என்னைப் பற்றி

வெள்ளி, ஜூலை 26, 2013

கலைச்செயற்பாடுகள் தொழில்வாய்ப்பிற்குரியதாக மாற்றியமைக்கப்படவேண்டும் 

   மானிப்பாய் இந்துக்கல்லூரியின் அதிபர் தெரிவிப்பு


கல்விச்செயற்பாட்டில் அங்கீகாரத்தினைப் பெற்றுக்கொண்டுள்ள கலைச்செயற்பாடுகள் அவ் அங்கீகாரத்தினை பேணும் வகையில் தொழில்வாய்ப்பிற்குரியதாக மாற்றியமைக்கப்பட வேண்டும். என மானிப்பாய் இந்துக்கல்லூரியின் அதிபர் எஸ்.சிவநேஸ்வரன் தெரிவித்தார்.

மானிப்பாய் இந்துக்கல்லூரியின் வருடாந்த நாடக விழவானது கல்லூரியின் வி.எஸ்.துரைராஜா திறந்த வெளி அரங்கில்    இடம்பெற்ற போது அந்நிகழ்வில் கலந்து கொண்டு தலைமையுரையாற்றும் போதே இவ்வாறு வாறு தெரிவித்தார்.

அவர் அங்கு தொடாந்து உரையாற்றும் போது;

எமது சூழலில் கலைச் செயற்பாடுகள் தொழில்முறை சார்ந்ததாக  உருவாகவேண்டும். கலைத்துறைச்செயற்பாட்டில் ஈடுபடுவோருக்கான தொழில்வாய்பிற்குரியதாக  இத்துறையினை மாற்றுவதற்கு சம்பந்தப்பட்ட பொறுபபு வாய்ந்தோர் முயற்சிகள் மேற்கொள்ளவேண்டும். இதனுடாகவே ஆத்மார்த்தமாக கலைத்துறை செயற்பாட்டில் தொடந்து முழுமையாக ஈடுபடுத்வதற்கு செயற்பாட்டாளர்கள் முன்வருவார்கள்.

கலைச்செயற்பாடுகளில் வாழ்வியலின் கூறுகளினை வெளிப்படுத்துவதில் நாடகச்செயற்பாடுகள் முக்கிய பங்கினை வகிக்கின்றன. 
எமது கல்லூரிச் சமூகத்தினைப் பொறுத்தவரையில் கல்வி செயற்ப்பாடாக நாடகவிழாவினை நாம் பார்க்கின்றோம். 

நாடகவிழாவில் கலந்து கொள்வதன் ஊடாக சிறந்த மாணவசமூதாயம் உருவாக்கப்பட்டுக் கொண்டிருக்கின்றது. இதனுடாக தலைமைத்துவம் வளர்க்கப்படுகின்றது.

 மாணவர்களின் ஆளுமைத்திறன் வெளிப்பாடுகள் வெளிக்கொண்டுவருவதற்கான களங்கள் ஏற்படுத்திக் கொடுக்கப்படுகின்றன. இக்களங்களினை சரியாக பயன்படுத்துகின்ற மாணவர்கள் சிறந்த கலைத்துறைச்செயற்பாட்டாளர்களாக மாற்றம் பெற்று தமது திறன்களினை வெளிப்படுத்துகின்றார்கள். 
நாடகவிழாவினை தொடர்ந்தும் சிறப்பாக நடாத்துவதற்கு பழைய மாணவர்கள் ஆர்வக இருக்கின்றார்கள். பழைய மாணவர்களின் ஆர்வத்தினை பூர்தி செய்யும் வகையில் மாணவர்கள்  நாடகச்செயற்பாட்டில் ஈடுபடுவதில் அதிக விருப்பினை காட்டவேண்டும்.

நாடகச் செயற்பாட்டில் ஈடுபடுவதன் ஊடாக மாணவர்களது ஆளுமை வெளிக்கொணரப்படுகின்றது கலைகள் ரசிக்கப்பட வேண்டும் இதன் அடிப்படையில் ஆயிரக்கணக்காணோர் இவ் நாடக விழாவினை வருடார்ந்தம் பார்வையிட்டு வருகின்றமை சிறப்பிற்குரிய விடயமாகின்றது.

போட்டிகளில் கலந்து கொள்ளும் எல்லோருக்கும் வெற்றி என்பது கிடையாது  வெற்றி தோல்விகளுக்கு அப்பால் மேடையில் ஆற்றுகை  செய்ப்படுவதே பெருமைக்குரியதாகும்.மாணவர்கள் கல்வி கற்கின்ற காலத்தில் செய்யப்படுகின்ற செயற்பாடுகள் காலத்தால் என்றும் வாழந்து கொண்டிருக்கும். நேரடி வாழ்த்துக்களும் பாராட்டுக்களும் கலைஞர்களுக்கு மாத்திரம் கிடைக்கும் பெரிய வரப்பிரசாதமாகின்றது. 
இதனை உண்மையான கலைச்செயற்பாட்டில் ஈடுபடுகின்ற போது உணர்ந்து கொள்ள முடிகின்றது.

தொழில்நுட்ப வளர்ச்சிப்போக்கிற்கேற்ப கலைச்செயற்பாடுகளும் மாற்றம் பெறவேண்டும். நாடகச் செயற்பாடுகள் கால ஓட்டத்திற்கேற்ப நவீன உத்திகளினை உள்வாங்கிய வகையில் புதிய வகையான படைபபுக்கள் உருவாக்கப்படவேண்டும். 

இதனூடாவே எமது நாடகச்செயற்பாட்டினையும் அடுத்த கட்ட நகர்விற்கு எம்மால் வளர்த்தெடுக்க முடியும். இவ் நகர்வினூடக சிறந்த நாடகப்படைப்புக்கள் எம்மிடையே உருவாகுவதற்கான களங்கள் உருவாக்கப்பட வேண்டும் என்றார்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக