என்னைப் பற்றி

வெள்ளி, ஜூலை 10, 2015

 (எஸ்.ரி.அருள்குமரன்) 

                                    முத்தமிழ்  விழா-2015

 முத்தமிழ் அறிஞர் சுவாமி விபுலாநந்தர் கிழக்கிலங்கையிலே காரைதீவு எனும் இடத்தில் இடத்தில் பிறந்து தமிழ் மொழிக்கும்,சைவத்திற்கும், பண்பாட்டுபேனுகைக்கும் அர்பனிப்பான சேவையாற்றியதுடன் தமிழ்த்துறையின் முதல் துறைத்தலைவர் எனும் பெருமைக்கும் உரியவராவார்.
 இவர் மானிப்பாய் இந்துக்கல்லூரியில் அதிபராக இருந்து அவ்அரியாசனத்தினை அலங்கரித்ததுடன் அக்காலப்பகுதியில் யாழ்.நூல் எனும் அற்ப்புதமான நூலினை யார்த்து இலக்கிய உலகிற்கு காத்திரமான பங்களிப்பினை ஆற்றியிருந்தார்.
  முத்தமிழ்களான இயல்,இசை. நாடகம் விளங்குகின்றன. இத்துறைகளின் வளர்ச்சிக்கு இவர் ஆற்றிய பணி காத்திரமானதாகும்.  
 இத்தகைய பெருமைவாய்ந்த அறிஞர் கல்லூரியில் அமர்ந்து சேவையாற்றியமை மானிப்பாய் இந்துக்கல்லூரி சமூகம்; பெருமையடையவேண்டியதுடன் அவரை கௌரவப்படுத்த வேண்டியதும் காலத்தின் கட்டளையாகும்.
 இவ்வகையில் மானிப்பாய் இந்துக்கல்லூரி சமூகம் சுவாமிவிபுலாநந்தரினை கௌரவப்படுத்தும் முகமகாவும் அவரை நினைவு கூறும் முகமாகவும்  தமிழ்ச்சங்கம் அமைத்து ஜனனதினத்தினை முத்தமிழ் விழாவாக கொண்டாடினர்
விபுலாநந்தர் இறந்த தினத்தினை கடந்த ஆண்டுகளில் தமிழ்மன்றத்தினரால் முத்தமிழ் விழா சிறப்பாக கொண்டாடப்பட்டபோதும் இம்முறை பிறந்த தினத்தினை தமழ்ச்ங்கத்தினரால் முத்தமிழ் விழாவாக கொண்டாடுவதாக தீர்மானிக்கப்பட்டது.
மானிப்பாய் இந்தக்கல்லூரியினை பொறுத்தவரையில் கலைகளினது இயங்கியலிற்கு சான்றாக பல கலைஞர்களினை கடந்தகாலத்தில் பிரசவித்ததுடன் நிகழ்காலத்திலும் பிரசவித்துக்கொண்டிருக்கின்றமை குறிப்பிடத்ததக்கது.
நாடகத்தந்தை சொர்ணலிங்கம்,கட்டடகலைஞர் வி.எஸ்.துரைராஜா, திபை;படகலைஞர் அருமைநாயகன்,போன்ற பல கலைஞர்கள் உருவாக மானிப்பாய் இந்துக்கல்லூரி களமாக விளங்குகியது.
நிகழ்காலத்தில் பேச்சுப்போட்டியில் வசீகரன், தனியிசையில் தயூரன் நாடகத்துறையில் 2012ம்ஆண்டு கு.திலக்சன், 2013ம் ஆண்டு யே.சானுஜன், 2014ம்ஆண்டு உ.கரிஸ், 2014ம்ஆண்டு ந.மோகனராஜன் ஆகியோர் தேசிய வெற்றிகளினை பெற்று பாடசாலைக்கு பெருமைசேர்ந்தனர்.
