என்னைப் பற்றி

சனி, நவம்பர் 19, 2022

ஈழத்து நாடக உலகில் தவிர்க முடியாத ஆளுமை!
நெறியாளர், அரங்கு சார்ந்த தனது ஆற்றலினால் கற்றலில் ஈடுபடுகின்றவர்களது திறன்கள் வெளிவருவதற்கு ஆதார புள்ளியானர்கள்! அரங்கினை வலிமை மிக்க சாதனமாக சமூகமாற்றத்திற்கான கருவியாக பயன்படுத்த முடியும் என குறிப்பிடுகின்றவர்! நாம் அரங்கில் செயற்படுவதற்கு அரங்கு தொடர்பாககற்ற காலத்தில் நம்பிக்கை தந்தவர்களில் ஒருவரான கலாநிதி க. சிதம்பரநாதன் சேர் அண்மையில்இடம்பெற்ற செ.விந்தனின் கண்டாவளையான் வயது அறுபது எனும் பணிநயப்பு நூல் வெளியீட்டு விழாவில் கலந்து கொண்டுஉரையாற்றிய ஒளிப்பதவு ஆவணம் ஊடகவியலாளரும் அரங்கில் ஊடக பிரிவில் செயற்பட்டவருமான யாழ்.தர்மினி பத்மநாதன்[தர்மினி அக்காவின்] முகநூலினூடாக அவ் ஒளி ஆவணத்தை பார்க்ககூடியதாக இருந்தது. அவ் ஒளி ஆவணத்தில் கலாநிதி க.சிதம்பரநாதன் சேர் குறிப்பிடுகின்ற அரங்கு வலிமையான சாதனம் எனும் கருத்து சிறப்பான கருத்தாகும். ஆயினும் அவர் குறிப்பிடுகின்ற பலர் கருத்துக்கள் கலந்துரையாடல்களிற்கு உரியன. அப்பகைப்புலத்தில்அவ் ஒளி ஆவணத்தை முதல் நிலை தரவாக கொண்டு சில கருத்துக்கள் இங்கு முன்வைக்கப்படுகின்றன. இவை கருத்துக்களை கருத்துக்களால் முறியடித்து கருத்து சமர் புரிவதற்கான களமாக இல்லாது ஆக்க பூர்வமான கருத்துக்களை வெளிப்படுத்துவதற்கான களவெளியாக கொள்ளப்படுவதே ஆரோக்கியமாணதாகும். அவரது கருத்துக்களை முன்னிறுத்தி சில கருத்துக்கள் பதியப்படுகின்றன. இவைஎதிர்க்கருத்துக்கள் அல்ல புரிந்து கொள்ள முனைவதற்கான சந்தேகங்களாக கொள்ளமுடியும். நாடகம் சீரழிந்து விட்டது என எதை வைத்து சேர்குறிப்பிடுகின்றார். சீரழிந்து போனது எனின் அதற்கு யார் எல்லாம் பொறுப்பு? என்ன காரணங்களால் சீரழிந்து போனது? சீரழிந்து போகும் வரை தடுக்கமுடியாமல் போனதுக்கான காரணம் என்ன ? ஏன் அதை உங்களால்தடுக்கமுடியாமல் போனது என்பதற்கான நியாமான காரணங்கள் பற்றி கலந் துரையாடுவதே நாடகதுறையின் எழுச்சிக்கான அடிப்படையாகும். அரங்கு வலிமையான சாதனம் அதை ஏற்க நாடக துறை சார்ந்வர்கள் தயாரில்லை என்றால் அந்த நாடக காரர் யார்? நாடக துறை சார்ந்து கற்றவர்கள் தயார் இல்லையா? யார் அந்த நாடககாரர்? நாடக துறை சார்ந்தவர்களில் பெரும்பாலானவர்கள் உங்களது நெறியாழ்கையில் நாடகம் நடித்திருப்பார்கள் அல்லது உங்களது வழிகாட்டலில் அரங்க செயற்பாடு சார்ந்நு ஏதோவெருவிடயத்தில் பங்கெடுத்திருப்பார்கள். நாடகத்தை கற்று வெளியேறியவர்கள் நாடக துறை சார்ந்து செயற்படவில்லையா? அவர்களது செயற்பாடு நாடக துறையின் அழிவிற்கு காரனமா? எது என்பதை தெளிவு படுத்தப்பட வேண்டியது நீண்ட நெடிய நாடக செயற்பாட்டாளர் என்கின்ற வகையில் உங்களது கடமையாகின்றது. "நாடகம் படிக்கிற ஆட்களுக்கு அரங்கின்ர வலிமை தெரியாது." என குறிப்பிட்டால் அந்த வலிமைய உணரும் வகையில் பாடசாலை கலைத்திட்டத்தில் பாடத்திட்டங்கள் வடிவமைக்கப்படவில்லையா? அவ்வாறு வடிவமைக்கப்படவில்லை எனில் அப்பாடத்திட்டத்தினை வடிவமைத்தவர்களது தவறாக கொள்ளமுடியுமா? அதற்கு பொறுப்பு சொல்ல வேண்டியவர் யார்? பரீட்சை மையமாக வடிவமைக்கப்பட்டுள்ள பாடத்திட்டத்தில் பரீட்சை மைய செயற்பாட்டில் இருந்து வெளிவராத வகையில் நீங்கள் குறிப்பிடுகின்ற வலிமையினை எவ்வாறு உணர முடியும்? "நாடக ஆசிரியர்கள்கூடுகிற இடங்களில டிஸ்கசன் நடக்கிறேலை. அவர்களுக்கு இங்கு நடக்கிற மாற்றத்தை படிக்க ஆசை இல்லை." எதை வைச்சுக்கொண்டு நீங்கள் இந்த முடிவுக்கு வந்தீர்கள்? டிஸ்கசன் நடக்கிற இடங்களை தீர்மாணிப்பவர்கள் யார்? யார் நடத்துவதை டிஸ்கசனாக ஏற்றுக்கொள்கின்றீர்கள்? எந்தவகையில் டிஸ்கசன் நடந்தப்படவேண்டும் என நினைக்கின்றீர்கள்? ஏன் இத்தகைய ஓப்பின் போறத்தை உருவாக்க முடியாதா? "நாடகம் சிரழிஞ்சு போச்சுது." எண்டால் அந்த சீரழிவுகளில் இருந்து தப்பிப்பதற்கு வலிமையான சாதனமான அரங்கினை அரங்கிற்கே முதலில் பயன்படுத்தி வெற்றிகொள்வோம். இங்கே டிஸ்கசனங்களை ஏற்படுத்தலாம். நாடக ஆசிரியர்களை உருவாக்கிவர்கள் யார்? சீரழிச்சு போச்சு தெண்டால் அச்சீரழிவிகளுக்கு பொறுப்பு கூறவேண்டியவர்கள் யார்? அது சார்ந்த உரையாடல்களுக்கு தயார் நிலையில் எத்தனை பேர் உள்ளனர்? இத்தகைய நிலை க்கு காரணமாணவர்கள் யார்? நாடகம் இருவழி கலை வடிவம் எனில் தோல்விகளுக்கும் வெற்றிகளுக்கும் இரு வழி சார்ந்த வகையில் பொருள் கொள்ளப்படுவதே பொருத்தமான தாக இருக்க வேண்டும். குற்றம் சாட்டுதல்களினால் எதை சாதிக்க முடியும். ஏனைய துறைசார்ந்தவர்களுக்கும் இத்துறை சார்ந்தவர்களுக்கும் இடையிலான வேறு பாடு என்னவாக இருக்கும்? என பல வினாக்கள் எழுவது தவிர்க இயலாது. உரையாடல்களுக்கு நாம் தயார். புத்தாக்க அரங்க இயக்கம் இணையவெளியில் கதையாடப்படுகின்ற கதையாடல்களில் பல விடயங்கள்பேசப்படுகின்றது. வேடதாரியில் எழுதப்படுகின்றன. உரையாடல்கள் நடத்தப்பட்ட போது திறந்த மனநிலையுடன் எத்தனை பேர் பங்கு பற்றினார்கள் என்பதையும் உணர்ந்து செயற்படுதல் அவசியமானதாகும்..
எஸ்.ரி.அருள்குமரன்) நூல் -ஒளவை (நாடகபனுவல்) நாடக ஆசிரியர் இன்குலாப்.
இலக்கியங்கள் மறுவாசிப்பிற்கு உட்படுத்தப்படுகின்றபோது வேறு பரிணாமம் கொள்ளப்படுகின்றன. புரானிய காலப்படைப்புக்களை தற்காலத்தின் நோக்குநிலையில் மறு வாசிப்பிற்கு உட்படுத்தப்பட்ட வகையில் பல படைப்புக்கள் வெளிவந்திருக்கின்றன. நாடக பனுவல்களில் பல மறு வாசிப்பிற்கு உட்படுத்தப்பட்ட வகையில் எழுதப்பட்டுள்ளன. பிரளயனது உபகதை ஏகலைவனை வேறு கோணத்தில் பதிவு செய்கின்றது. இன்குலாப்பின்ஒளவை நாடகப்பிரதி ஒளவையினை முற்போக்கு ரீதியான பாத்திரமாக படைத்துள் ளார் . சங்ககாலத்தில் இருந்து பல காலங்களில் ஒளவை எனும் பெண் கவிஞர்கள் பாடல்களை யார்த்தபோதும் எல்லோரையும் ஒன்றாக்கி பாடல்களையும் யாரே ஒளவை எழுதிதை யாரோ ஒளவைக்குரியதாக பிற்கால சினிமாக்காரர் ஒன்றாக்கி குழப்பநிலையினை ஏற்படுத்தியதை சுட்டிக்காட்டும் நாடகஆசிரியர் தனித்துவமாக ஒளவையினை வேறொரு கோணத்தில் பதிவு செய்கின்றார். இவ்விடயம் பற்றி பின்வருமாறு பதிவு செய்கின்றார். 'ஒளவையைப்பற்றித் தமிழ்ச் சிந்தனையில் திணிக்கப்பட்ட பிரமையை உடைக்கவேண்டும் என்ற நோக்கத்திலேயே நாடகம் எழுதுவது பற்றி சொன்னேன்.வெவ்வேறு கலங்களில் வாழ்ந்ததாக சொல்லப்படும் ஒளவைகளைக்கலவையாக்கி ஒரே ஒளவையாக்கித்தந்தார்கள்.அல்லது வேறுபட்டகாலங்களில் வாழ்ந்த பெண்புலவர்கள் இஒளவைஎன்ற பெயரில் தங்களை அழைத்துக்கொண்டதாகவும் ஆய்வாளர் சுட்டுவர்.இந்தக்கலவையில் சங்ககால ஒளவை தொலைந்து போய்விட்டாள்.ஆடவரின் ஆதிக்கங்களை அறநெறிகளாக ஏற்றுக்கொண்ட பிற்கால ஒளவைகள் முன்னிறுத்தப்பட்டனர். ஒளவை இஒளவையாராக மாற்றப்பட்டாள்.இந்த மாயைகளை உடைத்துத் தொல் ஒளவையை மீட்கப்படவேண்டும் '....... (பக்7) இந்நாடக பனுவலில் உள்ள சில உரையாடல்கள் 1-சிறுமி:உண்டி சுருங்குதல் பெண்டிருக்கழகு ஏனையோர்: உண்டி சுருங்குதல் பெண்டிருக்கழகு 2-சிறுமி : உண்டி சுருங்குதல் ஆண்களுக்கு அழகோ சட்டாம் பிள்ளை:பாடம் படிக்கும் போது கேள்வ எல்லாம் கேட்டக்கூடாது 2-சிறுமி:பெண்களுக்கு ஏன் உண்டி சுருங்கவேனும்? ................................................ சட்டாம்பிள்ளை :எங்களை எதுத்துபேசக்கூடாது.மத்தபடி நாங்கள் சொல்லுறதை திரும்ப சொல்லனும். 2-சிறுமி: கிளிப்பிள்ளை மாதரி (பக்14) ஒளவை : இந்த வீரன் உனக்கு ஒரே மகனா? மூதாட்டி : ஆமாம்...அவன் நான் பெற்ற பிள்ளை...இதோ இவர்கள் அனைவரும் (நடுகற்களை காட்டி) நான்பெறாத பிள்ளைகள்..இவர்களை கருவுற்ற காலத்தில் மண் திண்றோம். இப்பொழுது இவர்களை மண் திண்று கொண்டிருக்கிறது. ஒளவை : அம்மா..உன் ஒரே மகனைக்களப்பலி கொடுத்ததில் உனக்கு வருத்தமில்லையா? மூதாட்டி : மக்களுடைய களச்சாவு எங்களை வருத்தப்படுத்துமோ? (பக் 50) பாணர் 1- என்ன ஒளவை...இந்த வம்பனிடம் என்ன பூசல்? ஒளவை : ஒன்றுமில்லை அதியனைப்பற்றி நான் எப்பொழுதும் பேசுவதால் அதியனை நான் காதலிக்கிறேனாம். பாணர் 1-அப்படி காதலித்தால் தான் என்ன தவறு ஒளவை :காதலிப்பது ஆண் பெண் இயல்புஇஆனால் ஆணிடம் பெண்ணும் இபெண்ணிடம் ஆனும் அன்பு காட்டுவது காதலாகிவிடுமா? (பக் 73) அதியனுக்காய் தொண்டைமானிடம் தூது சென்ற ஒளவையினது ஆளுமையினை புலப்படுத்துவதாக உள்ளது. ஒளவை :நாடு கவரவேண்டும் என்பது ஒன்று தான் அரசுகளுக்கிடையில் ஏற்படும் பகைக்குக் காரணம் இல்லையா? அதியன் : சரியாகச்சொன்னாய் ஒளவை ! தகடூர் குறித்துத் தொண்டைமானுக்கும் புதுபசி ஏற்பட்டிருக்கிறது ஒளவை போரில் மடிவதை மன்னனாகிய பெருமைக்குரியதாக கருதுகின்றேன்.என் மக்கள் இந்த பொருட்டு சாவது என்னை வருத்துகிறது.தொண்டைமானின் பகையால் என் மக்களுக்கு நேரும் கேடு கூடுவது குறித்து கவலைப்படுகின்றேன்...அத்துடன் தொண்டை நாட்டு மக்களுக்கு நேரிடும் துன்பத்தையும் நினைத்துப்பார்க்கின்றேன்.இதைத்தவிர்க நீதான் உதவ வேண்டும். ஒளவை : நான் என்ன செய்யவேண்டும்? அதியன்: தொண்டைமானும் பாட்டிலும் கூத்திலும் விருப்பமுடையவனாம்.அதிலும் உன் பாடல்களில் அளவற்ற ஈடுபாடு உடையவனாம்.அதனால்..அமைதிக்கான என் பொருட்டு அவனிடம் தூது செல்ல வேண்டும். (பக் 85) ஒளவை : பகைவரை குத்துதால் கங்கும் நுனியும் முறிந்து விட்டன....... (பக்89) பெண்ணிய நோக்கில் நாடக ஆசிரியரால் படைக்கப்பட்ட இப்பனுவல் நல்ல பனுவலாக காணப்படுகின்றது.

சனி, நவம்பர் 12, 2022

(எஸ்.ரி.அருள்குமரன்) ஆயிஷா ஒருவிஞ்ஞான நூலுக்கு அதன் ஆசிரியை எழுதிய முன்னுரை
ஆசிரியர்.இரா.நடராசன் வெளியீடு- புக்ஸ் ஃபார்சில்ரன் 21ம் அச்சு –செப்ரெம்பர் 2016 ஆயிஷா இந்தப்பெயருக்குள் புதைந்து கிடக்கின்ற துயரங்கள் ஏராளம். கேள்விகளால் உலகை ஆழ்பவர்கள் குழந்தைகள். கேள்விகளில் தான் தங்களது உலகம் எனநினைப்பவர்கள் மாணவர்கள். தேடல் உள்ள உயிர்களுக்கு தினமும் வாழ்வில் பசியிருக்கும் என்றார் கவிஞர் வைரமுத்து தனது பாடலொன்றில். கேள்விகள் பல விடைதிறப்பிற்கான களங்கள். இல்லையேல் மேலும் வினாக்கள் உருவாக்கப்படுவதற்கான வாய்ப்பு திறக்கும்.இதுஒரு தொடரிச்செயற்பாடு. உலகம் எப்போது உருவாகியது எப்போது முடிவுறும் என்கின்ற வினாக்களிற்கு மிக கட்சிதமாக விடைபகிரமுடியாதோ அதுபோன்று குழந்தைகள் உலகத்தினர்கேட்கின்ற கேள்விகளிற்கு விடை பகிரா முடியாதிருக்கின்றது என்பது யதார்த்தம்.ஆனால் அவர்களது கேள்வி கேட்கின்ற தாகத்தினை அதிகரிக்கவேண்டும் அத்தாகமே அவர்களை உயிர்ப்புள்ளவர்களாக வைத்திருக்க உதவும் ஆனால் வெறுமனே மனனமாக்குகின்ற கல்விப்புலச்சூழலிற்குள் இது எவ்வளவு தூரம் சாத்தியம் என்பது கூட எழுவினாவே. ஆயிஷாகுறுநாவலா? சிறுகதையா? எந்த வகுதிக்குள் உட்படுத்துவது? ஆனால் மாற்றத்திற்கான வாயில் திறப்பிற்கான முகவரி. ஆயிஷா இந்தப்பெயர் இன்று பலரது உதடுகளிலும் உச்சரிக்கப்படுகின்றது. இக்கதை ஏற்படுத்துகின்ற அதிர்வலைகள் ஏராளம். கதையைப்படிக்கின்றபோது ஏற்படுகின்ற நுன்துயர் வார்த்தைகளிற்கு அப்பாற்பட்டது. இதை வெறும் கதை என புறம் தள்ளிவிட்டு செல்ல முடியாத மனப்பிரமை ஏற்படுகின்றது. மாற்றத்திற்கான மடைதிறப்பினை ஏற்படுத்தவேண்டியவர்களே மாற்றமற்ற புறச்சூழ்நிலையை ஏற்படுத்துகின்றனர் என்கின்ற வலி நிறை மன உணர்வு மேலெழுகின்றது. இலக்கியம் மாற்றத்திற்கான செயலிஎனும் வகையில் இப்படைப்பு பல மாறுதல்களை கொண்டு வந்திருக்கும் அல்லது கொண்டு வரும்என்கின்ற நம்பிக்கையுடன்... இந்த ஆயிஷா எனும் படைப்பு அறிமுகமாகிய கணபொழுதினை நினைத்துப்பார்க்கின்றேன். பல்கலைக்கழகத்தில் கற்றுக்கொண்டிருந்த காலத்தில் நன்பர் மூலம் இந்த புத்தகம் வாசிப்பதற்கான வாய்ப்பு ஏற்பட்டது. ஒரே மூச்சில் என்று குறிப்பிடுவார்களே அதே போன்று வாங்கிய கனத்திலே புத்கத்தை வைத்துவிடாமல் வாசித்து முடித்த புத்தகம். இதற்கு காரனம் ஆயிஷாவின் துயரா?இ எழுத்தாளரா எழுத்துவன்மையா? பேசப்பட்ட விடயமா? எது என்று அப்போது சொல்ல முடியாத நிலை. ஆனால் அக்கதை பல செய்திகளை கிளறிவிட்டிருந்தது. அதன் அதிர்வலைகள் இன்றுவரை தொடர்கின்றது. அந்த புத்தகத்தை எனது தனிப்பட்ட நூலகத்திற்குசேமிப்பதற்காக தேடியபோது அதை பெற்றுக்கொள்ள முடியவில்லை. ஆயினும் 2017ம் ஆண்டில் பெற்றுக்கொள்ள முடிந்தது. சரி அவ்விடயம் நிற்க விடயத்திற்கு வருகின்றேன். இந்நூல் பற்றி டாக்டர் ஆர்.ராமானுஐம் பின் அட்டையில் பின்வருமாறு குறிப்பிடுகின்றார். 'இந்தக்கதையில் வரும் ஆயிஷh அவ்வளவு சுலபமாக எதையும் நம்பிவிடமாட்டாள். கேள்விகளைக்கேட்டு பூரணமாக விளக்கம் தேடுபவள். ஆயிஷாவின் அறிவுத்தாகம் ஆசிரியர்களுக்கு எரிச்சலை ஊட்டுகிறது. தாகம் இருந்தாலும் கல்வி மறுக்கப்படும் பெண் குழந்தைகள் எத்தனையோ அவர்களுக்கும் இந்தக்கதையில் வரும் ஆசிரியை போன்ற உறுதுணை கிடைக்க வேண்டும். நூலாசிரியர் இவ்வாறு பதிவு செய்கின்றார். 'இத்தனை வருடத்தில் பத்தாம் வகுப்பு அறிவியல் புத்தகத்தில் என்ன பெரிதாக மாறிவிட்டதுஇகாலையில் எழுந்து பல்துலக்குவதைஉற்சாகத்தோடவா செய்கிறோம்?எப்போதாவது புதிய பிரஷ;.அல்லதுபேஸ்ட்! இங்கே அதுவும் இல்லை.அதே ஓம்ஸ் விதி; ஒரோ சொல் பிரிதல் புதிதாகத்தெரிந்துகொள்ளும் ஆர்வமற்று ஓர் எந்திரமாய் கிரீச்சிட்டுக்கொண்டிருந்த என்னை என்முகத்தில் கேள்விகளால் ஓங்கி அறைந்தாள் ஆயிஷh.'( பக் 5) என குறிப்பிடுகின்றார் வகுப்பறையில் கற்றல்செயற்பாட்டினை வழமை போன்று மேற்கொண்ட ஆசிரியைக்குஆயிஷhவின் கேள்விக்கனைகள் வேறொரு பரிமானத்தை ஏற்படுகின்றது. வகுப்பறையில் வினவப்பட்ட வினாவின் தொடர்ச்சியாக கதையில் நகர்கின்ற போது... ' 'முடிவுறா எண்ணிக்கையிலான காந்தங்களை ஒரே நேர்கோட்டில் வெச்சா..எதிர் துருவங்களை கவரும் அதன் இயல்பு என்ன ஆகும்.' '..........' 'ஒரு காந்தத்தின் வடக்கு மறு காந்தத்தின் தெற்கை இழுக்கும்.ஆனால் இழுபடும் காந்தத்தின் வடக்கே அடுத்துள்ள காந்தம் ஏற்கனவே இழுத்துகிட்டிருக்கும் இல்லையா..மிஸ்?' 'ஆமா அதுக்கென்னன்ற?' 'என் சந்தேகமே அங்கதான் இருக்கு.எல்லாக்காந்தங்களின் கவர்திறனும் உன்றெனக்கொண்டால் அவை ஒட்டிக்கொள்ளத்தான் வாய்பே இல்லையே..எப்புறமும் நகராமல் அப்படியே தானே இருக்கும்' '................' 'ஏன் நாம இந்தப்பிரபஞ்சம் முடிவுறா எண்ணிக்கையிலான காந்தங்களை நேர்கோட்டில் வைத்ததுபோல் அமைக்கப்பட்டதா வெச்சிக்கக்கூடாது? அந்தக்கோணத்தில் பூமிங்கற காந்தத்த ஆராயலாம் இல்லையா? பதின்மூன்று வருடப்பள்ளி வாழ்கை பின் மூன்றாண்டு இயற்பியல்-பல்கலைக்கழகத்தில் இப்படியொருகேள்விளை நான் கேட்டுக்கொண்டதாக நினைவில்லை.'எங்கோ படித்ததாக ஞாபகம் என்றேன்.ஏதாவது சொல்லவேண்டுமே! 