என்னைப் பற்றி

ஞாயிறு, செப்டம்பர் 26, 2021

S.T.ARULKUMARAN
ஆணை (நாடக பனுவல்) நவீன நாடக செல்நெறி ஈழத்து நவீன நாடகத்தின் தந்தை என சிறப்பிக்கப்படுகின்ற கலையரசு சொர்ணலிங்கத்துடன் ஆரம்பிக்கின்றது. கலையரசு புராணியகதைகளை நாடகமாக நடித்தார். அவர் கலையுலகின் குருவாக போற்றப்படுகின்ற பம்மல் சம்பந்த முதலியாரின் நாடக பனுவல்களை கொண்டே நாடகம் நடித்ததாக குறிப்பிடுவார்கள்;. பனுவல் பம்மல் சம்பந்த முதலியாருடையதாயினும்; படைப்பாக்க முறைமை இவருடையது என்பது சிறப்பிற்குரியது. அவரது ஈழத்தில் நாடகமும் நானும் என் அவருடைய சரித நூலினை படிக்கின்றவர்களால் அவருடைய நாடக முறைமையினை புரிந்துகொள்ள முடியும். அவர் தொடக்கி வைத்த நாடக வடிவம் பின்வரும் காலங்களால் உயிர்ப்;;பு வடிவமாக முகிழ்ந்தெழுந்ததினை அரங்க வரலாற்றோட்டத்தில் தரிசனம் கொள்ள முடியும். அவர் தொடக்கிவைத்த நவீன நாடகங்களின் பாணியினை பின்பற்றி பலரும் நாடகங்கள் மேற்கொண்டதை அறியமுடிகின்றது. அவரது வழிப்பணத்தினை பின்பற்றி தனக்குரிய தனித்துவத்துடன் இயங்குகின்ற அரங்க புலமையானாக சிவ வல்லிபுரம் ஏழுமலைப்பிள்ளையினை குறிப்பிடின் மிகையில்லை என நினைக்கின்றேன். தேர்ந்த நடிகராக கனிப்பிற்;குரிய பனுவல் ஆக்குனராக நாடகங்களை நெறியாழ்கை செய்த நெறியாராக பல துறைகளில் தன்னை புடம்போட்ட படைப்பாளியாக அவர் விங்குகின்றார். பனுவல் ஆக்குனரின் மொழிச்செழுமை அரங்கின் நடிகனை உயிர்ப்புடன் வைத்திருக்க உதவும். பனுவல் ஆக்குனரே nநியாராகவும் வருகின்ற போது அது மேலும் செழுமைப்படும். ஆனால் இவர் முத்துறைகளில் விளங்குகின்றார் அதாவது பனுவல் ஆக்குனர் நெறியாளர் நடிகர். ஈழத்து அரங்க வரலாறு அதிகாரத்தின் வரலாறு என்பது பலருடைய குற்றச்சாட்டு. வரலாற்றினை எழுதுபவர் தன் சரிதத்தினை மட்டுமே பதிவுசெய்கின்ற அவலம் இன்றுவரை தீர்க்கப்படாது தொடர்கின்ற தொடர்கதையாகிக்போகின்றது. இத்தகைய திட்டமிடப்பட்ட புலமைச் சகதிக்குள் பல ஆளுமையாளர்கள் அடிபட்டுப்போவது தவிர்க முடியாததாக இருக்கின்றது. கடந்த 50 வருடங்களுக்கு மேலாக அரங்கத்துறை சார்ந்து இயங்கிக்கொண்டிருக்கின்ற ஆளுமை இவர் என்பதை இவரது அரங்க படைப்பாக்க அனுபவங்கின் வாயிலாக கண்டுணர்ந்து கொள்ள முடிகின்றது. இவரது முதல் நாடக நூலான மகுடபங்கம் எனும் நூலிற்கான முன்னுரையினை எழுதித்தருமாறு அப்போது கரைச்சி பிரதேச செயலகத்தின் கலாசார உத்தியோகத்தராக கடமையாற்றிய றஐPவன் அண்ணா கேட்டுக்கொண்டதிற்கினங்க இவரது பனுவலை வாசித்திருந்தேன். அப்போது அந்த பனுவல் வித்தியாசமான மன உணர்வினை ஏற்படுத்தியிருந்தது. அதை அவ் நூலின் முன்னுரையில் பதிவு செய்திருந்தேன். பின்னர் அவரால் வெளியிடப்பட்ட வீரகாவியம், சதுரங்கவேட்டை,சத்தியவேள்வி போன்ற பனுவல்கள் அரங்க புலத்திற்கு இன்னொரு பரிமானம். இன்;று வெளியிடப்படுகின்ற ஆணை வேறொரு தளத்தில் தரிசனம் கொள்ள வேண்டியதாக இருக்கின்றது. இந்நூலில் முன்னுரையில் இவ்வாறு பதிவு செய்கின்றார். ஆணைகள்–புராணங்கள், இதிகாசங்கள் வரலாறுகளில் மண்ணுக்காகவும் பொன்னுக்காகவும் பெண்ணுக்காகவும் இலட்சியத்தி;காகவும் ஏவப்பட்டுள்ளன.... அதனால் நடந்த போர்களும்,அழிவுகளும்,துரோகங்களும் பழிக்குபழிகளும் ஏரபளம்ஏராளம்.... தேசத்தின் ஆணைக்காக மக்களின் அவலத்தைப்போக் போக்க சுதந்திரத்திற்காக போராடியவர்களும் உண்டு. இந்தவகையில் தமிழினத்தின் இருப்பிற்கு இத்தகைய வரலாற்று