். கலாநிதி பட்டத்தினை நிறைவு செய்துள்ளார்.) மாதவிக்கு நடித்திருந்தார் அவரது நடிப்பு சிறப்பானதாக இருந்தது.

சேரிடம் போய் நல்ல நாடகம் என குறிப்பிடவதற்கான துணிவு இருந்ததில்லை. பின்னர் உயர்தரத்தில் நாடகமும் அரங்கியலும் பாடத்தினை கற்றவேளை அவருடன் பழகமுடிந்ததுடன் அவரது ஆளுமைகளை அருகில் இருந்து பார்ப்பதற்கும் அவரிடம் இருந்து பல விடயங்களை கற்றுக்கொள்ளவும் முடிந்தது.

உயர்தரத்தில் கற்ற காலத்தில் அவர் சிறியளவிலான களப்பயிற்சி பட்டறைகள் நடத்தியதுண்டு அத்தகைய களப்பயிற்சிபட்டறையில் பங்குபற்றிய அனுபவம் மறக்கமுடியாதது.

மருதனார் மடம் இராம நாதன் கல்லூரி வளாகத்தில் யூனியன்கல்லூரி இயங்கிய வேளை அப்போதைய கல்லூரி அதிபராக இருந்த புண்ணியசீலன் சேரின் முயற்சியினால் அமைக்கப்பட்ட மண்டபத்தில் பாடசாலை நிறைவடைந்த பின்னர்களப்பயிற்சிப்பட்டறை இடம்பெற்றது.
ஆர்வமுள்ளவர்கள் கலந்து கொள்ளலாம் என அறிவிக்கப்பட்டதின் அடிப்படையில் ஆர்வத்துடன் அப்பயிற்சிபட்டறையில் நானும் பங்கபற்றியிருந்தேன்அப்பயிற்சிபட்டறையில்.சுன்னாகம் ஸ்கந்தவரேதயாக்கல்லூரி மாணவர்களும் பங்குபற்றியிருந்தனர்.
அப்பயிற்சிப்பட்டறையில் தான்;

மஹாகவி உருத்திரமூர்த்தியில் கவிதையான 'மப்பன்றி காணமழை காணாத மண்ணிலே சப்பாத்தி முள்ளும் சரியா விளையாது.... எனும் கவிதை எனக்கு அறிமுகமானது.

அவர் அக்கவிதையை சொல்லித்தந்த முறை இப்போதும் நெஞ்சக்கூட்டில் நிழலாடுகின்றது.

சப்பாத்தி முள்ளும் என்பதை அழுத்தி பேசி காட்டுவார்.
வாசிக்கின்றபோது எவ்வாறு வாசிக்கவேண்டும் , உணர்வு வேறுபாடு எவ்வாறு வரவேண்டும் என்பதெல்லாம் அங்கு அவரிடம் கற்றுக்கொண்டோம்..
பங்குபற்றியவர் நடிப்பு செயற்பாட்டில் ஈடுபட வலியுறுத்தப்படுகின்றனர்.எல்லோரும் ஒவ்வொருவராக நடிக்கின்றனர்.என்னுடைய ரேன் வருகின்றது.நான் எழும்பி யாரையும் பாக்காமல் நடிச்சு முடிச்சிட்டு என்னுடைய இடத்தில போய் இருந்திட்டன்.கைதட்டல் சத்தம் கேட்கிது.சேரும் நல்லா இருந்ததாக பராட்டினார்.மிகச்சிறப்பாக நடிச்சனோ எனக்கு தெரியாது.ஆனால் அந்த பாராட்டு மிகப்பெறுமதியானதாக இருந்தது.நான் நடிச்சது குடிகாரன் பாத்திரம்.இது மாறுபட்ட அனுபவமாக இருந்தது.

தென்னவன் பிரமராயன் எனும் நாடகம் மேடையிடப்படவுள்ளது விரும்பியவர்கள் பங்குபற்றலாம் எனக் குறிப்பிட்டார்.

இந்நாடகம் மாணிக்கவாசகர் சுவாமிகளது வாழ்வியலை பேசியது.குதிரை வாங்க மன்னன் காசு கொடுத்து அனுப்பிவிடுவார். அவர் அதைஇறை பணிக்காக செலவழித்துவிட்டு மன்னன் கேட்ட பரிகளை வாங்க முடியாது இருந்த வேளை சிவன் நரிகளை பரிகளாக்கிஅனுப்பி வைப்பார் .பரிகளான நரிகள் மீளவும் பரிகளாக மாறியதினால் கோபமடைந்த மன்னன் மாணிக்கவாசகரைதண்டிக்கும் நோக்கில் நெற்றியில் கல் வைச்சு நதிக்ரையில் நிறுத்திவிடுகின்றார் இவ்வேளைவைகை நதிபெருக்கெடுத்தோடும் போது அணைகட்டுவதற்கு மக்களுக்கு குறிப்பிட்ட பகுதி ஒதுக்கப்படுகின்றது.

செம்மனச்செல்வி எனும் கிழவிக்கு அணை கட்ட ஆட்கள் இல்லாது போது சிவபெருமான் கூலியாளாக வருவதும்,வேலை செய்யாது இருப்பதும் ,அரசன் கூலியாளது முதுகில் பிரம்பினால் அடிப்பதும் அந்தபிரம்படி எல்லோரது முதுகிலும் படுவதுமே நாடகத்தின் கதை.

சொக்கனால் எழுதப்பட்டஇந்நாடகத்தை இவர்நெறியாழ்கை செய்திருந்தார். நானும் அதில் சிறிய பாத்திரம் ஏற்று நடித்திருந்தேன்.
அவரது நெறியாழ்கை அனுகுமுறை வித்தியாசம்.
எங்களை செய்யவிடுவார்.எப்படி வர வேண்டும் என்பதை சொல்லி தருவார்.நடிச்சும் காட்டுவார்.

நாடகத்திற்கு மிக குறுகிய காலம்.சிலவேளை பேச்சும் விழும்,அடியும் விழும் ஆனால் நாடகம்நல்லா வரவேணும் என்பதற்கான உiழைப்பு இருக்கும்.மிக நுனுக்கமாக விடயங்களை கையாழ்வார்.

நான் மேடையேறி நடித்தபோது கிடைத்த பாராட்டுக்கள் தொடர்ந்து நடிகனாக செயற்படுவதற்கான ஊக்கியாக இருந்ததது.
மதிப்பிற்குரிய இளையதம்பி ஆசிரியர் அவர்கள் வகுப்பறைக்கு வருகை தந்தபோது அருள்குமரன் மிக நல்லா நடிச்சிருந்தீர்.தொடந்தும் நடிக்க வேனும் சந்தோசமாக இருந்தது.என்றார்.இது எனக்கு
கிடைச்ச விருதாகவே நினைக்கின்றேன்.இதற்கு காரணம் நெறியாளர் கந்தவேள்சேர்.

உயர்தரத்தில் கற்றவேளை அவரது தனியார் கல்வி நிலையத்திலும் கற்றலுக்காக சென்றிருந்தேன்.பல்கலைக்கழக அனுமதிகிடைத்தபோது அச்செய்தியினை சொல்வதற்காக அவரது இணுவில் இல்லத்திற்கு காலை, மாலைவேளை சென்றிருந்தேன். ஆனால் சந்திக்க முடியவில்லை.
அன்றைய காலத்தில் அலைபேசிகள் இன்மையால் இத்தகைய இடர்பாடு.மறுநாள் மாலை சென்றவேளை அவர் வீட்டில் ஓய்வாக இருந்தார்.வழமைபோல் வாரும் இரும் என்றார்.

நான் சேர் எனக்கு நாடக பாடம் படிக்க யூனிவர் சிற்றி கிடைத்திருக்கு. என்றேன்.

அதற்கு அவர் சந்தோசம் ஆனால் இனி என்னை சந்திக்க வரப்படாது என்றார்.
நான் அதற்கு என்ன ஏது என்பதுபோல யோசிக்கின்றேன்.

அவர் வழமையான சிரிப்புடன் நீர் என்னட்ட அடிக்கடிவர வாய்ப்பிருக்கு. சேர் ரீயுட் எழுத புத்தகம் வேனும், அது வேனும்இது வேனும் எண்டு வருவீர் .அப்பிடிவந்தால் நீர் வளரஏலாது. நீர் புத்தகங்கள் வாங்கி சேகரிக்க வேனும் நிறைய தேடவேனும் என்டு சொல்லி தன்னிடம் எவ்வளவு புத்தகம் இருக்கிறது என்பதை சொன்னார்.

அவர் சொன்னது எவ்வளவு நிதர்சனமான உண்மை என்பதை எனது பிற்பட்ட காலங்களில்அறிந்து கொண்டேன்.அவர்சொன்ன விடயங்களில் இன்று எனது தனிப்பட்ட சேகரத்தில் பலநூல்கள் உள்ளது.

பல்கலைக்கழகத்தில் கற்ற வேளையில் செவ்விளக்கு நாடகத்தில் ஆற்றுகையாளனாகசெயற்பட்டபோது நாடகத்தை பார்வையிட்டபோது எதுவும் என்னிடம்சொல்ல வில்லை.

ஆனால் அருள் நல்லாவருவன் எண்டு தெரியும் நான் எதிர் பார்த்ததை விட மேல போயிட்டான் சந்தோசமாக இருக்கின்றது என பலருக்கும் குறிப்பிட்டு பெருமைப்பட்டவர்.இத்தகைய வளர்ச்சிக்கு இது நீங்கள் போட்ட அடிப்டை சேர்.

உயர்தரம் கற்றுக்கொண்டிருந்த காலப்பகுதியில் ஆர்கலோ சதுரர் நாடகம் தயாரிக்கப்பட்ட காலம்.அத்தயாரிப்பு நடன நாடக ஆற்றுகை எனும் வகையில் நடன கலைஞர்களது அளிக்கை உணர்வுப்பின்புலத்தில் பாத்திரங்களிற்கான உரையாடல் பின்னனியாக கொடுக்கப்பட்டது. அவ்வாற்றுகையில் குரல் வழங்குனராக செல்வதையும், அவ் அனுபவத்தையும் வகுப்பில் குறிப்பிடுவார்.
நாடகத்தில் பெரிய நடிகானாகவோ அல்லது நாடகத்தில்பெரியாக்களோ வராட்டிலும் பராவாயில்லை நாடகங்களை ரசிக்ககூடியவர்களாக வந்தாலே பெரிய விஷயம் என இவர் அடிக்கடி கூறுவதுண்டு.

அவரது தெஸ்பியஸ் கல்விநிறுவனத்தில் கல்வி பயில சென்ற காலத்தில் ஒரு நாள் வீட்டிற்கு வரச்சொன்னார். அங்கு தான் தயாரித்த ரியூட்டுக்கள்எல்லாவற்றையும் தந்து இதை படிச்சாலே கானும் என்டவர்.
நாங்கள் காசுக்குதான் படிப்பிச்சநாங்கள் அனால் நீங்கள் விசுவாசத்தோட இருக்கிறியள் சந்தோசம் என்பார்.
 
எங்கும் எப்போதும் அறிவுரையுடன் வழிகாட்டுகின்ற அரங்க துறை சார்ந்தவர்.
ஏறிச்சென்ற ஏனியை எட்டி உதைந்தால். ஏறிய இடத்திலேயே நிற்க வேண்டும். இது வரலாறு சொல்லும் செய்தி....

செவ்வாய், அக்டோபர் 18, 2022

  

(எஸ்.ரி.அருள்குமரன்)

பரீட்சார்த்த அரங்கு ஓர் அறிமுகம்


அரங்கானது சமூகத்தினி டையே வளிமையானநாகவும் தாக்க வன்மை நிறைந்ததாகவும் காணப் படுகின்றது. இவ்வரங்கானது சமூக பெறுமானத்தில்இ வாழ்வியல் மாறு தல்களில் தன்னை இணைத்துக் கொண்டு செல்கின்ற போக்கு மேற்குலகில் மட்டுமன்றி ஈழத்தி லும் உண்டு என்பது கண்கூடு.

அரங்கு என்பதினை வரைய றைக்கு உட்படுத்தி குறிப்பிடுவது கடினமான விடயமாகும். மாறாக அரங்கு பற்றி நோக்கும் போது அரங்கவியலாளர்கள் தமது அனுபவ வியலுக்கு ஏற்ப கருத்துப் பகிர்கின் றனர். அவற்றைப் பின்வருமாறு நோக்கலாம்.


'அரங்கு என்பது எப்போ துமே ஆற்றுபவர்களினதும் பார்வை யாளர்களினதும் தொடர்பு கொள்ள லாகவே இருக்கிறது'1

'அரங்கமானது பார்வையாளர்களை உணர்ச்சிவசப்படுத்தாமல் அவர்களை விமர்சன பூர்வமாக சிந்திக்கவைக்க வேண்டுமென்பது பிறெஃக்ற்றின் நோக்கம்'2

எனவே அரங்கானது எப் வேறுபட்டவர்களின்தொடர்பாடலில் அவர்களிடையே உணர்வு பூர்வமான ஓர் உறவுத்தளம் உருவாக்கப்பட்டு அவ் உறவுத்தளம் மூலம் சமூகப் பெறுமானத்தில் காக்கத்தினை ஏற்படுத்தும் தளமாக விளங்குகின்றது. குரங்கு மனிதன் வாழ்வில் சந்தித்த துன்பதுயரங்கள்இ வாழ்வியலில் எதிர்கொண்ட வலி கள். அவனது வாழ்வியல் முறைஇ அவனது எதிர்பார்ப்பு என்பவற் றினை வெளிப்படுத்த முனைகின்றது. இவ்வகையில் அரங்கு மக்களை மக்களுக்கு உணர்த்துதல் என்பதில் மனிதனது சுயத்தினையும்இ தனித்து வத்தினையும் வெளிப்படுத்துவதற்கு முனைப்புக் காட்டுகின்றது.


எனவே அரங்கு மனிதனது பிரச்சினைகளினைத் தீர்த்தல்இ அவர்கனை சுயமுனைப்புள்ளவராக்குதல் எனும் கருத்து நிலையில் புதிய சிந்தனைபோக்கும் மேற்குலகில் மேற்கிளம்பியது. இவ்வகையில் அரங்கின் ஓர் அம்சமாக பரீட் சார்த்தம் எனும் பண்பு முனைப்பு பெறலாயிற்று. இப்பரீட்சார்த்த அரங்க முயற்சிகள் மேற்கில் இருப் தாம் நூற்றாண்டின் ஆரம்பத்தில் உருவானது. சான்றாக 'இருபதாம் நூற்றாண்டில் டொமினியின் அந் தஸ்து உடன்படிக்கை அரசுக்கெதி ரான நடவடிக்கைகளில் நாடகங்கள்இ எழுத்தாக்கங்கள் உருப்பெற்றன. குறிப்பாகஇ இயற்கை மாற்றமான நிகழ்வுகள் கால ஓட்டத்தில் உருப் பெற்றன. உலக அரங்கிலே மூலாதார மானதைக்கொண்டு இயற்கை மாற் றம் என்ற அடிப்படையில் பிரதான மாக பல தரவு நிகழ்வுகள் ஆக்கப்பட் டன. அவைகளின் தராதரங்கள்உயர்வோ. தாழ்வோஇ கூடவோஇ குறையவோ பெரிய அரங்கில் வர வேற்கப்பட்டன'3

அரசுக்கெதிராக இவ்வகை நாடகங்கள் இருபதாம் நூற்றாண் டின் ஆரம்பத்தில் புதிய சிந்தனை யுடனும் கருத்தியல் தளத்துடனும் மேற்குலகிலே மேற்கிளம்பினாலும் இவற்றின் உச்சக்கட்ட நகர்வு அல்லது முதன்மையான வெளிப்படு கையாக 1947 ஆம் ஆண்டு காலப் பகுதியினை கொள்ளலாம். காரணம்இ இரண்டாம் உலக யுத்தத்திலே நிறைய உயிர்களினையும்இ உடமை களினையும் இழந்து வாழ்வியல் வறுமைக்குள் தமது வாழ்வியலினை ஓட்டவேண்டிய நிர்ப்பந்தம் ஏற்பட் டது. அப்போது வாழ்வு பற்றிய தேடல்களும்இ மனித இருப்பு தொ டர்பான பிரச்சினைகளும் அரங் கிலே பேசு பொருளாகின. அப் பேசுபொருளினை பேசுகையில் அப் பேசுபொருள்கள் உயிரோட்டமாக வெளிப்படுவதற்கான சாத்தியங் களினை முன்னைய அரங்குகள் கொண்டிருக்கவில்லை. எனவே அவ் விடயத்தினை பேசுவதற்கான சாத்தி யங்களினை உடைய அரங்குகளினை கண்டுகொள்ளவேண்டிய தேவை அரங்கவியலாளர்களுக்கு பெரும் சவாலாக இருந்தது. எனவேஇ அதற் கான சிறுசிறு முயற்சிகள் மேற்கொள் ளப்பட்டன. இச் சிறு முயற்சிகள் பரீட்சித்துப் பார்த்தல் எனும் வகை யில் வெளிப்பட்டன. இவ்வெளிப்ப டுகைகள் பரீட்சார்த்த அரங்கினை மேற்குலகிற்கு தேவையான அரங் காக முகிழ்ந்தெழ வைத்தன. மக்க ளது மனதிலே எதிர்காலம் பற்றிய

கேள்வியினை விதைத்துவிட்ட அச் சூழ்நிலையின் பாதிப்பில்இ கலையா ளது மனிதளையும் அவனது பிரச் சினையினையும் பேசாது விலகி நின்று கனவுகளிலும் கற்பனைகளி லும் மிதந்த அரங்கப் போக்கிளை மறுதலித்துவிட்டு கலை வாழ்வில் இருந்து அந்நியப்பட்டு போகாது வாழ்வினை பிரதிபலிக்க முயன்றது. இவ்வகையில் உடைந்துபோன சமூ சுத்தினையும் சிதைந்துபோன மனங் களினையும் அரங்கு பேச முனைந் தது. எனவே மனிதனது வாழ்லினை யும் மனத்துயரினையும் பிரதிபலிக்க வேண்டுமெனின் பழைய வரன் முறையான அரங்கப் போக்குடைய பண்பாட்டில் இருந்து புதிய சிருஷ்டியினை உடைய பண்பாட் டினைப் படைக்க அரங்கவியலாளர் கள் முயன்றனர். இதன் வெளிப்பா டாக 'அபத்த நாடகங்கள் தோற்றம் பெற்றன. ஆயினும் இதன் பின்னணி யில் பிற்காலத்தில் ஏற்பட்ட அரங்க வடிவங்களிலே முழுமையான பரீட் சார்த்த பண்புகளினைக் கண்டு கொள்ளலாம். 

இவை புதியன புனைதலை தமது கோட்பாடாக வரித்துக் கொண்டு செயற்பட்டும்இ செயற்பட்டுக் கொண்டும் இருக்கின் றன.

பெட்டோல் பிறெஃக்ட்இறிச்சாட் செக்னர்இ குறொட்டோ வஸ்கிஇ ஆர்ட்டாவூட்இ பீற்றர்புறூக்இ ஒளகுஸ் தோ போல் என நீண்டுசெல் லும் இவ்வரங்கவியலாளர்களின் பட்டி யல். இதிலே ஒவ்வொருவரும் 1 ங் அரங் கின் அச்சாணி அம்சங்களினை பயன் படுத்தி சமூக மாறுதலுக்கான அரங்கினை பயன்படுத்துவதில்தனயா ஈடுபடுத்திக் கொண்டனர். இதில் மராத்த விடயங்கள் உள்ள டக்கப்பட்டு சமூகத்திற்கானதும் அங்கிலே பார்ப்போன் பங்காளியா கவேண்டும் எனவும்இ ஆற்றுவோன் பார்ப்போன் இடை வெளி தகர்க்கப் பட வேண்டும் என்ற கருத்து வெறி யுடனும் செயற்பட்டனர் அரங்கில்! 'வெளி பற்றிய பிரக்ஸஞபூர்வமான சிந்தனை ரீதியான சொல்லாடல் இவர்களினால் இயங்கியல் தளத்தில் செயற்படுத்தப்பட்டது

சூழலியல் அரங்கில் றிச் சாட்செக்னர் முதன் மையானவராக காணப்படுகின்றார். நாடகபாடத் தினை இவர் ஆற்றுகைக்கானதாக இருக்க வேண்டுமே தவிரஇ அதுபுனித மானது என்ற கருத்துநிலையிலிருந்து மாறுபட வேண்டும் எனக் குறிப்பிடு கின்றார்.

இப் பரீட்சார்த்த அரங்கு களில் பார்ப்போர்இ ஆற்றுவோர் என்ற பிரிப்பு வெளிகாணப்படுவ தில்லை. அவ்வரங்கில் நடைபெறு வது உண்மையானதாக கொள்ளப் படுகின்றது. பொய்மை உடைக்க பட்டு மெய்மையினை புதிய வெளி களில் உருவமைக்கப்பட்டு அரங்க நிகழ்வுகள் நிகழ்த்தப்படுகின்றன. பழைய அரங்கில் ஆற்றுவோர் பார்ப்போர் என்ற பிரிப்பு வெளியு டன் இயங்கிய நிலையினை அவதா னிக்கக் கூடியதாக உள்ளது.


இவ் இணைவுகள் புதிய நெறிமுறைக்கு உதவுகின்றது. சான்றாக

'பரிசோதனைகள் மூலமே புதிய நெறிகளை உருவாக்கலாம். புதிய நெறிகள் சூனியத்தில் உருவாவனவல்ல''4

அக்கால சூழ்நிலைகளும் வாய்லியல் முறைகளுமே புதிய நெறிகளினை உருவாக்கும். இன் வகையிலே சமுதாயமாறுதல்கள் இம் மாற்றத்தினை வரவேற்று புதிய மாறுதல்களுக்கும் புரிய இந்தனைகளுக்கும் உரமேற்றும் போது புதிய அரங்கியல்கள் முகிழ்ந் தெழும். சான்றாக பிரெக்ஷடின் கருத்து பின்வருமாறு

'வாழ்க்கை மாற்றமடைத்து கொண்டேயிருக்கிறது. வாழ்க்கையச் இத்திரிப்பதற்கு அதன் சித்தரிப்பு முறையும் மாற்றப்பட வேண்டும்''5

 சமூகம்மாறுகையில் அரங்கு தனது வடிவத்திலும் வெளிப் பாட்டுத்தளத்திலும் மாறுதல்களி னைக் கொண்டு இயங்கவேண்டிய தேவை உருவாகுகின்றது. இத்தே வையைக் கருத்திற்கொண்டு செய லாற்றுவது அரங்கினதும் அதனை இயக்குகின்ற அரங்கியலாளர்கள். தும் பொறுப்பாகும். இதற்குச் சான் றாக பேரா. சி. மௌனகுருவின் பின் வரும் கூற்று குறிப்பிடத்தக்கது

'இத்தகைய பரிசோதனை நாடகங்களை நான் நாடகம் என்று அழைப்பதை விடஇ அரங்க நிகழ் வுகள் என்றே குறிப்பிடுவேன். அரங்கு (வுhநயவசந) என்பதன் அர்த்தம் விசாலமானது.....! 6

எனவே பரீட்சார்த்த அரங் கானது தனது இயங்கியல் தளத்திலே எப்போதும் மாறுதல்களினை மேற் கொண்டு நகர்ந்து செல்வதுடன் புதிய கண்டுபிடிப்புக்களினை மேற் கொண்டு எப்போதும் புதிய சிந்த னையுடன் தன்னை வெளிப்படுத்திக்கொண்டு வருகின்றது இவ்வரங்கில் பார்ப்போர் முதன்மையான பங்காளராகின்றனர். இவர்கள் விமர்சன ரீதியான கருத்துறவுடன் காணப்படுகின்றனர்.

'அரங்கு பரிசோதனை முயற்சியாகக் கூர்மை அடையத் அங்கு தொடங்கும்போது நாடகம் பற்றிய கணிப்பினை பெற்றுக்கொள்வதற்கு இப்பார்வையாளர்களிலேயே தங்கி யிருந்தது. அரங்கின் பரிசோதனை முயற்சிகள் அரங்கினை ஒரு கலை வெளிப்பாடு என்ற நிலையிலும் அரங்க நடவடிக்கையாகவும் (வுhநயவசந யுஉவiஎவைநைள) இரு பரிமாணங்களில் செயற்படுத்தியது.....'7

இவ்வகையில் இப்பரீட் சார்த்த அரங்குகளின் நோக்கமாக ஏலவே அரங்கிற்கு என இருந்த வரன் முறைகளினை தகர்த்தெறிந்து வௌ;வேறு வேறு மூலகங்களினை பயன்படுத்தி அதன் தாக்கம்இ அதன் வலிமை என்பவற்றின் மூலம் புதிது புதிதான செயற்பாடுகளிற்கும் புதிய புதிய வெளிகளினை கண்டு பிடித்தும் அவ்வெளிகளிலே ஊடாடி புதிய சிந்தனையியலுடன் புதிய அரங்குக ளினை சிருஷ்டிப்பதற்கான சாத்தி யங்களினை வரித்துகொண்டு பரீட் சார்த்த அரங்குகள் இயங்கியல் தளத்திலே இயங்குகின்றன.

இவ்வகையிலே பரீட்சார்த்த அரங்குகள் எங்கு தோன்றுகின்றது என்பதற்கு பின்வரும் சான்று பொருத்தமாக அமையும்.


'கலைஞர்களும்இ பார்வை யாளர்களும் சந்திக்கும் இடத்தில் அரங்கு தோன்ற ஆரம்பிக்கும். கலைஞர்களும் பார்வையாளர்களும்

சேர்ந்து புதிதளித்தல் மூலம் இன் வரங்கை வளர்த்துச் செல்வர். சிலவே ளைகளில் பார்வையாளர்களுக்கு அங்கு நடைபெறுவது அரங்கு என்பது தெரியாமலே அதில் கலந்து கொள்வதும் உண்டு. முடிவில்தான் நடைபெற்றது அரங்கு என்பது அவர்களுக்குப் புரியும். இத்தகைய நிலை. பார்வையாளர் கள் தடையேதும் இன்றி தாமாகவே முன்வந்து அரங்க நிகழ்வில் ஈடுபட. அதை வழிநடத்த வழி வகுக்கும்.

நடத்தப்படுவது அரங்கென்று தெரிந் திருந்துஇ ஆற்றுபவர்களால் பார்வை யாளர்களைப் பங்குபற்ற வருமாறு அழைக்கப்படுகின்றபோதுஇ பார்வை யாளர்களுக்கு இருக்கக்கூடிய தயக் கம் இங்கு இருக்காது. இவ்வாறு பார் வையாளர்கள் தாமாகவே முன்வந்து அரங்க நிகழ்ச்சியில் பங்கு பற்றக் கூடியதாக நாம் அரங்க வடிவங்களை உருவாக்க முயலவேண்டும்.'8


பார்ப்போனை பங்கு கொள் ளவைத்து அதன் மூலம் சமூக மாற்றத்திற்கானதாகவும் அவன் தனது சுயத்தினை தேடிக்கண்டு கொள்வ தற்குமான முனைப்புடன் செயல்ப டச் செய்கின்றது. இவ்வகையில் கால மாறுதல்களுக்கும் சூழமைவுகளுக் கும் ஏற்ப தன்னை புடம்போட்டு புதிது புதிதாக தன்னை வெளிப் படுத்த முனைகின்றது. இவ்அரங்கில் ஒவ்வொரு ஆற்றுகையும் புதியனவா கவே வடிவமைக்கப்படுகின்றன. நடிகன் உடல்இ மனம்இ குரல் எனும் மூன்று அம்சத்தினையும் இயலுமான வரை வெளிப்படுத்தி பார்ப்போரை பங்குகொள்ள வைப்பதற்கான செயற்பாடுகளினை முன்னெடுத்துசெல்கின்றான். எழுத்துரு என்பது ஆற்றுகைக்கான ஒன்றாக தயார்ப் டுத்தப்படுகின்றது. உண்மையினை உணர்தல்இ உண்மையின் மூலம் வெளிப்படுகைகளுக்கான களங்க ரினை முகிழ்த்தெழச் செய்தல் என்பனவே இவ்வரங்கில் முக்கிய நோக்கமாக காணப்படுகின்றது... சமூக மாறுதலின் சோதனைச்சாலை யாகவும் நாடகம் விளங்கவேண்டும்' என்று மீண்டும் மீண்டும் வலியுறுத் தினார் பிரெஃக்ட்''9

சமூகத்தினை சோதித்து பார்த்து இறுகிப்போன சமூகத்தில் உள்ள ஒருவனை வெளிப்படுத்த வைக்க முயல்வதும் இவ்வரங்கின் நோக்கமாகக் காணப்படுகின்றது. 'பரிசோதனைச்சாலைஒன்றினுள் ஒரு விஞ்ஞானி . இரசாயன மூலகங்களையும் கலந்து புதிய கண்டுபிடிப்புக்களைக் காண்ட பதுபோல நாடகக் கலைஞர்களும். பல்வேறு கற்பனைகளையும் கலந்து புதுப்புது வடிவங்களைக் கண்டுபி டிக்க ஒரு நாடகப் சாலை அவசியம். மேற்கு நாடுகளில் சில அரங்கக் குழுக்கள் (வுhநயவசந பசழரிள) ஆய்வுஇ அறிவு ரீதியாக ஆற்றுகின்றன.....10


இவ்வகையில் நோக்குகின் றபோது இவ்வரங்கு சமூக மாறு தலுக்காக தன் வடிவில் மாறுதல் களோடும் புதிய கருத்தியல் தளத்து டனும் பார்ப்போர் ஆற்றுவோர் என்ற பிரிப்பினை தகர்த்தும் செயற்பட்டுச் செல்கின்றது எனலாம்.

அடிக்குறிப்புக்கள்

01. சிதம்பரநாதன்இக. (1994) சமூக மாற்றத்துக்கான அரங்குஇ சென்னைஇ தேசிய கலை இலக்கிய பேரவையுடன் இணைந்து சவுத் ஏசியன் புக்ஸ்இ பக்: 49

02.மே.கு. நூ. பக் 75

03. En wikipedia org wiki/ Experimental Theatre Definition

04.மௌனகுருஇசி.(1987) மௌனகுருவின் மூன்று நாடகங்கள்இ திருநெல்வேலிஇ நாடக அரங்கக் கல்லூரி (என்னுரை) பக். xv

05. பாலச்சந்திரன்இ எஸ். (1997) அரங்கின் பரிமாணங்கள் (நாடகக் கட்டுரைத் தொகுப்பு) தொகுப்பாளர் தெ. மதுசூதனன்இ ச.ஜீவாகரன், இராஜகிரிய, 'விபவி' மாற்றுக் கலாசார மையம். பக். 130.

06. மௌனகுரு. சி. (1987) மௌனகுருவின் மூன்று நாடகங்கள்இ திருநெல்வேலிஇ நாடா அரங்கக்கல்லூரி (என்னுரை) பக். xv

07. நவதர்ஷினி.ந 'ஆற்றுகை ' சிறப்பிதழ் (1997-1998)இ நாடகப் பயிலகம், திருமறைக்

கலாமன்றம், யாழ்ப்பாணம். பக். 7 

08. சிதம்பரநாதன்இ க. (1994) சமூக மாற்றத்துகான அரங்கு, சென்னை, கலை இலக்கிய பேரவையுடன் இணைந்து சவுத் ஏசியன் புக்ஸ். பக். 129

09. பாலச்சந்திரன்இ எஸ். (1997) அரங்கின் பரிமாணங்கள் (நாடகக் கட்டுரைத் தொகுப்பு) 14 தொகுப்பாளர் தெ. மதுசூதனன்இ ச. ஜீவாகரன், இராஜகிரிய, 'விபவி' மாற்றுக் கலாசார மையம். பக். 123

10.மௌனகுரு. சி. (1987)


புதன், ஏப்ரல் 06, 2022

மானிப்பாய் இந்துக்கல்லூரி நாடக விழா ஒருபார்வை.

 எஸ்.ரி.அருள்குமரன் 

நாடகதுறை ஆசிரியர்

யா/மானிப்பாய் இந்துக்கல்லூரி

இணைப்பாளர், நாடகவிழா.


 மானிப்பாய் இந்துக்கல்லூரி நாடக விழா ஒருபார்வை.

கல்லூரியின் சிறப்பு

மானிப்பாய் இந்துக்கல்லூரி நீண்ட வரலாற்று பாரம்பரியம் உடைய பண்பாட்டு செழுமை உடைய கல்லூரியாகும்.

 சங்கரப்பிள்ளையின் சிந்தனையில் இக்கல்லூரி உதயமாகியது 





மாணவர்களை நல்வழிப்படுத்துவதனை நோக்கமாக கொண்டு செயற்படுகின்ற இக்கல்லூரில் முத்தமிழ் வித்தகர்  சுவாமி விபுலானந்தர்,கூட்டுறவாளர்வீரசிங்கம் போன்ற  சமூக சிந்தனையாளர்கள் அதிபர்களாக இருந்து கல்லூரியை உயர்த்தியதுடன் கற்ற மாணவர்களையும் வழிப்படுத்தி வளப்படுத்தியிருந்தனர். 