'வுhந வுசரவா ழுக ஆயபநெவள வெட்ரோட் ஸ்ரூடண்ட கிங்லீங் எழுதியது அருமையா இருக்கு.. படிக்கிறீங்களா மிஸ்..' 'இந்த புத்தகமெல்லாம் நீ படிக்கிறியா?' அவ்வளவு தான் -என் ஆயிஷh கிடைத்துவிட்டாள்.அந்த அதிர்ச்சியில் இருந்து இன்றுவரை மீள முடியவில்லை.அறை வாங்கியவளைப்போல புத்தகத்தை வாங்கிக் கொண்டு சரசரவெண ஆசிரியர் அறைக்கு நடந்தேன்.' (பக் 6-8) கல்விமுறைமையில் ஆசிரியர்களது நடத்தை முறை வன்முறையாக மாறிச்செல்வதனை வேதனையுடன் பதிவசெய்கின்றார் இவர் இதற்கு அடிப்படையாக பின்வரும் கூற்றினை குறிப்பிடலாம் 'கடவுளே எங்கள் குழந்தைகளை ஆசிரியரிடமிருந்து காப்பாற்றும்' (பக் 12) 'ஆயிஷாவின் உறவில் தான் நான் உனர ஆரம்பித்தேன்.எவ்வளவுதூரம் விஞ்ஞானமற்ற முறையில் நாம் நம் குழந்தைகளுக்கு விஞ்ஞானம் போதிக்கிறோம்என்று. நாம் எங்கே குழந்தைகளுக்கு ஒரு குறிப்பிட்டவிஷயத்தை உணர்ந்து கேள்வி கேட்க அவகாசம் தருகிறோம்? அவர்கள் கேட்கத்தொடங்கும் முன்னரே நாமாக முன்தயாரிக்கப்பட்ட கேள்விகளால் அவர்களை மூழ்கடித்து விடுகின்றோம்.அறிவும் வளருவதில்லை.பள்ளியில் ஆசிரியர் அதிகம் சொல்வது எதை? கையைக்கட்டு...வாயைப்பொத்து...' (பக் 17) '... கடவுளே ...அவரவர் அறிவைப்பயன்படுத்த அனுமதியுங்களேன்...'(பக்19) ..... ஆட்டோவில் ஆஸ்பத்திரிக்கு போவதற்குள் என் ஆயிஷh பிரிந்துவிட்டாள்.எப்பேர்பட்ட ஆயிஷh.நான் தாங்கிக்கொள்ள முடியாதவளாய் குழந்தைமீது பரண்டு அழுதேன்.இனி என்ன? உங்களுக்கு திருப்ப்தி தானே மிருகங்களே..என் ஆயிஷhவைஇஒப்பற்ற அந்த அறிவுக்கொழுந்தைக்கொன்று தீர்த்துவிட்டீர்களே.போங்கள்இஇனி உங்கள் வகுப்புக்கள் எளிமையானவை...அறிவுக்கு அங்கே வேலை இல்லை.' (பக் 22) இந்நாவல் எழுதுவதற்கான அடிப்படையாக திண்டிவனத்துக்கு அருகில் ஒரு கல்லூரி மாணவன் பாம்புக்கடிக்கு மருந்துகண்டு பிடிக்கத் தன் உடலையே பரிசோதனைச்சாலையாக மாற்றிக்கொண்டு மரணத்தை தழுவினான். இந்த உண்மைசம்பவத்தை அடிப்படையாகக்கொண்டு ஆயிஷா நாவலை இவர் எழுதியுள்ளார். 1985ம் அண்டு எழுதப்பட்டு பல வருடங்களாக பலராலும் ஏற்றுக்கொள்ளப்படாது இருந்த இந்நாவல் 1995 ம்ஆண்டு கனையாளிகுறுநாவல் போட்டியில்இரா.முருகன்இசுஐhத்தா ஆகியோர் நடுவர்களாக இருந்து கொண்டு தெரிவுசெய்யப்பட்டதாக அறியமுடிகின்றது. இன்று லட்சம்பிரதிகளை தாண்டி விற்பனையிலும் சாதனை படைத்து வருகின்றது. ஆயிஷாவை வெறுமனே கதையாகக்கொள்ளாது கற்றலில் ஆர்வம் இருந்தும் கல்விமுறைமையினாலும் சில ஆசிரியர்களது நடத்தையினாலும் கற்றலில் இருந்து தூரப்படுத்தப்பட்ட ஒவ்வொரு மாணவர்களது வலிநிறை வாழ்வியலில் ஆயிஷh இருப்பாள் என்பது துயர்மிகு கதை.....

ஞாயிறு, நவம்பர் 06, 2022

நூலின் பெயர்- ரோஸ் நூலாசிரியர்- ஆயிஷஇரா-நடராசன் வெளியீடு – புக்ஸ் ஃபார் சில்ரன்
ரோஸ் அதாவது றோசாப்பூ. பூக்களின் மீதான பிரியம் அலாதியானது.மரங்களை நாட்டுவதும் அவை வளர்ந்துவருகின்றபோது நாம் அடைகின்ற புளகாங்கிதமும் இபூத்துக்குளுங்குகின்றபோது அவற்றை பார்க்கின்றபோது மதில் ஏற்படுகின்ற மனமகிழ்சியும் உணர்ந்துகொண்டவர்களால் தான் அதை புரிந்துகொள்ளமுடியும். இங்கும் பூவின் மீது சிறுவன் காட்டுகின்ற பிரியமும்.அப்பூவின் ஸ்பரிசத்தினை உணரமுடியாது போகின்ற ஏக்கமுமே இக்கதை. இயந்திரமயமாகிப்போன வாழ்வியல் சூழலுக்குள் ஊடாhட முடியாமல் போன ஏக்கமும்.ஏட்டுச்சுரைக்காய் கறிக்குதவாது என்பதுபோன்ற குறிப்புநிலைக் கல்வி முறைமையில் உள்ள பலவீனங்கள் சுட்டிக்காட்டப்படுகின்றன. காலைவேளை மகனை பாடசாலைக்கு அனுப்புவதற்காக வேலைக்கு செல்கின்ற பெற்றோர் படுகின்ற சிரமத்தில் ஆரம்பிக்கின்றது.அவன் எழுந்து ரோஸ் பூத்திருக்கிது அம்மா அதைபாக்கவேனும் என மகன் ஆசைப்படல்.தாய் பள்ளிக்கு நேரமாகிறது என்கிறாhட.அவ்வேளை அவன் வீட்டுப்பாடம் செய்யவில்லை எனக்குறிப்பிடல். அவன் வீட்டுப்பாடம் செய்ய உதவுதல் உணவு தயாரித்தல் எனபரபரப்பானதான வீட்டுச்சூழல் காணப்படுகின்றதுஇத்தகைய படபடப்பிற்கு மத்தியில் அவனை தயார்ப்படுத்தி பள்ளிக்கு அனுப்பிவிட்டு தாம் அலுவலகம் செல்கின்றனர். பள்ளியில் ரோஸ் பற்றி ஒவ்வொரு பாட ஆசிரியரும் தமது பாடத்திற்கு ஏற்றவாறு கற்பிக்கின்றனர். அவன் எங்கட வீட்டில றோஸ் பூத்திருக்கிது மிஸ் என்கின்றான். அதற்கு அவர்கள் அந்த கதையை விட்டிட்டு படிப்பில கவனம் செலுத்து என்கின்றனர். ஒவ்வொரு நிலையிலும்அவன் முகம்கொடுக்கின்ற ஏக்கங்கள் கதையில் பதிவு செய்யப்படுகின்றன. பள்ளி நிறைவடைந்த பின்னர் கராத்தே வகுப்பிற்குசெல்லல்.அலுவலக கடமை நிமிர்தம்பெற்றோர் காலதாமதமாகவரல். இனி இரவு உணவுசமைத்தல் கடினம் என ஹொட்டல் ஒன்றில் உணவருந்துதல். வீட்டிற்கு வருகின்ற போது அம்மா றோஸ் வாடிச்சிது எனக்குறிப்பிடல். இந்த ஏக்கத்திலோ என்னவோ அவனுக்கு ஜீரம் (காய்ச்சல்) அடிக்கின்றது. அவன் அம்மா ரோஸ் இனியும் பூக்குமா எனக்கேட்டல்..தாய் பூக்கும் என சொல்லல். அவனுக்குமருந்து கொடுத்தல் நாளைக்கு என் ஆபீஸ் போச்சா எனக்கேட்ட்டல் என்பதாக அமைகின்றது. மிஸ்... மிஸ்...நான் சொல்லுறன்மிஸ்..எங்க வீட்டில ஒரு செடில நிஜமாகவே ரோஜாபூத்திருக்கிது மிஸ்...நான்பாhத்தேன்மிஸ்..ரெட் கலர் மிஸ்;.. செடில ரோஸை பார்க்கிறதுபெரிசில்லை.. ரோஸ்.ரோஸ்ன்னு எழுதிப்பாரு ஸ்பெல்லிங் மிஸ்டேக் இல்லாம...கரெக்டா எழுதிப்பழகு..புரியுதா..உட்காரு..உடனே ரோஜாவோட சிவப்பும் இல்லாம லில்லியோட வெள்ளையும் இல்லாம ஃப்ளோரா புதுசா ஒர பூவை உருவாக்கியதாம்...அதுதான் லோட்டஸ்..சொல்லங்க.. ஆர்...ஓ..எஸ்..இ..ரோஸ்....எல்..ஐ..எல்.ஓய்...லில்லி..(பக்23) பூக்காத தாவரம் அதுக்கு மேல வளராதா மிஸ்.. அதை வெட்டி எடுத்து வைக்க வேண்டி வரலாம்..உதாரணத்துக்கு ரோஜா ரோஜா செடியை வளர்க்க பதியம் போடுவார்கள் . அதெல்லாம் எனக்கு வேண்டாம்.. புக்குல இருக்கிறத படி..போதும். மிஸ்... என்னடா.. பூக்காத செடிய வெட்டி வைக்க வேண்டி வரும்னு சொல்றீங்க..வெட்டி வைச்ச ரோஜ பூக்குதே.. அது எதுக்கு மிஸ்... ஆமா மிஸ் ரோஜா எதுக்கு பூக்குது.. மிஸ்...மிஸ்.. எங்கவீட்ல ஓரு செடில நிஜமாவே ஒரு ரோஜா பூத்திருக்கு மிஸ்..ரொம்ப அழகா இருக்கு மிஸ்.. நான் பாத்தேன்... கொஞ்சம் விட்டா..ரொம்ப நான்சென்ஸா கேள்வி கேப்பீங்களே..எடு..புக்க..படி... ரோஸ்..ஈஸ்...எ..ஃப்ளவரிங் பிளான்ட்.(பக் 29-30) ........................................................................................... மிஸ் ரெட் சாயில்லதானே ரோஜா வெடி வளரும்... ஆ..ஆமாம்.. மிஸ்..தேவா வீட்டில இன்னிக்கு ஒரு செடில ரோஜாப்பூ பூத்திருக்கு மிஸ்... ஆமா மிஸ்..அழகா இருக்கு..நான் பாத்தேன் மண் வளம்.. சாயில் பவர்..நல்லாயிருந்தா ரோஜா பூக்கர்துக்கு என்ன?நல்லாவே பூக்கும்.. ரோஜா என்ன கலர்மிஸ்.. ஏய் சாயில் பத்தி பாரு..கண்ட கண்ட கேள்வியெல்லாம் கெட்டுக்கிட்டு..ஸோ..ரெண்டு வகையான சாயில்..அலுவியல சாயில்..ரெட் சாயில்..அலுவியல்...ஸ்.பெல்லிங் சொல்லுங்க பார்ப்போம்.(பக் 37) அம்மா நம்ம ரோஜா செடி இன்னொரு பூ பூக்குமா.. ஏம்மா அந்தப் பூ வாடிப்போச்சு.. நீஇன்னும் தூங்கலியா..மணி.. என்ன? அம்மா எனக்கு ரோஜாவ பாக்கனும்மா...நிஜரோஜா ..மிருதுவான ரோஜா..வாசனை வர்ற ரோஜா..அதை தொட்டுப்பாக்கணும்மா.. என்னங்ககொழந்தைக்கு நல்லா ஐPரம்அடிக்குது எழுந்திருங்க.. நம்ம வீட்டிலயே செடில பூத்த அழகான ரோஜாஜா..எனக்கு வேணும்ம. ஆமா..ஜீரம் அடிக்குது.. ரோஜாக்காரன் கார்த்தால வந்தான் இல்ல..ஒண்ணு வாங்கிக் கொடுத்தா என்ன? பாருங்க.. கொழந்தையை எப்படி பாதிச்சிருக்கு.. எழுந்து இந்த மாத்திரய போட்டுக்கடா..அழக்கூடாது.. நாளைக்கு என் ஆபிஸ்போச்சா.. எனக்க நிஐ ரோஜா தான் வேனும்.. நம்ம வீட்டில செடில மறுபடி ஒரு ரோஜாப்பூ பூக்குமாம்ம..சொல்லுமா.. உம்..உம்.. கட்டாயம்பூக்கும்டா..என் செல்லமே.. இப்ப தூங்கும்மா..தூங்கு..நேரு மாமா மாதிரி தினமும் ஒரு ரோஜா குத்திக்கிட்டுகோகலாம்..எல்லாம் உணக்குத்தான். தூங்கு..அழாதப்ப.. (பக்62-64) இந்நூலாசிரியர் ஆயிஷா .இரா.நடராசன் 2014ம் ஆண்டிற்கான சாகித்ய அகாதமி (சிறுவர் இலக்கியம்) விருது பெற்றவர்.தமிழின் முன்னனி அறிவியல் வரலாற்றாளர்.இயற்பயில்இகல்விஇமேலான்மைமற்றும் உளவியல் ஆகியவற்றில் முதகலைப்பட்டம் பெற்ற இவரது நூல்களில் உள்ள எளிமையும்.அங்கதம் கலந்த நகைப்புணர்வும் முக்கிய அறிவியல் எழுத்தாளராக அறியவைத்துள்ளது. நூல் பற்றி அட்டைப்படத்தில்பின்வரும் குறிப்பு உள்ளது. 'இன்றைய கல்வி முறையும் வாழ்க்கைச்சூழலும் வளர்ச்சி குறித்த சமூக மதிப்Pடுகளும் எப்படி கேள்விகளையேவிரும்பாமலும் தேடலை முன்வைக்காததுமாக இயங்கி வருகின்றது என்பதையும்அறிவுசார் தேடல் உள்ள ஒரு குழந்தை எப்படி இந்த கல்வி முறையால் வதைபட வேண்டியிருக்கின்றது என்பதையும்ஆசிரியர் ஆயிஷா இரா.நடராசன் தனத 'ரோஸ்'என்ற கதை மூலம் முன்வைக்கின்றார்.'
நூலின் பெயர்- செகவ் வாழ்கிறார் நூலாசிரியர்- எஸ்.ராமகிருஷனன் வெளியீடு – உயிர்மை பதிப்பகம் கலைப்படைப்பாளிகளிற்குமரணம்இல்லை.அவர்களது உயிர் உடலில் இருந்து பிரிந்தாலும் உணர்வுகளில் வாழ்ந்துகொண்டிருப்பார்கள். அவர்களது படைப்புக்களின் ஊடாக அவர்கள் எப்போதும் ஜீவிக்கப்படுவார்கள். எழுத்தாளர்களது எழுத்தின் உயிர்பு அவர்களை தலைமுறை தாண்டி இருப்புக்கொள்ளவைக்கின்றது. அவர்கள் எழுத்தாக்கத்தில் பதிவுசெய்தவிடயங்கள் ,சமூகநேசிப்பு, சமூகம் எவ்வாறு எழுர்ச்சியடைந்து மாற்றமுறவேண்டும்,சமூகத்தில் புரையோடிப்போயுள்ள பிரச்சினைகள் எவ்வாறு களையப்படவேண்டும் என்கின்ற ஏக்கங்கள் , தமது படைப்பில் இழையோட விட்டிருப்பதன் ஊடாக அவர்கள் காலம் ,தேசம்கடந்து வாழ்ந்துகொண்டிருப்பார்கள். இவ்வாறு காலம் கடந்து மக்கள் மனங்களில் சிம்மானம் போட்டமர்ந்திருக்கின்ற எழுத்தாளராகஅன்ரன்செகவ் விளங்குகின்றர். இவர் சிறுகதையாசிரியர்,நாவலாசியார்,நாடகஆசிரியர்,மருத்துவர், தனது எழுத்துக்களின் ஊடே சமூகமாற்றத்தை நேசித்தவர். ரஷ;யாவில் பிறந்த இவர் உலகெங்கும் கொண்டாடப்படுகின்ற எழுத்தாளன். இவர் எழுத்துக்களின் ஊடே மெல்லிதான துயரம் அழுத்திச்செல்வதனை வாசிப்பவர்கள் புரிந்துகொள்ள முடியும். யாழ்.பல்கலைக்கழகத்தில் படிக்கின்ற காலம் முதலே செகவ் மீது இனம்புரியாத ஈர்ப்பு இருந்தது. .காரணம்தெரிவதில்லை.அவரது சிறுகதைகள்,நாவல்களை விரும்பி எடுத்துப்படிப்பதுண்டு. அவரது கதைகளில்இழையோடிப்போயுள்ள உளவியல் ரீதியான பார்வை ஏதோ ஒரு வகையில் ஈப்பினை ஏற்படுத்தியிருந்தது. அவர் எழுதிய செறிப்பழத்தோட்டம் நாடகம் மிக அற்புதமான படைப்பு. அவர் எழுதிய பச்சோத்தி எனும் சிறு கதையினை பல தடவை வாசித்திருக்கின்றேன். அக்கதை ஏற்படுத்திய தாக்கத்தினால் நாடகமாக்கி பலதடவைகள் மேடையேற்றியுள்ளேன். இவ்வாறு ஆதர்சனமான படைப்பாளி பற்றிய நூலினை வாசிப்பதற்கான வாய்ப்பு கிடைக்கின்றபோது அதை எப்படி சொல்லுவது. அது ஆணந்தம்.பேரானந்தம். செகவ் வாழ்கிறார் எனும் நூலினை தேர்ந்த எழுத்தாளர் எஸ்.ராமகிருஷ;னன் எழுதியுள்ளார். இவர் பற்றி அறிமுகங்களே தேவையில்லை என்கின்றளவிற்கு மிக காத்திரமான பல நூல்களை எழுதியுள்ளார். நாவல்,சிறுகதை ,நாடகம்,சினிமா என இவர் தொட்டுப்பார்க்காத துறைகளே இல்லை எனலாம். அவ்வளவு தூரம் மிக நேர்த்தியாக தனது எழுத்தின் வன்மை மூலம் இலக்கியஉலகிற்கு கனதியான பங்களிப்பினைநல்கிக்கொண்டிருப்பவர். .அவரது எழுத்தில் செகவ் வாழ்கிறார் புத்தக்தினை படிக்கின்ற போது செகவ் இன்னொரு பரினாமத்தில் தெரிகின்றார். பின் அட்டையில் இப்படியொரு குறிப்புள்ளது. 'பெண்கள் துணியில் பூவேலைகளை செய்வது போல நுட்பமான அழகுணர்ச்சியுடன், தனித்துவத்துடன் சிறுகதைகளை எழுதியவர் ஆண்டன் செகவ் என்று ரய இலக்கியத்தின் சிகரமான லியோடால்ஸ்டாய் வியந்து கூறியிருக்கிறார்.கார்க்கியும் இவன்புனினும்,குப்ரினும்,செகாவை ஷேக்ஸ்பியருக்கு நிகரான படைப்பாளியாகக் கூறுகிறார்கள்.உலகெங்கும் சிறுகதை எழுதுபவர்கள் செகாவை தங்களின் ஆசானாக கருதுகிறார்கள். இந்நூல் செகாவின் வாழ்க்கையை ,அவரது படைப்புலகை ,அவரது நண்பர்களை ,சக எழுத்தாளர்களை விரிவாக அறிமுகம் செய்கின்றது.' இந்நூலில் செகவின் வாழ்கை வரலாற்றினை மிக சுவாரசியமான முறையில் பதிவு செய்துள்ளார் நூலாசிரியர். '1860 ஜனவரி 29 (பழைய கலன்டர் முறைப்படி ஜனவரி 17) அன்று தெற்கு ரஷ;யாவின் துறைமுகமான டாஹன்ராக்கில் செகவ் பிறந்தார்'.(பக் 7) 'உலகெங்கும் சிறுகதைஎழுதுபவர்கள் செகாவைத் தங்களின் ஆசானாகக்கருதுகிறார்கள்,புதிதாக சிறுகதை எழுத விரும்புபவர்களுக்கு அவர் சொல்லும்ஆலோசனைகள் முக்கியமானவை. உங்களைசுற்றிய வாழ்க்கையை உன்னிப்பாக பாருங்கள். அதில்உங்களுக்கான கதாபாத்திரம் கிடைக்கக்கூடும். அதிகப்படியான வர்னணை,தகவல்கள்,உரையாடல்கள், கதையின் இயல்பைக்கெடுத்துவிடும் நம்பும்படியான கதாபாத்திரங்கள்,எளிய,நேரடியான விவரிப்புக்கள்,உணர்வுகளை துல்லியமாக விவரிக்கும் விதம்.,தனித்துவமான கதைசொல்லும் முறை இவையே சிறந்த கதையை உருவாக்குகின்றன. கதையில் ஒரு துப்பாக்கி இடம்பெற்றால் கதை முடிவதற்குள் அதுவெடித்தாக வேண்டும் என்பது செகவ் சொன்ன அறிவுரைகளில் முக்கியமானது.அதன்பொருள் தேவையற்ற எதையும்கதையில் எழுத வேண்டாம் என்பதே' (பக்9) 13 பகுதிகளில் செகாவினுடைய வாழ்வை இந்நூலினூடாக நூலாசிரியர் பேசுகின்றார். அவ்பிரிப்பு வருமாறு. 1.என்பெயர்செகவ்.2.ஐந்துரூபில்காதலி3.தண்டனைத்தீவு,4.கலாரா காலத்தில் செகாவ், 5.செர்ரி தோட்டங்கள் அழிவதில்லை,6.டால்ஸ்டாயும் செகாவும்,7.செகாவின் காதலிகள்,8.செகாவின் தோழர்கள்,9.செகாவின் கடைசி தினங்கள்,10.செகாவின் கதையுலகம்,11.கார்வரும் செகாவும்,12.திரையில் ஒளிர்ந்த செகாவ்,13.செகாவ்சில விமர்சனங்கள் ஆகியனவே இப்பிரிப்புக்கள். 'சிறுகதைக்கலையில் தனக்கென தனித்துவமான கதை சொல்லும் முறையை கொண்டிருந்த செகாவ்,நாடககலையிலும் ஒரு புதிய போக்கினை உருவாக்கினார்.அவரது சம்பிரதாயமான நாடகங்களைப்போல மிகைஉணர்ச்சியும் திருப்பங்களுடன் கூடிய கதைகளும் கொண்டிருக்கவில்லை.செகாவின் நாடகங்களில்கதைகுறைவு என விமர்சகர்கள் கூறுமளவு அது நிகழ்வுகளை மையப்படுத்தி அங்கதச்சுவையோடு உருவாக்கப்பட்டிருந்தது. நாடகத்தில் ஒற்றை கதாநாயகன் கதாநாயகி கிடையாது.அது மாறுபட்ட கதாபாத்திரங்களின் ஊடாட்டமாக நிகழ்வெளியாக அமைக்கப்பட்டிருந்தது. ஆகவே,நாடகத்தின் எல்லா பாத்திரங்களும் சமமாகஉருவாக்கப்பட்டிருந்தன.' பக்(57-58) 'செகாவின் மரணம் 1904 இல் நிகழ்ந்தது. ரஷ;யாவை அவரைப்போல்நேசித்தவர் எவருமில்லை.ஆனால் செகாவின்மரணம் ரஷ;யாவில் நிகழவில்லை. ஜெர்மனியின்பேடன்வீலர் என்ற சுகவாசஸ்தலத்தில் அவர் இறந்து போனார் காசநோய் முற்றியநிலையில் 1904 ஆம் ஜெர்மனிக்கு சிகிச்சை செய்துகொள்வதற்காக செகவ் புறப்பட்டார். அந்த யோசனையை சகோதரி மரியா ஏற்றுக்கொள்ளவில்லை.ஆனாலும் செகாவ் தனது மரணத்தை தேடி புறப்பட்டார். இந்த பணயத்தில் அவரோடு உடனிருந்தவர் மணைவிஒல்கா'(பக் 99-100) அவர் கண்ட பல கனவுகளில் இதுவும் ஒன்று.. 'இந்த இடத்தில் ஒரு கல்வி நிலையம் அமைக்க விரும்புகின்றேன் அங்கே ரஷ;யா முழுவதும் உள்ள ஆசிரியர்களை அழைத்து வந்து தங்கவைத்து அவர்களுக்கு கல்வி குறித்த ஆழ்ந்த புரிதலையும் முக்கியத்துவத்தையும் சொல்ல ஆசைப்படுகின்றேன். இன்றுள்ள ஆசிரியர்களை ஒரு நோய்பற்றியிருக்கிறது.அது கல்வி குறித்த அலட்சியம் அதுகளைந்து எறியப்படவேண்டிய நோய்.ஆகவே ஆசிரியர்கள் இங்கு தங்கிக்கொண்டு நிறைய படிக்க வேண்டும் விவாதிக்க வேண்டும். அத்துடன் இசை,ஓவியம்,பாடல்,இலக்கியம் என்று தனித்திறமைகளை வளர்த்துக்கொள்ளவேண்டும் அருகில் உள்ள நிலத்தில் விவசாயம் செய்துநேரடி அனுபவம் பெற்றுக்கொள்ளவேண்டும். ஒருவன் ஆசிரியராக பணியாற்றுவது என்றால் சகல விஷயங்களிலும் நேரடியான அனுபவம் உள்ளவன். அது குறித்து ஆழ்ந்துசிந்திப்பவன் என்றுதான்பொருள்.ஆகவே ஆசிரியர்கள் தங்களை தொடர்ந்து மேம்படுத்திக்கொள்ளவேண்டும்.அதற்கென தனியான முகாம்கள் அமைக்கப்படுவது அவசியம். ஒவ்வொரு ஆசிரியரும் தன்னை ஒரு கலைஞனாகவே மதிக்கவேண்டும்.எப்படி ஒரு பாடகன் தன்னுடைய பாடும் திறனைத்தினமும் வளர்த்துக்கொள்வானோ அப்படி கற்றுத்தருவதை நுட்பமாக வளர்த்தெடுக்கவேண்டும். அதுபோலவே பொதுமக்களிடம் ஆசிரியர்கள் மீது எப்போதுமே இளக்காரம்,கேலியே உள்ளது.அதுமாறவேண்டும். மக்கள் ஆசிரியர்களை மதிக்கவேண்டும்.ஒரு ஊருக்குள் வரும் கான்ஸ்டபிளுக்குக்கிடைக்கும் மரியாதை ஆசிரியர்களுக்கு கிடைப்பதில்லை.போலிஸ்காரன் குற்றவாளிகளை பிடிக்க வருகின்றான். அவனை நாம் வரவேற்று மரியாதை செய்கின்றோம்.ஆசிரியர்கள் நம் குழந்தைகளின் எதிர்காலத்தை வளர்த்து எடுக்கமுயற்சிக்கின்றார். அவரை நாம்மதிப்பதேயில்லை. அதுமாற வேண்டும். முதலில் ஆசிரியர்கள் மதிக்கப்படவேண்டும்குறிப்பாக ஆசிரியர்களுக்கு எதிராக யாரும் கை நீட்டி பேசவோ,பரிகாசம் செய்யவோ கூடாது.தன்னுடைய பணி இடத்தில் ஆசிரியர் சக ஆசிரியர்களுடன் இணக்கமாகப்பழகவேண்டும்.எப்படி காவல் நிலையத்தை கண்டவுடன் எவ்வளவு பெரிய ரௌடியும் அடங்கி ஒடுங்கி அமைதியாக போகிறானோ அப்படி பள்ளியை கண்டதும் அது அறிவு நிலையம் எண்று மதித்து நடக்கவேண்டும். ஒரு கிராம பள்ளியில் பணிபுரியும் ஆசிரியர் அந்த கிராமத்தின் வளர்ச்சி தன் கையில் ஒப்படைக்கப்பட்டிருக்கிறது என்ற பொறுப்புணர்ச்சி கொள்ளவேண்டும்.மாறாக,வகுப்பறை மட்டுமே தனது உலகம் என்று ஒதுங்கிக்கொள்ளக்கூடாது அதுபோலவே படிக்காத கிராமத்து மக்களை ஆசிரியர் ஒருபோதும் குறைவாக மதிக்கக்கூடாது. கேலி செய்யவோ,படிக்காதவர் என்று சுட்டிக்காட்டிபேதமாக நடத்தவோ கூடாது ஆசிரியர்களின் பணி என்பது ஒருவகையில்போர் வீரணை விடவும் சவால் நிறைந்தது.ஆகவே அவர்களின் அன்றாடத்தேவைகள் குறிப்பாக குடும்பத்திற்கான அடிப்படைத்தேவைகளை ,அரசு முழுமையாக ஏற்றுக்கொள்ளவேண்டும் பணம் சம்பாதிப்பதற்காக மட்டுமே வேலை செய்கின்றோம் என்று ஆசிரியர் உணரும்போது தான் கல்விநலிவடையத்துவங்குகின்றது.அது மாற்றப்படவேண்டும்.பள்ளியில் சேர்ந்துபடிக்க இயலாத குழந்தைகளுக்குப் பள்ளிக்கு வெளியில் கற்றுத்தருவதற்கு ஆசிரியர்கள் முன்வரவேண்டும். அலங்காரமான ஆடைகளை அணிந்து பகட்டுத்தனமாக ஆசிரியர்கள் நடந்துகொள்ளக்கூடாது.முறையான வெளிச்சம்,நல்ல குடிநீர்,காற்றோட்டம் உள்ள வகுப்பறை அடிப்படையானபுத்தகங்கள் ஒவ்வொரு பள்ளிக்கும் அவசியம்.ஆசிரியர்கள்நல்ல உடல்ஆரோக்கியத்துடன்இருக்க வேண்டும் கிராமப்பள்ளி ஆசிரியர்களை நகரப்பள்ளியில் பணியாற்றும் ஆசிரியர்கள் வந்து பார்வையிடுவது கிடையாது.இது மாற்றப்படவேண்டும்.கிராமத்து ஆசிரியர்கள் நகரத்திற்கும் மாநகரில் உள்ள ஆசிரியர் சிறிய கிராம பள்ளிக்கும் வருகை தந்து கற்றுத்தரும் முறைமைகளைப் பகிர்ந்து கொள்ளவேண்டும்' என்று மாபெரும்கனவுத்திட்டங்களை அடுக்கிக்கொண்டு போனார் செகவ் இதை எல்வாம் கேட்ட கார்க்கிஇவை எல்லாம் எப்படி சாத்தியமாகும் என்பது போல சிரிக்க செகவ் அதை புரிந்து கொண்டு 'இவை எல்லாம் என்னுடைய கனவுகள்.வெறும் கனவுகள். இவை நடந்தால் அன்றி ரஷ;யா முன்னேற முடியாது.முறையான ஆசிரியர்கள் இல்லாத சமூகம் மேம்படவேமுடியாது.ஒருவேளை என்காலத்திற்குள் இதில் சில மாற்றங்களாவது நடந்தால்சந்தேஷப்படுவேன்.இல்லாவிட்டால் ஏங்கி ஏங்கியே சாக வேண்டியதுதான்.வழியில் தென்படும் ஆசிரியர்களைக்கானும்போது நான் மிகுந்தவெட்கப்படுகின்றேன்.காரணம் அவர்களில் எவரும் உரிய முறையில் பேசவோ ,எழுதவோ அறிந்திருக்கவில்லை. ஆசிரியர்என்ற தோற்றத்திற்குகூட அவர்கள் முக்கியத்துவம் தருவதில்லை ,அதை விடவும் மக்களின் மேம்பாடு குறித்து ஒருபோதும்சிந்திப்பதேயில்லை. தன்னை சுற்றிய மனிதர்களின் மீது அக்கறை கொள்ளாதவன் எப்படி ஆசிரியராகப்பணியாற்றி முடியும்? ரஷயா மிகவும் பின்தங்கிப்போயிருக்கிறது.இங்கே கல்விக்கு அதிக முக்கியத்துவம் கிடைக்கவேயில்லை.பிரெஞ்சுதேசம்உலகம் முழுவதும்பெயர்பெற்றிருப்பதற்கு காரணம் அங்குள்ள கல்வி முறையும் அதனால்உருவான கலாச்சார சூழலும்தான்.அதை நாம் பெற்றாக வேண்டும்இல்லாவிட்டால் அடித்தளம் இல்லாத கட்டிடம் போலஇந்த சமூகம் நொறுங்கி விழுந்துவிடும்' என்று சொல்லிவிட்டுசெகவ்'இப்படியாக நான் புலம்பிக்கொண்டிருக்கிறேன்.இதையார் எடுத்துக்கொள்ளப்போகிறார்கள்.வாருங்கள் தேநீர் அருந்தலாம்' என்று சொல்லி கார்க்கியை தன்னோடு அழைத்துக்கொண்டு சென்றார் செகவ். கல்வி குறித்த செகாவின் ஆதங்கம் அவரது சகோதரி பள்ளியைத்துவங்கிய போது சற்று தணிந்தது.தன்னால் முடிந்த பொருளுதவிகளை அதற்காகத்திரட்டிதந்தார் செகவ்' (பக்84-86) இந்நூலின் ஊடாக செகவ்வினுடைய வாழ்வை புரிந்துகொள்ளமுடிகின்றது.

வியாழன், நவம்பர் 03, 2022

அரங்கவிளையாட்டுக்களும் ஆளுமைதிறன்விருத்தியும்

(எஸ்.ரி.அருள்குமரன்) அரங்கவிளையாட்டுக்கள்அரங்கசெயற்பாடுகளில்மிகமுக்கியமான இடத்தினைபெறுகின்றன. விளையாட்டுக்கள் உடல்திறனிற்கான அடிப்படையாகவிளங்குகின்றன. விளையாட்டுக்களில்ஈடுபடுதல்உடல்பயிற்சிக்குமுதன்மையானதாகவும்,அப்பயிற்சியின்ஊடாக உடலினை தகவமைத்தக்கொள்வதிற்குஏற்புடையதாகவும்கொள்ளப்படுவதனைப் போன்று அரங்கவிளையாட்டுக்கள் நடிகனை தயார்ப்படுத்துவனை நோக்கமாகக்கொண்டு மேற்கொள்ளப்படுகின்றது.
அரங்கவிளையாட்டுக்கள் என்றால் என்ன என நோக்குவோமாயின் நடிகனதுதிறன்விருத்தியினை இலக்காகக்கொண்டு உடல்,உளம்,குரல்ஆகியவற்றிற்கானபயிற்சியாக மேற்கொள்ளப்படுகின்ற விளையாட்டுக்கள் அரங்கவிளையாட்டுக்கள் ஆகும். இவ்விளையாட்டுக்கள் பல்வேறுதேவைகளை அடிப்படையாகக்கொண்டவகையில் பயிற்சியியாக நிகழ்த்தப்படுகின்றன. நடிகன் நடிப்பினை சிறந்தமுறையில்வெளிப்டுத்துவதற்கு,மேடையில் ஏனைய நடிகனுடன்சிறந்ததொடர்பாடல் திறனை விருத்திசெய்துகொள்வதற்கு என தன்னை தயார்ப்படுத்திக்கொள்வதற்காக அரங்கவிளையாட்டுக்களில் ஈடுபடுகின்றான். நடிகனைபொறுத்தவரையில் நடிப்பினை வெளிப்படுத்துவதில் மூலகங்கள் முதன்மைபெறுகின்றன. இந்தவகையில் முதற்தரமூலங்கள்,இரண்டாம்தரமூலகங்கள் முக்கியம்பெறுகின்றன. முதற்தரமூலகம்என்பதுஉடல்,குரல்,உளம் என்பனவாகும்..இரண்டாம்தரமூலகங்கள்என்பது துணைக்கலைகளான வேடஉடை,ஒப்பனை,இசை போன்ற மூலக்கூறுகள். இவ்விருவிடயங்களிலும்நடிகனை தன்னை சுயாதீனமாகவெளிப்படுத்திக்கொள்வதற்கும்,பார்ப்போருடன் தனதுஆளுமையினைவெளிப்படுத்திக்கொள்வதற்குமான களமாக முதல்தரமூலகங்களை நடிகன் பயன்படுத்திக்கொள்கின்றான். அரங்கவிளையாட்டுக்கள் உடல்,உளம்,குரல்சார்ந்த பயிற்சியாக விளையாடப்படுகின்றன. உடல்சார்ந்த பயிற்சிக்குரிய அரங்கவிளையாட்டுக்களாக ஆடும்வீடும், நண்டு,றால்,மீன் ,தலைவரைகண்டுபிடித்தல்,எலியும்வளையும் போன்ற சில விளையாட்டுக்களை குறிப்பிடமுடியும். இவ்விளையாட்டுகளில் ஈடுபடுவதன்மூலம் உடல்சார்ந்தவலிமையினைபெற்றுக்கொள்ளஉதவுகின்றது. நடிகன்அரங்கில் நீண்டநேரம்இயங்குவதற்கும்,பாத்திரத்தினை சிறந்தமுறையில் வெளிப்படுத்துவதற்கும்உடற்திறனை வளர்த்துக்கொள்வதற்கு இவ்விளையாட்டுப்பயிற்சி உறுதுணையாக அமைகின்றது. குரல்சார்ந்த பயிற்சிக்குமுதன்மைகொடுக்கம்வகையில்விளையாடப்படுகின்ற அரங்க விளையாட்டுக்களிற்கு உதாரனமாக பசுவும்புலியும்,குலைகுலையாhய்முந்திரிக்காய்,சங்குவெத்திலை சருகுவெத்திலை,நாராய்நாராய்,போன்றவிளையாட்டுக்களை குறிப்பிடலாம். நடிகன்அரங்கில்தன்னைவெளிப்படுத்திக்கொள்வதற்கு குரல்சார்ந்தவெளிப்பாடு இன்றியமையாததாகும்.காரணம் சொல்லாடல்களை வெளிப்படுத்துகின்றபோதுதெளிவாகவும்,சிறந்தஉச்சரிப்புடனும்,இறுதியில் இருக்கின்றபார்வையாளருக்கு தெளிவாகவிளங்கக்கூடியவகையிலும் வெளிப்படுத்தவேண்டும்.எனவேகுரலை சரியானமுறையில்பயன்படுத்திக்கொள்வதற்கும்,உணர்வுநிலையினை வெளிப்படுத்திக்கொள்வதற்கும் குரல்சார்ந்த அரங்க விளையாட்டுக்கள் துணையாகின்றன. உளம்சார்ந்த அரங்கவிளையாட்டிற்கு கரடியும்கிராமமக்களும், பஸ், ,குருவானவர்வீட்டில் கள்ளன்எனும் அரங்கவிளையாட்டுக்களைகுறிப்பிடலாம்.
இவ்விளையாட்டுக்களின்நோக்கம் உளம் சார்ந்தவகையில் அதாவது மனதிற்கான பயிற்சியாக ; கொள்ளப்படுகின்றன. நடிகன் உணர்வுகளை கட்டுப்பாட்டுக்குள்வைத்திருந்துபொருத்தமான நேரத்தில்வெளிப்படுத்துவதற்கு மனம்சார்ந்த பயிற்சிஅவிசயமாகின்றது.உதாரனமாக சோக உணர்வினை வெளிப்படுத்துகின்றபோது பாத்திரத்தினது சூழ்நிலைக்கு எற்பவெளிப்படுத்தவேண்டும்.தேவையற்றவகையில்வெளிப்படுத்தப்படுகின்ற போதுபார்வையாளருக்கு சலிப்பினை ஏற்படுத்தும். மனதை தனது கட்டுப்பாட்டிற்குள்வைத்திருப்பதற்கும்,நினைவாற்றலினை வளர்த்தக்கொள்வதற்கும்நினைவாற்றலை வளர்த்துக்கொள்வதன்மூலம் நீண்டவசனங்களைஞபகப்படுத்திக்கொள்வதற்கும் இவ்வகையான அரங்க விளையாட்டுக்கள்நடிகனுக்கு பெரும்துணையாகின்றன. அரங்க விளையாட்டுக்கள் விளையாடுவதன் மூலம் பல்வேறு திறன்கள் விருத்தியாக்கப்படுகின்றன.அந்தவகையில் அரங்கவிளையாட்டுக்களில் ஈடுபடுகின்றவர்களிடையே அவர்களது அனுபவத்திற்கு ஏற்றவகையில் பல்வேறு திறன்களைபெற்றுக்கொள்கின்றனர். அற்தவகையில்பொதுவாகபின்வரும் திறன்களை குறிப்பிடமுடியும். கற்பனைத்திறன்,மனதைஒருநிலைப்படுத்தல்,தொடர்படல்,தலைமைத்துவம், கனப்பொழுதில் தீர்மானம் எடுக்கும் திறன்,மனனம், போன்ற திறன்கள் விருத்தியாக்கப்படுகின்றன். மேலும் இவ் விளையாட்டுக்களில் ஈடுபடுவதினால் ஏற்படும் நன்மைகளாக மனமகிழ்வு ஏற்படும், உடல்,உளதளர்வுநிலை,கூட்டாக இயங்கும்பண்பு,வெட்கம்பயம்நீங்கிஇயல்பாகநடிக்கஉதவுதல்,விட்டுக்கொடுக்கும்மனப்பாங்குவளரும், போன்ற பண்புகள் வளர்சியடைகின்றன. நடிகன் தான் ஏற்கின்றபாத்திரத்தினை சிறந்தமுறையில் வெளிப்படுத்துவதற்கு பயம்,வெட்கம் அற்றவனாகஇருக்கவேண்டும். பயம்,வெட்கம் காணப்படுகின்றபோதுஅவனால்சுயாதீனமாக செயற்படமுடியாது .பயம்,வெட்கம் நீக்கப்படுகின்றபோதுகற்பனைத்திறன்விருத்தியாக்கப்படுகின்றது.கற்பனைத் திறன்விருத்தியாகின்றபோது படைப்பாகக் மனநிலை ஏற்படுகின்றது. இப்படைப்பாக்கமனநிலையே அவனை சிறந்த நடிகானாக்குகின்றது. இப்பின்னனியில் நடிகன் தனது பல்வேறு ஆற்றல்களை வளர்த்துக்கொள்வதற்கு அரங்கவிளையாட்டுக்கள் துணைசெய்கின்றன.