என்னைப் பற்றி

வெள்ளி, ஜூலை 26, 2013

 அரங்க செயற்ப்பாடு  

சுழிபுரம் விக்டோறியாக்கல்லூரி மாணவர்களுக்கான அரங்கத்திறன் விருத்திநாடகப் பயிற்ச்சிபட்டறை நிகழ்வு சுழிபுரம் விக்டோறியாக்கல்லூரிஅழகியல்துறை மண்டபத்தில் சுழிபுரம் விக்டோறியாக்கல்லூரி நாடகமும்
அரங்கியலும் ஆசிரியர்   தலைமையில் நடைபெற்றது.
புத்தாக்க அரங்க இயக்கத்தினால்(ஐ.ரி.எம்) நடாத்தப்பட்ட இப்பயிற்சி பட்டறை
நிகழ்வின் வளவாளர்களாக புத்தாக்க அரங்க இயக்கப்பணிப்பாளரும் யாழ்ப்பாணம்
மத்திய கல்லூரி நாடகத்துறை ஆசிரியருமான எஸ்.ரி.குமரன் புத்தாக்க அரங்க
இயக்கத்தின் நிர்வாகப்பணிப்பாளரரும் மானிப்பாய் இந்துக்கல்லூரி
நாடகத்துறை ஆசிரியருமான எஸ்.ரி.அருள்குமரன் ஆற்றுகையாளர் த.தயானிஷன்
பா.கவிராஜ் இ.பகிதரன் ஆகியோர் கலந்து கொண்டு பயிற்ச்சி பட்டறையை திறம்பட
வழிநடாத்தினார்கள் .
இப்பயிற்சி பட்டறையில் தரம் 10.தரம்11 நாடகத்துறை மாணவர்களுக்கான நாடகத்
தயாரிப்பு படிமுறை நடிப்புசார்பயிற்ச்சிகள் அரங்கத்திறன் விருத்தி ஆளுமை
வளர்ச்சிசார் பயிற்சிகள் மாணர்களுக்கு வழங்கப்பட்டது. இப்பயிற்ச்சி
பட்டறையில் தரம் 10 தரம் 11 ஐச்சேர்ந்த 50 மாணவர்கள் கலந்து கொண்டு பயன்
பெற்றனர். பயிற்சி பட்டறை நிகழ்வில் கலந்து கொண்ட மாணவர்கள் இப்பயிற்ச்சி
பட்டறை தொடர்பாக கருத்து தெரிவிக்கும் போது மிகவும் பயனுள்ள முறையில்
இப்பயிற்ச்சிப்பட்டறையானது அமைந்திருந்தததுடன் புதிய அனுபவங்களையும்
அரங்கியல் சார் நுட்பங்களையும் அறிந்து கொள்ள முடிந்துள்ளதாக மாணவர்கள்
தெரிவித்தார்கள்.
 
நாடகத்தின் பயன்பாடு  இலங்கை கல்வித்துறையில் இன்னும் சரியாகப் பயன்படுத்தப்படவில்லை.


கலாநிதி குழந்தை ம.சண்முகலிங்கம் தெரிவிப்பு

நாடகத்தின் பயன்பாடு  இலங்கை கல்வித்துறையில் இன்னும் சரியாகப் பயன்படுத்தப்படவில்லை.கற்றல் கற்பித்தல் செயற்பாடுகளில் நாடகத்தின் பங்களிப்பானது  தேவைப்பாடுடையதாக அமைகின்றது. இத்தேவைப்பாடுகளினை பூர்த்தி செய்கின்ற வகையில் கல்வித்துறையில் நாடகத்தின் பங்களிப்பு சரியாகப் பயன்படுத்தப்படவேண்டும். என ஈழத்து நாடகத்தின் மூத்த நாடகவியலாளர் குழந்தை ம.சண்முகலிங்கம் தெரிவித்தார்.

கோப்பாய் ஆசிரியர் கலாசாலையின் முத்தமிழ் விழாவின் நாடக விழா நிகழ்வுகள் கோப்பாய் ஆசிரியர் கலாசாலையின் பிரதி அதிபர் வீ.கருணலிங்கம் தலைமையில் இடம்பெற்ற போது அந்நிகழ்விற்கு இனிய விருந்தினராகக் கலந்து கொண்டு உரையாற்றும் போதே அவர் இவ்வாறு தெரிவித்தார்.

அவர் அங்கு மேலும் தெரிவிக்கையில் :

கல்வித்துறையின்கற்றல் கற்பித்தல் செயற்பாட்டில் நாடகத்துறையின் பங்களிப்பு பல்வேறு வகைகளில் பயன்படுடையதாக விளங்குகின்றது.. 
பல்வகைப்பயன்பாடுடைய  நாடகம் என்பது மேடையில் மட்டும் நடித்தல் அல்ல அதனையும் தான்டிய வகையில் நாடகத்தின் செயற்பாடு பரந்துது பட்டு காணப்படுகின்றது. 
ஆசிரியர்களது கற்பித்தல் செயற்பாட்டில் நாடகத்தின் பங்களிப்பானது மிக அவசியமானது. ஆசிரியர்கள் சிறந்த நடிகனாக விளங்கும் போதே மாணவர்களிடத்தில் கற்பித்தல் செயற்பாட்டினை இலகுவாக மேற்கொள்முடியும் நாடகமானது சமூகப்பயன்பாடுடைய சாதனமாக விளங்குகின்றது 

இன்றைய நாடக விழா நிகழ்வில் சிறப்பான நாடக அளிக்கைகள் ஆற்றுகை  செய்யப்பட்டுள்ளன. இந்நாடக நிகழ்வில் கலந்து கொண்ட அனைவரும் பராட்டுக்குரியவர்கள் நாடக நிகழ்வினை போட்டியாகக் கொள்ளாது நட்புறவாக நாடகச்  செயற்பாட்டில் ஈடுபட வேண்டும். இன்று நாடகமானது அனைத்துத்துறைகளிலும் பயன்பாடுடையதாக காணப்படுகின்றது. 

சமூகத்தில் உயர்ந்தவர்களாக விளங்கும் ஆசிரியர்கள் சமூகப்பொறுப்புணர்ந்தவர்களாக விளங்க வேண்டும். சமூகப்பொறுப்புணர்ந்து செயற்படுதிகின்ற ஆசிரியர்களினாலே சிற்ந்த கல்விச் சமுதாயத்தினை கட்டியெழுப்பமுடியும். 

ஆசிரியர்கள் வாசிப்புத்திறன் மிக்கவர்களாக விளங்க வேண்டும். வாசிப்பின் ஊடாக புதிய விடயங்களினை கற்று அவற்றினை மாணவர்களுக் போதிப்பவர்களாக விளங்க வேண்டும். கற்றல் கற்பித்தல் செயற்பாட்டில்  தேடல் அவசியமானது. ரவீந்திர நாத்தாகூருடைய சிந்தனைகளை ஆசிரியர்கள் கற்கவேண்டும். சிறுவர்களுடைய தளங்களுக்கு சென்று ஆய்வு செய்யப்பட்டு படைக்கப்பட்டவையாக ரவீந்திரநாத் தாகூருடைய படைப்புக்கள் விளங்குகின்றன.  இப்படைப்புக்களினை வாசிப்பதன் ஊடாக பல்வேறு விடயங்களினை அறிந்து கொள்ள முடிகின்றது. ஆசிரியர்கள் மாணவ சமுதாயத்தின் பொறுப்புணர்ந்து சமூக அக்கறை கொண்டவர்களாக விளங்க வேண்டும் என்றார். 

நன்றி யாழ்.தினக்குரல்

கலைச்செயற்பாடுகள் தொழில்வாய்ப்பிற்குரியதாக மாற்றியமைக்கப்படவேண்டும் 

   மானிப்பாய் இந்துக்கல்லூரியின் அதிபர் தெரிவிப்பு


கல்விச்செயற்பாட்டில் அங்கீகாரத்தினைப் பெற்றுக்கொண்டுள்ள கலைச்செயற்பாடுகள் அவ் அங்கீகாரத்தினை பேணும் வகையில் தொழில்வாய்ப்பிற்குரியதாக மாற்றியமைக்கப்பட வேண்டும். என மானிப்பாய் இந்துக்கல்லூரியின் அதிபர் எஸ்.சிவநேஸ்வரன் தெரிவித்தார்.

மானிப்பாய் இந்துக்கல்லூரியின் வருடாந்த நாடக விழவானது கல்லூரியின் வி.எஸ்.துரைராஜா திறந்த வெளி அரங்கில்    இடம்பெற்ற போது அந்நிகழ்வில் கலந்து கொண்டு தலைமையுரையாற்றும் போதே இவ்வாறு வாறு தெரிவித்தார்.

அவர் அங்கு தொடாந்து உரையாற்றும் போது;

எமது சூழலில் கலைச் செயற்பாடுகள் தொழில்முறை சார்ந்ததாக  உருவாகவேண்டும். கலைத்துறைச்செயற்பாட்டில் ஈடுபடுவோருக்கான தொழில்வாய்பிற்குரியதாக  இத்துறையினை மாற்றுவதற்கு சம்பந்தப்பட்ட பொறுபபு வாய்ந்தோர் முயற்சிகள் மேற்கொள்ளவேண்டும். இதனுடாகவே ஆத்மார்த்தமாக கலைத்துறை செயற்பாட்டில் தொடந்து முழுமையாக ஈடுபடுத்வதற்கு செயற்பாட்டாளர்கள் முன்வருவார்கள்.

கலைச்செயற்பாடுகளில் வாழ்வியலின் கூறுகளினை வெளிப்படுத்துவதில் நாடகச்செயற்பாடுகள் முக்கிய பங்கினை வகிக்கின்றன. 
எமது கல்லூரிச் சமூகத்தினைப் பொறுத்தவரையில் கல்வி செயற்ப்பாடாக நாடகவிழாவினை நாம் பார்க்கின்றோம். 

நாடகவிழாவில் கலந்து கொள்வதன் ஊடாக சிறந்த மாணவசமூதாயம் உருவாக்கப்பட்டுக் கொண்டிருக்கின்றது. இதனுடாக தலைமைத்துவம் வளர்க்கப்படுகின்றது.

 மாணவர்களின் ஆளுமைத்திறன் வெளிப்பாடுகள் வெளிக்கொண்டுவருவதற்கான களங்கள் ஏற்படுத்திக் கொடுக்கப்படுகின்றன. இக்களங்களினை சரியாக பயன்படுத்துகின்ற மாணவர்கள் சிறந்த கலைத்துறைச்செயற்பாட்டாளர்களாக மாற்றம் பெற்று தமது திறன்களினை வெளிப்படுத்துகின்றார்கள். 
நாடகவிழாவினை தொடர்ந்தும் சிறப்பாக நடாத்துவதற்கு பழைய மாணவர்கள் ஆர்வக இருக்கின்றார்கள். பழைய மாணவர்களின் ஆர்வத்தினை பூர்தி செய்யும் வகையில் மாணவர்கள்  நாடகச்செயற்பாட்டில் ஈடுபடுவதில் அதிக விருப்பினை காட்டவேண்டும்.

நாடகச் செயற்பாட்டில் ஈடுபடுவதன் ஊடாக மாணவர்களது ஆளுமை வெளிக்கொணரப்படுகின்றது கலைகள் ரசிக்கப்பட வேண்டும் இதன் அடிப்படையில் ஆயிரக்கணக்காணோர் இவ் நாடக விழாவினை வருடார்ந்தம் பார்வையிட்டு வருகின்றமை சிறப்பிற்குரிய விடயமாகின்றது.

போட்டிகளில் கலந்து கொள்ளும் எல்லோருக்கும் வெற்றி என்பது கிடையாது  வெற்றி தோல்விகளுக்கு அப்பால் மேடையில் ஆற்றுகை  செய்ப்படுவதே பெருமைக்குரியதாகும்.மாணவர்கள் கல்வி கற்கின்ற காலத்தில் செய்யப்படுகின்ற செயற்பாடுகள் காலத்தால் என்றும் வாழந்து கொண்டிருக்கும். நேரடி வாழ்த்துக்களும் பாராட்டுக்களும் கலைஞர்களுக்கு மாத்திரம் கிடைக்கும் பெரிய வரப்பிரசாதமாகின்றது. 
இதனை உண்மையான கலைச்செயற்பாட்டில் ஈடுபடுகின்ற போது உணர்ந்து கொள்ள முடிகின்றது.

தொழில்நுட்ப வளர்ச்சிப்போக்கிற்கேற்ப கலைச்செயற்பாடுகளும் மாற்றம் பெறவேண்டும். நாடகச் செயற்பாடுகள் கால ஓட்டத்திற்கேற்ப நவீன உத்திகளினை உள்வாங்கிய வகையில் புதிய வகையான படைபபுக்கள் உருவாக்கப்படவேண்டும். 

இதனூடாவே எமது நாடகச்செயற்பாட்டினையும் அடுத்த கட்ட நகர்விற்கு எம்மால் வளர்த்தெடுக்க முடியும். இவ் நகர்வினூடக சிறந்த நாடகப்படைப்புக்கள் எம்மிடையே உருவாகுவதற்கான களங்கள் உருவாக்கப்பட வேண்டும் என்றார்.

                            பாலேந்திராவின் நாடகங்கள் மேடையேற்றம்.


தமிழ் அவைக்காற்றுக்கலைக்கழக பாலேந்திரா குழுவினரின் மாபெரும் நாடகவிழா நிகழ்வு எதிர்வரும் ஆகஸ்ட் மாதம் 3ஆம் திகதி சனிக்கிழமை பிற்பகல்  3 மணிக்கு யாழ்ப்பாணம் வீரசிங்கம் மண்டபத்தில் இடம்பெறவுள்ளது. இந்நாடக விழாவில் கண்ணாடி வார்ப்புக்கள் ,பாடம் ,சம்பந்தம் ஆகிய நாடகங்கள் ஆற்றுகை செய்யப்படவுள்ளது. 

இலங்கைத்தமிழ் அரங்க வரலாற்றில்  1970 களில் நவீன  மொழிபெயர்ப்பு நாடகங்களின் முன்னோடிகளாகத் திகழ்ந்த முன்னனி நெறியாளர் பாலேந்திரா குழுவினரின் அவைக்காற்றுக் கலைக்கழகத்தினர் நீண்ட இடைவெளிக்குப் பிற்பாடு யாழ்மண்ணில்  நாடக ஆற்றுகையினை நிகழ்த்தவுள்ளனர். .

இந்நாடக விழாவிற்கான அனுசரனையினை திருமறைக்கலாமன்றம் சப்தமி ஒலிப்பதிவு  கூடம் கலை இலக்கியப்பேரவை ஆகிய நிறுவனங்கள் வழங்குகின்றன.  இந்நாடக விழாவிற்கு நாடக ஆர்வலர்களை கலந்து கொள்ளமாறு விழா ஏற்பாட்டுக்குழுவினர் அறிவித்துள்ளார்கள்.

ஞாயிறு, ஜூலை 21, 2013


                                                                முதலாம் இடம்

வாக்காளர் பதிவுக்கான விழிப்பூட்டல் என்னும் தொனிப்பொருளில் யாழ்ப்பாணம் கியூடெக் – கரித்தாஸ் நிறுனத்தினால் நடாத்தப்பட்ட தெரு வெளி நாடகப்போட்டியில் புத்தாக்க அரங்க இயக்கத்தினால் (ஐ.ரி.எம்) ஆற்றுகை செய்யப்பட்ட ‘வாழ்வதற்கு அவசியம்’ என்னும் தெருவெளி நாடகம் முதலாமிடத்தினைப் பெற்றுக்கொண்டுள்ளது. வாக்காளர்களாக பதிவு செய்யப்படவேண்டியதன் அவசியத்தினையும் வாக்களிப்பு முறைமையினையும் வாக்களிப்பின் அவசியத்தினையும் மக்களிடத்தில் ஏற்படுத்தும் நோக்கில் கரிதாஸ் நிறுவனத்தினால் திறந்த போட்டிப்பிரிவாக நாவாந்துறை சென் நீக்கலஸ் சனசமூக நிலைய முன்றலில் நடாத்தப்பட்ட மேற்படி போட்டியில் ‘வாழ்வதற்கு அவசியம்’ என்னும் தெருவெளி நாடகம் முதலாமிடத்தினைப் பெற்றுள்ளது.
இத் தெருவெளி நாடகத்திற்கான நெறியாள்கையினை புத்தாக்கஅரங்க இயக்கத்தின் பணிப்பாளரும் யாழ்ப்பாணம் மத்தியகல்லூரியின் நாடகத்துறை ஆசிரியருமான எஸ்.ரி.குமரன் புத்தாக்கஅரங்க இயக்கத்தின் நிர்வாகப்பணிப்பாளரும் மானிப்பாய் இந்துக்கல்லூரியின் நாடகத்துறை ஆசிரியருமாகிய எஸ்.ரி.அருள்குமரன் ஆகியோர் மேற்கொண்டிருந்தனர். ஆற்றுகையாளர்களாக த.துவாரகன் த.பிரவீன் பா.தாருஷன் கு.தவேன்சன் த.பிரியலக்ஷன் உ.கரீஸ் ஆகியோர் நடித்திருந்தார்கள். ஒப்பனையினை இ.பகீதரன் மேற்கொண்டிருந்தார். இத் தெருவெளி நாடகமானது கரிதாஸ் நிறுவனத்தின் அனுசரனையில் பல்வேறு பிரதேசங்களில் ஆற்றுகை செய்யப்படவுள்ளமை குறிப்பிடத்தக்கது.