நாடகங்கள் மிகவும் இன்றியமையாதனவாகும் என்றஅடிப்டையில் என்னை கவாந்த ஏழு வரலாற்று ஆணைகளையும் முடிவுகளையும் வரலாற்று நாடகமாக யாத்திருக்கின்றேன். (பக் iஎ) கடந்த காலத்தின் கதைகளே வரலாறாகின்றன. அவற்றை படைக்கின்ற போது வரலாற்று நாடகங்களாகின்றன. ஒரே தலைப்பில்பல கதைகளின் கதைகள். நல்ல முயற்சி. ஆணை! பல ஆணை தந்தை மகனுக்குவழங்கிய ஆணை! சிறிய வசனங்களின் ஊடாக உரையாடல் நகர்கின்றது சிறப்பு. மேடைக்குறிப்புக்கள் உள்ளது நன்று. எழுத்துப்பிரதி என்கின்ற பனுவல் வாசிப்பதை இலக்காக கொண்டு முன்னர் படைக்கப்பட்டிருந்தததை அறியமுடிகின்றது. ஆனால் இப்பனுவல் வாசிப்தை தாண்டி ஆற்றுகையினை இலக்காகக்கொண்டு படைக்கப்பட்டமை சிறப்பு. பின்னனிக்குரலின் ஊடாக சொல்லப்படுகின்றமை சிறப்பு. இது இவருக்கான தனித்துவமாக இருக்கின்றது.இவருடைய பல நாடகங்களில் இப்பண்பினை பார்த்திருக்கின்றேன். சிறிய சம்பவங்களை கதைகளாக்கியுள்ளார். நல்ல விடயம். ஆணை காட்சி -03 பைங்கிளி: அவர்களும் தமிழர்களே தானே? குலோத்துங்கன்: ஆம்? பைங்கிளி: அவர்களைக்கொன்ற குலோத்துங்கன் அவர்தம் பெண்டீரை கற்பழிக்காமல் விடுவரா? குலோத்துங்கன்:தவறு.போர் ஒருமுறை!அதில் கொலை ஒரு கலை,போர் புரியும் எல்லோருமே நெறியழிக்கும் முறையற்றவர்கல்லர்.மாணத்தை மதிக்கும் மறவர்களிலே குலோத்துங்கனும் ஒருவன். (பக்09) தந்தையின் ஆணை சந்த சிம்மன்: ராணாவை உறங்க விடக்கூடாது.... மேவாரை அழிய விடக்கூடாது. ராச புத்திரர்களின் வீரர் செறிந்த வரலாற்றை நாம் பாதுகாக்க வேண்டும். நான் ராணா பிரதாப்புக்கு கொடுத்த வாக்குறுதியை நிறைவேற்ற வேண்டும். மேவாரின் மகுடத்தை சலும்பரா வம்சத்தினர் தான் காப்பாற்றினார்களென்று சரித்திரம் உதயமாக வேண்டும். சத்ருஞ்சயன்-(வியப்புடன்) தந்தையே நீங்கள்இடும் உத்தரவு ஓர் ஆண்மகனுக்கு இடும் உத்தரவு அல்லவே. அதுவும் ஒரு வீரனுக்கு இடும் உத்தரவாகவும் தெரியவில்லை பக் 24 சத்ருஞ்சயன்-தந்தையே ஒருபெண்ணை இஷ;ட விரோதமாகத் தூக்கி வருவது மொலாயர்களுக்கு சகஜம் ஆனால் இந்து சமுதாயம் இதனை ஏற்குமா? (பக்25) சத்ருஞ்சயன்: சீறிக்கிழம்பும் மொகலாயக்குண்டுகளை சிதறடித்த புத்திரர்களின் வாள் என்கை வாள்,இதைநான் என் உயிர்போனாலும் கைவிடமாட்டேன்... தந்தையின் ஆணைக்காக உங்களிடம் ஒப்படைக்கின்றேன் (சத்ருஞ்சயன் இடைக்கச்சையில் இருந்த வாளை எடுத்துக்கொடுக்கின்றான்) பக் 26 சந்திரமதி: அது மாற்றாருக்கு ,என்னைஅடையளாம் என் பெண்மையைக்கவரலாம் என்றுதுணியும் கயவர்களுக்கு....நான் ராட்சசி.எண்கணவருக்கு அடிமை. (பக் 37) வேங்கையின் ஆணை சக்தி வர்மன்: தங்களுடைய சைவ சமயத்தை நான் பின்பற்றும் போது என் தம்பி விமலாதித்தன் சமணமதத்தின் சம தர்மத்தைபின் பற்றுகின்றான். இராசராசன்: எம்மதமும் சம்மதம் என்று நினைப்பவன் இராசராசன்;: அரசியலுக்கும் மத்திற்கும் எவ்விதச்சம்மந்தமும் இல்லை. பக்54 விமலாதித்தன்: வானத்தில் என் குறிக்கோளாக என் சந்திரகுலம் வையத்தில் என் முன்னால் சூரிய குலம்.. இரண்டும் ஒன்றுகலந்தால் வைகறை உதயம். இரண்டும் ஒன்றோடொண்றுபிணங்கினால் அதுவே அந்தி நேரம்.... பக் 56 விமலாதித்தன்:நண்பன் என்றால் உற்றூழியும் கை கொடுக்கும் நண்பன்! பகைவன் என்றால் உயிர் போகும் வரை பகைவன்! (பக்63) விமலாதித்தன்: வீரன் எங்கிருந்தாலென்ன? சாவின் முனையில் கூட அவன் சாந்தமாய் சிரிப்பான்! இரசாரராசன்: நீ தோற்றவன் என்பது நினைவிருக்கட்டும்! விமலாதித்தன்;:வெற்றியும் தோல்வியும் ஒருவர் பங்கல்ல ஜெயங்கொண்ட சோழரே! தற்காலிகமாய் நீர் ஜெயித்தீர் : அவ்வளவுதான் இரசராசன்:வேங்கி நாடு அடிமைப்பட்டது.