கல்வியாளலர்கள்,மருத்துர்கள்,பொறியலாளர்கள், கலைஞ்கள் என பல துறைசாhந்தவர்களை  உருவாக்கிய கல்லூரி  பல தனித்துவங்களை கொண்டு விளங்குகின்றது.

கற்றலுடன் இணைப்பாட விதான செயற்பாடுகளிலும் தனது சுவடுகளை பதித்து வருகின்றதுடன் தேசியப்பாடசாலை எனும் மகுடத்தை தாங்கி நிற்கின்றவகையில் மானிப்பாய் பிரதேசம் பெருமை கொள்கின்றது.

நாடகத்தின் சிறப்பு

மாணவர்களது ஆளுமை மாற்றத்தில்கலைகளது வகிபங்கு கனதியானது.

கலைகளில் பல்வேறுகலைகள் காணப்படுகின்றன.அக்லைகள் ஒவ்வொன்றும் மாணவர்களது சுயவெளிப்பாட்டிற்கும் கற்றுக்கொள்ளலிற்கும் வழிசமைக்கின்றன.

இப்பகைப்புலத்தில்  கலைகளின் அரசி  என போற்றப்படுகின்ற நாடக கலை சமூக அசைவியக்கத்தில் காத்திரமான வகிபங்கினை செலுத்தி நிற்கின்றவேளையில் இக்கல்லூரி அக்கலையினது செழுமையான வளர்ச்சிக்கும் பங்குபற்றுபவ்களை ஆளுமையுள்ளவர்களாக தகவமைப்பதிலும் கவனம் செலுத்திய வகையில் நாடக விழாவினை கொண்டாடி வருகின்றது.

கல்லூரியில் கொண்டாடப்படும் நாடகவிழாவின்சிறப்பு

ஈழத்து நவீன நாடகத்தின் தந்தை என போற்றப்படுகின்ற கலையரசு சொர்ணலிங்கம்  கற்றதுடன்   தனது ஆளிக்கையின் மூலம்  விழாவினை செழுமைப்படுத்திய கதையினை கற்ற மாணவர்கள் மூலம் அறிந்துகொள்ளமுடிகின்றது.

இவ்வறாத்தொடர்ச்சியில் பல அரங்கர்களை பிரசவித்துடன்,பிரசவித்துக்கொண்டும் இருக்கின்றது.

பாடசாலை நாடகங்கள் மாணவர்களது பிரச்சினைகளை வெளிப்படுத்துகின்றவகையிலும் அவர்களை இலக்குபார்வையாளர்களாக கொண்டவகையில் நிகழ்த்தப்படுவதுண்டு.

நாடகங்கள் பாடசாலைகளில் நிகழ்த்தப்படுகின்ற விழாக்களில் நிகழ்த்தப்படுவதுண்டு. குறிப்பாக முத்தமிழ் விழாக்களில் குறித்த நிகழ்வாகவும், பரிசில்  தினம் என்பவற்றில் நிகழ்வுகளின் பகுதியாக நாடகம் நிகழ்த்தப்படுவதுண்டு.

ஆனல் இக்கல்லூரியினை   பொறுத்தவரையில்  ஏனைய கல்லூரிகளை விட  தனித்துவமான வகையில் நீண்டகாலமாக நாடக விழாவினை கொண்டாடிவருகின்றமை சிறப்பிற்குரியதாகும்.

இல்லங்களுக்கிடையே மெய்வல்லுனர் போட்டி நடைபெறுவதை போன்று நாடகப்போட்டியினை நீண்ட காலமாக கொண்டாடி வருகின்றது.

சம்பந்தர் ,சுந்தரர்,வாகீசர்,மாணிக்கர் ஆகிய நான்கு  இல்லங்களுக்கிடையே போட்டி நடைபெற்றுவருகின்றது.

இப்போட்டிகள்  ஏனையா கல்லூரிகளிற்கு முன்னுதாரனமானவகையில் கொண்டாடப்பட்டுவருகின்றது.

இந்தவகையில் பாடசாலையில் நாடகங்கள்  மாணவர்களை பங்குதாரர்களாக கொண்டு ஐPலை மாதம் கல்லூரி சமூகத்தினரால் கொண்டாடப்பட்டு வருகின்றமை மகிழ்விற்குரியதாகும்.

ஐpலை மாதம் முதலாம், இரண்டாம் திகதிளில் இரு தினங்கள் முழுநீள நாடகங்களாக முன்னைய காலத்தில் நிகழ்த்தப்பட்டு வந்ததுள்ளன.

2012-2014ம் ஆண்டுகாலப்பகுதியில்  3ம் திகதி நாடகவிழாவினையும் நான்காம் திகதி நிறுவுனர் தின விழாவினையும் அப்போதைய முதல்வர் திரு.ச.சிவநேஸ்வரன் கொண்டடினார் ஆயினும் மீளவும் அவரது காலத்திலேயே 2015ம் ஆண்டு முதலாம் திகதி  நிகழ்த்தப்பட்டு அதன் தொடர்ச்சியாக   இவ் விழா கொண்டாடப்பட்டு வருகின்றது.

கல்லூரியில் கற்ற பெரும்பாலான மாணவர்கள் இந்நாடக விழாவில் பங்குபற்றியதுடன் அதனூடாக தம்மை வளப்படுத்திக்கொண்டதாக குறிப்பிடுகின்றனர்.

அத்துடன் இவ்விழா அவர்களுக்குகொண்டாட்டத்துக்குரியதாகவும்மகிழ்வளிப்பிற்குரியதான நிகழ்வாக நினைவுகளை சுமந்து கொண்டிருப்பதனை அவர்களது கதையாடல்களின் மூலம் அறிந்துகொள்ள முடிகின்றது.

நாடகவிழாவில் பங்குபற்றியவர்கள் பெரும் உயர் பதவிகளில் இருந்து சமூகத்திற்கு காத்திரமான சேவையினை வழங்கி வருகின்றமையினை கண்டுகொள்ளமுடிகின்றது.

நாடகத்துறைசார்ந்தவகையில் வி.எஸ்.துரைராஐh ஐசாக் இன்பராஐ; மரிக்கார்ராமதாஸ் சோக்கலோ சண்முகம் கலாநிதிகந்தையாஸ்ரீகனேசன் கந்தையா-ஸ்ரீகந்தவேள் நா.கு.மகிழ்;ச்சிகரன் சூரிஅண்ணா என சிறப்பாக அழைக்கப்படுகின்ற சூரி என இப்பட்டியல் நீளும்.

நாடக விழாவின் நோக்கம்

நாடகவிழாவானது பங்குபற்றுகின்ற மாணவர்களது ஆளுமைத்திறனில் மாற்றங்களை கொண்டுவருகின்றது.

நாடகம் பார்ப்போர் ஆற்றுவோர் நேரடித்தொடர்பினை கொண்டுவிளங்குகின்றதுடன் நாடகசெயற்பாட்டின் உயிர்ப்பினை பறைசாற்றுகின்றது

வெறுமனே நாடகங்களை மேடையிடுதல் என்பதை தாண்டி நாடகம் சார்  புரிதலை அரங்களிக்கை மூலம் கண்டடைவதற்கும் பங்குபற்றுபவர்கள் சுய சிந்தனை யுள்ளவர்களாகவும் புதியன படைப்பதில்  ஆர்வம் உள்ளவர்களாகவும் உருவாவதை களமாகக்கொண்டு இவ்விழாக்கள் தகவமைக்கப்படுகின்றன.

இல்லமெய்வல்லுனர்போட்டி நடைபெறுகின்றபோது குறித்த இல்லத்தை சார்ந்தவர்கள் வெற்றி பெற வேண்டும் என முனைப்புக்காட்டுவதைப்போன்று சம்பந்தப்பட்ட ஆசிரியர்கள் மாணவர்களை உற்சாகப்படுத்தி வளப்படுத்தி வழிப்படுத்துவதையும் வெற்றியை நோக்கி அழைத்துச்செல்கின்றனர்.

இல்லங்களுக்கிடையே போட்டிகள் நடைபெறுகின்றபோது வெற்றிபெறுதல் என்பது முதன்iமாயனதாக காணப்படுகின்றபோதிலும் பங்குபற்றுகின்றவர்களிடையே பின்வரும் திறன்கள் வளர்த்தெடுக்கப்படுவதற்கான வாய்ப்புக்கள் உள்ளன.

