என்னைப் பற்றி

வெள்ளி, ஜூலை 10, 2015

 (எஸ்.ரி.அருள்குமரன்)

           அனைவராலும் வசீகரிக்கப்ட்ட(எஸ்.பொ) 

இலக்கியங்கள்  காலத்தின் கண்ணாடி எனக்குறிப்பிடுவர். காலத்தினை பிரதிபலிப்பதிலும் பதிவு செய்வதிலும் இலக்கியவாதிகளின் வகிபங்குகள் கனதியானவை. தனது சிந்தனையோட்டத்தில் சமூகத்தினை தரிசனம் கொள்ளும் வகையில் தனது படைப்புக்களினை படைக்கின்றார்கள். இதானல் படைப்பாளியின் மரனத்தின் பின்னரும் அப்படைப்பாளி தனது படைப்புக்களின் மூலம் காலத்தினையும் விஞ்சி  சமூகத்தில் வாழ்ந்து கொண்டிருக்கின்றார். இவ்வகையில் தனது படைப்புக்கள் மூலம் சமூகத்தில் மதிப்புனர்வினை ஏற்ப்படுத்திய படைப்பாளி இரண்டு எழுத்துக்களில்(எஸ்.பொ) அனைவராலும் வசீகரிக்கப்ட்ட இலங்கையின் புகழ்பெற்ற மூத்த எழுத்தாளர்களில் ஒருவரும் அவுஸ்ரேலியாவில் வசித்துவந்தவருமான  எஸ். பொ. என அழைக்கப்படும் எஸ். பொன்னுத்துரை சிட்னியில்   (26 - 11 - 2014 ) காலமானார்.
இவர்  04 - 06 - 1932 ல் யாழ்ப்பாணத்தில்  நல்லூரில் பிறந்தவர்.
யாழ். பரமேஸ்வராக் கல்லூரியிலும், தமிழ்நாடு அண்ணாமலைப் பல்கலைக்கழகத்திலும், சென்னை கிறித்தவக் கல்லூரியிலும் உயர்கல்வியினை பெற்றுக்கொண்ட இவர்  இலங்கைப் பாட விதான சபை, திரைப்படக் கூட்டுத் தாபனம் ஆகியவற்றிலும் சில காலம் பணியாற்றினார்.
 பின்னர் இலங்கையில்   மட்டக்களப்பில் ஆசிரியராகவும் ,அதிபராகவும் பணியாற்றியதுடன்  நைஜீரியாவில் ஆசிரியப் பயிற்சி கலாசாலையில் ஆங்கில இலக்கிய வரலாற்றுத்துறை விரிவுரையாளராகவும் வரலாற்றுத்துறைத் தலைவராகவும் பணிபுரிந்தார்.
சென்னையில் 'மித்ர' பதிப்பகத்தின் மூலம் நூல் வெளியீடுகளிலும் ஈடுபட்டு  வந்ததுடன் அவுஸ்திரேலியாவில் இருந்து வெளிவந்த ‘அக்கினிக்குஞ்சு’ என்ற சர்வதேச இதழின் கௌரவ ஆசிரியராகவும் விளங்கினார்.
இளம்வயதில் இலங்கை கம்யூனிஸ்ட் கட்சியின் ஆதரவாளராகச் செயற்பட்ட இவர் பின்னர் அவர்களுடன் முரண்பட்டுத் தனித்துவமாகச் செயற்பட்டவார். இலங்கையில் முற்போக்கு எழுத்தாளர் சங்கம் தீவிரமாகச் செயற்பட்டுக் கொண்டிருந்த காலத்தில் அதிலிருந்து விலகி நற்போக்கு அணியைத் தொடங்கியவர
நாவல், சிறுகதை, நாடகம், கவிதை, பத்தி எழுத்து, விமர்சனம் முதலிய  பல துறைகளில் ஆளுமைமிக்கவராக விளங்கியதுடன் சர்ச்சைக்குரிய கருத்துக்களைத் தெரிவிப்பவர் என இலக்கியத்துறையில் கணிக்கப்பட்டவர்;.
தன் வாழ்நாளில் கிட்டத்தட்ட அறுபத்தைந்து வருடங்களை தமிழ் இலக்கியத்துக்காக அர்ப்பணித்துக் கொண்டவர். சிறு வயதில் இருந்தே எழுத்துத் துறையில் கால் பதித்த இவர் தன் கடைசி காலம்வரை எழுதி வந்தார்.
சிறுகதைகள், நாவல்கள், கட்டுரைகள், மொழிபெயர்ப்புகள் என இருபத்தைந்துக்கும் மேலான நூல்களை எஸ்.பொ. எழுதியுள்ளார். இவருடைய முதல் நாவல் ‘தீ’, இன்றும் பலரும் எழுதத் தயங்கும் களமான சுயபாலுறவை 1960இலேயே பேசியது. இந்நாவல் வெளிவந்தபோது மிகுந்த சர்ச்சைக்குள்ளானது. இரண்டாவது நாவல் ‘சடங்கு.’ அக்கால மத்தியதர வர்க்க அரச எழுது வினைஞரின் வாழ்க்கையையும் யாழ்ப்பாணப் பின்னணியையும் களனாகக் கொண்டது. எஸ்.பொ.வுக்கேயுரிய மொழி, அங்கதம், வாழ்வியல் கூறுகளுடன் யாழ்ப்பாண பேச்சு வழக்கில் இந்நாவல் அமைந்திருந்தது. எஸ்.பொ.வின் கடைசி நாவலான ‘மாயினி’, இந்திய அமைதிப் படை ஈழத்தில் நிலை கொண்டிருந்த போது நடைபெற்றவைகளை நுட்பமாகச் சித்திரிக்கிறது.
‘தீ’ நாவலைப் போலவே இவரது சிறுகதைத் தொகுப்பான ‘வீடு’ வெளிவந்தபோதும் மிகவும் கவனிக்கப்பட்டது. பல்வேறு பரிசோதனை முயற்சிகளையும் இச்சிறுகதைகளில் எஸ்.பொ. வெற்றிகரமாகச் செய்திருந்தார்.
1940, 50 யாழ்ப்பாண சமூகத்தை பற்றி எஸ்.பொ. எழுதியுள்ள ‘நனவிடை தோய்தல்’ நூல் ஒரு வரலாற்று ஆவணம். இவரது நேர்காணல்கள், கட்டுரைகள் அடங்கிய ‘இனி ஒரு விதி செய்வோம்’ என்ற நூலும் வெளிவந்துள்ளது.
  சுமார் இரண்டாயிரம் பக்கங்களில் வரலாற்றில் வாழ்தல் என்ற தமது சுய வரலாற்று நூலையும் எழுதியுள்ளார
 இவரது சில சிறுகதைகளும் ''தீ" - ''சடங்கு" நாவல்களும் ''வரலாற்றில் வாழ்தல்" என்ற அதிக பக்கங்கள் கொண்ட சுய வரலாற்று நூலும் பல சர்ச்சைகளையேற்படுத்திக் கவனத்தில் கொள்ளப்பட்டவை.
பிறமொழிப் படைப்புகள் சிலவற்றைத் தமிழுக்குக் கொண்டுவந்தவர். செம்பென் ஒஸ்மான என்ற செனகல் நாட்டு எழுத்தாளர் எழுதிய ஹால என்ற நாவலை மொழிபெயர்த்துள்ளார். மற்றும் நுகுகி வா தியங்கோ என்ற கென்யா நாட்டு இலக்கிய எழுத்தாளரின் "றுநநி ழேவ ஊhடைன" என்ற நாவலை தமிழில் "தேம்பி அழாதே பாப்பா" என மொழிபெயர்த்துள்ளார்.
சென்னையில் 'மித்ர' பதிப்பகத்தினை ஆரம்பித்துப் பல படைப்பாளிகளின் நூல்களையும் வெளியிட்டுள்ளார்
இவருக்கு தமிழ் இலக்கியத் தோட்டத்தின் 2010 க்கான வாழ்நாள் இயல் விருது வழங்கப்பட்டது.
ஈழத்தில் இருந்து வெளிவருகின்ற “ஞானம்“ சஞ்சிகை இவருக்கான சிறப்பு இதழ் ஒன்றினை வெளியிட்டு அவருக்கான கௌரவத்தையும் வழங்கியிருந்தது.
படைப்புகள்
வீ (சிறுகதைகள்),ஆண்மை (சிறுகதைத் தொகுதி),தீ (நாவல்),சடங்கு (நாவல்),அப்பையா,எஸ்.பொ கதைகள்,கீதை நிழலில்,அப்பாவும் மகனும்,வலை முள்.பூ,தேடல்,முறுவல்,இஸ்லாமும் தமிழும்,பெருங்காப்பியம் பத்து (தொகுப்பாசிரியர்),மத்தாப்பூ சதுரங்கம்,நனவிடை தோய்தல்,நீலாவணன் நினைவுகள்,இனி ஒரு விதி செய்வோம்,வரலாற்றில் வாழ்தல் (சுயசரிதை),ஈடு (நாடகம்)(அ.சந்திரஹாசனுடன் சேர்ந்து எழுதியது),மாயினி,மணிமகுடம்,தீதும் நன்றும்,காந்தீயக் கதைகள்,காந்தி தரிசனம்,மகாவம்சம் ( மொழிபெயர்ப்பு)
பல்துறை ஆளமையினை கொண்டவர் தனது அந்திமகாலம் வரை இயங்கியலுடன் ஆத்மாhத்தமாக எழுத்தினை நேசித்தவர் மரணத்துள்ளபோதும் அவர் தனது படைப்புக்களின்மூலம் வாழ்நது கொண்டிருப்பார் என்பதில் ஜயமில்லை.
நன்றி  யாழ்.தினக்குரல்

 (எஸ்.ரி.அருள்குமரன்)
 

            கரலாசார விழா

சமூகத்தின் கண்ணாடி கலைகள் எனவும் இக்கலைகளினை படைக்கின்ற கலைஞர்கள் காலத்தால் மதிக்கப்படவேண்டும் என்பது அனைவரது எதிர்பார்ப்பாகும்.
கலஞர்களுக்கான அங்கீகாரம் அளிக்கப்படுகின்ற போது தான் அச்சமூகம் எழுச்சியான சமூகமாகஅமையும்.
கலைஞர்கள் வாழும் காலத்திலேயே  கௌரவிக்க வேண்டும் எனும் நோக்கில் பிரதேச கலாசாரப் பேரவைகள் விழா எடுக்கின்றன.   .
இப்பின்னனியில் வலி வடக்கு கலாசரபேரவையினால் அப்பிரதேசத்தில் உள்ள கலைஞர்களினை கௌரவிக்கும் முகமாக கலைச்சுடர் எனும்  எனும் விருதினை வழங்கி கௌரவித்து வருகின்றனர்.
 வலிவடக்கு தெல்லிப்பழை கலாசர பேரவையினரால் ஒழுங்குபடுத்தப்ட்ட கலாசார விழாவானது மாறுபட்டதாகவும் வித்தியாசமானதாகவும் இடம்பெற்றது.
 பிரதேசசெயலரும் கலாசாரபேரவையின் தலைவருமாகிய க.ஸ்ரீமோகனன் தலைமையில் இடம்பெற்ற விழாவில் வேலுப்பிள்ளை சிதம்பரநாதன் (இசை நாடகத்துறை)  திருமதி மங்கையற்கரசி -வர்ணகுலசிங்கம் (வயலின்)தர்தபூபதி சிதம்பரநாதன் (இசை ) வல்லிபுரம் செல்லத்தரை (இசைத்துறை)  திருமதி நேசபூபதி நாகராஜன் ( இசைத்துறை)  சிவஞானசேகரம் விஸ்வநாதன்  ( பண்ணிசை)  மகாராஜஸ்ரீ இரத்தினசபாபதிக்குருக்கள் (சமயம்)  திருமதி பார்பதி சிவபாதம்(வாய்ப்பாட்டு) திருநாவுக்கரசு பாலகிருஸ்ணன்   (நாதஸ்வரம்)  கதிரவன் சரவணமுத்து   ( இசை நாடகம்) திருமதி பகீரதி  கணேசதுரை  (நாடகம் ) குருசாமி ஸ்ரீதர் (மிருதங்கம்)   ஆகிய பதினொரு கலைஞர்களுக்கு  கலைத்துறைசார்ந்து பணியாற்றியமைக்காக   கலைச்சுடர் விருது வழங்கிக் கௌரவிக்கப்பட்டது.
மேலும் இந்நிகழ்வில் வலிவடக்கு பிரதேசத்தின் பண்பாட்டு கூறுகள் வளங்கள் கலைகள் ஊரின் சிறப்புக்களினை  உள்ளடக்கிய வகையில் பருத்தித்துறை பிரதேச செயலாளர் கவிஞர் த.ஜெயசீலனின்  வரிகளில் கு.அற்புதனின் இசையில் இராமநாதன் நுண்கலைப்பீட இசைத்துறை விரிவுரையாளர் த.றொபேட்டின் குரலில்  பிரதேச செயலகத்திற்க்கான கீதம் இறுவெட்டு வடிவில் இசைப்பேழையாக  வெளியிடப்பட்டுள்ளது.  அத்துடன் திருமுறைப்பாடல்களின் தொகுப்பு  இறுவெட்டு வெளியிடப்பட்டுள்ளது.
 மேலும்  கவிஞர் சோ..பத்மநாதன் தலைமையில் கவியரங்க நிகழ்வு இடம்பெற்றது  “காங்கேயன் மகளுக்கு கலியானம் சீர்கொண்டு தருவாளோ யாழ்தேவி” எனும் பொருளில் கவிஞர் எஸ்.ஜெயசீலன்   வே.சிவராசா இ.சர்வேஸ்வரா கை.சரவணன் திருமதி மாலாதேவி மதிவதனன் ஆகியோர் கவிவரிகளினை வழங்கினார்கள்.

றப்பாக கலாசார மத்திய நிலைய மாணவர்களினால் நடன நிகழ்வுகள் இடம்பெற்றன. இவை பார்ப்போரை கவாந்த நிகழ்வாக உள்ளது.
சிறப்பு நிகழ்வாக மாருதப்பூரவீகம் எனும் பண்பாட்டு மலர் வெளிவந்துள்ளமை குறிப்பிடத்தக்கது. இம்மலரானது பலரது முயற்ச்சியனால் குறுகிய காலத்தினுள் தரமான கட்டுரைகளினை கொண்டமைந்தததுடன் எமது பிரதேசத்தின் புராதன மகிமையினை வெளிப்டுத்துட் வகையில் பெயர் கொண்டமைந்து வெளியிடப்பட்டமை சிறப்பானதாக காணப்படுகின்றது.
  சிறப்பானதாகவும் பயனுள்ளவகையிலுமானதாக இவ்விழா இடம்பெற்றமை பாரட்டிற்குரியதாகவும். இவ்விழா மேலும் இனிவரும் காலங்களில் மேலும் சிறப்புடையதாக ஒழுங்கமைத்து நடாத்தப்படுகின்றபோது எமது மண்ணின் கலைகளின் உயிர்பினையும் வளர்சியினையும் அடைந்து கொள்ள முடியும்.
 ஒரு இனத்தின் அடையாளமாக உள்ள கலைகள் வளர்க்கபடவேண்டுமாயின் அக்கலைஞர்களிற்கான கொளரவம் அளிக்கப்பட வேண்டியது மிக அவசியமானதாகும். இப்பணியினை பல பிரதேச செயலங்கள் செயற்ப்படுத்தி வருவது பாராட்டிற்கும் வரவேற்ப்பிற்குமுரியவிடயமாகும்

                (எஸ்.ரி.அருள்குமரன்)                

                           EDUCATION VALIKAMAM 

 சமூகத்தின் மிகப்பெரிய பொக்கிசங்களிலொன்றாக கருதப்படுவது  செயற்ப்பாடுகளினையும் சாதனைகளினையும் பதிவு செய்தல். இப்பதிவுகளே எதிர்கால தலைமுறையினர் அச்மூகத்தின் அடையாளங்களை  அறிந்துகொள்வதற்கும் அச்சமூகத்தினை புரிந்து கொள்வதற்கும வாய்ப்பாக அமையும்;. இவ்கையில் சாதனைகளின் பதிவாக   EDUCATION VALIKAMAM  எனும் நூல் வலிகமம் வலயத்தினரால் வெளியிடப்பட்டுள்ளது.
வலிகாமம்பிரதேசமானது கலைகளிலும், பண்பாட்டு விழுமியத்திலும், வரலாற்று சிறப்பு மிக்க  இடங்களையும் கொண்டமைந்த பிரதேசமாகும்.
இப்பிரதேசம் போர் காரனமாக பாதிக்கபட்ட பேதிலும் இன்று அம்மக்களது  முயற்ச்சியினால் மீளெழுர்ச்சி  பெற்று வருகின்ற பிரதேசமாகவும் கல்வியிலும்,விளையாட்டிலும் சாதனை படைத்து   வருகின்ற கல்வி வலயமாகவும் இது விளங்குகின்றது.
“தரமான கல்விச்சமூகம் எனும் தூரநோக்கையும்” ,”கல்வியின் தேசிய இலக்கினை அடையும் வகையில் பௌதீக,மனித வளங்களைத்திட்டமிட்டுச்செயறப்படுத்தி, தேசப்பற்று நல்லெழுக்கம் தொழிற்தின் ஆகியவற்றினூடாக பூரன ஆளுமையுடைய சமூகத்தை உருவாக்கல்” எனும்  நோக்கக் கூற்றினையும் வசகமாக கொண்டு தரமான கல்வியினை வழங்கி வருகின்ற வலயமாக விளங்குகின்றது.
 சமூகத்தினை உருவாக்குவதில் பாடசாலைகளது வகிபங்குகள் காத்திரமானவை.பாடசாலைகளினை உயர்நிலைக்கு கொண்டுவருவதில் அதிபர்களது பங்குகள் கனதியானவை.
நல்ல மாணவர்களினை உருவாக்குவதில் ஆசரியர்களது கடமைகள் மிகவும் பொறுப்பு வாய்ந்தவை.
இப்பாடசாலைகள் சிறப்பு நிலையில் இயங்குவதற்கும் நல்லதொரு விளைவினை சமூகத்திற்கு கொடுப்பதற்கு வளப்பங்கீடுகளினை சிறப்பான முறையில் வழங்குவதில் வலயக்கல்விப்பணிப்பாளரது பணி பொறுப்பு வாய்ந்தாகும் இத்தகைய வகையில் பலரது இணைவின் மூலமே ஆரோக்கியமான சமூகத்தினை உருவாக்க முடியும்
ஊக்குவிப்புககளும் பாராட்டுக்களுமே மனதினை முழுமைப்படுத்துவதுடன் தொடர்ந்து உத்வேகத்துடன் இயங்க வைப்பதற்கான வாய்ப்புக்களினை ஏற்பப்டுத்துகின்றன.
இப்பின்னனியில் வலிகாமம் கல்வி வலயமானது கடந்த ஆண்டு அர்ப்பணிப்புடன் சேவையாற்றிய அதிபர், ஆசிரியர்களினை கௌரவிக்கும் வகையில் வலயமட்டத்தில் சாதனையாளர்களினை கௌரவித்திருந்தது.
இக்கௌரவிப்புக்களினை வெளிப்படுத்துகின்றவகையிலும் வலயத்தினது செயற்ப்பாடுகளினை ஆவனப்படுத்தும் வகையிலும் EDUCATION VALIKAMAM  எனும் நூல் வெளியிடப்பட்டுள்ளது.
பாரம்பரிய சிறுகைத்தொழில் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா, வடமாகானஆளுநர் ஜீ.ஏ.சந்திரசிறி வடமாகான கல்விஅமைச்சர்த.குரகுலராஜா , வடமாகான கல்வியமைச்சின் செயலாளர் சி.சத்தியசீலன் ,வடமாகாண கல்விப்பணிப்பாளர் ஆ.ராஜேந்திரன் ஆகியோரது வாழ்த்துரைகள் இடம்பெற்றுள்ளன.அவ்வாழ்த்துரைகள் மூலம் வலிகாமவலயத்தின் செயற்ப்பாடுகள், அவற்றினது சாதனைகள் என்பவற்றினை அறிந்து கொள்ளக்கூடியதாக உள்ளது.
 இந்நூலில் வலயத்தினால் மேற்கொள்ளப்பட்ட பயன்மிக்க செயற்ப்பாடுகள், பாடசாலைகளினது அடைவுமட்டம், மாணவர்களது தேசியமட்டம் வரையிலான சாதனைக் குறிப்புக்கள், கல்வியினது அடைவு மட்டத்தினை அதிகரிப்பற்கான எதிர்கால செயற்ப்பாடுகளிற்கான  திட்டங்கள், வலயத்திலுள்ள பணிப்பாளர்களிற்கான பொறுப்புக்கள் ,கடமைகள் கோட்க்கல்விப்பணிப்பாளரது கடமைகள் பொறுப்புக்கள், கணக்காளரது கடமைகள் பொறுப்புக்கள்    போன்றன குறிப்பிடப்பட்டுள்ளது.இக் குறிப்புக்கள் மூலம் அவர்களிடம் இலகுவான முறையில் வேவையினை பெற்றுக்கொள்வதற்கான வாய்ப்பாகவும் அமையும்.
கடந்தகாலத்தில் இவ்வலயத்தின் வளர்ச்சிக்கும் உயர்விற்கும் அர்பணிப்பான சேவையினை ஆற்றிய கல்விப்பணிப்பாளர்களான வீ.ராசையா, திருமதி ஆர்.இருதயநதன், பி. விக்னேஸ்வரன், ஆ.ராஜேந்திரன் ஆகியோரினை கௌரவப்படுத்தும் வகையில் அவரக்களது சேவைக்கால குறிப்புக்கள்  புகைப்படத்துடன் வெளிடப்பட்டுள்ளன.
கடந்த ஆண்டு இவ்வலயத்தில் உள்ள பாடசாலைகளது பௌதீக வளப்பிரச்சினைகளினை தீர்த்துக்nகுhள்ளும்வகையிலான கட்டங்கள் அமைக்கபட்டமைக்காக பாடசாலைகளிற்கு ஒதுக்கப்பட்ட நிதிகள் செயற்ப்டுத்தப்ட்ட சேவைகளிற்கான அறிக்கைப்படுத்தல்கள் என்பன காணப்படுகின்றன.
அத்துடன் ஆசிரியர்கள் பலறிற்கு பயன்படக்கூடியவகையிலான கட்டுரைகள் காணப்படுகின்றன. சட்டரீதியானதாகவும், சட்டரீதியாக எவ்வகையில் பிரச்சினைகளினை அனுகுதல் போன்ற வற்றிற்கு பயனுள்ள வகையிலான  கட்டுரைகளாக “பாடசாலைகளில் உடலியல் சார் தண்டனைகள் பற்றிய நோக்கு” “பாடசாலைகளில் கவனமின்மை சார்பான தீங்குகளும் தீங்கியற்சட்டமும்”, “ஆசரியர்களின் விழுமியம் மிக்க செயற்ப்பாடுகள் தொடர்பான ஒழுக்கவிழுமிய முறைமை மற்றும் பொதுச்சட்டத்தொகுப்பு” ஆகிய மூன்று கட்டுரைகளும் மிகவும் பயனுள்ளளவாக காணப்படுகின்றன.
   மாணவர்களிற்கு வழங்கப்படுகின்ற தண்டைனைகள், மாணவர்கள் தவிறிழைப்பதற்கு ஆசிரியர்கள் எவ்வகையில் காரனமாகின்றனர் அவற்றை எவ்கையில் தீர்த்து கொள்ள முடியும் , சுற்றுலாக்களிற்கு மாணவர்களினை அழைத்து செல்லும்போது ஆசிரியர்களிற்கான பொறுப்புக்கள் அங்கு ஏற்ப்படக்கூடிய பிரச்சினைகளினை எவ்வகையில் தீர்த்துக்கொள்ள முடியும் என்பன தொடர்பான அறிவுறுத்தல்களினை பெற்றுக்கொள்ளக்கூடியவகையில் உள்ள கட்டுரைகள் பயனுள்ள வகையில் அமைகின்றன.
 வலயக்கல்விப்பணிப்பாளர் சட்டத்துறையினை சேர்ந்தவர் எனும் வகையில் மிகவும் பயனுள்ள வகையில் இக்கட்டுரையினை அமைத்துள்ளார்.
 இவ்விழாவில்  10 சிறந்த பாடசாலைகள், 13 அதிபர்கள், 100 ஆசிரியர்கள் தெரிவு செய்யபப்பட்டு பாராட்டப்பட்டனர் அவர்கள்  பற்றிய குறிப்புக்கள் பதிவு செய்யப்ட்டுள்ளன.
கல்விப்பணிப்பாளரின் குறிப்பில் எதிர்கால செயற்ப்பாட்டிற்கு  சகலரும் செலுத்து வேண்டிய  அக்கறையின் முக்கியத்துவம் ,ஆசிரிய வளத்தினை பங்கீடு செய்தல், அவ்வாறு பங்கீடு செய்கின்றபோது ஏற்ப்படுகின்ற பிரச்சினைகள் அவற்றினை தீர்க்கப்படவேண்டியதன் அவசியம் அவ்வாறு தீர்க்கப்படுகின்றபோது கிடைக்கக்கூடிய நன்மைகள் பற்றிய குறிப்புக்கள் என்பன பயனுள்ளவையாக காணப்படுகின்றது.
  கடந்த ஆண்டு வலயக்கல்விப்பணிப்பாளாரராக பொறுப்பேற்று  கடமையாற்றுகின்ற எஸ்.சந்திரராஜாவினது ஆளுமையினையும் ,கல்வி வளர்சிக்காக  அவரால் மேற்கொள்ளப்படுகின்ற அர்hப்பணிப்புடன் கூடிய சட்ட அனுகு முறையுடான    செயற்ப்பாடுகள்  என்பவற்றினையும் இந்நூலில் உள்ள குறிப்புக்களின் ஊடாக அறிந்து கொள்ள முடிகின்றது.

 நன்றி தினக்குரல்

  (எஸ்.ரி.அருள்குமரன்)

 நாடக செயற்ப்பாடுகளில்   ஈடுபட்டமை என்னை வளர்த்துக்கொள்ளக்கூடியதாக உள்ளதுடன் என்னிடையே இருந்த பயம்,வெட்கம்,கூச்ச சுபாவம் என்பனநீங்கியதுடன் எதையும் ஏற்று செயற்ப்படக்கூடிய தலைமைத்துவம் ஏற்ப்பட்டுள்ளது என றோயல்கல்லூரியின் தமிழ்நாடகமன்றத்தினரால் தேசிய ரீதியில் நடத்தப்பட்ட தனிநபர்திநன்கான் போட்டியில் வடமாகானத்தை பிரதிநிதித்துவப்படுத்தும் வகையில் தேசியரீதியில் 2ம் இடத்தினை பெற்றுக்கொண்ட மானிப்பாய் இந்துக்கல்லூரியில் கல்விபயிலும் உதயகுமார்- கரிஸ் தெரிவித்தார்.

இவர் வழங்;கிய நேர்காணல் வருமாறு
உங்களைப்பற்றிய அறிமுகம்?


நான் உதயகுமார்-கரிஸ்  மானிப்பாய் இந்துக்கல்லூரியில் 2015ம் ஆண்டு கலைப்பிரிவில் கல்விபயில்கின்றறேன்எனது ஆரம்ப கல்வியினை விவேகானந்தா முன்னபள்ளியிலும், பின் யாழ்.சென்ரான்ஸ் றோ.க.த.க பாடசாலையிலும் கல்வி கற்றேன்.  தற்போது  புத்தாக்க அரங்க  இயக்கம் எனும் நாடக நிறுவனத்தில் ஆற்றுகை துறை இணைப்பாளராக செயற்பட்டு வருகின்றேன். நாடக துறையில் ஈடுபாடு உள்ளது. அத்துறையில் வளர வேண்டும் எனும் ஆசை உள்ளது.
நாடக துறையின் மீதான ஈடுபாடு?
 முன்பள்;ளியில் கற்றகாலப்பகுதியில் நாடக போட்டியில் யாழ்.மாவட்டம் வரை சென்றேன். ஆயினும் பின்னர் நாடகதுறையில்தொடர்ந்து ஈடுபடமுடியாமல் போனது பின்னர் மானிப்பாய் இந்துக்கல்லூரியில் தரம் 9ல் கல்வி பயில சென்ற காலப்பகுதியில் இருந்து மீளவும் ஈடுபடுவதற்கான வாய்பப்பு ஏற்பட்டது.
கல்லூரியில் இடம்பெற்று வருகின்ற இல்லங்களுக்கிடையிலான நாடகப்போடட்டியில் ஈடுபட்டு வருகின்றேன். 2011ம் அண்டு இடம்பெற்ற நாடகப்போட்டியில் எஸ்.ரி.அருள்குமரன்,எஸ்.ரிகுமரன் ஆகிய ஆசிரியர்களின் நெறியாழ்கையில் இடம்பெற்ற கற்பூரதீபம் எனும் நாடகம் முதல் இடத்தினை பெற்றுக்கொண்டதுடன் எமது இல்லம் நீண்டகாலத்தின் பின்பு பெற்ற முதல் வெற்றியாகவும் காணப்பட்டது. இவ்வெற்றி உற்சாகத்தினை ஏற்ப்படுத்தியதுடன் தொடர்ந்து நாடக செயற்ப்பாடுகளில் ஈடுபடுவதற்கான உற்ச்;சகத்தினை ஏற்ப்படுத்தியது.
நீர் பங்குபற்றி வெற்றி பெற்ற போட்டி தொடர்பாக குறிப்பிடுங்கள்?
றோயல் கல்லூரி தமிழ் நாடக மன்றமானது மானவர்களது ஆற்றலினை வெளிக்கொணரும் முகமாக பல்வேறு போட்டிகள் நடத்தப்பட்டு வருகின்றன. அதில் ஓர் போட்டியாக தனிநடிப்பு போட்டியினை நடத்தி வருகின்றது.இப்போட்டியில் மாவட்டமட்டத்தில் முதல் இடத்தினையும் தேசிய மட்டத்தில் 2ம் இடத்தினையும் பெற்றுக்கொண்டுள்ளேன். கடந் 3 ஆண்டுகளாக எமது மாணவர்கள் இப்போட்டியில் தேசிய மட்டத்தில் வெற்றிபெற்று வருகின்றமை மகிழ்சிக்குரிய விடயமாகும் 2012ம் ஆண்டு மேற்ப்பிரிவில் கு.திலக்ஸன் 3ம் இடத்தினையும் கடந்த ஆண்டு கீழ்பிரிவி; யே.சானுஜன் 3ம் இடத்தினையும் பெற்றுக்கொண்டனர்.
பங்குபற்றிய பிற போட்டிகள் தொடர்பாக குறிப்பிடுங்கள?
றோயல் கல்லூரி நடத்திய நாடகபோட்டியில் கடந்த ஆண்டு மாவட்டமட்டத்தில் 2ம் இடத்தினையும் இம்முறை 3ம் இடத்தினையும் பெற்றுக்கொண்டோம். இப்போட்டிகளில் எமது ஆசிரியர் எஸ்.ரி.அருள்குமரனது வழிப்படுத்தலில் நாடகத்தினை நெறியாழ்கை செய்திருந்தேன். கடந்த ஆண்டு சிரேஸ்ட பிரிவினருக்கான கணித நாடகப்போட்டியில் வலயமட்டத்தில் முதல் தடவையாக முதல் இடத்தினை பெற்று மாகாணபோட்டியில் கலந்து கொண்டிருந்தோம். அதே போன்று ஸ்கந்தவரோதயாகக்ல்லூரி விஞ்ஞான விழாவினை முன்னிட்டு மாவட்ட ரீதியில் நடத்திவருகின்ற நாடக போட்டியில் கடந்த ஆண்டு 2ம் இடத்தினையம் இம்முறை முதலாம் இடத்தினையும் பெற்றுக்கொண்டோம். இம்முறை உளநலநாளினை முன்னிட்டு வடமாகான ரீதியில் நடத்தப்பட்ட விழிப்புனர்வு நாடகத்தில் எமது கல்லூரி நாடகம் கலந்து கொண்ட நடுவர்களினால் பாராட்டப்பட்டது. இந் நாடகங்களிற்கான எழுத்துரு நெறியாழ்கையினை எமது நாடத்துறை ஆசிரியர் எஸ்.ரி அருள்குமரன் மேற்கொண்டுள்ளார்.
ஏனைய நாடகத்துறை நிறுவனங்களுடன் இனைந்த செயற்ப்படு?
புத்தாக்க அரங்க நிறுவனம் எனும் அரங்க நிறுவனத்துடன் இணைந்து பல்வேறு நிறுவனங்களிற்க்காக நாடக செயற்ப்பாடுகளினை  மேற்கொண்டுள்ளோம். இந்நிறுவனத்தினர் கடந்த ஆண்டு தெல்லிப்பழை, சங்கானை, கரவெட்டி  பிரதேசசெயலகங்களின் கலாசார பிரிவுடன் இணைந்து மேற்கொண்ட கலாசார விழிப்புனர்வு தெருவெளி ஆற்றுகையில்   நடித்திருந்தேன் இது பாடகாலைகளிலும் பொது இடங்களிலும் நிகழ்த்பட்டு பலரது வரவேற்ப்பினை பெற்றுக்கொண்டது.   மேலும் சுன்னானம் பொதுநூலகம், இனுவில்பொதுநூலகம்,  முன்பள்ளிகளில் இடம்பெறுகின்ற விழாக்களில் எமது நிறுவனத்தின் ஊடாக நாடக செயற்பாடுகளினை மேற்க்கொண்டுள்ளோhம்.
அத்துடன் இந்நிறுவனம் மாணவர்களிற்கு மேற்கொள்கின்ற அரங்க களப்பயிற்;சியில் நிறுவனத்தின் பணிப்பாளர் எஸ்.குமரன், நிர்வாகபணிப்பாளர்எஸ்.ரி.அருள்குமரன் ஆகியோர் என்னையும் அழைத்து சென்று பயிற்ச்சிபட்டறைகளில் வளவாளராக செயற்ப்படுவதற்கு வாய்ப்புக்களினை ஏற்ப்படுத்தித்தந்துள்ளனர் அந்தவகையில் இச்செயற்பாடுகள் மகிழ்சிக்குரியனவாக உள்ளது.
எதிர்கொண்ட பிரச்சினை?
நாடகத்துiயில் ஈடுபடுவதினால்  கல்வி பாதிப்படையும் என்பதினால் வீட்டில் நாடக நிகழ்ச்சிகளில் ஈடுபடவேண்டாம் எனக்குறிப்பிட்டனர். கல்வியில் பாடசாலையில்  இருந்து இடைவிலக வேண்டியசுழ்நிலை ஏற்ப்பட்டது. அவ்வேளை எமது நாடகத்துறை ஆசிரியர் நாடகத்துறை செயற்ப்பாட்டில்; ஈடுபடுவடுன் கல்வியிலும் சிறப்பு நிலை எயத்த வேண்டும் என அறிவுரை கூறியதுடன் நாடகப்போட்டியில் பங்குபற்றுவதற்காக அழைத்து போட்டியில் பங்குபற்ற வாய்ப்பு எற்றப்படுத்தி தந்திருந்தார் அவ் வாய்ப்பு மூலமே இவ்வெற்றி பெற முடிந்தது. அத்துடன் எனது வகுப்பாசிரியர் திருமதி சிவகுமார் ஆலோசனை வழங்கி என்னை ஊக்குவித்தார்.
 செயற்ப்பாட்டிற்கு ஒத்துழைப்பு தருபவர்கள்?
 தற்போது எனது செயற்ப்பாட்டிற்கு பெற்றோhரினது பூரன ஒத்துழைப்பு காணப்படுகின்றது. கல்லூரியின் முதல்வர் எஸ்.சிவநேஸ்வரன் வெற்றிபெறுகின்றபோது எம்மைபாராட்டி ஒத்துழைப்பு வழங்கிவருகின்றார். மேலும் எமது நாடகத்துறை ஆசிரியர் எஸ்ரி.அருள்குமரன் எம்மை வழிப்படுத்தி எம்மை உற்சாகப்படுத்தி தேவையான உதவிகள் ஆலோசனைகளினையும் வழங்கி  ஊக்குவித்து வருகின்றார். மற்றும்  எமது வகுப்பாசிரியர் திருமதிசிவகுமார் ஆசிரியர் வெற்றி பெறுகின்றபோது  உற்ச்சகப்படுத்துவார்.எமது நாடக குழு நண்பர்களிற்கும் எனது நன்றிகள்

எதிர்கால இலட்சியம்?
 நாடகத்துறையில் மிகச்சிறந்த நடிகனனாக வரவேண்டும் என்பதாகும்.
 (எஸ்.ரி.அருள்குமரன்) 

                                    முத்தமிழ்  விழா-2015

 முத்தமிழ் அறிஞர் சுவாமி விபுலாநந்தர் கிழக்கிலங்கையிலே காரைதீவு எனும் இடத்தில் இடத்தில் பிறந்து தமிழ் மொழிக்கும்,சைவத்திற்கும், பண்பாட்டுபேனுகைக்கும் அர்பனிப்பான சேவையாற்றியதுடன் தமிழ்த்துறையின் முதல் துறைத்தலைவர் எனும் பெருமைக்கும் உரியவராவார்.
 இவர் மானிப்பாய் இந்துக்கல்லூரியில் அதிபராக இருந்து அவ்அரியாசனத்தினை அலங்கரித்ததுடன் அக்காலப்பகுதியில் யாழ்.நூல் எனும் அற்ப்புதமான நூலினை யார்த்து இலக்கிய உலகிற்கு காத்திரமான பங்களிப்பினை ஆற்றியிருந்தார்.
  முத்தமிழ்களான இயல்,இசை. நாடகம் விளங்குகின்றன. இத்துறைகளின் வளர்ச்சிக்கு இவர் ஆற்றிய பணி காத்திரமானதாகும்.  
 இத்தகைய பெருமைவாய்ந்த அறிஞர் கல்லூரியில் அமர்ந்து சேவையாற்றியமை மானிப்பாய் இந்துக்கல்லூரி சமூகம்; பெருமையடையவேண்டியதுடன் அவரை கௌரவப்படுத்த வேண்டியதும் காலத்தின் கட்டளையாகும்.
 இவ்வகையில் மானிப்பாய் இந்துக்கல்லூரி சமூகம் சுவாமிவிபுலாநந்தரினை கௌரவப்படுத்தும் முகமகாவும் அவரை நினைவு கூறும் முகமாகவும்  தமிழ்ச்சங்கம் அமைத்து ஜனனதினத்தினை முத்தமிழ் விழாவாக கொண்டாடினர்
விபுலாநந்தர் இறந்த தினத்தினை கடந்த ஆண்டுகளில் தமிழ்மன்றத்தினரால் முத்தமிழ் விழா சிறப்பாக கொண்டாடப்பட்டபோதும் இம்முறை பிறந்த தினத்தினை தமழ்ச்ங்கத்தினரால் முத்தமிழ் விழாவாக கொண்டாடுவதாக தீர்மானிக்கப்பட்டது.
மானிப்பாய் இந்தக்கல்லூரியினை பொறுத்தவரையில் கலைகளினது இயங்கியலிற்கு சான்றாக பல கலைஞர்களினை கடந்தகாலத்தில் பிரசவித்ததுடன் நிகழ்காலத்திலும் பிரசவித்துக்கொண்டிருக்கின்றமை குறிப்பிடத்ததக்கது.
நாடகத்தந்தை சொர்ணலிங்கம்,கட்டடகலைஞர் வி.எஸ்.துரைராஜா, திபை;படகலைஞர் அருமைநாயகன்,போன்ற பல கலைஞர்கள் உருவாக மானிப்பாய் இந்துக்கல்லூரி களமாக விளங்குகியது.
நிகழ்காலத்தில் பேச்சுப்போட்டியில் வசீகரன், தனியிசையில் தயூரன் நாடகத்துறையில் 2012ம்ஆண்டு கு.திலக்சன், 2013ம் ஆண்டு யே.சானுஜன், 2014ம்ஆண்டு உ.கரிஸ், 2014ம்ஆண்டு ந.மோகனராஜன் ஆகியோர் தேசிய வெற்றிகளினை பெற்று பாடசாலைக்கு பெருமைசேர்ந்தனர்.
இத்கைய பெருமைகளினை உடைய கல்லூரி முத்தமிழ்களிற்கும் முதன்மை கொடுக்கும் வகையில் மானிப்பாய் இந்துக்கல்லூரி (தேசியப்பாடசாலை) யின் தமிழ்ச்சங்கத்தினரால் மானிப்பாய் இந்தக்கல்லூரியின் முன்னாள் அதிபர் சுவாமி விபுலானந்தரின்   ஜனன தினமும் முத்தமிழ் விழாவும் அண்மையில் கல்லூரி மண்டபத்தில் தமிழ்சங்கப் போசகரும் அதிபருமாகிய  எஸ்.சிவநேஸ்வரன் தலைமையில்  இடம்பெற்றது.
  நிகழ்வில்பிரதம விருந்தினராக யாழ்ப்பாணப் பல்கலைக்கழகத்தின் ஓய்வு நிலை  தமிழ்த்துறைப் பேராசிரியர் எஸ்.சிவலிங்கராஜா,சிறப்பு விருந்தினராக தெல்லிப்பழை துர்க்காதேவி தேவஸ்தானத் தலைவர் செஞ்சொற்செல்வர் கலாநிதி ஆறு. திருமுருகன்  ஆகியோர் கலந்து கொண்டார்கள்.
காலையில் மருதடி விநாயகர் ஆலயத்தில் இருந்து சுவாமி விபுலாநந்தரின் உருவப்படம் பாரம்பரியமுறைப்படி ஊர்வலமாக எடுத்துவரப்பட்டு வீதியெங்கும் பூரன கும்பம் வைத்து மரியாதை செலுத்தப்பட்டது.
 ஊர்வலமாக எடுத்துவரப்பட்ட பின்னர் மங்களவிளக்கேற்றல் இடம்பெற்றது. தொடர்ந்து வரவேற்புரையினை  கல்லூரியின் தமிழ்ச்சங்கத் தலைவர் பா.ஜெயரூபன் வழங்கினார்.
  கல்லூரி மாணவர்களினால் வரவேற்ப்பு நடனம் நிகழ்த்ப்பட்டது.
த.ஜெயசீலன்  தலைமையில் “உள்ளக்கமலம்” என்னும் கருப்பொருளில்  கவியரங்கம் இடம்பெறவுள்ளது. கவிவரிகளினை கவிஞர்களான  இ.சர்வேஸ்வரா மா.பா.மகாலிங்கசிவம் இரா.அருட்செல்வம் திருமதி மாலாதேவி மதிவணணன் ஆகியோர் வழங்கினார்கள். நடைமுறைசார்ந்த விடயங்களினை கவிவரிகளாக்கி ரசனையுடன் படைக்கப்பட்டது.
தழிழ்துறையின் வளர்சிக்கு அர்ப்பனிப்பான வேவையினை ஆற்றிக்கொண்டிருக்கும் யாழ்ப்பான பல்கலைக்கழத்தின் ஓய்வுநிலைப் பேராசிரியர் சி.சிவலிங்கராஜாவிற்கு “சுவாமிவிபுலாநந்தர்விருது” வழங்கிக்கொளரவிக்கப்ட்டது.
  வரவேற்ப்பு நடனம் இன்னிசை காணம் ஒயிலாட்டநடனம் ,ஆகிய நிகழ்வுகளுடன் வல்லிபுரம் ஏழுமலையின் எழுத்துருவாக்கத்தில் மானிப்பாய் இந்துக்கல்லூரி நாடகத்துறை ஆசிரியர் எஸ்.ரி.அருள்குமரனின் நெறியாள்கையில் “நடுகல் பேசும்” இலக்கிய நாடக ஆற்றுகையும் இடம்பெற்றது.
நன்றியுரையினை எஸ்.அபிசாந் நிகழ்த்தினார்.
மானிப்பாய் இந்துக்கல்லூரியானது நூற்றாண்டினை கடந்து தேசியப்பாடசாலையாக உயர்ந்து நிற்கின்றவேளையில் முத்தமிழையும் வளர்க்கும் நோக்கில் தழிச்சங்கம் அமைத்து பணியாற்றும் தருனத்தில் எதிர்காலத்தில் மேலும் சிறப்பான முறையில் மேற்கொள்வதுடன் மாணவர்களது இயங்கியலிற்கும் முத்தமிழிற்கும் முதன்மை கொடுத்து மேற்கொள்ளப்படவேண்டியதும் அவசியமாகும்.

(எஸ்.ரிஅருள்குமரன்;)

கல்விப்புலத்தில்   ஆசிரியர்கள் மாணவர்கள் கற்றலுக்கான ஊக்கியாக செயற்ப்பட்டு மாணவர்களினை நல்வழிப்படுத்துகின்றபோது தான் எமது சமூகம் கல்விப்புலத்தில் ஆரோக்கியமான சமூகமாக மாற்றமடையும்.
 மாணவர்கள் கற்க்க வேண்டிய  பல பாடங்கள் காணப்படுகின்றன அப்பாடங்களில்மிகவும் கடினமானதும் மாணவர்களிற்கு கசப்பானதாகவும் கொள்ளப்படுகின்ற பாடமாக கணித பாடத்தினை பலர் குறிப்பிடுவர் ஆயினும் கற்ப்பிக்கின்றவர்களினை பொறுத்து அப்பாடம் கசப்பானதா இல்லையா என்பது மாணவர்களிற்கு புலம்படும்.

இந்தவகையில் கனிதபாடத்தினை மாணவர்கள் விரும்பி கற்கும்   வகையில் கசப்பில்லை என மாணவர்களிற்கு உணர்த்தி தனது கற்ப்பித்தல் திறன் மூலம் நிருப்பித்த கனித ஆசிரியர் எஸ்.சிவபாதம் தனது 36 வருட கால ஆசிரிய சேவையிலிருந்து 28.08.2014ல் இருந்து ஓய்வு பெறுகின்றார்.
 யாழ்ப்பானத்தில் காரைநகரில் பிறந்த இவர் தனது ஆரம்ப கல்வியினை யாஃ வியாவில் சைவ வித்தியாலத்திலும்  உயர்கல்வியினை காரை நகர் இந்துக்கல்லூரியில்(தியாகராஜா ம.ம.வி) கற்றுக்கொண்டார்.
  1979ம் ஆண்ட பஃ கனவரல்ல அரசினர் தமிழ் கலவன் (பண்டாரவளை)பாடசாலையில் முதல் நியமனத்தினை பெற்றக்கொண்டஇவர் தொடர்ந்து பஃ றெசாட் பு.வு.ஆ.ளு காலியெல்ல, பஃ சரஸ்வதி மகாவித்தியாலயம் (பதுளை)
அஃ கட்டியாவா அஸாத் முஸ்லிம் மகாவித்தியாலயம், சுன்னாகம் ஸ்கந்தவNiராயதகக்கல்லூரி, ஆணைக்கோட்டை சு.ஊ.வு.ஆ.ளு  நவாலி மகாவித்தியாலயம், அட்டகிரி சைவ வித்தியாலயம்,  மற்றும் 9.2.2005 முதல்  மானிப்பாய் இந்தக்கல்லூரி ஆகிய  பாடசாலைகளில் கணித ஆசிரியராக கடமையாற்றியுள்ளார்.

 மானிப்பாய் இந்துக்கல்லூரியில் ஆசிரியராக பொறுப்பேற்றுக்கொண்ட போத கணித பாடத்திற்குரிய அடைவு மட்டம் வெறும் 34.5 வித மாக காணப்பட்டது அவ் அடைவு மட்டத்தினை உயர்ந்த வேண்டும் எனும் அவாக்கொண்ட இவர்  அப்பாட   அடைவு மட்டத்தினை 94.5 வீதமாக மாற்றி பாடசாலைக்கு பெருமை சேர்த்ததுடன் கற்ற மாணவர்கள் பயன் பெறும்அவகையில் செயற்ப்பட்டார்.
கணிதம் சித்தியடைய தவறும் மாணவர்களின் எதிர்காலம் சூனிய மானிப்போகும் துர்பாக்கிய சூழ்நிலையில் இவர் அம்மாணவர்களது எதிர்காலம் பிரகரிக்க வேண்டும் என்பதற்காக பாடசாலை நேரம் தவிர்ந்த நேரங்களில் மேலதிக வகுப்புக்களினை மேற்கொண்டு இவ் அடைவு மட்டத்தினை மேற்கொண்டிருந்தார்.

எப்போதும் எளிமையாக காணப்படும் இவர் இளம் தலைமுறையினரை பாராட்டி உற்ச்சாகப்படுத்தி கொள்வதில் இவரது பண்பு உயர்வாக காணப்படுகின்றது.

 இது வரை காலம் கற்ப்பித்ததில்  தனது சாதனை எனக்குறிப்பிடுகின்ற போது.