என்னைப் பற்றி

வியாழன், ஜூலை 11, 2013

கலையின் அவசியம்

கலைப்படைப்பு என்பது பார்ப்போரிடையே கனதியான தாக்கத்தினை ஏற்ப்படுத்துகின்றவையாக இருக்கவேண்டும். மாறாக பார்ப்போரின சலிப்பூட்டுவதாகவும் அவர்களது ரசனைக்கு தீனிபோடுவனவாகவும் அமையாதவற்றினை நல்ல படைப்புக்கள் என சொல்லுவதில் இடர்மிகு சிக்கல்கள் உள்ளதென்பது தவிர்க்க முடியாத உண்மையாகும்.


 நல்ல படைப்புக்கள் பர்வையாளரிடம் ரசனையினை ஏற்ப்படுத்தும் என்பதும் அவர்களது உணர்வியல் தாக்கத்தினை ஏற்ப்படுத்தும் என்பதும் எதார்த்தமாகும்.

கலைப்படைப்புக்கள் எனும் போர்வையில் பார்வையாளனினை சலிப்பிற்கு உள்ளாக்குவதுடன் தமக்கு தெரிந்ததே அற்ப்புதமான விடயங்கள் எனவும் புதியவற்றினை ஏற்றுக்கொள்வதற்கான திரனியற்றவர்களாகவும் வெறுமனே வறட்'டு கௌரவத்தினை உடையவர்களாகவும் காணப்படுகின்றமை உண்மையாகவும் இதய சுத்தியோடும் கலைகளினை நேசித்த எமது முன்னோர்களது கலைச்செயற்ப்பாட்டிற்கு களங்கம் ஏற்ப்படுத்தும் வகையில் சிலர் நடந்து கொள்வது வேதனைக்குரியது என்பதினை விட வெட்கப்படவேண்டிய விடயமாகும்.

இத்தகைய நிகழ்வுகளி னை அற்ப்புதமான நிகழ்வுகள் எனும் வகையில் தம்பட்டம் அடித்துக்கொண்டு செல்வதும் தம்மை விட யாரும் இல்லை எனும் வகையில் பிற்ப்போக்கான வகையில் நடந்து கொள்வதும் சம்பந்தப்பட்டவர்கள் வெட்கி தலை குனிய வேண்டியவிடயங்கள் ஆகும்.

அண்மையில் இடம்பெற்ற நடன நிகழ்வு தொடர்பாகவே இத்தகைய ஆதங்கம் எழுகின்றது. மாணவர்களினை காயடிக்கும் செயற்ப்பாட்டிலும் அவர்களினை சுயமுனைப்பற்றவர்களாக்கும் வகையிலும் அவர்களது தம்மானத்தினை அடைவு வக்கும் வகையிலும் தமது சயலாப இருப்பிற்கான களவெளிகளினை கொண்டு செயற்ப்படுகின்றமை வெட்கப்பட வேண்டிய விடயமாகும்.

மாணவர்களது விருப்பிற்கு மாறாக அவர்களினை வற்புறுத்தி நிகழ்வில் பங்குபற்ற வைத்ததாகவும் அறியமுடிகின்றது.

இன்றைய பொழுதுகளில்  நடனம் என்பது எண்ணப்படைப்பாக்கத்திற்கு ஏற்றவகையிலும் மாணவர்களது சுய ஆளுமையினை வளர்த்து கொள்வதற்கான வகையிலும் வடிவம் கொண்டமையினை அற்ப்புதமான நடனப்படைப்பாளிகளது நடனப்படைப்புக்களில் இருந்து கண்டும் அறிந்தும் ரசிக்கக்கூடியதாகவும் காணப்படுகின்றது.

மாறாக மேற்க்குறித்த நடன நிகழ்வானது வெறுமனே மரபுகளின் தொகுப்பு எனும் வகையில் பிற்போக்கானவகையில் அமைத்து விட்டு பெரும் தம்பட்டம் அடித்து செல்வதினையும் காணக்கூடியதாக உள்ளது.

 இத்தகைய போக்குகள் ஆரோக்கியமான சமூகத்தினை பிரசவிக்குமா எனும் ஜயம் எழுவது தவிர்க முடியாதாக உள்ளது.

அற்ப்புதமானது என தம்பட்டம் அடிக்கும் படைப்புக்கள் இடம்பெற்றபோது பெரும்பாலான பார் வையாளர்கள் நித்திரை என்பதும் பலர் தமது வேலைகளினை மேற்க்கொண்டதுடன் எப்போது  இந்நிகழ்வு நிறைவடையும் எனும் ஆதங்கத்துடன் காணப்பட்டமையும் குறிப்பிடத்தக்கது ஆகும்.

 சமூகத்திற்கு எவ்கையிலும் பயனற்ற இந்நிகழ்விற்கான செலவு என்பது கேட்கும்' பேதே ஆச்சரியத்தக்கவகையில் அதிகமாக உள்ளது.

படைப்புக்கள் எப்போதும் சமூக நலநோம்பலினை அடிப்படையாக கொண்டதாகவும் ஆளுமை வெளிகளினை சிருஸ்டித்து விடுவனவாகவும் காணப்படவேண்டும் மாறாக ஆளுமை சிதைவிற்க்கான வழிவகைகளினை ஏற்ப்படுத்துவனவானவும் இளைய தலைமுறையினரை காயடிக்கும் செயற்பாட்டிற்குவழிவகுக்குமாக இருந்தால் ஆரோக்கியமான சமூகம் உருவாகாது ஊனமுற்ற சமூகம் உருவாகும் என்பது தவிர்க்கவியலாததாகும்.