வியாழன், ஏப்ரல் 03, 2025
(எஸ்.ரி.அருள்குமரன்)
கலை என்பது மனித உணர்வுகளின் வெளிப்பாடு. கலைசார்ந்த செயற்ப்பாடுகள் மனிதர்களை புடம் போடுவதற்கும் அவர்களில் இயங்கியலுக்குமான வாய்ப்புக்களினை ஏற்ப்படுத்துகின்றன.
கலைச்செயற்ப்பாடுகளிற்கான களவெளிகள் தானாக உருவாவதில்லை மாறாக கலைஞர்கள்தமது செயல்தளத்திற்கும் கலைகளினது பெறுமானத்திற்கும் ஏற்றவகையில் கலை வெளிகளினை சிருஸ்டிக்கின்றனர்
கலைகளில் அரங்க கலைகளிற்கான வகிபங்குகள் காத்திரமானவை.
சமூகப்பிரச்சினைகளினை பேசுவதிலும் மக்களுடன் இனைந்தவகையில் நேரிடையாக பகிர்ந்து கொள்வதிலும் முதன்மை பெறுகின்றன.
நாடகக் கலை தனித்துவமான பண்புகளினை கொண்டதாகும்.மனிதநாகரிக வளர்ச்சியின் ஆரம்ப புள்ளி முதல் இக்கலையின் வகிபங்கு காத்திரமானதாக விளங்குகின்றது.
மனிதர்கள் தமது உணர்வியலினை பகிர்தலுக்கும் அதனூடான கருத்து பகிர்விற்கும் உறவுகளின் தகவமைப்பிற்கும் இக்கலைகள் பங்காற்றின.
இக்கலையின் தொடர்நிலை இயங்குதல் காலமாறுதலுக்கு ஏற்ற வகையில் புதிய வடிவங்களினை தரநிர்ணயம் செய்தன. அவ்வடிவங்கள் தமக்கான தனித்துவத்துடனும் சமூகத்தில் பல் பரிமாணத்துடன் வெளிக்கிளம்பின.
இதன் முக்கியத்துவம் காலமாறுதலில் அரங்கு என்பது வெறுமனே உணர்ச்சிக்குரியது என்பதினை தாண்டி அறிவு பூர்வமான விடயமாக பார்க்கப்படலாயிற்று.
அரங்கின் பேசுபொருளில் சமூகத்தின் தேவை நிலை முதன்மையானபங்காற்றுகின்றது என்பது எதார்த்தமாகும். அவற்றினை பதிவுகளாக்க வேண்டும் எனும் தளத்தில் அரங்கவியலாளர்கள் இயங்குகின்றனர்.
சமூகத்தில் காணப்படுகின்ற பிரச்சினைகளினை அறிவியல் பூர்வமகவும் யதார்த்த பூர்வமாகவும் பதிவு செய்ய முனைந்தனர்.
அப்பகைப்புலத்தில் பிரச்சினைகள் என்ன அப்பிரச்சினைகளினை தீர்ப்பதற்கான வழிவகைகள் என்ன அத்தீர்வுகளின் ஊடாக சமூகவியல் பெறுமானத்தில் எத்தகைய மாறுதல்களினை கொண்டுவரமுடியும். என்பன தொடர்பாக நாடகப்படைப்பாளிகள் சிந்தித்தனர்.
அச்சிந்தனைப்பெறுமானம் சமூகவியலில் தாக்கத்தினை ஏற்படுத்தின.
சமூகம் காலம்மாற்றமடையும் பேது அம்மாற்றங்களுக்கு ஏற்ற வகையில் அரங்க வடிவங்களும் தரநிர்ணயம் செய்யப்படுகின்றன. அத்தர நிர்ணயம் என்பது எத்தகையவற்றினை அரங்கிலே பேசமுனைகின்றோமோ அதனை அடிப்படையாகக்கொண்டே அவ்வடிவங்கள் நிர்ணயம் செய்யப்படும்.
நாடகங்களில் எவை முதன்மைப்டுத்தப்படுகி;ன்றனவோ அவற்றினை அடிப்படையாகக் கொண்டு அவ்வடிவங்களில் நாடகங்கள் பேசப்படுவதுண்டு.
அரங்க வடிவங்களில் சிறுவர்களிற்கான அரங்குகள் முதன்மை பெற வேண்டியது காலத்தின் தேவையாக உள்ளது.
இன்றைய சிறுவர்களே எதிர்காலத்தின் தலைவர்கள் அவர்கள் இளவயதில் பெற்றுக்கொள்கின்ற அறிவோடு இணைந்த அனுபவமே அவர்களது
எதிர்கால வாழ்வியலுக்கான அடித்தளமாகின்றன.
அவ்அடித்தளம் சரியானதாக இடப்படலுக்கு கலைகளது துணைமுதன்மையானதாக விளங்குகின்றது.
அவற்றிலும் இயங்கு கலைகளுடனான ஊடாட்டம் அவர்களது ஆளுமைவெளிப்பாட்டிற்கான களவெளிகளினை சிருஷ்டித்துவிடுகின்றன.
அத்தகைய சுதந்திர வெளிகள் அவர்களது சுதந்திரமான வாழ்வியல் தகவமைப்பிற்கான செயற்பாடுகளாகின்றன.
சிறுவர்களுக்கான சுயமுனைப்பு செயற்பபாடுகளும் அவர்களுக்கான கருத்தாடல் வெளிகளும் தம்மை வெளிப்படுத்திக் கொள்வதற்கான வெளிகளும் உருசமைக்கப்படுகின்ற போதே ஆரோக்கியமான சமூகம் மேற்கிளம்பும்.
சிறுவர்களது மனோதிடம் மேம்பாட்டிற்கானதும் வாழ்வியல் மேம்பாட்டிற்கான செயற்பாடுகள் முன்னெடுக்கப்பட வேண்டியது காலத்தின்தேவையாகும். காரணம் யாதெனில் அவர்களது மனப்பதிவுகளில் உயரிய சிந்தனைகளினையும் அச் சிந்தனையின் ஊடாக தன்னம்பிக்கையினையும் ஏற்படுத்துவது அவசியமானதாகும் அத்தகைய சிந்தனை சார் மாற்றத்தினை வெளிக்கொணர்வதற்கு கலையியல் சார் செயற்பாடுகள் துனைசெய்யவேண்டும்.
இவ்வடிவங்களின் ஊடுபொருள்கள் பேசு பொருளின் ஊடாக சமூகவியல் மாற்றத்தினையும் ஏற்படுத்துவது ஆகும்.
இவ்வகையில் சிறுவர்கள் எதிர்கொள்கின்ற துஸ்பிரயோகங்கள்,அவர்களிற்கு இழைக்கப்படுகின்ற கொடுவன்முறைகள், கல்வியெனும் போர்வையில் அடைகின்ற துயரங்கள் என்பவற்றினை காட்சிப்படிமங்களாக புரிதல்களும் வெளிப்படுத்தப்படவேண்டும்.
பதினெட்டு வயதிற்க்குட்பட்டவர்களினை சிறுவர்கள் எனும் வகுதிக்குள் உட்படுத்துகின்றனர்கள். அவ்வகையில் பாடசாலைப்பருத்தினை உடையவார்கள் இவ்வகுதிக்குள் வருகின்றனர். அவர்களுக்கான சரியான வழிகாட்டுதல்களும் நல்லன தீயனவற்றை பகுத்தாராய்வதற்கான வழிவகைகள் மேற்கொள்ளப்பட வேண்டும்
சிறுவர்களுக்கான அரங்க செயற்பாடு எனும் போது அவர்களுக்கான கற்பனையை தூண்டும் வகையில் உளவியல் சார் அனுகுமுறையுடன் அவர்களது கற்பனையை தூண்டக்கூடியவகையிலும் உருசமைக்கப்படவேண்டும்.
நாடகத்தின் கருப்பொருள் முதன்மையானதாக விளங்குகின்றது. கருப்பொருளானது அவர்களிடம் காவிச்செல்லவுள்ள செய்தியாகும்.இச்செய்தியே அவர்களது மனதில் பதிகைகளாக மாறப்போகின்றன. உளவியல்சார்ந்த அனுகுமுறையுடனும் அவர்களது தன்னம்பிக்கையினை வளர்த்துக்கொள்வதினை அடிப்படையாகக்கொண்டதாகவும். அமையவேண்டும். பெரும்பாலான நாடகங்கள் சிறுவர்களினை கவரக்கூடியவகையில் விலங்குகள்இ பறவைகள் என்பனவற்றினை பாத்திரங்களாக்கி அவர்களுக்குரிய வகையில் விநோதப்பண்புகளினை கொண்டு வெளிப்படுத்தப்படுவதினை அவதாணிக்கலாம். ஆயினும் விலங்குகள் பறவைகள் எனும் பாத்திரங்களினை தாண்டிய வகையிலும் சமூகத்தின் பெரியார்கள் அவர்களது நற்பண்புகளினை வெளிப்படுத்தும் வகையிலும் மாணவர்களது சிந்தனைக்கிளறல்களுக்காணவகையிலும் கதைக்கருக்கள் சிருஷ்டிக்கப்படவேண்டும்
ஆற்றுகைகள் எனும் போது குரூரம்இவன்முறை இபழிவாங்கல் போன்ற எண்ணக்கருவினைஉடையதாக காட்சிகள் அமைக்கப்படுவதில்லை காரணம் அவர்களது சிறுவயதில் ஏற்ப்படும் மனவியல்பாதிப்புக்களே அவர்களது நடத்தைகளினை நிர்ணயம்செய்யும் என்பதினாலாகும்.
இத்தகைய சிறுர் அரங்குகளில் சிறுவர்களினை ஈடுபடுத்துவதின் மூலம் பல்வேறு மாற்றங்கள் ஏற்படுவதினை அவதாணிக்கலாம். அரங்க செயற்பாடுகளில் ஈடுபடுவதன் மூலம் அவர்களிடையே ஆளுமைவெளிப்படுத்தல்கள் இ தலைமைத்துவப்பண்பு இ கற்பனாசக்திவிருத்தியடைதல் எதையும் கூர்ந்து நோக்கும் திறன் விருத்தியடைதல் இ விட்டுக்கொடுப்புக்கள் இ சகோதரத்துவம் இ சுயதேடல் இ சுயமுனைப்பு இ போன்ற பண்புகளினை மாணவர்கள் உள்ளீர்த்து கொள்வதற்கு இவ் அரங்க செயற்பாடுகள் துணை செய்கின்றன.
சிறுவர் தலை முறை உளவியல் ரீதியாக பாதிக்கப்பட்டால் அதன் எதிர்கால தலை முறையானது செயல்முனைப்பற்ற வகையிலும் சுயதேடல் அற்;ற தலைமுறையாகவுமே முகிழ்ந்தெழும். அத்தகைய சூழ்நிலை உருவாகும் போது ஆரோக்கியமாற்ற சமூகம் உருவாவதினை தவிர்கமுடியாது போகும்.
அவர்களது கனவுகளினை உருவாக்குவதற்கும் அவர்களது சுய முனைப்பிற்கானவகையில் அவர்களுக்கு விழிப்பூட்டல் சர்ந்த செயற்பாடுகளுடன் அவர்களினை படைப்பில் ஈடுபடுத்துவதன் மூலம் ஆளுமை நோக்கிய சமூக உருவாக்கத்திற்கு வித்திட முடியும் இதற்கு சிறுவர் அரங்க செயற்பாடுகள் துணைசெய்யும்.
இதற்கு குழுசேர்:
கருத்துரைகளை இடு (Atom)
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக