என்னைப் பற்றி

சனி, பிப்ரவரி 18, 2017

அரங்கு காலத்தின் பதிவினை கச்சிதமாக வெளிப்படுத்துகின்ற ஊடகம். சமூகத்தின்  கதையியலினை காட்சிப்புரிதல்களுடன் வெளிப்படுத்துகின்றவகையில் முதன்மையான கலை வடிவமாக விளங்குகின்றது. இதனால் தான் காலத்தினை விஞ்சி நிற்கின்ற வடிவமாக விளங்குகின்றது.
 ஈழத்தமிழங்கினை பொறுத்தவரையில் காத்திரமான நாடகஆசிரியர்கள் காலம் தோறும் முகிழ்ந்தமையினை வரலாற்றோட்டத்தில் காணக்கூடியதாக உள்ளது. இவர்களில் குறிப்பிடத்தக்க நாடகஆசிரியராக மாகாகவி எனும் பெயருக்கு சொந்தக்காரரான து.உருத்திரமூர்த்தி விளங்குகின்றார்.
இவர் பா நாடகங்களினை யார்த்துடன் குறும்பா எனும் கவிதை வடிவத்தின் ஊடாக ஈழத்து இலக்கியபரப்பில் கவனத்திற்கு உட்பட்ட படைப்பாளியாக விளங்குகின்றார். பா நாடகங்கள் எனும் வகுதியாக  கவிதை நடையிலான நாடகங்களினை குறிப்பிடுவர் இப்பகைப்புலத்தில் இவரால் படைக்கப்பட்ட பா நாடகங்களாக கோடை,புதியதொருவீடு,முற்றிற்று எனும் நாடகங்கள் விளங்குகின்றன.
 இவற்றில் புதியதொரு வீடு எனும் நாடகமானது அ.தாஸிஸியஸயசினது தூண்டுதலினால் 1969 ம் ஆண்டு  எழுத்தப்பட்டு  1971ம் ஆண்டு முதலில் அ.தாஸிஸியஸஸனாலே நெறியாழ்கை செய்யப்பட்டது.
பின்னர் பல்வேறு காலகட்டங்களிலும் பல நெறியாளர்களினால் நெறிப்படுத்தப்பட்டது.
கொழும்பு திருமறைக்கலாமன்னறத்தினால் 1999ம் ஆண்டு பிரான்சிஸ்ஜெயனத்தினால் நெறியாழ்கை செய்யப்பட்டு மேடையிடப்பட்டது.
 பின்னர்யாழ்ப்பான திருமறைக்கலாமன்றத்தினால் மீண்டும் தாயரிக்கப்பட்டு கடந்த ஆண்டு ஆகஸ்ட் மாதம் கொழும்பில் நடத்திய இரண்டு நாள் நாடக விழாவில் மேடையிடப்பட்டதுடன்,யாழ்ப்பானத்தில் ஒக்ரோபர் மாம் நிகழ்த்தப்பட்டதுடன், தற்போது கடந்த வாரம் கடந்த வாரம் மீளவும் கலைத்தூது மண்டபத்தில் அரங்கு நிறைந்த பார்வையாளர் மத்தியில்   நிகழ்த்தப்பட்டது.
 இந்நாடகமானது   மீனவ சமூகத்தினை பின்னனியாக கொண்டு படைக்கப்பட்டுள்ளது. புயல் ஒன்றினூடாக சிதைவுறும் குடும்பமொன்றில் ஏற்ப்படும் நெருக்கீடுகளும் அந்நெருக்கீடுகளுக்கு தீர்வு காண முற்ப்படும் போது எதிர் பாராது எழும் சவால்களை மானிடர்களாக நின்று அதனை எவ்வாறு எதிர்கொண்டு வாழ்வது என்ற முடிவினையும் கொண்டு காணப்படுகின்றது.
இந்நாடகத்தில் மாயன் -பொ.தை.ஜஸ்ரின்ஜெலூட், மயிலி-வி.றீற்றா பிரிதர்சினி.மன்னவன்-யோ-அபிசேக்,மாசிலன்- பொ.தை.ஜஸ்ரின் மிநோசன்,மையுன்ட நெடுங்கண்ணாத்தை-வைதேகி செல்மர் எமில், மறைக்காடர் பி.யூல்ஸ் கொலின், பாடகர்கள்- இ.ஜெயகாந்தன், அ.அன்றுயூலியஸ், ச.கௌரி, அ.றொக்சன், மனோஸ், ,மீனவர்கள்- யூ.அஜீத்,சி.துசிகரன், அ.றஜீவ், கே.ஜீவிதன், அ.ஜெனிஸ்குமார், கா.சுரேன், இசை-இசைத்தென்றல் ம.யேசுதாசன், உதவி இ.ஜெயகாந்தன், பொ.தை.ஜஸ்ரின் ஜெலூட்,செ.ஜெறி ஸ்ரலின்,இசைக்கருவிகள்- ஓர்கன்-ம.யேசுதாசன், தபேலா-பி.எக்ஸ்.கலிஸ், தபேலா-வருன்,கொங்கொர்ஸ்- மு.தனபாலசிங்கம், வேடஉடை,ஒப்பனை அ.அன்றுயு}லியஸ், ஒப்பனை அ.அன்றுயு}லியஸ்,பொ.தை.ஜஸ்ரின் ஜெலூட் காட்சிவிதானிப்பு ,ஒளிவிதானிப்பு -அ.யோசவ், -ஊடகம்- கி.செல்மர் எமில்பொதுநிர்வாகம்- சி.எம்.நெல்சன்,சிகிறிஸ்தோபர்,சூ.சதீஸ்குமார், நிர்வாக உதவி-பே.எமில் சர்வானந்தன், நெறியாழ்கை உதவி-தை.பொ.ஜஸ்ரின் ஜெலூட், கே.ஜீவிதன்,உதவி நெறியாழ்கை,அரங்கமுகாமை- வைதேகி செல்மர் எமில்,நெறியாழ்கை யோ.யோன்சன் ராஜ்குமார் ஆகியோர் இவ்;வாற்றுகையில் பங்குபற்றியுள்ளனர்.
கவிதை பாங்கான நாடகத்தினை எளிய வடிவில் அதாவது யதார்த்த்தினை புலப்படுத்துகின்ற வகையில் நாடகமாக அ.தாஸிஸியியஸினால் ஆரம்பத்தில் நெறியாழ்கை செய்ப்பட்டிருந்தது. இப்பின்னனயில் சிறந்த முறையில் இந்நாடகம்  படைக்கப்பட்டிருந்தமை குறிப்pடத்தக்கது. ஒவ்வொரு பாத்திரங்களும் தமக்குரிய வகிபங்கினை கனதியாக புரிந்துகொண்டவகையில் பாத்திரங்களிற்கு உயிர் கொடுத்து நடிப்திருந்தனனர் இதனால் பார்ப்போருடன் எளிதான ஒன்றிக்க கூடியதாக இருந்தது.
ஒண்டரை மணி நேர முழு நீள நாடகம் என்கின்ற நினைப்பற்ற வகையில்;   ரசனைக்குரிய வகையில் காட்சிப்புரிதல்களுடன், நவீனத்துவ வடிவங்களினையும் உள்வாங்கி  வெளிப்படுத்தப்பட்டிருந்தது.
புயலிற்கு பின்னர் தனது வீடு தேடி வருகின்ற மாயன் தனது வீடு எங்கே என 'அரியகுட்டி பெற்றெடுத்த புதல்வன் மாயனது வீடு எங்கே என தனது புதல்வனிடமே கேட்டுக்கொள்வது தனது புதல்வன் என்றே தெரியாமல் அவனுக்கு மீன் பிடிக்க கற்றுக்கொடுப்பது. தனது ஊர் பல மாறுதல்களுடன் இருப்பதினை பிரமிப்புடன் கான்பது எல்லாம் துயரத்தின்சுமைகளாகும் இவை ஆர்ப்பாட்டமில்லாத வகையில் எளிமையாக தனது தோந்த நடிப்பின் மூலம் வெளிபப்டுத்தி பார்ப்போர் மனதில் இடம்கொள்கின்றார் மாயனாக பாகமாடிய பொ.தை.ஜஸ்ரின்ஜெலூட், அதேபோன்று  மையுன்ட நெடுங்கண்ணாத்தை பாத்திரமேற்றவர் ஊரில் உள்வர்களது பாவனையினை வெளிப்டுத்திபார்வையாள்களது ரசிப்பிற்கு உள்ளாகின்றார். மயிலிஇ என அனைத்து பாத்திரங்களும் தமக்குரிய பானியில்   ; உச்சவெளிப்பாட்டினை வெளிப்படுத்தியிருந்தன.
நாடகப்படைப்பொன்றில் இசை உயிப்பான விடயமாக குறிப்பிடுவர்.நாடகத்தின் மனநிலையினை ,காட்pக்கள் இருக்கின்ற வலியினை, பார்ப்போருடன் ஊடாடுவதற்கான களவெளியினை  இசை கச்சிதமாக வெளிப்டுத்துகின்ற போது படைப்பு முழுமைப்படுத்தப்படுகின்றபோது வெற்றிகரமான படைப்பாகவும் மிளர்கின்றது. அப்பின்னனியில் பாடல்கள், பின்னனி இசை நாடகவோட்டத்திற்கு துனை செய்யும் வகையில் பார்ப்போர் நாடகத்திற்குள் இனைகின்றவகையிலும் வெளிப்படுத்தப்ட்டுள்ளமை சிறப்பிற்குரியதாகும்.
 இந்நாடகத்தின் நெறியாளள் யோன்சன்ராஜ்குமார் ஈழத்தமிழங்கினை பொறுத்தவரையில் முதன்மையான நெறியாளராக விளங்குகின்றார். இவர் நெறியாழ்கை செய்த அற்றை திங்கள் கொல்லெனும் கொற்றம் போன்ற நாடகங்கள் குறிப்பிடத்தக்கன. இவை அரங்க புலத்தில்  புதிய படைப்பாக்க அனுகுமுறையுடன் படைக்கப்பட்ட வடிவமாக விளங்குகின்றது. இப்பின்னனியில் இந்நாடகம் அழகியல் பூர்வமான முறையில் படைக்கப்பட்டமை குறிப்பிடத்தக்கது.
 க.பொ.த சாதாரனதரத்தில் நாடகமும் அரங்கியலும் பாடத்துறையில் தோற்றுகின்ற மாணவர்களது பயில் நிலை அநுபவத்தினை பெற்றுக்கொள்வதற்கான  நாடகபாடமாக அவ் நாடகபாடம் கல்வித்திட்டத்தில் இணைக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.