என்னைப் பற்றி

திங்கள், பிப்ரவரி 28, 2022

சுன்னாகம் பொது நூலகத்தினை தேசிய ரீதியில் கவணிப்பிற்குரிய நூலகமாக மாற்றிய பொது நூலகர் கணேசஜயர் சௌந்தரராஜன்

சுன்னாகம் பொது நூலகத்தினை தன்னுடைய அர்ப்பணிப்பான சேவை மூலம் வடமாகாணத்தின் சிறந்த நூலகமாக்கியதுடன் தேசிய ரீதியில் கவணிப்பிற்குரிய நூலகமாகவும் ஆக்குவதற்கு பணியாற்றிய சுன்னாகம் பொது நூலகர் கணேசஜயர் சௌந்தரராஜன் அனலை சதாசிவ மகாவித்தியாலயம் வேலனை மத்திய கல்லூரி ஆகியவற்றின் பழைய மாணவராகிய இவர் கலைத்துறையில் பட்டதாரியாகவும் நூலக டிப்ளோமா பட்டதாரியாகவும் தனது கல்வித்தகைமையினை கொண்டுள்ளார். 1979 ஆம் ஆண்டு அனலைதீவு பொது நூலகத்தில் நூலகராக இணைந்து கொண்டதுடன் ஊர்காவற்றுறை மருதனார்மடம் (உடுவில்) சுன்னாகம் பொது நூலகங்ளில் நூலகராகவும் கடமையாற்றியுள்ளார். அனலை தீவு நூலகத்தில் கடமையற்றிய போது நூலக வளர்ச்சிக்கு காத்திரமான பங்களிப்பினை நல்கியதுடன் இலக்கியத்துறையின் வளர்ச்சிக்கு அனலை என்னும் கையெழுத்து சஞ்சிகையினை வெளியிட்டிருந்தார். சுன்னாகம் பொது நூலகத்தில் நூலகராக கடமையினை பொறுப்பேற்ற பின்பு பல காத்திரமான பங்களிப்பினை நல்கியதுடன் நூலக வளர்ச்சிக்கும் பணியாற்றியுள்ளார். நூலக ஆலோசனைக்குழு நூலக வாசகர் வட்டம் வலி தெற்கு பிரதேசசபை வாசகர் வட்டம் என்பவற்றினை உருவாக்கியதுடன் அவற்றின் செயலாளராகவும் கடமையாற்றி மதாந்த கலை நிகழ்வுகள் நூல்கள் சஞ்சிகைளின் அறிமுக நிகழ்வுகள் நடமாடும் நூல சேவை கலைஞர்கள் கௌரவிப்பு உலக நாட தினம் சிறுவர் தினம் பெண்கள் தினம் தேசிய வாசிப்பு மாத நிகழ்வு கா.பொ.தா சாதாரணதர கா.பொ.த.உயர்தர மாணவர்களுக்கான பரீட்சை வழிகாட்ல் கருத்தரங்குகள் என்பவற்றினை ஒழுங்கமைத்து சிறப்பான வழிநடாதத்தியுள்ளார்.  சுன்னாகம் பொது நூலகத்தின் வலிதெற்கு பிரதேச வாசகர் வட்டத்தின் வெளியீடாக வெள்ளிமலை என்னம் சஞ்சிகையினை வெளியிட்டு வைத்ததுடன் அச்சஞ்சிகையின் தொடச்சியான வருகைக்காக உழைத்துள்ளார். வெள்ளிமலை சஞ்சிகையின் மூலம் பிரதேச எழுத்தாளர்கள் ஊக்குவிக்கப்பட்டுள்ளதடன் பிரதேச ரீதியான கலைமரபுகள் பண்பாட்டு விழுமியங்களின் ஆவணமாக்கல் செயற்பாட்டினையும் மேற்கொண்டார். வடமாகாண நூலக பணியாளர்கள் ஒன்றியத்தின் செயலாளராக இருந்து நூலகர்களது பணிக்கு ஆக்க பூர்வமான பங்களிப்பினை ஆற்றியிருந்தார். அத்துடன் நூலக விழிப்புணர்வு நிறுவகம் என்னும் அமைப்பின் இணைச்செயலாளராகவும் இருந்து முப்பரிமாண செயற்பாட்டினை சுன்னாகம் பொது நூலகத்தில் அறிமுகப்படுத்தி வைத்தமை குறிப்பிடத்தக்கது. இவர் தன்னுடைய அர்ப்பணிப்பான நூலக சேவையூடாக சுன்னாகம் பொது நூலகத்தினை வடமாணத்தின் சிறந்த நூலகமாக செயற்படுத்தியதுடன் அதற்கான விருதினையும் பெற்றுக்கொண்டதுடன் வடமாகாணத்தின் இரண்டாவது சிறந்த நூலகராகவும் தெரிவு செய்யப்பட்டார் என்பது குறிப்பிடத்தக்க விடயமாகும்.  நூலக சேவைக்காகவே தன்னை அர்ப்பணித்து காத்திரமான பங்களிப்பினை ஆற்றி நூலகத்துறையின் வளர்ச்சிக்காக பங்களிப்பு செய்து நூலக சேவையில் இருந்து ஓய்வு பெற்றார். இவருடைய நூலக சேவையானது காலத்தின் சிறப்பிற்குரிய சேவையாக விளங்குகின்றது. எங்களைப்போன்ற இளைஞர்களினை எழுத்துலகிலகில் வளர்வதற்கு ஆக்கபூத்வமான கருத்துக்களுடன் களமமைத்துக்கொடுத்தவர்.மேலும் அரங்க செயற்ப்பாடுகளில் ஈடுபடுவதற்கு வாய்ப்பளித்ததுடன்எங்களுடன் இனைத்து அரங்காடியுள்ளார்.அவர் ஓய்வு பெற்று செல்வது அத்துறையில் இடைவெளியினை ஏற்ப்படுத்தியுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது. சுன்னாகம்பொதுநூலகத்தின்  கலைகலாசாரகுழுவின் உபதலைவர் எஸ்.ரி.அருள்குமரன்