அடிமைக்குவாய் வீரம் வேறா? விமலாதித்தன்;: அடிமை..அடிமை என் (பக்80-81) வெற்றியின்ஆணை பிண்ணனிக்குரல்- அலெக்சாண்டருக்கு முன்னும் பின்னும்சரித்திரத்தில் பல வீரர்கள் தோன்றியிருக்கிறார்கள் பல வீரதீரங்களை புரிந்திருக்கிறார்கள் ஆனால் உலகின் சிறந்த ராணுவத்தபதியாக ஏன் சரித்திரம் புகழ்கிறது. அது அவனது இலட்சியம். பாத்திரச்சிறப்பு உரையாடலுக்கூடாகசொல்லப்படுகிது. அலெக்சான்டர்- பயமா? மசிடோனிய வீரர்களுக்கு பயமா? அதுவும் இருளைக்கண்டு கடும் குளரைக்கண்டு ஒன்றைச் சொல்கிறேன் பயப்படுபவர்களுக்கு இதைபோய் சொல்லுங்கள் பயப்படுபவர்களுக்கு இதை சொல்லுங்கள் (பக் 96) அலெக்சாண்டர்:இருளையும் ,குளிரையும் ஆபத்தையும் எதிரிகளின் எண்ணிக்கையையும் பார்த்து இந்த அலெக்சாண்டர் பயப்படமாட்டான் தளபதி பர்மீனியா,நீங்கள் சொல்வதைக்கேட்டால் எனக்கு நகைப்பாக இருக்கிறது. (பக் 97) பாத்திரத்தின் நல்ல பண்பு சுட்டப்படுகின்றது. அலெக்சாண்டர்: கவலையே வேண்டாம் மன்னர் டேரியசிடம் இருந்த போது எப்படி வசதியாக வாழ்ந்தீர்களோ அதில்கொஞ்சமும் குறைவில்லாமல் வாழ்வதற்கு தேவையான எல'லா வசதிகளையும நான் அளிக்கிறேன். டேரியசின் தாய்: நன்றி அரசே அலெக்சாண்டரின் மான்பு எதிரியின் மனைவியை கூட கௌரவமாக நடத்துகின்ற பண்பு. தேசத்தின் ஆணை சேதுபதி: நீ என்னை கைப்பிடித்த பிறகு, நான் உன்னை கைப்பற்றிய பிறகு! துரோகத்தின் முடிவுகளும் துரோகிகளுக்கு வெற்றியை கொடுத்ததாக வரலாறுகளே இல்லை.. இலட்சிய வீரர்களின் தியாகம் வரலாற்றில் தோற்றதாக உலகமே கூறவில்லை. தேசத்தின் ஆணை -2 பிகாட்பிரபு-: ஓ மதம் பிடித்த பேச்சுப் பேசினீர்களா? வரலாற்றுத்திரிபுகளை குறிப்பிடுகின்றார். மருதநாயகம் பற்றிய குறிப்பு உள்ளது. மருதநாயகம்: ஆமாம்! அல்லாவின் அருளால் என்னை யாருமே வெல்ல முடியாதுஅத்தா, நான் தொழுகை செய்வதில் தவறாதவன்.என்திறமையில் அசையாத நம்பிக்கை உள்ளவன்... பக்163) பழிக்கு பழி நீயூமா புரூட்டாஸ் துரோகம் நம்பிக்கை துரோகம் ;. புரூட்டாஸ்: விதியே! உன்விருப்பத்தை நாங்கள் அறிவோம்.உங்கள் முறை வருகிறபொழுது நாங்கள் சாவோம்.அது எங்களுக்கு தெரிகிறது.ஆனால் அந்தக்கால எல்லையும் நீளும் நாடகளும். பக்175) காசியஸ்: ஏன்.. வாழ்வில் இருபது வருடங்களைக்குறைத்துக்கொள்பவன் இருபது வருட மரண பயத்தைக் குறைத்துக்கொள்பவன் ஆகிறான் (பக் 176) அன்ரனி: நேற்று சீசரின் சொற்கள் இந்த உலகத்தையே எதிர்த்து நின்றன. ஆனால் இன்று அவன் கீழே விழுந்து கிடக்கின்றான்.அவனுக்கு மரியாதை செலுத்த இன்றுயாருமே இல்லை.நண்பர்கறே! உங்களுடைய மாணத்தையும் இதயத்தையும் கலக்கி ஒர புரட்சிக்குஉங்களைத் தூண்டுவேனாயின்... பக்189) அன்ரனி......... பரூட்டாஸ் அன்பில்லாமல் குத்தினாhனா? இல்லையா? என்று பார்ப்பதற்கு இரத்தம் அவ்வளவு வேகமாக வெளிவந்திருக்கிறது போலும். ................................................................................................................ இரத்தவெறி பிடித்த துரோகமே எம்மை வென்றது (பக் 192) காட்சி விரிகின்றது .மனக்கண்முன் வருகின்றது. நல்ல படைப்பு அதுதான். படைப்பை அவரவர் அவர்களுடைய கோணத்தில் வாசிக்கலாம் அதற்கு இப்பனுவல் உதவி செய்கின்றது. காலத்திற்கு ஏற்றவகையில் குறுகிய நேரத்திற்கு தயாரிக்கக்கூடிய நாடகங்கள்.
ஆற்றுகையாளராகிய அரங்க புலமையாளன் விந்தன் சேர். வாழ்வு உன்னதமானது. வாழ்வனுபவத்தின் ஊடாக பெற்றுக்கொள்கின்ற உறவுகள் பெறுமதியானவை. நாம் இயங்குகின்ற இயங்குவிசையினுடான நாம் பயனிக்கின்ற பயணங்கள் பவித்திரமானவை. அப்பயணங்களில் எம்முடன் இணைகின்றவர்களின் ஊடாக கற்றுக்கொள்கின்ற, பெற்றுக்கொள்கின்ற அறிகை மிக ஆழமானது. அரங்க துறைசார்ந்த இயங்குதளத்தில் நாம் இணைந்து பயணித்தவர்களிடம் கற்றுக்கொண்ட பொறிமுறை எமது அரங்க செயற்பாடுகளிற்கு உதவுகின்றன. அந்தவகையில் மூத்த அரங்காற்றுகையாளர்கள் எம்முடன் பழகுகின்ற முறை அவற்றிற்கூடான அவர்களின் மீது நாம் காட்டுகின்ற பாசம் அவர்கள் எம்மை ஆசுவாசிக்கின்ற முறை முதன்மையானவை. இப்பின்னனியில் ஆற்றுகையாளனாகிய அரங்க புலமையாளனாக விந்தன் சேர் விளங்குகின்றார் எனில் மிகையில்லை. இவர் மிகத்தோர்ச்சியான ஆற்றுகையான்.தான் ஏற்கின்ற பாhத்திரத்தினை தனது தனித்துவத்தினுடாக அப்பாத்திரத்திற்கு புதிய பரிமானம் கொடுக்கின்றவராக அறிந்திருக்கின்றேன். மண்சுமந்த மேனியர் நாடகத்தில் இவரது ஆற்றுகை பற்றி பலரும் சொல்லிக்கேட்டிருக்கின்றேன். நாடகம் சிலருக்கு பெழுதுபோக்கு.நாடகம் நடித்தல் சிலருக்கு வாழ்க்கை. இவருக்கு அரங்கு வாழ்க்கை. அரங்க சூழலை தனது ஆளுமை திறத்தினால் கட்டமைக்கின்ற திறமையினை கண்டு வியந்திருக்கின்றோம். இவர் நல்லநடிகன், நெறியாளர், நல்ல அரங்கப்பாடகர். முன்பள்ளி நிகழ்வொன்றில் இவரது நெறியாழ்கையில் நாடகஅளிக்கையொன்றினை கிளிநொச்சியில் பார்ப்பதற்குரிய வாய்ப்பு ஏற்பட்டது. நடைமுறைப்பிரச்சினையினை கலைஅழகியாக்கியிருந்த படைப்பாக்ககட்டமைப்பு மிககச்சிதமாக இருந்தது. நாடகத்தின் நிறைவில் வருகின்ற பாடல் இவரது குரலில் கேட்டபோது நாடகத்தின் முழு உயிர்ப்புவிசையினையும் உய்த்துனர்ந்து கொள்ளக்கூடியதாக இருந்தது. இவர் அரங்கில் நீண்ட நெடிய அனுபவத்திரட்சியினை கொண்ட அரங்க படைப்பாளி. இவர் கல்விப்புலம் சாhந்த வகையில் இயங்கியலாலனாக இருந்தபோது இத்துறைசார்ந்தவகையில் கனதியான மாற்றத்தினைகொண்டுவந்திருந்தார். பிள்ளை அபிவிருத்திக்கான உதவிக்கல்விப்பணிப்பாளாராக கடமையாற்றிய இவர் தனது இயங்கியல் தளத்தின் மூலம் அத்துறைக்கு புதிய பரிமானத்தினையும் காத்திரமான உந்து விசையினையும் வழங்கியிருந்தார். அம்மாற்றம் சாத்தியமானதிற்கு காரனம் அவரது அரங்க ஆளுமைத்திறன்,எடுக்கின்ற காரியத்தினை சிறந்த முறையில் ஆற்றிமுடிக்கவேண்டும் எனும் அவா,சமூகமாற்றத்தினை விரும்புகின்ற மான்பு என்பன இவற்றை சாத்தியமாக்கியதாக உணர்கின்றேன். பிள்ளையினது வளர்ச்சியில் அடிப்படையாக இருக்கின்ற காலம் முன்பள்ளிக்காலமாகும். இக்காலத்து இயங்குப்பொறிமுறையாளர்களை வளப்படுத்தி ,பிள்ளைகளது இயங்கு திறனனை உசுப்பிவிடுவதற்கான ஆசிரியஉருவாக்குனர்களை இவர் தகவமைத்திருந்தார் என்பது வெள்ளிடை. இவர் அரச ஊழியனாக வயதின் பிரகாரம் ஒய்வுபெறுகின்றார்.இல்லை இல்லை அரச பணியில் இருந்து விலகிக்கொள்கின்றார் என்பதுபொருத்தமாக இருக்கும். இனிவரும் காலங்களில் ஓய்விற்கு ஓய்வு கொடுத்து முழு நேர அரங்கவியலாளனாக இயங்குவதற்கும் அவற்றினூடே எமது சமூகம் எழிற்சிபெறவும் நல்வாழ்த்துக்கள். (எஸ்.ரி.அருள்குமரன்)
(எஸ்.ரி.அருள்குமரன் ) உளச்சிகிச்சையாக அரங்கு ஓர் அறிமுகம் நாடகம் எனும் கலை வடிவம் மனித வாழ்வில் பிரிக்க முடியாத வடிவமாக விளங்குகின்றது. மனிதர்களது வலி, பிரச்சினை,என்பவற்றினை மட்டும் பேசி நிற்க்காது அவர்களது உள விடுதலைக்கான மார்க்கத்தினையும் கோடிலியாக பேசி நிற்கின்றது. நாடகம் பல வகைகளில் விரிந்தும் எல்லையில் பரந்தும் உள்ள கலைவடிவம் ஆகும். ஈடுபடுபவர்களிடையே ஆற்றல்களினை விதைப்பதிலும் அவர்களினை சுயமுனைப்புள்ளவர்களாக்கி சுதந்திர செயலாளிகளாக தகவமைப்பதில் இக்கலைக்கு கனதியான வகிபங்கு உண்டு. நாடகம் நடிப்பவர்களிடையேயும் பார்ப்பவர்களிடையேயும் உறவு வலுப்பெறுகின்றது. இவ்வுறவு பல்வேறு வகைகளில் உற்சாகம் கொள்ளவும் பார்ப்பவர்கள் தம்மை தகவமைத்து கொள்ளவும் துணை செய்யும். கலை எனும் போது மனித உணர்வுகளின் வெளிப்பாடு என பொதுவாக குறிப்பிடுகின்றனர்.அரங்கும் உணர்வுகளினை பகிர்வதற்கான களமாக விளங்குகின்றது. நாடகம்,அரங்கு எனும் சொற்;பதங்கள் அர்த்தம் பொதிந்தவையாக காணப்படுகின்றன. நாடகம் எனும் சொல்லினை ஆங்கிலத்தில் னுசுயுஆயு எனவும் அரங்கு எனும் சொல்லினை வுர்நுயுவுசுநு எனவும் அழைப்பர். னுசுயுஆயு எனும் சொல்லானது கிரேக்க வேரடிச்சொல்லான னுசுயுஆநுNழுN எனும் சொல்லிருந்து இருந்து தோற்றம் பெற்றதாகவும் இதன் பொருள் ஏற்க்கனவே நிக்த்தப்பட்டதொன்றாகும் எனவும் வுர்நுயுவுசுநு எனும் சொல்லானது வுர்நுயுசுவுநுழுN எனும் சொல்லிருந்து தேற்றம் பெற்றதாகவும் இதன் பொருள்பார்கக்கும் இடம் என்பதாகவும் பொருள் கொள்ளப்படுகின்றது. தமிழக தமிழ அரங்க வரலாற்றில் சிறப்பிக்கப்படுகின்ற கலித்தொகை காலத்தில்; சிவன் ஆடியதாக குறிப்பிடப்படுகின்ற பாண்டரங்கம் என்பதினை பாண்டு 10அரங்கம் என வகுத்து நோக்குகின்றனர். பாண்டு என்பது வெண்மையினையும் அரங்கம் என்பது இடத்தினையும் குறித்து நிற்க்கின்றது. அரங்கு என்பது சாதாரன வாழ்வில் இருந்து வேறுபட்டதாகவும் சாதாரண வாழ்வில் வெளிப்படுத்த முடியாதவற்றினை வெளிப்படுத்துவதற்கான களமாகவும் விளங்குகின்றது. நாடகம் என்பது குறித்த இடத்தில் நிகழ்த்தப்படுகின்றது என்பதாகும். நிகழ்த்தப்படுகின்றது என்பதில் பார்க்கப்படுவதற்கான ஒண்று காணப்படுகின்றது.இங்கு பார்த்தல் என்பதில் பார்ப்போன் வெறுமனே நாடகத்தினை பார்க்கின்றான் என்பதனை விட தன்னை,தனது உணர்வினைதனது மனப்பதிவுகளினை கண்டு கொள்கின்றான் என்பதே பொருளாகும். இவ்வாறு கண்டு கொள்வதினால் தனது பலம், பலவீனம் என்பவற்றினை இனம் கண்டு தனது பிரச்சினையில் இருந்து தன்னை விடுவித்து கொள்வதற்கான மார்க்;கத்தினை இனம் காண்கின்றாhன். அரங்கு ஆரம்பகாலத்தில் பொருள் கொள்ளப்பட்ட முறையில் இருந்து நவீன கோட்பாட்டாளர்களினால் அவர்கள் பொருள் கொள்ளப்படுகின்ற நோக்கு நிலைக்கு ஏதுவான செயல்தளத்தில் வைத்து நோக்கும் போது பார்க்கும் இடம் என்பது தன்னை கண்டு கொள்ளல் அல்லது தன்னை அறிதல் என பொருள் கொள்ளப்படுகின்றது. இங்கே உணர்வு ரீதியான பரிமாறல்கள் இடம் பெறுவதினால் உணர்ச்சி வெளியேற்றப்பட்டு அதற்கூடாக ஒருவன் தன்னை அறிந்து கொள்வதற்கான வாய்ப்பு ஏற்ப்படுகின்றது.ஒருவன் தன்னை அறிந்து கொள்வதன் மூலம் தன் சமூகத்தினை அறிந்து கொள்ளக்கூடியவனாக மாற்றமடைகின்றான்.இதனடிப்படையில் அரங்கு அவனை சுயமுனைப்புள்ளவனாக்குகின்றது. நாடகம் என்பது மோதுகை நிலையில் சித்தரித்து காட்டுவது எனக்குறிப்பிடுவர் மோதுகை எனும் போது முரன்படுதலினை குறிக்கும்முரனானது தன்னோடு,பிறரோடு,இயற்கையோடு,கடவுளோடு, என பல தளங்களில் இயங்குதலினை காணலாம். இம்முரன்பாடு பார்ப்போரிடையே ஏதாவது உளக்கிளறல்களினை ஏற்படுத்தி அவர்களிற்;கு விடுதலை அளிக்கின்றது. விடுதலை அளிக்கும் பண்பு காலம் காலமாக இடம்பெற்று வருவதினை அவதானிக்கலாம்.அரங்கானது பார்ப்பேரது ஆண்மாவினை ஊடறுத்து அவனது விடுதலைக்கான வழியினை ஏற்படுத்தி விடுகின்றது.அவனது இயங்குதலில் அவனுக்குள்ள பிரச்சினையினை அறுத்தெறிவதில் அதிக முனைப்புக்காட்டுகின்றது. உளவிடுதலை என்பது ஒருவனது மனதிலே குட்டை போல் தேங்கிக்கிடக்கின்ற பிரச்சினைகளிற்கான தீர்வினை முன்வைக்க முனையும் செயற்;பாடாகும் இத்தகைய செயற்பாடுகளினை நாடகத்தின் தோற்றத்தில் விஞ்ஞான பூர்வமாக ஏற்றுக்கொள்ளப்படுகின்ற சடங்கில் இருந்து தோற்றம் பெற்றது எனும் கோட்பாட்டில்; காணமுடியும். சமூகத்தில் மன நோயாளர்களின் உருவாக்கத்தினை சடங்குகள் தடுப்பதாக சிக்மன் ப்ரெய்ட எனும் உளவியல் அறிஞர் குறிப்பிடுகின்றார். அரங்கும் பிரச்சினை உடையவர்கள் கூடுதலும் அப்பிரச்சினையினை தீர்த்துக்கொண்டு தமது வாழ்வியல் நீரோட்டத்தில் இணைவதற்கான வாய்ப்பினை ஏற்ப்படுத்துகின்றது. சடங்குகளிலே காணப்பட்ட உளவிடுதலை செயற்;பாடுகளினை நோக்குவோமாயின் சங்க காலத்தில் இடம்பெற்ற வேலன் வெறியாடல்' எனும் சடங்கானது நிகழ்த்தப்படுகின்ற இடமாக மலைஅடிவாரம் ஃ பெண்ணினது வீட்டு முற்றம் காணப்படுகின்றது.மலை அடிவாரம் எனும் போது வி;த்தியாசமான இடமாக காணப்படுகின்றது. இச்சடங்கு நிகழ்த்தப்படும் நோக்கமாக காதல் நோயினால் பீடிக்கப்பட்ட பெண்ணினை வேலன் என்பவன் உருவேறி(வெறியாடல்) ஆடுவதன் மூலம் தீர்க்கப்படுகின்றது. இங்கு பெண் கொண்டுள்ள நோய்தீர்க்கப்படுவதாகவும் அந் நோய்தீர்கப்படுதலின் ஊடாக சமூக இசைவாக்கத்திற்கு உட்பட்டு சமூக இயங்கியல் வெளியில் அப்பெண் இணைந்து கொள்வதாகவும் அதற்காகவே அச்சடங்காசார செயற்;பாடுகள் மேற்கொள்ளப்பட்டமையினை காணக்கூடியதாக உள்ளது. அரங்க வரலாற்றில் கிரேக்க அரங்கில் கதாஸிஸ் எனும் கோட்பாடும் பரத முனிவர் எழுதியதாக குறிப்பிடப்படுகின்ற கீழைத்தேயநாடக நூலான நாட்டியசாஸ்திரத்தில் ரசக் கோட்பாட்டின் ஊடாக உணர்ச்சி வெளியேறல்கள் பற்றி குறிப்பிடப்படுகின்றது. கிரேக்க அவலச்சுவை (வுசயபநனல) நாடகத்தில் பார்ப்போரிடையே உணர்ச்சி செப்பம்ஃ உணர்ச்சி வெளியேறுகை (ஊhயவாயசளளை) ஏற்பபடுவதாக அரிஸ்ரோட்டில் குறிப்பிடுகின்றார். 'அவலச்சுவையை பரிவும் பயமும் என்பார்அரிஸ்ரோட்டில். பரிவு, பயம் என்ற உணர்வு நிலையின் ஊடே தேங்கி கிடக்கும் மனவெழுர்ச்சி உணர்வு வெளியேற்றப்பட்டு உள்ளம் தூய்மைப்படும் என்பார். இதனை இணக்கம் ஃ சமரசம் என்றார் கெகல்.அதாவது வாழ்வின் தற்காலிகமான இசைகேடு, நிரந்தர இசைவு நிலைக்கு மாற்றப்படுதல் என பொருள் கொள்ளலாம்.மரணத்தின்; முன்னிலையில் வாழும் மன உறுதியை தருவது எனவும்கொள்ளலாம். இந்த உறுதி அவலச்சுவையில் மீள வலியுறுத்தப்படுவதன் மூலம்வற்றாத உறுதியாக மாறுகின்றது'1 இவ்வகையில் பார்ப்போரிடையே மாறுதலினையும் உறுதியினையும் கிரேக்க நாடகங்கள் அளித்தது.இது உளவிடுதலைக்கான பண்பாகும்காரணம்,பயம்,பீதியில் இருந்து அவனை விடுதலை அளித்தது. மனிதர்களிற்கு அவர்களது வெற்றிக்கு தடையாக உள்ள விடயம் பயமும் வெட்கமும் எனில் மிகையில்லை.இதனடிப்படையில் பயத்தினை எதிர்கொண்டு அதனை வெற்றி கொள்பவன் வாழ்வினை வெற்றி கொள்கின்றான் எனும் அடிப்டையில் இந்நாடகங்களது அடிப்படைப்பண்புகளாக மனிதர்களினை பயம் பீதியில் இருந்து விடுதலை பெற செய்வதாக காணப்படுகின்றது. '..........தனது வாழ்வை ஆளுகை செய்யும் புறச்சக்திகளோடு இவை மனிதனிலும் மேலானவை- போராடி நின்று தனது உணர்வுகளினையும்,நியாயங்களினையும் வெளிப்படுத்திய கிரேக்கத்து நாடகம் ஆடலையும் , பாடலையும்,ஓதலையும் தனது பிரதான வெளிப்பாட்டு பக்கமாக கொண்டது.2' ஆடல்,பாடல் பண்புகள் உளச்சிகிச்சை அளிப்பதில் முக்கிய பண்பாக காணப்படுகின்றது. சிகிச்சை எனும் சொல்லானது குணப்படுத்தல்(ர்நயடiபெ) எனப்படுகின்றது. உளச்சிகிச்சை என்பது(Pளலஉhழவாநசயிhல) உள்ளத்தில் எற்ப்படும் பிரச்சினையினை குணப்படுத்தல் எனப்பொருள் கொள்ளப்படுகின்றது. மேலைப்புலத்தில் து.டு.ஆழுசுழுNழு வியன்னா தன்னெழுச்சி அரங்கு (ஏiநெயெ வுhநயவசந ழுக ளுpழயெநெவவைல) என்பதன் மூலம் உளச்சிகிச்சையினை அளித்திருப்பதினை அரங்க வரலாற்றில் இருந்து கண்டு கொள்ளக்கூடியதாக உள்ளது. உளமறி நாடகம் தொடர்பாக து.டு.ஆழுசுழுNழு குறிப்பிடும் போது '...மனிதனின் இனம் தெரியாத மனவுலகின் சிக்கல்களை கண்டு பிடிப்பதற்கான ஒரு சிறந்த ஊடகம்..'3 எனக்குறிப்பிடுகின்றார். சிகிச்சை நாடகத்தினை பொறுத்தவரையில் பிரச்சினைக்கு உட்படுத்தப்படுபவரின் (Pசழவயபழnளைவ) வெளிப்படையான நடத்தைகளை அவதானித்து பகுப்பாய்வு செய்து இவ்வெளிப்படையான நடத்தையில் இருந்து பிரச்சினைக்கு உட்படுபவரின் மன நிலைச்சூத்திரங்களினை அறிய வேண்டும் இதனை அறிய தூண்டுகின்ற அரங்கவியலாளராக (குயஉடைவையவழச) அமைகின்றார். ஒரு உளமறி நாடகத்தை பொறுத்தவரையில் சாராம்சம் கனவுகளே எனவே இது ஒரு நனவிலி; மனத்தின் இயங்கியலாக உள்ளது'...4 து.டு.ஆழுசுழுNழு வினது அரங்கில் நடிகன் பார்வையாளர் என்ற வேறுபாடு இல்லாத சூழல் ஏற்படுத்தப்படுவதுடன் புதிதளித்தல் மூலம் பங்குபற்றுனர்களை ஆக்க கர்த்தாவாக்குகின்றார். ஈழத்தமிழரங்கினை பொறுத்தவரையில் 90 களில் தொண்ணுறுகளில் இச்செயற்ப்பாடுகள் பெருமளவில் வெளிக்கிளம்புகின்றன. இதன் தொடக்க புள்ளியாக குழந்தைம.சண்முகலிங்கம் விளங்குகின்றார். இவரது அண்ணையிட்டதீ,வேள்வித்தீ என்பவற்றினை முதன்மையாக கொள்ளலாம். சிகிச்சை அரங்கின் மையப்பொருளாக சித்திரவதைகள் வன்முறைப்படிமங்கள், மனக்குமைச்சல்கள் வெளிப்படுத்தப்படுகின்றது. யுத்த நெருக்கீடு ஏற்;படுத்திய தாக்கத்தினை அனடனையிட்டதீயும் ,வேள்வித்தீ ஒரு பெண்ணின் பாலியல் பலாத்காரத்தினையும் பேசு பொருளாக கொண்டிருந்தது. க. சிதம்பரநாதன் தனது அரங்க செயற்ப்பாடுகளினை மேற்கொண்டிருந்தார். '.... சிதம்பரநாதன் நாடக பட்டறைகளினையே நாடகமாக்கி வருகின்றார்.உளத்தாக்கத்தால் பாதிக்கபட்ட இளைஞர்கட்கு நோய் மருந்தாக(வுhநசயிhல) இவரது நாடக பட்டறைகள் அமைகின்றன.அதன் காரனமாக மீண்டும் சடங்கிற்கு செல்லல் என்ற கொள்கை இவரிடமும் இவரது குழுவினரிடமும்உண்டு.சடங்கு நிலையில் தான் மனிதர் பேதமின்றி இணைவர் அந்நிலையில்;தான் உள அமைதி சாத்தியம் என்கிறார்கள் தனது ஒவ்வொரு நாடக பட்டறையினையும் ஒவ்வொரு நாடகம் என சிதம்பரநாதன் கூறுவார்'5. உளத்தாக்கத்தில் பீடிக்கப்பட்டவர்களினை அவ்வடுக்களில் இருந்து விடுவிப்பதற்கு அரங்கினை கருவியாக கையாழ்கின்றார். இவர் அரங்கு பற்றி குறிப்பிடும்போது '.... அரங்கு எண்டு நினைக்கிறது வந்து ஒரு பேருணச்சியை னுநயட பண்ணி பாக்கிறதுக்கான ஒரு இடம் வாழ்கையில செய்ய முடியாத இடம்பெற முடியாத ஒரு பேருணர்ச்சியை னநயட பண்ணிப்பக்கிறதக்கான ஒர் இடம்.' 6 உணர்ச்சியினை னுநயட பண்ணி பார்ப்பதற்கான இடம் எனும் போது உணர்ச்சிகளினை னநயட பன்னுவதன் ஊடாக உளச்சமநிலையினை பெற்றுக்கொள்ள முடியும் ......போர்ச்சூழலில் ஏற்பட்ட மன அழுத்தத்தினை தீர்ப்பதற்கான சிகிச்சை அரங்கின் ஒவ்வொரு கட்ட வளர்ச்சி படி நிலையிலும் காத்திரமான பங்களிப்பை சிதம்பரநாதனின் அபார கற்பனைத்திறனும்கலைஞானமும் வழங்கி நிற்கின்றது. உசல ழக யளயை நடவடிக்கைகளில் பெற்ற தொடர்புகளும் மௌனகுரு மூலம் பெற்றுக்கொண்ட கூத்தாட்ட நுட்பங்களும் சிதம்பரநாதனுடன் ஒன்றினைய கூத்தாட்ட நுட்ப முறைகளினூடே உளச்சிகிச்சை அரங்காக சடங்கு நிலை நோக்கி நகர்த்தி வருகின்றார். அரங்கில் இருந்து மக்களை நோக்கி தெருவெளி நகர்த்த சிதம்பரநாதனின் அரங்க முயற்;ச்சிகள் ஒவ்வெண்றும் சமூக மாற்றத்தை நோக்கிய ஒரு தொடர்பியற்சாதனமாக அச்சம், பயம், மௌனம் ,தாழ்வுமனப்பான்மை போன்ற மனஅழுத்தங்னளை நீக்கி தனக்குள் தான் ஒடுங்கி புதையுண்டு மௌனித்துப்போயிருக்கும் மௌனப்பண்பாட்டை தகர்க்கும் உளமறி சிகிச்சை அரங்காக பரினமித்துள்ளது எனலாம்.'7 இத்தகைய செயற்;பாடு உளப்பிரச்சினையினை தீர்ப்பதில் கூடிய கவனம் செலுத்துகின்றது சுனாமி எனும் அழிப்பேரலையின் தாக்கத்தில் கண்டுண்டு போயிருந்த மக்களை விடுவிப்பதில் கலாநிதி சிதம்பரநாதனின் வழிப்படுத்தலில் அவல நீக்க ஆற்றுப்படை அரங்கு எனும் செயற்பாடு நிகழ்த்தப்பட்டது.சான்றாக அச்செயற்ப்பாடடின் போது முதியவர் ஒருவர் குறிப்பிடும் போது 'உள நோய்க்கு மருந்து' என குறிப்பிட்டார். சுனாமி அவல நீக்க ஆற்றுப்படை அரங்கச்; செயற்பாட்டில் பல்வேறு மாறுபட்ட அநுபவங்கள் ஏற்பட்டதுடன் உளச்சிகிச்சை அல்லது ஆற்றுப்படுத்தல் எனும் தளத்தில் அம்மக்கள் கொண்டிருந்த பயம், பீதி என்பவற்றினை போக்குவதற்கான செயற்தளங்கள் மேற்க்கொள்ளப்பட்டதுடன் அம்மக்களிடம் காணப்பட்ட ஆற்றாமை, இயலாமை ,நம்பிக்கையீனங்களினை இல்லாதொழிப்பதற்கும் புதிய எண்ணங்களினை விருத்தியாக்குவதற்கும் தமது கடந்த வாழ்வினை மீளவும் கட்டமைத்து கொள்வதற்கான நம்பிக்கையினை ஊட்டுவதற்குமான செயல்தளங்கள் மேற்கொள்ளப்பட்டன. இத்தகைய செயற்பாடுகள் அவர்களிடையே மாற்றத்தினையும் எதிர்காலம் தொடர்பான அவநம்பிக்கை போக்கப்பட்டு நம்பிக்கையோடு எதிர்காலத்தினை எதிர் கொள்வதற்கான தன்னம்பிக்கையினை அளித்தது. மேலும் எதிர்காலத்தின் சிற்பிகளாக மதிக்கப்படுகின்ற சிறுவர்களது உள மேம்பாட்டிற்கும் அவர்களது ஆளுமை மேம்பாட்டிற்கும் அடிப்படையிலான வகையில் அரங்க செயற்பபாடுகள் மேற்கொள்ளப்பட்டன. பலரது பார்வையில் விமர்சனரீதியாக காணப்படுகின்ற போதிலும் மன நல மருத்துவரின் பார்வையில் ஏற்றுக்கொள்ள கூடிய விடயமாக காணப்படுகின்றது இதற்க சான்றாக 'அரங்க செயற்பாட்டை ஆற்றுப்படுத்தலின் அங்கமாக மேற்க்கொள்ளலாம் அல்லது ஒரு உணர்ச்சி வெளிப்படுத்தல் முறையாக செயற்ப்படுத்தலாம் அரங்க செயற்பாட்டை உளச்சிகிச்சைக்குரிய அரங்காகவும் மாற்றிக்கொள்ளலாம்....'8 இப்பகைப்பலத்தில் நோக்ககின்ற போதுஅரங்கு எனும் தாக்க வன்மையான சாதனமானது பல் துறைப்பரிமானத்தினை உடையதாகவும்அப்பரிமானத்தில் உள விடுதலைக்கான பணியினையும் தன்னகத்தே கொண்டுள்ளது. அடிக்குறிப்புக்கள் 1. சண்முகலிங்கம்,ம.(2003) நாடகவழக்கு (அரங்க கட்டுரைகள்) தொகுப்பாளர் ஸ்ரீகனேசன் கந்தையா,இனுவில் இலக்கியவட்டம்,பக்11 2. மே.கு.நூ பக்.23 3. ரவிச்சந்திரன்,எம்.பி.(2008) கூத்து முறைமையும் கூத்து வழிவந்த அரங்க வளர்ச்சிகளும்,மட்டக்களப்பு,எம்.பி.ஆர்வெளியீடு பக்178 4. மே.கு.நூ பக்178 5. மௌனகுரு,சி.(2003) அரங்கியல்,கொழும்பு,பூபாலசிங்கம் புத்தக சாலை பக்187 6. பொண்ராசாஅன்ரன்,ஆதவன்(நேர்காணல்) சிதம்பரநாதன் (2004) கட்டியம் பக் 74-75 7. ரவிச்சந்திரன்,எம்.பி.(2008) கூத்து முறைமையும் கூத்து வழிவந்த அரங்க வளர்ச்சிகளும்,மட்டக்களப்பு,எம்.பி.ஆர்வெளியீடு பக்181 8. சிவதாசன் ,எஸ். (2009) நலமுடன்(மனநல மேம்பாட்டு கட்டுரைகள்)கொழும்பு, பூபாலசிங்கம் புத்தக சாலை,பக்155