என்னைப் பற்றி

திங்கள், ஜூலை 20, 2015

(எஸ்.ரி.அருள்குமரன்)

 அளவையூர் பெற்ரெடுத்த  கல்விச் சேவகர் 

முடிவிலியாக ஓடிக் கொண்டிருக்கும் காலம் தனக்கான ஆளுமைகளை வரலாற்றின் வழி உருவாக்கிக் கொண்டேயிருக்கிறது.
   மனிதன் மனிதனாக வாழ்வதிலும் சமூகமாற்றத்தினை ஏற்ப்படுத்துவதிலும் சிந்தனையாளர்களும் கல்வியலாளர்களும் தமது பெரும்பாலன காலத்தினை செலவிடுகின்றனர்
புதியதை படைப்பதிலும் சமூக மாற்றத்தினை ஏற்ப்படுத்தவதிலும் பெருமிதம் கொள்கிற ஒரு அழகிய உலகமே அவர்களது கனவு. அந்த கனவு நனவாக அவர் தம்  செயற்ப்பாட்டின்  மூலம் புதிய வெளிச்சம் பாய்ச்சுகின்றனர்.
இந்த பிரபஞ்சத்தை நேசிக்கும் அவர்கள் மாற்றத்திற்காக    தம்மையே விலையாகக் கொடுக்கின்றான்.
இக்தகையவர்கள்  காலத்தின் பிரசவிப்புக்களாக கொள்ள முடியும்.
ஈழத்தாய் காலம் தோறும் இத்தகையவர்களினை பிரசவித்துக்கொண்டிருக்கின்றாள் என்பதினை காலவோட்டத்தில் நாம் தரிசனம் கொள்ளக்கூடியதாக உள்ளது.
 யாழ்.மாவட்டத்தினை பொறுத்தவரையில் கல்வியானது மக்களது சொத்தாகவும் இச்சொத்தினை பாதுகாப்பதில் கல்விப்புலம் சார்ந்தவர்கள் ஆற்றுகின்ற பணி காத்திரமானது.மறக் முடியாததுமாகும்.
பாடசாலையொன்றினை வளப்படுத்துவதிலும் புதிதாய் கட்டமைப்பதிலும் அதிபரது எண்ணங்களும் செயல்களும் கனதியானவை. இவர்களிற்கு உறுதுனையான நல் ஆசிரியர்களும் நல் மாணவர்களும் பக்கபலமாக காணப்படுகின்றனர்.
யாழ்.மாவட்டத்தினை பொறுத்தவரையி;ல் எமது சமகாலத்தில் வாழ்ந்த ஆளுமை  மிக்க அதிபர்களில் யூனியன்கல்லூரியின் ஒய்வுநிலைஅதிபர்எஸ்.புண்ணியசீலன்,சுழிபுரம்விக்ரோறியாக்கல்லூரி  ஓய்வு நிலை அதிபர்வ.ஸ்ரீகாந்தன் என நீண்டு செல்லும் ஓய்வு பெற்ற அதிபர்களின் பட்டியலில் மானிப்பாய் இந்துக்கல்லூரியின் அதிபராக இருந்த எஸ்.சிவநேஸ்ரனும் இடம்பெறகின்றார்.
 இவர்களது ஓய்வு கல்விப்புலத்தினை பொறுத்தவரையில் வெற்றிடத்தினை ஏற்ப்படுத்தியுள்ளது.
அளவெட்டி மண்ணிலே சம்பந்தசரணாலயம்-சரஸ்வதி தம்பதியினருக்கு1955.07.05 ல் மகணா பிறந்த இவர் தனது ஆரம்ப கல்வியினை அளவெட்டி சதானாந்த வித்தியாசாலையிலும், இடைநிலைக்கல்வியினை அருணோதயாக்கல்லூரியிலும், உயர்நிலைக்கல்வியினை ஸ்கந்தவரோதயாக்கல்லுரியிலும் கல்விபயின்றதுடன் யாழ்ப்பானப்பலைக்கழகத்தில் முகாமைத்துவ பட்டத்தினையும் கல்வியியல் பட்டபின்படிப்பினையும், முதுகல்விமானிப்பட்டத்தினையும் ஆயுயுவு பட்டத்தினை பெற்றதுடன் அதிபர் சேவைதரம்  ளுடுPளு ஐ, இலங்கை கல்வியயிலாளர் சேவை  ளுடுநுயுளு iii தேசிய மாணவர்படையனியின் கப்டன்தர கட்டளை அதிகாரியாகவும் காணப்படுகின்றார்.
வடமாகான அதிபர் சங்கத்தின் தலைவராகவும்,யாழ்.மாவட்ட பாடசாலைகள் விளையாட்டு சங்கத்தின் தலைவராகவும்,யாழ்ப்பான பல்கலைக்கழக முகாமைத்துவ பீட உறுப்பினராகவும் சண்டிலிப்பாய் கல்விக்கோட்டத்தின் அதிபர் சங்கத்தின் தலைவராகவும் இருந்து காத்திரமான கல்விப்பணியினை ஆற்றியுள்ளளார்.
இவர்  1984 ஆம் ஆண்டு இலங்கை ஆசிரியர் சேவையில் புத்தளம் அல் அக்ஷா மகாவித்தியாலத்தில் ஆசிரியராக முதற்கடமையேற்று பின்னர் புத்தளம் தேத்தாப்பளை தமிழ் மகாவித்தியாலயம் ,சுன்னாகம் ஸ்கந்தவரோதயாக்கல்லூரி  ஆகிய பாடசாலைகளில்  ஆசிரியராகப்பணியாற்றி சண்டிலிப்பாய் இந்துக்கல்லூரியில் அதிபராக பொறுப்பேற்று அப்பாடசாலையினை பல துறைகளிலும் வளர்சியடைய வைத்ததுடன்  மானிப்பாய் இந்துக்கல்லூரியினை பொறுப்பேற்று  கல்லூரியினை வளர்சிப்பாதைக்கு இட்டுச்சென்றவர்.
குறைந்த வளப்பற்றாக்குறையுடன் குறைந்த மாணவர் எண்ணிக்கையுடன் காணப்பட்ட சண்டிலிப்பாய் ராஜா ஸ்கூல் என்று பரலாலும் அறியப்பட்ட பின்தங்கிய நிலையில் காணப்பட்ட பாடசாலை யினை  அதிபராக பொறுப்பேற்று பாடசாலை வளங்களினை அதிகரித்து  மாணவர் எண்ணிக்கையினை அதிகரித்து  தேசியம் வரை வெற்றிகள் பெறவைத்து  சண்டிலிப்பாய் இந்துக்கல்லூரி என்ற பெயர் மாற்றத்துடன் கல்லூரியினை தரமுயற்த்திய பெருமைக்குரியவர்.
அக்கல்லூரிக்கான முகவரியினை கொடுத்ததன் மூலம் இவரது ஆளுமை வெளிச்சமிடப்பட்டதுடன்  கல்விஅதிகாரிகளது அன்பிற்கம் மதிப்பிற்கும் உரியவராக விளங்கினார்.இதனால் இவர் செயற்பப்டுத்த நினைக்கின்ற கல்விப்புலம் சார்ந்த மாறுதல்களிற்கு பக்கபலமாக இருந்தனர்.
  வடமாகான கல்விஅமைச்சின் ஓய்வு பெற்ற பிரதிச்செயலர் வே.தி.வெல்வரட்னம் குறிப்பிடும்போது “ எங்கட பேச்சுமொழியில் சொல்வதானால் சேடம் இழுத்துக்கொண்டிருந்த இருபாடசாலைகளிற்கு உயிர்கொடுத்து அதனை வளப்படுத்தியவர்” என்றார். இக்கூற்று நிதர்சனமான உண்மையாகும்.
 மானிப்பாய் இந்துக்கல்லூரி பல்வேறு பின்னடைவுகளினையும் சந்தித்திருந்த வேளை கல்வியாளரின் வேண்டு கோளிற்கினங்க தான் அதிகம் நேசித்து கட்டிவளர்த்த சண்டிலிப்பாய் இந்துக்கல்லூரியினை விட்டு வந்து மானிப்பாய் இந்துக்கல்லாரியினை பெறுப்பேற்றுகொண்டார்.
 இக்கல்லூரியினையும்  கவின்கலையுடன் இணைந்த வகையில் பாடசாலை பௌதீக வளத்தினை அபிவிருத்தி செய்து பாடசாலையை  புதுப்பொலிவு பெறச்செய்தததுடன் கல்வி ,இணைப்பாடவிதானச் செயற்ப்பாடுகளில் தேசியம் வரை மாணவர்களினை வெற்றி பெறச்செய்தததுடன்   இக் கல்லூரியினை வலிகாமம் கல்லி வலயத்தின் முதலாவது தேசியப்பாடசாலையாக தரமுயர்தியவர்.
இவர் கல்லூரியினை பெறுப்பேற்றபோது   மாணவர் தொகை 300 ஆக காணப்ட்டது இண்று ஆயிரம் மாவர்களினை தாண்டிய வகையிலும் க.பொ.த)சாதாரனதரம்) 36 வீதமாக காணப்பட்டது இன்று 80 வீதமாக உயர்வடைந்தமை மருத்துவபீடம் ,பொறியியல்பீடம், கலைத்துறை ,முகாமைத்துபீடம் என்பவற்றிற்க மாணவர்கள் அனுமதி பெறுகின்றமை கல்லூரியின் வளர்ச்சியினை எடுத்துக்காட்டுகின்றது.
கல்லூரியின் பௌதீக வள அபிவிருத்தியில் கவின்கலையுடையதாக கட்டங்களினை அமைத்ததுடன் இவரது காலத்தில் தொழில்நுட்பபிடம்,தொழில்நுட்ப ஆய்வுகூடம், மித்திரன்பவிலியன்,சிவதாசனபவிலியன், விகோனந்தராஜா கட்டடம், நடராஜ க ட்டடம், மாணவர்விடுதி,ஆறுமுகம் விளையாட்டரங்கு,கல்லூரிக்கான நூழைவாயில் போன்ற பல கட்டங்கள் இவரது காலத்தில் அமைக்கப்பட்டமை குறிப்பிடத்தக்கது.

தொழில்நுட்ப பீடத்தினை வளர்த்தெடுக்கவேண்டும் எனும் வகையில் காத்திரமான செயற்திட்டத்தினை மேற்கொண்டு தொழில்நுட்ப பிரிவில் மாணவியர்களினையும் இணைத்து அவர்களும் கல்வி கற்ப்பதற்கான வாய்ப்பினை ஏற்ப்படுத்தி கொடுத்தார்.
மானிப்பாய் இந்துக்கல்லூரியானது அனைத்து துறைகளிலும் சாதிக்கவேண்டும் எனும் இவரது எண்ணத்திற்கு முத்தாய்ப்ப வைத்தாற்போல உதைபந்தாட்டத்தில் தேசியச்சாதனைகளினை பதிவு செய்ததினை போன்று  தேசியரீதியில் பேச்சப்போட்டி, தனிஇசை, நாடகத்தில் தனி நடிப்பு போட்டி, சித்திரப்போட்டி என்பவற்றிலும் இவரது காலத்தில் மாணவர்கள் சாதனை படைக்க ஆரம்பிக்கின்றமை  பலருக்கு புதிய செய்தியாகும்.
இவரது சாதனைக்கு பின்னால் உள்ள இரகசியம் புன்முறுவல் பூத்த முகத்துடன் இளையவர்கள் மூத்தவர்கள் என்ற வேறுபாடு இன்றி பணியாற்றக்கூடியவர்களினை  இனம் கண்டு அவர்களிற்கு பொருத்தமான பணியினை கொடுத்து அப்பணி வெற்றி பெறும் வரை இயங்ககின்ற மன வலிமை, யாரையும் வஞ்சிக்கவேண்டும் என்கின்ற மனப்பாங்கு இல்லாமை, முகஸ்தி அற்ற போக்கு தான் எடுத்த இலக்கினை வெற்றிபெறும் வரை அயராது சலிப்பற்றவகையில் செயற்படல் போன்ற பலபண்புகளினை   இவரது சாதனைகளிற்கான அடிப்படையாக கொள்ளலாம்.
இவர் ஆற்றிய கல்விப்பணியினை கௌரவிக்கும் முகமாக இவருக்கு மேற்க்கொள்ளப்ட்ட மணிவிழா நிகழ்வில்  கல்விப்புலம் சாhந்தவர்கள்,பழைய மாணவர்கள், புலம் பெயர்பழைய மாணவர்கள்,அவரிடம் கல்வி கற்றவர்கள் என பலரும் கலந்து கொண்டு சிறப்பித்ததுடன் இவரது அதிபர் சேவையினை பராட்டி அதிபர் திலகம் எனும்  உயரிய விருது  இனுவில் சமூகத்தினரால் வழங்கிக்கௌரவிக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.
இவர் ஆற்றிய கல்விப்புலச் சேவைகள் காலத்தால் மறுக்கவே மறக்கவோ முடியாதவை. பாடசாலையின் எழுர்ச்சியினை மூழுமூச்சாக கொண்டு கொண்டு இயங்கியல் தளத்தில் செயற்ப்ட்டு பலருக்கு ஆச்சரியத்தினை எற்ப்படுத்திய மகத்தான சாதனையாளன் ஓய்வுகாலத்தில் நலமோடு வாழ்வதோடு எமது கல்விப்புலத்தில் காணப்படுகின்ற குறைபாடுகளினை களைவதற்கு சேவையாற்றவேண்டும்.
 நன்றி யாழ்.தினக்குரல்








கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக