என்னைப் பற்றி

ஞாயிறு, செப்டம்பர் 26, 2021

ஆற்றுகையாளராகிய அரங்க புலமையாளன் விந்தன் சேர். வாழ்வு உன்னதமானது. வாழ்வனுபவத்தின் ஊடாக பெற்றுக்கொள்கின்ற உறவுகள் பெறுமதியானவை. நாம் இயங்குகின்ற இயங்குவிசையினுடான நாம் பயனிக்கின்ற பயணங்கள் பவித்திரமானவை. அப்பயணங்களில் எம்முடன் இணைகின்றவர்களின் ஊடாக கற்றுக்கொள்கின்ற, பெற்றுக்கொள்கின்ற அறிகை மிக ஆழமானது. அரங்க துறைசார்ந்த இயங்குதளத்தில் நாம் இணைந்து பயணித்தவர்களிடம் கற்றுக்கொண்ட பொறிமுறை எமது அரங்க செயற்பாடுகளிற்கு உதவுகின்றன. அந்தவகையில் மூத்த அரங்காற்றுகையாளர்கள் எம்முடன் பழகுகின்ற முறை அவற்றிற்கூடான அவர்களின் மீது நாம் காட்டுகின்ற பாசம் அவர்கள் எம்மை ஆசுவாசிக்கின்ற முறை முதன்மையானவை. இப்பின்னனியில் ஆற்றுகையாளனாகிய அரங்க புலமையாளனாக விந்தன் சேர் விளங்குகின்றார் எனில் மிகையில்லை. இவர் மிகத்தோர்ச்சியான ஆற்றுகையான்.தான் ஏற்கின்ற பாhத்திரத்தினை தனது தனித்துவத்தினுடாக அப்பாத்திரத்திற்கு புதிய பரிமானம் கொடுக்கின்றவராக அறிந்திருக்கின்றேன். மண்சுமந்த மேனியர் நாடகத்தில் இவரது ஆற்றுகை பற்றி பலரும் சொல்லிக்கேட்டிருக்கின்றேன். நாடகம் சிலருக்கு பெழுதுபோக்கு.நாடகம் நடித்தல் சிலருக்கு வாழ்க்கை. இவருக்கு அரங்கு வாழ்க்கை. அரங்க சூழலை தனது ஆளுமை திறத்தினால் கட்டமைக்கின்ற திறமையினை கண்டு வியந்திருக்கின்றோம். இவர் நல்லநடிகன், நெறியாளர், நல்ல அரங்கப்பாடகர். முன்பள்ளி நிகழ்வொன்றில் இவரது நெறியாழ்கையில் நாடகஅளிக்கையொன்றினை கிளிநொச்சியில் பார்ப்பதற்குரிய வாய்ப்பு ஏற்பட்டது. நடைமுறைப்பிரச்சினையினை கலைஅழகியாக்கியிருந்த படைப்பாக்ககட்டமைப்பு மிககச்சிதமாக இருந்தது. நாடகத்தின் நிறைவில் வருகின்ற பாடல் இவரது குரலில் கேட்டபோது நாடகத்தின் முழு உயிர்ப்புவிசையினையும் உய்த்துனர்ந்து கொள்ளக்கூடியதாக இருந்தது. இவர் அரங்கில் நீண்ட நெடிய அனுபவத்திரட்சியினை கொண்ட அரங்க படைப்பாளி. இவர் கல்விப்புலம் சாhந்த வகையில் இயங்கியலாலனாக இருந்தபோது இத்துறைசார்ந்தவகையில் கனதியான மாற்றத்தினைகொண்டுவந்திருந்தார். பிள்ளை அபிவிருத்திக்கான உதவிக்கல்விப்பணிப்பாளாராக கடமையாற்றிய இவர் தனது இயங்கியல் தளத்தின் மூலம் அத்துறைக்கு புதிய பரிமானத்தினையும் காத்திரமான உந்து விசையினையும் வழங்கியிருந்தார். அம்மாற்றம் சாத்தியமானதிற்கு காரனம் அவரது அரங்க ஆளுமைத்திறன்,எடுக்கின்ற காரியத்தினை சிறந்த முறையில் ஆற்றிமுடிக்கவேண்டும் எனும் அவா,சமூகமாற்றத்தினை விரும்புகின்ற மான்பு என்பன இவற்றை சாத்தியமாக்கியதாக உணர்கின்றேன். பிள்ளையினது வளர்ச்சியில் அடிப்படையாக இருக்கின்ற காலம் முன்பள்ளிக்காலமாகும். இக்காலத்து இயங்குப்பொறிமுறையாளர்களை வளப்படுத்தி ,பிள்ளைகளது இயங்கு திறனனை உசுப்பிவிடுவதற்கான ஆசிரியஉருவாக்குனர்களை இவர் தகவமைத்திருந்தார் என்பது வெள்ளிடை. இவர் அரச ஊழியனாக வயதின் பிரகாரம் ஒய்வுபெறுகின்றார்.இல்லை இல்லை அரச பணியில் இருந்து விலகிக்கொள்கின்றார் என்பதுபொருத்தமாக இருக்கும். இனிவரும் காலங்களில் ஓய்விற்கு ஓய்வு கொடுத்து முழு நேர அரங்கவியலாளனாக இயங்குவதற்கும் அவற்றினூடே எமது சமூகம் எழிற்சிபெறவும் நல்வாழ்த்துக்கள். (எஸ்.ரி.அருள்குமரன்)

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக