என்னைப் பற்றி

புதன், மார்ச் 30, 2022

சிறுவர் நாடகங்கள் உள மாற்றத்திற்கும்களம் அமைத்து கொடுக்கும்.


(எஸ்.ரி.அருள்குமரன்)

அத்தியாயம் 2

சிறுவர் நாடகங்கள் பங்குபற்றுகின்ற மாணவர்களிடையே உள மாற்றத்திற்கும், கற்பனைரீதியான தேடலுக்கும் களம் அமைத்து கொடுக்கும்.

சிறுவர்களுடன்  இணைந்து அரங்க செயற்பாடுகள் மேற்கொள்வது அலாதியானது.மகிழ்ச்சிக்குரியது.பல விடயங்களை கற்றுக்கொள்வதற்கான சந்தர்பங்களினை ஏற்படுத்துகின்றன.

சிறுவர்களது மனோதிடம்,தொடர்பாடல் திறன்,ஆக்கவியல்செயற்பாடுகள் என்பவற்றினை கருத்தில் கொண்டு சிறுவர்களுடன் இணைந்து நாடகங்கள் தயாரிக்கின்றபோது கவனத்தில் கொள்ள வேண்டும்.

இப்பின்னனியில் சிறுவர் நாடகங்கள் பல இடங்களில் தயாரித்த போது பல்வேறு மாறுபட்ட அனுபவங்களினை பெற்றுக்கொள்ளக்கூடியதாக இருந்தது.

இந்வகையில் கீரிமலை நகுலேஸ்வரா ம.வியில் அப்போது  அதிபராக கடமையாற்றிய சு.ஸ்ரீ.குமரன் அவர்களின் வேண்டுகோளிற்கு இணங்க அவரது வழிகாட்டலில்  அப்பாடசாலை சிறார்களிற்கு நாடகம் பயிற்றுவிப்பதற்கான வாய்ப்பு ஏற்பட்டது.

அதிபர் மாணவர்களிடையே உள்ள திறன்களை வெளிக்கொனர்வதற்காக கலைத்துறை சாhந்த செயற்பாடுகள் மூலம் களங்களை திறந்திருந்தார்.அவரும் கலைத்துறையை சார்ந்;த எழுத்தாளளர் என்பதால்  சாத்தியமாகியது.

கற்றலில் மாணவர்கள் முதன்மை நிலையடைவதற்கு கலைத்துறை சாhந்த செயற்பாடுகளில் விரும்புடன் ஈடுபடுவதற்கு களங்கள் ஏற்படுத்தப்பட வேண்டும்.

 நாடகம் பழக்குவதற்கு ஆரம்பித்த வேளையில் மாணவர்கள் பலரும் ஒன்றுகூடியிருந்தார்கள்.நாடகம் பழக்கும்போது எம்போதும் மகிழ்வளிப்பிற்கு முதன்மை கொடுத்தவகையிலும்,சுயரீதியான நடிப்பிற்கு முதன்மை கொடுத்தவகையிலும் செயற்படுவது வழக்கம்.

நாடகம் சிறந்தமுறையில் வரவேண்டுமமாயின் ஒழுங்கானமுறையில் ஒத்திகைகளில் கலந்துகொள்வது வழங்கப்படுகின்றபாத்திரங்களினை உணர்ந்து நடிப்பது முக்கியம்.

 சிறுவர்களிற்கு நாடகம் பழக்குகின்ற போது இவற்றினை அவர்களிற்கு எற்றமொழியில் புலப்படுத்தி வெளிப்படுத்தவேண்டும். அவ்வாறு வெளிப்படுத்தகின்றபோதே நாடகம் சிற்பானதாக அமையும்.

நாடகம் நடிப்பதற்கு ஆர்வம் உள்ளவர்கள் இணைந்து விட்டால் நாடகத்தின் வெற்றி சாத்தியமாகின்றது.

பாத்திரங்கள் வழங்குகின்ற போது நடிப்பதற்கு ஆர்வம் உள்ளவர்களை இணைத்துக்கொள்ளவேண்டும.;

ஒருமாணவன் மிகவும் அமைதியாகவும்,அதிகம் கதையாதவனாவும் இருந்தான்.இவ்வாறு ஒதுங்கி இருப்பவர்களை இணங்கண்டு அவர்களிற்கான வாய்ப்பினைவழங்குகின்ற போது அவர்கள் ஆளுமையுள்ளவர்களாக மிளிர்வர்கள்

இந்தவகையில் அவனை நடிப்பதற்கு விரும்பம் உள்ளதாக எனக்கேடட்போது ஓம் என்றான். ஆனால் அவனால் உரையாடல்களை  உடனே பேசமுடியாது இருந்ததது. மிகவும் சிரமப்பட்டுத்தான் உரையாடலை மேற்கொண்டிருந்தான்..ஆனால் அவனது ஆர்வம் அப்பாத்திரத்தில் காட்டிய ஈடுபாடு நான் பழக்கி விட்டு வந்தபின்னர் அதனை மெருகேற்றுவதற்காக பொறுப்பாசிரியர் காட்டிய ஆர்வம் என்பன அவன் சிறந்த முறையில் நடிப்பதை சாத்தியமாக்கியது.


இம்மாணவன் பின்னர் வாசிப்பதில் சிரமமமற்று சிறப்பாக செயற்பட்டார்.

அதீத திறமையினை வெளிக்காட்டிக்கொண்டிருப்பவர்களைவிட திறமையினை வெளிக்காட்டவாய்ப்பற்று ஒதுங்கியிருப்பவர்களிடம் அசாத்திய திறன் ஒளிந்து காணப்படும்..அவற்றை இனங்கண்டு அவர்களது திறன்களினை வெளிக்கொணர்வதற்கு இத்தகைய செயற்பாடுகiளினை மேற்கொள்ள வேண்டும்.






அரங்கு எப்போதும் கற்றலுக்குரியது

 


(எஸ்.ரி.அருள்குமரன்)


அத்தியாயம்1

  அரங்கு சார்ந்த பயணங்கள் எப்போதும் மகிழ்வளிப்பனவாகவும்,,கற்றுக்கொள்ளலுக்கான களவெளயினை ஏற்படுத்துவனவாகவும் அமைகின்றது.

யாழ்ப்பானப்பல்கலைக்கழகத்தில் கல்வி கற்ற காலத்தில் கலாநிதி க.சிதம்பரநாதனின் வழிகாட்டலில் நிகழ்த்திய அரங்க செயற்பாடுகள் பசுiமாயனதாகும்.

அவைபல கற்றுக்கொள்ளலுக்கும்புதிய சிந்தனையுடன் பயனிப்பதற்கும் நிகழ்த்தபட்ட அரங்க செயற்பாடுகளின் ஊடாக பலம்,பலவீனங்களை உய்த்துனர்ந்துஅடுத்த கட்ட நகர்விற்கு செல்லக்கூடியதாவும் அரங்கின் ஊடாக சமூகமாற்றத்திற்கும் சமூக ஊடாட்டத்திற்கும் வாய்ப்புக்கள் ஏற்படுத்தப்பட்டன.

சுனாமி எனும் இயற்கையின் கோரத்தாண்டவத்திற்கு மக்கள் முகம் கொடுத்து சொல்லொனாத்துயர்களை அனுபவித்த பொழுதுகளில் அம்மக்களது பிரச்சினைகளை தீர்த்துக்கொள்வதற்கும், அவர்களது உளவிடுதலைக்கான திறவுகோல்களை ஏற்படுத்துவதினை நோக்கமாக கொண்ட வகையில் அரங்க செயற்பாடுகள் மேற்கொள்ளப்பட்டன.

இடம்பெயர்ந்த மக்கள்  முகாம்வாழ்வில் இருந்து மீண்டு தமது சொந்த இடங்களில் மீளக்குடியமர்ந்த பின்னர் தமது தொழில்  சார்ந்த செயற்பாடுகளில் மீள   செயற்பட முயன்ற காலப்பகுதியில் பட்ட ஆற்றுகை நிகழ்த்தப்பட்டது.

அவ்வாற்றுகை செயற்பாட்டில் ஈடுபட்ட போது ஏற்பட்ட அனுபவம் வித்தியாசமானதாக அமைந்திருந்து.

காலை வேளையிலேயே  அரங்க செயற்பாட்டிற்கான தயார்ப்படுத்தல்கள் மேற்கொள்ளப்பட்டன.

கிராமிய விளையாட்டுக்கள் சிறுவர்களுடன் இணைந்து விளையாடப்பட்டதுடன் ஊர் மக்கள்,பெரியவர்களுடன்  பல விடயங்கள் கதைக்கப்பட்டன.

 கதைத்து பெறப்பட்டகதைகளின் ஊடாக ஆற்றுகை மேற்கொள்வதற்கான கருத்துப்படிமங்கள் உருவாக்கப்பட்டன.

மாலை வேளை  பருவரையாhன ஆற்றுகை திட்டமிடலுடன் ஆற்றுகை களத்திற்கு சென்றோம்.

  மக்கள் மீளவும் பயமற்று கடலுக்கு சென்று தொழில் மேம்பாட்டினை மேற்கொள்வதற்கான நம்பிக்கையினை அளிப்பதாக ஆற்றுகை மேற்கொள்வதற்காக திட்டமிடப்பட்டன.

 ஆற்றுகையின் ஆரம்பித்தில் கடலுக்குள்  மீன் பிடிக்க செல்வதாக ஆற்றுகையினை மேற்கொண்டபோது நண்பர் சுதன்   'நீ மீனா நடி. நாங்கள் மீன்பிடிப்பவர்களாக நடிக்கின்றோம் அதை வைச்சுக்கொண்டு ஆற்றுகையனை நகர்த்திச்செல்வோம்' என்றார்.

 அவரது கோரிக்கையினை ஏற்று நான் மீனாக ஆற்றுகைசெய்தபோது      மீனவர்கள் சுனாமி அடித்தபின்னர் கடலுக்குள் வருவதில்லை. நாம் எல்லோரும் சுதந்திரமாக திரிகின்றோம் என்பதாக  ஆற்றுகையினை மேற்கொண்டபோது மீனவர்களாக நடித்தவர்கள் எங்களை பிடித்து இழுத்துவந்து மக்கள் கூடி நிற்கின்ற இடத்தில் ஆற்றுகையினை மேற்கொண்டனர்.

இவ்வாற்றுகை மக்களுடன் ஊடாடி ,மக்களது கருத்துக்களை உள்வாங்கி செயற்படுத்துகின்ற ஆற்றுகை எனும் வகையில் மிகவும் அவதானமாக மேற்கொள்ளப்பட்டிருக்க வேண்டும். ஆனால் அத்தகையவகையில் நிகழ்த்தப்படவில்லைஎன்பதை இப்போது உணர்ந்துகொள்ள முடிகின்றது.

 மீனவர்களாக நடிக்கின்றவர்கள் மக்களோடு ஊடாடுகின்றபோது 'என்ன  நீங்கள் கடலுக்கு சென்று பிடிக்காமமையினால் மீன்கள் சுதந்திரமாக திரிகின்றன என குறிப்பிட்ட போது  பங்காளிச்செயலாளிகள் (ஆற்றுகையில் பங்குபற்றியவர்கள்) தமது உணர்வுகளினை வெளிப்படுத்தியதுடன் கருத்துக்களினை குறிப்பிட்டு ,மீனாக ஆற்றுகை மேற்கொண்டவர்களை பிடித்தனர்.

.

 அவ்வேளை அவர்களது பிடியில் இருந்து தப்பி ஓடுவதாகநான் பாவனை செய்தபோது ஒருவர் என்னை பிடித்தவர் தலையை பிடித்து மூன்று  முறை  மண்ணில் அடித்தார்.

அவரதுதாக்குதலுடன் மூச்சிறைத்துப்போன நான் அப்படியே கிடந்துவிட்டேன். என்ன செய்வது என்று தெரியவில்லை. 

ஆற்றுகை முடிந்தபின்னர் கருத்துக்கள் பல பகிரப்பட்டபின்னர் சுதாகரித்துக்கொண்டு எழுந்த எனக்கு என்னை தாக்கியவர் கை தந்து நன்றாக நடித்தீர்கள் எனக்குறிப்பிட்டார்.

எனக்கோ அவரது பாரட்டுதலை விட அடி வாங்கிய ஞபாகம் நினைவுக்கு வருகின்றது. அவர் ஏன் என்னை இவ்வாறு தாக்கினார் என்பதற்கான காரனத்தினையும் அறிந்துகொள்ள வேண்டும் என மனம் தவித்தது.

அதற்கான காரனத்தை அவர்களிடம் கேட்டபோது குறித்த மீன் ஒன்றினது பெரினை குறிப்பிட்டு அம்  மீனை  வலையை விட்டு வெளியே எடுத்த பின்னர் அதை மூன்று முறை தiலைப்பகுதியில் அடித்தால் அது உயிரற்று போய் விடும் எனக்குறிப்பிட்டார். அம்மீனாக உங்களை  பாவனை செய்து      உங்களையும் தாக்கியதாக குறிப்பிட்டார்

இந்தவிடத்தில் இருந்து நோக்கும்போது அரங்க செயற்பாடு மக்களிற்கானது, மகிழ்வளிப்பிற்குரிது, அவர்களது சிந்தனையில் மாற்றத்தினை கொண்டுவருவதற்கான தளம் என்பது மாற்றுக்கருத்திற்கு இடமில்லை. ஆனால் அவர்களுடன் ஊடாடு கின்ற போது பல எதிர் வினைகளிற்கு முகம் கொடுக்கின்ற வகையில்  எம்மை தயார்ப்படுத்திச்செயற்பட வேண்டும் எனும் பட்டறிவினை நான் உணர்ந்துகொண்டேன்.

  அரங்கு என்பது எப்போதும் திட்டவட்டமான வகையில் முன் ஆயத்தங்களுடன்  இயங்கவேண்டியதுடன் .மக்கள் பங்குகொள்வதற்கான வாய்ப்புக்கள் முன்திட்டமிடலுடன் வழங்கப்படவேண்டும் என்பதை எனது அரங்க செயற்பாட்டு வாழ்வில் கற்றுக்கொண்டேன்.

ஆற்றுகை தளம் மணல் என்பதால் நான் தப்பித்துக் கொண்டேன் மாறாக காயங்கள் ஏற்படக்கூடிய சூழல் உள்ள அற்றுகை தளம் எனில் பாதிப்பிற்கு முகம் கொடுக்க நோர்ந்திருக்கும்

ஆற்றுகையாளனுக்கும் பார்ப்போனுக்கும் இடையில் உணர்வு ரீதியான புரிதல் கட்டமைக்கப்படவேண்டும் என்பதில் மாற்றுக்கருத்துக்கு இடமில்லை மாறாக உணர்ச்சியுடனான ஊடாட்டம் வருகின்றபோது ஆற்றுகையாளனும் பார்ப்போனும் இடைவெளியற்ற வகையில் நெருங்குpன்றபோது அல்லது ஊடாடுகின்றபோது அசம்பாவிதங்கள் நிகழ்துவிடுவதற்கான வாய்ப்புக்கள் அதிகம். அதனை  எவ்வாறுகையாளவேண்டும் என்பதற்கான பயிற்சிகள் இன்றி ஆற்றுகை தளத்திற்கு செல்வது மிகவும் ஆபத்தானது.

 ஆற்றுகையினை தகவமைக்கும் போது அல்லது ஆற்றுகையினை மேற்கொள்கின்றபோது இத்தகைய விடயங்களை கவனத்தில் கொள்ள வேண்டும் என அனுபவ ரீதியாக உணர்ந்துகொண்டேன். இல்லையேல் வெறும் உணர்ச்சிவசமானதாக மாறிவிடுவுதுடன் பங்குபற்றுச்செயலாளி பங்குபற்றுகின்றபோது வெளிப்படுத்துகின்ற உணர்ச்சியானது ஆற்றுகையின் மையத்தினை சிiதை;துவிடுவதுடன் ஆற்றுகையாளனையும் பாதித்து விடும் என்பது மாற்றுக்கருத்திற்கு இடமில்லை. ஆற்றுகையில் மீனாக  நடித்த நண்பருக்கு முழங்கால் தாக்கப்பட்டது நினைவுக்கு வருகின்றது.

அரங்க என்பது  மக்களுக்கானது. மக்களுக்கான அரங்கசெயற்பாட்டை மேற்கொள்கின்ற ஆற்றுகையார்கள் மிக முக்கியமானவர்கள். அவர்களது பாதுகாப்பும் அவர்களிற்கான அங்கீகாரமும் அவசியம் என்பதை இச்செயற்பாட்டனுபவம் உணர்த்தியது.


ஞாயிறு, மார்ச் 27, 2022

#இன்றுஉலகநாடகதினம்#


அரங்கர்கள் ஒன்று கூடுவதற்கும், அரங்களிக்கைகளின் ஊடாக சமூகம் சார் சிந்தனைகளை விரிவு படுத்திக்கொள்வதற்கும் அதற்கூடாக சமூக அசைவியக்கத்தில் காத்திரமான புல மாற்றத்தினை கொணர்வதற்கான களவெளிகளை ஏற்படுத்துவதற்கான நன்நாள்.
உலக நாடக தின விழாஉருக்கொண்டததற்கான பின்புலமாக அரங்கப் படைப்பாளிகளிடையே புரிந்துணர்வு , சமாதாணம் , அன்பினை பரிமாறிக்கொள்ளுதல் போன்றவற்றை வளர்த்துக்கொள்வதற்காகும்.
ஈழத்தமிழங்கிற்கு நீண்ட வரலாற்றுச்செழுமையும், இயங்கியல் புலமும் உண்டு.
அவ்வரங்கப்புலவெளியில் காலம் தோறும் கனதிமிகு அரங்க படைப்பாளிகள் முகிழ்ந்தெழுந்து வருகின்றமையினை காலம் பறை சாற்றிக்கொண்டிருக்கின்றது.
செயற்படுபவர்களது செயற்பாட்டினை முடக்குவதற்கும் இணைந்து பணியாற்றமுணைபவர்களுக்கிடையில் அதிகார நிலையில் பிரிகோட்டினை இடுவதிலும் முனைப்புக்காட்ட எத்தனிக்கின்றவர்கள் தம்மை இயங்கியலாளர்களாக காட்ட முனைகின்றனர்.
அரங்கதுறைசார்ந்த கல்விபெருவளர்ச்சி கண்டநிலையில் அரங்கின் இயங்கியல் பெரு வெளியினை ஆற்றுகை நிலை சார்ந்த வகையில் மாற்றமுறு சக்தியாக கொண்டுவருவதில் அத்துறை சார்ந்தவர்கள் கரிசணை காட்டாமை விவாதத்திற்குரியது.
வெறுமனே ஒப்புவிப்புப்பண்பாட்டு புலத்தில் இருந்து அளிக்கை சார்ந்த நிலைக்கு அரங்கைகொண்டு நகர்த்தவேண்டிய பணி அரங்க செயலாளிகளிற்கு தடைகளைத்தாண்டி இன்றுள்ள பிரதான பணியாகின்றது.
இயங்குபவர்களை இல்லாமலாக்குவதும் இயங்கியலற்றிருப்பவர்களை இயங்கிலாளர்களாக காட்டமுனைவதை அதிகார வெளி சார்ந்தவர்கள் அசை போடுகின்றனர்.
அரங்க நிலை சார்ந்தஆலேசகர்களே ஆலோசணை வழங்க திறனியற்றிருக்கின்ற இன்றை நிலையில் அரங்க செயற்பாட்டாளர்கள் இளைய தலைமுறையினரை அரங்கின் பால் திசை திருப்பவேண்டிய தார்மீகப்பணி காணப்படுகின்றது.
கடந்த இருவருட காலமாக உலகை அச்சுறுத்திய கொறோனா தொற்று அபாயத்தில் இருந்து படிபடிப்பாக விடுவிக்கப்படுகின்ற இன்றைய சூழல் மகிழ்வைத்தருகின்றது.
இடர்காலத்தில் இணைய வழியில் நேர்த்தளத்தில் பார்ப்போரை படைப்பாளிகள்சந்நித்துக்கொண்டபோதிலும் இன்றைய சூழல் நேரடியாக சந்தித்துக்கொள்ள வாய்ப்பேற்படுத்தியுள்ளது.
இதுவேறுபட்ட அனுபவமாகும்.
அவ் அனுபவ நிலையினை உணர்ந்து கொள்வதற்கான சூழல் கனித்து வருகின்றமை மனமகிழ்விற்குரியதாகும்.
இச்சூழலினை சாதமாக்கி அணைவரும் தத்தமது இயங்கியல் பயணத்தில் சோர்வின்றி சுயாதீனமாக அரங்க செயற்பாடுகளை மேற்கொள்ளவேண்டியது அனைவரது காலப்பணியாகும்.
அனைவருக்கும் உலக நாடக தின நல்
வாழ்த்துகள்
.
அரங்க பணியாற்றுவோம்.
அனைவருக்கும் புத்தாக்க அரங்க இயக்கத்தினரின் நல்
வாழ்த்துகள்
பணிப்பாளர் எஸ்.ரிகுமரன்
நிர்வாக பணிப்பாளர் எஸ்.ரி.குமரன்
ஆற்றுகையாளர்கள்.

கலைச்செயற்பாடுகளிற்கான கருவூலமாகிய சுன்னாகம் பொது நூலகம்.

எஸ்.ரி.அருள்குமரன் (வாசகன். சுன்னாகம் பொது நூலகம்.) 


 காலம் தனக்கான இயங்கியல் பெறுமானத்தினை தர நிர்ணயம் செய்கின்றது. அத்தர நிர்ணயம் செய்வதற்கான தலைமைகளை அக்காலமே வழங்குகின்றது. இடத்தினை மாற்றியமைத்து அதனை அழகியலாக்கி செயல்முனைப்பிற்குரிய வெளியாக்குவதில் அவ்விடத்தினை தலைமைத்துவப்படுத்துபவர்களது சிந்தனையின் விரிகோட்டில் தங்கியுள்ளது. 

 சிந்தனையினை செயல் வடிவமாக்குவதற்காக தன்னுடன் இனைந்து பயணிக்கக்கூடியவர்களை இணைத்துக்கொண்டு இச்செயலினை உயிர்கொள்ளும் வகையயில் வடிவமாற்றம் கொடுக்கின்ற தலைமைகள் கிடைக்கின்றபோது அவ்விடம் செழுமைப்படுகின்றதுடன் சமூகமும் செழுமைப்படுகின்றது. 

 நூலகங்கள் வாசிப்பின்நுகர்ச்சியினை கண்டு கொள்வதற்குரிய இடம் மட்டுமன்று.மாறாக இயங்கியலுக்குரிய வெளியினைகொண்ட இடமாக பரினமிக்கின்றபோதே அதன் தாக்கப்பெறுமனம் உயர்ச்சிகொள்கின்றது. 

 சுன்னாகம் பொது நூலகம் மிக உன்னதமான பணியினைஆற்றிய நிறுவனம். 

வாசிப்பு தளத்திற்காக வந்தவர்களை இணைத்து செயல்தளத்திற்கானவர்களாக மடைமாற்றிய பணியினை நல்கிய நிறுவனம். வாசிப்பு மனிதனை பூரணமாக்குகின்றது.என்பதை செயன்முறைரீதியாக கண்டு கொள்வதற்குரிய தளமாக சுன்னாகம் பொதுநூலகம் இருந்தது.என்பதை எனது ஞாபகவங்கிகளில் இருந்து மீட்டுப்பார்க்கின்றேன். 

 சுன்னாகம் பொது நூலகத்திற்கும் எனக்குமான உறவு நீண்டது.உடுவில் வசித்த காலத்தில் பத்திரிகைகள் வாசிப்பத்காக வருவதுண்டு.ஆனால் புத்தகங்களை பெற்றுக்கொள்வதற்குரிய வாய்ப்பு இருக்கவில்லை.காரணம் நாம் இடம்பெயர்ந்து இருந்ததினால்அப்பிரிவில்நிரந்தர வதிவிடத்தை கொண்டவர்கள்; மட்டுமே புத்தகங்களை இரவல் எடுத்துச்செல்லக்கூடியதாக நூலக சட்டம் இருந்தது.
அது தவிர்க்கவியலாததும் கூட. உயர்தரம் கற்வேளையிலும் பல்கலைக்கழகத்திற்கு தெரிவு செய்யப்பட்ட பின்னர் கூட நூலகத்தின் சஞ்சிகைப்பகுதியில் சஞ்சிகைகளினை எடுத்து வாசிப்பதுண்டு அது ஏதே ஒருவகையில் மன நிறைவினை தருவதுண்டு. 

 பல்கலைக்கழகத்தில் கல்வி கற்றுக்கொண்டிருந்த காலப்பகுதியில் நாட்டில் ஏற்பட்ட யுத்தச்சூழ்நிலை காரணமாக பல்கலைக்கழகம் மூடப்பட்டிருந்த வேளையில் பெரும்பாலான பொழுதுகள் சுன்னாகம் பொதுநூலகத்தில் கழிந்தது. 

 அக் காலப்பகுதியில் நூலகராக மதிப்பிற்குரிய க.சௌந்தரராஐன் ஐயா கடமை பொறுப்பேற்றிருந்தார். ஒருநாள் வழமைபோல் நூலகத்திற்கு சென்றிருந்தபோது அவருடன் கதைக்கக்கூடிய சூழ்நிலை கிடைத்தது.அப்போது புத்தகங்கள் பெற்றுக்கொள்வதற்குரிய வாய்ப்பின்மை பற்றி குறிப்பிட்டபோது இப்போது நடைமுறையில் சில மாற்றங்களை கொண்டு வந்திருக்கின்றோம் இப்பிரதேசத்தில் நிரந்தரமாக வதிப்பவர்களது உறுதிப்படுத்தலுடன்இணைந்துகொள்ள முடியும் எனத்தெரிவித்தார். அது மகிழ்வான செய்தியாக இருந்தது. காரணம் பல்கலைக்கழகம் மூடுண்ட நிலையில் புத்தகங்களை பெற்றுக்கொள்ள முடியாத நிலையில் இச்செய்தி வரப்பிரசாதமானதாக இருந்தது. 

 நிரந்தர வதிவிடத்தாரின் உறுதிப்படுத்தலுடன் நூலக அங்கத்தவராக இணைந்துகொண்டதினால் நூல்களை வாசிப்பதற்குரிய வாய்ப்பு கிடைத்ததுடன் இயங்கியல் ரீதியாக பயணிக்கக்கூடிய களவெளிகள் ஏற்படுத்தப்பட்டன. நூலகர் சௌந்தரராஐன் ஐயா பல்பரிமான சிந்தனை உடையவராகவும் இளம் செயற்பாட்டாளர்களை ஊக்குவிக்கின்றவர். 

அவர் பணிக்காலத்தில் கலைத்துறைசார்ந்த பல செயற்பாடுகளை ஆக்கவியல் சார்ந்த பரிமானத்துடன் செயற்படுத்தியிருந்தார். 

இலக்கியம்,ஓவியம்,புகைப்படம் ,நாடகம் வில்லுப்பாட்டு கவியரங்கம் முப்பரிமான நூலகம்,சிறுவர்களுக்கான கதைசொல்லல் என கலைத்துறைசார் பல்பரிமான செயற்பாடுகளை மேற்கொண்டிருந்தார். அவருடன் இணைந்து பல செயற்பாடுகளில் ஈடுபட்டிருக்கின்றபோதும் நாடக செயற்பாட்டாளர் எனும்வகையில் நாடகசெயற்பாடுகளில் ஈடுபட்ட காலங்களில் பலவிடயங்களைகற்றுக்கொள்ளக்கூடியதாக இருந்தது.

 உலக நாடக தின விழா,நூல்வெளியீடு விழிப்புணர்வுச்செயற்பாடு என பல தளங்களில் நாடகங்கள் நிகழ்த்தப்பட்டது. 'நித்தம் நித்தம் சுத்தம்' எனும் தெருவெளி நாடகம் மருதனார்மட நூலகத்தின்பொதுவெளியில் இடம்பெற்றது. டெங்கு நோய்த்தாக்கம் தொடர்பான விழிப்புணர்வினை ஏற்படுத்துவதுடன் நாம் பயன்படுத்திவிட்டு வீசியெறிகின்ற பிளாஸ்ரிக்பொருட்கள் போன்ற பாவனைக்குதவாக பொருட்களில் தேங்கிநிற்கின்ற நீர் டெங்கு நுளம்பின் உற்பத்திக்கு சாதகமாக அமைகின்றது. 

நாம் சுத்தமாக இருக்க வேண்டும் எமது சுற்றுச்சூழலை சுத்தமாக வைத்திருக்க வேண்டும் எனும் கருத்தினை வலியுறுத்தி இவ்வாற்றுகை நிகழ்த்தப்பட்டது.இவ்வாற்றுகையினை ஐயாவுடன் இணைந்து நெறியாழ்கை செய்திருந்தேன். இவ்வாறு ஆரம்பித்த நாடகசெயற்பாடுகள் நூலகத்தின் பல நிகழ்வுகளில் நிகழ்த்தப்பட்டன. 

ஓவிய,புகைப்பட,நூல் கண்காட்சிகளுடன் நாடகமும் அரங்கியலும் பாடத்தில் பரீட்சைக்கு தோற்றுகின்ற மாணவர்களிற்கான கருத்தரங்கு நிகழ்த்தப்பட்டது. 

இக்கருத்தரங்கில்பு.கனேஷராஐh,எஸ்.ரி.குமரன்,எஸ்.ரி.அருள்குமரன்,எஸ்.மயூரன் ஆகியோர் வளவாராக கலந்துகொண்டு மாணவர்களிற்கான வழிகாட்டல்களை மேற்கொண்டிருந்தனர். இந்நிகழ்விற்கு பிரதம விருந்தினராக நாடகத்துறை விரிவுரையாளர் சி.ஜெயசங்கர் கலந்துகொண்டிருந்தார். அவர் குறிப்பிட்ட கருத்து மிக முக்கியமானது . 'நூலகம் இயங்குநிலையில் இருக்கவேண்டும் அதுதான் மாற்றத்திற்கானதாக இருக்கும்' என குறிப்பிட்டது நினைவுக்கு வருகின்றது. 

மாலைவேளை கலைமுகம் சஞ்சிகையின் அறிமுக நிகழ்வுஇடம்பெற்றது. அந்நிகழ்வில் திருமறைக்கலாமன்றத்தின் பிரதி இயக்குனர் யோன்சன் ராஐ;குமார்,கலைமுகம் சஞ்சிகையின் பொறுப்பாசிரியர் சி.செல்மர் எமில் ஆகியோர் கலந்துகொண்டிருந்தனர். 

 நிகழ்வொன்றில் எனது எழுத்துரு-நெறியாழ்கையில் சாட்சி எனும் நாடகம் இடம்பெற்றது.நகைச்சுவைக்கு முதன்மை கொடுக்கப்பட்டு நிகழ்த்தப்பட்ட நாடகம் பலரது பாராட்டினை பெற்றுக்கொண்டது. 

 உலக நாடக தின விழாவினை இப்பொது நூலகத்தில் நூலகர் க.சௌந்தரன் ஐயாவினது கோரிக்கைக்கமைவாக 2010ம் ஆண்டு கொண்டாடப்பட்டது. அந்நிகழ்வில் எஸ்.ரி.குமரன்,எஸ்.ரி.அருள்குமரன் ஆகியோரின் நெறியாழ்கையில் கூட்டசைவு எனும் அபத்த நாடகம் நிகழ்த்தப்பட்டது .இந்நாடகத்தின் மையப்பொருளாக அதிகார போட்டியும் அதன் இடர்பாடுகளும் ஊடுபொருளாக வெளிப்படுத்தப்பட்டது. 

பெண்வாழ்வின் தரிசனங்கள் எனும் நாடகமானது பாகீரதி கனேசதுரையின் எழுத்துருசட்டகத்தினை அடிப்படையாகக்கொண்டு எம்மால் நிகழ்தப்பட்டது. மகளீர் தினம் மற்றும் உலக நாடக தினக்கொண்டாட்டம் இணைத்து நிகழ்த்தப்பட்டபோது இவ் நாடகம் நிகழ்த்;தப்பட்டது. உதயசூரியன்சனசமூக நிலைய அங்கத்தவர்கள் இந்நாடகத்தில் பங்கெடுத்திருந்தனர். 

 செவிட்டு ராமு எனும் நகைச்சுவை நாடகம் மறுபாதி சஞ்சிகை அறிமுக நிகழ்வில் இடம்பெற்றது. இந்நாடகம் நூலகர் க.சௌந்தரராஐன் ஐயாவின் எழுத்தாக்கத்தில் நூலகர் க.சௌந்தரராஐன் ஐயா,எஸ்.ரி.குமரன்,எஸ்.ரி.அருள்குமரன்,த.துவாரகன்,மகழீசன் ஆகியோர் ஆற்றுகையினை மேற்கொண்டிருந்தனர். இந்நாடகம் பலரது பாராட்டினை பெற்றுக்கொண்டது. புத்தாக்க அரங்க இயக்க கலைஞர்களின் நடிப்பில் எஸ்.ரி.குமரன் ,எஸ்.ரி.அருள்குமரன் நெறியாழ்கையில் வாசிப்பதனால் மனிதன் பூரணமடைகின்றான் எனும் தெருவெளி நாடகமானது வாசிப்பின் மகத்துவத்தினை ஆற்றுகையாக வெளிப்படுத்தியிருந்தது. 


ஞான விலாசம் எனும் தொனிப்பொருளில் மாதந்தம் நூல்கள்பற்றிய அறிமுகங்கள்இடம்பெற்றிருந்தன.அவை எழுத்தாளர்களை சந்திப்பதற்கும்,அவர்களுடன் கலந்துரையாடுவதற்கும் வாய்ப்புக்களை உருவாக்கின. உலக புத்தக தின விழாக்கொண்டாட்டங்களில் வில்லிசை நிகழ்த்தப்பட்டிருந்தது. 


புத்தகம் தரும் வித்தகம் எனும் வில்லிசையானது நூலகர் சௌந்தரரன் ஐயா எழுத்து -நெறியாழ்கையினை மேற்கொண்டதுடன் அவரே முதன்மையான கதைசொல்லியாக செயற்பட்டிருந்தார் புத்தகம் வாசிப்பதன் முக்கியத்துவம் நூலினது வரலாறு என்பவற்றை இனிமையான பாடல்களின் ஊடாக நகைச்சுவைக்கூடாக கதை சொல்லப்பட்டது. அதன் காட்சிப்படிமம் இன்றும் மனக்கண்முன் நிற்கின்றது. புத்தக தின விழாவில் மிகச்சிறந்தமுறையில் ஏடுகள் ஊர்வலமாக புனிதத்துவத்துடன் எடுத்துவரப்பட்டு நிகழ்த்தப்பட்டது. இவ்வாறு சுன்னாகம் பொதுநூலகத்தில் நிகழ்த்தப்பட்ட கலைச்செயற்பாடுகள் பற்றிய நினைவுகள் வந்து செல்கின்றன. 

 சுன்னாகம் பொது நூலகத்தின் பணி சிறக்கட்டும்.