என்னைப் பற்றி

வெள்ளி, பிப்ரவரி 22, 2013


  மானிப்பாய் இந்துக்கல்லூரி வெற்றி


காங்கேசன்துறை மாவட்ட பிரிவுக்குட்பட்ட சாரணியப்பாடசாலைகளுக்கிiடியலான நாடகப்போட்டியில் மானிப்பாய் இந்துக்கல்லூரி முதலாமிடத்தினைப்பெற்றுக்கொண்டுள்ளது. மானிப்பாய் இந்துக்கல்லூரியின் வாகீசர் மண்டபத்தில் நடைபெற்ற மேற்படி நாடகப்போட்டியில் மானிப்பாய் இந்துக்கல்லூரியின் உதவி என்னும் நாடகம்முதலாமிடத்தினைப்பெற்றுக்கொண்டுள்ளது. இந்நாடகத்துக்கான எழுத்துருவாக்கம் நெறியாள்கையினை கல்லூரி ஆசிரியர் எஸ்.ரி.அருள்குமரன் மேற்கொண்டுள்ளார். இப்போட்டியில் இரண்டாமிடத்தினை வட்டுக்கோட்டை யாழ்ப்பாணக்கல்லூரியும் மூன்றாமிடத்தினை வட்டு மத்திய கல்லூரியும் பெற்றுக்கொண்டது. 

 (எஸ்.ரி.அருள்குமரன்)

கல்வியின் ஊடான  சமூக அபிவிருத்திப் பதையில் -யாழ் எயிட் 

வடக்கின் வசந்தம் வீசும் யாழ் நகரில் பல புதிய புதிய செயற்திட்டங்கள். புதிய புதிய லாபகரமான முன்னகர்வுகள்.   பழையன கழிதலும்   புதிய புகுதலும் என்று வாழ் நாட்கள் கழிக்கப்படகின்றன.
இளையோர். எல்லாம் கல்வியே மூச்சென்று சதா அலைந்து திரியும் காலம் இது. கல்வி கரையில. கற்பவை நாட்சில. கல்வி என்பது ஒவ்வொரு தனிமனிதனின் அடிப்படை உரிமையாகும். கல்வி மனித தனியுடமை என்பது எமது நாட்டினதும், ஐக்கிய நாடுகளினதும் சாசனக் குறிப்புக்களின் பதிவாகும் விடயம்.
யாழ்ப்பாணத்தின் தொடர்ச்சியான யுத்த நிலையின் பின் விளைவுகள் சுனாமி, நிஷா என்பவற்றின் தாக்கம் குடும்ப வலைப்பின்னலில் கனதியான தாக்க விளைவுகளை ஏற்படுத்தியிருக்கிறது.
இதன் காரணமாக எம் இளம் சமுதாயத்தின் மத்தியில் உறவுகள் பிரிதல், தங்கி வாழ்தல், வறுமை, தொடர்ந்து கல்வியை கற்க முடியாமல் இடைவிலகுதல், குறைந்தளவு ஊதிய வருமானத்தை பெற்று குடும்பச் சுமையை தமது தோள்களில் தாங்கி விடுமோ என்ற அபிலாசை என்பன மாணவர்களிடையே கல்வியைப் பெற்று கொள்ளுவதற்கு தடைகளாக விளங்குகின்றன.
இவ்விடர்பாடுகளை முகம் கொடுத்து மாற்று சிந்தனையுடன்   எம்மிடையே இயங்குபவர்கள் குறைவாக உள்ளது வேதனைக்குரியது.
ஆயினும் தன்னலம் பாராது மாணவர்களது எதிர்கால மேம்பாட்டினைக் கருத்தில் கொண்டு அவர்களது வளர்ச்சிக்கான ஆக்க பூர்வமான ஒத்துழைப்புக்களினை வழங்குபவர்கள் எம்மிடையே இல்லாமல் இல்லை. அவ்வகையில் 'யாழ் எயிட்' என்னும் நிறுவனம் கடந்த இருவருடமாக ஆற்றிவரும் காத்திரமான பங்களிப்பு நினைவு கூறத்தக்கது.
'கற்கை நன்றே கற்கை நன்றே பிச்சை புகினும் கற்கை நன்றே' எனும் மகுடவாசகத்தினை கொண்டியங்கும் இந் நிறுவனம் இரு வருடமே நிறுவன ரீதியான இயக்கம் பெற்றிருப்பினும் அதற்கு முன்பே இந் நிறுவன ஸ்தாபகராகிய சூடானில் வாழும் திரு.வு.சபேசன். மற்றும் இதன் பணிப்பாளர் திரு.ளு.கமலக்கண்ணன் ஆகியோரின் தனிப்பட்ட முயற்சியினால் வறுமையின் காரணமாக பாடசாலைக்கு செல்ல முடியாதவருக்கு விடுதிவாய்ப்புடன்ஆன கல்விக்கும், தனியார் நிறுவனத்தில் கற்பதற்கான உதவித்தொகை வழங்கல் என்று செயற்பட்ட போதும் இப்பிரச்சனையுடனான தேவை கணிப்பு அதிகரித்த போது யாழ் எயிட் எனும் நிறுவனமானது 07.07.2010 அன்று உதயமானது.
தனது செயல் முனைப்போடு கூடிய காத்திரமான பணியின் முதல் வேலைத் திட்டத்தினை 08.10.2010 அன்று மயிலிட்டியில் இருந்து இடம் பெயர்ந்து ஆனைக்கோட்டையில் இயங்கும் மயிலிட்டி றோமன் கத்தோலிக்க பாடசாலையில் ஆரம்பித்தது.
இவ்வகையில் வறுமை காரணமாக பாடசாலை மாணவர்களிடையே காலணி அணிந்து வருதல் என்பது ஒரு பெரும் பிரச்சனையாக அமைந்தமையால்
1. காலணிவழங்கல்.
2. கற்றல் உபகரணங்கள் வழங்கல்.
3. புத்தகப்பைகள் வழங்கல்.
4. கல்வியில் முன்னேற்றகரமான பின் தங்கிய பிரதேச மாணவர்களுக்கு, நகரப் பாடசாலையின் விடுதியில் தங்கி கல்வியை கற்பதற்கான உதவி.
5. தூர இடங்களிலிருந்து பாடசாலைக்கு வரும் மாணவர்களுக்கு துவிச்சக்கர வண்டிகளை வழங்கல்.
6. மாற்றுவலுவுடையோருக்கு சக்கர நாற்காலிகளை வழங்கல்.
7. குடும்ப முரண்பாடுகளினைத் தீர்த்து மாணவர்கள் தொடர்ச்சியான கல்விக்கு முகம் கொடுக்கும் வகையிலான உள ஆற்றுப் படுத்தல் பயிற்சிகள்.
8. க.பொ.த.சாதராண பரீட்சைக்குபின் தொழில் தேடும் மாணவர்களுக்கு இயந்திரவியல் ரீதியான தொழில் பயிற்சிகளை ஊதியத்துடன் வழங்கல்.
9. கல்வியில் அதி ஊக்கம் காட்டும் பின்தங்கிய குடும்பம் சேர்ந்த மாணவர்களுக்கு தனியார் கல்வி நிறுவனங்களில் கல்வி கற்பதற்கான உதவித் தொகை வழங்கல்.
என்னும் பல்வேறான பணிகளை ஆற்றுகின்றது.
இந்நிறுவனத்தின் உருவாக்கம் பற்றி அதன் பணிப்பாளர் திரு.ளு.கமலக்கண்ணன் குறிப்பிடும் போது 'எங்கெல்லாம் ஏதோ ஒரு காரணத்தின் விழைவாக பாதிக்கப்பட்டு கல்வியைத் தொடர முடியாதவர் கள் உள்ளார்களோ அங்கு எம்மால் ஆகிய உதவியை ஆற்றவேண்டும். சிறிய அளவிலான முயற்சியைக் கொடுத்தாவது இடையூறு அற்ற கல்வியை மேற்கொள்ள வைப்பதே எமது நோக்கம்' என்று குறிப்பிட்டார்.
குறிப்பாக இந்நிறுவன பணி இருரீதியான நோக்கில் அமைந்துள்ளது.
1. கிராமத்துப் பாடசாலை மாணவர்களின் கல்வி மேம்பாடுக்கு உதவுதல்.
2. மீள் குடியேற்றப்பட்ட மாணவர்களின் கல்வி நலனுக்கு உதவுதல்.
கிராமப் பாடசாலை வரிசையில் குருநகர்.புனிதறோ.க பாடசாலை, தீவக சரவனை சின்னமடு குட்டியபுலம் அ.த.க பாடசாலை, காரைநகர் தோப்புகாடு மறைஞானசம்மந்தர், ஆனைக் கோட்டை றோமன் கத்தோலிக்க தமிழ்க் கலவன் பாடசாலை, திருநெல்வேலி இ.த.க.பாடசாலைகள். நவாலி அட்டகிரி, கட்டுடை சைவ வித்தியாலயம், நவாந்துறை றோமன்.க.பாடசாலை,கோப்பாய் மாகாவித்தியாலயம், கோப்பாய் றோமன் கத்தோலிக்க பாடசாலை, கோப்பாய் தெற்கு கந்தவேள் வித்தியாலயம், கரைநகர் ஊரிஅ.மெ.மிஸன் பாடசாலை,புன்னாலைக்கட்டுவன் த.க.பாடசாலை, வலிகாம வலயத்திற்குட்பட்ட பாடசாலைகள் 133பாடசாலையில் தெரிவு செய்யப்பட்ட மாணவர்கள, யாழ்ற்றன் கல்லூரி, தெல்லிப்பழைக் கோட்ட தெரிவு செய்யப்பட்ட மாணவர்கள், உடுவில் மான்ஸ்
மீள் குடியேற்றப்பட்ட பாடசாலைகள்
மயிலிட்டி.றோ.க.த.கபாடசாலை, கீரிமலைநகுலேஸ்வராமகாவித்தியாலயம், இளவாலை சிறுவிளான், மாவைக் கலட்டி கூவில், காரைநகர் வேரப்பிட்டி ஸ்ரீகணேச வித்தியாலயம், ஆகிய பாடசாலைகள்.
பிரதேசவாதம், மதவாதம் எனும் சங்கிலிப் பிணைப்புகளின் யன்னல்களைத் தாண்டி யாழ் எயிட் திருகோணமலை, மூதூர், மட்டக்களப்பின்படுவான்கரை, சம்பூர், கட்டைப்பரிச்சான், கடற்கரைச்சேனை, தோப்பூர், கச்சைக்கொடி போன்ற 7 பகுதி இடம் பெயர்வு வெள்ள அனர்த்தம் என்பவற்றால் பாதிக்கப்பட்ட 1600க்கு மேற்ப்பட்ட மாணவர்களுக்கு உதவிக்கரம் நீட்டியுள்ளது.
பெரும் திட்ட முன்னகர்வுகள், பெரிய நிதிவளத்திட்டல் என்று முன்னேற்ற பாதையில் தனது காலை பதிக்க யாழ் எயிட் முனையவில்லை. ஒருசிலரின் வருமானத்தின் பின் விழைவாகவும், உதவியாற்ற முன் வரும் சிலரின் நல்மனப் பாங்கால் வளரும் யாழ் எயிட் இருவருடத்திற்குள் பல பயனாளிகளின் தேவையை நிறைவு செய்துள்ளது.
   

இச் செயற்பாடு தொடர்பாக இந்நிறுவன களஉத்தியோர்களைக் கேட்டபோது நாம் பாடசாலைகளுக்கு நேரில் சென்றே மாணவர் விபரங்களைச் சேகரித்து உதவிகளை வழங்குகின்றோம். இதனால் உதவிகள் தகுந்த மாணவர்களையே சென்றடைகின்றது. எமது இம் முயற்சிக்கு பல பாடசாலை அதிபர்கள், ஆசிரியர்கள், கோட்டக்கல்விப் பணிப்பாளர்கள், வலிகாம்வலயக்கல்விப் பணிப்பாளர்; பங்காற்றியுள்ளனர்.
ஆயினும் யாழ்ப்பாணம் கல்வியின் நிறைவு தள நிலை அடைந்துவிட்டது என்று நாம் கூறினாலும் கிராமப் பாடசாலை மாணவர்கள் கல்வியில் அதிகளவு ஆர்வம் காட்டும் போதும் அவர்களின் வாழ்க்கையே ஒரு புத்தகமாக உள்ளது. பாடசாலைக்கு வரும் மாணவர்கள் படிப்பை படிப்பதற்கு முன் அவர்களை நாம் படிக்கவேண்டியுள்ளது. என்று ஆசிரியர்கள் கூறுகிறார்கள்.

ஏனெனில் அவர்களுக்குபின் கனதியான தேவைகள், கனவுகள் உள்ளது. உணவு, உடை, உறையுள் அன்பு தேவை என்று வகை நீண்டு செல்கிறது. உளவியளாலர் மாஸ்லோ கூறியது போல 'ஒரு மனிதன் தனது தேவை நிறைவேறாத போது அதிலே தரித்து விடுகிறான்' அந்த தரிப்பை ஏற்படுத்தாமல் அவர்களும் குதுகலமாய் வாழ வேண்டும் என்பதற்காக எமது சின்னம்
   குதுகலிப்பையும் பச்சை பசுமையும் செம்மஞ்சள் எமது பண்பாட்டினை பிரதிபலிக்கிறது. இதன் ஊடே சிறுவர்களது எதிர்கால மேம்பாட்டினையும் அவர்களின் வாழ்வினை சிறப்பிக்கும் தோழனாயும் யாழ் எயிட் விளங்குகிறது.
இருட்டு இருட்டு என்று இருட்டை பழிப்பதை விட இருட்டை விலக்க ஒரு மெழுகுதிரியை ஏற்றி துணைபுரியும் முயற்சி யாழ் எயிட்டினது புலம்பெயர்ந்து யாழ்நகருக்கு வருகைதரும் பலரின் எதிர்பார்ப்பும் கூட யாழ்ப்பாண மாணவர்கள் தமது கல்வி சிறந்த அடைவுகளை அடைவதற்கு துணைபுரிய வேண்டுமென்பதே. ஆகவே சிறுவர்களின்  நல்ல எதிர்காலத்தை நலமுடன் காப்பதற்கு ஆன உதவிக்களமாக யாழ் எயிட் அமைந்திருக்கிறது. எனவே நாம் இழக்க முடியாமல் உள்ளதும் சுதந்திரமாக வழங்கக் கூடியதாகவும் உள்ள ஒரே விடயம் கல்வி என வலிகாமம் வலய கல்விப் பணிப்பாளர் ஆர்.இராஜேந்திரன் ஒரு நிகழ்வில்   குறிப்பிட்டது போன்று  'அன்ன சத்திரம் ஆயிரம்வைத்தல்
ஆலயம் பதினாறாயிரம் நாட்டல்
பின்னர் உள்ளவை தர்மங்கள் யாவும்
பெயர் விளங்கி ஒளிர நிறுத்தல்
அன்னயாவினும் புண்ணியங்கோடி
ஆங்கோர் ஏழைக்கு எழுத்தறிவித்தல் எனும் நேரிய சிந்தனையுடன் கல்வியினை பெறுதலுக்கான காத்திரமான பணியினை காலத்தில் தேவையுணர்ந்து ஆற்றிவரும் யாழ் எயிட் நிறுவனத்தின் பணி தொடர வேண்டும்.