என்னைப் பற்றி

சனி, நவம்பர் 12, 2022

(எஸ்.ரி.அருள்குமரன்) ஆயிஷா ஒருவிஞ்ஞான நூலுக்கு அதன் ஆசிரியை எழுதிய முன்னுரை
ஆசிரியர்.இரா.நடராசன் வெளியீடு- புக்ஸ் ஃபார்சில்ரன் 21ம் அச்சு –செப்ரெம்பர் 2016 ஆயிஷா இந்தப்பெயருக்குள் புதைந்து கிடக்கின்ற துயரங்கள் ஏராளம். கேள்விகளால் உலகை ஆழ்பவர்கள் குழந்தைகள். கேள்விகளில் தான் தங்களது உலகம் எனநினைப்பவர்கள் மாணவர்கள். தேடல் உள்ள உயிர்களுக்கு தினமும் வாழ்வில் பசியிருக்கும் என்றார் கவிஞர் வைரமுத்து தனது பாடலொன்றில். கேள்விகள் பல விடைதிறப்பிற்கான களங்கள். இல்லையேல் மேலும் வினாக்கள் உருவாக்கப்படுவதற்கான வாய்ப்பு திறக்கும்.இதுஒரு தொடரிச்செயற்பாடு. உலகம் எப்போது உருவாகியது எப்போது முடிவுறும் என்கின்ற வினாக்களிற்கு மிக கட்சிதமாக விடைபகிரமுடியாதோ அதுபோன்று குழந்தைகள் உலகத்தினர்கேட்கின்ற கேள்விகளிற்கு விடை பகிரா முடியாதிருக்கின்றது என்பது யதார்த்தம்.ஆனால் அவர்களது கேள்வி கேட்கின்ற தாகத்தினை அதிகரிக்கவேண்டும் அத்தாகமே அவர்களை உயிர்ப்புள்ளவர்களாக வைத்திருக்க உதவும் ஆனால் வெறுமனே மனனமாக்குகின்ற கல்விப்புலச்சூழலிற்குள் இது எவ்வளவு தூரம் சாத்தியம் என்பது கூட எழுவினாவே. ஆயிஷாகுறுநாவலா? சிறுகதையா? எந்த வகுதிக்குள் உட்படுத்துவது? ஆனால் மாற்றத்திற்கான வாயில் திறப்பிற்கான முகவரி. ஆயிஷா இந்தப்பெயர் இன்று பலரது உதடுகளிலும் உச்சரிக்கப்படுகின்றது. இக்கதை ஏற்படுத்துகின்ற அதிர்வலைகள் ஏராளம். கதையைப்படிக்கின்றபோது ஏற்படுகின்ற நுன்துயர் வார்த்தைகளிற்கு அப்பாற்பட்டது. இதை வெறும் கதை என புறம் தள்ளிவிட்டு செல்ல முடியாத மனப்பிரமை ஏற்படுகின்றது. மாற்றத்திற்கான மடைதிறப்பினை ஏற்படுத்தவேண்டியவர்களே மாற்றமற்ற புறச்சூழ்நிலையை ஏற்படுத்துகின்றனர் என்கின்ற வலி நிறை மன உணர்வு மேலெழுகின்றது. இலக்கியம் மாற்றத்திற்கான செயலிஎனும் வகையில் இப்படைப்பு பல மாறுதல்களை கொண்டு வந்திருக்கும் அல்லது கொண்டு வரும்என்கின்ற நம்பிக்கையுடன்... இந்த ஆயிஷா எனும் படைப்பு அறிமுகமாகிய கணபொழுதினை நினைத்துப்பார்க்கின்றேன். பல்கலைக்கழகத்தில் கற்றுக்கொண்டிருந்த காலத்தில் நன்பர் மூலம் இந்த புத்தகம் வாசிப்பதற்கான வாய்ப்பு ஏற்பட்டது. ஒரே மூச்சில் என்று குறிப்பிடுவார்களே அதே போன்று வாங்கிய கனத்திலே புத்கத்தை வைத்துவிடாமல் வாசித்து முடித்த புத்தகம். இதற்கு காரனம் ஆயிஷாவின் துயரா?