என்னைப் பற்றி

வெள்ளி, நவம்பர் 29, 2013


                                                   நேர்காணல்( எஸ்.ரி.அருள்)

நாடகச்செயற்பாட்டில் ஈடுபட்டதினால் தலைமைத்துவப்பண்பகளினை வளர்த்தக்கொள்ளக்கூடியதாக உள்ளது.



நாடகச்செயற்பாட்டில் ஈடுபட்டதினால் தலைமைத்துவப்பண்பகளினை வளர்த்தக்கொள்ளக்கூடியதாக உள்ளது.இத்துறையில் தொடர்ந்தும் ஈடுபட்டு நிறைய சாதிக்கவேண்டும் என்பது எனது ஆசை என தேசிய ரீதியில் நடைபெற்ற தனிநடிப்பு போட்டியில் வெற்றி பெற்ற மானிப்பாய் இந்தக்கல்லூரியில் கல்வி பயிலும் யே.சானுஜன் தொரிவித்தர்.
அகில இலங்கை பாடசாலை மாணவர்களிடையே காணப்படுகின்ற தனிநபர் திநன்களினை வெளிக்கொனரும் வகையில் கொழும்பு றோயல் கல்லூரியினால் நடத்தப்படுகின்ற தனி நடிப்பு போட்டியில்  வடமாகாணத்தினை பிரதி நிதித்துவப்படுத்தும் வகையில் தேசிய  ரீதியில் 3ம் இடத்தினை பெற்று பாடசாலை சமூகத்திற்கு பெருமை சேர்த்தள்ளார்.
இவர் வெற்றிக்கான செயற்ப்பாடுகளினையும் தனது அநுபவத்தினையும்   பகிர்ந்துகொண்ட போது

அறிமுகம்-நான் சில்லாலையில் பிறந்தேன் எனது அப்பா பெயர் யேசுதாசன் அம்மா அஜந்திமாலா ஆழம்ப கல்வியினை பண்டத்தரிப்பு  பெண்கள் உயர்தரப்பாடசாலையில் பயின்றதுடன் தற்போது மானிப்பாய் இந்தக்கல்லூரியில் தரம் 7ல் பயின்று வருகின்றேன்
நாடக செயற்ப்பாட்டில் ஈடுபட்டதற்கான காரனம்- அத்துறையில் உள்ள விருப்பமும் அத்துறையில் வளர வேண்டும் என்பதாகும்

நிங்கள் பங்கு பற்றி வெற்றி பெற்ற போட்டி தொடர்பாக குறிப்பிடுங்கள்?
கொழும்பு றோயல் கல்லூரியின் தமிழ் நாடக மன்றம் தேசிய ரீதியில் நடத்திய போட்டியில் மாவட்ட நிலையில் முதல் இடத்தினையும் தேசிய ரீதியில் 3ம் இடத்தினையும் பெற்றுக்கொண்டென்.இவ் வெற்றி மிகவும் மகிழ்ச்சியாக காணப்படுகின்றது இன்னும் பல வெற்றிகளிளை பெற்றக்கொள்ள வேண்டும் என்பது ஆசையாகும்

நீங்கள் பங்குபற்றிய நாடக  போட்டிகள் தொடர்பாக குறிப்பிடுங்கள்?

பண்டத்தரிப்பு பெண்கள் உயர்தரப்பாடசாலையில் தரம் 4,5 ல் கல்வி பயின்ற போது நாடக போட்டியில் மாவட்ட மட்டம் வழர பங்குபற்றியுள்ளேன்.
மானிப்பாய்  இந்துக்கல்லூரியில் பல நாடகங்களில் ஈடுபட்டுள்ளேன். மன்றங்களில் பல்வேறு நாடகங்;களில் மேடையிட்டுள்ளோம். தரம் 6ல் கல்வி பயின்ற போது இடம்பெற்ற வலயமட்ட கணித நாடகப்போட்டியில்  அறிவு எனும் நாடகம் 3ம்  இடத்தினையும் கொழும்பு றோயல் கல்லூரி நடத்திய  மாவட்ட மட்ட நாடகப்போட்டியில் பங்குபற்றியமை.தரம் 7ல் வலய மட்ட கணித நாடகப்போட்டியில் 2ம் இடத்தினை பெற்றுக்கொண்டோம் அதே போன்று கொழும்பு றோயல் கல்லூரி நடத்திய மாவட்ட போட்டியில் 2ம் இடத்தினையும் ஸ்கந்தவரோதயாக்கல்லூரி நடத்திய விஞ்ஞான நாடகப்போட்டியில் 2ம் இடத்தினை பெற்றுக்கொண்டோம்.

பங்கபற்றிய பிற போட்டிகள்? 

பண்டத்தரிப்ணப பெண்கள் உயர்தரப்பாடசாலையில் பயிலும் போது பேச்சுப்போட்டியில் வலய மட்டத்தில் முதலிடத்தினையும்  இம்முறை தமிழ்தினப்போட்டியில் கோட்டமட்டத்தில் முதலிடத்தினை பெற்று வலயமட்டத்தில் பங்குபற்றினேன்.

பாடசாலைக்க வெளியே ஏதாவது நாடக நிறுவனங்களுடன் பங்குபற்றிய அநுபவம்?

புத்தாக்க அரங்க இயக்கம் எனும் நிறுவனத்துடன் இணைந்து நடித்து வருகின்றோம். புத்தாக்க அரங்க இயக்கத்தினர் சங்கானை பிரதேச கலாசார பேரவையடன் இணைந்து கலாசார விழிப்பனர்வினை ஏற்ப்படுத்தும் எங்களின் கதைகள் எனும் தெருவெளி நாடகத்திலும் அதே போன்று தெல்லிப்பழை பிரதேச செயலக கலாசாரப் பேரவையினரின் அனுசரனையில் இடம்பெற்ற பண்படு எனும் தெருவெளி நாடகத்திலும் சண்டிலிப்பாய் பிரதேச செயலக கலாசாரப்ரேவையினர் பாடசாலைகளில் நிகழ்த்திய விழிப்பனர்வு செயற்பாட்டில் விடிவு எனும் நாடகத்திலும் முக்கிய பாத்திரமேற்று நடித்திருந்தேன்.இந்நாடகத்திற்கான நெறியாழ்கையினை எஸ்.ரி.குமரன்,எஸ்.ரி.அருள்குமரன் சேர் ஆகியோர் ஆகியோர்  மேற் கொண்டிருந்தனர்.

 இச்செயற்பாடுகளில் ஈடுபட்டமையினால் ஏற்ப்பட்ட மாற்றம்?

எதையம் சிறப்பாக செய்யக்கூடியளவிற்கு தன்னம்பிக்கை ஏற்ப்பட்டது. நாம் புதிதாக சுயமாக செய்வதற்குரிய வகையில் வளர்ந்தள்ளோம் குழு ஒற்றமை தலைமைத்துவம் எவ்வவாற நடந்து கொள்வது என்பவற்றினை அறிந்து கொள்ள கூடியதாக உள்ளது.

இச்செயற்ப்பாட்டிற்கு ஆதரவாக உள்ளவர்கள்?

பெற்றோர் ,அருள் சேர் மற்றும் எமது நாடக குழு நண்பர்கள். 

செவ்வாய், நவம்பர் 12, 2013

                                           தேசியத்தில் மூன்றாம் இடம்



கொழும்பு றோயல்கல்லூரியினால் நடாத்தப்படுகின்ற  நாடகத்திறன்கான் தனிநடிப்புப்போட்டியில் தேசிய மட்டப்போட்டியில்  மானிப்பாய் இந்துக்கல்லூரி கல்லூரி மாணவன் சானுஜன்3ம் இடத்  தினை பெற்றுள்ளார்.

 கொழும்பு றோயல்கல்லுரியின் நடக மன்றத்தினரால் வருடாந்தம் அகில இலங்கைப்பாடசாலைகளுக்கிடையில் நடாத்தப்பட்டு வருகின்ற நாடகத்திறன்காண் போட்டியி ல்      கனிஷ்டபிரிவினருக்கான போட்டியில் மானிப்பாய்இந்துக்கல்லூரியிக்கல்லூரியின் மாணவன் ஜே.சானுஜன் மூன்றாம் இடத்தினை   பெற்று பாடசாலைக்கு பெருமை சேர்த்துள்ளார்.

இம்மாணவனுக்கான நடிப்புசார் பயிற்ச்சிகளினையும் வழிப்படுத்தலினையும்  கல்லூரியின் நாடகமன்றப் பொறுப்பாசிரியர் எஸ்.ரி.அருள்குமரன் வழங்கியுள்ளார்.

ஞாயிறு, ஆகஸ்ட் 18, 2013

(எஸ்.ரி.அருள்குமரன்)


இலண்டன் தமிழ் அவைக்காற்றுகைக்கலைக்ககத்தினரின்

 35 ஆவது நாடக விழா

நாடகம் எனும் கலைவடிவமானது நீண்ட வரலாற்றுப்பரம்பரியங்களினை கொண்டதாகும்.மனித உணர்வுகளினை கருத்தியல் ரீதியாக வெளிப்படுத்துவதில் காத்திரமான பங்க வகிப்பதினாலும் ஆற்றுகையாளன் மூலம் பார்வையாளர்களிற்கு நேரடி உயிர்ப்பு விசையினை வழங்குகின்ற வகையிலும் நாடகங்களிற்கான சமூகவியற்பெறுமானம் கனதியாக காணப்படுகின்றது.

நாடகங்களின் பின் உந்துதல்கள் ஈடுபடுபவர்களிடையே ஆளுமை மாற்றத்திற்க்கும் படைப்பின் ஊடாக சமூகவியற் பெறுமானத்தில் மாற்றங்களினை கொணர்வதிலும் முக்கிய பங்கு வகிக்கின்றன.
நாடகம் என்பதினை (மேடை) வெளிகளில் அசைவியல் கருத்தியல் ஊடாக தகவமைக்கப்படுகின்ற நிகழ்த்துகையாக கொள்ள முடியும். இதன் உயிர்ப்பு ஆற்றுகையாளர் தமது இயங்குதலின் ஊடாக நாடகப்பிரதியின் உயிர்பினை  பார்ப்போரிடையே கொண்டு  செல்வதுடன் உறவுப்பினைப்பினையும் ஏற்ப்படுத்துகின்றனர்.

அவ்வகையில் பிரதியில் எடுத்தாளப்படுகின்ற விடயங்கள் ஆற்றுகையாளரினால் முழுமையாக உய்த்துனர்ந்து வெளிப்படுத்தும் போது படைப்பு பார்ப்போரிடையே  வெற்றியினை பெறுகின்றது.
 
நாடகத்தின் வெற்றியிலே  ஆற்றுகையாளர்களிற்கான முக்கியத்துவம் எவ்வாறு உள்ளதோ அதே போன்று படைப்பினை உருவக்கிக்கொள்வதில் நெறியாளர்களது செயற்ப்பாடுகளும்  கனதியானவையாக காணப்படுகின்றன.
ஈழத்து அரங்கினை பொறுத்தவரையில் காலம் தோறும் கனதியான நெறியாளர்களினை காலம் பிரசவித்துக்கொண்டிருக்கின்றது எனும் எதார்த்த்தின் மத்தியில் 1970களில் கோலேட்ச்pய நெறியாளர்களில் ஒருவராக க.பாலேந்திரா விளங்குகின்றார்.

யாழ்ப்பானம் அரியாரலயில் பிறந்த இவர் பொறியியல் பட்டதாரியாவர் ஆயினும் இவரது ஆர்வம் நாடகத்துறையில் காணப்பட்டமையினால் நாடக செயற்ப்பாட்டில் தன்னை ஈடுபடுத்திக்கொண்ட இவர் அக்காலப்பகுதியில் கனதியான பல நாடகங்களினை மேடையிட்டிருந்தார்..சுவைர்கமிட்டின் நாடகங்களில் நடித்த இவர்  அவ்வனுபவங்களின் ஊடாக தன்னை ஆளுமைமிக்க நெறியாளராக பதிவுசெய்து கொண்டார்.
 அவைக்காற்றுகைக்கலைக்கழகம் எனும் அரங்க்கக்கழகத்தின் மூலம் மொமி பெயர்ப்பு நாடகங்களினை மேடையிட்டிருந்தர். இவரது விருப்பத்திற்க்குரிய நாடகமாக அமெரிக்க நாடகவியலாளரான ரெனசி வில்லியத்தின் கண்ணாடி வார்ப்புக்கள் எனும் நாடகத்தினை 1978ம் ஆண்டு யாழ்ப்பானம் வீரசிங்கம் மண்டபத்தில்  மேடையிட்டிருந்தர்;.

போரியல் சூழ்நிலை காரணமாக புலம்பெயரியான இவர் இலண்டனினை தலைமையகமாக கொண்டு நாடக முயற்ச்;சிகளினையும் சிறுவர் நாடகங்களினையும் மேற்கொண்டு வருகின்றார்..
 இலண்டன் தமிழ் அவைக்காற்றுகைக்கலைக்கழகம் எனும் பெயரில் தமது குழுவினை அமைத்து பல்வேறு நாடுகளிற்கும் சென்று நாடக செயற்ப்பாடுகளினை மேற்க்கொண்டு வருகின்றவேளையில்  அக் குழுவினர் 35 ஆவது ஆண்டு நாடக விழாவினை யாழ்.மண்ணில் நிகழ்த்தியிருந்தனர்.
கடந்த 3ம்திகதி சனிக்கிமை யாழ்.வீரசிங்கம் மண்டபத்தில்; இவரது நெறியாழ்கையில்   பிரத்தியோக காட்சி, பாடம், கண்ணாடிவார்ப்புக்கள், சம்பந்தம்    ஆகிய நாண்கு நாடகங்கள்  இடம் பெற்றன.
பிரத்தியோக காட்சி எனும் நாடகமானது வாழ்வியலில் உள்ள சின்ன சின்ன விடயங்களினை ரசிப்பதன் ஊடாக வாழ்வு எவ்வாறு சிறப்பானதாக காணப்படுகின்றது என்பதினை பேசு பொருளாக  இந்நாடகம் கொண்டிருந்தது.
 இந்நாடகத்தின் பாகமாடிகளாக திருமதி ஆணந்தராணி-பாலேந்திரா ,மனோ,சத்தியேந்திரா செயற்ப்பட்டனர். மிகவும் உணர்வு பூர்வமான வகையில் நடிப்பினை வெளிப்படுத்தியிரந்தனர்.

இந்நாடகத்திற்கான மொழியாக்கத்தினை பேராசிரியர்சி.சிவசேகரம் மேற்கொண்டிருந்தார்  இந்நாடகம் 1992 காலப்பகுதி முதல் மேடையிடப்பட்டு வருகின்றமை குறிப்பிடத்தக்கது.
பாடம் எனும் நாடகமானது யூயின் அயனெஸ்கோவினது மூல பிரதியாகும்.இந்நாடகம் அபத்தபாணி நாடகமாகும் பேராசியருக்கும் மாணவிக்கும் இடையிலான செயற்ப்பாhட்டினை இந்நாடகம் எடுத்துக்காட்டுகின்றது. இதில்க.பாலேந்திரா, செல்விமானசிபாலேந்திரா,திருமதிஆணந்தராணி பாலேந்திரா ஆகியோர் பாகமாடினர்.

