என்னைப் பற்றி

புதன், ஜூலை 31, 2013


              கலந்துரையாடல்

அவைக்காற்றுகை கலைகழகத்தின் நிறுவுனர் க.பாலேந்திரா  நாடகமும் அரங்கியலும் கற்ப்பிக்கின்ற  ஆசிரியர்களினை  சந்தித்து கலந்துரையாடலினை மேற்க்கொண்டிருந்தார்.

இச்சந்திப்பில் தமது நாடகத்துறை சார்ந்த அநுபவங்களினை பகிர்ந்து கொண்டதுடன் நாடகத்துறையின் இயங்கியலுக்கான ஆக்கபூர்வமான கருத்துக்களினை மேற்க் கொண்டிருந்தார்.

 இவரது மூண்று நாடகங்கள்  எதிர்வரும் 3ம் திகதி வீரசிங்கம் மண்டபத்தில் இடம் பெறவுள்ளமை குறிப்பிடத்தக்கது.

திங்கள், ஜூலை 29, 2013

வாசிப்பின் உயிர்ப்பை வலியுறுத்திய தெரு வெளி ஆற்றுகை 


நாடகம் பல்பரிமானம் உடைய கலையாகும். மனிதர்களது உணர்வுகளினை பதிவுசெய்வதிலும்  மனிதனது வாழ்வியல் வலிகளினை வெளிப்படுத்துவதிலும் அவர்களிடையே  விழிப்புனர்வினை ஏற்ப்படுத்திசெல்வதிலும் முக்கிய பங்கு வகிக்கின்றன.
மனிதநாகரிக வளர்ச்சிக்காலகட்டம் முதல் இக்கலையின்  வகிபங்கு   காத்திரமானதாக காணப்படுகின்றது.

நாடகமானது சிறுவர் நாடகங்கள் ,சமூகநாடக நாடகங்கள் , தெருவெளி நாடகங்கள் என பல வகையான நாடகங்கள் காணப்படுகின்றன.
இவ் வடிவங்களில் தெருவெளி நாடகங்கள்  மாறுபட்டனவானவும் சமூகவியல் நோக்கில் காத்திரமானதாகவும் விளங்குகின்றது.
பார்வையாளரிடையே செய்தியினை காவிச்செல்விதிலும் பார்வையாளர்களுடன் நெருக்கமான உணர்வினை பேணுவதிலும் எளிமையான வடிவமாகவும் காணப்படுகின்றது.
தெருவெளி அரங்கானது பெரும்பாலும் விழிப்புனர்வு சார்ந்த வகையிலானசெயற்திட்டங்களினை முன்னெடுத்து செல்கின்றது.
இப்பகைப்புலத்தில்  இணுவில் பொதுநூலகத்தினருடன் இணைந்து புத்தாக்க அரங்க கலைஞர்களினால் 'வாசிப்பதினால் மனிதன் பூரனமடைகின்றான்' எனும்  தெருவெளி ஆற்றுகையானது யாழ்.மாட்ட பாடசாலைகள் இ தனியார் கல்வி நிலையங்கள் இ பொது இடங்களில் நிகழ்தப்பட்டன.
இன்றைய பொழுதுகளில் அனைவரினாலும் குறை கூறப்படுகின்ற விடயமாக வாசிப்பு பழக்கம் அருகிவிட்டது பெரும்பாலும் யாருமே வாசிப்பதில்லலை எனும் குற்றச்சாட்டு முன்வைக்கப்படுகின்ற போதிலும் அதற்கான மாற்று சிந்தனையுடன் இயங்குகின்றவர்கள் வெகுவாக குறைந்து காணப்படுகின்றனர்.
வாசிப்பு என்பது ஓர் பேரியக்கமாகும்  இவ் இயக்கத்தினால் தான் ஆரோக்கிய மான சமூதாயத்தினை கட்டியெழுப்பமுடியும் எனும் யதார்த்தத்தினை உனர்ந்து கொண்டு  இவ்வரங்க செயற்பாடு முண்ணெடுக்கப்பட்டது.
வாசிப்பற்ற சமூகம்  ஊனமுற்ற சமூகமாக மாறி விடும். வாசிப்பில்லையேல் சமூகத்தில் உயிப்பினை தரிசிக்க முடியாது. புத்தகங்களுடன் உறவாடுபவர்கள் தம்மை புடம் போட்டு கொள்கின்றார்கள். மனிதர்களினை அறிந்து கொள்கின்றார்கள். அவர்களால் எதையும் எளிமையாகவும் நிதானமாகவும் அனுக்கிக் கொள்ள கூடியதாக இருக்கும்.
ஒரு தலை முறை வாசிப்பின் நுகாச்சியற்று போய் அடுத்த தலைமுறையினையும் நல்வழிப்படுத்த முடியாமல் அல்லல் உறுகின்றது எனும் கூற்றினை தவிர்க்கமுடியாமல் ஏற்றுக்கொள்ள வேண்டிய சூழ்நிலை உண்டு. ஆயினும் அத்தகையவர்களில் பிடியில் இருந்து இளையதலைமுறையினை  குறிப்பாக இளம் பராயத்தினராகிய சிறுவர்கள் சரியான பாதையில் நடை பயில்வதற்கு வழிப்படுத்த வேண்டிய தார்மீகப்பொறுப்பு புத்திஜீவிகளினது கைகளில் உள்ளது என்பது கசப்பான உண்மையாகும்.
தாம் வாசிக்காது விட்டாலும் இளம் தலைமுறையினரை வாசிப்பின் செயல் தளத்தில் இயங்க அனுமதியாதவர்கள் கூட சமூகத்தில் விரவிக் காணப்படுவதுடன் வெறுமனே பரீட்சை மையக்கல்வியின் பால் பற்றுதி கொண்டு செயல்படுகின்றவர்களினையும் சமகாலத்தில் தரிசிக்கவேண்டிய அவலம் உண்டு. ஆயினும் இவற்றின் மத்தியில் இருந்து சவால்களிற்கு முகம் கொடுத்து வாசிப்பின் மகத்துவத்தினை இளம் தலை முறையினர் மத்தியில் கொண்டு செல்ல வேண்டும் எனும் பேராவாவின் வெளிப்பாட்டின் ஊடாக வாசிப்பதால் மனிதன் பூரனமடைகின்றான் எனும் தெருவெளி அரங்கு எனும் வடிவம்  முகிழ்ந்தெழுந்தது.
அரங்கு  கதையாடல் வெளிகளினை சூழமைப்பதினை அடிப்படையாக்கொண்டு  இயங்கியல் வெளிகளினை தகவமைத்து கொள்கின்றன.
  தெரு வெளி அரங்கானது பெரு வெளிக்குள் நின்று பார்ப்போனுடன் இணைந்து அவனோடு உறவாடி உயிப்புடன் இணையும் வடிவமாகும்.
இப்பகைப்புலத்தில் இவ் வாற்றுகையில் ஈடுபட்டது மாறுபட்ட அநுபவமாக காணப்படுகின்றது.
வாசிப்பென்பது  அருகிவிட்டது எனும் கருத்து நிலை பலரிடையே விரவிக்கானப்படுகின்றபோதும் வாசிப்பின் மகத்துவத்தினை இளைய தலைமுறையினர் மத்தியில் கொண்டு செல்லும் நோக்கிலும் ஏட்டுச்சுரைக்காய் கறிக்குதவாது எனும் தளத்தில் வெறுமனே புத்தகப்பூச்சிகளாக இருந்து விடுவதினால் எதையும் சாதிக்க முடியாது என்பதினை மைய ஊடு பொருளாக கொண்டு நகைச்சுவையுனர்வின் ஊடாக பார்ப்போரிடையே கொண்டு செல்லப்பட்டது.
  அளிக்கையானது கேளிக்கையானதாக வடிவமைக்கப்படாது ஆழமான கருத்தாழம் மிக்கவையாக வடிவமைக்கப்பட்டிருந்தன.
பாடசாலை வெளிகளே இலக்கு வெளிகளாக கொண்டமைந்திருந்தமையினால் மாணவர்களுக்கான உணர்வு வெளியினை அடிப்படையாக கொண்டு ஆற்றுகைகள் தகவமைக்கப்பட்டிருந்தன.
ஓவ்வொரு பாடசாலை வெளிகளும் எமக்கு புதிய பாடங்களினை தந்திருந்தன. ஆற்றுகையாளர்கள் மாணவர்கள் அவர்களது அநுபவம் மாறுபட்டது. பல நாடகங்களினை நடித்து அநுபபப்பட்டவர்களும் இல்லை மாறாக அர்ப்ணிப்புடன் இயங்கக்கூடிய மனத்தைரியம் உடையவர்கள் எனும் வகையிலும் ஆற்றுகையின் தரம் கனதியாக வெளிப்பிட்டது.
இவ்வாற்றுகைக்கான நெறியாழ்கையினை புத்தாக்க அரங்க இயக்கத்தின் பணிப்பபளர் எஸ்.ரி.குமரன் புத்தாக்க அரங்க இயக்கத்தின்  நிர்வாக பணிப்பபளர் எஸ்.ரி.அருள்குமரன் ஆகியோர் மேற்கொண்டிருந்தனர்.
இவ் ஆற்றுகையின் தெருவாடிகளயாய் உஸாந்தன் ,மகிந்தன் ,நிதர்சன் ,திலக்ஸன் ,தபேன்சன் ,லோன்சன்  ,கவிராஜ்,பிரசாந்தன் ,தயானிசன் இலிவீசனன் போன்றோர் செயற்ப்பட்டனர்.

இவ்வாற்றுகையானது 100 ற்க்கு மேற்ப்பட்ட இடங்களில் ஆற்றுகைசெய்யப்பட்டன. இவற்றில் உடுவில் மகளிர்கல்லூரி,மானிப்பாய் மகளிர்கல்லூரி ,மானிப்பாய் இந்துக்கல்லூரி ,யாழ்ப்பானம் மத்தியகல்லூரி ,யாழ்.இந்துக்கல்லூரி ,இனுவில்இந்துக்கல்லூரி இனுவில்மத்திய கல்லூரி இஇராமநாதன்கல்லூரி ,மானிப்பாய்மெமோறியல் ஆங்கில பாடசாலை , கொக்குவில் இந்துக்கல்லூரி  ஆகிய பாடசாலைகளின் ஆற்றுகைகளையும்  கோப்பாய் கiலாணி கல்வி நிலையம் ஏ.ரி.சி கல்வி நிலையம் எடிசன் அக்கடமி போன்ற தனியார்கல்வி நிலையங்களில் இடம் பெற்ற ஆற்றுகைகளையும் குறிப்பிடலாம்.

இலக்கு பார்வையாளர்களாகிய மாணவர்களது ரசனைக்கு  ஏற்றால்போலும் அவர்களது சிந்தனையினை கிளரும் வகையிலும்  ஆற்றுகைகள் செப்பனிடப்பட்டு இடம்பெற்றமையினை ஆற்றுகையின் பின்னாக கருத்தாடல் வெளிகள் வெளிப்படுத்தி நின்றன.

இனுவில் இந்துக்கல்லுரியில்  ஆற்றுகையின் பின் பொறுப்பாசிரியர் குறிப்பிடும் போது நாங்கள் வகுப்பறையில் 40 நிமிடங்கள் ஒரு மணி நேரமாக குறிப்பிடுகின்ற விடயங்களினை  மிகவும் எளிமையான வகையில்  மாணவர்கள் புரிந்து கொள்ளக்கூடியவகையில்  எளிமையான வகையில்  நனைச்சுவை உணர்வின் ஊடாக வெளிக்கொணர்ந்தமை  சிறப்பான விடயம் என்றார்.

தெருவாடி உஸாந்தன் கருத்து வெளியிடும் போது நான் ஏற்று நடித்த வாத்தியர் எனும் பாத்திரமானது சிறப்பான வரவேற்ப்பினை நாம் நிகழ்த்திய பல பாடசாலைகளிலும்   தனியார் கல்வி நிலையங்களிலும் பெற்றுக்கொண்டது. பலர் பாராட்டியமை மகிழ்ச்சியாக இருந்தது. எமது பாடசாலையில் நிகழ்த்திய போது எமது கல்லூரி அதிபர் எமது நாடகத்தினைமிகவும் ரசித்தார். ஆயினும் சில ஆசிரியர்கள் நாங்கள் நடிக்கின்றோம் என்பதினால் பார்க்கவிரும்பவில்லலை இது அவர்களது குறுகிய சிந்தனையினை எமக்கு எடுத்து காட்டியது பிற இடங்களில் நிகழ்த்தப்பட்டபோது நாம் ஒவ்வொருவரும் ஏற்று நடித்h பத்திரங்கள் தொடர்பாகவும் பலரும் பாராட்டியமை எமக்கு தொடர்ந்தும் நாடகங்கள் நடிக்க வேண்டும் எனும் ஆர்வத்வத்தினை ஏற்ப்படுத்தியுள்ளது.


இவ்வாற்றுகையின் தரம் என்பது பார்ப்போர்களது ரசனையிலேயே தங்கியிருந்தது. நாம் நிகழ்த்திய பல இடங்களிலும் சிறப்பான வரவேற்ப்பு கிடைத்தது சான்றாக உடுவில் மகளிர் கல்லூரியில் எமது ஆற்றுகையினை கண்டு களிப்பதற்காக எமது வருகையினை ஆவலோடு எதிர்பார்த்து காத்திருந்ததுடன்  இன்றைய தேவையின் அவசியம் உணர்த்தப்பட்டதினை சுட்டிக்காட்டினர்.


  கோப்பாய் கலைவாணி கல்வி நிலைய நிர்வாகி குறிப்பிடும்போது: பேசுகின்ற விடயம் சிறப்பானதாகும். மேலும் நடிகர்களது நடிப்பு சிறப்பாக காணப்பட்டது. சினிமா நடிகர்களினை பார்த்து பரீட்சியப்பட்;ட எமக்கு அவர்களது நடிப்பு மாறுபட்டதாக அமைந்தது என்றார்.

தொகுத்து நோக்குகின்ற போது இவ்வாற்றுகையின் படைப்பாக்க இயங்கு நிலை மாறுபட்டதாக இருந்தது.
வாசிப்பின் பேரியக்கத்திற்கான செயல்நிலையாக அமைந்திருந்தது.சமூகம் கொண்டுள்ள பிரச்சினையினை தீர்ப்பதற்கும் அவர்களினை விழிப்பு நிலை கொள்வதற்கான வாய்ப்பினையும் இவ்வாற்றுகைகள் ஏற்ப்படுத்தின. இதற்கு சான்றாக பலர் நூலக அங்கத்தவர்களாக புதிதாக இணைந்து கொண்டமை குறிப்பிடத்தக்கது.

 இத்தகைய செயல் நிலைகள் காலத்தின் தேவை கருதி மேற்க்கொள்ள வேண்டியது அவசியமானதாகும்.

எஸ்.ரி.அருள்குமரன்   
நிர்வாகப்பணிப்பாளர்                                              
புத்தாக்க அரங்க இயக்கம் (ஐ.ரி.எம்)

  நன்றி கலிங்கம்   இதழ்.5