என்னைப் பற்றி

வெள்ளி, ஜூன் 28, 2013

தனி நடிப்பு போட்டியில் முதலிடம்



 கொழும்பு றோயல்கல்லூரியினால் நடாத்தப்படுகின்ற  நாடகத்திறன்கான் தனிநடிப்புப்போட்டியின் தேசிய மட்டப்போட்டிக்கு மானிப்பாய் இந்துக்கல்லூரி கல்லூரி மாணவன் சானுஜன்தெரிவாகியுள்ளார்.

 கொழும்பு றோயல்கல்லுரியின் நடக மன்றத்தினரால் வருடாந்தம் அகில இலங்கைப்பாடசாலைகளுக்கிடையில் நடாத்தப்பட்டு வருகின்ற நாடகத்திறன்காண் போட்டிகளில் ஒன்றான தனிநடிப்புப்போட்டியின் மாவட்ட மட்டப்போட்டிகள் நெல்லியடி மத்திய மகாவித்தியாலயத்தில் நடைபெற்றபோது கனிஷ்டபிரிவினருக்கான போட்டியில் மானிப்பாய்இந்துக்கல்லூரியிக்கல்லூரியின் மாணவன் ஜே.சானுஜன்முதலாமிடத்தினை  பெற்று தேசியமட்டப்போட்டிக்கு தெரிவாகியுள்ளார்.

இம்மாணவனுக்கான நடிப்புசார் பயிற்ச்சிகளினையும் வழிப்படுத்தலினையும்  கல்லூரியின் நாடகமன்றப் பொறுப்பாசிரியர் எஸ்.ரி.அருள்குமரன் வழங்கியுள்ளார்.

உலகநாடகதினவிழா கொண்டாடப்பட வேண்டியதன் அவசியம்


                                                                                                           
                                                                                                           (எஸ்.ரி.அருள்குமரன்)
ஈழத்து அரங்க வரலாறானது நீண்ட வரலாற்றப்பாரம்பரியமும் கலைச்செழுமையுடையதாகும்.

காலவோட்டத்தில் அது தனக்கான தனித்துவத்துடனும் சமூக பண்பாட்டு செயல் தளத்திற்கு ஏற்ற வகையில் தனது செயல் வளர்ச்சியினை தகவமைத்து வந்துள்ளது.

ஈழத்து அரங்க வரலாறு பலராலும் சேர்ந்து உருவாக்கப்பட்டுள்ளது.ஈழத்தினை பொறுத்தவரையில் அரங்கு கல்வி முறையாக முகிழ்ந்தெழுந்தமையினால் புதிய வடிவங்களினை பிரசவிப்பதற்கும் அரங்கு பற்றிய ஆழமான தேடலிற்கும் வழி சமைத்திருந்தது.

சமூக அக்கறை பொருந்திய அரங்கின் உயிர்ப்hன விடயம்பார்ப்போருடன் நேரடி உயிர்ப்பு விசையினை கொண்டிருப்தாகும்.இத்கைய நேரடி உயிர்ப்பு விசையினை  உடைய நாடகங்களிற்கான விழாவாக வருடம் தோறும் உலக நாடக தினம் கொண்டாடப்பட்டுவருகின்றது.

1961ம் ஆண்டு ஜீன் மாதத்தில் சர்வதேச அரங்க கூட்டமைப்பின் ஒன்பதாவது ஒன்று கூடலாக கெல்சிங்கி , வியன்னா ஆகிய இடங்களில் சர்வதேச அரங்கத்திட்டம் உருவாக்கப்பட்டது.

சர்வதேச அரங்க திட்டம் எனும் சொல்லிற்கு மாற்றீடாக 'அர்விகமா' என்பவரினால் உலக நாடக தினம் முன்மொழியப்பட்டது.எனினும் 1962ல் பரிஸில் மார்ச் 27ம் திகதி  நடைமுறைப்படுத்தப்பட்டது.அதன் தொடர்ச்சியாக ஒவ்வொரு வருடமும் நூற்றுக்கு மேற்ப்பட்ட நாடுகளில் இத்தினம் கொண்டாடப்பட்டு வருகின்றது.

இவ்விழா மக்களிடையே  சமாதானத்தினையும் புரிந்துனர்வினையும் ஏற்ப்படுத்தும் ஆற்றுகைகலையின் சக்தியை மக்கள்முன்னிலையில் வெளிக்கொனர்வதற்கும் அரங்கவியலாளர்களினால் கொண்டாடப்பட்டு வருகின்றது.

இவ்விழா தனது நோக்கமாக பின்வரும் அம்சங்களினை கொண்டுள்ளது.
ஆற்றுகை கலையின் முக்கியத்துவத்தையும் அதன் பயில்வையும் சர்வதேச ரீதியில் பரிமாறிகொள்ள ஊக்குவித்தல்

அரங்க கலைஞர்களிடையே கூட்டுனர்வை உருவாக்குவதிலும் வளர்ப்பதிலும் ஆக்கத்திறன்மீதான அக்கறையை விருத்தி செய்தல்.
இக்கலைப்படைப்பு மீதானஅபிப்பிராயத்தை மக்கள் மத்தியில் விழிப்புனர்வுடன் உருவாக்குதல்
இந்நிகழ்வில் பங்கு கொள்வதன் மூலம் மக்களிடையே ஆழமான புரிந்துனர்விற்கு பங்குகொள்ளலை வலுப்பெறச்செய்வதற்கும் முனைப்பூட்டல்

மேலும் நடனம் போன்ற பிரத்தியோக முறைமைகளிற்கும் முன்னுரிமை கொடுக்கவும் மற்றும் சர்வதேச செய்திப்பரிமாற்றம் பொது விடயங்களினை கதைப்பதற்கான பேச்சுவழக்கமுறை வட்டமேசை மாநாடு போன்ற வேறுபட்ட முயற்ச்சிகளிற்காகவும் சர்வதேச விழாவாக ஒருநாள் அல்லது ஒருவாரம் அல்லது ஒருமாதம் வரை இவ்விழா கொண்டாடப்பட்டு வருகின்றது.

உலகத்தில் அரங்கேறி வருகின்ற இவ்விழாவினை னொண்டாடுவதில் ஈழத்து அரங்கவியலாளர்களும் அக்கறை காட்டிவருகின்றனர்.
இதன் ஆரம்ப முயற்ச்சியாக கிழக்கு பல்கலைக்கழகம் தனக்கான களவெளியினை சிருஷ்டித்து உலக அரங்கதினவிழாவினை அரங்கேற்றியது.
அதன் நீட்ச்சியாக யாழ்ப்பானப்பல்கலைக்கழகம் 2007ம் ஆண்டு முதன் முதலாக நிகழ்த்தப்பட்டு அடுத்தவருடத்துடன் அந்நிகழ்வு இடம் பெறாமல் போயுள்ளது.

ஆயினும் 2008ம் ஆண்டு முதல் சுன்னாகம் பொதுநூலகம் நிகழ்த்திவருவதினை அவதானிக்கலாம்.
 அரங்கிற்கான வரலாறு என்பது நீண்டநெடியதாகும். அவ்வரலாற்றினை நகர்த்திவந்தவர்கள் காலத்தின் மறைவிற்குள் சென்ற போதிலும் ஒருசிலரது வாழ்வே தேசத்தின் வரலாறாகிப் போகின்ற சூழ்நிலை சகதி;க்குள் ஈழத்து அரங்க வரலாறும் புதைந்து போனமை தவிர்க்க முடியாதாகும்.

எனினும் சமூகத்தின் இயங்கியலுக்காக தம்வாழ்வியில் துயரங்களினை புதைத்து சமூகத்தின் மகிழ்வே தமது மகிழ்வாகதமது வாழ்வினை வரித்துக்கொண்டு நினைவில் மரித்துப்போனவர்களினை நினைவேந்திக்கொள்வதற்காகவும் அவர்களது பணியின் அறாத்தொடர்ச்சியின் பேனுகையாகவும் அவ்வரங்கவியலாளர்களை நினைவில் நிறுத்திக்கொள்வதற்காகவும் இத்தினம் கொண்டாடப்பட வேண்டியதன் அவசியம் காணப்படுகின்றது.

பெரும்பாலனவர்களது கதையாடலாக நாடகக்கலை வீழ்ச்சியடைந்து விட்டதுமரபுவழிக்கலைகளின் பேனுகை அவசியம் என்பதாக அமைகின்றது.

இப்பகைப்புலத்தில் வீழ்ச்சியடையும் நாடககலையினை  எழுர்ச்சியடைய செய்வதற்கான செயற்ப்பாடுகள் ஆக்கபூர்வமானதாக மேற்கொள்ளப்படுவதுடன் இளம் தலைமுறையினரது நாடக செயற்ப்பாடுகளை ஊக்குவிப்பதுடன் சமகாலத்தின் பதிவுகளாக அரங்க செயற்ப்பாடுகள் முன்னெடுக்கப்படுவதுஅணைவரது இணைவுடனும்சர்வதேசம் நோக்கியதான அரங்கபயனத்திற்கு கொண்டுசெல்வது மூத்த அரங்கவியலாளர்களது தார்மீக பொறுப்பாகும்
 
 31.03.2013 ஞாயிறு  தினக்குரல்  வாரமஞ்சரி 

செவ்வாய், ஜூன் 25, 2013

நாடகவிழா

                    


(S.T.Arul)

                 நாடகவிழா

மானிப்பாய் இந்துக்கல்லூரியின் வருடாந்த நாடகவிழாவானது எதிர்வரும்  யூலை மாதம் 3ம் திகதி  இடம்பெறவுள்ளது. மாணவர்களிடையே  மறைந்துள்ள ஆற்றல்களினை  வெளிக்கொனரும் முகமாக பல்வேறு செயற்ப்பாடுகள் பாடசாலையில் மேற்கொள்ளப்படுவது குறிப்பிடத்தக்கது. இவற்றில் முதன்மையாக மாணவர்களது நடிப்புத்திறனை வெளிக்கொனரும் வகையில் இல்லங்களுக்கிடையே நாடகப்போட்டிகள் நடத்தப்படவுள்ளன.
 நீண்ட காலமாக இவ் நாடக போட்டிகள் மானிப்பாய் இந்துக்கல்லுரியில் நடத்தப்படகின்றது இவ்வருடம் நடை பெறுகின்ற போட்டியானது 57 ஆவது போட்டியாக  பாடசாலையில் நாடகவிழாக்களில் பங்கெடுத்தவர்கள் கருத்து பகிர்கின்றனர்.
 நான்கு இல்லங்களில் இருந்தும் 100 மாணவர்னளாவது நாடக செயற்ப்பாட்டில் ஈடுபடுவதற்கான வாய்ப்புக்கள் ஏற்படுத்தப்பட்டுள்ளன.
 இப் போட்டிகளின் பிரதான நோக்கம் மாணவர்களினை ஆற்றல் உள்ளவர்களாக மாற்றுவதினை நோக்கமாகக்கொண்டதாகும். மேலும் போட்டியெனும் வகையில் இல்லாதது ஆக்கபூர்வமான வகையில் கனதியான நாடக படைப்புக்களினை வெளிக்கொணர்வதன் மூலம் ஆளுமையுள்ள புதிய இளம் நாடக தலைமுறையினை  உருவாக்க முடியும் என்பது எதார்ர்மாகும் ஆயினும் நாடக போட்டிகளினை தனிநபர் போட்டிகளாக பொறுப்பாசிரியர்கள் மாற்ற முனையும்ட பட்சத்தில் ஆரோக்கியமான இளம் தலைமுறையானது எவ்வாறு உருவாகும் என்பது பெரும் வினாவாக எழுகின்றது.

 S.T.Arul

ஞாயிறு, ஜூன் 23, 2013

குணமாக்கல் அரங்க செயற்ப்பாடும் அனுபவமும்.


குணமாக்கல் அரங்க செயற்ப்பாடும் அனுபவமும்.

 (எஸ்.ரி.அருள்)


குணமாக்கல் அரங்கு எனும் போது சமூகத்தில் இப்போது உள்ள நிலையில் (நாங்கள் சந்தித்த நிலையில் ) அவர்களது மனநிலை செயற்ப்பாடுகள் எவ்வாறு உள்ளதோ அவ்வாறான மனநிலை செயற்ப்பாடுகளில் மதற்றங்களினை கொண்டு வருவதாகும்.
இவ்வகையில் சுனாமி தாக்கம் ஏற்ப்பட்ட போது மக்கள் பயத்துடனும் பீதியுடனும் காணப்பட்ட போது அவர்களது மனங்னளில் மாற்றங்களினை கொண்டு வருவதற்காக அவல நீக்க ஆற்றுப்படை அரங்கு எனும் செயல்திட்டம் அரங்க செயற்ப்பாட்டு குழுவினாரல் மேற்க்கொள்ளப்பட்டது.
இவர்கள் யாழ்ப்பான பல்கலைக்கழக நாடக மாணவர்களினை இணைத்து இச்செயல் திட்டம் மேற்க்கொள்ளப்பட்டது.
இச்செயல்திட்டத்தினை நாடகத்துறை விரிவுரையாளார் கலாநிதி .க.சிதம்பரநாதன் வழிப்படுத்தியிருந்தார்.

இவ் அரங்க செயல்திட்டத்தில் ஈடுபட்டமை வித்தி யாசமான அநுபவமாக இருந்தது. 

சுனாமி எனும் இயற்கையின் கோரத்தாண்டவம் ஏற்ப்பட்டு தாயகப்பிரதேசம் எங்கும் மக்கள் சொல்லொன துயரங்களினை அனுபவித்த வேளை அவர்கள் என்னசெய்வது எனவும் எதிர்காலம் சூனியமாக்கப்பட்டதாகவும் உனரத்தலைப்பட்ட வேளையில் அவர்களது துயர்போக்கவும் அவர்களிடையே நம்பிக்கை எழுச்சியினை ஏற்ப்படுத்துவதினை நோக்கமாகக்கொண்டும் மேற்ப்படி அரங்க செயல்திட்டம் முனைப்புறுத்தப்பட்டது.

சுனாமி கோரத்தாண்டவம் இடம்பெற்றபோது உ  டனடி தேவைகளினை நிறைவு செய்யும் நோக்கில் உணவு ,உடைகள் என்பன பலராலும்வழங்கப்பட்டன. அவ் வேளை நாமும் அத்தகைய பணியில் பங்கெடுத்துக்கொண்டோம். ஆயினும் அவர்களது உளவியல் ரீதியான நோய்களிற்கு தீர்வு முன்வைக்க வேண்டியதும் அவர்களிடையே நம்பிக்கை ஊற்றினை ஏற்ப்படுத்த வேண்டியதும் அத்தகைய சூழ்நிலையில் மிகவும் அவசியமான செயல்ப்பாடாக இருந்தது. அப்பகைப்புலத்தில் அரங்க ஆற்றுகை நிகழ்வுகள் மூலம் மக்களிடையே இருந்த பயம், பீதி என்பன நீக்கப்பட்டன. இது புதுமையானதானவும் வித்தியாசமானதாகவும் காணப்பட்டது.

வழமையான அரங்க நிகழ்த்துகைகளில் இருந்து இது மாறுபட்டதாகவும் காணப்பட்டமு.காரணம் ஆற்றுகையாளனில் கைகளில் தான் அரங்க அளிக்கைக்கான தயார்ப்படுத்தலும் திட்டமிடலும் இருந்தது.

இவ்வரங்க நிகழ்த்துகைகளில் சிறுவர்களது இணைவும் அதனூடாக பெரியவர்களது இணைவும் முதன்மையானமதாக அமைந்தது.

எங்களுடைய செயற்ப்பாடுகள் மிகவும் எளிமையாக காணப்படும். குறிப்பாக சிறுவர்களது விளையாட்டுக்களான மாபிள்விளையாடுதல் கிளித்தட்டு என்பவற்றில் ஆரம்பித்து அரங்க ஆற்றுகை கனதியாக அமைந்து செல்லும்.

மக்கள் தமது உள்ளக்கிடக்கைகளினை எம்முடன் அன்னியேபன்னமாக பகிர்ந்து கொண்டனர்.குறிப்பாக மனல்காடு பிரதேசத்தில் அரங்க ஆற்றுகையின்பின்னர் ஒரு முதியவர் குறிப்பிடும்போது நாங்கள் பயத்தின்காரனமாக மனுசி பிள்ளையளுடன் முகாமின்ர கூரையினை பார்த்தபடி வெறுச்சிப்போய் கடதாசிப்பேப்பறுகளை கிழிச்சுப்போட்டுக்கொண்டு இருந்தம் நீங்கள் வந்து இந்த பிள்ளையளுக்கு விளையாட்டு சொல்லி குடுக்கேக்க சந்தோசமா இருக்கு இது எங்கட 'உள நோய்க்கு ஒரு மருந்தா இருக்குது' என்றார் இது அரங்க செயற்ப்பாட்டின் கனதியனை வெளிப்படுத்தியது எனில் மிகையில்லை..

சுனாமி காவு கொண்ட பிரதேநங்களான கரையோரப்பிரதேசங்களில் வடமராட்சி பிரதேசங்கள் முல்லைத்திவு பிரதேசங்களிற்கு எங்களது அரங்க பயனம் தொடர்ந்தது.

ஒவ்வொரு இடமும் எமக்கு புதுமையான அநுபவங்களினை ஏற்ப்படுத்தியதுடன் மனமகிழ்விற்க்குரிய களமாகவும் அமைந்தது.

 இத்தகைய வகையில் மாறுபட்ட புதுமையான அநுபவமாக இருந்தது.