என்னைப் பற்றி

வியாழன், டிசம்பர் 22, 2011

ஆற்றுகை இதழ் வெளிவந்துள்ளது.


திருமறைக்கலா மன்றமானது நாடக துறை சார்ந்த பல் வேறு செயற்பாடுகளினை மேற்கொண்டு வருகின்றது. அவ்வடிப்படையில் அரங்கியலுக்கான பதிவுகளினை தாங்கிய வகையில் ஆற்றுகை எனும் சஞ்சிகையினை கடந்த 15 வருடங்களிற்கு மேலாக வெளியிட்டு வருகின்றனர் அதன் நீட்சியாக 18 ஆவது இதழ் அண்மையில் வெளி வந்துள்ளது.

பல்துறை ஆக்கங்களுடன் காத்திரமான பதிவுகளாக வெளிவந்துள்ளமை குறிப்பிடத்தக்கதாகும்.

ஆளுமை பறை சாற்றலுக்கு அடிப்படையான ஓவியக்கண்காட்சி

கலைச்செயற்பாடுகளில் ஈடுபடுதல் சமூகவியல் பெறுமானத்தில் மாற்றங்களினை எற்ப்படுத்துகின்றன.கலைகளின் பிறப்பியல்களில் முதனமையானதாக ஓவியக்கலையினை குறிப்பிடுவர்
வேட்டையாடல் காலத்தில் மனிதன் தனது பய உணர்வினை போக்கி கொள்வதற்கும் ஏனைய மனிதர்களோடு தொடர்பாடல்களினை மேற்கொள்வதற்கும் இக் கலைகளின் பயன்பாட்டினை வரித்துக்கொண்டான் என்பதற்கு கிடைக்கப் பெறும் குகை ஒவியங்கள் சாண்றகின்றன.
கால மாறுதல்களில் அக் கலைகளின் விரிவு மனிதர்களது மனங்களில் குமுறிக் கொண்டிருந்த உணர்வு பெறுமானத்தினை வெளிப்படுத்தின அவற்றின் தொடாச்சியயினை இன்று வரை காணக்கூடியதாக உள்ளது.
ஒவியக் கலையின் உள்ளாhத்தமான உணர்வுகள் மனவியல் பதிவுகளாக வெளிவருகின்றன என்பதுடன் அக்கலையில் ஈடுபடுகின்ற மாணவாகளது ஆளுமை வெளிப்பாட்டில் வளர்ச்சியனை ஏற்ப்படுத்து கின்றன என்பது கண்கூடு.
இளம் படைப்பாளிகளினை ஊக்குவிக்கும் நோக்கில் யாழ். இந்துக்கல்லூரி சித்திரபாட ஆசிரியர்எஸ். சிவதாசனின் ஒழுங்கமைப்பில் மூன்று தினங்கள் இடம் பெற்றன.
பெரும்பாலும் ஒவியங்கள் வெறுமனே வர்ணங்களினை கொண்டு படைக்கப்படவதாக குறிப்பிடப்படுகின்றது.
இக் கண்காட்சி மாறாக தூரிகைகளினையும் வர்ணங்களினையும் நம்பியிராது கழிக்கப்பட்டதும் விலக்கப்பட்டதுமான பொருட்களினை ஓவியங்கள் படைத்திருந்தமை குறிப்பிடத்தக்கதாகும். குறிப்பாக தீக்குச்சி இலைகள் மரப்பட்டைகள் பழைய வேட்டித்துணி என்பவற்றினை அடிப்படையாக கொண்டு படைக்கப்பட்டிருந்தமை சிறப்பாகும்.
அத்தகைய படைப்புக்கள் வெளிக்கொணர வேண்டியது அவசியமானதாகும்.
S.T.Arulkumaran

சனி, டிசம்பர் 17, 2011

மானிப்பாய்இந்துக்கல்லூரியின் ஒளி விழா

மானிப்பாய்இந்துக்கல்லூரியின் ஒளி விழா வாகீசர் மண்டபத்தில் கல்லூரி அதிபர் எஸ்.சிவநேஸ்வரன் தலைமையில் இடம் பெற்றது.
இவ் ஒளி விழாவில் குமுப்பாடல், பேச்சு, குமு நடனம், கவிதை, நாடகம், தனிநடிப்பு, நத்தார் ஆட்டம் என்பன இடம்பெற்றது.
 நாடகத்திற்கான நெறியாள்கையை எஸ்.ரி.அருள்குமரனும் மேற் கொண்டிருந்தனர்.