என்னைப் பற்றி

ஞாயிறு, ஆகஸ்ட் 18, 2013

(எஸ்.ரி.அருள்குமரன்)


இலண்டன் தமிழ் அவைக்காற்றுகைக்கலைக்ககத்தினரின்

 35 ஆவது நாடக விழா

நாடகம் எனும் கலைவடிவமானது நீண்ட வரலாற்றுப்பரம்பரியங்களினை கொண்டதாகும்.மனித உணர்வுகளினை கருத்தியல் ரீதியாக வெளிப்படுத்துவதில் காத்திரமான பங்க வகிப்பதினாலும் ஆற்றுகையாளன் மூலம் பார்வையாளர்களிற்கு நேரடி உயிர்ப்பு விசையினை வழங்குகின்ற வகையிலும் நாடகங்களிற்கான சமூகவியற்பெறுமானம் கனதியாக காணப்படுகின்றது.

நாடகங்களின் பின் உந்துதல்கள் ஈடுபடுபவர்களிடையே ஆளுமை மாற்றத்திற்க்கும் படைப்பின் ஊடாக சமூகவியற் பெறுமானத்தில் மாற்றங்களினை கொணர்வதிலும் முக்கிய பங்கு வகிக்கின்றன.
நாடகம் என்பதினை (மேடை) வெளிகளில் அசைவியல் கருத்தியல் ஊடாக தகவமைக்கப்படுகின்ற நிகழ்த்துகையாக கொள்ள முடியும். இதன் உயிர்ப்பு ஆற்றுகையாளர் தமது இயங்குதலின் ஊடாக நாடகப்பிரதியின் உயிர்பினை  பார்ப்போரிடையே கொண்டு  செல்வதுடன் உறவுப்பினைப்பினையும் ஏற்ப்படுத்துகின்றனர்.

அவ்வகையில் பிரதியில் எடுத்தாளப்படுகின்ற விடயங்கள் ஆற்றுகையாளரினால் முழுமையாக உய்த்துனர்ந்து வெளிப்படுத்தும் போது படைப்பு பார்ப்போரிடையே  வெற்றியினை பெறுகின்றது.
 
நாடகத்தின் வெற்றியிலே  ஆற்றுகையாளர்களிற்கான முக்கியத்துவம் எவ்வாறு உள்ளதோ அதே போன்று படைப்பினை உருவக்கிக்கொள்வதில் நெறியாளர்களது செயற்ப்பாடுகளும்  கனதியானவையாக காணப்படுகின்றன.
ஈழத்து அரங்கினை பொறுத்தவரையில் காலம் தோறும் கனதியான நெறியாளர்களினை காலம் பிரசவித்துக்கொண்டிருக்கின்றது எனும் எதார்த்த்தின் மத்தியில் 1970களில் கோலேட்ச்pய நெறியாளர்களில் ஒருவராக க.பாலேந்திரா விளங்குகின்றார்.

யாழ்ப்பானம் அரியாரலயில் பிறந்த இவர் பொறியியல் பட்டதாரியாவர் ஆயினும் இவரது ஆர்வம் நாடகத்துறையில் காணப்பட்டமையினால் நாடக செயற்ப்பாட்டில் தன்னை ஈடுபடுத்திக்கொண்ட இவர் அக்காலப்பகுதியில் கனதியான பல நாடகங்களினை மேடையிட்டிருந்தார்..சுவைர்கமிட்டின் நாடகங்களில் நடித்த இவர்  அவ்வனுபவங்களின் ஊடாக தன்னை ஆளுமைமிக்க நெறியாளராக பதிவுசெய்து கொண்டார்.
 அவைக்காற்றுகைக்கலைக்கழகம் எனும் அரங்க்கக்கழகத்தின் மூலம் மொமி பெயர்ப்பு நாடகங்களினை மேடையிட்டிருந்தர். இவரது விருப்பத்திற்க்குரிய நாடகமாக அமெரிக்க நாடகவியலாளரான ரெனசி வில்லியத்தின் கண்ணாடி வார்ப்புக்கள் எனும் நாடகத்தினை 1978ம் ஆண்டு யாழ்ப்பானம் வீரசிங்கம் மண்டபத்தில்  மேடையிட்டிருந்தர்;.

போரியல் சூழ்நிலை காரணமாக புலம்பெயரியான இவர் இலண்டனினை தலைமையகமாக கொண்டு நாடக முயற்ச்;சிகளினையும் சிறுவர் நாடகங்களினையும் மேற்கொண்டு வருகின்றார்..
 இலண்டன் தமிழ் அவைக்காற்றுகைக்கலைக்கழகம் எனும் பெயரில் தமது குழுவினை அமைத்து பல்வேறு நாடுகளிற்கும் சென்று நாடக செயற்ப்பாடுகளினை மேற்க்கொண்டு வருகின்றவேளையில்  அக் குழுவினர் 35 ஆவது ஆண்டு நாடக விழாவினை யாழ்.மண்ணில் நிகழ்த்தியிருந்தனர்.
கடந்த 3ம்திகதி சனிக்கிமை யாழ்.வீரசிங்கம் மண்டபத்தில்; இவரது நெறியாழ்கையில்   பிரத்தியோக காட்சி, பாடம், கண்ணாடிவார்ப்புக்கள், சம்பந்தம்    ஆகிய நாண்கு நாடகங்கள்  இடம் பெற்றன.
பிரத்தியோக காட்சி எனும் நாடகமானது வாழ்வியலில் உள்ள சின்ன சின்ன விடயங்களினை ரசிப்பதன் ஊடாக வாழ்வு எவ்வாறு சிறப்பானதாக காணப்படுகின்றது என்பதினை பேசு பொருளாக  இந்நாடகம் கொண்டிருந்தது.
 இந்நாடகத்தின் பாகமாடிகளாக திருமதி ஆணந்தராணி-பாலேந்திரா ,மனோ,சத்தியேந்திரா செயற்ப்பட்டனர். மிகவும் உணர்வு பூர்வமான வகையில் நடிப்பினை வெளிப்படுத்தியிரந்தனர்.

இந்நாடகத்திற்கான மொழியாக்கத்தினை பேராசிரியர்சி.சிவசேகரம் மேற்கொண்டிருந்தார்  இந்நாடகம் 1992 காலப்பகுதி முதல் மேடையிடப்பட்டு வருகின்றமை குறிப்பிடத்தக்கது.
பாடம் எனும் நாடகமானது யூயின் அயனெஸ்கோவினது மூல பிரதியாகும்.இந்நாடகம் அபத்தபாணி நாடகமாகும் பேராசியருக்கும் மாணவிக்கும் இடையிலான செயற்ப்பாhட்டினை இந்நாடகம் எடுத்துக்காட்டுகின்றது. இதில்க.பாலேந்திரா, செல்விமானசிபாலேந்திரா,திருமதிஆணந்தராணி பாலேந்திரா ஆகியோர் பாகமாடினர்.

ரெணசிவில்லியத்தின் மூலபாடத்தினை தமிழில் நிர்மலா நத்தியானந்தம் ,மல்லிகா,பாலேந்திரா ஆகியோரது மொழிபெயர்ப்பில் கண்ணாடி வார்ப்புக்கள் எனும் நாடகம் இடம்பெற்றது.இந்நாடகத்தில்   வாசுதேவன், திருமதி சரிதா-அண்ணாத்துரை திருமதி ஆணந்தராணி-பாலேந்திரா ஆகியோர் பாகமாடினர்.
குடும்பத்தில் உள்ள உணர்வினை தத்ரூபமாக நாடகமாக பதிவு செய்ததில் ரெணசி வில்லியத்தின் பங்கு கனதியாகும் அவ்வுணர்வுகளினை இவ்வாற்றுகைகளில் கண்டு கொள்ள கூடியதாக இருந்தது.
அண்ரன்செக்கோவினது மூலமொழிநாடகமான சம்பந்தம் எனும் நாடகமானது நகைச்சவையானதாக வடிவமைக்கப்பட்டிருந்தது. இந்நாடகத்தில் வாசுதேவன்,சத்தியேந்திரா,திருமதி ஆணந்தராணி-பாலேந்திரா ஆகியோர்  பாகமாடினர்.
நான்கு நாடகங்களும் பார்வையாளர்களிடையே கனதியான பெறுமானத்தினை ஏற்ப்படுத்தியிருந்தது. அவைக்காற்றுகைக்கழகத்தினரது நாடகங்களினை மீளவும்; யாழ்.மண்ணிலே பார்ப்பதற்கான வாய்ப்பு பலருக்கு எற்றப்பட்டது.குறிப்பாக அக்காலத்தில் அவர்களது நாடகங்களினை கண்டு ரசித்தவர்களுக்கு மீளவும் வாய்ப்பு கிடைத்தது என்பதுடன் இளம் தலைமுறையினருக்கு அவர்களது ஆற்றுகை வடிவங்களினை  கண்டு கொள்வதற்கும் வாய்ப்பு ஏற்ப்பட்டது.

 நாடகத்தினது வளர்;ச்சியென்பது கனதியாகவும் நவீனத்துவ சிந்தனையோடு வளர்சியடைந்த சமூகத்;தில்   பதிய சிந்தனையுடன்   இந்நாடகங்களது ஆற்றுகைகள் இடம் பெற்றமை குறிப்பிடத்தக்கதுஆகும்.
பாடசாலை மாணவர்கள் மற்றும் பலர் அநுபவ ரீதியில் ஆற்றுகைகயினை கண்டு களிப்பதற்கான வாய்ப்பாக இவ் நாடக விழா இடம் பெற்றது.
35 வருடங்களாக ஓய்வின்றி கலைத்துவ பணியினை யாற்றி வருகின்ற இக்குழுவினரது பணிகள் பாரட்டப்படவேண்டியதாகும்.குடும்பமாக கலைப்பணியினை ஆற்றிவருகின்ற இவர்களது செயற்ப்பாடுகள் தொடரவேண்டும் இது சமூகத்திற்கு பயனுள்ள செயற்பாடாக அடையும்.
இந்நாடக விழாவிற்கான அனுசரனையினை திருமறைக்கலாமன்றம், தேசிய கலை இலக்கிய போரவை,சப்தமி ஒலிப்பதிவுக்கூடம் என்பன வழங்கியிருந்தன.