என்னைப் பற்றி

வியாழன், நவம்பர் 03, 2022

அரங்கவிளையாட்டுக்களும் ஆளுமைதிறன்விருத்தியும்

(எஸ்.ரி.அருள்குமரன்) அரங்கவிளையாட்டுக்கள்அரங்கசெயற்பாடுகளில்மிகமுக்கியமான இடத்தினைபெறுகின்றன. விளையாட்டுக்கள் உடல்திறனிற்கான அடிப்படையாகவிளங்குகின்றன. விளையாட்டுக்களில்ஈடுபடுதல்உடல்பயிற்சிக்குமுதன்மையானதாகவும்,அப்பயிற்சியின்ஊடாக உடலினை தகவமைத்தக்கொள்வதிற்குஏற்புடையதாகவும்கொள்ளப்படுவதனைப் போன்று அரங்கவிளையாட்டுக்கள் நடிகனை தயார்ப்படுத்துவனை நோக்கமாகக்கொண்டு மேற்கொள்ளப்படுகின்றது.
அரங்கவிளையாட்டுக்கள் என்றால் என்ன என நோக்குவோமாயின் நடிகனதுதிறன்விருத்தியினை இலக்காகக்கொண்டு உடல்,உளம்,குரல்ஆகியவற்றிற்கானபயிற்சியாக மேற்கொள்ளப்படுகின்ற விளையாட்டுக்கள் அரங்கவிளையாட்டுக்கள் ஆகும். இவ்விளையாட்டுக்கள் பல்வேறுதேவைகளை அடிப்படையாகக்கொண்டவகையில் பயிற்சியியாக நிகழ்த்தப்படுகின்றன. நடிகன் நடிப்பினை சிறந்தமுறையில்வெளிப்டுத்துவதற்கு,மேடையில் ஏனைய நடிகனுடன்சிறந்ததொடர்பாடல் திறனை விருத்திசெய்துகொள்வதற்கு என தன்னை தயார்ப்படுத்திக்கொள்வதற்காக அரங்கவிளையாட்டுக்களில் ஈடுபடுகின்றான். நடிகனைபொறுத்தவரையில் நடிப்பினை வெளிப்படுத்துவதில் மூலகங்கள் முதன்மைபெறுகின்றன. இந்தவகையில் முதற்தரமூலங்கள்,இரண்டாம்தரமூலகங்கள் முக்கியம்பெறுகின்றன. முதற்தரமூலகம்என்பதுஉடல்,குரல்,உளம் என்பனவாகும்..இரண்டாம்தரமூலகங்கள்என்பது துணைக்கலைகளான வேடஉடை,ஒப்பனை,இசை போன்ற மூலக்கூறுகள். இவ்விருவிடயங்களிலும்நடிகனை தன்னை சுயாதீனமாகவெளிப்படுத்திக்கொள்வதற்கும்,பார்ப்போருடன் தனதுஆளுமையினைவெளிப்படுத்திக்கொள்வதற்குமான களமாக முதல்தரமூலகங்களை நடிகன் பயன்படுத்திக்கொள்கின்றான். அரங்கவிளையாட்டுக்கள் உடல்,உளம்,குரல்சார்ந்த பயிற்சியாக விளையாடப்படுகின்றன. உடல்சார்ந்த பயிற்சிக்குரிய அரங்கவிளையாட்டுக்களாக ஆடும்வீடும், நண்டு,றால்,மீன் ,தலைவரைகண்டுபிடித்தல்,எலியும்வளையும் போன்ற சில விளையாட்டுக்களை குறிப்பிடமுடியும். இவ்விளையாட்டுகளில் ஈடுபடுவதன்மூலம் உடல்சார்ந்தவலிமையினைபெற்றுக்கொள்ளஉதவுகின்றது. நடிகன்அரங்கில் நீண்டநேரம்இயங்குவதற்கும்,பாத்திரத்தினை சிறந்தமுறையில் வெளிப்படுத்துவதற்கும்உடற்திறனை வளர்த்துக்கொள்வதற்கு இவ்விளையாட்டுப்பயிற்சி உறுதுணையாக அமைகின்றது. குரல்சார்ந்த பயிற்சிக்குமுதன்மைகொடுக்கம்வகையில்விளையாடப்படுகின்ற அரங்க விளையாட்டுக்களிற்கு உதாரனமாக பசுவும்புலியும்,குலைகுலையாhய்முந்திரிக்காய்,சங்குவெத்திலை சருகுவெத்திலை,நாராய்நாராய்,போன்றவிளையாட்டுக்களை குறிப்பிடலாம். நடிகன்அரங்கில்தன்னைவெளிப்படுத்திக்கொள்வதற்கு குரல்சார்ந்தவெளிப்பாடு இன்றியமையாததாகும்.காரணம் சொல்லாடல்களை வெளிப்படுத்துகின்றபோதுதெளிவாகவும்,சிறந்தஉச்சரிப்புடனும்,இறுதியில் இருக்கின்றபார்வையாளருக்கு தெளிவாகவிளங்கக்கூடியவகையிலும் வெளிப்படுத்தவேண்டும்.எனவேகுரலை சரியானமுறையில்பயன்படுத்திக்கொள்வதற்கும்,உணர்வுநிலையினை வெளிப்படுத்திக்கொள்வதற்கும் குரல்சார்ந்த அரங்க விளையாட்டுக்கள் துணையாகின்றன. உளம்சார்ந்த அரங்கவிளையாட்டிற்கு கரடியும்கிராமமக்களும், பஸ், ,குருவானவர்வீட்டில் கள்ளன்எனும் அரங்கவிளையாட்டுக்களைகுறிப்பிடலாம்.
இவ்விளையாட்டுக்களின்நோக்கம் உளம் சார்ந்தவகையில் அதாவது மனதிற்கான பயிற்சியாக ; கொள்ளப்படுகின்றன. நடிகன் உணர்வுகளை கட்டுப்பாட்டுக்குள்வைத்திருந்துபொருத்தமான நேரத்தில்வெளிப்படுத்துவதற்கு மனம்சார்ந்த பயிற்சிஅவிசயமாகின்றது.உதாரனமாக சோக உணர்வினை வெளிப்படுத்துகின்றபோது பாத்திரத்தினது சூழ்நிலைக்கு எற்பவெளிப்படுத்தவேண்டும்.தேவையற்றவகையில்வெளிப்படுத்தப்படுகின்ற போதுபார்வையாளருக்கு சலிப்பினை ஏற்படுத்தும். மனதை தனது கட்டுப்பாட்டிற்குள்வைத்திருப்பதற்கும்,நினைவாற்றலினை வளர்த்தக்கொள்வதற்கும்நினைவாற்றலை வளர்த்துக்கொள்வதன்மூலம் நீண்டவசனங்களைஞபகப்படுத்திக்கொள்வதற்கும் இவ்வகையான அரங்க விளையாட்டுக்கள்நடிகனுக்கு பெரும்துணையாகின்றன. அரங்க விளையாட்டுக்கள் விளையாடுவதன் மூலம் பல்வேறு திறன்கள் விருத்தியாக்கப்படுகின்றன.அந்தவகையில் அரங்கவிளையாட்டுக்களில் ஈடுபடுகின்றவர்களிடையே அவர்களது அனுபவத்திற்கு ஏற்றவகையில் பல்வேறு திறன்களைபெற்றுக்கொள்கின்றனர். அற்தவகையில்பொதுவாகபின்வரும் திறன்களை குறிப்பிடமுடியும். கற்பனைத்திறன்,மனதைஒருநிலைப்படுத்தல்,தொடர்படல்,தலைமைத்துவம், கனப்பொழுதில் தீர்மானம் எடுக்கும் திறன்,மனனம், போன்ற திறன்கள் விருத்தியாக்கப்படுகின்றன். மேலும் இவ் விளையாட்டுக்களில் ஈடுபடுவதினால் ஏற்படும் நன்மைகளாக மனமகிழ்வு ஏற்படும், உடல்,உளதளர்வுநிலை,கூட்டாக இயங்கும்பண்பு,வெட்கம்பயம்நீங்கிஇயல்பாகநடிக்கஉதவுதல்,விட்டுக்கொடுக்கும்மனப்பாங்குவளரும், போன்ற பண்புகள் வளர்சியடைகின்றன. நடிகன் தான் ஏற்கின்றபாத்திரத்தினை சிறந்தமுறையில் வெளிப்படுத்துவதற்கு பயம்,வெட்கம் அற்றவனாகஇருக்கவேண்டும். பயம்,வெட்கம் காணப்படுகின்றபோதுஅவனால்சுயாதீனமாக செயற்படமுடியாது .பயம்,வெட்கம் நீக்கப்படுகின்றபோதுகற்பனைத்திறன்விருத்தியாக்கப்படுகின்றது.கற்பனைத் திறன்விருத்தியாகின்றபோது படைப்பாகக் மனநிலை ஏற்படுகின்றது. இப்படைப்பாக்கமனநிலையே அவனை சிறந்த நடிகானாக்குகின்றது. இப்பின்னனியில் நடிகன் தனது பல்வேறு ஆற்றல்களை வளர்த்துக்கொள்வதற்கு அரங்கவிளையாட்டுக்கள் துணைசெய்கின்றன.

புதன், நவம்பர் 02, 2022

உயர்தரப்பரீட்சையினை எதிர்கொள்ளப்போகின்ற மாணவர்களுக்கு!

பரீட்சை என்பது நீங்கள்  இரண்டு வருடங்களாக கற்ற முழுவதையும் ஒப்புவிக்கின்ற இடம் அல்ல. குறித்த மணித்தியாலத்தினுள் வினாத்தாளை அனுகிகொள்ளலும் அவ்வினாக்களிற்கு மிகப்பொருத்தமான  பதிலை அளிப்பதுமாகும். வினாக்களை சரியான முறையில்  அனுகிக்கொள்வதற்கு மொழித்தேர்ச்சி மிக அவசியமானதாகும். உங்கள் அனைவரதும் அடிப்படை விருப்பம் மூன்று பாடங்களிலும் சித்தியடைவதாக இருக்கட்டும். மேற் குறிப்பிட்டவிருப்பு உங்கள் மனதில் உதயமானால் அடுத்த கட்டம் உங்களுக்கு மிகப்பிடித்த பாடத்தில் ஏ சித்தியினை பெற்றுக்கொள்வதற்கு மனம் ஆசைப்படும் இது உங்கள் வெற்றியில் வளர்ச்சியாகும். இவ்விடயம் மனதில் முளை கொண்டால் ஏனைய பாடங்களில் திறமைச்சித்தியினை பெற்றுக்கொளவேண்டும் என மனம் உந்தும். இது சாத்தியமானால் மூன்று பாடங்களிலும் திறமைச்சித்தியினை பெற வேண்டும் என உள் மனம் சொல்லும். மூன்று பாடங்களிலும் அதி திறமைச்சித்தியினை பெற்றுக்கொண்டால் பல்கலைக்கழகம் செல்கின்ற கனவு உங்கள் கண் எதிரே சாத்தியம் ஆகும். பல்கலைக்கழகம் செல்லுதல் என்பது உங்களது உயரிய கனவாக இருக்கட்டும். கனவு நனவாகின்ற போது வாழ்வில் வெற்றி பெற்றவர்களாகின்றீர்கள்.. வாழ்வில் வெற்றி பெறுவதற்கும் தோல்வி பெறு வதற்கும் நீங்கள் தான் பொறுப்பாளிகள் என்பதை உணர்ந்து கொண்டு பயணியுங்கள். ஏனெனில் உங்களை செதுக்குகின்ற சிற்பிகள் நீங்கள் தான். வெற்றிபெற்றால் உங்களை தேசம் கொண்டாடி உங்களதுவெற்றிக்கும் சாதனைக்கும்  முழு உலகமே தங்களது கோணத்தில் உரிமை கோருவர். நீங்கள் இலக்கில் இருந்து தோற்றுப்போனால் முழு உலகமேமே உங்கள் மீது பழி போடும். முழு உலகமும் உங்களை உரிமை கோருவதா? உங்கள் மீது பழி போடுவதாக என்பதை  தீர்மானிக்கின்ற மாபெரும் சக்தி நீங்கள் என்பதை புரிந்து கொண்டு பயணியுங்கள். நீங்கள் பரீட்சையில் வெற்றி பெறுகின்ற போது உங்களது இலட்சியம் வெற்றிபெறும். இலட்சியம் வெற்றி பெறுகின்ற போது நீங்கள் வெற்றி பெற்றவர்களாக மாறுவீர்கள். வாழ்வில் வெற்றி பெற்றவர்களுக்கும் தோல்வியடைந்தவர்களுக்கும் இடையில் நூலிடை  வித்தியாசம் தான் உண்டு. நீங்கள்வெற்றி பெற்றால் உங்களுக்கு பிடித்தமாதிரி வாழ்க்கையில் வாழ முடியும். தோல்வி அடைந்தால் மற்றவர்களுக்கு பிடித்தமாதிரி வாழ வேண்டும். எதை தெரிவுசெய்யப்போகின்றீர்கள் என்பதை தீர்மானிக்கின்ற வலுப்பொருந்தியவர்கள் நீங்கள் என்பதை உணர்ந்து கொள்ளுங்கள். இளைய தலைமுறை மீது எம் தாய் நாடு பெரும் மதிப்பினை கொண்டிருக்கின்றது. எம் தாய் நாடு மதிப்பு வைத்துள்ள இளைய தலைமுறையினர் நீங்கள் என்பதை மறந்துவிடாதீர்கள். தன்னம்பிக்கையுடன் இலட்சியக்கணவுடன் பயணித்த யாரும் தோற்றுப்போனதாக சரித்திரம் இல்லை. நீங்கள் உங்களது இலட்சியத்தில் துணிவுடன் சென்று வெற்றி பெற எனது நல்வாழ்த்துக்கள். கனவுடன். எஸ்.ரி.அருள்குமரன்..
(எஸ்.ரி.அருள்குமரன்) யாழ்ப்பாணப்பல்கலைக்கழக நாடக நினைவுகள் .... நினைவு  01 கனவுகளுக்கு களம் திறந்து விட்டிருந்தகாலம்.. கல்லாசனங்கள் பல தள கதையாடல்களிற்கும்இசிந்தனைத்திறப்பிற்கும்இ அறிவு விகாசிப்பிற்குமான தளங்களாக இருந்தன. அலப்பறைகளுக்கான இடமாக அல்லாது அறிவுத்திறப்பிற்கான வெளியாக மாற்றிக்கொண்டமை மனதிற்கு மகிழ்வானதாக இருந்தது. பல்கலைக்கழகமுதல் நாள் அனுபவம் நெஞ்சில் இருந்து அகலாத பசுமையாக இருக்கின்றது. அரங்கக்கற்கைகளுக்கான வாய்ப்பும் அங்கு அரங்கச்செயற்பாடுகளின் ஊடாக கற்றுக்கொண்ட அனுபவங்கள்இ பட்ட அவமானங்கள்இஎல்லாம் சேர்ந்து என்னை முழுமையாக்கியது. நாடகங்களில்  பங்குபற்றுகின்ற போது ஏற்பட்ட  மகிழ்ச்சிக்கும் அவை தந்த  அனுபவங்களுக்கும் ஈடாக எவற்றையும் வாழ்வில் பெற்றுக்கொள்ளவில்லை. அங்கு இடப்பட்ட விதை பல தடைகளை  தாண்டி இன்று விருட்சமாக இருக்கின்றது. என்னை உருவாக்கியவர் பலர். அரங்க துயைில் நான் உயிர்ப்புடன் இயங்குவதற்கு பலரது வழிகாட்டல்களும்இஅரவனைப்புக்களும் இருந்திருக்கின்றது. எனக்கு சிறு வயதில் இருந்தே நாடகங்களில் இருந்த பிரியம் அலாதியானது. ஆனால் அவற்றுக்கான களங்கள் இருந்ததில்லை.. பல்கலைக்கழகத்தில் கற்ற காலங்கள் நாடகத்தை கற்பதற்கும் அத்துறையில் இயங்குவதற்குமான வாய்ப்பாக இருந்தன. பல்கலைக்கழக்தில் நடித்த முதல் நாடகம் சிகப்பு விளக்கு எனும்நாடகம் ஆகும். இந்நாடகம் சீனா நாடகம். தமிழில் மொழி பெயர்த்தவர் குழந்தை ம.சண்முகலிங்கம்.. நெறியாளர் விரிவுரையாளர் க.ரதிதரன். இந்நாடகம் மூன்றாம் வருட மாணவர்கள்தமது  பயில் நிலை அனுபவத்தை பெற்றுக்கொள்வதற்காக தயாரிக்கப்பட்டநாடகம் ஆகும். மூன்றாம் வருட மாணவர்களுடன் கனிஷ்ர பிரிவினரும் பங்கு பற்றுவதற்கு வாய்ப்பு ஏற்படுத்தப்பட்டிருந்தது. இந்தவகையில் முதலாம்  வருடமானவர்களும்  சிறியபாத்திரங்களுக்காக உள்ளீர்க்கப்பட்டனர். அதன் அடிப்படையில் நாமும் இணைந்து பணியாற்றுவதற்கான சூழ்நிலை உருவாகியது. இந்நாடகத்தில் பொறுப்பாகவும் துனை நெறியாளராகவும் கேதீஸ் அண்ணா இருந்தார்.  அவர் மிகவும் இறுக்கமானவராக இருந்தார். அவரது கண்டிப்புடன்கூடிய  நடத்தல்கள் ஆரம்பித்தல் சலிப்பாகவும் அவர் மீது வெறுப்பாகவும் இருந்ததாலும் பிற்காலத்தில் நினைத்து பார்க்கின்றபோது பல கற்றுக்கொள்ளலுக்கான களங்களை திறந்து விட்டனவாக இருந்தது. நாடக ஒத்திகைகள் குறித்தநேரத்திற்கு ஆரம்பமாகி இடம்பெறும் அப்பொழுதுகள் மகிழ்ச்சிக்குரியனவாக இருந்தன. நாடகஒத்திகைகள்இடம்பெறுகின்ற ஒருநாள் ரதிதரன் சேர் ஒத்திகையின் நிறைவில் கலந்து கொள்கின்றார். அவர்குறிப்பிட்ட விடயங்கள் இன்றும் நினைவில் இருக்கின்றது. முதலாம் வருடத்தில் உள்ளவர்கள்  குறைந்தது சிறிய பாத்திரங்களாவது ஏற்று நடிக்கவேண்டும் பைனல் இயரில் வரும்போது பெரிய பாத்திரம் ஏற்று நடிப்பது உங்களது வளர்ச்சியினை காட்டும் என்றார். இவாலுவேசன் நடைபெறுகின்ற போது ஒவ்வொருவரையும் இன்றைய நாள் அனுபவங்கள் எப்படி என கேட்கிறார்.ஒவ்வொருவரும் குறிப்பிடுகின்றனர்.என்னுடைய முறை வருகின்றது. என்னால் அனுபவங்களை  குறிப்பிட முடியவில்லை. தயக்கமாக வும் ஒருவிதமான பயஉணர்வு காணப்பட்டபோது நான் ஒண்டும் சொல்லாமல் இருந்தேன். அப்போது பேசாது .. அவர்  சரி நீர் எல்லாரும் சொன்ன பிறகு சொல்லும் எண்று குறிப்பிட்டு விட்டு அடுத்தவரை கேட்டார். இந்த நிகழ்வு எனக்கு அவர் மீதான மதிப்பினைஏற்படுத்தியது. காரனம் திருப்பி கேட்டிருந்தால்  அல்லது பேசியிருந்தால்  பயத்தால அடுத்தநாள் றிகர்சலுக்கு போகாமல் விட்டிருக்க கூடும் மாறாக இப்பிடி நடந்து கொண்டது என்னிடையே தன்னம்பிக்கையினை ஏற்படுத்தியிருந்தது. இந்நாடக ஒத்திகை காலத்தில் முகுந்தன்இமதன் அண்ணாஇ ரதி அக்காஇ தர்மினி அக்காஇ அருந்தா அக்காஇ சந்திரிக்கா அக்காஇ எனபலரது அன்பும் வழிகாட்டலும் சிறப்பாக  இருந்தது. இந்நாடகத்தில் உளவாளி மற்றும் போர்வீரர் ஆகிய இரு பாத்திரங்களில் நடித்திருந்தேன். மேடை அளிக்கை எனும் வகையில் திட்டமிடப்பட்ட அசைவுஇ உரையாடல் வெளி என்பன காணப்பட்டன. ஒத்திகை காலங்கள் பல்வேறு அனுபவங்களை பெற்றுக்கொள்வதற்கான வாய்ப்பாக இருந்தது. ஆற்றுகையானது யாழ்.பல்கலைக்கழக முகாமைத்துவ கட்டடத்தொகுதியுடன் இணைந்தவகையில் காணப்படுகின்ற திறந்தவெளி அரங்கில் இடம்பெற்றது. குழந்தை ம.சண்முகலிங்கம் அவர்கள் நாடகத்தை பார்த்து நல்ல கருத்துக்களை குறிப்பிட்டிருந்தார். இந்நாடகத்தில் பங்குபற்றியமை சிறப்பானதாக இருந்தது. நாடகத்தை பார்வையிட்டபலரும் நாடகம் தொடர்பான நல் அபிப்பிராயங்களையும்இ திருத்தவேண்டிய விடயங்களையும் குறிப்பிட்டதுடன் நான் பங்குபற்றியபாத்திரங்கள் தொடர்பாகவும் குறிப்பிட்டிருந்தனர். இத்தகைய அனுபவங்கள் நாடக துறை சார்ந்த வகையில் இயங்குவதற்கான அடிப்படையில் தன்னம்பிக்கையினை வளர்த்து விட்டிருந்தது. (தொடரும்.........)

ஞாயிறு, அக்டோபர் 30, 2022

காலப்பெருவெளியினுள் கலைச்செயற்பாடுகளில் ஈடுபட்ட அனுபவங்கள்.

(எஸ்.ரி.அருள்குமரன்) காலப்பெருவெளியினுள் கலைச்செயற்பாடுகளில் ஈடுபட்ட அனுபவங்களை நினைத்துப்பார்க்கின்றபோது ஏற்படுகின்ற மனமகிழ்விற்கு ஈடாக வாழ்வியலில் ஏதுமில்லை. கலை அனுபவம் கனதியானது. அதில் ஈடுபட்டதினால் கற்றுக்கொண்டவை ஏராளம். பெற்றுக்கொண்ட உறவுகள் பெறுமதியானவை. சேமித்தசொத்துக்கள் அப்படைப்புக்களின் பின்னரான மனநிம்மதி. இவ்வாறு சொல்லிக்கொண்டே செல்லலாம் கலைப்பயணங்களின் அனுபவங்கள். நாம் எங்கிருக்கவேண்டும் என்பதையும் ,எதில் இயங்கவேண்டும் என்பதையும் காலம் நிர்ணயிக்கின்றது. நினைத்துப்பார்க்கின்ற போது நாம் இவ்வாறெல்லாம் செயற்பட்டோமா என்கின்ற பிரமிப்பினை ஏற்படுத்துகின்றன சில நிகழ்வுகள். அத்தகைய செயற்பாட்டு தளமாக அளவெட்டி மகாஐன சபை கலைஞர் வட்டத்துடனான உறவினைப்பும், அங்கே செயற்படுத்திய கலைச்செயற்பாடுகளும் மனத்திரையி்ல் விரிகின்றன. போருக்கு பின்னரான பொழுதுகளில் இராப்பொழுதுகளை பயனுள்ளதாகசெயற்படுத்தவேண்டும் என பலரும் சிந்தித்துக்கொண்டிருந்த தருணங்களில் செயல் முனைப்புள்ள வகையில் இயங்கியலுக்கு முதன்மை கொடுக்கின்றதாக அளவெட்டி மகாஐனசபை கலைஞர் வட்டத்தினர் செயற்பட்டனர். ஊர் கூடுவதற்கும், கூடிக்கதையாடுவதற்குமான பொழுதுகளாக கலைச்செயற்பாடுகள் தகவமைக்கப்பட்டன. அப்பொழுதுகளை மிகப்பெறுமதியானதாக்கி, மூத்த படைப்பாளிகளிற்கான அடையாளமாகவும், இளைய படைப்பாளிகளிற்கான வாய்ப்பாகவும் ஊர் வரலாற்றினை ஆவணப்படுத்துகின்றதாகவும்  செயற்பாடுகள் விரிந்தன. இவ் விரிதளத்தினுள் சிறிய புள்ளியாக நாமும்  பயணித்தமை பாக்கியமே. மகிழ்வான மாலைப்பொழுதுகள் எனும் தொனிப்பொருளில் பௌர்னமி தினங்களில் முத்தமிழிற்கு முதன்மை கொடுத்து  நாடகம்,வில்லிசை,கவியரங்கம்,       விவாதம், நடனம் ,இசை நிகழ்ச்சி,பாடல் என பல நிகழ்வுகள் நிகழ்த்தப்பட்டன. சிறுவர்கள் முதல் பெரியவர்கள் வரை பங்குபற்றுனர்களாகவும், பார்வையாளர்களாகவும் செயற்பட்டனர். இது ஒரு வித்தியானமான பொறிமுறையாக இருந்தது. இத்தளம் பலருக்கு அடையாளத்தினை பெற்றுக்கொடுத்ததுடன், தமது திறன்களை வெளிப்படுத்தி கற்றுக்கொள்வதற்கான களங்களை திறந்து விட்டிருந்தன. கலைஞர்களது உருவாக்கத்திற்கு   களங்களும் தளங்களும் அவசியம் என்பர்.  அந்த வகையில் பலரது வளர்ச்சிக்கான களங்களை  ஏற்படுத்தியிருந்தன. எமது இயங்கியல் பரிமானத்தில் அளவெட்டி மகாஜனசபை கலைஞர் வட்டத்தினது வாய்பளிப்பு ஆதாரமானது.மகாஐனசபை கலைஞர் வட்டத்துடன் இனைந்து இயங்கு வதற்கான வாய்ப்பு பல்கலைக்கழகம் பெற்றுத்தந்த மிக உன்னதமான நட்பர் சர்வேஸ் மூலம்  சாத்தியமானது. சொல்லுக்கும் செயலுக்கும் வேறுபாடு இல்லாது இயங்குகின்ற ஆளுமையாளர் இவர். இவரதுகோரிக்கைக்கமைவாக நாடகம் பழக்குவதற்கான இணைவின் மூலம் மகஜனசபை சபை கலைஞர் வட்டத்துடணான பயண உறவாரம்பித்தது. நல்லூர் திருவிழாவில் கண்டபோது நிலாக்கால கலை நிகழ்வு நிகழ்த்தப்போவதாகவும் அந்நிகழ்வில் இனணந்துசெயற்படுமாறும் சர்வேஸ் அழைப்பு விடுத்திருந்தார். அவ்வழைப்பினூடே சாட்சி எனும் நகைச்சுவை நாடகம் பழக்க சென்று  பல நல்ல உறவுகளை  பெற்றுக்கொண்டேன். "சாட்சி" எனும் நகைச்சுவை நாடகமானது யாழ்ப்பாண பல்கலைக்கழகத்தில்   பரீட்சைக்காக மேடையிடப்பட்டது. அந்நாடகத்தை பார்வையிட்டு நல்ல கருத்துக்களை பகிர்ந்திருந்தார்சர்வேஸ். அவ் நாடகத்தை மேடையிடுவோம் என கேட்டுக்கொண்டார். இவர்இத்தகைய செயற்பாடுகளின் மூலம் பல நிலைகளில் உள்ளவர்களை இணைத்திருந்தமை சிறப்பான விடயமாக இருந்தது. இந்நாடகத்தை பழக்கியபோது விஜயபாஸ்கரன் சேர் சில ஆலோசனைகள் குறிப்பிட்டு வழிகாட்டியிருந்தார். நூலகர் க.சௌந்தரராஐன் ஜயா வினது வேண்டுகோளிற்கு ஏற்ப "செவிட்டு ராமு "எனும் நகைச்சுவை நாடகத்தில் நடிகனாக பங்குபற்றியிருந்தேன். இந்நாடகத்தில் சகோதரர் குமரன் சௌந்தரராஜன் ஐயா, ஆகியோர் ஆற்றுகையாளராக செயற்பட்டிருந்தோம். அதேபோன்று ஐயாவின் வழிகாட்டலில் "வைத்தியருக்கு வைத்தியம்" எனும் நகைச்சுவை  நாடகத்தில் மேற்படி நாடகத்தில் பங்கு பற்றியவர்களுடன் துவாரகன் இணைந்து கொண்டு பெண்பாத்திரத்தினை ஏற்று சிறந்த முறையில் அளிக்கை செய்திருந்தார். இங்கு நகைச்சுவை நாடகங்கள் பெரும்பாலும் நிகழ்தப்பட்டது. நகைச்சுவை நாடகங்களது  நிகழ்த்துகைக்கான காரனமாக இறுகிப்போயுள்ள மக்களிடையே சிரிப்பினை ஏற்படுத்துவதன் மூலம் அவர்களது மனங்களில் மகிழ்வினை ஏற்படுத்த முடிவதுடன் அவர்களிடையே மாற்றத்தினை கொண்டு வர முடியும் என்பதினால் அத்தகைய அளிக்கைகளுக்கு முதன்மை கொடுத்து அளிக்கை செய்யப்பட்டன. அத்தகைய அளிக்கைகளுக்கு பார்ப்போரிடம்  வரவேற்பு கிடைக்கப்பபெற்றதை அவர்களிடம் இருந்து கிடைத்த எதிர் வினையின் மூலம் அறிந்து கொள்ளமுடிந்தது. "மாயவலை "எனும் குறியீட்டு நாடகம் எனது நெறியாழ்கையில் மகிழ்வான மாலைப்பொழுதொன்றில் நிகழ்த்தப்பட்டது. குறியீட்டின் ஊடாக  பல விடயங்களை அந் நாடகம் வெளிப்படுத்தியிருந்தது. இவ்வாறு அங்கு நிகழ்த்திய கலை அளிக்கையின் நினைவுகள் விரிகின்றன. இப்பதிவு அங்கு நிகழ்த்தப்பட்ட நிகழ்வுகளில்  ஒரு சிறு பகுதி மட்டுமேயாகும்.