என்னைப் பற்றி

செவ்வாய், ஜூலை 21, 2015

  எஸ்.ரி.அருள்குமரன்   BA(Hons) M A (Merit)

            நாட்டார் கலைகள் ஓர் நோக்கு

மனிதன் நகரிகமடைய ஆரம்பிப்பதற்கு முன்னரே கலைச்செயற்ப்பாடுகளில் ஈடுபட்டான் என்பதினை வரலாற்று தடங்களில் இருந்தும் ஆய்வாளர்களது ஆய்வுகளில் இருந்தும் கண்டு கொள்ளக்கூடியதாக உள்ளது.
மனிதர்கள் தம்மிடையே உணர்வியல் ரீதியிலான கருத்துக்களினை பகிர்ந்து கொள்வதற்கும் தமது செய்திகளினை வெளிப்படுத்தி;க்கொள்வதற்குமாக பயன்படுத்திக்கொண்ட ஊடகங்கள் கலைகள் எனக்குறிப்பிடலாம்.

இதனடிப்படையில் ஆதிகால மனிதன் தனது உணர்வுகளினை ஆரம்பத்தில் ஓவியங்களின் வாயிலாக வெளிப்படுத்தியாக குறிப்பிடப்படுகின்றது. அதாவது வேட்டையாடச்சென்றபோது கொடிய விலங்குகளிடம் அகப்பட்டுகொள்வதற்கான சூழ்நிலைகள் ஏற்பட்ட போது  அவற்றில் இருந்து தப்பி வந்த மனிதர்கள் தாம் பட்ட துன்பங்களினையும் தாம் எதிர்கொண்ட இடர்பாடுகளினையும் தமது சக குழுக்களிற்கு தெரிவிப்பதற்கும் தமது உணர்வினை வெளிப்படுத்துவதற்கும்  குறிப்பாக தமது பய உணர்வினை வெளிப்படுத்திக்கொள்வதற்கும் ஓவியங்களினை வடிகாலகக்கொண்டிருந்தனர். இதனை மெய்ப்பிக்கும் வகையில்  இன்று ஆய்வுகள் மூலம்  பெறப்பட்ட குகை ஓவியங்கள் சான்றாகின்றன.
இவ்கையில் ஒவ்வொரு கலைகளும் தமது உணர்வுர்பகிர்தலிற்கும் தமது நம்பிக்கைமுறைமைக்கும் வாழ்வியல் எத்தனங்களிற்கும் ஏற்ற வகையிலும்  கலைகள் தகவமைக்கப்பட்டதுடன் புதிய புதிய வடிவங்களும் பிரசவிக்கப்ட்டன.

கலைகளின் அரசி எனக்குறிப்பிடப்படுகின்ற நாடகக்கலையின் தோற்றம் பற்றி பல்வேறு அறிஞர்களும் பல்வேறு பட்ட கருத்து நிலைகளினை குறிப்பிடுப்படுகின்றனர். அவற்;றில் ஒரு கருத்து நிலையாக  வேட்டை சடங்கில் இருந்து தோற்றம் பெற்றது எனும் கருத்து காணப்படுகின்றது.
அச்சடங்கினை பின்வருமாறு குறிப்பிட்டு கொள்ள முடியும்.
வேட்டைக்கு செல்லும் போது கொடிய விலங்குகளிடம்  தமது சக பாடிகள் அகப்பட்டுக்கொண்டமையினால்  கொடிய விலங்குளிடம் இருந்து எவ்வவாறு தப்பித்து கொள்வதெனவும் வேட்டையின் போது பல விலங்குகளினை எவ்வாறு வேட்டையாடி கொள்ள வேண்டும் என்பது தொடர்பாகவும் முன் ஆயத்தமான சில செயற்ப்பாடுகளினை மேற்க்கொண்டனர்.
அவற்றில் குறிப்பாக கொடிய விலங்ககள் தம்மை தாக்க வருகின்ற போது அவற்றினை எவ்வாறு எதிர்கொண்டு அவற்றில் இருந்து தப்பித்து கொள்வதுடன் வேட்டையில் பல விலங்குகளினை வேட்டையாடிக்கொள்வதற்கான முன் ஆயத்தமான செயற்ப்பாடாக இது அமைந்தமையினால்  வேட்டையில் பல விலங்குகளினை பெற்றுக்கொண்டதுடன்  கொடிய விலங்குகளின் தாக்கத்தில் இருந்தும் தம்மை இயன்றவழரயில் பாதுகாத்துக்கொண்டனர்.இத்தகைய  செயற்பபாட்டிற்கு தாம் மேற்கொண்ட செயற்பாடு என்பதினை நம்பிய மனிதர்கள்  வேட்டையின் பின்னரும் இச்செயற்ப்பாட்டினை மேற்க்கொண்டனர். இது தொடர் செயற்பபாடக மக்களிடையே பரவலாக ஆரம்பித்தது.இத்தகைய நம்பிக்கைகளில் இருந்து நாடக செயற்பாடுகள் உருவானதாக ஆய்வாளர்கள் குறிப்பிடுகின்றனர். இத்தகைய நம்pகையான விடயங்கள் கலைகளின் பிறப்பியலுக்கான அடிப்படையாக அமைந்தன.
கலைகள் என்பது பொழுது போக்கிற்காகமட்டுமன்றி சமூகத்தின், வாழ்வியல் கூறுகளினை வெளிக்கொணர்கையிலும் பாரம்பரியம,; விழுமியம்,  போன்றவற்றினை வெளிப்படுத்துவதிலும் முனைப்புக்காட்டுகின்றன.
ஒருவர் முன்பு அநுபவித்த ஓர் உணர்வைத் தன் உள்ளத்தில் மீண்டும் எழுப்பி அசைவுகள் , கோடகள், வர்ணங்கள் ,ஒலிகள், அல்லது சொல் வடிவத்pன் மூலம்  அந்த உணர்வை உணரும் படி  செய்ய வேண்டும் இதுவே கலையின் செயலாகும் என டால்ராய் எனும் அறிஞர் குறிப்பிடகின்றார்.
எமது முன்னோர்கள்  தமது நம்பிக்கைகள் எண்ணங்கள் , சிந்தனைகள் , பழக்கவழக்கங்கள் ஆகிய வற்றினை கலைகளின மூலம் வெளிப்படுத்தினர்.
இதனடிப்படையில் நோக்கும் போது ஒவ்வொரு இனத்திற்கும் தமது தனித்துவமான அடையாளங்கள் என பலவற்றினை கொண்டியங்கும். அடிப்படையில் அவ் இனங்கள் தனித்துவமாக அடையாளப்படுத்தப்பட்டு வருகின்றன.
தொழில் நுட்பத்தின் வளர்ச்சியும் இயந்திரமயமான வாழ்வு முறையும் மனிதர்களது வாழ்வு முறையில் மாற்றங்களினையம் கலையியல் மாற்றங்களினை கொண்ட உள்ளபோதிலும் ஆரம்பகால கலைகள் முதன்மை பெறுகின்றன.
நாட்டார் கலைகள் என பழங்காலத்து கலைகள் அழைக்கப்ட்டன. பங்காலத்து கலைகள் என அழைக்கப்ட்டமைக்கான காரணங்களாக பழைமையான கலைகளாக காணப்பட்மையினால் குறிப்பிடடிருக்கலாம்
நாட்டார் கலைகள் பற்றி ஜோனஸ் பாலிஸ் எனும் அறிஞர் குறிப்பிடும் போது
உலகில் மனித இனம் தோற்றிய நாளையே  நாட்டார் வழக்கியிலி;ன் துவக்க நாளாக குறிப்பிடலாம் இதன் nhளிவான காலம் பற்றி அறிந்து கொள்ள முடியாமையினாலே பழங்காலத்து படைப்பக்கள் என குறிப்பிடுகின்றனர் என்கின்றார்.
நாட்புற மக்கள் தமது உணர்வுகளினை  நகை ,காதல், வீரம் ,சோகம், அச்சம்,விருப்பு வெறுப்பு  போன்ற உணர்வகளினை வெளிப்படுத்தினர்.
 இவ் நாட்டுப்புற மக்கள் குழு நிலைப்பாரம்பரியங்களினை கொண்டிருந்தனர்.
, காவடியாட்டம் ,ஒயிலாட்டம் , கரகாட்டம் , கோலாட்டம், கும்மி  போன்ற பல வற்றினை குறிப்பிடலாம்.
  மக்கள் தமது வேண்டுதல்களினையும்  தமது உள்ளத்து உணர்வகளினையும் மதரீதியலான வெளிப்படுத்தல்களின் மூலம் கடவுளர்களிடையே பக்தி பூர்வமாக வெளிப்படுத்த தலைப்பட்டனர் அவ்வெளிப்படுத்தல்கள்  மேற்ப்படி கலைகளுக்கான பிறப்பியலாக காணப்படுகின்ற ன என்பதினை அறயிக்கூடியதாக உள்ள வகையில் காவடியாட்டம் எனும் கலை வடிவம் தொடர்பாக பிக்வருமாறு நோக்க முடியும்.

காவடியாட்டம்
இக்கலைவடிவமானது  முரகக்கடவளருடன் தொடர்புடையதாக காணப்படுகி;ன்றது. தமது நேர்த்திக்கடனை தீர்த்துக்கொள்ளும் முகமாக  காவடியாட்டத்தினை மேற்க்கொள்வதாக குறிப்பிடப்படுகின்றது. முருக பக்தர்கள்  யாத்திi செல்லும் போது பல மைல் துரங்க்ள நடக்க வேண்டியிருக்கும்  அவ் வேளை முகைப்பெருமானது புகழினை பாடிய வண்ணம்  செல்வர்

முருகக்கடவுளுக்கு காவடி எடுப்பதற்கான ஜதீகக்கதை யொன்று காணப்படுகின்றது. அவற்றினை பின்வருமாறு நோக்கலாம்.
தமிழ் கடவுளான முருகப்பெருமானுக்கு செய்யப்படுகின்றமுக்கியமான வேண்டுதல்களில் ஒன்றாக இது விள்றகுகின்றது. இக்காவடி எடுப்பதற்கான காரணமாக அகஸ்திய முனிவர் சீடர்களில் ஒருவனான இடும்பனை அழைத்து தனது வழி;பாட்டிற்காக கயிலை சென்று அங்கு முருகனுக்கு  கந்த மலையில் உள்ள சிவசக்தி கொருபனாhன சிவகிரி, சக்தி கிரி எனும் சிகரங்களையம் கொண்டுவரும்படி கூறியதாகவும்அகஸ்தியரின் கட்டளைக்கமைய  கயிலை சென்று அவ்விரு மலைகளையும் இருபுறமும் தொங்க காவடியாக  கட்டி கொண்டுவந்ததாகவும் அவ்வேளை  முருகன் இவ்விருகிரிகளையும் நிலைபெறச்செய்யவும் இடும்பனுக்கு அருளவும் விரும்பி ஒரு திருவிளையாடலை  நிகழ்த்pயதாகவும் இடும்பன வழி தெரியாமல்  திகைத்த போது முருகன்  குதிரை மேல் செல்லும் அரசனைப்போன்று தோன்றி இடும்பனை ஆவினன் குடிக்கு அழைத்து சென்று அங்குஓய்வு எடுக்கும் படி குறிப்ப்pட்டதாகவும் அதற்கேற்ப்ப  இடும்பன் காவடியை இறக்கி வைத்துவிட்டு ஓய்வெடுத்துவிட்டு புறப்படும்போது காவடியினை தூக்க முடியாமல் திண்டாடியதாகவும் அவ்வேளை ஏன் தூக்க முடியாமல் உள்ளது எனசிந்தித்து பார்த்த  போது  சிவகிரியின் மேல் சிறுவன் ஒருவன் கோவணாண்டியாக கையில் தடியுடன் நிற்ப்பதை கண்டான்.இடும்பனும் சிறுவனை மலையில் இருந்து இறங்கும் படி வேண்டினனான். ஆனால் அச்சிறுவனோ  இந்த மலை எனக்கே சொந்தம் எனக்குறிப்ப்pட்டதாகவும் அவ் வேளை கோபம் கொண்ட இடும்பன் அச்சிறுவனை தாக்க முயன்ற போது இடும்பன் வேரற்ற மரம் போல சரிந்து கீழேவிழுந்ததாகவும் இதை கண்ட  அகஸ்தியர் இடும்பன் மனைவியடன் சென்று முருகப்பெருமானிடம் வேண்டஇடும்பனுக்கு அருளாசி புரிந்ததுடன் இடும்பனை  தனது காவல் தெய்வமாக நியமித்ததாகவும் அன்றுமுதல் காவடி எடுக்கும் வழக்கம் ஆரம்பித்து விட்டதாகவும் ஜதீக ரீதியான கருத்தினை கூறுகின்றனர்.

இவற்றினை தாண்டி நோக்குகின்ற போது யாத்திiயாக செல்லுகின்ற துரம் சுமக்கின்ற பாரம் என்பன ஆண்மீகம் எனும் தளத்திலும் பக்திபூர்வமாக செயற்ப்படும் போது எளிமையாக காணப்படுவதுடன் இத்தகைய நேர்த்திக்கடன்களினை ஆற்றுகின்ற போது அம்மக்கள் வாழ்வில் தமது பிரச்சினைகளினை எளிதாக அனுகிக் கொள்ள முடியும் என்பதினை உளவியல் ரீதியான அனுகுதுறையின்பால் குறிப்பிட்டு கொள் முடியும்
இத்தகைய நம்பிக்கையின்பால் இக் காவடியாட்டம் எனும் கலை வடிவத்தின் தேற்றத்தினை குறிப்பிட்டாலும் காலப்போக்கில் அதன் தன்மையிலும் வெளிப்hட்டு வடிவங்களிலும்  மாற்றங்களினை அச்சமூகங்களே ஏற்ப்டுத்திக் கொண்டன.

இக்காவடியாட்டத்pனை அண்கள் மட்டுமல்லாது பெண்களுடன் காலப்போக்கில் ஆடியதுடன் வெறுமனே கோவில்களில் நேத்திக்காக ஆடுகின்ற முறைமையாக மட்டு மன்றி பழகி கலைத்துவத்துடன் நிகழ்வுகளிற்காக ஆடுகின்ற சூழ்நிலைகளும் பிற்காலத்தில் ஏற்ப்படுத்தப்பட்டு  இக் கலை வளர்சியடைந்ததது ஆயினும் இன்றும்குறிப்பாக  முருகன் கோவில்களிலும் பிற கோவில்களிலும் மிகவும் பக்தி பூர்வமான வகையில் இடம் பெற்று வருகின்றன.
காவடி எனும் சொல்லானது அதன் பொருள் கொள்கையில் காவு ூதடி என வகுத்து கொள்கின்றனர். காவு என்பதினை சுமத்தல் என பொருள்கொள்கின்றனர். சமத்தல் என்பது தோற்சுமையினை குறித்தாலும் நேர்திக்காக மேற்கொள்ப்படுவதினையே குறித்து நிற்கின்றது.
சமயத்தோடும் நம்பிக்கையுடனும் தொடர்புடையதான இக்கலை வடிவமானது பல்வேறு வகைப்பாட்டினை உடையதாக விளங்குகின்றது.
 இப்பின்னனியில் கவடியாட்டத்தினை அதன் நோக்கம்; ,  ஆடப்படுகின்ற முறைமை என்பவற்றின் அடிப்படையில் பல் வேறு பெயர் கொண்டு அழைக்கின்றனர்.

 அவற்றினை பின்வருமாறு நோக்க முடியும். அன்னக்காவடி ,பறவைக்காவடி,பன்னீர்க்காவடிஃ பால்காவடி , செடில்காவடி, ஆட்டக்காவடி, துக்குக்காவடி,பறவைக்காவடி என்பனவாக  விளங்குகின்றன.
பாற்காவடி பெரும்பாலும் சிறுவர் அல்;லது சிறமியர்கள் எடுப்;பர்.இக்காவடி ஆடப்படுவதில்லை மாறாக தோளிலே சுமந்த படி சென்;று நேர்;த்திக்கடனை முடித்துக்கொள்வதாக அமையும்
செடிற் காவடி என்பது வெள்ளியாற் செய்யப்பட்ட செடில்களை பக்தர்களின் முதுகில் குத்தி கொக்ககளின் அடியில் உள்ள நூல்களினை ஒன்றாக சேர்த்து ஒருவர் பிடித்திழுக்க காவடி எடுக்கும் பக்;தர் காவடியினை தோளில் சுமந்த படி ஆடுவார்.

தூக்குக்காவடி என்பது தூக்குத்தண்டனை பெற்ற ஒருவர் மேல் முறையீடு செய்து விடுதரல பெற்ற போது நேர்த்திக்கடனுக்காக ஆடப்பட்டதாக குறிப்pடப்படுகின்றது.
பறவைக்காவடி காவடி எடுப்பவரை படுக்க வைத்து தோள் ,தொடை ,கால் ஆகிய ஆறு இடங்களில் முட்களை கெழுவி முள்ளின் அடியில் உள்ள கயிறுகளை ஒன்றாக இணைத்து கட்டித் தொங்க விடுவர். இவர் தொங்கும் போது பறவை பறப்பதினைப் போன்றுகாணப்படுவதினால் இதனை பறவைக்காவடி என அழைக்கப்டுவதாக குறிப்பிடுகின்றனா.;
கூத்துக்காவடி என்பது பிற்காலத்தில் வந்து சேர்ந்த வடிவமாக கொள்ளப்படுகின்றது.இது ஆட்டக்காவடி முறைமையில் இருந்து  வேறுபாடு உடையதாக காணப்படுகின்றது.இது பல தாளக்கட்டுகளிற்க ஏற்ப்ப ஆடப்படுகின்றன..

இவ்வகையில் தனித்துவமானவையாக இக்கலைகள் விளங்குவதினையும் நம்பிக்கையும் சமயத்தோடினைந்த செயற்ப்பாடாகவும் காணப்படுகின்றமையினால் எத்தகைய தளங்களிலும், சூழ்நிலையிலும் இவை அழியாது காணப்படுகின்றன.




கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக