என்னைப் பற்றி

திங்கள், டிசம்பர் 24, 2012


 தேசியத்தில் சாதனை




மானிப்பாய் இந்துக்கல்லூரி மாணவர்கள்கொழும்பு றோயல் கல்லூரியினால் நடத்தப்பபட்ட தனி நடிப்பு , வி னா  விடைப்போட்டியில் தேசிய ரீதியில்   வேத்தியல் விருது  பெற்றுள்ளனர்.
 அகில இலங்கைப்பாடசாலைகளுக்கிடையே மாவர் க ளது நடிப்பு நாடக அறிவினை வளளர்க்கும் முகமாக நடத்தப்பட்ட போட்டிகளிலேயே மேற்படி விருதினை பெற்றுள்ளனர்.
 தனிநடிப்பு போட்டியிலே குணரத்தினம் திலக்ஸன் ,   கு. லோன்ஸன் வினவிடைப்போட்டியில் தேசிய ரீதியில்வெற்றி பெற்றுள்ளார்.
திலக்ஸன் மாவட்டப்போட்டியில் முதலாம் இடத்தினை பெற்றுக்கொண்டதுடன் தேசியத்தில் 3ம் இடத்தினை பெற்றுக்கொண்டுள்ளார். அதே வேளை லோன்ஸன்தேசிய ரீதியாகநடத்தப்பட்ட போட்டியில்  7ம் இடத்தினை பெற்றுக்கொண்டுள்ளார்.
மானிப்பாய் இந்தக்கல்லூரி யின் தேசிய ரீதியிலான சாதனைகளில் அங்கமாக இம்மாணவர்களது வெற்றியும் விளங்  கு கின்றது.
இவ்வெற்றி மூலம் பாடசாலைக்கு மட்டுமல்லாது  வலயம், மாவட்டம் ,மாகாணம் என்பவற்றிற்கும் பெருமை சேர்த்துள்ளனர்.
 இம்மாணவாகளுக்கான வழிப்படுத்தலினை நாடகத்துறை ஆசிரியர் எஸ்.ரி..அருள்குமரன் மேற்கொண்டுள்ளார்.






சித்திரக்கலைஞர் பொ.பசுபதியுடானநேர்காணல்- எஸ்.ரி.அருள்குமரன். 




கலைப்படைப்புக்கள் அவ்வக்கால மக்களின் பண்பாட்டை  வரலாற்றை  மனப்பதிவகளினை வேறு வேறு ஊடகங்களினாடாக அடுத்த சந்ததிக்கு கடத்தி செல்ல உதவுகின்றன. இதனால் அவற்றை ஆவணப்படுத்தும் செயற்பாட்டினை மேற்கொள்ள வேண்டும் என ஓவியம் சிற்ப்பம் என பல துறைகளில் இயங்குகின்ற பொ.பசுபதி தெரிவித்தார்.
  
அவரது நேர்காணல் இங்கு தருகின்றோம்.

உங்களை அறிமுகப்படுத்தி கொள்ளுங்கள்?
அளவெட்டி தெற்க்கில் பிறந்த நான் ஆரம்ப கல்வியினை அளவெட்டி அருணாசலம் வித்தியாலயத்திலும் தரம் 5 முதல் உயர்தரம் வரை அளவெட்டி அருணோதயாக்கல்லாரியிலும் கற்றேன் அக்காலப்பகுதியில் ஓவியத்துறையின் ஈடுபாடு காரனமாக பல போட்டிகளில் பங்கு பற்றி பரிசில்களினை பெற்றுக் கொண்டேன்.

 பின்பு தபாலதிபராக கொழும்பு மலையகம் என பல இடங்களில் கடமையாற்றியதுடன் அங்கு ஏற்ப்பட் நட்பின் ஊக்கவிப்பின் மூலம் ஓவியங்கள் பலவற்றினை வரைந்தேன். தற்போது ஓய்வின் பின்னர் கோதிடத்துறையில் ஈடுபட்டு வருகின்றேன்.
கேள்வி- பாடசாலைக்காலத்தில்  சித்திரத்துறையில் ஈடுபாட்டை வளர்ப்பதற்கான பின்னனிக்காரனங்கள் ஏதும் உண்டா?
அக்காலத்தில் பாடசாலைகளில் சிலேற் பாவனை இருந்தது ஆரம்ப பாடசாலைகளில் எழுதுவதற்கும் படங்கள் கீறப்பழகுவதற்கும் சிலேற்றும் அதற்கான பென்சிலும் பயன்படுத்தப்பட்டன. கனிஸ்ட வகுப்புக்களில் சித்திரங்கள் வரைய ஆசிரியர்கள் பயிற்று வித்தார்கள். நானும் சிலேற்றில் சப்பறம் யாழி மிருகங்கள் என்பன கீறிக்காட்டுவேன் அவர் என்னை பாராட்டுவதுடன் எல்லால வகுப்புபிள்ளைகளுக்கும் காட்டுவார் இதனால் ஊக்கப்படுத்தப்பட்டு நான் இதில் ஈடுபட்டேன்.


கேள்வி? அருணோதயாக்கல்லூரியில் கற்ற வேளை உங்களது செயற்பாடுகள் பற்றி குறிப்பிடுங்கள்? 
ஆசிரியர்களின் ஊக்குவிப்பு காரனமாக பல போட்டிகளில்கலந்து கொண்டு பரிசில்களினை பெற்றேன் குறிப்பாக 1956ம் ஆண்டு கொழும்பில் நடைபெற்ற  Rojal Agricultural  and Food exhibition இல் கலந்து கொண்டு மூன்று பரிசில்களினை பெற்றுக்கொண்டேன்.
தொடர்ந்து  எமது சித்திர பாட ஆசிரியரான திருமதி யோகேந்திரனின் ஊக்குவிப்பினால் பாடசாலை ஓவியக்கழக தலைவராக இருந்து  சித்திரக்கண்காட்சி ஒன்றினை ஒழுங்கு படுத்தினோம். இக்கண்காட்சி பலரது வரவேற்ப்பினை பெற்று இரு வாரங்கள் நீடித்தன.

கேள்வி? பாடசாலைக்கல்விக்குப்பின் ஊவியத்துறை யில் உங்களின் ஈடுபாடு எவ்வாறு இருந்தது?
தொழில் நிமித்தம் பல இடங்களில் கடமையாற்ற வேண்டிய தேவை இருந்தது.அவ்வேளை கொழும்பில் சிறிய அறையில் மூவர் தங்கியிரந்த வேளை மனதை ஒருமுகப்படத்தி ஓவியத்தில் சிரத்தை காட்ட முடியவில்லை  ஒருபடத்தை வரைய நீண்ட நேரம் தேவைப்பட்டது அவ்வாறு வரைந்த சில படங்களை  நண்பர்களுக்கு காட்டுவேன்.அவர்கள் தமது வீட்டில் காட்சிப்படுத்த விரும்பி வாங்குவார்கள். இயற்கை காட்சிகளினையே அதிகம் விரும்பி வரைவேன். அவ்வாறான ஓரிரு ஓவியங்களினை


எனது நன்பர் ஒருவர் கொள்ளுப்பிட்டியிலுள்ள நியூகோப்ஸ் எனும் கடையை நடத்திய முஸ்லீம் நன்பரிடம் காட்டினார். அவர் என்னை ஊக்கப்படுத்தி இவ்வாறான படங்களினை தனது கடயில் விற்ப்பதற்கு வரைந்து தருமாறு கேட்டார். எனது ஓய்வு நேரத்தினை பயன்படுத்தி சில காலம் அவருக்கு படங்கள் வரைந்து கொடுத்தேன்.எனது தொழில் இடமாற்றம் காரனமாக அந்த வாய்பை தொடர்ந்து பயன்படுத்த முடியவில்லை.

 கேள்வி- ஓவியம் மட்டுமல்லாது சிந்ப்பத்துறையிலும் ஈடுபாடு உடையவராக அறிகின்றோம் அது தொடர்பாக குறிப்பிடமுடியுமா?
ஓவியத்துறை போலவே களிமண்னை பயன்படுத்தி பல்வேறு உருவங்களினை செய்ய பாடசாலை ஆசிரியர்கள் ஊக்குவித்தனர். அதன்காரனமாகவும் இயல்பாக கொண்ட   ஊக்கம் காரணமாகவும்  பல உருவங்களை செய்து வந்தேன்.காலப்போக்கில் நுட்பமும் நுன்மையும் கொண்ட கலைத் துவமுடையனவாக  மெரு கூட்ட முயன்று வருகின்றென்.

கேள்வி- இளம்படைப்பாளிகளுக்க கூற விரும்புவது? 
மனிதர்களடையே காணப்படுகின்ற நல்ல பண்புகளே  கலைத்துறை ஈடுபாட்டினை தீர்மானிக்கின்றன.நீங்கள் நல்லொழுக்கம்  
நன்றி யாழ்ஓசை.
உடையவர்களாக விளங்க வேண்டும்.


திறன் ஆற்றுகை 
3ம் இடம்




உடுவில் மான்ஸ் மகாவித்தியாலயம் தனது 150 ஆவது  ஆண்டு நிறைவினை முன்னிட்டு பாடசாலைகள் மற்றும் தனியார் கழகங்களுக்கிடையே நடாத்திய  நாடகப்போட்டியில் மானிப்பாய் இந்துக்கல்லூரிநாடக ஆசிரியர் எஸ்ரி.அருள்குமரனின் எழுத்துரு- நெறியாழ்கையில் இடம்பெற்ற “திறன்” எனும் நாடகமானது 3ம் இடத்தினை பெற்றக்கொண்டது. அவ்   மானிப்பாய் இந்துக்கல்லூரி  நாடகக்குழுவினரை படத்தில் காணலாம். 


                                                                                                             (எஸ்.ரி.அருள்குமரன்)


நல்லக விளக்கு

நாடகம் மக்களது வாழ்வியலில் வலிகளினை வெளிப்படுத்துவதுடன் அவர்களது  பிரச்சினைகளிலிருந்து விடுபடுவதற்கான வழிமுறைகளினை தகவமைத்து கொள்வதிலும் முதன்மை பெறுவதுடன் அளிக்கையானது பார்ப்போருடன் நேரடித்தொடர்படையனவாக காணப்படுவதினால் உயிர்ப்பான கலைவடிவமாகவும் விளங்குகின்றது.
 நாடக செயற்பாடு மாணவர்களது ஆளுமை வெளிப்பாட்டிற்கான களவெளிளினை தகவமைக்கின்றன.இச்செயற்பாட்டில் ஈடுபடுவதன் மூலம் மாணவர்களிடையே தாக்கவண்மைரீதியான தொடர்பாடல் திறன் விருத்தியடைவதுடன் தலைமைத்துவப்பண்பு,  குரூரம்அற்ற தன்மை,
பிற்போக்கு அற்றமனவுனர்வு ,தன்னலமற்ற நலநோம்பல் என்பன  அதிகரிக்கும்.
இப்பகைப்புலத்தில் நோக்கும்' போது நாடகங்களுக்கான களவெளிகளினை பாடசாலைகள் வழங்கி வருவதினை காணலாம்.குறிப்பாக விழாக்கள் அவற்றிக்கான அடிப்படைகளாகின்றன.. ஆயினும் நாடகங்களிற்கென தனியொரு நாள் ஒதுக்கி விழா நடாத்தப்படுவதென்பது குறைவாக உள்ளது.
ஆயினும் அவற்றிக்கு மாறாக மானிப்பாய் இந்துக்கல்லூரியில் நாடகங்களுக்குகென தனியன வகையில் நீண்ட காலமாக விழா நடத்தப்பட்டு வருகின்றன. பாடசாலையின் நிறுவுனர் தினத்தினை அடிப்படையாகக்கொண்ட வகையில் இருதினங்களாக விழாக்கள் முன்னைய காலத்தில் நிகழ்த்தப்படுவதாக குறிப்பிடுகி;னறனர் ஆயினும் நாட்டில் ஏற்ப்பட்ட போர்காரணமாக தொடர்நிலையாக இயங்குவதற்கான வாய்ப்புக்கள் தவிர்க்கப்ட்ட நி லையில் இம்முறை
 56 ஆவது விழா வாக நிகழ்தப்பட்டமை குறிப்பிடத்தக்கது.

 நீண்ட காலத்திற்கு பின்பு நாடக விழாவானது இரவுப்பொழுதில் நிகழ்த்ப்பட்டமையானது சிறப்பான விடயமாகும்  
இக்கல்லூரிக்கு நீண்ட கால கலைச்செழுமையுடன் கூடிய வரலாற்றுப்பாரம்பரியமும் கலைத்துறைக்கு செழுமையான பங்களிப்pபினை ஆற்றிய கலைஞர்களினை பிரசவித்த பெருமையும் உண்டு.
 அவ்வகையில் ஈழத்து நவீன நாடகத்தின் தந்தை எனப்போற்றப்படுகின்ற கலையரசு சொர்ணலிங்கம்  இலங்கை திரப்படத்துறையில் சாதித்த சி.எஸ்.அருமைநாயகம்  போன்ற கலைஞர்களினை வழங்கிய பெருமையுண்டு.
நாடகவிழாவானது மாணவர்களின் கலைத்திறனினை வெளிக்கொணர வைப்பதினை நோக்காக கொண்டு செயற்ப்படுகின்றன. இதனடிப்படையில்  சம்பந்தர் சுந்தரர் மாணிக்கர் வாகீசர் எனும் நான்குஇல்லங்களுக்கிடையே போட்டிகள் நிகழ்த்தப்படுகின்றன. 
வாகீசர் இல்ல மாணவர்களது நடிப்பில் சாகாதமனிதம்  சம்பந்தர் இல்ல மாணவர்களின் நடிப்பில் ஆளவந்தான் மாணிக்கர் இல்ல மாணவர்களின் நடிப்பில் நல்லக விளக்கு சந்தரர் இல்ல மாணவர்களது நடிப்பில்  முதுமையிலும் ஆகிய நான்கு நாடகங்கள் நிகழ்த்தப்பட்டன.
இவ் நான்கு நாடகங்களில் மாணிக்கர் இல்ல மாணவர்களது நடிப்பில் உருவான நல்லக விளக்கு எனும் நாடகமானது சிறந்த நாடகமாகவும் சிறந்த நடிகர் சிறந்த நடிகை ஆகிய விருதினையும் பெற்றுக் கொண்டன.
சிவகுரு எனும் பாத்திரத்தினை ஏற்று நடித்த டில்ஸான் சிறந்த நடிகராக தெரிவு செய்யப்பட்டாhர். இவர் சுனாமித்தாக்கத்தினால் தனது குடும்பத்தினை இழந்து மனநிலை குழப்பமடைந்தவராகவும் தனிமையின் கொடுமையில் தவிப்பவராகவும் உள்ள சூழ்நிலையினை மிகவும் தத்ரூபமாக வெளிப்படுத்தியிருந்தார். அதே போன்று பேரவலத்தின் போது தனது மகனை இழந்து தவிக்கும் தாயின் மன உணர்வினை உயிரோட்டமாக வெளிப்படுத்திய நல்லம்மா பாத்திரமேற்று பாகமாடிய பவன் சிறந்த நடிகையாக தெரிவு செய்யப்பட்டார்.
இவ்வாற்றுகையின் ஏiனைய பாகமாடிகளாக தர்ஸன் மோகனராஜன் குயிலகாந் ஜெயரூபன்  சாதுசன் சன்ராஜ் சாரூசன் டனிஸ்ரன் ஒலெக்ஸன்  விதுஸன் யோகசாந்  ஆகியோர் செயற்ப்பட்டனர்.
பாடகர்களாக கபில்ராஜ் டிலக்ஸன் தர்மேந்திரன் ஆகியோரும் காட்சிமைப்பாளர்களாக தர்ஸன் சன்ராஜ் டில்ஸான் மோகனராஜன் ஆகியோர் செயற்ப்பட்டனர். இசையில் டொல்கியினை டிலக்ஸன் வழங்கினார்.   
கந்தையா ஸ்ரீகந்தவேளின் எழுத்துருவாக்கத்திலும் எஸ்.ரி.குமரனின் நெறியாழ்கையிலும் இந்நாடகம் நிகழ்த்தப்பட்டது.
இந்நாடகம் இன நல்லுறவினை வலுப்படுத்துவதாகவும் சுனாமி பேரவலத்தின் பின்பு மீnளுழுகையில் உள்ள மக்களது வாழ்வியலினை பேசியது.
போட்டியான வகையில் நாடக விழாவானது நிகழ்த்தப்படுகின்றதென்பதிற்க்கப்பால் காத்திரமான வகையிலான அரங்கப்பாரம்பரியத்தினை வளர்த்துச் செல்வதற்கான வகையில் விழா இடம் பெறுகின்றமை சிறப்பான விடயமாகும்.
    நான்கு இல்லத்தினை சேர்ந்த மாணவர்களும் ஒரே பாடசாலை சேர்ந்தவர்கள் எனினும்   அவர்களிடையே வெற்றி பெற வேண்டும் என்ற அவா மேலோங்கி காணப்படுவது தவிர்க்கவியலாது. ஆயினும் அவர்களிடையே பொறாமை உணர்வினை விடுத்து போட்டி மனோபவத்துடன் செயற்படுவதற்கு மாணவர்களினை வழிப்படுத்த வேண்டியது இல்லங்களின் பொறுப்பாசிரியர்களின் கடமையாகும்.


 நாடகப்போட்டியென்புது குதிரைப்பந்தயம் அல்ல மாறாக மாணவர்களிடையே ஒளிந்துள்ள கற்ப்பனா சக்தியனை வெளிக்கொணர்வதற்கும் தன்னை நம்பி இயங்குவதற்கான களவெளியினை ஏற்ப்டுத்திக் கொள்ளவதற்கான வாய்ப்பாகவும் அமையவேண்டும்.
 வெற்றி தோல்வி என்பது இயல்பானவிடயம் அவற்றினைவிட இயங்கியலுக்கூடாக கற்றுக்கொண்ட விடயத்தினை உய்த்துனர்ந்து கொள்வதற்கான வாய்ப்புக்களினை ஏற்ப்படுத்தி கொள்ளவதற்கான வாய்ப்பாகவும் அமையவேண்டும்.
 வெற்றி தோல்வி என்பது இயல்பானவிடயம் அவற்றினைவிட இயங்கியலுக்கூடாக கற்றுக்கொண்ட விடயத்தினை உய்த்துனர்ந்து கொள்வதற்கான வாய்ப்புக்களினை ஏற்ப்படுத்தி கொள்வது பொறுப்பானவர்களின் தலையாய கடமையாகும்.கொள்வது பொறுப்பானவர்களின் தலையாய கடமையாகும்.
தலைய