தலைமைத்துவம்

தொடர்பாடல்

குழுமனப்பான்மை

தொடர்பாடல் திறன்

நபர்களுக்கிடையிலான பரஸ்பர கருத்தாடல்ஃகருத்துபகிர்வு

மேடை கூச்சமின்மை

படைப்பாக்க ஆளுமை

கற்பனையாற்றல்

முடிவெடுக்கும் ஆற்றல்

அமைப்பாற்றல்

கற்றலில் நாட்டம் (நாடக உரையாடல்களை மனனம்செய்கின்றபோது)

நேரமுகாமைத்துவம்

வெற்றி தோல்விகளை சமனாக மதித்தல்

விமர்சனங்களைஏற்றுக்கொள்ளல்

போன்ற திறன்களை வளர்த்துக்கொள்ள முடியும்.

மேற்படித்திறன்கள் வளர்த்துக்கொள்கின்றபோது சமூகத்தினை வழிநடத்தக்கூடிய ஆளுமையுள்ளவர்களாக உருவாவதற்கான வாய்ப்புக்கள் உள்ளன.


நாடகவிழா நிகழ்த்தப்படும் முறை

பாடசாலையின் கற்றல் செயற்பாடுகளிற்கு புறம்பான வகையில் பாடசாலை நிறைவடைந்தபின்னர் குறித்த நேரங்கள் பாடசாலைசமூகத்தினரால் ஒதுக்கப்படுகின்ற நேரத்திள் ஒத்திகைகள் பார்க்கப்பட்டு குறித்த தினத்தில் பெரும் விழாவாக கொண்டாடப்பட்டு வருகின்றது.

 இவ்விழாக்கள் இரவுவேளைகளில் நிகழ்த்தப்பட்டபோதும் பகல்பொழுதுகளில் நிகழ்த்தப்பட்டு வருகின்றபோதும்  பார்வையாளர்களாக பாடசாலை மாணவர்கள் பெற்றோர்,பழையமாணவர்கள்,என பலரது ரசனைக்குரியவகையில் நிகழ்த்தப்பட்டுவருகின்றது.

பங்குபற்றுகின்றவர்களுக்கான ஊக்குவிப்பு

சாதனைகள் உடனடியாக நிகழ்ந்துவிடுவதில்லை.பங்குபற்றுகின்றவர்களிற்கு அடையாளத்தை ஏற்படுத்துகின்றபோதுதான் அவர்களது இயங்கியலுக்கான சாத்தியங்கள் திறக்கப்பட்டு தொடர்ந்து இயங்குவதற்காக வாய்ப்புக்கள் உருவாக்கப்படும்.

இப்பகைப்புலத்தில் போட்டியில் பங்குபற்றுகின்ற வர்களை  ஊக்குவிக்கின்றவகையில்  எனது முயற்சியினால்பங்குபற்றுகின்ற அனைவருக்கும் சான்றிதழ் வழங்கி கௌரவிப்பதுடன், சிறந்த நடிகர்,சிறந்த நடிகை,சிறந்த துணைநடிகர்,சிறந்ததுனை நடிகை,விசேடதிறன்கொண்ட நடிகர்,பாடகர் போன்ற விருதுகள் வழங்கி கௌரவிக்கப்படுகின்றன.

பங்குபற்றுகின்ற மாணவர்களுக்கு நினைவுச்சின்னங்கள் வழங்கப்படுவதுடன் (ரீ.கே.எம்.பிறதோஸினால் வழங்கப்படுகின்றது) கடந்த ஆண்டு முதல் விருதுகளை பெறுகின்ற மாணவர்களுக்கு கல்லூரி முதல்வர் சி.இந்திரகுமார் அவர்களது முயற்சியினால் பணப்பரிசில்கள் வழங்கப்படுகின்றது.


முடிவுரை

இத்தகைய நாடக விழாவானது பாடசாலை சமூகத்தின் இனைவிற்கும் ஆற்றுகை சாhந்த செயற்பாடுகளின் மூலம் மாணவர்கள் கற்றுக்கொள்வதற்கும் வழிசமைக்கின்ற வகையில் பயனுள்ளதாக விளங்குகின்ற இவ்விழாவில் தொடர்ச்சி பல வகைகளில் பயனுள்ளதாக அமையும்.




 


புதன், மார்ச் 30, 2022

சிறுவர் நாடகங்கள் உள மாற்றத்திற்கும்களம் அமைத்து கொடுக்கும்.


(எஸ்.ரி.அருள்குமரன்)

அத்தியாயம் 2

சிறுவர் நாடகங்கள் பங்குபற்றுகின்ற மாணவர்களிடையே உள மாற்றத்திற்கும், கற்பனைரீதியான தேடலுக்கும் களம் அமைத்து கொடுக்கும்.

சிறுவர்களுடன்  இணைந்து அரங்க செயற்பாடுகள் மேற்கொள்வது அலாதியானது.மகிழ்ச்சிக்குரியது.பல விடயங்களை கற்றுக்கொள்வதற்கான சந்தர்பங்களினை ஏற்படுத்துகின்றன.

சிறுவர்களது மனோதிடம்,தொடர்பாடல் திறன்,ஆக்கவியல்செயற்பாடுகள் என்பவற்றினை கருத்தில் கொண்டு சிறுவர்களுடன் இணைந்து நாடகங்கள் தயாரிக்கின்றபோது கவனத்தில் கொள்ள வேண்டும்.

இப்பின்னனியில் சிறுவர் நாடகங்கள் பல இடங்களில் தயாரித்த போது பல்வேறு மாறுபட்ட அனுபவங்களினை பெற்றுக்கொள்ளக்கூடியதாக இருந்தது.

இந்வகையில் கீரிமலை நகுலேஸ்வரா ம.வியில் அப்போது  அதிபராக கடமையாற்றிய சு.ஸ்ரீ.குமரன் அவர்களின் வேண்டுகோளிற்கு இணங்க அவரது வழிகாட்டலில்  அப்பாடசாலை சிறார்களிற்கு நாடகம் பயிற்றுவிப்பதற்கான வாய்ப்பு ஏற்பட்டது.

அதிபர் மாணவர்களிடையே உள்ள திறன்களை வெளிக்கொனர்வதற்காக கலைத்துறை சாhந்த செயற்பாடுகள் மூலம் களங்களை திறந்திருந்தார்.அவரும் கலைத்துறையை சார்ந்;த எழுத்தாளளர் என்பதால்  சாத்தியமாகியது.

கற்றலில் மாணவர்கள் முதன்மை நிலையடைவதற்கு கலைத்துறை சாhந்த செயற்பாடுகளில் விரும்புடன் ஈடுபடுவதற்கு களங்கள் ஏற்படுத்தப்பட வேண்டும்.

 நாடகம் பழக்குவதற்கு ஆரம்பித்த வேளையில் மாணவர்கள் பலரும் ஒன்றுகூடியிருந்தார்கள்.நாடகம் பழக்கும்போது எம்போதும் மகிழ்வளிப்பிற்கு முதன்மை கொடுத்தவகையிலும்,சுயரீதியான நடிப்பிற்கு முதன்மை கொடுத்தவகையிலும் செயற்படுவது வழக்கம்.

நாடகம் சிறந்தமுறையில் வரவேண்டுமமாயின் ஒழுங்கானமுறையில் ஒத்திகைகளில் கலந்துகொள்வது வழங்கப்படுகின்றபாத்திரங்களினை உணர்ந்து நடிப்பது முக்கியம்.

 சிறுவர்களிற்கு நாடகம் பழக்குகின்ற போது இவற்றினை அவர்களிற்கு எற்றமொழியில் புலப்படுத்தி வெளிப்படுத்தவேண்டும். அவ்வாறு வெளிப்படுத்தகின்றபோதே நாடகம் சிற்பானதாக அமையும்.

நாடகம் நடிப்பதற்கு ஆர்வம் உள்ளவர்கள் இணைந்து விட்டால் நாடகத்தின் வெற்றி சாத்தியமாகின்றது.

பாத்திரங்கள் வழங்குகின்ற போது நடிப்பதற்கு ஆர்வம் உள்ளவர்களை இணைத்துக்கொள்ளவேண்டும.;

ஒருமாணவன் மிகவும் அமைதியாகவும்,அதிகம் கதையாதவனாவும் இருந்தான்.இவ்வாறு ஒதுங்கி இருப்பவர்களை இணங்கண்டு அவர்களிற்கான வாய்ப்பினைவழங்குகின்ற போது அவர்கள் ஆளுமையுள்ளவர்களாக மிளிர்வர்கள்

இந்தவகையில் அவனை நடிப்பதற்கு விரும்பம் உள்ளதாக எனக்கேடட்போது ஓம் என்றான். ஆனால் அவனால் உரையாடல்களை  உடனே பேசமுடியாது இருந்ததது. மிகவும் சிரமப்பட்டுத்தான் உரையாடலை மேற்கொண்டிருந்தான்..ஆனால் அவனது ஆர்வம் அப்பாத்திரத்தில் காட்டிய ஈடுபாடு நான் பழக்கி விட்டு வந்தபின்னர் அதனை மெருகேற்றுவதற்காக பொறுப்பாசிரியர் காட்டிய ஆர்வம் என்பன அவன் சிறந்த முறையில் நடிப்பதை சாத்தியமாக்கியது.


இம்மாணவன் பின்னர் வாசிப்பதில் சிரமமமற்று சிறப்பாக செயற்பட்டார்.

அதீத திறமையினை வெளிக்காட்டிக்கொண்டிருப்பவர்களைவிட திறமையினை வெளிக்காட்டவாய்ப்பற்று ஒதுங்கியிருப்பவர்களிடம் அசாத்திய திறன் ஒளிந்து காணப்படும்..அவற்றை இனங்கண்டு அவர்களது திறன்களினை வெளிக்கொணர்வதற்கு இத்தகைய செயற்பாடுகiளினை மேற்கொள்ள வேண்டும்.






அரங்கு எப்போதும் கற்றலுக்குரியது

 


(எஸ்.ரி.அருள்குமரன்)


அத்தியாயம்1

  அரங்கு சார்ந்த பயணங்கள் எப்போதும் மகிழ்வளிப்பனவாகவும்,,கற்றுக்கொள்ளலுக்கான களவெளயினை ஏற்படுத்துவனவாகவும் அமைகின்றது.

யாழ்ப்பானப்பல்கலைக்கழகத்தில் கல்வி கற்ற காலத்தில் கலாநிதி க.சிதம்பரநாதனின் வழிகாட்டலில் நிகழ்த்திய அரங்க செயற்பாடுகள் பசுiமாயனதாகும்.

அவைபல கற்றுக்கொள்ளலுக்கும்புதிய சிந்தனையுடன் பயனிப்பதற்கும் நிகழ்த்தபட்ட அரங்க செயற்பாடுகளின் ஊடாக பலம்,பலவீனங்களை உய்த்துனர்ந்துஅடுத்த கட்ட நகர்விற்கு செல்லக்கூடியதாவும் அரங்கின் ஊடாக சமூகமாற்றத்திற்கும் சமூக ஊடாட்டத்திற்கும் வாய்ப்புக்கள் ஏற்படுத்தப்பட்டன.

சுனாமி எனும் இயற்கையின் கோரத்தாண்டவத்திற்கு மக்கள் முகம் கொடுத்து சொல்லொனாத்துயர்களை அனுபவித்த பொழுதுகளில் அம்மக்களது பிரச்சினைகளை தீர்த்துக்கொள்வதற்கும், அவர்களது உளவிடுதலைக்கான திறவுகோல்களை ஏற்படுத்துவதினை நோக்கமாக கொண்ட வகையில் அரங்க செயற்பாடுகள் மேற்கொள்ளப்பட்டன.

இடம்பெயர்ந்த மக்கள்  முகாம்வாழ்வில் இருந்து மீண்டு தமது சொந்த இடங்களில் மீளக்குடியமர்ந்த பின்னர் தமது தொழில்  சார்ந்த செயற்பாடுகளில் மீள   செயற்பட முயன்ற காலப்பகுதியில் பட்ட ஆற்றுகை நிகழ்த்தப்பட்டது.

அவ்வாற்றுகை செயற்பாட்டில் ஈடுபட்ட போது ஏற்பட்ட அனுபவம் வித்தியாசமானதாக அமைந்திருந்து.

காலை வேளையிலேயே  அரங்க செயற்பாட்டிற்கான தயார்ப்படுத்தல்கள் மேற்கொள்ளப்பட்டன.

கிராமிய விளையாட்டுக்கள் சிறுவர்களுடன் இணைந்து விளையாடப்பட்டதுடன் ஊர் மக்கள்,பெரியவர்களுடன்  பல விடயங்கள் கதைக்கப்பட்டன.

 கதைத்து பெறப்பட்டகதைகளின் ஊடாக ஆற்றுகை மேற்கொள்வதற்கான கருத்துப்படிமங்கள் உருவாக்கப்பட்டன.

மாலை வேளை  பருவரையாhன ஆற்றுகை திட்டமிடலுடன் ஆற்றுகை களத்திற்கு சென்றோம்.

  மக்கள் மீளவும் பயமற்று கடலுக்கு சென்று தொழில் மேம்பாட்டினை மேற்கொள்வதற்கான நம்பிக்கையினை அளிப்பதாக ஆற்றுகை மேற்கொள்வதற்காக திட்டமிடப்பட்டன.

 ஆற்றுகையின் ஆரம்பித்தில் கடலுக்குள்  மீன் பிடிக்க செல்வதாக ஆற்றுகையினை மேற்கொண்டபோது நண்பர் சுதன்   'நீ மீனா நடி. நாங்கள் மீன்பிடிப்பவர்களாக நடிக்கின்றோம் அதை வைச்சுக்கொண்டு ஆற்றுகையனை நகர்த்திச்செல்வோம்' என்றார்.

 அவரது கோரிக்கையினை ஏற்று நான் மீனாக ஆற்றுகைசெய்தபோது      மீனவர்கள் சுனாமி அடித்தபின்னர் கடலுக்குள் வருவதில்லை. நாம் எல்லோரும் சுதந்திரமாக திரிகின்றோம் என்பதாக  ஆற்றுகையினை மேற்கொண்டபோது மீனவர்களாக நடித்தவர்கள் எங்களை பிடித்து இழுத்துவந்து மக்கள் கூடி நிற்கின்ற இடத்தில் ஆற்றுகையினை மேற்கொண்டனர்.

இவ்வாற்றுகை மக்களுடன் ஊடாடி ,மக்களது கருத்துக்களை உள்வாங்கி செயற்படுத்துகின்ற ஆற்றுகை எனும் வகையில் மிகவும் அவதானமாக மேற்கொள்ளப்பட்டிருக்க வேண்டும். ஆனால் அத்தகையவகையில் நிகழ்த்தப்படவில்லைஎன்பதை இப்போது உணர்ந்துகொள்ள முடிகின்றது.

 மீனவர்களாக நடிக்கின்றவர்கள் மக்களோடு ஊடாடுகின்றபோது 'என்ன  நீங்கள் கடலுக்கு சென்று பிடிக்காமமையினால் மீன்கள் சுதந்திரமாக திரிகின்றன என குறிப்பிட்ட போது  பங்காளிச்செயலாளிகள் (ஆற்றுகையில் பங்குபற்றியவர்கள்) தமது உணர்வுகளினை வெளிப்படுத்தியதுடன் கருத்துக்களினை குறிப்பிட்டு ,மீனாக ஆற்றுகை மேற்கொண்டவர்களை பிடித்தனர்.

.

 அவ்வேளை அவர்களது பிடியில் இருந்து தப்பி ஓடுவதாகநான் பாவனை செய்தபோது ஒருவர் என்னை பிடித்தவர் தலையை பிடித்து மூன்று  முறை  மண்ணில் அடித்தார்.

அவரதுதாக்குதலுடன் மூச்சிறைத்துப்போன நான் அப்படியே கிடந்துவிட்டேன். என்ன செய்வது என்று தெரியவில்லை. 

ஆற்றுகை முடிந்தபின்னர் கருத்துக்கள் பல பகிரப்பட்டபின்னர் சுதாகரித்துக்கொண்டு எழுந்த எனக்கு என்னை தாக்கியவர் கை தந்து நன்றாக நடித்தீர்கள் எனக்குறிப்பிட்டார்.

எனக்கோ அவரது பாரட்டுதலை விட அடி வாங்கிய ஞபாகம் நினைவுக்கு வருகின்றது. அவர் ஏன் என்னை இவ்வாறு தாக்கினார் என்பதற்கான காரனத்தினையும் அறிந்துகொள்ள வேண்டும் என மனம் தவித்தது.

அதற்கான காரனத்தை அவர்களிடம் கேட்டபோது குறித்த மீன் ஒன்றினது பெரினை குறிப்பிட்டு அம்  மீனை  வலையை விட்டு வெளியே எடுத்த பின்னர் அதை மூன்று முறை தiலைப்பகுதியில் அடித்தால் அது உயிரற்று போய் விடும் எனக்குறிப்பிட்டார். அம்மீனாக உங்களை  பாவனை செய்து      உங்களையும் தாக்கியதாக குறிப்பிட்டார்

இந்தவிடத்தில் இருந்து நோக்கும்போது அரங்க செயற்பாடு மக்களிற்கானது, மகிழ்வளிப்பிற்குரிது, அவர்களது சிந்தனையில் மாற்றத்தினை கொண்டுவருவதற்கான தளம் என்பது மாற்றுக்கருத்திற்கு இடமில்லை. ஆனால் அவர்களுடன் ஊடாடு கின்ற போது பல எதிர் வினைகளிற்கு முகம் கொடுக்கின்ற வகையில்  எம்மை தயார்ப்படுத்திச்செயற்பட வேண்டும் எனும் பட்டறிவினை நான் உணர்ந்துகொண்டேன்.

  அரங்கு என்பது எப்போதும் திட்டவட்டமான வகையில் முன் ஆயத்தங்களுடன்  இயங்கவேண்டியதுடன் .மக்கள் பங்குகொள்வதற்கான வாய்ப்புக்கள் முன்திட்டமிடலுடன் வழங்கப்படவேண்டும் என்பதை எனது அரங்க செயற்பாட்டு வாழ்வில் கற்றுக்கொண்டேன்.

ஆற்றுகை தளம் மணல் என்பதால் நான் தப்பித்துக் கொண்டேன் மாறாக காயங்கள் ஏற்படக்கூடிய சூழல் உள்ள அற்றுகை தளம் எனில் பாதிப்பிற்கு முகம் கொடுக்க நோர்ந்திருக்கும்

ஆற்றுகையாளனுக்கும் பார்ப்போனுக்கும் இடையில் உணர்வு ரீதியான புரிதல் கட்டமைக்கப்படவேண்டும் என்பதில் மாற்றுக்கருத்துக்கு இடமில்லை மாறாக உணர்ச்சியுடனான ஊடாட்டம் வருகின்றபோது ஆற்றுகையாளனும் பார்ப்போனும் இடைவெளியற்ற வகையில் நெருங்குpன்றபோது அல்லது ஊடாடுகின்றபோது அசம்பாவிதங்கள் நிகழ்துவிடுவதற்கான வாய்ப்புக்கள் அதிகம். அதனை  எவ்வாறுகையாளவேண்டும் என்பதற்கான பயிற்சிகள் இன்றி ஆற்றுகை தளத்திற்கு செல்வது மிகவும் ஆபத்தானது.

 ஆற்றுகையினை தகவமைக்கும் போது அல்லது ஆற்றுகையினை மேற்கொள்கின்றபோது இத்தகைய விடயங்களை கவனத்தில் கொள்ள வேண்டும் என அனுபவ ரீதியாக உணர்ந்துகொண்டேன். இல்லையேல் வெறும் உணர்ச்சிவசமானதாக மாறிவிடுவுதுடன் பங்குபற்றுச்செயலாளி பங்குபற்றுகின்றபோது வெளிப்படுத்துகின்ற உணர்ச்சியானது ஆற்றுகையின் மையத்தினை சிiதை;துவிடுவதுடன் ஆற்றுகையாளனையும் பாதித்து விடும் என்பது மாற்றுக்கருத்திற்கு இடமில்லை. ஆற்றுகையில் மீனாக  நடித்த நண்பருக்கு முழங்கால் தாக்கப்பட்டது நினைவுக்கு வருகின்றது.

அரங்க என்பது  மக்களுக்கானது. மக்களுக்கான அரங்கசெயற்பாட்டை மேற்கொள்கின்ற ஆற்றுகையார்கள் மிக முக்கியமானவர்கள். அவர்களது பாதுகாப்பும் அவர்களிற்கான அங்கீகாரமும் அவசியம் என்பதை இச்செயற்பாட்டனுபவம் உணர்த்தியது.


ஞாயிறு, மார்ச் 27, 2022

#இன்றுஉலகநாடகதினம்#


அரங்கர்கள் ஒன்று கூடுவதற்கும், அரங்களிக்கைகளின் ஊடாக சமூகம் சார் சிந்தனைகளை விரிவு படுத்திக்கொள்வதற்கும் அதற்கூடாக சமூக அசைவியக்கத்தில் காத்திரமான புல மாற்றத்தினை கொணர்வதற்கான களவெளிகளை ஏற்படுத்துவதற்கான நன்நாள்.
உலக நாடக தின விழாஉருக்கொண்டததற்கான பின்புலமாக அரங்கப் படைப்பாளிகளிடையே புரிந்துணர்வு , சமாதாணம் , அன்பினை பரிமாறிக்கொள்ளுதல் போன்றவற்றை வளர்த்துக்கொள்வதற்காகும்.
ஈழத்தமிழங்கிற்கு நீண்ட வரலாற்றுச்செழுமையும், இயங்கியல் புலமும் உண்டு.
அவ்வரங்கப்புலவெளியில் காலம் தோறும் கனதிமிகு அரங்க படைப்பாளிகள் முகிழ்ந்தெழுந்து வருகின்றமையினை காலம் பறை சாற்றிக்கொண்டிருக்கின்றது.
செயற்படுபவர்களது செயற்பாட்டினை முடக்குவதற்கும் இணைந்து பணியாற்றமுணைபவர்களுக்கிடையில் அதிகார நிலையில் பிரிகோட்டினை இடுவதிலும் முனைப்புக்காட்ட எத்தனிக்கின்றவர்கள் தம்மை இயங்கியலாளர்களாக காட்ட முனைகின்றனர்.
அரங்கதுறைசார்ந்த கல்விபெருவளர்ச்சி கண்டநிலையில் அரங்கின் இயங்கியல் பெரு வெளியினை ஆற்றுகை நிலை சார்ந்த வகையில் மாற்றமுறு சக்தியாக கொண்டுவருவதில் அத்துறை சார்ந்தவர்கள் கரிசணை காட்டாமை விவாதத்திற்குரியது.
வெறுமனே ஒப்புவிப்புப்பண்பாட்டு புலத்தில் இருந்து அளிக்கை சார்ந்த நிலைக்கு அரங்கைகொண்டு நகர்த்தவேண்டிய பணி அரங்க செயலாளிகளிற்கு தடைகளைத்தாண்டி இன்றுள்ள பிரதான பணியாகின்றது.
இயங்குபவர்களை இல்லாமலாக்குவதும் இயங்கியலற்றிருப்பவர்களை இயங்கிலாளர்களாக காட்டமுனைவதை அதிகார வெளி சார்ந்தவர்கள் அசை போடுகின்றனர்.
அரங்க நிலை சார்ந்தஆலேசகர்களே ஆலோசணை வழங்க திறனியற்றிருக்கின்ற இன்றை நிலையில் அரங்க செயற்பாட்டாளர்கள் இளைய தலைமுறையினரை அரங்கின் பால் திசை திருப்பவேண்டிய தார்மீகப்பணி காணப்படுகின்றது.
கடந்த இருவருட காலமாக உலகை அச்சுறுத்திய கொறோனா தொற்று அபாயத்தில் இருந்து படிபடிப்பாக விடுவிக்கப்படுகின்ற இன்றைய சூழல் மகிழ்வைத்தருகின்றது.
இடர்காலத்தில் இணைய வழியில் நேர்த்தளத்தில் பார்ப்போரை படைப்பாளிகள்சந்நித்துக்கொண்டபோதிலும் இன்றைய சூழல் நேரடியாக சந்தித்துக்கொள்ள வாய்ப்பேற்படுத்தியுள்ளது.
இதுவேறுபட்ட அனுபவமாகும்.
அவ் அனுபவ நிலையினை உணர்ந்து கொள்வதற்கான சூழல் கனித்து வருகின்றமை மனமகிழ்விற்குரியதாகும்.
இச்சூழலினை சாதமாக்கி அணைவரும் தத்தமது இயங்கியல் பயணத்தில் சோர்வின்றி சுயாதீனமாக அரங்க செயற்பாடுகளை மேற்கொள்ளவேண்டியது அனைவரது காலப்பணியாகும்.
அனைவருக்கும் உலக நாடக தின நல்
வாழ்த்துகள்
.
அரங்க பணியாற்றுவோம்.
அனைவருக்கும் புத்தாக்க அரங்க இயக்கத்தினரின் நல்
வாழ்த்துகள்
பணிப்பாளர் எஸ்.ரிகுமரன்
நிர்வாக பணிப்பாளர் எஸ்.ரி.குமரன்
ஆற்றுகையாளர்கள்.