ரெணசிவில்லியத்தின் மூலபாடத்தினை தமிழில் நிர்மலா நத்தியானந்தம் ,மல்லிகா,பாலேந்திரா ஆகியோரது மொழிபெயர்ப்பில் கண்ணாடி வார்ப்புக்கள் எனும் நாடகம் இடம்பெற்றது.இந்நாடகத்தில்   வாசுதேவன், திருமதி சரிதா-அண்ணாத்துரை திருமதி ஆணந்தராணி-பாலேந்திரா ஆகியோர் பாகமாடினர்.
குடும்பத்தில் உள்ள உணர்வினை தத்ரூபமாக நாடகமாக பதிவு செய்ததில் ரெணசி வில்லியத்தின் பங்கு கனதியாகும் அவ்வுணர்வுகளினை இவ்வாற்றுகைகளில் கண்டு கொள்ள கூடியதாக இருந்தது.
அண்ரன்செக்கோவினது மூலமொழிநாடகமான சம்பந்தம் எனும் நாடகமானது நகைச்சவையானதாக வடிவமைக்கப்பட்டிருந்தது. இந்நாடகத்தில் வாசுதேவன்,சத்தியேந்திரா,திருமதி ஆணந்தராணி-பாலேந்திரா ஆகியோர்  பாகமாடினர்.
நான்கு நாடகங்களும் பார்வையாளர்களிடையே கனதியான பெறுமானத்தினை ஏற்ப்படுத்தியிருந்தது. அவைக்காற்றுகைக்கழகத்தினரது நாடகங்களினை மீளவும்; யாழ்.மண்ணிலே பார்ப்பதற்கான வாய்ப்பு பலருக்கு எற்றப்பட்டது.குறிப்பாக அக்காலத்தில் அவர்களது நாடகங்களினை கண்டு ரசித்தவர்களுக்கு மீளவும் வாய்ப்பு கிடைத்தது என்பதுடன் இளம் தலைமுறையினருக்கு அவர்களது ஆற்றுகை வடிவங்களினை  கண்டு கொள்வதற்கும் வாய்ப்பு ஏற்ப்பட்டது.

 நாடகத்தினது வளர்;ச்சியென்பது கனதியாகவும் நவீனத்துவ சிந்தனையோடு வளர்சியடைந்த சமூகத்;தில்   பதிய சிந்தனையுடன்   இந்நாடகங்களது ஆற்றுகைகள் இடம் பெற்றமை குறிப்பிடத்தக்கதுஆகும்.
பாடசாலை மாணவர்கள் மற்றும் பலர் அநுபவ ரீதியில் ஆற்றுகைகயினை கண்டு களிப்பதற்கான வாய்ப்பாக இவ் நாடக விழா இடம் பெற்றது.
35 வருடங்களாக ஓய்வின்றி கலைத்துவ பணியினை யாற்றி வருகின்ற இக்குழுவினரது பணிகள் பாரட்டப்படவேண்டியதாகும்.குடும்பமாக கலைப்பணியினை ஆற்றிவருகின்ற இவர்களது செயற்ப்பாடுகள் தொடரவேண்டும் இது சமூகத்திற்கு பயனுள்ள செயற்பாடாக அடையும்.
இந்நாடக விழாவிற்கான அனுசரனையினை திருமறைக்கலாமன்றம், தேசிய கலை இலக்கிய போரவை,சப்தமி ஒலிப்பதிவுக்கூடம் என்பன வழங்கியிருந்தன.







வியாழன், ஆகஸ்ட் 08, 2013

                                    நாடகம் தொழில் முறையாக வேண்டும்  நாடகவியலாளளர் க.பாலேந்திரா


ரிக்கெட்டினை பெற்றுநாடகம் பார்ப்பதாக வரவேண்டும் இவ்வாறு வந்தால் தான் நாடகத்தினை தொழில் முறையானதாக கொண்டுவரமுடியும்.சிங்கள அரங்ககளில் இப்பாரம்பரியம் காணப்படுகின்றத தமிழ் அரங்கினை பொறுத்வரையில்பயிற்ச்சியாக வரவேண்டும் மேலும் தொழில் முறையான குழுக்கள் வளரவேண்டும் என பொறியியலாளரும் நாடகவியலாளருமான க.பாலேந்திரா தெரிவித்தார்.
 நாடகமும் அரங்கியலும் கற்ப்பிக்கின்ற ஆசிரியர்களுடனான கலந்துரையாடல் நாடக ஆசிரியர் ஜோன்சன் ராஜ்குமார் தலைமையில் இடம் பெற்றபோது ஆசிரியர்கள் மத்தியில் கருத்து வெளியிடும் போnது மேற்க்கண்டவாறு தொரிவித்தார்.

அவர் அங்குதொடர்ந்து தொரிவிக்கும் போது;

நாடகம் இயக்கமாக வளர்த்தெடுக்கப்டவேண்டும் எனில் தொடர்ச்சியாக நாடகங்கள்'  மேடையேற்றப்படவேண்டும்.அரங்கு மனிதர்களுடன் சம்பந்தப்ட்டது. வேறு வேறு வழிவகைகளில் அவற்றினை கொண்டுவரவேண்டும்.ஒவ்வொரு நடிகனுக்கும் தனித்துவமான திறமைகள் உண்டு அவனுக்கென்ற தொணி உண்டு. நடிகர்களது ஆக்கத்திறமையினை  அவர்களிற்கூடாக கொண்டுவரவேண்டும். காரணம்யாதெனில் நடிகத்தினை பொறுத்தவரையில் நடிகர்கள் முதன்மையானவர்களாவார்.


நாங்கள் நாடகத்துறையில் ஈடுபட ஆரம்பித்த காலத்தில் கல்வி முறையாக இருக்கவில்லலை.நாங்கள் தான் பல விடயங்களினை தேடி அறிந்து கொள்வதுண்'டு. நான் நாடகத்துறையில் ஈடுபாடு காட்டுவதங்க காரணமாக எனது தீவிர வாசிப்பு காணப்படகின்றது. ஆரமப காலத்தில் பல  சிறந்த நாடக ஆசிரியர்களது நாடகங்களினை வாசித்ததன் ஊடாக பரீட்சயம் ஏற்பபட்டு அதனூடாக நாடகத்துறையில் ஈடுபட ஆரம்பித்தோம் .
 மொழி பெயர்ப்பு நாடகங்கள் பல வற்றினை மேடையிட்டுள்ளேன். குறிப்பாக பிச்சைவேண்டாம். கண்ணாடி வார்ப்புக்கள் நடசத்திரவாசி போன்ற பல வற்றினை குறிப்பிடலாம்.
அவைக்காற்றுகைகலைக்கழகத்தின் ஊடாக பல நாடகச்செயற்பாடகள்மேற்கொள்ளப்பட்டன் 1978ம் ஆண்டு உருவாக்கப்ட்ட  இக்கழகமானது கடந்த 35 ஆண்டுகளில் பல நாடுகளிற்கு பணனம் மேற்கொண்டு நாடக செயற்பப்பாடகளினை மேற்கொண்டதுடன் 70ற்கும் மேற்ப்பட்ட நாடகங்களினை நிகழ்த்தியள்ளோம் எனக்குறிப்பிட்டார்.

இந்நிகழ்வில் பாலேந்திராவின் மனைவியும் நாடக நடிகையுமான ஆணந்தராணி மற்றும் அவர்களது புதல்விகள் நாடக குழுவினர் ஈழத்து நாடகவியலாளளர் குழந்தi ம.சண்முகலிங்கம் மற்றும் நாடகத்துறை ஆசிரியர்கள் கலந்து கொண்டனர்.

நன்றி யாழ்.தினக்குரல் 07.08.2013

புதன், ஜூலை 31, 2013


              கலந்துரையாடல்

அவைக்காற்றுகை கலைகழகத்தின் நிறுவுனர் க.பாலேந்திரா  நாடகமும் அரங்கியலும் கற்ப்பிக்கின்ற  ஆசிரியர்களினை  சந்தித்து கலந்துரையாடலினை மேற்க்கொண்டிருந்தார்.

இச்சந்திப்பில் தமது நாடகத்துறை சார்ந்த அநுபவங்களினை பகிர்ந்து கொண்டதுடன் நாடகத்துறையின் இயங்கியலுக்கான ஆக்கபூர்வமான கருத்துக்களினை மேற்க் கொண்டிருந்தார்.

 இவரது மூண்று நாடகங்கள்  எதிர்வரும் 3ம் திகதி வீரசிங்கம் மண்டபத்தில் இடம் பெறவுள்ளமை குறிப்பிடத்தக்கது.

திங்கள், ஜூலை 29, 2013

வாசிப்பின் உயிர்ப்பை வலியுறுத்திய தெரு வெளி ஆற்றுகை 


நாடகம் பல்பரிமானம் உடைய கலையாகும். மனிதர்களது உணர்வுகளினை பதிவுசெய்வதிலும்  மனிதனது வாழ்வியல் வலிகளினை வெளிப்படுத்துவதிலும் அவர்களிடையே  விழிப்புனர்வினை ஏற்ப்படுத்திசெல்வதிலும் முக்கிய பங்கு வகிக்கின்றன.
மனிதநாகரிக வளர்ச்சிக்காலகட்டம் முதல் இக்கலையின்  வகிபங்கு   காத்திரமானதாக காணப்படுகின்றது.

நாடகமானது சிறுவர் நாடகங்கள் ,சமூகநாடக நாடகங்கள் , தெருவெளி நாடகங்கள் என பல வகையான நாடகங்கள் காணப்படுகின்றன.
இவ் வடிவங்களில் தெருவெளி நாடகங்கள்  மாறுபட்டனவானவும் சமூகவியல் நோக்கில் காத்திரமானதாகவும் விளங்குகின்றது.
பார்வையாளரிடையே செய்தியினை காவிச்செல்விதிலும் பார்வையாளர்களுடன் நெருக்கமான உணர்வினை பேணுவதிலும் எளிமையான வடிவமாகவும் காணப்படுகின்றது.
தெருவெளி அரங்கானது பெரும்பாலும் விழிப்புனர்வு சார்ந்த வகையிலானசெயற்திட்டங்களினை முன்னெடுத்து செல்கின்றது.
இப்பகைப்புலத்தில்  இணுவில் பொதுநூலகத்தினருடன் இணைந்து புத்தாக்க அரங்க கலைஞர்களினால் 'வாசிப்பதினால் மனிதன் பூரனமடைகின்றான்' எனும்  தெருவெளி ஆற்றுகையானது யாழ்.மாட்ட பாடசாலைகள் இ தனியார் கல்வி நிலையங்கள் இ பொது இடங்களில் நிகழ்தப்பட்டன.
இன்றைய பொழுதுகளில் அனைவரினாலும் குறை கூறப்படுகின்ற விடயமாக வாசிப்பு பழக்கம் அருகிவிட்டது பெரும்பாலும் யாருமே வாசிப்பதில்லலை எனும் குற்றச்சாட்டு முன்வைக்கப்படுகின்ற போதிலும் அதற்கான மாற்று சிந்தனையுடன் இயங்குகின்றவர்கள் வெகுவாக குறைந்து காணப்படுகின்றனர்.
வாசிப்பு என்பது ஓர் பேரியக்கமாகும்  இவ் இயக்கத்தினால் தான் ஆரோக்கிய மான சமூதாயத்தினை கட்டியெழுப்பமுடியும் எனும் யதார்த்தத்தினை உனர்ந்து கொண்டு  இவ்வரங்க செயற்பாடு முண்ணெடுக்கப்பட்டது.
வாசிப்பற்ற சமூகம்  ஊனமுற்ற சமூகமாக மாறி விடும். வாசிப்பில்லையேல் சமூகத்தில் உயிப்பினை தரிசிக்க முடியாது. புத்தகங்களுடன் உறவாடுபவர்கள் தம்மை புடம் போட்டு கொள்கின்றார்கள். மனிதர்களினை அறிந்து கொள்கின்றார்கள். அவர்களால் எதையும் எளிமையாகவும் நிதானமாகவும் அனுக்கிக் கொள்ள கூடியதாக இருக்கும்.
ஒரு தலை முறை வாசிப்பின் நுகாச்சியற்று போய் அடுத்த தலைமுறையினையும் நல்வழிப்படுத்த முடியாமல் அல்லல் உறுகின்றது எனும் கூற்றினை தவிர்க்கமுடியாமல் ஏற்றுக்கொள்ள வேண்டிய சூழ்நிலை உண்டு. ஆயினும் அத்தகையவர்களில் பிடியில் இருந்து இளையதலைமுறையினை  குறிப்பாக இளம் பராயத்தினராகிய சிறுவர்கள் சரியான பாதையில் நடை பயில்வதற்கு வழிப்படுத்த வேண்டிய தார்மீகப்பொறுப்பு புத்திஜீவிகளினது கைகளில் உள்ளது என்பது கசப்பான உண்மையாகும்.
தாம் வாசிக்காது விட்டாலும் இளம் தலைமுறையினரை வாசிப்பின் செயல் தளத்தில் இயங்க அனுமதியாதவர்கள் கூட சமூகத்தில் விரவிக் காணப்படுவதுடன் வெறுமனே பரீட்சை மையக்கல்வியின் பால் பற்றுதி கொண்டு செயல்படுகின்றவர்களினையும் சமகாலத்தில் தரிசிக்கவேண்டிய அவலம் உண்டு. ஆயினும் இவற்றின் மத்தியில் இருந்து சவால்களிற்கு முகம் கொடுத்து வாசிப்பின் மகத்துவத்தினை இளம் தலை முறையினர் மத்தியில் கொண்டு செல்ல வேண்டும் எனும் பேராவாவின் வெளிப்பாட்டின் ஊடாக வாசிப்பதால் மனிதன் பூரனமடைகின்றான் எனும் தெருவெளி அரங்கு எனும் வடிவம்  முகிழ்ந்தெழுந்தது.
அரங்கு  கதையாடல் வெளிகளினை சூழமைப்பதினை அடிப்படையாக்கொண்டு  இயங்கியல் வெளிகளினை தகவமைத்து கொள்கின்றன.
  தெரு வெளி அரங்கானது பெரு வெளிக்குள் நின்று பார்ப்போனுடன் இணைந்து அவனோடு உறவாடி உயிப்புடன் இணையும் வடிவமாகும்.
இப்பகைப்புலத்தில் இவ் வாற்றுகையில் ஈடுபட்டது மாறுபட்ட அநுபவமாக காணப்படுகின்றது.
வாசிப்பென்பது  அருகிவிட்டது எனும் கருத்து நிலை பலரிடையே விரவிக்கானப்படுகின்றபோதும் வாசிப்பின் மகத்துவத்தினை இளைய தலைமுறையினர் மத்தியில் கொண்டு செல்லும் நோக்கிலும் ஏட்டுச்சுரைக்காய் கறிக்குதவாது எனும் தளத்தில் வெறுமனே புத்தகப்பூச்சிகளாக இருந்து விடுவதினால் எதையும் சாதிக்க முடியாது என்பதினை மைய ஊடு பொருளாக கொண்டு நகைச்சுவையுனர்வின் ஊடாக பார்ப்போரிடையே கொண்டு செல்லப்பட்டது.
  அளிக்கையானது கேளிக்கையானதாக வடிவமைக்கப்படாது ஆழமான கருத்தாழம் மிக்கவையாக வடிவமைக்கப்பட்டிருந்தன.
பாடசாலை வெளிகளே இலக்கு வெளிகளாக கொண்டமைந்திருந்தமையினால் மாணவர்களுக்கான உணர்வு வெளியினை அடிப்படையாக கொண்டு ஆற்றுகைகள் தகவமைக்கப்பட்டிருந்தன.
ஓவ்வொரு பாடசாலை வெளிகளும் எமக்கு புதிய பாடங்களினை தந்திருந்தன. ஆற்றுகையாளர்கள் மாணவர்கள் அவர்களது அநுபவம் மாறுபட்டது. பல நாடகங்களினை நடித்து அநுபபப்பட்டவர்களும் இல்லை மாறாக அர்ப்ணிப்புடன் இயங்கக்கூடிய மனத்தைரியம் உடையவர்கள் எனும் வகையிலும் ஆற்றுகையின் தரம் கனதியாக வெளிப்பிட்டது.
இவ்வாற்றுகைக்கான நெறியாழ்கையினை புத்தாக்க அரங்க இயக்கத்தின் பணிப்பபளர் எஸ்.ரி.குமரன் புத்தாக்க அரங்க இயக்கத்தின்  நிர்வாக பணிப்பபளர் எஸ்.ரி.அருள்குமரன் ஆகியோர் மேற்கொண்டிருந்தனர்.
இவ் ஆற்றுகையின் தெருவாடிகளயாய் உஸாந்தன் ,மகிந்தன் ,நிதர்சன் ,திலக்ஸன் ,தபேன்சன் ,லோன்சன்  ,கவிராஜ்,பிரசாந்தன் ,தயானிசன் இலிவீசனன் போன்றோர் செயற்ப்பட்டனர்.

இவ்வாற்றுகையானது 100 ற்க்கு மேற்ப்பட்ட இடங்களில் ஆற்றுகைசெய்யப்பட்டன. இவற்றில் உடுவில் மகளிர்கல்லூரி,மானிப்பாய் மகளிர்கல்லூரி ,மானிப்பாய் இந்துக்கல்லூரி ,யாழ்ப்பானம் மத்தியகல்லூரி ,யாழ்.இந்துக்கல்லூரி ,இனுவில்இந்துக்கல்லூரி இனுவில்மத்திய கல்லூரி இஇராமநாதன்கல்லூரி ,மானிப்பாய்மெமோறியல் ஆங்கில பாடசாலை , கொக்குவில் இந்துக்கல்லூரி  ஆகிய பாடசாலைகளின் ஆற்றுகைகளையும்  கோப்பாய் கiலாணி கல்வி நிலையம் ஏ.ரி.சி கல்வி நிலையம் எடிசன் அக்கடமி போன்ற தனியார்கல்வி நிலையங்களில் இடம் பெற்ற ஆற்றுகைகளையும் குறிப்பிடலாம்.

இலக்கு பார்வையாளர்களாகிய மாணவர்களது ரசனைக்கு  ஏற்றால்போலும் அவர்களது சிந்தனையினை கிளரும் வகையிலும்  ஆற்றுகைகள் செப்பனிடப்பட்டு இடம்பெற்றமையினை ஆற்றுகையின் பின்னாக கருத்தாடல் வெளிகள் வெளிப்படுத்தி நின்றன.

இனுவில் இந்துக்கல்லுரியில்  ஆற்றுகையின் பின் பொறுப்பாசிரியர் குறிப்பிடும் போது நாங்கள் வகுப்பறையில் 40 நிமிடங்கள் ஒரு மணி நேரமாக குறிப்பிடுகின்ற விடயங்களினை  மிகவும் எளிமையான வகையில்  மாணவர்கள் புரிந்து கொள்ளக்கூடியவகையில்  எளிமையான வகையில்  நனைச்சுவை உணர்வின் ஊடாக வெளிக்கொணர்ந்தமை  சிறப்பான விடயம் என்றார்.

தெருவாடி உஸாந்தன் கருத்து வெளியிடும் போது நான் ஏற்று நடித்த வாத்தியர் எனும் பாத்திரமானது சிறப்பான வரவேற்ப்பினை நாம் நிகழ்த்திய பல பாடசாலைகளிலும்   தனியார் கல்வி நிலையங்களிலும் பெற்றுக்கொண்டது. பலர் பாராட்டியமை மகிழ்ச்சியாக இருந்தது. எமது பாடசாலையில் நிகழ்த்திய போது எமது கல்லூரி அதிபர் எமது நாடகத்தினைமிகவும் ரசித்தார். ஆயினும் சில ஆசிரியர்கள் நாங்கள் நடிக்கின்றோம் என்பதினால் பார்க்கவிரும்பவில்லலை இது அவர்களது குறுகிய சிந்தனையினை எமக்கு எடுத்து காட்டியது பிற இடங்களில் நிகழ்த்தப்பட்டபோது நாம் ஒவ்வொருவரும் ஏற்று நடித்h பத்திரங்கள் தொடர்பாகவும் பலரும் பாராட்டியமை எமக்கு தொடர்ந்தும் நாடகங்கள் நடிக்க வேண்டும் எனும் ஆர்வத்வத்தினை ஏற்ப்படுத்தியுள்ளது.


இவ்வாற்றுகையின் தரம் என்பது பார்ப்போர்களது ரசனையிலேயே தங்கியிருந்தது. நாம் நிகழ்த்திய பல இடங்களிலும் சிறப்பான வரவேற்ப்பு கிடைத்தது சான்றாக உடுவில் மகளிர் கல்லூரியில் எமது ஆற்றுகையினை கண்டு களிப்பதற்காக எமது வருகையினை ஆவலோடு எதிர்பார்த்து காத்திருந்ததுடன்  இன்றைய தேவையின் அவசியம் உணர்த்தப்பட்டதினை சுட்டிக்காட்டினர்.


  கோப்பாய் கலைவாணி கல்வி நிலைய நிர்வாகி குறிப்பிடும்போது: பேசுகின்ற விடயம் சிறப்பானதாகும். மேலும் நடிகர்களது நடிப்பு சிறப்பாக காணப்பட்டது. சினிமா நடிகர்களினை பார்த்து பரீட்சியப்பட்;ட எமக்கு அவர்களது நடிப்பு மாறுபட்டதாக அமைந்தது என்றார்.

தொகுத்து நோக்குகின்ற போது இவ்வாற்றுகையின் படைப்பாக்க இயங்கு நிலை மாறுபட்டதாக இருந்தது.
வாசிப்பின் பேரியக்கத்திற்கான செயல்நிலையாக அமைந்திருந்தது.சமூகம் கொண்டுள்ள பிரச்சினையினை தீர்ப்பதற்கும் அவர்களினை விழிப்பு நிலை கொள்வதற்கான வாய்ப்பினையும் இவ்வாற்றுகைகள் ஏற்ப்படுத்தின. இதற்கு சான்றாக பலர் நூலக அங்கத்தவர்களாக புதிதாக இணைந்து கொண்டமை குறிப்பிடத்தக்கது.

 இத்தகைய செயல் நிலைகள் காலத்தின் தேவை கருதி மேற்க்கொள்ள வேண்டியது அவசியமானதாகும்.

எஸ்.ரி.அருள்குமரன்   
நிர்வாகப்பணிப்பாளர்                                              
புத்தாக்க அரங்க இயக்கம் (ஐ.ரி.எம்)

  நன்றி கலிங்கம்   இதழ்.5


வெள்ளி, ஜூலை 26, 2013

 அரங்க செயற்ப்பாடு  

சுழிபுரம் விக்டோறியாக்கல்லூரி மாணவர்களுக்கான அரங்கத்திறன் விருத்திநாடகப் பயிற்ச்சிபட்டறை நிகழ்வு சுழிபுரம் விக்டோறியாக்கல்லூரிஅழகியல்துறை மண்டபத்தில் சுழிபுரம் விக்டோறியாக்கல்லூரி நாடகமும்
அரங்கியலும் ஆசிரியர்   தலைமையில் நடைபெற்றது.
புத்தாக்க அரங்க இயக்கத்தினால்(ஐ.ரி.எம்) நடாத்தப்பட்ட இப்பயிற்சி பட்டறை
நிகழ்வின் வளவாளர்களாக புத்தாக்க அரங்க இயக்கப்பணிப்பாளரும் யாழ்ப்பாணம்
மத்திய கல்லூரி நாடகத்துறை ஆசிரியருமான எஸ்.ரி.குமரன் புத்தாக்க அரங்க
இயக்கத்தின் நிர்வாகப்பணிப்பாளரரும் மானிப்பாய் இந்துக்கல்லூரி
நாடகத்துறை ஆசிரியருமான எஸ்.ரி.அருள்குமரன் ஆற்றுகையாளர் த.தயானிஷன்
பா.கவிராஜ் இ.பகிதரன் ஆகியோர் கலந்து கொண்டு பயிற்ச்சி பட்டறையை திறம்பட
வழிநடாத்தினார்கள் .
இப்பயிற்சி பட்டறையில் தரம் 10.தரம்11 நாடகத்துறை மாணவர்களுக்கான நாடகத்
தயாரிப்பு படிமுறை நடிப்புசார்பயிற்ச்சிகள் அரங்கத்திறன் விருத்தி ஆளுமை
வளர்ச்சிசார் பயிற்சிகள் மாணர்களுக்கு வழங்கப்பட்டது. இப்பயிற்ச்சி
பட்டறையில் தரம் 10 தரம் 11 ஐச்சேர்ந்த 50 மாணவர்கள் கலந்து கொண்டு பயன்
பெற்றனர். பயிற்சி பட்டறை நிகழ்வில் கலந்து கொண்ட மாணவர்கள் இப்பயிற்ச்சி
பட்டறை தொடர்பாக கருத்து தெரிவிக்கும் போது மிகவும் பயனுள்ள முறையில்
இப்பயிற்ச்சிப்பட்டறையானது அமைந்திருந்தததுடன் புதிய அனுபவங்களையும்
அரங்கியல் சார் நுட்பங்களையும் அறிந்து கொள்ள முடிந்துள்ளதாக மாணவர்கள்
தெரிவித்தார்கள்.
 
நாடகத்தின் பயன்பாடு  இலங்கை கல்வித்துறையில் இன்னும் சரியாகப் பயன்படுத்தப்படவில்லை.


கலாநிதி குழந்தை ம.சண்முகலிங்கம் தெரிவிப்பு

நாடகத்தின் பயன்பாடு  இலங்கை கல்வித்துறையில் இன்னும் சரியாகப் பயன்படுத்தப்படவில்லை.கற்றல் கற்பித்தல் செயற்பாடுகளில் நாடகத்தின் பங்களிப்பானது  தேவைப்பாடுடையதாக அமைகின்றது. இத்தேவைப்பாடுகளினை பூர்த்தி செய்கின்ற வகையில் கல்வித்துறையில் நாடகத்தின் பங்களிப்பு சரியாகப் பயன்படுத்தப்படவேண்டும். என ஈழத்து நாடகத்தின் மூத்த நாடகவியலாளர் குழந்தை ம.சண்முகலிங்கம் தெரிவித்தார்.

கோப்பாய் ஆசிரியர் கலாசாலையின் முத்தமிழ் விழாவின் நாடக விழா நிகழ்வுகள் கோப்பாய் ஆசிரியர் கலாசாலையின் பிரதி அதிபர் வீ.கருணலிங்கம் தலைமையில் இடம்பெற்ற போது அந்நிகழ்விற்கு இனிய விருந்தினராகக் கலந்து கொண்டு உரையாற்றும் போதே அவர் இவ்வாறு தெரிவித்தார்.

அவர் அங்கு மேலும் தெரிவிக்கையில் :

கல்வித்துறையின்கற்றல் கற்பித்தல் செயற்பாட்டில் நாடகத்துறையின் பங்களிப்பு பல்வேறு வகைகளில் பயன்படுடையதாக விளங்குகின்றது.. 
பல்வகைப்பயன்பாடுடைய  நாடகம் என்பது மேடையில் மட்டும் நடித்தல் அல்ல அதனையும் தான்டிய வகையில் நாடகத்தின் செயற்பாடு பரந்துது பட்டு காணப்படுகின்றது. 
ஆசிரியர்களது கற்பித்தல் செயற்பாட்டில் நாடகத்தின் பங்களிப்பானது மிக அவசியமானது. ஆசிரியர்கள் சிறந்த நடிகனாக விளங்கும் போதே மாணவர்களிடத்தில் கற்பித்தல் செயற்பாட்டினை இலகுவாக மேற்கொள்முடியும் நாடகமானது சமூகப்பயன்பாடுடைய சாதனமாக விளங்குகின்றது 

இன்றைய நாடக விழா நிகழ்வில் சிறப்பான நாடக அளிக்கைகள் ஆற்றுகை  செய்யப்பட்டுள்ளன. இந்நாடக நிகழ்வில் கலந்து கொண்ட அனைவரும் பராட்டுக்குரியவர்கள் நாடக நிகழ்வினை போட்டியாகக் கொள்ளாது நட்புறவாக நாடகச்  செயற்பாட்டில் ஈடுபட வேண்டும். இன்று நாடகமானது அனைத்துத்துறைகளிலும் பயன்பாடுடையதாக காணப்படுகின்றது. 

சமூகத்தில் உயர்ந்தவர்களாக விளங்கும் ஆசிரியர்கள் சமூகப்பொறுப்புணர்ந்தவர்களாக விளங்க வேண்டும். சமூகப்பொறுப்புணர்ந்து செயற்படுதிகின்ற ஆசிரியர்களினாலே சிற்ந்த கல்விச் சமுதாயத்தினை கட்டியெழுப்பமுடியும். 

ஆசிரியர்கள் வாசிப்புத்திறன் மிக்கவர்களாக விளங்க வேண்டும். வாசிப்பின் ஊடாக புதிய விடயங்களினை கற்று அவற்றினை மாணவர்களுக் போதிப்பவர்களாக விளங்க வேண்டும். கற்றல் கற்பித்தல் செயற்பாட்டில்  தேடல் அவசியமானது. ரவீந்திர நாத்தாகூருடைய சிந்தனைகளை ஆசிரியர்கள் கற்கவேண்டும். சிறுவர்களுடைய தளங்களுக்கு சென்று ஆய்வு செய்யப்பட்டு படைக்கப்பட்டவையாக ரவீந்திரநாத் தாகூருடைய படைப்புக்கள் விளங்குகின்றன.  இப்படைப்புக்களினை வாசிப்பதன் ஊடாக பல்வேறு விடயங்களினை அறிந்து கொள்ள முடிகின்றது. ஆசிரியர்கள் மாணவ சமுதாயத்தின் பொறுப்புணர்ந்து சமூக அக்கறை கொண்டவர்களாக விளங்க வேண்டும் என்றார். 

நன்றி யாழ்.தினக்குரல்

கலைச்செயற்பாடுகள் தொழில்வாய்ப்பிற்குரியதாக மாற்றியமைக்கப்படவேண்டும் 

   மானிப்பாய் இந்துக்கல்லூரியின் அதிபர் தெரிவிப்பு


கல்விச்செயற்பாட்டில் அங்கீகாரத்தினைப் பெற்றுக்கொண்டுள்ள கலைச்செயற்பாடுகள் அவ் அங்கீகாரத்தினை பேணும் வகையில் தொழில்வாய்ப்பிற்குரியதாக மாற்றியமைக்கப்பட வேண்டும். என மானிப்பாய் இந்துக்கல்லூரியின் அதிபர் எஸ்.சிவநேஸ்வரன் தெரிவித்தார்.

மானிப்பாய் இந்துக்கல்லூரியின் வருடாந்த நாடக விழவானது கல்லூரியின் வி.எஸ்.துரைராஜா திறந்த வெளி அரங்கில்    இடம்பெற்ற போது அந்நிகழ்வில் கலந்து கொண்டு தலைமையுரையாற்றும் போதே இவ்வாறு வாறு தெரிவித்தார்.

அவர் அங்கு தொடாந்து உரையாற்றும் போது;

எமது சூழலில் கலைச் செயற்பாடுகள் தொழில்முறை சார்ந்ததாக  உருவாகவேண்டும். கலைத்துறைச்செயற்பாட்டில் ஈடுபடுவோருக்கான தொழில்வாய்பிற்குரியதாக  இத்துறையினை மாற்றுவதற்கு சம்பந்தப்பட்ட பொறுபபு வாய்ந்தோர் முயற்சிகள் மேற்கொள்ளவேண்டும். இதனுடாகவே ஆத்மார்த்தமாக கலைத்துறை செயற்பாட்டில் தொடந்து முழுமையாக ஈடுபடுத்வதற்கு செயற்பாட்டாளர்கள் முன்வருவார்கள்.

கலைச்செயற்பாடுகளில் வாழ்வியலின் கூறுகளினை வெளிப்படுத்துவதில் நாடகச்செயற்பாடுகள் முக்கிய பங்கினை வகிக்கின்றன. 
எமது கல்லூரிச் சமூகத்தினைப் பொறுத்தவரையில் கல்வி செயற்ப்பாடாக நாடகவிழாவினை நாம் பார்க்கின்றோம். 

நாடகவிழாவில் கலந்து கொள்வதன் ஊடாக சிறந்த மாணவசமூதாயம் உருவாக்கப்பட்டுக் கொண்டிருக்கின்றது. இதனுடாக தலைமைத்துவம் வளர்க்கப்படுகின்றது.

 மாணவர்களின் ஆளுமைத்திறன் வெளிப்பாடுகள் வெளிக்கொண்டுவருவதற்கான களங்கள் ஏற்படுத்திக் கொடுக்கப்படுகின்றன. இக்களங்களினை சரியாக பயன்படுத்துகின்ற மாணவர்கள் சிறந்த கலைத்துறைச்செயற்பாட்டாளர்களாக மாற்றம் பெற்று தமது திறன்களினை வெளிப்படுத்துகின்றார்கள். 
நாடகவிழாவினை தொடர்ந்தும் சிறப்பாக நடாத்துவதற்கு பழைய மாணவர்கள் ஆர்வக இருக்கின்றார்கள். பழைய மாணவர்களின் ஆர்வத்தினை பூர்தி செய்யும் வகையில் மாணவர்கள்  நாடகச்செயற்பாட்டில் ஈடுபடுவதில் அதிக விருப்பினை காட்டவேண்டும்.

நாடகச் செயற்பாட்டில் ஈடுபடுவதன் ஊடாக மாணவர்களது ஆளுமை வெளிக்கொணரப்படுகின்றது கலைகள் ரசிக்கப்பட வேண்டும் இதன் அடிப்படையில் ஆயிரக்கணக்காணோர் இவ் நாடக விழாவினை வருடார்ந்தம் பார்வையிட்டு வருகின்றமை சிறப்பிற்குரிய விடயமாகின்றது.

போட்டிகளில் கலந்து கொள்ளும் எல்லோருக்கும் வெற்றி என்பது கிடையாது  வெற்றி தோல்விகளுக்கு அப்பால் மேடையில் ஆற்றுகை  செய்ப்படுவதே பெருமைக்குரியதாகும்.மாணவர்கள் கல்வி கற்கின்ற காலத்தில் செய்யப்படுகின்ற செயற்பாடுகள் காலத்தால் என்றும் வாழந்து கொண்டிருக்கும். நேரடி வாழ்த்துக்களும் பாராட்டுக்களும் கலைஞர்களுக்கு மாத்திரம் கிடைக்கும் பெரிய வரப்பிரசாதமாகின்றது. 
இதனை உண்மையான கலைச்செயற்பாட்டில் ஈடுபடுகின்ற போது உணர்ந்து கொள்ள முடிகின்றது.

தொழில்நுட்ப வளர்ச்சிப்போக்கிற்கேற்ப கலைச்செயற்பாடுகளும் மாற்றம் பெறவேண்டும். நாடகச் செயற்பாடுகள் கால ஓட்டத்திற்கேற்ப நவீன உத்திகளினை உள்வாங்கிய வகையில் புதிய வகையான படைபபுக்கள் உருவாக்கப்படவேண்டும். 

இதனூடாவே எமது நாடகச்செயற்பாட்டினையும் அடுத்த கட்ட நகர்விற்கு எம்மால் வளர்த்தெடுக்க முடியும். இவ் நகர்வினூடக சிறந்த நாடகப்படைப்புக்கள் எம்மிடையே உருவாகுவதற்கான களங்கள் உருவாக்கப்பட வேண்டும் என்றார்.

                            பாலேந்திராவின் நாடகங்கள் மேடையேற்றம்.


தமிழ் அவைக்காற்றுக்கலைக்கழக பாலேந்திரா குழுவினரின் மாபெரும் நாடகவிழா நிகழ்வு எதிர்வரும் ஆகஸ்ட் மாதம் 3ஆம் திகதி சனிக்கிழமை பிற்பகல்  3 மணிக்கு யாழ்ப்பாணம் வீரசிங்கம் மண்டபத்தில் இடம்பெறவுள்ளது. இந்நாடக விழாவில் கண்ணாடி வார்ப்புக்கள் ,பாடம் ,சம்பந்தம் ஆகிய நாடகங்கள் ஆற்றுகை செய்யப்படவுள்ளது. 

இலங்கைத்தமிழ் அரங்க வரலாற்றில்  1970 களில் நவீன  மொழிபெயர்ப்பு நாடகங்களின் முன்னோடிகளாகத் திகழ்ந்த முன்னனி நெறியாளர் பாலேந்திரா குழுவினரின் அவைக்காற்றுக் கலைக்கழகத்தினர் நீண்ட இடைவெளிக்குப் பிற்பாடு யாழ்மண்ணில்  நாடக ஆற்றுகையினை நிகழ்த்தவுள்ளனர். .

இந்நாடக விழாவிற்கான அனுசரனையினை திருமறைக்கலாமன்றம் சப்தமி ஒலிப்பதிவு  கூடம் கலை இலக்கியப்பேரவை ஆகிய நிறுவனங்கள் வழங்குகின்றன.  இந்நாடக விழாவிற்கு நாடக ஆர்வலர்களை கலந்து கொள்ளமாறு விழா ஏற்பாட்டுக்குழுவினர் அறிவித்துள்ளார்கள்.

ஞாயிறு, ஜூலை 21, 2013


                                                                முதலாம் இடம்

வாக்காளர் பதிவுக்கான விழிப்பூட்டல் என்னும் தொனிப்பொருளில் யாழ்ப்பாணம் கியூடெக் – கரித்தாஸ் நிறுனத்தினால் நடாத்தப்பட்ட தெரு வெளி நாடகப்போட்டியில் புத்தாக்க அரங்க இயக்கத்தினால் (ஐ.ரி.எம்) ஆற்றுகை செய்யப்பட்ட ‘வாழ்வதற்கு அவசியம்’ என்னும் தெருவெளி நாடகம் முதலாமிடத்தினைப் பெற்றுக்கொண்டுள்ளது. வாக்காளர்களாக பதிவு செய்யப்படவேண்டியதன் அவசியத்தினையும் வாக்களிப்பு முறைமையினையும் வாக்களிப்பின் அவசியத்தினையும் மக்களிடத்தில் ஏற்படுத்தும் நோக்கில் கரிதாஸ் நிறுவனத்தினால் திறந்த போட்டிப்பிரிவாக நாவாந்துறை சென் நீக்கலஸ் சனசமூக நிலைய முன்றலில் நடாத்தப்பட்ட மேற்படி போட்டியில் ‘வாழ்வதற்கு அவசியம்’ என்னும் தெருவெளி நாடகம் முதலாமிடத்தினைப் பெற்றுள்ளது.
இத் தெருவெளி நாடகத்திற்கான நெறியாள்கையினை புத்தாக்கஅரங்க இயக்கத்தின் பணிப்பாளரும் யாழ்ப்பாணம் மத்தியகல்லூரியின் நாடகத்துறை ஆசிரியருமான எஸ்.ரி.குமரன் புத்தாக்கஅரங்க இயக்கத்தின் நிர்வாகப்பணிப்பாளரும் மானிப்பாய் இந்துக்கல்லூரியின் நாடகத்துறை ஆசிரியருமாகிய எஸ்.ரி.அருள்குமரன் ஆகியோர் மேற்கொண்டிருந்தனர். ஆற்றுகையாளர்களாக த.துவாரகன் த.பிரவீன் பா.தாருஷன் கு.தவேன்சன் த.பிரியலக்ஷன் உ.கரீஸ் ஆகியோர் நடித்திருந்தார்கள். ஒப்பனையினை இ.பகீதரன் மேற்கொண்டிருந்தார். இத் தெருவெளி நாடகமானது கரிதாஸ் நிறுவனத்தின் அனுசரனையில் பல்வேறு பிரதேசங்களில் ஆற்றுகை செய்யப்படவுள்ளமை குறிப்பிடத்தக்கது.

வியாழன், ஜூலை 18, 2013

                    அஞ்சலி 


டி. எஸ். ரங்கராஜன்
என்றழைக்கப்படும் கவிஞர்
வாலி இன்று வியாழக்கிழமை காலமானார்.
திருவரங்கத்தில் 1931 ஆம்ஆண்டு ஒக்டோபர் 29 ஆம்திகதி பிறந்த வாலி தனது 82
ஆவது வயதில்சென்னையில் காலமானார்..
கடந்த ஜுன் 8 ஆம்திகதியன்று வசந்தபாலனின்
தெருக்கூத்து படத்திற்காகஏ.ஆர்.ரகுமான் இசையில்பாடல்எழுதிக்கொடுத்துவிட்டு வீடு திரும்பியவர்
அன்றிரவே உடல்நலக்குறைவால்சென்னை தனியார்மருத்துவமனையில்
சிகிச்சைக்காகஅனுமதிக்கப்பட், கிருஷ்ண விஜயம்' போன்றகவிதைத்தொகுப்புகள் புகழ்
பெற்றவையாகும்.10000 க்கும் மேற்பட்டபாடல்களைதிரைப்படங்களுக்கு வாலி எழுதியுள்ளார்.

இவர் திரைப்படங்களிலும்
நடித்துள்ளார்.'ஹேராம்'
'பார்த்தாலே பரவசம்'
மற்றும் 'பொய்க்கால்
குதிரை' ஆகியவை அவர்
நடித்த திரைப்படங்களுள்
குறிப்பிடத்தக்கவை.தன் நண்பர்களின்துணையுடன் 'நேதாஜி'என்னும்கையெழுத்துப்பத்திரிக்கையைத் அவர்ஆரம்பித்தார். அதன்முதல்பிரதியை எழுத்தாளரான
'கல்கியே' வெளியிட்டார்.அன்று திருச்சி வானொலி நிலைய
அதிகாரி பார்த்தசாரதி அவர்களும்வந்திருந்ததால்
வானொலிக்கு கதைகள்நாடகங்கள் எழுதிக்கொடுக்கும்வாய்ப்பு வாலிக்குக்
கிடைத்தது.

திருவரங்கத்தில்வாலி நடத்திய அந்தக்கையெழுத்துப்பத்திரிக்கையில் பல
இளைஞர்கள் பங்கேற்றுக்கொண்டனர். அப்படிப்பங்கேற்று கொண்டவர்களில்ஒருவர் பின்னாளில்புகழ்பெற்ற எழுத்தாளரான
சுஜாதா' ஆவார்.

தமிழ் மேல் தீராதபற்று கொண்டிருந்தவாலிக்கு ஒவியத்திலும்ஆர்வம் மிகுந்திருந்தது.நன்றாகப் படம் வரையும்திறமையும் இருந்தது.அந்தக் காலகட்டத்தில்ஆனந்த விகடனில்ஓவியங்களை வரைந்து கொண்டிருந்த
மாலியைப் போலவே தானும்ஒரு ஓவியராக வேண்டும்என்ற எண்ணம்கொண்டிருந்தார்.

இவ்வாறான நிலையில்,அவருடைய பள்ளித் தோழன்பாபு,'மாலி'யைப்போலசிறந்த சித்திரக்காரனாகவரவேண்டும்என்று கூறி டி. எஸ்.ரங்கராஜனுக்கு 'வாலி'என்னும் பெயரைச்
சூட்டினார்.
இவர்,சிறுகதை,கவிதை,
உரைநடை என இருபதுக்கும்
மேற்பட்ட புத்தங்கள்
எழுதியுள்ளார்.
அவற்றுள்
'அம்மா',பொய்க்கால்குதிரைகள்','நிஜகோவிந்தம்', 'பாண்டவர்பூமி','கிருஷ்ண விஜயம்'மற்றும் 'அவதார புருஷன்'
ஆகியனகுறிப்பிடத்தக்கவையாகும்.
2007 ஆம் ஆண்டு பத்ம
ஸ்ரீ விருது வழங்கி கவிஞர்
வாலி கௌரவிக்கப்பட்டார்.
அத்துடன்இ எங்கள் தங்கம்
(1970) இ இவர்கள்
வித்தியாசமானவர்கள்
(1979)இவருஷம் பதினாறு ,
அபூர்வ சகோதரர்கள் (1989),
கேளடி கண்மணி (1990) ,
தசாவதாரம் (2008) என
ஐந்து முறை சிறந்ததிரைப்படப்பாடலாசிரியருக்கான மாநில
அரசின் விருது பெற்றுள்ளார்
என்பது குறிப்பிடத்தக்கது.



ஞாயிறு, ஜூலை 14, 2013

                         நாடகக்கலை பேனுகை அவசியம்.


இன்றைய பொழுதுகளில் நாடகம் என்பது வீழ்ச்சியடைந்து  செல்கின்ற கலைவடிவமாக காணப்படுகின்ற து என பலராலும் பகிரப்படுகின்ற கருத்தாக காணப்படுகின்ற து.
நபடகம் என்றால் என்ன என கருத்துநோ
 க்குவோமாயின் ஒரு சிறு குழு பெருங்குழு முன் நிகழ்த்திக்காட்டுவதாக குறிப்பிடுகின்றனர். அதாவது ஒருசெயலினைகுறிப்பிட்ட பர்வையாளர்கள் முன் நிகழ்த்திக்காட்டுவதினை குறிப்பிடுவதாகும்.

பர்ப்போர் ரசனையுள்ளவர்களாக இருக்கும் பட்சத்தில் நாடகப்படைப்பின் தரம் புதுமையானதாக வும் நவீனத்துவம் சார்ந்ததாகவும் வடிவமைக்கப்டக்கூடியதற்கான வாய்ப்புக்கள் காணப்படுகின்றன.

 பர்வையாளர்களினை ரசனை பூர்வமானவர்களாக தயார்ப்படுத்ததாவகையில் நல்ல படைப்புக்கள் உருவாதற்க்கான வாய்ப்பக்கள் இல்லை என்றேகூறமுடியும்.

 நவீனத்துவ சிந்தனைகளுடன் படைக்கப்படுகின்ற  படைப்புக்கள் புரிவதில்லை என ஒருசிலர்குறிப்பிடுகின்றமை ஒட்டு மொத்த படைப்புக்களினையும் பாதிக்கும். காரனம் என்ன வென்றால் புரியவில்லை அல்லது விளங்க வில்லை என க்குறிப்பிடுகின்றவர்கள் பெரும்பாலும் தம்மைபுத்திஜவீகளாக காட்டிக்கொள்பவர்களேயாகும்.


இத்கையவர்கள் இளையதலைமுறையினர் புத்தாக்க சிந்தனையுடன்கூடிய படைப்புக்களினை படைக்கின்ற போது அவற்றினை நிராகரிக்கின்ற போக்கினையும் அவதானிக்க கூடியதாக உள்ளது.


இதனால் பெரும்பாலான இளைய படைப்பாளிகள் தமது இயங்கியல் வெளிகளினை குறுக்கிக்கொள்வதினயும் அவதானிக்க கூடியதாக உள்ளது. இது நாடக கலையின் தொடரியல் செயற்ப்பாட்டிற்கான தடையாகவும் காணப்படக்கூடிய வாய்ப்புக்கள் காணப்படுகின்றன. இதனால் பலரும் நாடகக்கலை வீழ்ச்சியடைந்து செல்கின்றதுஎனக்கூறத்தலைப்படுகின்றமையினையினை
நோக்கலாம்.

 பல துறைகளிலும் புத்தாக்க சிந்தனையுடனும் நவீன எண்ணக்கருத்துக்களினை உள்வாங்கியவகையில்  படைப்புக்கள் வருகின்ற போதும் நாடகத்தினை பொறுத்தவரையில் கல்வி முறையாக வளர்ந்து விட்ட போதிலும் பலர் கற்று வெளியேறி ஆக்கபூர்வமான செயற்ப்பாடுகளினை மேற்கொள்கின்றபோதும் பிற்போக்குத்தனமான சிலருடைய செயற்ப்பாடுகளினால் அற்ப்புதமான நாடகக்கலை  பாழ் நிலை நோக்கி   செல்வதற்கான சூழ்நிலைகள் ஏற்படுகின்றமை தவிர்க்கவியலானதாகும்.

 தாம் நினைப்பதே சரி எனவும் மாற்றங்களினை ஏற்றுக்கொண்டு புதுமைகளினை ஏற்க்க மறுகின்றவர்களின் கைகளில் நாடகத்துறையானது சிக்கி சிரழிகின்றதோ எனும் ஜயம் எழுவதும் தவிர்கவியலானதாக காணப்படுகின்றது.

நாடகத்தினை பொறுத்தவரையில் பல உத்தி முறைகள், மேடைப்பயன்பாடு ,நடிகர்களது இயங்'கியல் பெறுமானம் ,என்பவற்றிக்கான செயல் வெளிகள் என்பன தனித்துவமானவகையிலும் ,புதுமையானதாகவும் உருவமைக்கப்ட்ட பின்னரும் இன்றும் பிற்போக்குத்தனமான செயற்ப்பாடுகளினை  அற்ப்புதமானது எனக்கொண்டாடும் சிலரினால் நாடகக்கலை வீழ்ச்சியடைகின்றது எனில் மறுக்கவியலாததும் தான்.

நாடகப்போட்டிகளில தரமான படைப்புக்களினை புறம் தள்ளி போட்டி நடத்துனர்கள் தாம் நினைத்த படைப்புக்களினை வெற்றிப்படைப்புக்களாக வெளிக்கொணர்தல் ஆரோக்கியமானதல்ல இத்தகைய நடைமுறைகள் நாடகக்கலையின்எழுநிலையின் செயற்ப்பாட்டினை ஜயம் கொள்ள வைக்கின்றது.
எது எப்படியே  நாடகக்கலையின் வீழ்சியினை தவிர்க வேண்டியதும் நாடகக்கலையின் உன்னத நிலையினை பறைசாற்றுவது;  சம்பந்தப'ப்பட்வர்களது தார்மீக பொறுப்பாகும்.

எஸ்.ரி.ஏ.கே
அரங்க பயிற்ச்சிப்பட்டறைகள் மாணவர்களிடையே ஒளிந்து கிடக்கின்ற ஆளுமைகளினை வெளிக்கொணர்வதற்கான களவெளிகளாக காணப்படுகின்றன.
அரங்க பயிற்சிபட்டறை மாணவர்களிற்கு குழு செயற்ப்பாட்டிற்கான பின் உந்துதல்களினை வெளிக்கொணர்கின்றன.
அரங்கு என்பது மக்களது வாழ்வியிலில் பிரிக்கமுடியாத ஓர் அம்சமாக விளங்குகின்றது. இது மக்களது வாழ்வியலில் மாறு பாடுகளினை ஏற்ப்படுத்தி கொள்வதில் தனக்கான செயல் தளத்தினை வெளிப்படுத்திக் கொள்கின்றது என்பது  எதார்த்தமாகும்.
களப்பயிற்ச்சிப்பட்டறையானது பங்கு பற்றுபவர்களிடையே உள மாறுபாடுகளினை ஏற்ப்படுத்துகின்றது. இதன் காரனமாக அரங்க களப்பயிற்ச்சிப்பட்டறைகள் மேற்கொள்ளப்படுவது அவசியமான ஓர் செயற்பாடாக கொள்ளப்படுகின்றது.

அரங்க செயற்பாடுகளில் பல் துறைச்செயற்பாடுகள் காணப்படுகின்றன.அரங்க செயற்பாடுகள் மூலம் மாணவர்களிடையே ஆளுமைசார் வெளிப்பாடுகளினை ஏற்ப்படுத்துவதுடன் அவர்களது செயற்பாட்டிற்கான பின்வெளிகள் தகவமைக்கப்படுகின்றன என்பது எதார்த்தமாகும்.

அரங்க களப்பயிற்ச்சிப்பட்டறை என்பது பங்கு பற்றபவர்களிடையே வித்தியாசமான மான உணர்வுகளினை ஏற்ப்படுத்துகின்றது.
அரங்க  களப்பயிற்ச் சிப்பட்டறை எனும் போது  அச் சொற்களின் பொதிந்துள்ள பொருள்களினை நோக்கும் போது அதன் முதன்மையினை அறியலாம். அரங்கு எனும் சொல்லானது குறித்த இடத்தினை குறித்து நிற்கின்றதுஅதாவது செயல் இயங்கியலுடன் கூடிய இடத்தினை குறிக்கின்றது.  

 களப்பயிற்ச்சிப்பட்டறை எனும் போது களம் என்பதும் இடத்தினை குறித்தாலும் அதன் பொருள் கொள்ளல் வேறாகின்றது குறிப்பாக அரங்கு எனும் சொல் குறிக்கின்ற இடம் என்பது வெளியினை குறித்து நிற்க்க  'களம்' எனும் சொல்லானது பங்கு பற்றுபவர்கள் தமது ஆளுமையினை வெளிப்படுத்துவதற்கும்  தம்மை இனங்கண்டு கொள்வதற்கும்  தமது இயலுமையினை அறிந்து கொள்வதற்கும் இயலாமையினை கண்டுனாந்து  தம்மை பலம் நோக்கிய பணனத்திற்கு தகவமைத்துக் கொள்வதற்க்குமான  செயற்பாட்டினை வெளிப்படுத்துவதாக அமைகின்'றது.


கொழும்பு றோயல் கல்லூரியில் தரம் 6 ,7 மாணவர்களிற்க்கான பயிற்ச்சிப்பட்டறை மேமாதம 4ம் 5ம் திகதிகளில் மேற்கொண்டமை வித்தியாசமான அநுபவமகவும்பல விடயங்களினை அறிந்து கொள்வதற்க்கான வாய்ப்பாகவும் அமைந்திருந்தது.


மாணவர்கள் தமது அநுபவ வெளிகளினை ஏற்ப்படுத்தி கொள்வதற்கும் தம்மை இனம்கண்டு தமது ஆளுமைகளினை மேலும் செப்பனிட்டுக்;கொள்வதற்குமான வாய்ப்பாக அமைந்திருந்தமையினை அவர்களது கருத்துக்களின் ஊடாக  அறிந்து  கொள்ளக்கூடியதாக இருந்தது.





                         நாடகவிழா             (S.T.Arul)

நாடகம் மக்களது வாழ்வியலில் வலிகளினை வெளிப்படுத்துவதுடன் அவர்களது  பிரச்சினைகளிலிருந்து விடுபடுவதற்கான வழிமுறைகளினை தகவமைத்து கொள்வதிலும் முதன்மை பெறுகின்றது.
 நாடக  அளிக்கையானது பார்ப்போருடன் நேரடித்தொடர்புடையனவாக காணப்படுவதினால் உயிர்ப்பான கலைவடிவமாக  விளங்குகின்றது.

 நாடக செயற்பாடு மாணவர்களது ஆளுமை வெளிப்பாட்டிற்கான களவெளிளினை தகவமைக்கின்றன.இச்செயற்பாட்டில் ஈடுபடுவதன் மூலம் மாணவர்களிடையே தாக்கவண்மைரீதியான தொடர்பாடல் திறன் விருத்தியடைவதுடன் தலைமைத்துவப்பண்பு, குரூரம்அற்ற தன்மை ,
பிற்போக்கு அற்றமனவுனர்வு ,தன்னலமற்ற நலநோம்பல் என்பன  அதிகரிக்கும்.

இப்பகைப்புலத்தில் நோக்கும்' போது நாடகங்களுக்கான களவெளிகளினை பாடசாலைகள் வழங்கி வருவதினை காணலாம்.குறிப்பாக விழாக்கள் அவற்றிக்கான அடிப்படைகளாகின்றன.. ஆயினும் நாடகங்களிற்கென தனியொரு நாள் ஒதுக்கி விழா நடாத்தப்படுவதென்பது குறைவாக உள்ளது.

 அவற்றிக்கு மாறாக மானிப்பாய் இந்துக்கல்லூரியில் நாடகங்களுக்குகென தனியன வகையில் நீண்ட காலமாக விழா நடத்தப்பட்டு வருகின்றன.
பாடசாலையின் நிறுவுனர் தினத்தினை அடிப்படையாகக்கொண்ட வகையில் இருதினங்களாக விழாக்கள் முன்னைய காலத்தில் ஜீலை மாதம் முதலாம் இரண்டாம் திகதிகளில் நிகழ்த்தப்படுவதாக குறிப்பிடுகி;னறனர் ஆயினும் நாட்டில் ஏற்ப்பட்ட போர்காரணமாக தொடர்நிலையாக இயங்குவதற்கான வாய்ப்புக்கள் தவிர்க்கப்ட்ட நிலையிலும் நாடக விழாவானது செயற்ப்பட்டு வருகின்றமை சிறப்பிற்குரிதாகும்
இம்முறைஅதன் அறாத்தொடர்ச்சியாக இம்முறை 57 ஆவது நாடக விழா   நிகழ்தப்பட்டமை குறிப்பிடத்தக்கது.

 நீண்ட காலத்திற்கு பின்பு நாடக விழாவானது  கடந்த ஆண்டு இரவுப்பொழுதில் நிகழ்த்ப்பட்டமை போன்று இம்முறையும் இராப்பொழுதொன்றில் இடம்பெற்றது.

இக்கல்லூரிக்கு நீண்ட கால கலைச்செழுமையுடன் கூடிய வரலாற்றுப்பாரம்பரியமும் கலைத்துறைக்கு செழுமையான பங்களிப்pபினை ஆற்றிய கலைஞர்களினை பிரசவித்த பெருமையும் உண்டு.
 அவ்வகையில் ஈழத்து நவீன நாடகத்தின் தந்தை எனப்போற்றப்படுகின்ற கலையரசு சொர்ணலிங்கம்  இலங்கை திரைப்படத்துறையில் சாதித்த சி.எஸ்.அருமைநாயகம்  வானொலி நாடகங்களில் சாதித்த மரிக்கார் இராமதாஸ் போன்ற பல கலைஞர்களினை வழங்கிய பெருமையுண்டு.

இப்பின்னனியில் நாடகவிழாவானது மாணவர்களின் கலைத்திறனினை வெளிக்கொணர வைப்பதினை நோக்காக கொண்டு செயற்ப்படுகின்றன. இதனடிப்படையில்  சம்பந்தர் ,சுந்தரர் ,மாணிக்கர் ,வாகீசர் எனும் நான்குஇல்லங்களுக்கிடையே போட்டிகள் நிகழ்த்தப்படுகின்றன.

வாகீசர் இல்ல மாணவர்களது நடிப்பில்  மெல்லதமிழ் இனி  சம்பந்தர் இல்ல மாணவர்களின் நடிப்பில் பொம்மலாட்டம் மாணிக்கர் இல்ல மாணவர்களின் நடிப்பில் இழப்பதற்கல்ல சந்தரர் இல்ல மாணவர்களது நடிப்பில்  மானுடம் எங்கே? ஆகிய நான்கு நாடகங்கள் நிகழ்த்தப்பட்டன.

போட்டியான வகையில் நாடக விழாவானது நிகழ்த்தப்படுகின்றதென்பதிற்க்கப்பால் காத்திரமான வகையிலான அரங்கப்பாரம்பரியத்தினை வளர்த்துச் செல்வதற்கான வகையில் விழா இடம் பெறுகின்றமை சிறப்பான விடயமாகும்.

    நான்கு இல்லத்தினை சேர்ந்த மாணவர்களும் ஒரே பாடசாலை சேர்ந்தவர்கள் எனினும்   அவர்களிடையே வெற்றி பெற வேண்டும் என்ற அவா மேலோங்கி காணப்படுவது தவிர்க்கவியலாது. ஆயினும் அவர்களிடையே பொறாமை உணர்வினை விடுத்து போட்டி மனோபவத்துடன் செயற்படுவதற்கு மாணவர்களினை வழிப்படுத்த வேண்டியது இல்லங்களின் பொறுப்பாசிரியர்களின் கடமையாகும்.

 நாடகப்போட்டியென்பது குதிரைப்பந்தயம் அல்ல மாறாக மாணவர்களிடையே ஒளிந்துள்ள கற்ப்பனா சக்தியி



னை வெளிக்கொணர்வதற்கும் தன்னை நம்பி இயங்குவதற்கான களவெளியினை ஏற்ப்டுத்திக் கொள்ளவதற்கான வாய்ப்பாகவும் அமையவேண்டும்.
 வெற்றி தோல்வி என்பது இயல்பானவிடயம் அவற்றினைவிட இயங்கியலுக்கூடாக கற்றுக்கொண்ட விடயத்தினை உய்த்துனர்ந்து கொள்வதற்கான வாய்ப்புக்களினை ஏற்ப்படுத்தி கொள்ளவதற்கான வாய்ப்பாகவும் அமையவேண்டும்.

 வெற்றி தோல்வி என்பது இயல்பானவிடயம் அவற்றினைவிட இயங்கியலுக்கூடாக கற்றுக்கொண்ட விடயத்தினை உய்த்துனர்ந்து கொள்வதற்கான வாய்ப்புக்களினை ஏற்ப்படுத்தி கொள்வது பொறுப்பானவர்களின் தலையாய கடமையாகும்.

வியாழன், ஜூலை 11, 2013

கலையின் அவசியம்

கலைப்படைப்பு என்பது பார்ப்போரிடையே கனதியான தாக்கத்தினை ஏற்ப்படுத்துகின்றவையாக இருக்கவேண்டும். மாறாக பார்ப்போரின சலிப்பூட்டுவதாகவும் அவர்களது ரசனைக்கு தீனிபோடுவனவாகவும் அமையாதவற்றினை நல்ல படைப்புக்கள் என சொல்லுவதில் இடர்மிகு சிக்கல்கள் உள்ளதென்பது தவிர்க்க முடியாத உண்மையாகும்.


 நல்ல படைப்புக்கள் பர்வையாளரிடம் ரசனையினை ஏற்ப்படுத்தும் என்பதும் அவர்களது உணர்வியல் தாக்கத்தினை ஏற்ப்படுத்தும் என்பதும் எதார்த்தமாகும்.

கலைப்படைப்புக்கள் எனும் போர்வையில் பார்வையாளனினை சலிப்பிற்கு உள்ளாக்குவதுடன் தமக்கு தெரிந்ததே அற்ப்புதமான விடயங்கள் எனவும் புதியவற்றினை ஏற்றுக்கொள்வதற்கான திரனியற்றவர்களாகவும் வெறுமனே வறட்'டு கௌரவத்தினை உடையவர்களாகவும் காணப்படுகின்றமை உண்மையாகவும் இதய சுத்தியோடும் கலைகளினை நேசித்த எமது முன்னோர்களது கலைச்செயற்ப்பாட்டிற்கு களங்கம் ஏற்ப்படுத்தும் வகையில் சிலர் நடந்து கொள்வது வேதனைக்குரியது என்பதினை விட வெட்கப்படவேண்டிய விடயமாகும்.

இத்தகைய நிகழ்வுகளி னை அற்ப்புதமான நிகழ்வுகள் எனும் வகையில் தம்பட்டம் அடித்துக்கொண்டு செல்வதும் தம்மை விட யாரும் இல்லை எனும் வகையில் பிற்ப்போக்கான வகையில் நடந்து கொள்வதும் சம்பந்தப்பட்டவர்கள் வெட்கி தலை குனிய வேண்டியவிடயங்கள் ஆகும்.

அண்மையில் இடம்பெற்ற நடன நிகழ்வு தொடர்பாகவே இத்தகைய ஆதங்கம் எழுகின்றது. மாணவர்களினை காயடிக்கும் செயற்ப்பாட்டிலும் அவர்களினை சுயமுனைப்பற்றவர்களாக்கும் வகையிலும் அவர்களது தம்மானத்தினை அடைவு வக்கும் வகையிலும் தமது சயலாப இருப்பிற்கான களவெளிகளினை கொண்டு செயற்ப்படுகின்றமை வெட்கப்பட வேண்டிய விடயமாகும்.

மாணவர்களது விருப்பிற்கு மாறாக அவர்களினை வற்புறுத்தி நிகழ்வில் பங்குபற்ற வைத்ததாகவும் அறியமுடிகின்றது.

இன்றைய பொழுதுகளில்  நடனம் என்பது எண்ணப்படைப்பாக்கத்திற்கு ஏற்றவகையிலும் மாணவர்களது சுய ஆளுமையினை வளர்த்து கொள்வதற்கான வகையிலும் வடிவம் கொண்டமையினை அற்ப்புதமான நடனப்படைப்பாளிகளது நடனப்படைப்புக்களில் இருந்து கண்டும் அறிந்தும் ரசிக்கக்கூடியதாகவும் காணப்படுகின்றது.

மாறாக மேற்க்குறித்த நடன நிகழ்வானது வெறுமனே மரபுகளின் தொகுப்பு எனும் வகையில் பிற்போக்கானவகையில் அமைத்து விட்டு பெரும் தம்பட்டம் அடித்து செல்வதினையும் காணக்கூடியதாக உள்ளது.

 இத்தகைய போக்குகள் ஆரோக்கியமான சமூகத்தினை பிரசவிக்குமா எனும் ஜயம் எழுவது தவிர்க முடியாதாக உள்ளது.

அற்ப்புதமானது என தம்பட்டம் அடிக்கும் படைப்புக்கள் இடம்பெற்றபோது பெரும்பாலான பார் வையாளர்கள் நித்திரை என்பதும் பலர் தமது வேலைகளினை மேற்க்கொண்டதுடன் எப்போது  இந்நிகழ்வு நிறைவடையும் எனும் ஆதங்கத்துடன் காணப்பட்டமையும் குறிப்பிடத்தக்கது ஆகும்.

 சமூகத்திற்கு எவ்கையிலும் பயனற்ற இந்நிகழ்விற்கான செலவு என்பது கேட்கும்' பேதே ஆச்சரியத்தக்கவகையில் அதிகமாக உள்ளது.

படைப்புக்கள் எப்போதும் சமூக நலநோம்பலினை அடிப்படையாக கொண்டதாகவும் ஆளுமை வெளிகளினை சிருஸ்டித்து விடுவனவாகவும் காணப்படவேண்டும் மாறாக ஆளுமை சிதைவிற்க்கான வழிவகைகளினை ஏற்ப்படுத்துவனவானவும் இளைய தலைமுறையினரை காயடிக்கும் செயற்பாட்டிற்குவழிவகுக்குமாக இருந்தால் ஆரோக்கியமான சமூகம் உருவாகாது ஊனமுற்ற சமூகம் உருவாகும் என்பது தவிர்க்கவியலாததாகும்.



சனி, ஜூலை 06, 2013


 முத்தமிழ்விழா 


பாடசாலைகள் பல்வேறு வகையான விழாக்களினை நடாத்திவருவதன்ஊடாக கலைவெளிப்பாட்டிற்கான உந்துதல்வெளிகளை உருவாக்கிகொள்வதுடன் எமக்கு முன்னுதாரனமாகவிளங்கிய பெரியவர்களினை  அவர்களது வாழ்வியலினை நினைவுறுத்திக்'கொள்வதற்கான இயங்கியல் வெளிகள் காணப்படுகின்றன.

 இந்தவகையில் மானிப்பாய் இந்துக்கல்லூhயில் சுவாமி விபுலானந்தர் நினைவு தினமும் முத்தமிழ் விழாவும் இடமபெற்றது.
மாணவர்களது அக்கபூர்வமான நிழ்வுகள் பல பல காணப்பட்ன. அவற்றில் காத்திரமான நிகழ்வாக மாணவர்களினால் கொண்டாhடப்பட் நிகழ்வாக  நாடக மன்ற மாணவர்கள் வழங்கி மாயவலைகனும் நாடகமும தளலயம் ஆற்றுகையும் விளங்குகின்றது.

       நாடகக்கலையின் வீழ்ச்சி

 நாடகக்கலையானது வீழ்ச்சியடைந்து செல்கின்றது எனும் கருத்துநிலையானது வலுவாககாணப்ப டுகின்றதுஆயினும் அக்கலை ஏன்? வீழ்ச்சியடைந்து செல்கின்றதுஅதற்க்கான காரனங்கள் என்ன என்பது தொடர்பான கருத்துப்பகிர்வுகள் ,விவாதங்கள் என்பன யாராலும் மேற்க்கொள்ளப்படுவதில்லை.

மாறாக அக்கலையின் தரநிர்னயத்தில் புத்திஜீவிகளது அர்ப்பனிப்பான சேவைகள் கருத்தில் கொள்ளப்பட வேண்டியது அவசியமானதாகும். ஆயினும் இளையததலைமுறையில் கற்றவர்களதும் புதிய சிந்தனையுடனும் ஆழமான கருத்துப்பகிர்வுடன் கூடியவர்களது செயற்ப்பாடுகள் ஏற்றுக்கொள்ளப்படாமல் புறம்தள்ளப்படுகின்ற மிக துர்ப்பாக்கிய நிலை காணப்படுகின்றது.
இவை நாடகத்துறையின் வளர்ச்சியினை ஈழத்தினை பொறுத்தவரையில் கேள்விக்குரியதாக கொள்கின்றமையினை அவதானிக்ககூடியதாக உள்ளது.

நாடகத்தினை பட்டமாகவும், சிறப்பு நிலைக்கல்வியாகவும் கற்று வெளியேறிவர்கள் தமது புதிய சிந்தனைகளினை சமூகத்தில் பயன்படுத்தி கொள்வதற்கு அரைகுறை கற்றல் செயற்பாட்டில் ஈடுபட்டவர்கள் மற்றும் பழமை வாத சிந்தனை யுடைய பிற்ப்போக்கி வாதிகள் நடந்து கொள்கின்றமை மிகவும்கண்டிக்கப்படவேண்டியவிடயமாகும்.
 புதிய சிந்தனையினை ஏற்றுக்கொள்ளாத சுயநலவாதிகள் மத்தியில் நாடகத்தின் புதியசி ந்தனையினையும் அதன் கருத்து நிலையினை பரப்பி ஆரோக்கியமான புதிய சிந்தனையுடைய சமூகத்தினை உருவாக்கி கொள்வது மிகவும் சவாலானவிடயமாகும்.


ஞாயிறு, ஜூன் 30, 2013

தமிழ் நாடக மரபினை புதுப்பித்து வந்தாலே அதனை அழிவிலிருந்து காப்பாற்ற முடியும்--மூத்த நாடகக்கலைஞர் வேலாயுதம்பிள்ளை –சரவனபவானந்தன்

                         

                                                                       நேர்காணல்- எஸ்.ரி.அருள்குமரன்

 எங்களுடையதமிழ் மரபு அழியாமல் இருப்பதற்கு மரபினை
புதுப்பிக்கவேண்டும்.ஒவ்வொருவிழாக்களிலும்,கிராமங்களிலும் வழங்கினால் கலை ஒரு போதும் அழியாது  என மூத்த நாடகக்கலைஞர் வேலாயுதம்பிள்ளை –சரவனபவானந்தன் தெரிவித்தார்.

தனது நாடகத்துறை தொடர்பான அநுபவங்களினை தினக்குரலுக்கு வழங்கிய போதே   மேற்க்கண்டவாறு தெரிவித்தார்.அவரது நேர்காணல் வடிவத்தினை இங்கு தருகின்றோம்.

கேள்வி -உங்களை பற்றி குறிப்பிடுங்கள்?

பதில்- யாழ்ப்பானத்தில் உள்ள பருத்துறைப்பிரதேசத்தில் கற்கோவளம் எனும் பகுதியில் 1956ம் ஆண்டு பிறந்த நான் ஆரம்ப கல்வியினை கற்கோவளம் மெதடிஸ்ஸ மிஷனிலும் இடை நிலைக்கல்வியினை தும்பளை சைவ பிரகாசத்திலும் கற்றேன். அக்காலப்பகுதியிலேயே இசை நாடகத்துறையில் ஈடுபாடு ஏற்ப்பட்டது.அன்று முதல் அத்துறையில் ஈடுபட்டு வருகின்றேன்.

 கேள்வி -இசை நாடக துறையில் ஆரம்ப கால ஈடுபாடு தொடர்பாக குறிப்பிடுங்கள்?

பதில்- 70; ஆண்டு காலப்பகுதியில் பாடசாலையில் கல்வி கற்றுக்கொண்டிருந்த காலப்பகுதியில் மாதனை சிவசுப்பிரமணியம் அவருடைய அறிமுகம் ஏற்ப்பட்டது. (இவர் ஈழத்து இசை நாடகத்துறையில் பிரபலமான கலைஞர் என்பது குறிப்பிடத்தக்கது.)
பாடல் பாடுவதிலும் நடனம் ஆடுவதிலும்  திறமை உடையவனாக இருந்த காரணத்தினால் பெண் வேடங்களினை தாங்கி நடிப்பதற்கான வாய்ப்பு ஏற்ப்ப்டது.குறிப்பாக நல்லதங்காள், சந்திரமதி, வள்ளி,பவளக்கொடி, போன்ற பாத்ரிரங்களிளை ஏற்று நடித்ததுடன் பலரது பாராட்டுக்களினையும் பெற்றுக்கொண்டேன்.

பின்பு 80 களின் காலப்குதியில் கற்கோவளத்தில் 'வேனுகானசபா' எனும் நபடக கம்பனியை நிறுவி அதன் ஊடக 91ம் ஆண்டு காலப்பகுp வரைக்கும் ஆழியவளை,உடுத்துறை, பளை, மயிலிட்டி போன்ற பல இடங்களில் நாடகங்கள் மேடையிட்டு வந்துள்ளேன் ஆயினும் நாட்டில் ஏற்ப்பட்ட அசாதாரன சூழ்நிலை காரனமாக நாட்டை விட்டு வெளியேறி இந்தியாவில் வசிக்க வேண்டி எற்ப்பட்டது ஆயினும் இந்தியாவிலும் இசை நாடகத்துறையில் தனித்துவமான நடிகனான செயற்ப்ப்பட்டமை பெருமையான விடயமாக கருதுகின்றேன்.

 கேள்வி-இந்தியாவில் இருந்த காலப்பகுதியில்  மேற்கொண்ட நாடக செயற்ப்பாடுகள் தொடர்பாக குறிப்பிடுங்கள்?

பதில்- 91ம் ஆண்டு முதல் 2006ம் ஆண்டு வரை இந்தியவாவில் தங்கியிருந்தேன்.மதுரை நடிகர் சங்கம் என்ற அமைப்புஅங்கு உள்ளது.அங்கே நடிகர்கள் தமது பெயர்களினை பதிவு செய்து வைக்கும் போது பொருத்தமான வேடம்வருகின்ற போது அழைப்பார்கள். அந்த வகையில் பல நாடகங்களினை நடித்துள்ளேன் அங்கு பெரும்பாலும் ஆண் பாத்திரங்களினையே ஏற்று நடித்திருந்தேன்.குறிப்பாகசத்தியவான் சாவித்திரி,அதிச்சந்திரா மயான காண்டம், பக்த நந்தனார் போன்ற நாடகங்களில் நடித்துள்ளேன். அங்கே நாடகங்கள் நடிப்பது வித்தியாசமானதாக இருந்தது.500 பேருக்கு மேற் நான் குறிப்பிட்ட சங்கத்தில் பதிந்திருப்பார்கள் ஆயினும் இன்றைய நாடகத்தில் யார் யாருடன் நடிக்கப்போவது என்று  மேடையில் ஏறும் வரை தெரியாது.

 கேள்வி- இந்தியாவில் இசை நாடகம் எவ்வாறு உள்ளது?

 பதில்- இலங்கையில் உள்ளது போல இப்ப அங்க இல்லை எங்களிடம் தான் தனித்துவமானதாக உள்ளது. அங்கே சினிமாப்பாணி கலந்துள்ளது.ஆனால் இலங்கையில் சங்கரதாஸ் சுவாமிகளது  நாடகம் போன்று தனிமரபுடன் கூடியவகையில் நாடகம் உள்ளது.இது சிறப்பான விடயம் ஆகும்.

கேள்வி-ஈழத்தின் பிரபலமான இசை நாடக கலைஞரான வி.வி.வைரமுத்துவுடன் நீங்கள் இனைந்து நடித்ததாக அறியப்படகின்றது அது தொடர்பாக குறிப்பிடமுடியுமா?
பதில்- வி.வி.வைரமுத்துவுடன் மட்டு மல்லாது நற்குனம், வி.எம். செல்வராஜா உட்பட்ட கலைஞர்களுடனும் இணைந்து நடித்துள்ளேன். வைரமுத்துவுடன் சந்திரமதியாகவும் நல்ல தங்களாகவும் பின் சந்திர மதியாகவும் 20 ற்கு மேற்ப்பட்ட மேடைகளில் இணைந்து நடித்துள்ளேன்.

கேள்வி- நீங்கள் ஈடுபட்டதில் பிடித்த பாத்திரங்கள்?

பதில்-நல்ல தங்காள்,காரனம் என்னவென்றால் அப்பர்திரத்திரத்தினை என்னனை போன்ற யாரும் செய்ய முடியாது என்பது எனது கருத்து

கேள்வி-நாடகத்தில் ஒப்பனையின் முக்கியத்துவம் யாது?
பதில்-பாத்திரமாக வருவதற்கு ஒப்பனை மிக முக்கியம் நடிகனென்றால் பாத்திரமாக மாறிவிடவேனும் நடிகனுக்கு இன்பமும் அது தான் கஷ்டம் என்பது என்னவென்று தெரியாது இத்தகைய நிலைக்கு பாத்திரமாக மாறுவதற்கு ஒப்பனை முக்கியம் ஆகும்

கேள்வி-இத்துறையில் உங்களது ஆசை என்ன?
  பதில்- பல மூத்த அண்ணாவிமார் இறந்து போய்விட்டார்கள் அவ்வெற்றிடத்தினை நிரப்பவதற்கு இளம் அண்ணாவி மார்களை உருவாக்கவேண்டும்

கேள்வி- இதற்கான முயற்ச்சிகள் எதுவும் மேற்கொள்கின்றீர்களா?

பதில்- நான் இப்பொழுது கிளநொச்சியில் வசித்து வருகின்றமையினால் கரைச்சி பிரதேச செயலகத்தின் கலாசார பேரவையினரின் முயற்ச்சியினால் இளம் தலைமுறையினருக்கு இசை நாடக கலையினை  பயிற்றுவித்துவருகின்றேன். இத்தகைய முயற்ச்சிக்கு ஆதரவாக கலசார உத்தியோகத்தர் கு.ரஜீவன் காணப்படுகின்றார். எனக்கு தெரிந்த இந்த இசை நாடக கலையை  பிறருக்கு சொல்லி கொடுக்க வேண்டும் என்பதுதான் என் ஆசை.

கேள்வி- இன்று இசை நாடகத்தின் முக்கியத்துவம் யாது?
பதில்-தொலைக்காட்சிகளின் வரவால்இசை நாடகம் மங்கிப்போய்விட்டது என்று பலர் குறிப்பிடுகின்றனர். ஆனால் முறையாக இசை நாடகங்களினை பழக்கி, முன்னின்ற செய்தால் பலரும் ரசிப்பார்கள் இசைக்குழுக்களுக்கு கொடுக்கின்ற முக்கியத்துவத்தினை இசைநாடகங்களிற்கும் கொடுத்தால் கலை வளரும்
கேள்வி- இத்துறையினை வளர்க்க உங்களது ஆலோசனையினை குறிப்பிடுங்கள்?
பதில்-  ஆர்வத்தினை கொண்டு வர வேண்டும் எனில் ஒவ்வொரு ஊர்களிலும் கொண் வர வேண்டும் கிராமத்து பிள்ளைகளிற்கு பழக்கினால் எல்லோரும் பார்க்கக்கூடியதாக இருக்கும்

 நன்றி -தினக்குரல் வாரமஞ்சரி

வெள்ளி, ஜூன் 28, 2013

தனி நடிப்பு போட்டியில் முதலிடம்



 கொழும்பு றோயல்கல்லூரியினால் நடாத்தப்படுகின்ற  நாடகத்திறன்கான் தனிநடிப்புப்போட்டியின் தேசிய மட்டப்போட்டிக்கு மானிப்பாய் இந்துக்கல்லூரி கல்லூரி மாணவன் சானுஜன்தெரிவாகியுள்ளார்.

 கொழும்பு றோயல்கல்லுரியின் நடக மன்றத்தினரால் வருடாந்தம் அகில இலங்கைப்பாடசாலைகளுக்கிடையில் நடாத்தப்பட்டு வருகின்ற நாடகத்திறன்காண் போட்டிகளில் ஒன்றான தனிநடிப்புப்போட்டியின் மாவட்ட மட்டப்போட்டிகள் நெல்லியடி மத்திய மகாவித்தியாலயத்தில் நடைபெற்றபோது கனிஷ்டபிரிவினருக்கான போட்டியில் மானிப்பாய்இந்துக்கல்லூரியிக்கல்லூரியின் மாணவன் ஜே.சானுஜன்முதலாமிடத்தினை  பெற்று தேசியமட்டப்போட்டிக்கு தெரிவாகியுள்ளார்.

இம்மாணவனுக்கான நடிப்புசார் பயிற்ச்சிகளினையும் வழிப்படுத்தலினையும்  கல்லூரியின் நாடகமன்றப் பொறுப்பாசிரியர் எஸ்.ரி.அருள்குமரன் வழங்கியுள்ளார்.

உலகநாடகதினவிழா கொண்டாடப்பட வேண்டியதன் அவசியம்


                                                                                                           
                                                                                                           (எஸ்.ரி.அருள்குமரன்)
ஈழத்து அரங்க வரலாறானது நீண்ட வரலாற்றப்பாரம்பரியமும் கலைச்செழுமையுடையதாகும்.

காலவோட்டத்தில் அது தனக்கான தனித்துவத்துடனும் சமூக பண்பாட்டு செயல் தளத்திற்கு ஏற்ற வகையில் தனது செயல் வளர்ச்சியினை தகவமைத்து வந்துள்ளது.

ஈழத்து அரங்க வரலாறு பலராலும் சேர்ந்து உருவாக்கப்பட்டுள்ளது.ஈழத்தினை பொறுத்தவரையில் அரங்கு கல்வி முறையாக முகிழ்ந்தெழுந்தமையினால் புதிய வடிவங்களினை பிரசவிப்பதற்கும் அரங்கு பற்றிய ஆழமான தேடலிற்கும் வழி சமைத்திருந்தது.

சமூக அக்கறை பொருந்திய அரங்கின் உயிர்ப்hன விடயம்பார்ப்போருடன் நேரடி உயிர்ப்பு விசையினை கொண்டிருப்தாகும்.இத்கைய நேரடி உயிர்ப்பு விசையினை  உடைய நாடகங்களிற்கான விழாவாக வருடம் தோறும் உலக நாடக தினம் கொண்டாடப்பட்டுவருகின்றது.

1961ம் ஆண்டு ஜீன் மாதத்தில் சர்வதேச அரங்க கூட்டமைப்பின் ஒன்பதாவது ஒன்று கூடலாக கெல்சிங்கி , வியன்னா ஆகிய இடங்களில் சர்வதேச அரங்கத்திட்டம் உருவாக்கப்பட்டது.

சர்வதேச அரங்க திட்டம் எனும் சொல்லிற்கு மாற்றீடாக 'அர்விகமா' என்பவரினால் உலக நாடக தினம் முன்மொழியப்பட்டது.எனினும் 1962ல் பரிஸில் மார்ச் 27ம் திகதி  நடைமுறைப்படுத்தப்பட்டது.அதன் தொடர்ச்சியாக ஒவ்வொரு வருடமும் நூற்றுக்கு மேற்ப்பட்ட நாடுகளில் இத்தினம் கொண்டாடப்பட்டு வருகின்றது.

இவ்விழா மக்களிடையே  சமாதானத்தினையும் புரிந்துனர்வினையும் ஏற்ப்படுத்தும் ஆற்றுகைகலையின் சக்தியை மக்கள்முன்னிலையில் வெளிக்கொனர்வதற்கும் அரங்கவியலாளர்களினால் கொண்டாடப்பட்டு வருகின்றது.

இவ்விழா தனது நோக்கமாக பின்வரும் அம்சங்களினை கொண்டுள்ளது.
ஆற்றுகை கலையின் முக்கியத்துவத்தையும் அதன் பயில்வையும் சர்வதேச ரீதியில் பரிமாறிகொள்ள ஊக்குவித்தல்

அரங்க கலைஞர்களிடையே கூட்டுனர்வை உருவாக்குவதிலும் வளர்ப்பதிலும் ஆக்கத்திறன்மீதான அக்கறையை விருத்தி செய்தல்.
இக்கலைப்படைப்பு மீதானஅபிப்பிராயத்தை மக்கள் மத்தியில் விழிப்புனர்வுடன் உருவாக்குதல்
இந்நிகழ்வில் பங்கு கொள்வதன் மூலம் மக்களிடையே ஆழமான புரிந்துனர்விற்கு பங்குகொள்ளலை வலுப்பெறச்செய்வதற்கும் முனைப்பூட்டல்

மேலும் நடனம் போன்ற பிரத்தியோக முறைமைகளிற்கும் முன்னுரிமை கொடுக்கவும் மற்றும் சர்வதேச செய்திப்பரிமாற்றம் பொது விடயங்களினை கதைப்பதற்கான பேச்சுவழக்கமுறை வட்டமேசை மாநாடு போன்ற வேறுபட்ட முயற்ச்சிகளிற்காகவும் சர்வதேச விழாவாக ஒருநாள் அல்லது ஒருவாரம் அல்லது ஒருமாதம் வரை இவ்விழா கொண்டாடப்பட்டு வருகின்றது.

உலகத்தில் அரங்கேறி வருகின்ற இவ்விழாவினை னொண்டாடுவதில் ஈழத்து அரங்கவியலாளர்களும் அக்கறை காட்டிவருகின்றனர்.
இதன் ஆரம்ப முயற்ச்சியாக கிழக்கு பல்கலைக்கழகம் தனக்கான களவெளியினை சிருஷ்டித்து உலக அரங்கதினவிழாவினை அரங்கேற்றியது.
அதன் நீட்ச்சியாக யாழ்ப்பானப்பல்கலைக்கழகம் 2007ம் ஆண்டு முதன் முதலாக நிகழ்த்தப்பட்டு அடுத்தவருடத்துடன் அந்நிகழ்வு இடம் பெறாமல் போயுள்ளது.

ஆயினும் 2008ம் ஆண்டு முதல் சுன்னாகம் பொதுநூலகம் நிகழ்த்திவருவதினை அவதானிக்கலாம்.
 அரங்கிற்கான வரலாறு என்பது நீண்டநெடியதாகும். அவ்வரலாற்றினை நகர்த்திவந்தவர்கள் காலத்தின் மறைவிற்குள் சென்ற போதிலும் ஒருசிலரது வாழ்வே தேசத்தின் வரலாறாகிப் போகின்ற சூழ்நிலை சகதி;க்குள் ஈழத்து அரங்க வரலாறும் புதைந்து போனமை தவிர்க்க முடியாதாகும்.

எனினும் சமூகத்தின் இயங்கியலுக்காக தம்வாழ்வியில் துயரங்களினை புதைத்து சமூகத்தின் மகிழ்வே தமது மகிழ்வாகதமது வாழ்வினை வரித்துக்கொண்டு நினைவில் மரித்துப்போனவர்களினை நினைவேந்திக்கொள்வதற்காகவும் அவர்களது பணியின் அறாத்தொடர்ச்சியின் பேனுகையாகவும் அவ்வரங்கவியலாளர்களை நினைவில் நிறுத்திக்கொள்வதற்காகவும் இத்தினம் கொண்டாடப்பட வேண்டியதன் அவசியம் காணப்படுகின்றது.

பெரும்பாலனவர்களது கதையாடலாக நாடகக்கலை வீழ்ச்சியடைந்து விட்டதுமரபுவழிக்கலைகளின் பேனுகை அவசியம் என்பதாக அமைகின்றது.

இப்பகைப்புலத்தில் வீழ்ச்சியடையும் நாடககலையினை  எழுர்ச்சியடைய செய்வதற்கான செயற்ப்பாடுகள் ஆக்கபூர்வமானதாக மேற்கொள்ளப்படுவதுடன் இளம் தலைமுறையினரது நாடக செயற்ப்பாடுகளை ஊக்குவிப்பதுடன் சமகாலத்தின் பதிவுகளாக அரங்க செயற்ப்பாடுகள் முன்னெடுக்கப்படுவதுஅணைவரது இணைவுடனும்சர்வதேசம் நோக்கியதான அரங்கபயனத்திற்கு கொண்டுசெல்வது மூத்த அரங்கவியலாளர்களது தார்மீக பொறுப்பாகும்
 
 31.03.2013 ஞாயிறு  தினக்குரல்  வாரமஞ்சரி 

செவ்வாய், ஜூன் 25, 2013

நாடகவிழா

                    


(S.T.Arul)

                 நாடகவிழா

மானிப்பாய் இந்துக்கல்லூரியின் வருடாந்த நாடகவிழாவானது எதிர்வரும்  யூலை மாதம் 3ம் திகதி  இடம்பெறவுள்ளது. மாணவர்களிடையே  மறைந்துள்ள ஆற்றல்களினை  வெளிக்கொனரும் முகமாக பல்வேறு செயற்ப்பாடுகள் பாடசாலையில் மேற்கொள்ளப்படுவது குறிப்பிடத்தக்கது. இவற்றில் முதன்மையாக மாணவர்களது நடிப்புத்திறனை வெளிக்கொனரும் வகையில் இல்லங்களுக்கிடையே நாடகப்போட்டிகள் நடத்தப்படவுள்ளன.
 நீண்ட காலமாக இவ் நாடக போட்டிகள் மானிப்பாய் இந்துக்கல்லுரியில் நடத்தப்படகின்றது இவ்வருடம் நடை பெறுகின்ற போட்டியானது 57 ஆவது போட்டியாக  பாடசாலையில் நாடகவிழாக்களில் பங்கெடுத்தவர்கள் கருத்து பகிர்கின்றனர்.
 நான்கு இல்லங்களில் இருந்தும் 100 மாணவர்னளாவது நாடக செயற்ப்பாட்டில் ஈடுபடுவதற்கான வாய்ப்புக்கள் ஏற்படுத்தப்பட்டுள்ளன.
 இப் போட்டிகளின் பிரதான நோக்கம் மாணவர்களினை ஆற்றல் உள்ளவர்களாக மாற்றுவதினை நோக்கமாகக்கொண்டதாகும். மேலும் போட்டியெனும் வகையில் இல்லாதது ஆக்கபூர்வமான வகையில் கனதியான நாடக படைப்புக்களினை வெளிக்கொணர்வதன் மூலம் ஆளுமையுள்ள புதிய இளம் நாடக தலைமுறையினை  உருவாக்க முடியும் என்பது எதார்ர்மாகும் ஆயினும் நாடக போட்டிகளினை தனிநபர் போட்டிகளாக பொறுப்பாசிரியர்கள் மாற்ற முனையும்ட பட்சத்தில் ஆரோக்கியமான இளம் தலைமுறையானது எவ்வாறு உருவாகும் என்பது பெரும் வினாவாக எழுகின்றது.

 S.T.Arul

ஞாயிறு, ஜூன் 23, 2013

குணமாக்கல் அரங்க செயற்ப்பாடும் அனுபவமும்.


குணமாக்கல் அரங்க செயற்ப்பாடும் அனுபவமும்.

 (எஸ்.ரி.அருள்)


குணமாக்கல் அரங்கு எனும் போது சமூகத்தில் இப்போது உள்ள நிலையில் (நாங்கள் சந்தித்த நிலையில் ) அவர்களது மனநிலை செயற்ப்பாடுகள் எவ்வாறு உள்ளதோ அவ்வாறான மனநிலை செயற்ப்பாடுகளில் மதற்றங்களினை கொண்டு வருவதாகும்.
இவ்வகையில் சுனாமி தாக்கம் ஏற்ப்பட்ட போது மக்கள் பயத்துடனும் பீதியுடனும் காணப்பட்ட போது அவர்களது மனங்னளில் மாற்றங்களினை கொண்டு வருவதற்காக அவல நீக்க ஆற்றுப்படை அரங்கு எனும் செயல்திட்டம் அரங்க செயற்ப்பாட்டு குழுவினாரல் மேற்க்கொள்ளப்பட்டது.
இவர்கள் யாழ்ப்பான பல்கலைக்கழக நாடக மாணவர்களினை இணைத்து இச்செயல் திட்டம் மேற்க்கொள்ளப்பட்டது.
இச்செயல்திட்டத்தினை நாடகத்துறை விரிவுரையாளார் கலாநிதி .க.சிதம்பரநாதன் வழிப்படுத்தியிருந்தார்.

இவ் அரங்க செயல்திட்டத்தில் ஈடுபட்டமை வித்தி யாசமான அநுபவமாக இருந்தது. 

சுனாமி எனும் இயற்கையின் கோரத்தாண்டவம் ஏற்ப்பட்டு தாயகப்பிரதேசம் எங்கும் மக்கள் சொல்லொன துயரங்களினை அனுபவித்த வேளை அவர்கள் என்னசெய்வது எனவும் எதிர்காலம் சூனியமாக்கப்பட்டதாகவும் உனரத்தலைப்பட்ட வேளையில் அவர்களது துயர்போக்கவும் அவர்களிடையே நம்பிக்கை எழுச்சியினை ஏற்ப்படுத்துவதினை நோக்கமாகக்கொண்டும் மேற்ப்படி அரங்க செயல்திட்டம் முனைப்புறுத்தப்பட்டது.

சுனாமி கோரத்தாண்டவம் இடம்பெற்றபோது உ  டனடி தேவைகளினை நிறைவு செய்யும் நோக்கில் உணவு ,உடைகள் என்பன பலராலும்வழங்கப்பட்டன. அவ் வேளை நாமும் அத்தகைய பணியில் பங்கெடுத்துக்கொண்டோம். ஆயினும் அவர்களது உளவியல் ரீதியான நோய்களிற்கு தீர்வு முன்வைக்க வேண்டியதும் அவர்களிடையே நம்பிக்கை ஊற்றினை ஏற்ப்படுத்த வேண்டியதும் அத்தகைய சூழ்நிலையில் மிகவும் அவசியமான செயல்ப்பாடாக இருந்தது. அப்பகைப்புலத்தில் அரங்க ஆற்றுகை நிகழ்வுகள் மூலம் மக்களிடையே இருந்த பயம், பீதி என்பன நீக்கப்பட்டன. இது புதுமையானதானவும் வித்தியாசமானதாகவும் காணப்பட்டது.

வழமையான அரங்க நிகழ்த்துகைகளில் இருந்து இது மாறுபட்டதாகவும் காணப்பட்டமு.காரணம் ஆற்றுகையாளனில் கைகளில் தான் அரங்க அளிக்கைக்கான தயார்ப்படுத்தலும் திட்டமிடலும் இருந்தது.

இவ்வரங்க நிகழ்த்துகைகளில் சிறுவர்களது இணைவும் அதனூடாக பெரியவர்களது இணைவும் முதன்மையானமதாக அமைந்தது.

எங்களுடைய செயற்ப்பாடுகள் மிகவும் எளிமையாக காணப்படும். குறிப்பாக சிறுவர்களது விளையாட்டுக்களான மாபிள்விளையாடுதல் கிளித்தட்டு என்பவற்றில் ஆரம்பித்து அரங்க ஆற்றுகை கனதியாக அமைந்து செல்லும்.

மக்கள் தமது உள்ளக்கிடக்கைகளினை எம்முடன் அன்னியேபன்னமாக பகிர்ந்து கொண்டனர்.குறிப்பாக மனல்காடு பிரதேசத்தில் அரங்க ஆற்றுகையின்பின்னர் ஒரு முதியவர் குறிப்பிடும்போது நாங்கள் பயத்தின்காரனமாக மனுசி பிள்ளையளுடன் முகாமின்ர கூரையினை பார்த்தபடி வெறுச்சிப்போய் கடதாசிப்பேப்பறுகளை கிழிச்சுப்போட்டுக்கொண்டு இருந்தம் நீங்கள் வந்து இந்த பிள்ளையளுக்கு விளையாட்டு சொல்லி குடுக்கேக்க சந்தோசமா இருக்கு இது எங்கட 'உள நோய்க்கு ஒரு மருந்தா இருக்குது' என்றார் இது அரங்க செயற்ப்பாட்டின் கனதியனை வெளிப்படுத்தியது எனில் மிகையில்லை..

சுனாமி காவு கொண்ட பிரதேநங்களான கரையோரப்பிரதேசங்களில் வடமராட்சி பிரதேசங்கள் முல்லைத்திவு பிரதேசங்களிற்கு எங்களது அரங்க பயனம் தொடர்ந்தது.

ஒவ்வொரு இடமும் எமக்கு புதுமையான அநுபவங்களினை ஏற்ப்படுத்தியதுடன் மனமகிழ்விற்க்குரிய களமாகவும் அமைந்தது.

 இத்தகைய வகையில் மாறுபட்ட புதுமையான அநுபவமாக இருந்தது.



வெள்ளி, ஜூன் 21, 2013

அரங்கினூடாக சிறுவர்களுக்கான உளரன்(மனோதிடம்) மேம்பாடு

எஸ்.ரி.அருள்குமரன்   BA (Hons) MA(M
erit)

ஆசிரியர் 

மானிப்பாய் இந்துக்கல்லூரி

அரங்கினூடாக சிறுவர்களுக்கான  உளரன்(மனோதிடம்) மேம்பாடு
நாடகக் கலை தனக்கென தனித்துவமான பண்புகளினை கொண்டுள்ளது.மனித நாகரிக வளர்ச்சியின் ஆரம்ப புள்ளி முதல் இக்கலையின் வகிபங்கு முதன்மை பெறுகின்றது. மனிதர்கள் தமது உணர்வியலினை பிறரிடம் காவுவதற்கும் தமது கருத்தினை பகிர்ந்து கொள்வதற்கும் உறவினை தகவமைத்துக்கொள்வதற்கும் இக்கலை உதவின.
இக்கலையின் தொடர்நிலை இயங்குதல் காலமாறுதலுக்கு ஏற்ற வகையில் வடிவங்களினை தரநிர்ணயம் செய்தன. அவ்வடிவங்கள் தமக்கான தனித்துவத்துடனும் சமூகத்தில் பல் பரிமாண பிரச்சினைகளினையும் ஊடு பொருளாக கொண்டு வெளிப்படுத்தின.

இதன் முக்கியத்துவம் காலமாறுதலில் வெறுமனே உணர்ச்சிக்குரியது என்பதினை தாண்டி அறிவு பூர்வமான விடயமாக பார்க்கப்படலாயிற்று.
ஏவ் விடயத்தினையும் அவற்றில் காணப்படுகின்ற பிரச்சினைகளினையும் அறிவியல் பூர்வமகவும் யதார்த்த பூர்வமாகவும் பதிவு செய்ய முனைந்தன அப்பகைப்புலத்தில் பிரச்சினைகள் என்ன அப்பிரச்சினைகளினை தீர்ப்பதற்கான வழிவகைகள் என்ன அத்தீர்வுகளின் ஊடாக சமூகவியல் பெறுமானத்தில் எத்தகைய மாறுதல்களினை  கொண்டுவரமுடியம் என்பன தொடர்பாக நாடகப்படைப்பாளிகள் சிந்தித்தனர்.

அச்சிந்தனைப்பெறுமானம் சமூகவியலில் தாக்கத்தினை ஏற்படுத்தின
சமூகம் காலம்மாற்றமடையும் பேது பதிய புதிய பிரச்சினைகள் முகிழ்ந்தெழும் போது அவற்றினை வெளிப்படுத்துவதற்கும் தீர்த்து கொள்வதற்கும் நாடகங்கள் துணை செய்கின்றன.

பிரச்சினைகள் எனும் போது பல்வேறு பிரச்சினைகளினை குறிப்பிடுவார்கள். பெண்களது பிரச்சினைகள்இ முதியவர்களது பிரச்சினைகள் இ சிறுவர்களது பிரச்சினைகள் இ பண்பாட்டு பிறழ்வுகள் என பிரச்சினைகள் சமூகவியல் சூழமைவுகளுக்கு ஏற்ப்ப மாறுபடுகின்றன.

கலைகள் மனித வாழ்வியலில் பிரிக்க  முடியாத கூறுகளாக விளங்குகின்றன. கலைப்படைப்புக்கள் காலத்தினை பிரதிபலித்து நிற்கும் கண்ணாடி ஆகும். சமூகத்தில் மனிதர்களது வாழ்வியல்கள் பதிவுகள் மனிதர்களது வலிகள் ,என்வற்றினை வெளிப்படுத்தும் வல்லமை பொருந்தியவை ஆகும். இத்தகைய பணியினை நாடகீய படைப்புக்கள் மூலம் செயற்படுத்த முடியும்.

    இன்றைய சூழ்நிலையில் சம காலத்தில் எமது வாழ்வியல் நீரோட்டத்தில் பலரது கதையாடல் வெளிகளில் சிறுவர்துஷ்பியோகம் அதனூடான பண்பாட்டு பிறழ்வுகள் பற்றிய பார்வை முதன்மை பெறுகின்றன.

சிறுவர்கள் நாட்டின் சொத்துக்கள் , எதிர்காலத்தின் தலைவர்கள் அவர்கள் இக்காலத்தில் பெற்றுக்கொள்கின்ற அறிவபு;புலமையானது அவர்களது எதிர்கால வாழ்வியலுக்கான அடிப்படைகளாகின்றன எனும் கருத்து நிலைகள் முதன்மைபெறுகின்றன.ஆனால் அவர்களது சுதந்திரமான வாழ்வியல் தகவமைப்பிற்கான செயற்பாடுகள்   முழுமையாக இடம்பெறுகின்றனவா எனும் வினாவெழுகின்றன. காரணம் யாதெனில் ஊடகங்களிலும்  பல் வேறு நிலைகளிலும் சிலாகிக்கப்படுகின்ற சிறுவர் துஷ்பிரயோகங்கள் அவர்களுக்கு இழைக்கப்படுகின்ற கொடுமுறைகள் அவர்களுக்கு மறுக்கப்படுகின்ற உரிமைகள் எனப்பலவற்றினைகுறிப்பிட முடியும்.

  சிறுவர்களுக்கான சுயமுனைப்பு செயற்பபாடுகளும் அவர்களுக்கான கருத்தாடல் வெளிகளும் தம்மை வெளிப்படுத்திக் கொள்வதற்கான வெளிகளும் உருசமைக்கப்படுகின்ற போதே ஆரோக்கியமான சமூகம் மேற்கிளம்பும்.

சிறுவர்களது உளரன்(மனோதிடம்) மேம்பாட்டிற்கானதும் வாழ்வியல் மேம்பாட்டிற்கான செயற்பாடுகள் முன்னெடுக்கப்பட வேண்டியது காலத்தின்தேவையாகும். காரணம் யாதெனில் அவர்களது மனப்பதிவுகளில் உயரிய சிந்தனைகளினையும் அச் சிந்தனையின் ஊடாக தன்னம்பிக்கையினையும் ஏற்படுத்துவது அவசியமானதாகும் அத்தகைய சிந்தனை சார் மாற்றத்தினை வெளிக்கொணர்வதற்கு கலையியல் சார் செயற்பாடுகள் துனைசெய்யும்.

பதினெட்டு வயதிற்க்குட்பட்டவர்களினை சிறுவர்கள் எனும்  வகுதிக்குள் உட்படுத்துகின்றனர்கள். அவ்வகையில் பாடசாலைப்பருத்தினை உடையவார்கள் இவ்வகுதிக்குள் வருகின்றனர். எனவே அவர்களுக்கான வரியான வழிகாட்டுதல்களும் நல்லன தீயனவற்றை பகுத்தாராய்வதற்கான வழவகைகள் மேற்கொள்ளப்பட வேண்டியது அவசியமானதாகும்.
சிறுவர்களுக்கான அரங்க செயற்பாடு எனும் போது அவர்களுக்கான கற்பனையை தூண்டும் வகையில் ஆடல் ,பாடல் , விநோதம் ,நிறைந்ததாகவும்  அப்படைப்பின் பேசு பொருள் அவர்களது உளவியல் சார் அனுகுமுறையுடனும் அவர்களது கற்பனையை தூண்டக்கூடியவகையிலுமே உருசமைக்கப்படுகின்றன.

சிறுவர்கள் அரங்க செயற்பாடுகளில் ஈடுபடுவதன் மூலம் அவர்களிடையே ஆளுமைவெளிப்படுத்தல்கள் , தலைமைத்துவப்பண்பு ,கற்பனாசக்திவிருத்தியடைதல் எதையும் கூர்ந்து நோக்கும் திறன் விருத்தியடைதல் இ விட்டுக்கொடுப்பகள் இ சகோதரத்துவம் இ சுயதேடல் , சுயமுனைப்பு ,போன்ற பண்புகளினை மாணவர்கள் உள்ளீர்த்து கொள்வதற்கு இவ் அரங்க செயற்பாடுகள் துணை செய்கின்றன
.
சிறுவர் தலை முறை உளவியல் ரீதியாக  பாதிக்கப்பட்டால் அதன் எதிர்கால தலை முறையானது செயல்முனைப்பற்ற வகையிலும் சுயதேடல் அற்;ற தலைமுறையாகவுமே முகிழ்ந்தெழும். ஆத்தகைய சூழ்நிலை உருவாகும் போது ஆரோக்கியமாற்ற சமூகம் உருவாவதினை தவிர்கமுடியாது போகும்.
 எனவே அவர்களது கணவுகளினை உருவாக்குவதற்கும்  அவர்களது சுய முனப்பிற்கானதானவகையில் அவர்களுக்கு விழிப்பூட்டல் சர்ந்த செயற்பாடுகளுடன் அவர்களினை படைப்பில் ஈடுபடுத்துவதன் மூலம் ஆளுமை நோக்கிய சமூக உருவாக்கத்திற்கு வித்திட முடியும்.

நன்றி வெள்ளிமலை