என்னைப் பற்றி

வெள்ளி, ஜூன் 21, 2013

அரங்கினூடாக சிறுவர்களுக்கான உளரன்(மனோதிடம்) மேம்பாடு

எஸ்.ரி.அருள்குமரன்   BA (Hons) MA(M
erit)

ஆசிரியர் 

மானிப்பாய் இந்துக்கல்லூரி

அரங்கினூடாக சிறுவர்களுக்கான  உளரன்(மனோதிடம்) மேம்பாடு
நாடகக் கலை தனக்கென தனித்துவமான பண்புகளினை கொண்டுள்ளது.மனித நாகரிக வளர்ச்சியின் ஆரம்ப புள்ளி முதல் இக்கலையின் வகிபங்கு முதன்மை பெறுகின்றது. மனிதர்கள் தமது உணர்வியலினை பிறரிடம் காவுவதற்கும் தமது கருத்தினை பகிர்ந்து கொள்வதற்கும் உறவினை தகவமைத்துக்கொள்வதற்கும் இக்கலை உதவின.
இக்கலையின் தொடர்நிலை இயங்குதல் காலமாறுதலுக்கு ஏற்ற வகையில் வடிவங்களினை தரநிர்ணயம் செய்தன. அவ்வடிவங்கள் தமக்கான தனித்துவத்துடனும் சமூகத்தில் பல் பரிமாண பிரச்சினைகளினையும் ஊடு பொருளாக கொண்டு வெளிப்படுத்தின.

இதன் முக்கியத்துவம் காலமாறுதலில் வெறுமனே உணர்ச்சிக்குரியது என்பதினை தாண்டி அறிவு பூர்வமான விடயமாக பார்க்கப்படலாயிற்று.
ஏவ் விடயத்தினையும் அவற்றில் காணப்படுகின்ற பிரச்சினைகளினையும் அறிவியல் பூர்வமகவும் யதார்த்த பூர்வமாகவும் பதிவு செய்ய முனைந்தன அப்பகைப்புலத்தில் பிரச்சினைகள் என்ன அப்பிரச்சினைகளினை தீர்ப்பதற்கான வழிவகைகள் என்ன அத்தீர்வுகளின் ஊடாக சமூகவியல் பெறுமானத்தில் எத்தகைய மாறுதல்களினை  கொண்டுவரமுடியம் என்பன தொடர்பாக நாடகப்படைப்பாளிகள் சிந்தித்தனர்.

அச்சிந்தனைப்பெறுமானம் சமூகவியலில் தாக்கத்தினை ஏற்படுத்தின
சமூகம் காலம்மாற்றமடையும் பேது பதிய புதிய பிரச்சினைகள் முகிழ்ந்தெழும் போது அவற்றினை வெளிப்படுத்துவதற்கும் தீர்த்து கொள்வதற்கும் நாடகங்கள் துணை செய்கின்றன.

பிரச்சினைகள் எனும் போது பல்வேறு பிரச்சினைகளினை குறிப்பிடுவார்கள். பெண்களது பிரச்சினைகள்இ முதியவர்களது பிரச்சினைகள் இ சிறுவர்களது பிரச்சினைகள் இ பண்பாட்டு பிறழ்வுகள் என பிரச்சினைகள் சமூகவியல் சூழமைவுகளுக்கு ஏற்ப்ப மாறுபடுகின்றன.

கலைகள் மனித வாழ்வியலில் பிரிக்க  முடியாத கூறுகளாக விளங்குகின்றன. கலைப்படைப்புக்கள் காலத்தினை பிரதிபலித்து நிற்கும் கண்ணாடி ஆகும். சமூகத்தில் மனிதர்களது வாழ்வியல்கள் பதிவுகள் மனிதர்களது வலிகள் ,என்வற்றினை வெளிப்படுத்தும் வல்லமை பொருந்தியவை ஆகும். இத்தகைய பணியினை நாடகீய படைப்புக்கள் மூலம் செயற்படுத்த முடியும்.

    இன்றைய சூழ்நிலையில் சம காலத்தில் எமது வாழ்வியல் நீரோட்டத்தில் பலரது கதையாடல் வெளிகளில் சிறுவர்துஷ்பியோகம் அதனூடான பண்பாட்டு பிறழ்வுகள் பற்றிய பார்வை முதன்மை பெறுகின்றன.

சிறுவர்கள் நாட்டின் சொத்துக்கள் , எதிர்காலத்தின் தலைவர்கள் அவர்கள் இக்காலத்தில் பெற்றுக்கொள்கின்ற அறிவபு;புலமையானது அவர்களது எதிர்கால வாழ்வியலுக்கான அடிப்படைகளாகின்றன எனும் கருத்து நிலைகள் முதன்மைபெறுகின்றன.ஆனால் அவர்களது சுதந்திரமான வாழ்வியல் தகவமைப்பிற்கான செயற்பாடுகள்   முழுமையாக இடம்பெறுகின்றனவா எனும் வினாவெழுகின்றன. காரணம் யாதெனில் ஊடகங்களிலும்  பல் வேறு நிலைகளிலும் சிலாகிக்கப்படுகின்ற சிறுவர் துஷ்பிரயோகங்கள் அவர்களுக்கு இழைக்கப்படுகின்ற கொடுமுறைகள் அவர்களுக்கு மறுக்கப்படுகின்ற உரிமைகள் எனப்பலவற்றினைகுறிப்பிட முடியும்.

  சிறுவர்களுக்கான சுயமுனைப்பு செயற்பபாடுகளும் அவர்களுக்கான கருத்தாடல் வெளிகளும் தம்மை வெளிப்படுத்திக் கொள்வதற்கான வெளிகளும் உருசமைக்கப்படுகின்ற போதே ஆரோக்கியமான சமூகம் மேற்கிளம்பும்.

சிறுவர்களது உளரன்(மனோதிடம்) மேம்பாட்டிற்கானதும் வாழ்வியல் மேம்பாட்டிற்கான செயற்பாடுகள் முன்னெடுக்கப்பட வேண்டியது காலத்தின்தேவையாகும். காரணம் யாதெனில் அவர்களது மனப்பதிவுகளில் உயரிய சிந்தனைகளினையும் அச் சிந்தனையின் ஊடாக தன்னம்பிக்கையினையும் ஏற்படுத்துவது அவசியமானதாகும் அத்தகைய சிந்தனை சார் மாற்றத்தினை வெளிக்கொணர்வதற்கு கலையியல் சார் செயற்பாடுகள் துனைசெய்யும்.

பதினெட்டு வயதிற்க்குட்பட்டவர்களினை சிறுவர்கள் எனும்  வகுதிக்குள் உட்படுத்துகின்றனர்கள். அவ்வகையில் பாடசாலைப்பருத்தினை உடையவார்கள் இவ்வகுதிக்குள் வருகின்றனர். எனவே அவர்களுக்கான வரியான வழிகாட்டுதல்களும் நல்லன தீயனவற்றை பகுத்தாராய்வதற்கான வழவகைகள் மேற்கொள்ளப்பட வேண்டியது அவசியமானதாகும்.
சிறுவர்களுக்கான அரங்க செயற்பாடு எனும் போது அவர்களுக்கான கற்பனையை தூண்டும் வகையில் ஆடல் ,பாடல் , விநோதம் ,நிறைந்ததாகவும்  அப்படைப்பின் பேசு பொருள் அவர்களது உளவியல் சார் அனுகுமுறையுடனும் அவர்களது கற்பனையை தூண்டக்கூடியவகையிலுமே உருசமைக்கப்படுகின்றன.

சிறுவர்கள் அரங்க செயற்பாடுகளில் ஈடுபடுவதன் மூலம் அவர்களிடையே ஆளுமைவெளிப்படுத்தல்கள் , தலைமைத்துவப்பண்பு ,கற்பனாசக்திவிருத்தியடைதல் எதையும் கூர்ந்து நோக்கும் திறன் விருத்தியடைதல் இ விட்டுக்கொடுப்பகள் இ சகோதரத்துவம் இ சுயதேடல் , சுயமுனைப்பு ,போன்ற பண்புகளினை மாணவர்கள் உள்ளீர்த்து கொள்வதற்கு இவ் அரங்க செயற்பாடுகள் துணை செய்கின்றன
.
சிறுவர் தலை முறை உளவியல் ரீதியாக  பாதிக்கப்பட்டால் அதன் எதிர்கால தலை முறையானது செயல்முனைப்பற்ற வகையிலும் சுயதேடல் அற்;ற தலைமுறையாகவுமே முகிழ்ந்தெழும். ஆத்தகைய சூழ்நிலை உருவாகும் போது ஆரோக்கியமாற்ற சமூகம் உருவாவதினை தவிர்கமுடியாது போகும்.
 எனவே அவர்களது கணவுகளினை உருவாக்குவதற்கும்  அவர்களது சுய முனப்பிற்கானதானவகையில் அவர்களுக்கு விழிப்பூட்டல் சர்ந்த செயற்பாடுகளுடன் அவர்களினை படைப்பில் ஈடுபடுத்துவதன் மூலம் ஆளுமை நோக்கிய சமூக உருவாக்கத்திற்கு வித்திட முடியும்.

நன்றி வெள்ளிமலை
     

புதன், ஜூன் 19, 2013

( எஸ்.ரி.அருள்குமரன்.)

                                                அரங்க செயற்ப்பாடு

அரங்கு என்பது மக்களது வாழ்வியிலில் பிரிக்கமுடியாத ஓர் அம்சமாக விளங்குகின்றது. இது மக்களது வாழ்வியலில் மாறு பாடுகளினை ஏற்ப்படுத்தி கொள்வதில் தனக்கான செயல் தளத்தினை வெளிப்படுத்திக் கொள்கின்றது என்பது  எதார்த்தமாகும்.
களப்பயிற்ச்சிப்பட்டறையானது பங்கு பற்றுபவர்களிடையே உள மாறுபாடுகளினை ஏற்ப்படுத்துகின்றது. இதன் காரனமாக அரங்க களப்பயிற்ச்சிப்பட்டறைகள் மேற்கொள்ளப்படுவது அவசியமான ஓர் செயற்பாடாக கொள்ளப்படுகின்றது.

அரங்க செயற்பாடுகளில் பல் துறைச்செயற்பாடுகள் காணப்படுகின்றன.அரங்க செயற்பாடுகள் மூலம் மாணவர்களிடையே ஆளுமைசார் வெளிப்பாடுகளினை ஏற்ப்படுத்துவதுடன் அவர்களது செயற்பாட்டிற்கான பின்வெளிகள் தகவமைக்கப்படுகின்றன என்பது எதார்த்தமாகும்.

அரங்க களப்பயிற்ச்சிப்பட்டறை என்பது பங்கு பற்றபவர்களிடையே வித்தியாசமான மான உணர்வுகளினை ஏற்ப்படுத்துகின்றது.
அரங்க  களப்பயிற்ச் சிப்பட்டறை எனும் போது  அச் சொற்களின் பொதிந்துள்ள பொருள்களினை நோக்கும் போது அதன் முதன்மையினை அறியலாம். அரங்கு எனும் சொல்லானது குறித்த இடத்தினை குறித்து நிற்கின்றதுஅதாவது செயல் இயங்கியலுடன் கூடிய இடத்தினை குறிக்கின்றது.  
 களப்பயிற்ச்சிப்பட்டறை எனும் போது களம் என்பதும் இடத்தினை குறித்தாலும் அதன் பொருள் கொள்ளல் வேறாகின்றது குறிப்பாக அரங்கு எனும் சொல் குறிக்கின்ற இடம் என்பது வெளியினை குறித்து நிற்க்க  'களம்' எனும் சொல்லானது பங்கு பற்றுபவர்கள் தமது ஆளுமையினை வெளிப்படுத்துவதற்கும்  தம்மை இனங்கண்டு கொள்வதற்கும்  தமது இயலுமையினை அறிந்து கொள்வதற்கும் இயலாமையினை கண்டுனாந்து  தம்மை பலம் நோக்கிய பணனத்திற்கு தகவமைத்துக் கொள்வதற்க்குமான  செயற்பாட்டினை வெளிப்படுத்துவதாக அமைகின்'றது.

பயிற்ச்சி பட்டறை எனும் போது செயற்ப்படுமேற்கொள்ளப்படுவதினையும் செயற்பாட்டின் மூலம் கற்றுக்கொள்கின்ற விடயத்தினை குறிப்பதாக பட்டறை எனும் சொல் வெளிப்படுத்தி நிற்கின்றது.
 இத்தகைய நிகழ்வு பங்கு பற்றுபவர்களுக்கு மன மகிழ்வினையும் புதிய சிந்தனை சார் கிளர்ச்சியினை ஏற்ப்படுத்துவதற்க்குமான வாய்ப்பாகவும் அமையும் என்பது எதார்த்தமாகும். 


 களப்பயிச்சிப்பட்டறையில் பல தரப்பினரும் கலந்து கொள்வதற்கான வாய்பு காணப்படுகின்றது. குறிப்பாக பாடசாலை மாணவர்கள்  இளைஞர் யுவதிகள் பெண்கள் என பல நிலைகளில் உள்ளவர்கள் பங்கு பற்றக்கூடியதாக காணப்படுகின்றது.
பங்கு பற்றுபவர்களது தள நிலையினை பொறுத்து  அவர்களுக்கான செயற்பாட்டு வடிவங்கள் மாற்றமுறுவதினையும் அவதானிக்கலாம்.
 சிறுவர்களுக்கு மேற்கொள்ளும் போது அவர்களது வயது அவர்களது இயங்கியல் பெறுமானம் அவர்களது உடல் உள செயற்பாட்டிற்க்கான தளம் என்பன கருத்தில் கொண்டே வடிவமைக்கப்படுகின்றது.
 பாபடசாலை மாணவர்கள் எனும் போது அவர்களது உள நிலை செயற்பாட்டு உந்துதல் என்பன கருத்தில் கொள்ள வேண்டிய து அவசியமானதாகும் 
பெண்களுக்கான வகையில் தனித்துவத்துடன் நிகழ்த்துவதெனின் தனியான செயல்த்தளத்துடன் வடிவமைக்கப்படவேண்டும்.
 இவ்வாறு எத்தளத்தினருக்கு மேற்கொள்கின்றோமே அவர்களது ஆளுமை வெளிப்பாட்டிற்கும் அவர்களினை செயல்முனைப்புள்ளவர்களாக்குவதற்கும் அவர்களது சிந்தனை தளத்தினை விசாலப்படுத்துவதினை நோக்காக கொண்டமைந்தவகையிலும் களப்பயிச்சிப்பட்டறைகள் நிகழ்த்தப்படுகின்றன.
இத்தகைய களப்பயிற்ச்சிப்பட்டறைகள் பல தரப்பினராலும் நிகழ்ததப்பட்டு வருகின்றன.

இவற்றில் பாடசாலைகளினை மையமாகக்கொண்டவகையில்  நிகழ்த்ப்படுகின்ற களப்பயிற்சிப்பட்டறைகள் வித்தியாசமானவையாக விளங்ககின்றன.
எம்மால் பல்வேறு பாடசாலைகளிலும் முன்பள்ளி ஆசிரியர்கள் வெளிவரி துறை மாணவர்கள் என பல தரப்பினருக்கு களப்பயிச்சிப்பட்டறை நிகழ்த்தப்பட்டுது.
 இக்களப்பயிச்சிப்பட்றையின்  வளவாளர்களாக யாழ்ப்பானம் இந்துக்கல்லூரியின் வழிகாட்டல் ஆலேசனை பிரிவுப் பொறுப்பாசிரியர் நா.கு மகிழ்ச்சிகரன் யாழ்ப்பானம் மத்திய கல்லூரியின் நாடகத்துநைப்பொறுப்பாசிரியர் எஸ்.ரி.குமரன் மானிப்பாய் இந்துக்கல்லூரி நாடகத்துறைப் பொறுப்பாசிரியர் எஸ்.ரி.அருள்குமரன் ஆகியோர் களப்பயிச்சிப்பட்டறையினை நிகழ்திவருகின்றறோம்.

களப்பயிற்ச்சிப்பட்டறைகளின் உள்ளடங்கல் வெளிகளாக  மகிழ்விப்பு , எண்ணக்கரு ,விருத்தியாக்கம்  ,கற்பiனா சக்தியினை வளர்த்துக்கொள்ளல், தலைமைத்துவப்பண்பினை வளர்த்துக்கொள்ளல், குழுச்செயற்பாடு  புதியன படைப்பதற்கான ஆற்றலினை விருத்தி செய்தல்,.  விட்டுக்கொடுப்பு போன்ற பல விடயங்களினை அடிப்படையாகக் கொண்டு களப்பயிற்சி வடிவமைக்கப்படுகி;னறன.
 பங்கு பற்றுனர்கள் தம்மை முழுமையாக வெளிப்படுத்திக் கொள்வாற்க்கும் தமக்கான சுதந்திர வெளியினை உருவாக்கிக் கொள்வதற்கும் களங்கள் திறந்து விடப்படுகி;னறன.
பயம் வெட்கம் மனிதனுக்கான மிகப்பெரிய எதிரியாக கொள்ளப்படுகின்றது. பயம் வெட்கம் நீக்கப்படுகின்ற போது புதிய சிந்தனைகள் மனங்களில் மேற்கிளம்புவதுடன் கற்பான சக்கி உருவவதினை அவதானிக்கலாம்.

 களப்பயிற்ச்சிப்பட்டறைகளின் ஆரம்பத்தில் ஒதுங்கியும் வெட்கத்துடனும் செயற்பாட்டினை மேற்கொள்வதற்கு தயக்கத்துடனும் பல் காணப்படுவார்க்ன அவர்களில் களப்பயிற்ச்சிப்ப்பட்டறையின்  நிறைவின் போது செயல் முனைப்புள்ளவர்களாகவும் தலைமத்துவப்பண்புள்ளவர்களாகவும்  பலருடனும் இணைந்து இயங்கக் கூடியவர்களாகவும் மாற்றமுறுவதினை காணலாம்.


இதற்கான பின் தளச் செயற்பாடுகளாக நோக்கும் போது ஆடல் பாடல் முழுமையாக அவர்களினை செயற்பாட்டிற்கு ஊக்குவித்தல் தன்னம்பிக்கையினை ஊட்டுதல் போன்ற செயல்தளங்களின் மூலம் அவர்கள் இயங்குவதற்கான வாயப்பபு ஏற்படுகின்றது.
 அனைவரும் திறமை யுள்ளவர்கள் என்பதும் அவர்கள் உருவவதற்கு சூழ்நிலை இன்றியமையாதது அவசியமானதாகும்.இதனையே இடம் கொடுத்தல் எனக்குறிப்பிடுகின்'றனர் 
அவர்களுக்கு இடம் கொடுக்கும் போது அவர்கள் செயற்படுவதற்கான வாய்ப்பு உருவாகும் போது தம்மை தாமே வெளிப்படுத்தி கொள்கின்றனர் என்பதே எதார்த்தமாகும்.
உளவியல் ரீதியான அனுகுமுறையுடன் பல செயற்பாடுகள் முன்னெடுக்கப்படுகின்றன. அவர்களது வாழ்வில் ஏற்ப்படுகின்ற ன துன்பங்களிற்கு முகம் கொடுப்பதற்கான வழிவகையினை  உணர்ந்து கொள்வதற்கும் தமது இலட்ச்சியம் நோக்கிய பணணத்தி னை பயணத்தினை தகவமைத்துக்கொள்வாதற்க்கும் இப்பயிச்சிப்பட்டறைகள் களமாககாணப்படுகின்றன.

களப்பயிற்ற்ச்சிப்பட்டறையில் கலந்து கொள்ளும் மாணவர்கள் தமது அநுபவத்தினை வெளிப்படுத்தும் போது தம்மால் இவ்வளது தூரம் யெற்பட முடியுமோ என நினைக்கவில்லை எனவும் எமக்குள் இவ்வளவு ஆற்றல் உண்டு என்பதழனை அறிந்து கொண்டதாகவும் மகிழ்வாக இருப்பதாகவும் பலரும் கருத்துப்பகிர்கின்றனர்.
இத்கைய செயற்பாடுகன் தொடர் இயங்கியலுடன் முன்னெடுக்கப்டவேண்டியது அவசியமானதாகும்.
அவ்வாறு மேற்கொள்ளும் போது புதிய ஆரோக்கியமான செயல் முனைப்புள்ள சமூகம் உருவாகும்.

நன்றி  பூவரசி இணைய அரையாண்டிதழ் இதழ்-03

இரண்டாம் இடம்



ஸ்கந்தரோதயாக்கலலூரியின் விஞ்ஞான விழாவினை முன்னிட்டு நடாத்தப்பட்ட நாடகப்போட்டியில் மானிப்பாய் இந்துக்கல்லூரி இரண்டாமிடத்தினைப் பெற்றுக்கொண்டுள்ளது. 
சுன்னாகம் ஸ்கந்தவரோதயாக்கல்லூரியின் கலையரங்கில் நடைபெற்ற மேற்படி நாடகப்போட்டியில்   விஞ்ஞான கருப்பொருளினை மையமாகக்கொண்ட 'வாழ்வதற்கு' என்னும்  நாடகம் இரண்டாமிடத்தினைப் பெற்றுக்கொண்டுள்ளது. 
இந்நாடகத்திற்கான எழுத்துருவாக்கம் நெறியாள்கையினை மானிப்பாய் இந்துக்கல்லூரியின் நாடகமும் அரங்கியலும் ஆசிரியர் எஸ்.ரி.அருள்குமரன் மேற்கொண்டுள்ளார். நாடகத்தின் நடிகர்களாக கலக்ஸன், சானுஜன் ,தனுசன் சிவானுஜன் ,குபேரன் ,சதீஸ்குமார், யதுசன் ஆகியோர் நடித்துள்ளனர்.  
மேடைமுகாமைத்துவத்தினை திலக்ஸன் ,சுபிதன் ஆகியோரும் இசையினை றோய்ராஜ்குமார் ,அகிலன் ஆகியோரும்  மேற்கொன்டுள்ளனர்.

இரண்டாம் இடம்

கொழும்பு றோயல்கல்லூரியின் தமிழ் நாடக மன்றத்தினால் மாணவர்களின் நாடகத்திறனை வளர்க்கும்   நோக்கில் அகில இலங்கைப்பாடசாலைகளுக்கிடையில் வருடார்ந்தம்  நாடகப்போட்டிகளினை நடாத்தி வருகின்றது. நாடகப் போட்டியில் யாழ்ப்பாணம் மத்திய     இரண்டாமிடத்தினை மானிப்பாய் இந்துக்கல்லூரி   பெற்றுக்கொண்டது

 மானிப்பாய் இந்துக்கல்லூரியின் "ஏற்றம்" என்னும் நாடகம் பெற்றுள்ளதுடன் இரண்டு விருதுகளினையும் பெற்றக்கொண்டுள்ளது. 
சிறந்த எழுத்துருப்பிரதியாளராக ஜெயரூபன் சிறந்த துணை நடிகராக விதுசன் ஆகியோர் தெரிவு செய்யப்பட்டனர்.  இந்நாடகத்திற்கான நெறியாள்கை ,நடிப்பு சார் பயிற்சிகள் வழிப்படுத்தலினை கல்லூரி ஆசிரியர் எஸ்.ரி.அருள்குமரன் மேற்கொண்டுள்ளார்.  
நடிகர்களாக ஜெயரூபன் கலைக்சன் சாறுசன் ,குபேரன் ,ஜெயகோபன், தனுசன் ,கரீஸ் ,விதுசன் தாருஷன், தவேன்சன், அகிலன் ,சஞ்சீவன், சுஜீவன் ,சுஜீவ் ,குகதாஸ் ,ரிதுசன், திஸ்னுகன் ஆகியோர் நடித்துள்ளனர்.

கொழும்பு றோயல் கல்லூரியினால் நடத்தப்பட்ட நாடகப்போட்டியில் இரண்டாம் இடம் பெற்ற மானிப்பாய் இந்துக்கல்லூரி அணியினர் மன்ற பொறுப்பாசிரியர் எஸ்.ரி.அருள்குமரனுடன்காணப்படுகின்றனர்.

இரண்டாம் இடம்

வலய மட்டத்தில் 2ம் இடம் பெற்ற உயர்வு எனும் கணித நாடக குழுவினரை படத்தில் காணலாம்.

முதலாமிடம்

வலிகாமம் வலயமட்டத்தில் நடைபெற்ற கணித நாடகப்போட்டியில் மானிப்பாய் இந்துக்கல்லூரியின் சிரேஸ்ட பிரிவினரின் விவேகம் எனும் நாடகம் முதலிடத்தினை பெற்று மாகாணமட்ட போட்டிக்கு தெரிவு செய்யப்பட்டுள்ளனர்.அணியினர் மன்ற பொறுப்பாசிரியர் எஸ்.ரி.அருள்குமரனுடன்காணப்படுகின்றனர்