இ எழுத்தாளரா எழுத்துவன்மையா? பேசப்பட்ட விடயமா? எது என்று அப்போது சொல்ல முடியாத நிலை. ஆனால் அக்கதை பல செய்திகளை கிளறிவிட்டிருந்தது. அதன் அதிர்வலைகள் இன்றுவரை தொடர்கின்றது. அந்த புத்தகத்தை எனது தனிப்பட்ட நூலகத்திற்குசேமிப்பதற்காக தேடியபோது அதை பெற்றுக்கொள்ள முடியவில்லை. ஆயினும் 2017ம் ஆண்டில் பெற்றுக்கொள்ள முடிந்தது. சரி அவ்விடயம் நிற்க விடயத்திற்கு வருகின்றேன். இந்நூல் பற்றி டாக்டர் ஆர்.ராமானுஐம் பின் அட்டையில் பின்வருமாறு குறிப்பிடுகின்றார். 'இந்தக்கதையில் வரும் ஆயிஷh அவ்வளவு சுலபமாக எதையும் நம்பிவிடமாட்டாள். கேள்விகளைக்கேட்டு பூரணமாக விளக்கம் தேடுபவள். ஆயிஷாவின் அறிவுத்தாகம் ஆசிரியர்களுக்கு எரிச்சலை ஊட்டுகிறது. தாகம் இருந்தாலும் கல்வி மறுக்கப்படும் பெண் குழந்தைகள் எத்தனையோ அவர்களுக்கும் இந்தக்கதையில் வரும் ஆசிரியை போன்ற உறுதுணை கிடைக்க வேண்டும். நூலாசிரியர் இவ்வாறு பதிவு செய்கின்றார். 'இத்தனை வருடத்தில் பத்தாம் வகுப்பு அறிவியல் புத்தகத்தில் என்ன பெரிதாக மாறிவிட்டதுஇகாலையில் எழுந்து பல்துலக்குவதைஉற்சாகத்தோடவா செய்கிறோம்?எப்போதாவது புதிய பிரஷ;.அல்லதுபேஸ்ட்! இங்கே அதுவும் இல்லை.அதே ஓம்ஸ் விதி; ஒரோ சொல் பிரிதல் புதிதாகத்தெரிந்துகொள்ளும் ஆர்வமற்று ஓர் எந்திரமாய் கிரீச்சிட்டுக்கொண்டிருந்த என்னை என்முகத்தில் கேள்விகளால் ஓங்கி அறைந்தாள் ஆயிஷh.'( பக் 5) என குறிப்பிடுகின்றார் வகுப்பறையில் கற்றல்செயற்பாட்டினை வழமை போன்று மேற்கொண்ட ஆசிரியைக்குஆயிஷhவின் கேள்விக்கனைகள் வேறொரு பரிமானத்தை ஏற்படுகின்றது. வகுப்பறையில் வினவப்பட்ட வினாவின் தொடர்ச்சியாக கதையில் நகர்கின்ற போது... ' 'முடிவுறா எண்ணிக்கையிலான காந்தங்களை ஒரே நேர்கோட்டில் வெச்சா..எதிர் துருவங்களை கவரும் அதன் இயல்பு என்ன ஆகும்.' '..........' 'ஒரு காந்தத்தின் வடக்கு மறு காந்தத்தின் தெற்கை இழுக்கும்.ஆனால் இழுபடும் காந்தத்தின் வடக்கே அடுத்துள்ள காந்தம் ஏற்கனவே இழுத்துகிட்டிருக்கும் இல்லையா..மிஸ்?' 'ஆமா அதுக்கென்னன்ற?' 'என் சந்தேகமே அங்கதான் இருக்கு.எல்லாக்காந்தங்களின் கவர்திறனும் உன்றெனக்கொண்டால் அவை ஒட்டிக்கொள்ளத்தான் வாய்பே இல்லையே..எப்புறமும் நகராமல் அப்படியே தானே இருக்கும்' '................' 'ஏன் நாம இந்தப்பிரபஞ்சம் முடிவுறா எண்ணிக்கையிலான காந்தங்களை நேர்கோட்டில் வைத்ததுபோல் அமைக்கப்பட்டதா வெச்சிக்கக்கூடாது? அந்தக்கோணத்தில் பூமிங்கற காந்தத்த ஆராயலாம் இல்லையா? பதின்மூன்று வருடப்பள்ளி வாழ்கை பின் மூன்றாண்டு இயற்பியல்-பல்கலைக்கழகத்தில் இப்படியொருகேள்விளை நான் கேட்டுக்கொண்டதாக நினைவில்லை.'எங்கோ படித்ததாக ஞாபகம் என்றேன்.ஏதாவது சொல்லவேண்டுமே! 'வுhந வுசரவா ழுக ஆயபநெவள வெட்ரோட் ஸ்ரூடண்ட கிங்லீங் எழுதியது அருமையா இருக்கு.. படிக்கிறீங்களா மிஸ்..' 'இந்த புத்தகமெல்லாம் நீ படிக்கிறியா?' அவ்வளவு தான் -என் ஆயிஷh கிடைத்துவிட்டாள்.அந்த அதிர்ச்சியில் இருந்து இன்றுவரை மீள முடியவில்லை.அறை வாங்கியவளைப்போல புத்தகத்தை வாங்கிக் கொண்டு சரசரவெண ஆசிரியர் அறைக்கு நடந்தேன்.' (பக் 6-8) கல்விமுறைமையில் ஆசிரியர்களது நடத்தை முறை வன்முறையாக மாறிச்செல்வதனை வேதனையுடன் பதிவசெய்கின்றார் இவர் இதற்கு அடிப்படையாக பின்வரும் கூற்றினை குறிப்பிடலாம் 'கடவுளே எங்கள் குழந்தைகளை ஆசிரியரிடமிருந்து காப்பாற்றும்' (பக் 12) 'ஆயிஷாவின் உறவில் தான் நான் உனர ஆரம்பித்தேன்.எவ்வளவுதூரம் விஞ்ஞானமற்ற முறையில் நாம் நம் குழந்தைகளுக்கு விஞ்ஞானம் போதிக்கிறோம்என்று. நாம் எங்கே குழந்தைகளுக்கு ஒரு குறிப்பிட்டவிஷயத்தை உணர்ந்து கேள்வி கேட்க அவகாசம் தருகிறோம்? அவர்கள் கேட்கத்தொடங்கும் முன்னரே நாமாக முன்தயாரிக்கப்பட்ட கேள்விகளால் அவர்களை மூழ்கடித்து விடுகின்றோம்.அறிவும் வளருவதில்லை.பள்ளியில் ஆசிரியர் அதிகம் சொல்வது எதை? கையைக்கட்டு...வாயைப்பொத்து...' (பக் 17) '... கடவுளே ...அவரவர் அறிவைப்பயன்படுத்த அனுமதியுங்களேன்...'(பக்19) ..... ஆட்டோவில் ஆஸ்பத்திரிக்கு போவதற்குள் என் ஆயிஷh பிரிந்துவிட்டாள்.எப்பேர்பட்ட ஆயிஷh.நான் தாங்கிக்கொள்ள முடியாதவளாய் குழந்தைமீது பரண்டு அழுதேன்.இனி என்ன? உங்களுக்கு திருப்ப்தி தானே மிருகங்களே..என் ஆயிஷhவைஇஒப்பற்ற அந்த அறிவுக்கொழுந்தைக்கொன்று தீர்த்துவிட்டீர்களே.போங்கள்இஇனி உங்கள் வகுப்புக்கள் எளிமையானவை...அறிவுக்கு அங்கே வேலை இல்லை.' (பக் 22) இந்நாவல் எழுதுவதற்கான அடிப்படையாக திண்டிவனத்துக்கு அருகில் ஒரு கல்லூரி மாணவன் பாம்புக்கடிக்கு மருந்துகண்டு பிடிக்கத் தன் உடலையே பரிசோதனைச்சாலையாக மாற்றிக்கொண்டு மரணத்தை தழுவினான். இந்த உண்மைசம்பவத்தை அடிப்படையாகக்கொண்டு ஆயிஷா நாவலை இவர் எழுதியுள்ளார். 1985ம் அண்டு எழுதப்பட்டு பல வருடங்களாக பலராலும் ஏற்றுக்கொள்ளப்படாது இருந்த இந்நாவல் 1995 ம்ஆண்டு கனையாளிகுறுநாவல் போட்டியில்இரா.முருகன்இசுஐhத்தா ஆகியோர் நடுவர்களாக இருந்து கொண்டு தெரிவுசெய்யப்பட்டதாக அறியமுடிகின்றது. இன்று லட்சம்பிரதிகளை தாண்டி விற்பனையிலும் சாதனை படைத்து வருகின்றது. ஆயிஷாவை வெறுமனே கதையாகக்கொள்ளாது கற்றலில் ஆர்வம் இருந்தும் கல்விமுறைமையினாலும் சில ஆசிரியர்களது நடத்தையினாலும் கற்றலில் இருந்து தூரப்படுத்தப்பட்ட ஒவ்வொரு மாணவர்களது வலிநிறை வாழ்வியலில் ஆயிஷh இருப்பாள் என்பது துயர்மிகு கதை.....

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக