என்னைப் பற்றி

திங்கள், ஏப்ரல் 16, 2012

மாணவர்களது ஆளுமை வெளிப்பாட்டிற்கு களமான கனவு மெய்ப்பட வேண்டும்- ஆற்றுகை

நாடகங்களின் பின்உந்துதல் ஈடுபடுபவர்களிடையே ஆளுமைமாற்றத்திற்க்கும் படைப்பின் ஊடாக சமூகவியல்பெறுமாணத்தில்மாற்றங்களினை கொணர்வதிலும் முக்கிய பங்க வகிக்கின்றன.
சிறுவர் அபிவருத்திஅமைச்சின் அனுசரனையில் ஏஏஏ மூவிஸ் உங்கள் நண்பண் நிறுவனம் இணைந்து நடத்திய சிறுவர் தின விழா 2011ல் கொக்குவில் இந்துக்கல்லூரிமாணவர்களின் நடிப்பில் இடம்பெற்ற கனவு மெய்ப்படவேண்டும் எனும் நாடகம் யாழ்.வீரசிங்கம் மண்டபத்தில் இடம்பெற்றது.
நாடக வரலாற்று வளர்ச்சிப்போக்கில் அதன் இயங்குதல் வெளிகளில் பாடசாலைகளின் வகிபங்குகள் காத்திரமாணவையாக விளங்குகின்றன.
நாடகம் என்பதினை (மேடை)வெளிகளில் அசைவியல் கருத்தியல் ஊடாக தகவமைக்கப்படுகின்ற நிகழ்த்துகையாக கொள்ளமுடியும் இதன் உயிர்ப்பு ஆற்றுகையாளர்களின் கைகளிலேயே உள்ளது. காரணம் மேடை வெளிக்கு சொந்தக்காரர்களான ஆற்றுகையாளர்கள் தமது இயங்குதலின் ஊடாக நாடகபிரதியின் உயிர்பினை பார்ப்போரிடையே கொண்டு செல்வதுடன் உறவுப்பினைப்பினையும் ஏற்ப்படுத்துகின்றனர். அவ்வகையில் பிரதியில் எடுத்தாளப்படுகின்ற விடயங்கள் ஆற்றுகையாளரினால் முழுமையாக உய்த்துணர்ந்து வெளிப்படுத்தும் போது படைப்பு பார்ப்போரிடையே வெற்றியினை பெறுகின்றது.
கனவுமெய்ப்படவேண்டும் எனும் நாடகமானது காலம்காலமாக பெண்ணினம் எதிர்கொள்ளும் பிரச்சினைகளினை பாடுபொருளாகக் கொண்டு சமகால காட்சிகளை ஊடுவெளியாகக்கொண்டு இலக்கிய காட்சிகளினையும்கொடுமுறைகள் அன்று முதல் இன்றுவரை காலமாறுதல்களில் புதிய வடிவங்களாக முகிழ்ந்தெழுந்து பெண்களின் வாழ்வியலினை சிதைத்து அவர்கள் ஏதிலிகளாக்கப்படுவதினை காட்சிகள் விரிக்கின்றன.
இலக்கிய பாத்திரங்களினை சமூகமயப்படுத்துகின்ற போது நடிப்பினை மேற்க்கொள்பவர்கள் பாரிய சவால்களுக்கு முகம்கொடுக்க வேண்டிவரும். காரணம்அப்பாத்திரம் தொடர்பாக பார்ப்போர் கொண்டுள்ள மனப்பதிவினை நடிப்பின் ஊடாக வெளிப்படுத்துகின்ற போது தான் அப்படைப்பு வெற்றி பெறுகின்றது. அவ்வகையில் துட்ஷாதன் திரைபதை கண்ணகி போண்ற பாத்திரங்களினை குறிப்பிடலாம்
பெண்ணுடலுடான ஆண்பாகமாடலினை மேற்க்கொண்ட துட்ஷதனன் பாகமாடி அசைவு தொணி என்பவற்றின் ஊடாக தனக்கான தனித்துவத்துடன் வெளிப்படுத்தியிருந்ததர். ஆயிணும் உணர்வியல்சார் செயற்பாட்டில் கவணம் செலுத்தவேண்டும்.
திரைபதை கண்ணகி பாத்திரங்களினை மேற்கொண்ட மாணவிகள் இயல்பானவகையில் நடிப்பினை வெளிப்படுத்தியிருந்தனர். கண்ணகிபாத்திரத்தின் உறைநிலை சிறப்பானதாக காணப்பட்டது.அதேபோண்று கொடுமுறைக்கு முகம்கொடுத்தலினை சிறப்பாக வெளிப்படுத்தியிருந்தனர்.
பாரதியார் பாகமாடி நாடக ஆரம்பத்தில் பார்ப்போரினை உள்ளீர்பதற்காணவகையிலும் உறைநிலையிலும் வகையில் செயற்பட்டபோதிலும் உணர்வியல்சார் செயற்பாடுகள் போதுமானதாக வில்லை
ஒரு சில காட்சிகளில் தோண்றிய போதிலும் பார்ப்போரிடையே உணர்வியல் பெறுமாணத்தின ஏற்ப்படுத்திய பெறுமாணத்தினை ஏற்ப்படுத்தியதுடன் பாத்திரத்தின்முழுமையான உயிர்ப்பினைவெளிப்படுத்திய மணிமேகலையாக பாகமாடிய மாணவியின் நடிப்பு உன்னதமானதாக இருந்தது. வசன வெளிப்பாட்டு முறை உணர்வு வெளிப்பாடு அசைவியக்கம் என அனைத்துவிடயங்களிலும் பாத்திரத்திரத்தினை முழுமையாக உள்வாங்கி வெளிப்படுத்தியிருந்தமை நடைமுறைஉயிப்பின ஊடாக இலக்கிய பாத்திரப்பண்பைசிறப்பாக வெளிப்படுத்தியிருந்தமை முதன்மையாக பாராட்டப்பட வேண்டும்.
சமகாலப்பாத்திரங்களினை உள்ளடக்கி கட்டமைக்கப்பட்ட குடும்பம் தரகர் போண்ற பாத்திரங்களது வெளிப்பாடு சிறப்பானதாகும்.
தந்தை பாத்திரத்தினை மேற்கொண்ட மாணவன்' நகைச்சுவை சோகக்காட்சி என்பவற்றிலும் தனது நடிப்பு திறனை வெளிப்படுத்தியள்ளார்.சாண்றாக பல சந்தர்ப்பத்தில் பார்ப்போரை சிரிப்பு மணப்பதிவிற்குள் கொண்டு செண்ற இவர் மணைவி இறந்த சோகக்காட்சியில் பார்ப்போரை சோகவியல் மனப்பதிவிற்கள் கொண்டுசெல்கின்றார்.
தரகர்சிறிது நேரம் தான் மேடையில் தோண்றினாலும் தனது பங்கிற்கு பார்ப்போரை சிரிப்பில் ஆழ்த்துகின்றார்.
தாய்ப்பாத்திரத்தினை ஏற்ற மாணவியினது பாத்திரப்பொருத்தம்.சிறப்பானது அத்துடன் உணஉணர்வு பூர்வமாணவகையில் நடிப்பினை வெளிப்படுத்தியுள்ளார்.
மூத்தமகளின் ஏக்கமும் தன்னிலை சார்ந்த வெளிப்பாடும் யதார்த்தபூர்வமானவகையில் காணப்பட்டது.தாயினை நினைத்து ஏங்கல் தனது திருமனம் தொடர்பான எதிர்பார்ப்பு அதன் பின்னான ஏக்கம்.தாயின் பின்னான பின் தலைமையினை ஏற்றலின் வெளிப்பாடு என்பவற்றில் தனது நடிப்பினை சிறப்பாக வெளிப்படுத்தியுள்ளனர்.
இளையமகள் பாத்திரம் மகன்பாத்திரம் அயல்வீட்டுக்காரப்பெண்பாத்திரமேற்றவர்களது நடிப்பு வெளிப்பாடும்சிறப்பானதாக காணப்பட்டது.
வாழ்விலே ஒளியேற்றப்படும் வாழ்வு சிறப்பானதாக அமையும் என்பதாக இறுதிக்காட்சி காணப்படுகின்றது.
மாணவர்களது படைப்பியலில் காணப்படுகின்ற குறைபாடுகளினை விடுத்து மாணவர்களது இயங்கியல் வெயியில் நின்று நோக்கும் போது குறிப்பிடத்தக்க படைப்பாக விளங்குகின்றது.
எஸ்.ரி.அருள்குமரன்.