என்னைப் பற்றி

திங்கள், டிசம்பர் 24, 2012







சித்திரக்கலைஞர் பொ.பசுபதியுடானநேர்காணல்- எஸ்.ரி.அருள்குமரன். 




கலைப்படைப்புக்கள் அவ்வக்கால மக்களின் பண்பாட்டை  வரலாற்றை  மனப்பதிவகளினை வேறு வேறு ஊடகங்களினாடாக அடுத்த சந்ததிக்கு கடத்தி செல்ல உதவுகின்றன. இதனால் அவற்றை ஆவணப்படுத்தும் செயற்பாட்டினை மேற்கொள்ள வேண்டும் என ஓவியம் சிற்ப்பம் என பல துறைகளில் இயங்குகின்ற பொ.பசுபதி தெரிவித்தார்.
  
அவரது நேர்காணல் இங்கு தருகின்றோம்.

உங்களை அறிமுகப்படுத்தி கொள்ளுங்கள்?
அளவெட்டி தெற்க்கில் பிறந்த நான் ஆரம்ப கல்வியினை அளவெட்டி அருணாசலம் வித்தியாலயத்திலும் தரம் 5 முதல் உயர்தரம் வரை அளவெட்டி அருணோதயாக்கல்லாரியிலும் கற்றேன் அக்காலப்பகுதியில் ஓவியத்துறையின் ஈடுபாடு காரனமாக பல போட்டிகளில் பங்கு பற்றி பரிசில்களினை பெற்றுக் கொண்டேன்.

 பின்பு தபாலதிபராக கொழும்பு மலையகம் என பல இடங்களில் கடமையாற்றியதுடன் அங்கு ஏற்ப்பட் நட்பின் ஊக்கவிப்பின் மூலம் ஓவியங்கள் பலவற்றினை வரைந்தேன். தற்போது ஓய்வின் பின்னர் கோதிடத்துறையில் ஈடுபட்டு வருகின்றேன்.
கேள்வி- பாடசாலைக்காலத்தில்  சித்திரத்துறையில் ஈடுபாட்டை வளர்ப்பதற்கான பின்னனிக்காரனங்கள் ஏதும் உண்டா?
அக்காலத்தில் பாடசாலைகளில் சிலேற் பாவனை இருந்தது ஆரம்ப பாடசாலைகளில் எழுதுவதற்கும் படங்கள் கீறப்பழகுவதற்கும் சிலேற்றும் அதற்கான பென்சிலும் பயன்படுத்தப்பட்டன. கனிஸ்ட வகுப்புக்களில் சித்திரங்கள் வரைய ஆசிரியர்கள் பயிற்று வித்தார்கள். நானும் சிலேற்றில் சப்பறம் யாழி மிருகங்கள் என்பன கீறிக்காட்டுவேன் அவர் என்னை பாராட்டுவதுடன் எல்லால வகுப்புபிள்ளைகளுக்கும் காட்டுவார் இதனால் ஊக்கப்படுத்தப்பட்டு நான் இதில் ஈடுபட்டேன்.


கேள்வி? அருணோதயாக்கல்லூரியில் கற்ற வேளை உங்களது செயற்பாடுகள் பற்றி குறிப்பிடுங்கள்? 
ஆசிரியர்களின் ஊக்குவிப்பு காரனமாக பல போட்டிகளில்கலந்து கொண்டு பரிசில்களினை பெற்றேன் குறிப்பாக 1956ம் ஆண்டு கொழும்பில் நடைபெற்ற  Rojal Agricultural  and Food exhibition இல் கலந்து கொண்டு மூன்று பரிசில்களினை பெற்றுக்கொண்டேன்.
தொடர்ந்து  எமது சித்திர பாட ஆசிரியரான திருமதி யோகேந்திரனின் ஊக்குவிப்பினால் பாடசாலை ஓவியக்கழக தலைவராக இருந்து  சித்திரக்கண்காட்சி ஒன்றினை ஒழுங்கு படுத்தினோம். இக்கண்காட்சி பலரது வரவேற்ப்பினை பெற்று இரு வாரங்கள் நீடித்தன.

கேள்வி? பாடசாலைக்கல்விக்குப்பின் ஊவியத்துறை யில் உங்களின் ஈடுபாடு எவ்வாறு இருந்தது?
தொழில் நிமித்தம் பல இடங்களில் கடமையாற்ற வேண்டிய தேவை இருந்தது.அவ்வேளை கொழும்பில் சிறிய அறையில் மூவர் தங்கியிரந்த வேளை மனதை ஒருமுகப்படத்தி ஓவியத்தில் சிரத்தை காட்ட முடியவில்லை  ஒருபடத்தை வரைய நீண்ட நேரம் தேவைப்பட்டது அவ்வாறு வரைந்த சில படங்களை  நண்பர்களுக்கு காட்டுவேன்.அவர்கள் தமது வீட்டில் காட்சிப்படுத்த விரும்பி வாங்குவார்கள். இயற்கை காட்சிகளினையே அதிகம் விரும்பி வரைவேன். அவ்வாறான ஓரிரு ஓவியங்களினை


எனது நன்பர் ஒருவர் கொள்ளுப்பிட்டியிலுள்ள நியூகோப்ஸ் எனும் கடையை நடத்திய முஸ்லீம் நன்பரிடம் காட்டினார். அவர் என்னை ஊக்கப்படுத்தி இவ்வாறான படங்களினை தனது கடயில் விற்ப்பதற்கு வரைந்து தருமாறு கேட்டார். எனது ஓய்வு நேரத்தினை பயன்படுத்தி சில காலம் அவருக்கு படங்கள் வரைந்து கொடுத்தேன்.எனது தொழில் இடமாற்றம் காரனமாக அந்த வாய்பை தொடர்ந்து பயன்படுத்த முடியவில்லை.

 கேள்வி- ஓவியம் மட்டுமல்லாது சிந்ப்பத்துறையிலும் ஈடுபாடு உடையவராக அறிகின்றோம் அது தொடர்பாக குறிப்பிடமுடியுமா?
ஓவியத்துறை போலவே களிமண்னை பயன்படுத்தி பல்வேறு உருவங்களினை செய்ய பாடசாலை ஆசிரியர்கள் ஊக்குவித்தனர். அதன்காரனமாகவும் இயல்பாக கொண்ட   ஊக்கம் காரணமாகவும்  பல உருவங்களை செய்து வந்தேன்.காலப்போக்கில் நுட்பமும் நுன்மையும் கொண்ட கலைத் துவமுடையனவாக  மெரு கூட்ட முயன்று வருகின்றென்.

கேள்வி- இளம்படைப்பாளிகளுக்க கூற விரும்புவது? 
மனிதர்களடையே காணப்படுகின்ற நல்ல பண்புகளே  கலைத்துறை ஈடுபாட்டினை தீர்மானிக்கின்றன.நீங்கள் நல்லொழுக்கம்  
நன்றி யாழ்ஓசை.
உடையவர்களாக விளங்க வேண்டும்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக