என்னைப் பற்றி

சனி, ஜூலை 18, 2015





 போதை எமக்கு பகை  விழிப்புணர்வு தெருவெளி ஆற்றுகை




ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவின் வேண்டு கோளிற்கினங்க போதையற்ற தேசத்தினை உருவாக்குவோம் எனும் தொனிப்பொருளில் யூலை 9 – ஓகஸ்ட் 9 வரையாக காலப்பகுதியில் பாடசாலைகளில் மேற்கொள்ளப்பட வேண்டிய போதைப் பொருள் விழிப்புனர்வு செயற்திட்டத்தின் ஓர் அங்கமாக மானிப்பாய் இந்துக்கல்லூரி (தேசியப் பாடசாலை)யில்“போதை எமக்கு பகை“ எனும் விழிப்புணர்வு தெருவெளி ஆற்றுகை இடம்பெற்றது
‘போதை எமக்கு பகை’ எனும் தொணிப்பொருளில் கல்லூரி அதிபர் மே.இந்திரபாலாவின் வழிகாட்டலில் போதை விழிப்பனர்வு செயற்திட்டத்தின் செயலாளர் மா.நேருவின் ஒழுங்குபடுத்தலில் நாடகத்துறை ஆசிரியர் எஸ்.ரி.அருள்குமரனின் நெறியாழ்கையில் இத்தெருவெளி ஆற்றுகை 15.07.2015 பகல் 1.30 மணியளவில் கல்லூரியின் மைதான முன்னறலில் இடம்பெற்றது. இவ்வாற்றுகையினை தரம் 6, 7, 8, 9, 10 ஆகிய தரங்களினை சேர்ந்த மாணவர்கள் மற்றும் ஆசிரியர்கள், கல்விசாரா ஊழியர்கள் கண்டு ரசித்தனர் இவ்வாற்றுகையானது போதபைப்பொருள் பாவனையினால் ஏற்ப்படுகின்ற பாதிப்புக்கள். அதனால் குடும்பத்தில் ஏற்ப்படுகின்ற இடர்பாடுகள் என்பவற்றினை வெளிப்படுத்தின.
இவ்வவாற்றுகையில் ஆற்றுகையாளர்களாக உ.கரிஸ், யே.சானுஜன், சு.கலைக்சன், ரிதுசன் சிந்துஜன், சி.சிவானுஜன், வி.கனிஸ்ரன், குயின்சன், தி.தனுஜன், தி.திஸ்னுகன், கு.தவேன்சன், ஸ்ரீ.சாதுசன், ச.குபேரன். திவாகர் ஆகியோர் நடித்துள்ளார்கள். பின்னி இசையில் டொல்கி யே.யதுசன், சைட்றம் அபிசேக், ஆகியோரும் பாடல்கள் பா.ஜெயரூபன், பாடகர்கள் தக்சாந், ஆகியோர் மேற்கொண்டிருந்தார்கள்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக