என்னைப் பற்றி

திங்கள், ஆகஸ்ட் 13, 2018

 (எஸ்.ரி.அருள்குமரன்)
நோயற்ற வாழ்வே  குறைவற்ற செல்வம் என்பது ஆன்றோர் வாக்கு .நோய் அற்ற வகையில் ஆரோக்கியமான வாழ்கை முறை வாழ்தல் என்பது மகிழ்வான விடயமாகும். ஆனால் இன்று நோய்களுடன் வாழுதல் தவிர்க்முடியாத வாழ்வாகிப்போன சூழ்நிலையில்  நோயற்ற வாழ்வு வாழ்வதற்காக மக்களை வழிப்படுத்த வேண்டிய சூழ்நிலை காணப்படுகின்றது.
இந்தவகையில் மக்களிற்கு விழிப்புனர்வூட்டும் வகையில்  சுகாதாரம் மற்றும் போஷhக்கு விழிப்புனர்வு கண்காட்சி சண்டிலிப்பாய் சுகாதார வைத்திய அதிகாரி வைத்திய கலாநிதி சி.திருமகள் தலைமையில் மானிப்பாய் பிரதேச மாநாட்டு மண்டபத்தில் (16.07.2018) காலை முதல் மாலை வரை இடம்பெற்றது.
நிகழ்விற்கு பிரதம விருந்தினராக சண்டிலிப்பாய் கோட்ட கல்விப்பணிப்பாளர் சு.ஸ்ரீகுமரன்,கௌரவ விருந்தினராக வலி.தென்மேற்கு பிரதேச சபையின் தவிசாளர் அ.nஐபநேசன் ஆகியோர் கலந்துகொண்டனர்.
 பிரதம விருந்தினர் நாடாவெட்டி கண்காட்சியை ஆரம்பித்து வைத்தார்.
இக்காட்சியனை பாடசாலை மாணவர்கள்,பெற்றோர்,பொதுமக்கள் எனபலரும் பர்வையிட்டு பயன்பெற்றுக்கொண்டனர்.
இன்றைய சூழலில் மக்கள் பல்வேறு விதமான நோய்களுக்கு முகம் கொடுத்து வருகின்றனர்.இதற்கு காரணம் அவர்களது உணவுப்பழக்கவழங்கங்கள் முக்கிய பங்குவகிக்கின்றது.
உணவே மருந்து எனக்குறிப்பிடுவர் இதன் காரனம் உணவினை பொருத்தமான வகையில் பயன்படுத்தி வருகின்றபோது பல்வேறு நோய்களை தவிர்த்துக்கொள்ள முடியும்.
தொற்றாநோய்கள் எனக்குறிப்பிடுகின்ற நீரிழிவு நோய்,கொலஸ்றோல்,உயர்குருதி அமுக்கம் போன்ற நோய்கள் ஏற்படுவதற்கு காரனம்  மக்கள் உட்கொள்கின்ற உணவுப்பழக்கங்கள் முக்கியபங்கு வகிக்கின்றன.
இன்று உணவினை உட்கொள்கின்ற மனிதர்களைவிட மருந்துகளை அதிகம் உட்கொள்கின்ற மனிதர்களாக சமூகம் மாறிச்செல்வது வருத்தத்திற்குரியவிடயமாகும்.
எமது பழைய வாழ்வியல் முறையில் இரசாயனபதார்த்தங்கள் கலப்பற்ற இயற்கை முறையிலான உணவினை உற்பத்தி செய்து உட்கொண்டு வந்தனர்.ஆனால் இன்று எத்தகைய உணவகளாயினும் அவற்றில்  இரசாயன பதார்ததங்களை பயன்படுத்தப்பட்ட உணவு உற்பத்தி முறை மூலம் மனிதர்கள் நோயினை வாங்கின்ற வகையிலான உணவுகளை உட்கொண்டு வருகின்றனர்.
சயனட் கலப்பற்ற முன்னைய முறையிலான உணவுகளை உட்கொள்வது மக்கள் ஆரோக்கியமாக வாழ்வதற்கான சூழ்நிலையினை ஏற்படுத்தும்.
பெற்றோர்களிடையே ஏற்படுகின்றநடத்தைமாற்றம்பிள்ளைகளிடையே மாற்றத்தை கொண்டுவரும்.. பெற்றோர்கள் தமது பிள்ளைகளது ஆரோக்கியத்திற்கு   ஏற்றவகையிலான  உணவுமுறைகளினை பிள்ளைகளிடத்தே கொண்டுவருகின்றவேளையில் பிள்ளைகள்ஆரோக்கியமானவர்களாக வாழ்வதுடன் நோயற்ற தலைமுறையினை நாம் உருவாக்ககூடியதாக இருக்கும்.இதற்கு இவ்விழிப்பனர்வு கண்காட்சிமிகவும் பயனுள்ளதாக இருந்தது.
கண்காட்சியில் பல பயனுள்ள தகவல்களை உள்ளடக்கிய வகையில் பல காட்சிப்படுத்தல்கள் காணப்பட்டன.சான்றான  தூய நீரை பயன்படுத்துங்கள் எனும் வகையில் இனிப்பான பானங்களிற்க பதிலாக தூயநீரை பயன்படுத்துங்கள் எனும் வாசகம் காட்சிப்படுத்தப்பட்டிருந்தது.
தூய நீரை பருகுதல் உடல் ஆரோக்கியத்திற்கு துனைசெய்யும் ஆனால்அதிகளவிலான இனிப்புப்பானங்களை பயன்படுத்துதல் நீரிழிவு போன்ற நோய்களிற்கு வழவகுகின்றது.இத்தகய நோய்கள் ஏற்படுவதில் இருந்து தவிர்த்துக்கொள்வதற்கு தூய நீர் பயன்படுத்துதல் சிறப்பாக அமையும் என்பதை வலியுறுத்துவதாக அமைகின்றது.
தாய் பாலின் முக்கியத்துவத்தினை வலியுறுத்துவதாக காட்சிப்படுத்தல் அமைந்திருந்தது .தாய்பால் பிள்ளையின் வளர்ச்சியில் எத்தகைய முக்கியம் பெறுகின்றது என்பதையும் கர்ப காலத்தில் உட்கொள்ள வேண்டிய பழவகைகளின் முதன்மையினை காட்சியில் சுட்டிக்காட்டியிருந்தனர்.
வாழ்கையில் மரக்கறிகளை உட்கொள்ளுங்கள் எனும் வகையில் மரக்கறி மனிதன் பொம்மை மூலம் காட்சிப்படுத்தப்பட்டிருந்தமை சிறப்பான விடயமாகும்.
இலைவகைகளில் வல்லாரை,முருக்கம்இலை,தூதுவளை,வாதராணி,சிறுகுறிஞ்சா,முல்லை இலை,அத்தி என பல இலைவகைள் உட்கொள்வது உடல் ஆரோக்கியத்திற்கு பயனுள்ளமையினை காட்சியின் ஊடாக வெளிப்படுத்தியிருந்தனர்.
உப்பை குறைப்பதன் மூலம் நோய்கள் ஏற்புடவதை தவிர்த்துக்கொள்ளமுடியும் என்பதும் சுட்டிக்காடட்டப்பட்டிருந்தது.
மனித வாழ்கையில் ஆரோக்கியமாக வாழ்வதன் மூலம் எமது வாழ்வினை நாமே செழுமையாக அமைத்துக்கொள்ள முடியும்.இவற்றிற்கு இத்தகைய கண்காட்சிகள் வலுச்சேர்க்கும்