என்னைப் பற்றி

வெள்ளி, ஜூலை 10, 2015

 (எஸ்.ரி.அருள்குமரன்)

           அனைவராலும் வசீகரிக்கப்ட்ட(எஸ்.பொ) 

இலக்கியங்கள்  காலத்தின் கண்ணாடி எனக்குறிப்பிடுவர். காலத்தினை பிரதிபலிப்பதிலும் பதிவு செய்வதிலும் இலக்கியவாதிகளின் வகிபங்குகள் கனதியானவை. தனது சிந்தனையோட்டத்தில் சமூகத்தினை தரிசனம் கொள்ளும் வகையில் தனது படைப்புக்களினை படைக்கின்றார்கள். இதானல் படைப்பாளியின் மரனத்தின் பின்னரும் அப்படைப்பாளி தனது படைப்புக்களின் மூலம் காலத்தினையும் விஞ்சி  சமூகத்தில் வாழ்ந்து கொண்டிருக்கின்றார். இவ்வகையில் தனது படைப்புக்கள் மூலம் சமூகத்தில் மதிப்புனர்வினை ஏற்ப்படுத்திய படைப்பாளி இரண்டு எழுத்துக்களில்(எஸ்.பொ) அனைவராலும் வசீகரிக்கப்ட்ட இலங்கையின் புகழ்பெற்ற மூத்த எழுத்தாளர்களில் ஒருவரும் அவுஸ்ரேலியாவில் வசித்துவந்தவருமான  எஸ். பொ. என அழைக்கப்படும் எஸ். பொன்னுத்துரை சிட்னியில்   (26 - 11 - 2014 ) காலமானார்.
இவர்  04 - 06 - 1932 ல் யாழ்ப்பாணத்தில்  நல்லூரில் பிறந்தவர்.
யாழ். பரமேஸ்வராக் கல்லூரியிலும், தமிழ்நாடு அண்ணாமலைப் பல்கலைக்கழகத்திலும், சென்னை கிறித்தவக் கல்லூரியிலும் உயர்கல்வியினை பெற்றுக்கொண்ட இவர்  இலங்கைப் பாட விதான சபை, திரைப்படக் கூட்டுத் தாபனம் ஆகியவற்றிலும் சில காலம் பணியாற்றினார்.
 பின்னர் இலங்கையில்   மட்டக்களப்பில் ஆசிரியராகவும் ,அதிபராகவும் பணியாற்றியதுடன்  நைஜீரியாவில் ஆசிரியப் பயிற்சி கலாசாலையில் ஆங்கில இலக்கிய வரலாற்றுத்துறை விரிவுரையாளராகவும் வரலாற்றுத்துறைத் தலைவராகவும் பணிபுரிந்தார்.
சென்னையில் 'மித்ர' பதிப்பகத்தின் மூலம் நூல் வெளியீடுகளிலும் ஈடுபட்டு  வந்ததுடன் அவுஸ்திரேலியாவில் இருந்து வெளிவந்த ‘அக்கினிக்குஞ்சு’ என்ற சர்வதேச இதழின் கௌரவ ஆசிரியராகவும் விளங்கினார்.
இளம்வயதில் இலங்கை கம்யூனிஸ்ட் கட்சியின் ஆதரவாளராகச் செயற்பட்ட இவர் பின்னர் அவர்களுடன் முரண்பட்டுத் தனித்துவமாகச் செயற்பட்டவார். இலங்கையில் முற்போக்கு எழுத்தாளர் சங்கம் தீவிரமாகச் செயற்பட்டுக் கொண்டிருந்த காலத்தில் அதிலிருந்து விலகி நற்போக்கு அணியைத் தொடங்கியவர
நாவல், சிறுகதை, நாடகம், கவிதை, பத்தி எழுத்து, விமர்சனம் முதலிய  பல துறைகளில் ஆளுமைமிக்கவராக விளங்கியதுடன் சர்ச்சைக்குரிய கருத்துக்களைத் தெரிவிப்பவர் என இலக்கியத்துறையில் கணிக்கப்பட்டவர்;.
தன் வாழ்நாளில் கிட்டத்தட்ட அறுபத்தைந்து வருடங்களை தமிழ் இலக்கியத்துக்காக அர்ப்பணித்துக் கொண்டவர். சிறு வயதில் இருந்தே எழுத்துத் துறையில் கால் பதித்த இவர் தன் கடைசி காலம்வரை எழுதி வந்தார்.
சிறுகதைகள், நாவல்கள், கட்டுரைகள், மொழிபெயர்ப்புகள் என இருபத்தைந்துக்கும் மேலான நூல்களை எஸ்.பொ. எழுதியுள்ளார். இவருடைய முதல் நாவல் ‘தீ’, இன்றும் பலரும் எழுதத் தயங்கும் களமான சுயபாலுறவை 1960இலேயே பேசியது. இந்நாவல் வெளிவந்தபோது மிகுந்த சர்ச்சைக்குள்ளானது. இரண்டாவது நாவல் ‘சடங்கு.’ அக்கால மத்தியதர வர்க்க அரச எழுது வினைஞரின் வாழ்க்கையையும் யாழ்ப்பாணப் பின்னணியையும் களனாகக் கொண்டது. எஸ்.பொ.வுக்கேயுரிய மொழி, அங்கதம், வாழ்வியல் கூறுகளுடன் யாழ்ப்பாண பேச்சு வழக்கில் இந்நாவல் அமைந்திருந்தது. எஸ்.பொ.வின் கடைசி நாவலான ‘மாயினி’, இந்திய அமைதிப் படை ஈழத்தில் நிலை கொண்டிருந்த போது நடைபெற்றவைகளை நுட்பமாகச் சித்திரிக்கிறது.
‘தீ’ நாவலைப் போலவே இவரது சிறுகதைத் தொகுப்பான ‘வீடு’ வெளிவந்தபோதும் மிகவும் கவனிக்கப்பட்டது. பல்வேறு பரிசோதனை முயற்சிகளையும் இச்சிறுகதைகளில் எஸ்.பொ. வெற்றிகரமாகச் செய்திருந்தார்.
1940, 50 யாழ்ப்பாண சமூகத்தை பற்றி எஸ்.பொ. எழுதியுள்ள ‘நனவிடை தோய்தல்’ நூல் ஒரு வரலாற்று ஆவணம். இவரது நேர்காணல்கள், கட்டுரைகள் அடங்கிய ‘இனி ஒரு விதி செய்வோம்’ என்ற நூலும் வெளிவந்துள்ளது.
  சுமார் இரண்டாயிரம் பக்கங்களில் வரலாற்றில் வாழ்தல் என்ற தமது சுய வரலாற்று நூலையும் எழுதியுள்ளார
 இவரது சில சிறுகதைகளும் ''தீ" - ''சடங்கு" நாவல்களும் ''வரலாற்றில் வாழ்தல்" என்ற அதிக பக்கங்கள் கொண்ட சுய வரலாற்று நூலும் பல சர்ச்சைகளையேற்படுத்திக் கவனத்தில் கொள்ளப்பட்டவை.
பிறமொழிப் படைப்புகள் சிலவற்றைத் தமிழுக்குக் கொண்டுவந்தவர். செம்பென் ஒஸ்மான என்ற செனகல் நாட்டு எழுத்தாளர் எழுதிய ஹால என்ற நாவலை மொழிபெயர்த்துள்ளார். மற்றும் நுகுகி வா தியங்கோ என்ற கென்யா நாட்டு இலக்கிய எழுத்தாளரின் "றுநநி ழேவ ஊhடைன" என்ற நாவலை தமிழில் "தேம்பி அழாதே பாப்பா" என மொழிபெயர்த்துள்ளார்.
சென்னையில் 'மித்ர' பதிப்பகத்தினை ஆரம்பித்துப் பல படைப்பாளிகளின் நூல்களையும் வெளியிட்டுள்ளார்
இவருக்கு தமிழ் இலக்கியத் தோட்டத்தின் 2010 க்கான வாழ்நாள் இயல் விருது வழங்கப்பட்டது.
ஈழத்தில் இருந்து வெளிவருகின்ற “ஞானம்“ சஞ்சிகை இவருக்கான சிறப்பு இதழ் ஒன்றினை வெளியிட்டு அவருக்கான கௌரவத்தையும் வழங்கியிருந்தது.
படைப்புகள்
வீ (சிறுகதைகள்),ஆண்மை (சிறுகதைத் தொகுதி),தீ (நாவல்),சடங்கு (நாவல்),அப்பையா,எஸ்.பொ கதைகள்,கீதை நிழலில்,அப்பாவும் மகனும்,வலை முள்.பூ,தேடல்,முறுவல்,இஸ்லாமும் தமிழும்,பெருங்காப்பியம் பத்து (தொகுப்பாசிரியர்),மத்தாப்பூ சதுரங்கம்,நனவிடை தோய்தல்,நீலாவணன் நினைவுகள்,இனி ஒரு விதி செய்வோம்,வரலாற்றில் வாழ்தல் (சுயசரிதை),ஈடு (நாடகம்)(அ.சந்திரஹாசனுடன் சேர்ந்து எழுதியது),மாயினி,மணிமகுடம்,தீதும் நன்றும்,காந்தீயக் கதைகள்,காந்தி தரிசனம்,மகாவம்சம் ( மொழிபெயர்ப்பு)
பல்துறை ஆளமையினை கொண்டவர் தனது அந்திமகாலம் வரை இயங்கியலுடன் ஆத்மாhத்தமாக எழுத்தினை நேசித்தவர் மரணத்துள்ளபோதும் அவர் தனது படைப்புக்களின்மூலம் வாழ்நது கொண்டிருப்பார் என்பதில் ஜயமில்லை.
நன்றி  யாழ்.தினக்குரல்

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக