என்னைப் பற்றி

ஞாயிறு, நவம்பர் 06, 2022

நூலின் பெயர்- செகவ் வாழ்கிறார் நூலாசிரியர்- எஸ்.ராமகிருஷனன் வெளியீடு – உயிர்மை பதிப்பகம் கலைப்படைப்பாளிகளிற்குமரணம்இல்லை.அவர்களது உயிர் உடலில் இருந்து பிரிந்தாலும் உணர்வுகளில் வாழ்ந்துகொண்டிருப்பார்கள். அவர்களது படைப்புக்களின் ஊடாக அவர்கள் எப்போதும் ஜீவிக்கப்படுவார்கள். எழுத்தாளர்களது எழுத்தின் உயிர்பு அவர்களை தலைமுறை தாண்டி இருப்புக்கொள்ளவைக்கின்றது. அவர்கள் எழுத்தாக்கத்தில் பதிவுசெய்தவிடயங்கள் ,சமூகநேசிப்பு, சமூகம் எவ்வாறு எழுர்ச்சியடைந்து மாற்றமுறவேண்டும்,சமூகத்தில் புரையோடிப்போயுள்ள பிரச்சினைகள் எவ்வாறு களையப்படவேண்டும் என்கின்ற ஏக்கங்கள் , தமது படைப்பில் இழையோட விட்டிருப்பதன் ஊடாக அவர்கள் காலம் ,தேசம்கடந்து வாழ்ந்துகொண்டிருப்பார்கள். இவ்வாறு காலம் கடந்து மக்கள் மனங்களில் சிம்மானம் போட்டமர்ந்திருக்கின்ற எழுத்தாளராகஅன்ரன்செகவ் விளங்குகின்றர். இவர் சிறுகதையாசிரியர்,நாவலாசியார்,நாடகஆசிரியர்,மருத்துவர், தனது எழுத்துக்களின் ஊடே சமூகமாற்றத்தை நேசித்தவர். ரஷ;யாவில் பிறந்த இவர் உலகெங்கும் கொண்டாடப்படுகின்ற எழுத்தாளன். இவர் எழுத்துக்களின் ஊடே மெல்லிதான துயரம் அழுத்திச்செல்வதனை வாசிப்பவர்கள் புரிந்துகொள்ள முடியும். யாழ்.பல்கலைக்கழகத்தில் படிக்கின்ற காலம் முதலே செகவ் மீது இனம்புரியாத ஈர்ப்பு இருந்தது. .காரணம்தெரிவதில்லை.அவரது சிறுகதைகள்,நாவல்களை விரும்பி எடுத்துப்படிப்பதுண்டு. அவரது கதைகளில்இழையோடிப்போயுள்ள உளவியல் ரீதியான பார்வை ஏதோ ஒரு வகையில் ஈப்பினை ஏற்படுத்தியிருந்தது. அவர் எழுதிய செறிப்பழத்தோட்டம் நாடகம் மிக அற்புதமான படைப்பு. அவர் எழுதிய பச்சோத்தி எனும் சிறு கதையினை பல தடவை வாசித்திருக்கின்றேன். அக்கதை ஏற்படுத்திய தாக்கத்தினால் நாடகமாக்கி பலதடவைகள் மேடையேற்றியுள்ளேன். இவ்வாறு ஆதர்சனமான படைப்பாளி பற்றிய நூலினை வாசிப்பதற்கான வாய்ப்பு கிடைக்கின்றபோது அதை எப்படி சொல்லுவது. அது ஆணந்தம்.பேரானந்தம். செகவ் வாழ்கிறார் எனும் நூலினை தேர்ந்த எழுத்தாளர் எஸ்.ராமகிருஷ;னன் எழுதியுள்ளார். இவர் பற்றி அறிமுகங்களே தேவையில்லை என்கின்றளவிற்கு மிக காத்திரமான பல நூல்களை எழுதியுள்ளார். நாவல்,சிறுகதை ,நாடகம்,சினிமா என இவர் தொட்டுப்பார்க்காத துறைகளே இல்லை எனலாம். அவ்வளவு தூரம் மிக நேர்த்தியாக தனது எழுத்தின் வன்மை மூலம் இலக்கியஉலகிற்கு கனதியான பங்களிப்பினைநல்கிக்கொண்டிருப்பவர். .அவரது எழுத்தில் செகவ் வாழ்கிறார் புத்தக்தினை படிக்கின்ற போது செகவ் இன்னொரு பரினாமத்தில் தெரிகின்றார். பின் அட்டையில் இப்படியொரு குறிப்புள்ளது. 'பெண்கள் துணியில் பூவேலைகளை செய்வது போல நுட்பமான அழகுணர்ச்சியுடன், தனித்துவத்துடன் சிறுகதைகளை எழுதியவர் ஆண்டன் செகவ் என்று ரய இலக்கியத்தின் சிகரமான லியோடால்ஸ்டாய் வியந்து கூறியிருக்கிறார்.கார்க்கியும் இவன்புனினும்,குப்ரினும்,செகாவை ஷேக்ஸ்பியருக்கு நிகரான படைப்பாளியாகக் கூறுகிறார்கள்.உலகெங்கும் சிறுகதை எழுதுபவர்கள் செகாவை தங்களின் ஆசானாக கருதுகிறார்கள். இந்நூல் செகாவின் வாழ்க்கையை ,அவரது படைப்புலகை ,அவரது நண்பர்களை ,சக எழுத்தாளர்களை விரிவாக அறிமுகம் செய்கின்றது.' இந்நூலில் செகவின் வாழ்கை வரலாற்றினை மிக சுவாரசியமான முறையில் பதிவு செய்துள்ளார் நூலாசிரியர். '1860 ஜனவரி 29 (பழைய கலன்டர் முறைப்படி ஜனவரி 17) அன்று தெற்கு ரஷ;யாவின் துறைமுகமான டாஹன்ராக்கில் செகவ் பிறந்தார்'.(பக் 7) 'உலகெங்கும் சிறுகதைஎழுதுபவர்கள் செகாவைத் தங்களின் ஆசானாகக்கருதுகிறார்கள்,புதிதாக சிறுகதை எழுத விரும்புபவர்களுக்கு அவர் சொல்லும்ஆலோசனைகள் முக்கியமானவை. உங்களைசுற்றிய வாழ்க்கையை உன்னிப்பாக பாருங்கள். அதில்உங்களுக்கான கதாபாத்திரம் கிடைக்கக்கூடும். அதிகப்படியான வர்னணை,தகவல்கள்,உரையாடல்கள், கதையின் இயல்பைக்கெடுத்துவிடும் நம்பும்படியான கதாபாத்திரங்கள்,எளிய,நேரடியான விவரிப்புக்கள்,உணர்வுகளை துல்லியமாக விவரிக்கும் விதம்.,தனித்துவமான கதைசொல்லும் முறை இவையே சிறந்த கதையை உருவாக்குகின்றன. கதையில் ஒரு துப்பாக்கி இடம்பெற்றால் கதை முடிவதற்குள் அதுவெடித்தாக வேண்டும் என்பது செகவ் சொன்ன அறிவுரைகளில் முக்கியமானது.அதன்பொருள் தேவையற்ற எதையும்கதையில் எழுத வேண்டாம் என்பதே' (பக்9) 13 பகுதிகளில் செகாவினுடைய வாழ்வை இந்நூலினூடாக நூலாசிரியர் பேசுகின்றார். அவ்பிரிப்பு வருமாறு. 1.என்பெயர்செகவ்.2.ஐந்துரூபில்காதலி3.தண்டனைத்தீவு,4.கலாரா காலத்தில் செகாவ், 5.செர்ரி தோட்டங்கள் அழிவதில்லை,6.டால்ஸ்டாயும் செகாவும்,7.செகாவின் காதலிகள்,8.செகாவின் தோழர்கள்,9.செகாவின் கடைசி தினங்கள்,10.செகாவின் கதையுலகம்,11.கார்வரும் செகாவும்,12.திரையில் ஒளிர்ந்த செகாவ்,13.செகாவ்சில விமர்சனங்கள் ஆகியனவே இப்பிரிப்புக்கள். 'சிறுகதைக்கலையில் தனக்கென தனித்துவமான கதை சொல்லும் முறையை கொண்டிருந்த செகாவ்,நாடககலையிலும் ஒரு புதிய போக்கினை உருவாக்கினார்.அவரது சம்பிரதாயமான நாடகங்களைப்போல மிகைஉணர்ச்சியும் திருப்பங்களுடன் கூடிய கதைகளும் கொண்டிருக்கவில்லை.செகாவின் நாடகங்களில்கதைகுறைவு என விமர்சகர்கள் கூறுமளவு அது நிகழ்வுகளை மையப்படுத்தி அங்கதச்சுவையோடு உருவாக்கப்பட்டிருந்தது. நாடகத்தில் ஒற்றை கதாநாயகன் கதாநாயகி கிடையாது.அது மாறுபட்ட கதாபாத்திரங்களின் ஊடாட்டமாக நிகழ்வெளியாக அமைக்கப்பட்டிருந்தது. ஆகவே,நாடகத்தின் எல்லா பாத்திரங்களும் சமமாகஉருவாக்கப்பட்டிருந்தன.' பக்(57-58) 'செகாவின் மரணம் 1904 இல் நிகழ்ந்தது. ரஷ;யாவை அவரைப்போல்நேசித்தவர் எவருமில்லை.ஆனால் செகாவின்மரணம் ரஷ;யாவில் நிகழவில்லை. ஜெர்மனியின்பேடன்வீலர் என்ற சுகவாசஸ்தலத்தில் அவர் இறந்து போனார் காசநோய் முற்றியநிலையில் 1904 ஆம் ஜெர்மனிக்கு சிகிச்சை செய்துகொள்வதற்காக செகவ் புறப்பட்டார். அந்த யோசனையை சகோதரி மரியா ஏற்றுக்கொள்ளவில்லை.ஆனாலும் செகாவ் தனது மரணத்தை தேடி புறப்பட்டார். இந்த பணயத்தில் அவரோடு உடனிருந்தவர் மணைவிஒல்கா'(பக் 99-100) அவர் கண்ட பல கனவுகளில் இதுவும் ஒன்று.. 'இந்த இடத்தில் ஒரு கல்வி நிலையம் அமைக்க விரும்புகின்றேன் அங்கே ரஷ;யா முழுவதும் உள்ள ஆசிரியர்களை அழைத்து வந்து தங்கவைத்து அவர்களுக்கு கல்வி குறித்த ஆழ்ந்த புரிதலையும் முக்கியத்துவத்தையும் சொல்ல ஆசைப்படுகின்றேன். இன்றுள்ள ஆசிரியர்களை ஒரு நோய்பற்றியிருக்கிறது.அது கல்வி குறித்த அலட்சியம் அதுகளைந்து எறியப்படவேண்டிய நோய்.ஆகவே ஆசிரியர்கள் இங்கு தங்கிக்கொண்டு நிறைய படிக்க வேண்டும் விவாதிக்க வேண்டும். அத்துடன் இசை,ஓவியம்,பாடல்,இலக்கியம் என்று தனித்திறமைகளை வளர்த்துக்கொள்ளவேண்டும் அருகில் உள்ள நிலத்தில் விவசாயம் செய்துநேரடி அனுபவம் பெற்றுக்கொள்ளவேண்டும். ஒருவன் ஆசிரியராக பணியாற்றுவது என்றால் சகல விஷயங்களிலும் நேரடியான அனுபவம் உள்ளவன். அது குறித்து ஆழ்ந்துசிந்திப்பவன் என்றுதான்பொருள்.ஆகவே ஆசிரியர்கள் தங்களை தொடர்ந்து மேம்படுத்திக்கொள்ளவேண்டும்.அதற்கென தனியான முகாம்கள் அமைக்கப்படுவது அவசியம். ஒவ்வொரு ஆசிரியரும் தன்னை ஒரு கலைஞனாகவே மதிக்கவேண்டும்.எப்படி ஒரு பாடகன் தன்னுடைய பாடும் திறனைத்தினமும் வளர்த்துக்கொள்வானோ அப்படி கற்றுத்தருவதை நுட்பமாக வளர்த்தெடுக்கவேண்டும். அதுபோலவே பொதுமக்களிடம் ஆசிரியர்கள் மீது எப்போதுமே இளக்காரம்,கேலியே உள்ளது.அதுமாறவேண்டும். மக்கள் ஆசிரியர்களை மதிக்கவேண்டும்.ஒரு ஊருக்குள் வரும் கான்ஸ்டபிளுக்குக்கிடைக்கும் மரியாதை ஆசிரியர்களுக்கு கிடைப்பதில்லை.போலிஸ்காரன் குற்றவாளிகளை பிடிக்க வருகின்றான். அவனை நாம் வரவேற்று மரியாதை செய்கின்றோம்.ஆசிரியர்கள் நம் குழந்தைகளின் எதிர்காலத்தை வளர்த்து எடுக்கமுயற்சிக்கின்றார். அவரை நாம்மதிப்பதேயில்லை. அதுமாற வேண்டும். முதலில் ஆசிரியர்கள் மதிக்கப்படவேண்டும்குறிப்பாக ஆசிரியர்களுக்கு எதிராக யாரும் கை நீட்டி பேசவோ,பரிகாசம் செய்யவோ கூடாது.தன்னுடைய பணி இடத்தில் ஆசிரியர் சக ஆசிரியர்களுடன் இணக்கமாகப்பழகவேண்டும்.எப்படி காவல் நிலையத்தை கண்டவுடன் எவ்வளவு பெரிய ரௌடியும் அடங்கி ஒடுங்கி அமைதியாக போகிறானோ அப்படி பள்ளியை கண்டதும் அது அறிவு நிலையம் எண்று மதித்து நடக்கவேண்டும். ஒரு கிராம பள்ளியில் பணிபுரியும் ஆசிரியர் அந்த கிராமத்தின் வளர்ச்சி தன் கையில் ஒப்படைக்கப்பட்டிருக்கிறது என்ற பொறுப்புணர்ச்சி கொள்ளவேண்டும்.மாறாக,வகுப்பறை மட்டுமே தனது உலகம் என்று ஒதுங்கிக்கொள்ளக்கூடாது அதுபோலவே படிக்காத கிராமத்து மக்களை ஆசிரியர் ஒருபோதும் குறைவாக மதிக்கக்கூடாது. கேலி செய்யவோ,படிக்காதவர் என்று சுட்டிக்காட்டிபேதமாக நடத்தவோ கூடாது ஆசிரியர்களின் பணி என்பது ஒருவகையில்போர் வீரணை விடவும் சவால் நிறைந்தது.ஆகவே அவர்களின் அன்றாடத்தேவைகள் குறிப்பாக குடும்பத்திற்கான அடிப்படைத்தேவைகளை ,அரசு முழுமையாக ஏற்றுக்கொள்ளவேண்டும் பணம் சம்பாதிப்பதற்காக மட்டுமே வேலை செய்கின்றோம் என்று ஆசிரியர் உணரும்போது தான் கல்விநலிவடையத்துவங்குகின்றது.அது மாற்றப்படவேண்டும்.பள்ளியில் சேர்ந்துபடிக்க இயலாத குழந்தைகளுக்குப் பள்ளிக்கு வெளியில் கற்றுத்தருவதற்கு ஆசிரியர்கள் முன்வரவேண்டும். அலங்காரமான ஆடைகளை அணிந்து பகட்டுத்தனமாக ஆசிரியர்கள் நடந்துகொள்ளக்கூடாது.முறையான வெளிச்சம்,நல்ல குடிநீர்,காற்றோட்டம் உள்ள வகுப்பறை அடிப்படையானபுத்தகங்கள் ஒவ்வொரு பள்ளிக்கும் அவசியம்.ஆசிரியர்கள்நல்ல உடல்ஆரோக்கியத்துடன்இருக்க வேண்டும் கிராமப்பள்ளி ஆசிரியர்களை நகரப்பள்ளியில் பணியாற்றும் ஆசிரியர்கள் வந்து பார்வையிடுவது கிடையாது.இது மாற்றப்படவேண்டும்.கிராமத்து ஆசிரியர்கள் நகரத்திற்கும் மாநகரில் உள்ள ஆசிரியர் சிறிய கிராம பள்ளிக்கும் வருகை தந்து கற்றுத்தரும் முறைமைகளைப் பகிர்ந்து கொள்ளவேண்டும்' என்று மாபெரும்கனவுத்திட்டங்களை அடுக்கிக்கொண்டு போனார் செகவ் இதை எல்வாம் கேட்ட கார்க்கிஇவை எல்லாம் எப்படி சாத்தியமாகும் என்பது போல சிரிக்க செகவ் அதை புரிந்து கொண்டு 'இவை எல்லாம் என்னுடைய கனவுகள்.வெறும் கனவுகள். இவை நடந்தால் அன்றி ரஷ;யா முன்னேற முடியாது.முறையான ஆசிரியர்கள் இல்லாத சமூகம் மேம்படவேமுடியாது.ஒருவேளை என்காலத்திற்குள் இதில் சில மாற்றங்களாவது நடந்தால்சந்தேஷப்படுவேன்.இல்லாவிட்டால் ஏங்கி ஏங்கியே சாக வேண்டியதுதான்.வழியில் தென்படும் ஆசிரியர்களைக்கானும்போது நான் மிகுந்தவெட்கப்படுகின்றேன்.காரணம் அவர்களில் எவரும் உரிய முறையில் பேசவோ ,எழுதவோ அறிந்திருக்கவில்லை. ஆசிரியர்என்ற தோற்றத்திற்குகூட அவர்கள் முக்கியத்துவம் தருவதில்லை ,அதை விடவும் மக்களின் மேம்பாடு குறித்து ஒருபோதும்சிந்திப்பதேயில்லை. தன்னை சுற்றிய மனிதர்களின் மீது அக்கறை கொள்ளாதவன் எப்படி ஆசிரியராகப்பணியாற்றி முடியும்? ரஷயா மிகவும் பின்தங்கிப்போயிருக்கிறது.இங்கே கல்விக்கு அதிக முக்கியத்துவம் கிடைக்கவேயில்லை.பிரெஞ்சுதேசம்உலகம் முழுவதும்பெயர்பெற்றிருப்பதற்கு காரணம் அங்குள்ள கல்வி முறையும் அதனால்உருவான கலாச்சார சூழலும்தான்.அதை நாம் பெற்றாக வேண்டும்இல்லாவிட்டால் அடித்தளம் இல்லாத கட்டிடம் போலஇந்த சமூகம் நொறுங்கி விழுந்துவிடும்' என்று சொல்லிவிட்டுசெகவ்'இப்படியாக நான் புலம்பிக்கொண்டிருக்கிறேன்.இதையார் எடுத்துக்கொள்ளப்போகிறார்கள்.வாருங்கள் தேநீர் அருந்தலாம்' என்று சொல்லி கார்க்கியை தன்னோடு அழைத்துக்கொண்டு சென்றார் செகவ். கல்வி குறித்த செகாவின் ஆதங்கம் அவரது சகோதரி பள்ளியைத்துவங்கிய போது சற்று தணிந்தது.தன்னால் முடிந்த பொருளுதவிகளை அதற்காகத்திரட்டிதந்தார் செகவ்' (பக்84-86) இந்நூலின் ஊடாக செகவ்வினுடைய வாழ்வை புரிந்துகொள்ளமுடிகின்றது.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக