என்னைப் பற்றி

சனி, நவம்பர் 19, 2022

எஸ்.ரி.அருள்குமரன்) நூல் -ஒளவை (நாடகபனுவல்) நாடக ஆசிரியர் இன்குலாப்.
இலக்கியங்கள் மறுவாசிப்பிற்கு உட்படுத்தப்படுகின்றபோது வேறு பரிணாமம் கொள்ளப்படுகின்றன. புரானிய காலப்படைப்புக்களை தற்காலத்தின் நோக்குநிலையில் மறு வாசிப்பிற்கு உட்படுத்தப்பட்ட வகையில் பல படைப்புக்கள் வெளிவந்திருக்கின்றன. நாடக பனுவல்களில் பல மறு வாசிப்பிற்கு உட்படுத்தப்பட்ட வகையில் எழுதப்பட்டுள்ளன. பிரளயனது உபகதை ஏகலைவனை வேறு கோணத்தில் பதிவு செய்கின்றது. இன்குலாப்பின்ஒளவை நாடகப்பிரதி ஒளவையினை முற்போக்கு ரீதியான பாத்திரமாக படைத்துள் ளார் . சங்ககாலத்தில் இருந்து பல காலங்களில் ஒளவை எனும் பெண் கவிஞர்கள் பாடல்களை யார்த்தபோதும் எல்லோரையும் ஒன்றாக்கி பாடல்களையும் யாரே ஒளவை எழுதிதை யாரோ ஒளவைக்குரியதாக பிற்கால சினிமாக்காரர் ஒன்றாக்கி குழப்பநிலையினை ஏற்படுத்தியதை சுட்டிக்காட்டும் நாடகஆசிரியர் தனித்துவமாக ஒளவையினை வேறொரு கோணத்தில் பதிவு செய்கின்றார். இவ்விடயம் பற்றி பின்வருமாறு பதிவு செய்கின்றார். 'ஒளவையைப்பற்றித் தமிழ்ச் சிந்தனையில் திணிக்கப்பட்ட பிரமையை உடைக்கவேண்டும் என்ற நோக்கத்திலேயே நாடகம் எழுதுவது பற்றி சொன்னேன்.வெவ்வேறு கலங்களில் வாழ்ந்ததாக சொல்லப்படும் ஒளவைகளைக்கலவையாக்கி ஒரே ஒளவையாக்கித்தந்தார்கள்.அல்லது வேறுபட்டகாலங்களில் வாழ்ந்த பெண்புலவர்கள் இஒளவைஎன்ற பெயரில் தங்களை அழைத்துக்கொண்டதாகவும் ஆய்வாளர் சுட்டுவர்.இந்தக்கலவையில் சங்ககால ஒளவை தொலைந்து போய்விட்டாள்.ஆடவரின் ஆதிக்கங்களை அறநெறிகளாக ஏற்றுக்கொண்ட பிற்கால ஒளவைகள் முன்னிறுத்தப்பட்டனர். ஒளவை இஒளவையாராக மாற்றப்பட்டாள்.இந்த மாயைகளை உடைத்துத் தொல் ஒளவையை மீட்கப்படவேண்டும் '....... (பக்7) இந்நாடக பனுவலில் உள்ள சில உரையாடல்கள் 1-சிறுமி:உண்டி சுருங்குதல் பெண்டிருக்கழகு ஏனையோர்: உண்டி சுருங்குதல் பெண்டிருக்கழகு 2-சிறுமி : உண்டி சுருங்குதல் ஆண்களுக்கு அழகோ சட்டாம் பிள்ளை:பாடம் படிக்கும் போது கேள்வ எல்லாம் கேட்டக்கூடாது 2-சிறுமி:பெண்களுக்கு ஏன் உண்டி சுருங்கவேனும்? ................................................ சட்டாம்பிள்ளை :எங்களை எதுத்துபேசக்கூடாது.மத்தபடி நாங்கள் சொல்லுறதை திரும்ப சொல்லனும். 2-சிறுமி: கிளிப்பிள்ளை மாதரி (பக்14) ஒளவை : இந்த வீரன் உனக்கு ஒரே மகனா? மூதாட்டி : ஆமாம்...அவன் நான் பெற்ற பிள்ளை...இதோ இவர்கள் அனைவரும் (நடுகற்களை காட்டி) நான்பெறாத பிள்ளைகள்..இவர்களை கருவுற்ற காலத்தில் மண் திண்றோம். இப்பொழுது இவர்களை மண் திண்று கொண்டிருக்கிறது. ஒளவை : அம்மா..உன் ஒரே மகனைக்களப்பலி கொடுத்ததில் உனக்கு வருத்தமில்லையா? மூதாட்டி : மக்களுடைய களச்சாவு எங்களை வருத்தப்படுத்துமோ? (பக் 50) பாணர் 1- என்ன ஒளவை...இந்த வம்பனிடம் என்ன பூசல்? ஒளவை : ஒன்றுமில்லை அதியனைப்பற்றி நான் எப்பொழுதும் பேசுவதால் அதியனை நான் காதலிக்கிறேனாம். பாணர் 1-அப்படி காதலித்தால் தான் என்ன தவறு ஒளவை :காதலிப்பது ஆண் பெண் இயல்புஇஆனால் ஆணிடம் பெண்ணும் இபெண்ணிடம் ஆனும் அன்பு காட்டுவது காதலாகிவிடுமா? (பக் 73) அதியனுக்காய் தொண்டைமானிடம் தூது சென்ற ஒளவையினது ஆளுமையினை புலப்படுத்துவதாக உள்ளது. ஒளவை :நாடு கவரவேண்டும் என்பது ஒன்று தான் அரசுகளுக்கிடையில் ஏற்படும் பகைக்குக் காரணம் இல்லையா? அதியன் : சரியாகச்சொன்னாய் ஒளவை ! தகடூர் குறித்துத் தொண்டைமானுக்கும் புதுபசி ஏற்பட்டிருக்கிறது ஒளவை போரில் மடிவதை மன்னனாகிய பெருமைக்குரியதாக கருதுகின்றேன்.என் மக்கள் இந்த பொருட்டு சாவது என்னை வருத்துகிறது.தொண்டைமானின் பகையால் என் மக்களுக்கு நேரும் கேடு கூடுவது குறித்து கவலைப்படுகின்றேன்...அத்துடன் தொண்டை நாட்டு மக்களுக்கு நேரிடும் துன்பத்தையும் நினைத்துப்பார்க்கின்றேன்.இதைத்தவிர்க நீதான் உதவ வேண்டும். ஒளவை : நான் என்ன செய்யவேண்டும்? அதியன்: தொண்டைமானும் பாட்டிலும் கூத்திலும் விருப்பமுடையவனாம்.அதிலும் உன் பாடல்களில் அளவற்ற ஈடுபாடு உடையவனாம்.அதனால்..அமைதிக்கான என் பொருட்டு அவனிடம் தூது செல்ல வேண்டும். (பக் 85) ஒளவை : பகைவரை குத்துதால் கங்கும் நுனியும் முறிந்து விட்டன....... (பக்89) பெண்ணிய நோக்கில் நாடக ஆசிரியரால் படைக்கப்பட்ட இப்பனுவல் நல்ல பனுவலாக காணப்படுகின்றது.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக