என்னைப் பற்றி

சனி, நவம்பர் 19, 2022

ஈழத்து நாடக உலகில் தவிர்க முடியாத ஆளுமை!
நெறியாளர், அரங்கு சார்ந்த தனது ஆற்றலினால் கற்றலில் ஈடுபடுகின்றவர்களது திறன்கள் வெளிவருவதற்கு ஆதார புள்ளியானர்கள்! அரங்கினை வலிமை மிக்க சாதனமாக சமூகமாற்றத்திற்கான கருவியாக பயன்படுத்த முடியும் என குறிப்பிடுகின்றவர்! நாம் அரங்கில் செயற்படுவதற்கு அரங்கு தொடர்பாககற்ற காலத்தில் நம்பிக்கை தந்தவர்களில் ஒருவரான கலாநிதி க. சிதம்பரநாதன் சேர் அண்மையில்இடம்பெற்ற செ.விந்தனின் கண்டாவளையான் வயது அறுபது எனும் பணிநயப்பு நூல் வெளியீட்டு விழாவில் கலந்து கொண்டுஉரையாற்றிய ஒளிப்பதவு ஆவணம் ஊடகவியலாளரும் அரங்கில் ஊடக பிரிவில் செயற்பட்டவருமான யாழ்.தர்மினி பத்மநாதன்[தர்மினி அக்காவின்] முகநூலினூடாக அவ் ஒளி ஆவணத்தை பார்க்ககூடியதாக இருந்தது. அவ் ஒளி ஆவணத்தில் கலாநிதி க.சிதம்பரநாதன் சேர் குறிப்பிடுகின்ற அரங்கு வலிமையான சாதனம் எனும் கருத்து சிறப்பான கருத்தாகும். ஆயினும் அவர் குறிப்பிடுகின்ற பலர் கருத்துக்கள் கலந்துரையாடல்களிற்கு உரியன. அப்பகைப்புலத்தில்அவ் ஒளி ஆவணத்தை முதல் நிலை தரவாக கொண்டு சில கருத்துக்கள் இங்கு முன்வைக்கப்படுகின்றன. இவை கருத்துக்களை கருத்துக்களால் முறியடித்து கருத்து சமர் புரிவதற்கான களமாக இல்லாது ஆக்க பூர்வமான கருத்துக்களை வெளிப்படுத்துவதற்கான களவெளியாக கொள்ளப்படுவதே ஆரோக்கியமாணதாகும். அவரது கருத்துக்களை முன்னிறுத்தி சில கருத்துக்கள் பதியப்படுகின்றன. இவைஎதிர்க்கருத்துக்கள் அல்ல புரிந்து கொள்ள முனைவதற்கான சந்தேகங்களாக கொள்ளமுடியும். நாடகம் சீரழிந்து விட்டது என எதை வைத்து சேர்குறிப்பிடுகின்றார். சீரழிந்து போனது எனின் அதற்கு யார் எல்லாம் பொறுப்பு? என்ன காரணங்களால் சீரழிந்து போனது? சீரழிந்து போகும் வரை தடுக்கமுடியாமல் போனதுக்கான காரணம் என்ன ? ஏன் அதை உங்களால்தடுக்கமுடியாமல் போனது என்பதற்கான நியாமான காரணங்கள் பற்றி கலந் துரையாடுவதே நாடகதுறையின் எழுச்சிக்கான அடிப்படையாகும். அரங்கு வலிமையான சாதனம் அதை ஏற்க நாடக துறை சார்ந்வர்கள் தயாரில்லை என்றால் அந்த நாடக காரர் யார்? நாடக துறை சார்ந்து கற்றவர்கள் தயார் இல்லையா? யார் அந்த நாடககாரர்? நாடக துறை சார்ந்தவர்களில் பெரும்பாலானவர்கள் உங்களது நெறியாழ்கையில் நாடகம் நடித்திருப்பார்கள் அல்லது உங்களது வழிகாட்டலில் அரங்க செயற்பாடு சார்ந்நு ஏதோவெருவிடயத்தில் பங்கெடுத்திருப்பார்கள். நாடகத்தை கற்று வெளியேறியவர்கள் நாடக துறை சார்ந்து செயற்படவில்லையா? அவர்களது செயற்பாடு நாடக துறையின் அழிவிற்கு காரனமா? எது என்பதை தெளிவு படுத்தப்பட வேண்டியது நீண்ட நெடிய நாடக செயற்பாட்டாளர் என்கின்ற வகையில் உங்களது கடமையாகின்றது. "நாடகம் படிக்கிற ஆட்களுக்கு அரங்கின்ர வலிமை தெரியாது." என குறிப்பிட்டால் அந்த வலிமைய உணரும் வகையில் பாடசாலை கலைத்திட்டத்தில் பாடத்திட்டங்கள் வடிவமைக்கப்படவில்லையா? அவ்வாறு வடிவமைக்கப்படவில்லை எனில் அப்பாடத்திட்டத்தினை வடிவமைத்தவர்களது தவறாக கொள்ளமுடியுமா? அதற்கு பொறுப்பு சொல்ல வேண்டியவர் யார்? பரீட்சை மையமாக வடிவமைக்கப்பட்டுள்ள பாடத்திட்டத்தில் பரீட்சை மைய செயற்பாட்டில் இருந்து வெளிவராத வகையில் நீங்கள் குறிப்பிடுகின்ற வலிமையினை எவ்வாறு உணர முடியும்? "நாடக ஆசிரியர்கள்கூடுகிற இடங்களில டிஸ்கசன் நடக்கிறேலை. அவர்களுக்கு இங்கு நடக்கிற மாற்றத்தை படிக்க ஆசை இல்லை." எதை வைச்சுக்கொண்டு நீங்கள் இந்த முடிவுக்கு வந்தீர்கள்? டிஸ்கசன் நடக்கிற இடங்களை தீர்மாணிப்பவர்கள் யார்? யார் நடத்துவதை டிஸ்கசனாக ஏற்றுக்கொள்கின்றீர்கள்? எந்தவகையில் டிஸ்கசன் நடந்தப்படவேண்டும் என நினைக்கின்றீர்கள்? ஏன் இத்தகைய ஓப்பின் போறத்தை உருவாக்க முடியாதா? "நாடகம் சிரழிஞ்சு போச்சுது." எண்டால் அந்த சீரழிவுகளில் இருந்து தப்பிப்பதற்கு வலிமையான சாதனமான அரங்கினை அரங்கிற்கே முதலில் பயன்படுத்தி வெற்றிகொள்வோம். இங்கே டிஸ்கசனங்களை ஏற்படுத்தலாம். நாடக ஆசிரியர்களை உருவாக்கிவர்கள் யார்? சீரழிச்சு போச்சு தெண்டால் அச்சீரழிவிகளுக்கு பொறுப்பு கூறவேண்டியவர்கள் யார்? அது சார்ந்த உரையாடல்களுக்கு தயார் நிலையில் எத்தனை பேர் உள்ளனர்? இத்தகைய நிலை க்கு காரணமாணவர்கள் யார்? நாடகம் இருவழி கலை வடிவம் எனில் தோல்விகளுக்கும் வெற்றிகளுக்கும் இரு வழி சார்ந்த வகையில் பொருள் கொள்ளப்படுவதே பொருத்தமான தாக இருக்க வேண்டும். குற்றம் சாட்டுதல்களினால் எதை சாதிக்க முடியும். ஏனைய துறைசார்ந்தவர்களுக்கும் இத்துறை சார்ந்தவர்களுக்கும் இடையிலான வேறு பாடு என்னவாக இருக்கும்? என பல வினாக்கள் எழுவது தவிர்க இயலாது. உரையாடல்களுக்கு நாம் தயார். புத்தாக்க அரங்க இயக்கம் இணையவெளியில் கதையாடப்படுகின்ற கதையாடல்களில் பல விடயங்கள்பேசப்படுகின்றது. வேடதாரியில் எழுதப்படுகின்றன. உரையாடல்கள் நடத்தப்பட்ட போது திறந்த மனநிலையுடன் எத்தனை பேர் பங்கு பற்றினார்கள் என்பதையும் உணர்ந்து செயற்படுதல் அவசியமானதாகும்..

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக