என்னைப் பற்றி

புதன், ஜூன் 25, 2014


ஈழத்தமிழர்களது  நாடகவராற்றில் கூத்து

ஈழத்தமிழர்களது  நாடகவராற்றில் கூத்துக்களினது வராலாற்றிற்கும் அதன் இயங்கியல் பெறுமானத்திற்கும் கனதியான வகிபங்கு காணப்படுகின்றது.
அக்கலைப்படைப்பானது செழுமையானதாகவும் ஊர் கூடி ஆடுகின்ற வகையில் சமூகத்தின் உற்பத்தியாகவும் அம்மக்களது மண்;ணின் வாசனையாகவும் விளங்குகின்றது.

அவ்நெடியவரலாற்றின் பின் உள்ள வலிகளும் அக் கலைஞர்கள் கொண்டுள்;ள துன்ப துயரங்களும் அக்கலையினை அடுத்த தலைமுறைக்கு  கையளிப்பதில்   எதிர்நோக்ககின்ற இடர்பாடு வலியும் சொல்லிமாழாதவை.
அப்பகைப்புலத்தில் அக்கலைகளுக்கான பேனுகைகளும் அக்கலைஞர்களிற்கான கொளரவிப்புக்களும் மேற்க் கௌ;ளப்பட வேண்டியதுடன் அக்கலைகள்  அடுத்த தலைமுறைக்கு கொண்டு செல்லலுடன்   பிற சமூகத்தவர்களிற்கும் வெளிப்படுத்தல் வேண்டும் என்பதில் கருசனை கொள்ளல் அவசியமனதொன்றாகும்.
 ஆயினும் அக்கருசனை வெறுமனே மையநிலைப்பட்டதாகவும்  நிறுவன ரீதியான செயல்நிலை எனும் போர்வையினுள் தனிமனித செயல் நிலைசார் செயற்பாடுகளிற்கான அங்கலாய்ப்பாகவும் கொள்ளல் ஏற்றுக்கொள்ள முடியாத விடயமாகும்.

யாழ்பான பல்கலைக்கழகமானது நாடக செயல் நிலைகளில் மிகவும் கனதியானதும் தாக்கவன்மை பொருந்தியதுமான  அரங்க செயற்ப்பாடுகளினை, தரமான நாடகங்களினை அரங்கு நிறைந்த பர்வையாளர்களிற்கு நிகழ்தி வரவேற்ப்பினை  பெற்றுக் கொண்டிருந்ததுடன் பர்வையாளர்களிற்கு மகிழ்வளிப்புடன் கருத்துக்களினை வெளிப்படுத்துவதினை நோக்கமாக கொண்டதுடன் அதற்குரிய  வெளிகளினை ஏற்ப்படுத்தியிருந்தது என்பது கடந்தகால வரலாற்று அநுபவங்களினை  நேர்பாட்டியல் சார் சிந்தனையுடன் எந்த விதமான விருப்பு  வெறுப்புக்களும் அற்ற நிலையில் அனுகுகின்ற வர்களினால் புரிந்து கொள்ள முடியும்.

இப்பின்னனியில் நோக்குகின்ற போது யாழ்பான பல்கலைக்ழகத்தில் நீண்ட நாட்களாக வெளிபார்வையாளர்களிற்கான நாடகங்களினை நாடகத்துறை வெளிப்படுத்தவில்லை என்கின்ற கருத்துநிலை காணப்படுகின்றது. அதற்கான காரனங்கள் என்ன என்பது தொடர்பான கருத்து நிலைகள் என்ன என்பது தொடர்hபாக சிந்திக்கப்டவேண்டிய சூழ்நிலை காணப்படுகின்ற நிலை  உள்ளது என்பது ஒருபக்கம் இருக்கும் போது அண்மையில் யாழ்பாண பல்கலைக்கழக நூன்கலைத்துறையினரின் எற்ப்பாட்டில் கைலாசபதி கலையரங்கில் மரபு வழி ஆற்றுகையான கூத்துவடிவமான  கோவலன் கண்ணகி கூத்து இடம்பெற்றது.

 நீண்டநாட்களின் பின்னர் அரங்கில் இடம்பெறப்போகும் ஆற்றுகையினை கண்டு களிக்க வேண்டும் கடந்த காலங்களில் இடமபெறுகின்ற படைப்புக்கள் போன்று கனதியானதாக அமையும்  எனும் விருப்புடன் சென்றவர்கள் மத்தியில் எஞ்சியது வெறுமையும் ஏமாற்றமும் ஆகும்.
இங்கு யாருடைய எற்ப்பாட்டில் இடம்பெற்றது என்பது கூட மிகப்பெரியவிடயமல்ல மாறாக இடம்பெற்ற வடிவத்தின் போக்கும் ஆற்றுகை தளமும் அது பார்வையாளர்களுடன் கொண்டிருந்த உறவு விரிசலும் சலிப்புத்தன்மையும் ஆற்றுகையின் தரத்தினை பார்ப்போரிற்கு கோடிட்டு காட்டியது.

பாடல்கள் ஏதோ புரியாத மொழியில் பாடுவதைப்போன்றும் ஆற்றுகையுடன் மொழிச்செழுமை ஒட்டுறவின்றி இருந்த ஒருசில பர்வையாளர்களிற்கும் தெளிவாக கேட்க முடியாதவை போன்று இருந்ததது.
பல்கலைக்கழகம் ஒழுங்கு செய்கின்ற போது ஒலி பற்றிய பிரக்ஞைஇன்றி  வெறுமனே இரண்டு ஒலிவாங்கிகளை முன் இரு மேடையில் வைக்கப்பட்டு ஆற்றுகை நிகழ்த்தப்பட்டது இது ஊர்களில் நாடகம் நிகழ்த்தப்படுகின்ற மனநிலைக்கு ஒப்பானதாக இருந்தது.
கூத்து என்பதே ஆடலும் பாடலும் இணைந்த வடிவமாகும்.  ஆடலும் பாடலும் நேர்த்தியான வகையில் வெளிப்படுத்தப்படுகின்றபோது தான் அவ்வாற்றுகை செழுமையானதாக தகவகை;கப்படும். மாறாக  இவ்வாற்றுகைளில் இரண்டும் வேறு வேறு தளங்களில் இருந்தமை குறிப்பிடத்தக்கது.
இத்தகைய பண்புகள் மரபு நிலைப்படுத்தப்பட்ட ஆற்றுகையின் ஆதாரசுருதியான அமிசங்கள் ஆகும்.
மரபின் உயிர்பு அவசியம் என வலியுறுத்துகின்றவர்கள் மரபின் அழிவனை புடம் போட்டு காட்டுபவையான அற்றுகையினை வெளிப்படுத்தியவை பற்றி சிந்திக்கப்பட வேண்டியது அவசியமானதாகும்
எமது அடுத்த தலைமுறைக்கு எமது மரபு வழி கலைவடிவங்களினை அறிகை நிலையாக கையளிக்கப்டவேண்டியது காலத்தின் தேவையாகும் எனினும் கனதியானதும் தரமான கலைவடிவங்களினையும் கையளிக்க வேண்டியது அதைவிட அவசியமானதாகும்.
வெறுமனே தனிமனிதர்களது இருப்பிற்கும் தாம் நினைப்பதும் தாம் அறிந்ததும் தம்மோடு இணைந்தவர்களது செயற்ப்பாடுகள் மட்டுமே கலைகள் எனவும் அவை மட்டுமே கலை வரலாறுகள் எனவும் தம்பட்டம் அடிப்பதற்காக நிகழ்த்தப்படுகின்ற கலைகள் எதிர்கால தலைமுறைக்கான சுயவெளிகளினை உருவாக்குவதற்கு பதிலான சுயமுனைப்பற்ற  செயல் வெளிகளினை ஏற்ப்படுத்தும் என்பது தவிர்க்க முடியாத கசப்பான  உண்மையாகும்
அன்று நிகழ்தப்பட்ட ஆற்றுகையில் கலந்து கொண்டவர்களில் பெரும்பாலானவர்கள்  ஆற்றுகை ஆரம்பமாகியவுடன் வெளியேற ஆரம்பித்தவர்கள் ஆற்றுகை நிறைவடையும் நேரத்தில் கனிசமானவர்கள் வெளியேறிவிட்டார்கள்.
இது ஆற்றுகையின் தர நிர்னயத்தினை பறைசாற்றியது. அதிலும் பாடத்தினை கற்ப்பவர்களே  பெரும்பாலும் இலக்கு பார்வையாளர்களாக இருந்தபோதிலும் அப்பார்வையாளர்களது ரசனைக்கு கூட தீனி போட முடியாத ஆற்றுகைகள் தான் அற்ப்புதமான ஆற்றுகைகளாக எமது சமூகத்தில் மிளிரப்போகின்றனவா? எனும் ஐயுறு வினா எழுவது தவிர்க்கவியலாது.
 ஆற்றுகையில் பாத்திரங்களது வெளிப்பாடு ஏனைய பாத்திரங்களிற்கான ஒட்டுறவு பாத்திரங்களுடான இனைவு, முழுமைப்படுத்தப்பட்டதான அம்சங்கள் என்பன ஆற்றுகையில் போதுமானதாக இல்லை இவ்நிகழ்த்துகைகள் பார்போருக்கு சிரிப்பினை எற்ப்படுத்தியதே தவிர அவர்களினை படைப்புடன் இணைத்து செல்வதற்கான எந்தவொரு சூழமைவினையும் ஏற்ப்ப்டுத்தவில்லை இது ஆற்றுகையாளர்களது பலவீனத்தையே எடுத்து காட்டுகின்றது.
ஒரு சமூகத்தின் உயிரான வடிவம் இன்னொரு இடத்தில் நிகழ்த்தப்படுகின்றபோது அதன் உயிர்ப்பினை பார்க்கின்ற சமூகம் உய்த்துனர்ந்து கொள்ள வேண்டும் மாறாக இங்கு அதற்கு மாறாக வெறுப்பு மனநிலையே காணப்பட்டது.
கலைப்படைப்பு என்பது பார்போரிடையே கனதியான தாக்கவன்மையினை ஏற்ப்படுத்த வேண்டும் இல்லையேல் அதனை அற்ப்புதமான கலைப்படைப்பாக கொண்டாடுவதில் எந்தவிதமான அர்த்தங்களும் இல்லை. ஆனால் இன்று மிகப்பெரிய அவலம் அதிகாரத்தில் உள்ளவர்களினால் கருத்தியல் கட்டமைக்கப்படுகின்றமையாகும்.
இதன் பதிவின்  நோக்கம் கலையினையோ கலைப்படைப்பாளர்களினையோ விமர்சிப்பதல்ல மாறாக நல்லதொரு கலைப்படைப்பினை பார்ப்தற்கான சூழலினை உருவாக்கி கொள்வதற்கான வழிவகைகள் எற்ப்படுத்தப்பட வேண்டும் என்பதாகும்.
அரங்க துறையில் ஈடுபடுபவர்களிற்கான அழைப்பு இருந்திருக்குமெனின் கூட அரங்கு நிறைந்த பார்வையாளரினை ஆற்றுகையில் கண்டு கொள்ள முடிந்திருக்கும்.
சமகாலத்தில் எத்தனையோ இளம் படைப்பாளிகள் நாடகத்துறையipனை கற்று வெளியேறிய மாணவர்கள் மற்றும் நிறுவனம் சார் செயற்பப்hட்டாளர்கள் என பலரும்எமது சமூகத்தில் ஆக்கபூர்வமான செயல்பாட்டில் ஈடுபட்டுக்கொண்டுள்ளனர். இத்தகையவர்களினையும் இணைத்துக்கொண்டு செல்வதே நாடகத்துறையின் செழுமையான அரங்க பாரம்பரியத்திற்கான வளர்ச்சிக்க வித்திடும் என்பது எதார்த்தமதாகும்.