என்னைப் பற்றி

சனி, செப்டம்பர் 13, 2014


(எஸ்.ரி.அருள்குமரன்)

முடிவிலியாக ஓடிக் கொண்டிருக்கும் காலம் தனக்கான ஆளுமைகளை வரலாற்றின் வழி உருவாக்கிக் கொண்டேயிருக்கிறது.
காலத்தின் குரலாய் கலைஞனே காணப்படுகின்றான் சமூகத்திற்காய் தன்னை அர்பணிப்பதுடன் பிரதிபலன் பாராது செயல்பப்டகின்றான் தன்னுடைய படைப்புக்களின் மூலம் சமூகத்தினை பதிவு செய்து கொள்கின்றான்.
   மனிதன் மனிதனாக வாழ்வதில் பெருமிதம் கொள்கிற ஒரு அழகிய உலகமே அவன் கனவு. அந்த கனவு நனவாக அவன் தன் கலையின் மூலம் புதிய வெளிச்சம் பாய்ச்சுகிறான். மனிதமன இருளை, இருட்குகையினுள் அடைந்துகிடக்கும் மனவக்கிரங்களை தன் படைப்புகளில் ஆராய்ச்சி செய்கிறான். நாமே அறியாத நம் மனதின் அத்தனை மூலைமுடுக்குகளிலும் அவன் பயணிக்கிறான்.   கலையின் பொன்னொளியால் அன்பெனும் சுடரை ஏற்றுகிறான்.

இந்த பிரபஞ்சத்தை நேசிக்கும் கலைஞன் அதற்காகத் தன்னையே விலையாகக் nhகடுக்கின்றான்.
இக்தகைய கலைஞர்கள் காலத்தின் பிரசவிப்புக்களாக கொள்ள முடியும். இப்பின்னனியி; அற்ப்புதமான சினிமாக் கலைஞனான பாலு மகேந்திராவை இந்த உலகம் இழந்துவிட்டது.

ஈழத்திலே பிறந்து இந்திய சினிமாவில் சாதித்து இந்திய சினிமாவில் உலகததரம் வாய்ந்த படைப்புக்களினை படைத்து சினிமா என்பது காண்பிய ஊடகம் என்பதினை கலைத்துவமான வகையில் தனது படைப்புக்களின் மூலம் வெளிப்படுத்திய அற்புதமான கலைஞனை கலை உலகம் இழந்து விட்டது.

தமிழில் சினிமா மொழியை புரிந்து கொண்டு, அதுவரை காலம் ஒளிப்பதிவு என்பதும் சினிமா மொழியின் ஒரு முக்கியமான கூறு என்பது கவனம் செலுத்தப்படாத சூழலில் அதை பற்றி  புரிந்து தமிழ் சினிமாவின் வளர்ச்சிப் போக்கில் கேமராவால் கதை மட்டுமல்ல உணர்ச்சிகளையும், உணர்வுகளையும் சொல்ல முடியும் என்பதை நிருபித்த கலைஞான இவர் விளங்குகின்றார்.

இவரது இழப்பு சினிமாவுக்கு பெரும் இழப்புதான்.
பாலு மகேந்திரா    இந்தியத் திரைப்பட இயக்குனர் ,  ஒளிப்பதிவாளர், எடிட்டர், நடிகர் என்று பண்முகம் கொண்டவர்.
சமகாலத் தமிழ் வாழ்க்கையை சித்தரிக்கும் பல படைப்புகளை உருவாக்கியவர். தமிழ், தெலுங்கு, கன்னட, மலையாள, ஹிந்தி மொழித் திரைப்படங்களை படைத்தவர்.

1939 மே 19 ஆம் தேதி இலங்கையில் மட்டக்களப்பு அருகே அமிர்தகழி என்ற சிற்றூரில் பிறந்தவர்.

லண்டனில் தன்னுடைய இளநிலைக் கல்வி படிப்பினை முடித்தஇவர். பூனா திரைப்படக் கல்லூரியில் ஒளிப்பதிவுக்கலை பயின்று 1971ல் தங்கப்பதக்கம் பெற்றார்.

படிக்கும் காலத்திலேயே பாலி மிஸ்திரி, ஜி.கே.மூர்த்தி, சுப்ரதோ முகர்ஜி ஆகியோரின் ஒளிப்பதிவால் ஈர்க்கப்பட்டார். யாரிடமும் உதவியாளராக பணியாற்றவில்லை. 1971ல் மலையாள படமான 'நெல்லுவில் ஒளிப்பதிவளராக பணியை துவக்கினார்.

இப்படத்துக்காக சிறந்த ஒளிப்பதிவாளர் விருதை கேரள அரசு வழங்கியது. 1976 வரை பல மலையாள படங்களுக்கு ஒளிப்பதிவாளராக பணியாற்றிய இவர் 1977ல் கோகிலா என்ற கன்னட படத்தின் மூலம், இயக்குனராக உருவாகினார். இப்பஇப்படத்துக்காக, 'சிறந்த ஒளிப்பதிவாளருக்கான தேசிய விருதை வென்றார்.

தமிழில் இவர் ஒளிப்பதிவு செய்த முதல் படம், முள்ளும் மலரும். 1979ல் இவர் இயக்கிய முதல் தமிழ் படம் 'அழியாத கோலங்கள் ஆகும்.
ஒளிப்பதிவு செய்யும் போது, இயற்கையில் என்ன வெளிச்சம் இருக்கிறதோ அதையே பயன்படுத்துவது இவரது சிறப்பம்சம்.இத்தகைய பாணி இவரது படங்களிற்கு பலம் சேர்ப்பாதாக அமைகின்றது.

ஐந்து முறை தேசிய விருதுகளினை தான் ஆற்றிய பணிகளுக்காக பெற்றுள்ளாh  கோகிலா,   மூன்றாம் பிறை,   வீடு,   சந்திய ராகம்,   வண்ண வண்ண பூக்கள் இயக்குனர், திரைக்கதை, ஒளிப்பதிவாளர் ஆகிய அனைத்து துறைக்கும் விருது வாங்கியவர் இவர் ஒருவரே.

சிறந்த இயக்குனருக்கான தேசிய விருதை பாலு மகேந்திரா மூன்று முறை பெற்றுள்ளார் வீடு, சந்தியாராகம், வண்ண வண்ண பூக்கள். சிறந்த திரைக்கதைக்கு கோகிலா, அழியாத கோலங்கள் ஆகியவை விருது பெற்றன.
மூன்று முறை பிலிம்பேர் விருது, கன்னட மாநில விருது, இருமுறை கேரள மாநில விருது, இருமுறை நந்தி விருது பெற்றவர்.

 இவர்  இயக்கிய படங்களாக கோகிலா,அழியாத கோலங்கள்,மூடுபனி,மஞ்சு மூடல் மஞ்சு (மலையாளம்),ஓலங்கள் (மலையாளம்),நீரக்ஷ்னா (தெலுங்கு),சத்மா (ஹிந்தி),ஊமை குயில்,மூன்றாம் பிறை,நீங்கள் கேட்டவை,உன் கண்ணில் நீர் வழிந்தால்,யாத்ரா,ரெண்டு தொகல திட்ட (தெலுங்கு),இரட்டை வால் குருவி,வீடு,சந்தியாராகம்,வண்ண வண்ண பூக்கள்,பூந்தேன் அருவி சுவன்னு,சக்ர வியூகம்,மறுபடியும்,சதி லீலாவதி,அவுர் ஏக் ப்ரேம் கஹானி (ஹிந்தி),ராமன் அப்துல்லா,ஜூலி கணபதி,அது ஒரு கனாக்காலம்,தலைமுறைகள் போன்ற படங்களை இயக்கியுள்ளார்
.
நன்றி யாழ்.தினக்குரல்