என்னைப் பற்றி

சனி, ஜனவரி 05, 2013


நகுலன் காத்திரமான சஞ்சிகை

(எஸ்.ரி.அருள்குமரன்) 

போரியல் வாழ்வு மக்களது வாழ்வில் வலிகளினையும் இடப்பெயர்வுகளினை ஏற்ப்படுத்திஅவர்களது வாழ்வியிலனை சிதைத்து சொல்லொனாத்துயரங்களினை ஏற்ப்படுத்தியிருந்தது.

அத்தகைய நிலையிலும் கூட மக்கள் தமது சொத்தான கல்வியினை இழந்துவிடாது அதனை காவிச்செல்வதில்  முனைப்புக்காட்டினர்.
அக்கல்வியினை வழங்குவதில் பாடசாலைச்சமூகத்தினதுஅர்ப்பணிப்பானசேவை காலத்தினால் நினைவிற் கொள்ள வேண்டியவை ஆகும்.
போரியில் வாழ்வு முடிவுக்கு வந்த பின்னர் 20 வழுடங்களிற்கு பின்பு வலி.வடக்கு மக்கள் தமது வாழ்விடங்களிற்கு செல்லக்கூடிய சூழ்நிலை ஏற்ப்பட்டது. அப்பின்னனியில் பாடசாலைகளும் தமது சொந்த இடங்களில் இயங்குவதற்கான வாய்ப்பு ஏற்ப்பட்டது.

ஆயினும் நிலையான கட்டங்கள்  இ ன்மைகுறையாக காணப்பட்டபோதும்  அக்குறை நீக்கி  இயங்க ஆரம்பிப்பதினை காணலாம்.
 வலி.வடக்கு பிரதேசத்தில் வரலாற்று சிறப்பு வா ய் ந்த பிரதேசமாக கீரிமலைப்பிரதேசம் விளங் கு கின்றது.  இ ப் பிரதேசத்தில் அமைந்துள்ள வரலாற்றுப் பெருமை மிக்க பாடசாலையாக கீரிமலை நகுலேஸ்வரா மகா வித்தியாலயம் விளங்குகின்றது.

இத் தகையசிறப்புப்பெறுகின்ற நகுலேஸ்வரா மகா வித்தியாலயம் கல்வியுடன் இணைப்பாட விதானச் செயற்பாடுகளிலும் முதன்மை பெற்று வருகின்றது. இணைச் செயற்பாடுகளில் ஒன்றாக வித்தியாலயத்தின் நூலகப் பிரிவின் வெளியீடாக "நகுலன்" என்னும் சஞ்சிகையானது   வெளியீடு செய்யப்பட்டுள்ளது. 
மீண்டும் தொடங்கும் மிடுக்கு' எனும் அடிப்படையில் வித்தியாலய செயற்பாடுகளாக நகுலன் சஞ்சிகையின் வருகை அமைகின்றது. 
இச் சஞ்சிகையில் ஆசிரியர் , மாணவர்களது ஆக்கங்கள் என்பவற்றுடன் வித்தியாலயத்தின் நிகழ்வுகளும் செயற்பாடுகளும் உள்ளடக்கப்பட்டுள்ளன.
வித்தியாலய அதிபர் சு.ஸ்ரீகுமரனின் வழிகாட்டலில் வித்தியாலய ஆசிரியர் செ.கமலக்கண்ணனை ஆசிரியராகக் கொண்டு இச் சஞ்சிகை வெளிவந்துள்ளது.
மாணவீயப்படைப்பாளிகள் உருவவதற்கான களமாக பாட சாலைவெளிகள் விளங்குகின்றன 
அப் பின்னனியில் இளம் எழுத்தாளர்களுக்கான களமாக இச் சஞ்சிகை  விளங்குகின்றமை குறிப்பிடத்தக்கது.

சஞ்சிகையின் ஆக்கங்களாக தரம் 11 மாணவி சி.நிதர்சனாவின் மனித வாழ்வை வளம்படுத்தும் இலக்கியங்கள், தரம் 4 மாணவன் ஜெ.டிலான்சனின் பிராணிகளிடத்தே வளர்ந்துள்ள விசேட ஆற்றல்கள், திருமதி. யா.சத்தியசீலனின் நானோ தொழில் நுட்ப யுகத்துக்குள் நுழைவோம், திருமதிவி.விமலச்சந்திரனின் மகாகவி சுப்பிரமணிய பாரதியார் கட்டுரைகளும் மற்றும் பல மாணவர்களின் ஆக்கங்களும் உள்ளடக்கப்பட்டுள்ளன.

பாடசாலையில் இருந்து வெளிவருகின்ற சஞ்சிகை ஒன்று கொண்டிருக்க வேண்டிய தகுதிப்பாட்டுடன் கீரிமலை நகுலேஸ்வரா வித்தியாலயத்தின் முதல் படைப்பாக வெளிவந்துள்ள நகுலன் சஞ்சிகையானது காத்திரமான படைப்புக்களினை தன்னகத்தே கொண்டமைந்து விளங்குகின்றது.
மீள் குடியேறிய பாடசாலை இப்பாடசாலை அதீத வளங்களினை கொண்டிராத போதிலும் தமது இயலுமைகளினை அடிப்படையாகக்கொண்டு இஞ் சஞ்சிகையினை வெளிக்கொணர்ந்துள்ளமை சிறப்பிற்குரிய விடயமாகும்.