என்னைப் பற்றி

புதன், நவம்பர் 02, 2022

உயர்தரப்பரீட்சையினை எதிர்கொள்ளப்போகின்ற மாணவர்களுக்கு!

பரீட்சை என்பது நீங்கள்  இரண்டு வருடங்களாக கற்ற முழுவதையும் ஒப்புவிக்கின்ற இடம் அல்ல. குறித்த மணித்தியாலத்தினுள் வினாத்தாளை அனுகிகொள்ளலும் அவ்வினாக்களிற்கு மிகப்பொருத்தமான  பதிலை அளிப்பதுமாகும். வினாக்களை சரியான முறையில்  அனுகிக்கொள்வதற்கு மொழித்தேர்ச்சி மிக அவசியமானதாகும். உங்கள் அனைவரதும் அடிப்படை விருப்பம் மூன்று பாடங்களிலும் சித்தியடைவதாக இருக்கட்டும். மேற் குறிப்பிட்டவிருப்பு உங்கள் மனதில் உதயமானால் அடுத்த கட்டம் உங்களுக்கு மிகப்பிடித்த பாடத்தில் ஏ சித்தியினை பெற்றுக்கொள்வதற்கு மனம் ஆசைப்படும் இது உங்கள் வெற்றியில் வளர்ச்சியாகும். இவ்விடயம் மனதில் முளை கொண்டால் ஏனைய பாடங்களில் திறமைச்சித்தியினை பெற்றுக்கொளவேண்டும் என மனம் உந்தும். இது சாத்தியமானால் மூன்று பாடங்களிலும் திறமைச்சித்தியினை பெற வேண்டும் என உள் மனம் சொல்லும். மூன்று பாடங்களிலும் அதி திறமைச்சித்தியினை பெற்றுக்கொண்டால் பல்கலைக்கழகம் செல்கின்ற கனவு உங்கள் கண் எதிரே சாத்தியம் ஆகும். பல்கலைக்கழகம் செல்லுதல் என்பது உங்களது உயரிய கனவாக இருக்கட்டும். கனவு நனவாகின்ற போது வாழ்வில் வெற்றி பெற்றவர்களாகின்றீர்கள்.. வாழ்வில் வெற்றி பெறுவதற்கும் தோல்வி பெறு வதற்கும் நீங்கள் தான் பொறுப்பாளிகள் என்பதை உணர்ந்து கொண்டு பயணியுங்கள். ஏனெனில் உங்களை செதுக்குகின்ற சிற்பிகள் நீங்கள் தான். வெற்றிபெற்றால் உங்களை தேசம் கொண்டாடி உங்களதுவெற்றிக்கும் சாதனைக்கும்  முழு உலகமே தங்களது கோணத்தில் உரிமை கோருவர். நீங்கள் இலக்கில் இருந்து தோற்றுப்போனால் முழு உலகமேமே உங்கள் மீது பழி போடும். முழு உலகமும் உங்களை உரிமை கோருவதா? உங்கள் மீது பழி போடுவதாக என்பதை  தீர்மானிக்கின்ற மாபெரும் சக்தி நீங்கள் என்பதை புரிந்து கொண்டு பயணியுங்கள். நீங்கள் பரீட்சையில் வெற்றி பெறுகின்ற போது உங்களது இலட்சியம் வெற்றிபெறும். இலட்சியம் வெற்றி பெறுகின்ற போது நீங்கள் வெற்றி பெற்றவர்களாக மாறுவீர்கள். வாழ்வில் வெற்றி பெற்றவர்களுக்கும் தோல்வியடைந்தவர்களுக்கும் இடையில் நூலிடை  வித்தியாசம் தான் உண்டு. நீங்கள்வெற்றி பெற்றால் உங்களுக்கு பிடித்தமாதிரி வாழ்க்கையில் வாழ முடியும். தோல்வி அடைந்தால் மற்றவர்களுக்கு பிடித்தமாதிரி வாழ வேண்டும். எதை தெரிவுசெய்யப்போகின்றீர்கள் என்பதை தீர்மானிக்கின்ற வலுப்பொருந்தியவர்கள் நீங்கள் என்பதை உணர்ந்து கொள்ளுங்கள். இளைய தலைமுறை மீது எம் தாய் நாடு பெரும் மதிப்பினை கொண்டிருக்கின்றது. எம் தாய் நாடு மதிப்பு வைத்துள்ள இளைய தலைமுறையினர் நீங்கள் என்பதை மறந்துவிடாதீர்கள். தன்னம்பிக்கையுடன் இலட்சியக்கணவுடன் பயணித்த யாரும் தோற்றுப்போனதாக சரித்திரம் இல்லை. நீங்கள் உங்களது இலட்சியத்தில் துணிவுடன் சென்று வெற்றி பெற எனது நல்வாழ்த்துக்கள். கனவுடன். எஸ்.ரி.அருள்குமரன்..

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக