வெள்ளி, ஜனவரி 24, 2025
கலைமாமணி யமன் மார்க்கண்டு
(எஸ்.ரி.அருள்குமரன்)
கலை வாழ்வு மகிழ்வானது.கலைச்செயற்பாட்டாளர்கள் தமது துயரினை புதைத்து பார்ப்போரை மகிழ்வளிப்பதை நோக்கமாக கொண்டு கலைச்செயற்பாட்டில் ஈடுபட்டு வருகின்றனர்.
வலி.வடக்கு கலைகளுக்கான ஊற்றுக்காலாக விளங்குகின்ற மண். இம்மண்ணில் இருந்து முகிழ்ந்தெழுந்த ஆளுமையான கலைஞர்கள் ஏராளம்.
மரபு வழிக்கலைகளாக குறிப்பிடப்படுகின்ற இசைநாடகத்தின் வளர்ச்சியில் அரும்பணியாற்றிய கலைஞர்கள் காலத்தால் கொண்டாடப்படவேண்டியவர்கள்.
இப்பகைப்புலத்தில் வசாவிளானை பிறப்புத்தளமாக கொண்டு யமன் மார்க்கண்டு என கொண்டாடப்படுகின்ற இசை நாடக கலைஞராக வசாவிளான் வே.மார்க்கண்டு விளங்குகின்றார்.
கலைமாமணி வே.மார்க்கண்டு 1916 ஆம் ஆண்டுபிறந்தார்.இவரது தந்தையார் பெயர் வேலு தயார் பெயர் சீதா. இவர்களுக்கு மகனாக விவசாயச்சூழலினை கொண்ட வசாவிளான்; மண்ணில் பிறந்தார்.
இசை நாடகங்களை பொறுத்தவரையில் ஆண்கள் ஆண்பாத்திரங்களை ஏற்று நடிப்பதை ராஜபாட் எனவும், ஆண்கள் பெண்பாத்திரங்களை ஏற்று நடிப்பதை ஸ்திரிபாட் எனவும் சிறப்பித்து கூறுவார்.
இவற்றை விட வேறு பர்திரங்களில் நடித்து புகழ்பெறுகின்ற போது அப்பாத்திரத்தினை அடை மொழியாகக்கொண்டு அக்கலைஞர்களை அழைப்பதுண்டு.
பபூன் பார்திரத்தில் பெயர் பெற்றவர்நடிகர்கள் பபூன் எனும் சிறப்பு பெயருடன் அழைக்கப்பட்டனா.
நுடிகர்கள் தாம் பாகமாடுகின்ற பாத்திரத்தினை கனகச்சிதமாக தமது அளிக்கை திறன் மூலம் வெளிப்படுத்துகின்ற போது அப்பாத்திரத்தின் பெயரால் அழைக்கப்படுவதுண்டு.
இந்தவகையில் பல நாடகங்களில் பல பாத்திரங்களை ஏற்று நடித்து தமது திறமையினால் பார்வையாhள்களை கவர்ந்திழுத்த வேளையிலும் வே.மார்க்கண்டு ஏற்று நடித்த யமன் பாத்திரம் அவருக்கான அடையாளமாகியது.
அவர்அப் பாத்திரத்தினை ஏற்று நடித்போது அதன் அழத்தினை உணர்ந்து பாத்திரத்தினூடாக வெளிக்கொனர்ந்த உணர்சி வெளிப்பாடு பாத்திரவார்ப்புத்தன்மை, என்பன அவரை யமன் மார்க்கண்டாக தனித்துவப்படுத்தியது.
நடிகமணி வி.வி. வைரமுத்துவினால் ஸ்தாபிக்கப்பட்ட வசந்தகான சபாவின் மூத்த உறுப்பினரும், நடிகமணி வி.வி வைரமுத்து ஸ்திரிபாட் (பெண் வேடம் ) இட்டு நடித்த போது ராஜபாட் (ஆண்வேடம்) இட்டு நடித்தவர். குறிப்பாக அரிச்சந்திரமயான காண்டம் நாடகம் ஆரம்ப காலத்தில் மேடையிடப்பட்டபோது நடிகமணி வி.வி.வைரமுத்து சந்திரமதியாக நடித்த போது அரிச்சந்திரனாக நடித்தவர் மார்க்கண்டு என்பது குறிப்பிடத்தக்கது.
இந்நாடகத்தில் லோகிதாசனாக நாவலப்பிட்டி அலுவலக ஓய்வு பெற்ற நிர்வாக உத்தியோகத்தரும் நடிகமணியின் மைத்துனருமான கலாபூசனம் பிள்ளைநாயகம் திருநாவுக்கரசு நடித்திருந்தார்.
சத்தியவான் சாவித்திரி நாடகத்தில் நடிகமணி வி.வி. வைரமுத்து சத்தியவானாக பாகமாடியபோது யமனாக மார்க்கண்டு பாகமாடியிருந்தார்.
யமனாக மார்க்கண்டு அரங்கி;ல் பிரவேசித்து 'மண்டலமும் விண்டலமும்' எனும் பாடலை பாடியபடி அரங்கிலே ஆற்றுகையாளனாக களமாடுகின்றபோது யமன் எனும் பாத்திரத்தின் பயங்கர உணர்வினை பார்ப்போர் உணரும் படி அவரது நடிப்பு இருக்கும் என நாடகத்தை பார்த்த பார்வையாளர் குறிப்பிடுகின்றனர்.
நாட்டியசாஸ்திரம் பார்வையாளரை சகிர்தயர் எனக்குறிப்பிடுகின்றது. இதன் அர்த்தம் சக இருதயம் படைத்தவர்கள் என்பதாகும். அதாவது நடிகன் தான் ஏற்று நடிக்கின்ற பாத்திரத்தின் உணர்வினை பார்வையாளர்களும் உணர்ந்து கொள்ளுதல் என்பதாகும்.
இக்கருத்தினை வலுப்படுத்துகின்றதை இசை நாடகவுலகின் ஜம்பவான் நடிகமணி அரிச்சந்திரனாக தோன்றுகின்ற போது அந்நாடகம் ஏற்படுத்துகின்ற அதிர்வலைகளை வார்த்தைகளால் குறிப்பிடமுடியாது பார்த்தவர்களால் மட்டுமே உணாந்து கொள்ள முடியும் என பார்த்து ரசித்த பலரும் குறிப்பிடுவர்.
மார்க்கண்டு யமனாக தோன்றுகின்ற காட்சி பார்வையாளர்களிடையே பயஉணர்வினை ஏற்படுத்தி அவர் ஏற்ற பாhத்திரத்திற்கு வலிமை சேர்த்ததுடன் அவரது நடிப்பினை பார்வையாhள்கள் கொண்டாடுவதற்குரிய களத்தினை ஏற்படுத்தியிருந்தது.
இவரது இயல்பான பௌதீகத்தோற்றம் வெள்ளை நிறமேனியாகும். ஆனால் யமனாக தோன்றுகின்றபோது தனது பௌதீகத்தோற்றத்தை ஒப்பனையால் மாற்றி தனது சுய அடையாளத்தை பாத்திரத்திற்குள் புதைத்து அப்பாத்திரமாகவே பார்ப்போர் முன்னிலையில் வெளிப்படுவதே அவரது தனித்துவமானதாக விளங்கியது.
தாளம் இசைநாடகம், நாட்டுக்கூத்து,பரத நாட்டியம், போன்ற கலைவடிவங்களில் முதன்மைபெறுகின்றது. இiசைநாடகத்தினை பொறுத்தவரையில் ஹார்மோனிய இசை பாடல்களிற்கு உயிர்ப்பினை கொடுப்பதை போன்று பாடல்கள் பாடுகின்ற போது தாளம் பிசகாது இருக்கின்றபோது பாடி நடிப்பவர்களுக்கு இடையூறு இல்லாதிருக்கவேண்டும். அந்தவகையில் தாளம் மிக முக்கியமானதாகும்.
பக்க வாத்திய கலைஞர்களுக்கும் மேடையில் பாடி நடிக்கின்ற நடிகர்களுக்கும் ஊக்கம் தருகின்ற கலையாக தாளக்கலை விளங்குகின்றது.
மிகத்திறமையாக மார்கண்டு தாளம் போடுவார்(லயவிந்யாசத்துடன்) இறுதியில் மிருதங்க மேசையில் தாளத்தை தட்டி அறுதியை போட்டு முடிப்பார்.
ஏழுபிள்ளை நல்லதங்காள்,ஞான சௌந்தரி,பவளக்கொடி,அல்லிஅர்ச்சுனா,பூதத்தம்பி,கோவலன் கண்ணகி,சம்பூர்ன அரிச்சந்திரா,பக்த நந்தனார்,வள்ளி திருமணம் போன்ற நாடகங்களில் இலங்கையின் பல பாகங்களிலும் நடித்துப்பெயர் பெற்றிருந்தார்.
நாரதாராக , வேதியராக, அட்மிரல் துரையாக என பல பாத்திரங்களிற்கு தனது தனது நடிப்பின் மூலம் உயிர்ப்பினையும் செழுமையினையும் ஏற்படுத்தியிருந்தார்.
பக்த நந்தனாரில் நந்தனாக நடிகமணியும்,வேதியராக மார்க்கண்டும் நடித்திருந்தனர்.சிதம்பர தரிசனம் காணத்துடித்த நந்தனிடம் 'சதம்பர தரிசனமோ' என்ற பாடலை மிகவும் ஆணவத்தோடு நடித்த காலத்தை மறக்கமுடியாது ஜயோ மெத்தக்கடினம் என்று நந்தனாகிய வைரமுத்து பாட்டில் கெஞ்சிக்கேட்பதும் வேதியர் மறுத்து உராத்த குரலில் வசனங்கள் பேசுவதும் நெஞ்சை விட்டு அகலாமல் உள்ளன. என்கின்றார் வி.வி.வைரமுத்துவின் மகளும் லோகிதாசன் பாத்திரத்தில் நடித்து புகழ்பெற்றவருமான திருமதி ஜெயந்தி தவராசா.
வுசந்தகானசபாவின் வெள்ளிவிழாக்கொண்டாட்டம் கொழும்பில் பம்பலப்பிட்டி சரஸ்வதி மண்டபத்தில் இடம்பெற்ற போது இவரது சேவையினை கௌரவிக்கின்ற வகையில் கலைமாமணி விருது வழங்கிக்கௌரவிக்கப்பட்டது.
சக கலைஞர்களை ஒற்றுமைக்குள் வைத்து கலையை வளர்ப்பதில் நடிகமணிக்கு உறுதுணையாக இருந்தார்.
1989 ஆம் ஆண்டு நடிகமணியின் இறுதி நிகழ்ச்சியான சங்கீத கோவலன் நாடகமும் நாடக மேடைப்பாடல் நிகழ்வாக பக்த நந்தனாரும் மேடை நிகழ்வாக இடம்பெற்றபோது அந் நிகழ்விலும் நடித்திருந்தார்.
வசந்தகானா சாபாவின் ஆரம்ப கால உறுப்பினரான இவர் நடிகமணி வி.வி.வைரமுத்து மரணிக்கும் வரை சபாவுடனும் வைரமுத்துவுடனும் நெருக்கமான தொடர்பு கொண்டிருந்தவர்..நடிகமணி வி.வி.வைரமுத்து இறந்த பின்;னர் அவரது இழப்பின் துயரினை தாங்க முடியாது தினமும் அவரது இல்லம் சென்று அவரது உறவுகளுடன் தனது துயரினை வெளிப்படுத்தி செல்வராம்.நான் துன்னபப்ட்ட போதெல்லாம் என்னை ஆறுதல் படுத்திய வைரமுத்து இல்லை எனக்குறிப்பிடுவராம். நுடிகமணியை விட வயதில் மூத்தவராக இருந்தபோதும் தம்பி எனும் உறவுடன் தனது பாசத்தை வெளிப்படுத்திய கலைஞராக விளங்கியிருந்தார்.
வசந்த கானசபாவின் பட்டறையில் முகிழ்ந்தெழுந்த கலைஞர்களில் யமன் மார்க்கண்டுவும் ஒருவர். ஆவர் தான் சாhந்த கலையை நேசித்துடன், தன்னை நேசித்த நடிக மணி வி.வி வைரமுத்து,தன்னை தேசம் அறியச்செய்த வசந்த கான சபாவினை அந்திம காலம் வரை நேசித்திருந்தார்.
இவரது இச்செயற்பாடுகள் இளைய தலைமுறையினருக்கு பாடங்களாகின்றன.
இவரது இரண்டாவது புதல்வாரன சிறிரங்கநாதன் சங்கீத வித்துவானாகவும்,இளைய புதல்வன் நடாறிந்த வீதி நாடக கலைஞராக வீ.எம். குகராஜா என்பதும் குறிப்பிடத்தக்கது.
நாடகமும் அரங்கியலும் எனும் பாடம் கற்றலுக்குரிய துறையாக பரிமளித்திருக்கின்ற நிலையில் இசை நாடகத்தின் செழுமையிலும் அதன் அறாத்தொடர்ச்சியிலும் வி.வி. வைரமுத்து, யமன் மார்க்ண்டு போன்ற வர்களது பங்களிப்பு காலத்தால் மறக்கமுடியாதவை.
ஆனால் அவர்கள் பற்றிய முழுமையான வரலாற்று பதிவுகளளை கற்றலுக்குரியதாக கொள்ளமை ஏன் என்பது வினாவிற்குரியது.
இவர் பங்குபற்றிய நாடகங்களும் தாங்கிய பாத்திரங்களும் பின்வருமாறு
சத்தியவான் சாவித்திரி- யமன்
அரச்சந்திர மயாணகர்ணடம்- வேதியர்
பக்தநந்தனார் -வேதியர்
சம்பூர்ன அரிச்சந்திரா-விசுவாமித்திரர்
சத்தியவான் சாவித்திரி-நாரதர்
வள்ளி திருமணம்-நாரதர்
இவர் 1994 ஆம் ஆண்டு இவ்வுலகை நீத்த போதும் கலைகளை நேசித்து ,கலையினை கொண்டாடி பாதுகாக்கின்ற மனிதர்களது நெஞ்சில் வாழ்ந்து கொண்டிருப்பார் என்பது ஜயமில்லை.
கட்டுரையாக்கத்திற்கான தகவல் மற்றும் ஒளிப்படங்கள் தந்துதவியவர்
திருமதி ஜெயந்தா தவராசா (வி.வி.வைரமுததுவின் மகள்)
இதற்கு குழுசேர்:
இடுகைகள் (Atom)