என்னைப் பற்றி

செவ்வாய், ஜூலை 21, 2015

எஸ்.ரி.அருள்குமரன்   BA(Hons) M A (Merit)

         நாட்டார் கலைகள் ஓர் நோக்கு

காவடி எனும் கலைவடிவம் எத்துனை செல்வாக்கினை நாட்டார் கலைகளில் முதன்மையானதாக விளங்ககின்றதோ அவ்வகையில் கரகாட்டம் எனும் கலைவடிவமும் முதன்மையானதாக காணப்படுகின்றது.
அக்கலைவடிம் சமூகவியில் பெறுமானத்தில் ஏற்படுத்திய தாக்கம் தற்க்காலத்தில் அது கொண்டுள்ள தாக்கம் என்பனவற்றினை நோக்கும் போது  அக்கலைவடிவங்களின் உயிர்ப்பினை  கண்டு கொள்ளக்கூடியதாக இருக்கும் என்பது  எதார்த்தமாகும்.
நம்பிக்கைகளின் அடிப்படையில் வெயற்ப்படுத்தப்பட்ட கலைவடிவங்கள் பெரும்பாலும் மதவிழுமியங்களினையும் கடவுளருக்காக மேற்கொள்ளப்படுகின்ற நேர்த்திகளின் அடிப்படையிலும்  அம்மக்களது உளநிவர்த்தியினையும் அடிப்படையாக கொண்ட வகையில் இக்கலைவடிவத்தின் எழுச்சியினையும் உயிர்ப்புடன் கூடிய வெளிப்பாட்டினையும் அறிந்து கொள்ள முடியும் என்பது எதார்த்தமாகும்.
மக்களது வாழ்வியல் கடவுள் நம்பிக்கை என்பது பிரிக்க முடியதா கூறாகஇருந்தன. அக்கடவுளருக்கு தம் வாழ்வு சிறக்கவேண்டும் தாம் எத்தகைய துன்பங்களில் இருந்தும்  தம்மை  காப்பாற்றி  கொள்வதற்காகவும் பல்வேறு செயற்ப்பாடுகளினை மேற்க்கொண்டனர். அத்தகைய செயற்ப்பாடுகள் இக்கலைகளில் உயிர்பிக்கான வாய்ய்பினை எற்ப்படுத்தியது.
இப்பின்னனியில் மாரியம்மன் எனும் பெண்தெய்வத்திற்கான நேர்த்திக்கடன்களும் அவற்றிக்கான செயற்ப்பாடுகளும் கரகாட்டம் எனும் கலைவடிவத்தில் முதன்மை பெறுகின்றது.தொற்று நோய்,பஞ்சம்போன்றவற்றினை நீக்கும் பொருட்டு மேற்க்கொள்ளப்பட்ட செயற்ப்பாடுகள் ஆடல் முறைகள் பிற்க்காலத்தில் தொழில் முறைக்கலைகளாக  மாற்றமடைந்தன.
கரகத்தில் புனிதநீர் எடுத்தவரப்பட்டு உழவர்கள் ஏர்மங்கல விழாவின்  போது எடுத்து செல்லப்பட்டு
ஒண்ணகரகமடி எங்கமுத்துமாரி
ஒசந்த கரகமடி எங்க முத்துமாரி
எனத்தொடங்கி
ஒன்பதாங்கரகமடி எங்க முத்தமாரி
ஒலகம் செழிக்க வேனும் எங்க முத்துமாரி என பாடல்கள் பாடப்படும்.
கரகாட்ட முறையில் பின்வருமாறு நோக்கப்படுகின்றது
சக்திக்கரகம்
ஆடுகரம்
சக்திக்கரகம் பக்தியுடன் எடுக்கப்படும்  கரகமாகும் ஆடவர்மட்டுமே இக்கரகத்தினை எடுப்பபர்.அதே வேளை ஆடுகரகமானது  தொழில்முறைக்கலைஞர்களினால்  நிகழ்த்திக் கொள்வதாக காணப்படுகின்றது.
ஆடுகரகமானதுசடங்குத்தன்மைகளிலிருந்து  விடுவித்து அபிநயங்களில் முதன்மைப்படுத்தி தாம் மகிழவும் பிறர் மகிழவும் கூடியவகையில் ஆடு கரகம் உருவாக்கப்பட்டது.
கரகவடிவமைப்பானது நடுத்தர அளவுள்ள செம்பு அல்லது மட்குடம் தெரிவு செய்யப்பட்டு அக்குடம் அலங்கரிக்கப்பட்டு   குடத்தின் மேற்புறத்தில்  பூவேலைப்பாட்டுடன் கூடியவகையிலான மூடி போன்ற அமைப்பு அமைக்கப்படும்.உச்சியில் பொம்மை கிளியை செருகி வைப்பார்கள். அம்மன் வழிபாட்டுடன் இக்கரகம் தொடர்புடையதாக காணப்படுகின்றமையினால் அம்மன் கிளி எனவும் அழைக்கப்படுவதுண்டு. சக்திக்கரகம் எடுப்போர் குடத்தினுள் அரிசியனையும் ஆடுகரகம்  எடுப்போர் குடத்தினுள்  மணலினையும் நிரப்புவார்கள்.
கரகாட்டம்  மூவகை ஆட்ட நிலைமைகளினை உடையதாக காணப்படுகின்றது.
தொடக்க நிலை
வேக நிலை
அதிவேக நிலை
தொடக்க நிலை என்பது  ஆயத்த நிலையும் ஆரம்ப நிலையுமாகும் நையாண்டி மேள இசையோடு ஏனைய தாள வாத்தியக்காரர்கள் தத்தம் இசை பொருந்தகின்றதா என வாசித்து பார்க்க கரகக்காரரும் மெல்ல ஆடி கரகத்தை தலையில் சீராக வைத்துக்கொள்வர். இதன்பின் படிப்படியாக இசை வளர்ந்து கொண்டு செல்ல ஆட்டத்தின் வேகமும் வளர்ந்து கொண்டே செல்லும்.
வேக நிலையில் தாள, சுருதிக்கும் வாசிக்கும் இசைக்கும் எற்ப்ப  எவ்வித வேறுபாடுகளும் தெரியாமல் கலைஞர்கள் ஆடுவர் இதனை சமநிலை எனக்குறிப்பிடுவர்.
அதி வேக நிலை என்பது பாம்பின் சிற்றத்தினை போன்று ஜதி முறியாமல் தாளம் முறியாமல் பம்பரம் போல சூழன்று ஆடுவதினை குறிக்கும்
இவ்வாட்டத்தில் கலைஞர்கள் ஓய்வெடுத்துக்கொள்ளும் முகமாக கோமாளி எனும் பாத்திரம் வந்து உரையாடல்களினை மேற்க்கொள்வான் இவ்வேளையினை பயன்படுத்தி நடிகர்கள் ஒய்வெடுத்துக்கொள்வார்கள்.
இவ்வகையில் கரகாட்டமானது முதன்மைப்படுத்தப்படுவனவாக காணப்படுகின்றது.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக