முதலாமிடம்
சுன்னாகம் ஸ்கந்தவரோதயாக்கல்லூரியின் விஞ்ஞான விழாவினை முன்னிட்டு யாழ் மாவட்டப் பாடசாலைகளுக்கிடையே நடத்தப்பட்ட விஞ்ஞான கருப்பொருளை மையமாகக் கொண்ட நாடகப் போட்டியில் மானிப்பாய் இந்துக்கல்லூரியின் 'உயிர்வாழ' எனும் நாடகம் முதலாமிடத்தினைப்பெற்றுக்கொண்டுள்ளது..சுன்னாகம் ஸ்கந்தவரோதயாக்கல்லூரியின் கந்தையா உபாத்தியர் மண்டபத்தில் நடைபெற்ற மேற்படி போட்டியில் மானிப்பாய் இந்துக்கல்லூரி அணி .முதலாமிடத்தினைப் பெற்றுக்கொண்டது.
இந்நாடகத்திற்கான எழத்துரு- நெறியாள்கையினை கல்லூரியின் நாடகத்துறை ஆசிரியர் எஸ்.ரி.அருள்குமரன் மேற்க்கொண்டுள்ளார் ஆற்றுகையாளர்களாக சு.கலைக்சன் யே.சானுஜன் த.சதீஸ்குமார் சி.சிவானுஜன் த.டிபேர்டன் தி.தனுஜன் சி.சிவானுஜன் யே.யதுசன் ஆகியோர் நடித்துள்ளார்கள். எழுத்துருவுக்கான பாடல்களினை
பா.ஜெயரூபன் மேடை முகாமையாளராக உ.கரிஸ் ஆகியோர் செயற்பட்டுள்ளார்கள்