இத்கைய பெருமைகளினை உடைய கல்லூரி முத்தமிழ்களிற்கும் முதன்மை கொடுக்கும் வகையில் மானிப்பாய் இந்துக்கல்லூரி (தேசியப்பாடசாலை) யின் தமிழ்ச்சங்கத்தினரால் மானிப்பாய் இந்தக்கல்லூரியின் முன்னாள் அதிபர் சுவாமி விபுலானந்தரின்   ஜனன தினமும் முத்தமிழ் விழாவும் அண்மையில் கல்லூரி மண்டபத்தில் தமிழ்சங்கப் போசகரும் அதிபருமாகிய  எஸ்.சிவநேஸ்வரன் தலைமையில்  இடம்பெற்றது.
  நிகழ்வில்பிரதம விருந்தினராக யாழ்ப்பாணப் பல்கலைக்கழகத்தின் ஓய்வு நிலை  தமிழ்த்துறைப் பேராசிரியர் எஸ்.சிவலிங்கராஜா,சிறப்பு விருந்தினராக தெல்லிப்பழை துர்க்காதேவி தேவஸ்தானத் தலைவர் செஞ்சொற்செல்வர் கலாநிதி ஆறு. திருமுருகன்  ஆகியோர் கலந்து கொண்டார்கள்.
காலையில் மருதடி விநாயகர் ஆலயத்தில் இருந்து சுவாமி விபுலாநந்தரின் உருவப்படம் பாரம்பரியமுறைப்படி ஊர்வலமாக எடுத்துவரப்பட்டு வீதியெங்கும் பூரன கும்பம் வைத்து மரியாதை செலுத்தப்பட்டது.
 ஊர்வலமாக எடுத்துவரப்பட்ட பின்னர் மங்களவிளக்கேற்றல் இடம்பெற்றது. தொடர்ந்து வரவேற்புரையினை  கல்லூரியின் தமிழ்ச்சங்கத் தலைவர் பா.ஜெயரூபன் வழங்கினார்.
  கல்லூரி மாணவர்களினால் வரவேற்ப்பு நடனம் நிகழ்த்ப்பட்டது.
த.ஜெயசீலன்  தலைமையில் “உள்ளக்கமலம்” என்னும் கருப்பொருளில்  கவியரங்கம் இடம்பெறவுள்ளது. கவிவரிகளினை கவிஞர்களான  இ.சர்வேஸ்வரா மா.பா.மகாலிங்கசிவம் இரா.அருட்செல்வம் திருமதி மாலாதேவி மதிவணணன் ஆகியோர் வழங்கினார்கள். நடைமுறைசார்ந்த விடயங்களினை கவிவரிகளாக்கி ரசனையுடன் படைக்கப்பட்டது.
தழிழ்துறையின் வளர்சிக்கு அர்ப்பனிப்பான வேவையினை ஆற்றிக்கொண்டிருக்கும் யாழ்ப்பான பல்கலைக்கழத்தின் ஓய்வுநிலைப் பேராசிரியர் சி.சிவலிங்கராஜாவிற்கு “சுவாமிவிபுலாநந்தர்விருது” வழங்கிக்கொளரவிக்கப்ட்டது.
  வரவேற்ப்பு நடனம் இன்னிசை காணம் ஒயிலாட்டநடனம் ,ஆகிய நிகழ்வுகளுடன் வல்லிபுரம் ஏழுமலையின் எழுத்துருவாக்கத்தில் மானிப்பாய் இந்துக்கல்லூரி நாடகத்துறை ஆசிரியர் எஸ்.ரி.அருள்குமரனின் நெறியாள்கையில் “நடுகல் பேசும்” இலக்கிய நாடக ஆற்றுகையும் இடம்பெற்றது.
நன்றியுரையினை எஸ்.அபிசாந் நிகழ்த்தினார்.
மானிப்பாய் இந்துக்கல்லூரியானது நூற்றாண்டினை கடந்து தேசியப்பாடசாலையாக உயர்ந்து நிற்கின்றவேளையில் முத்தமிழையும் வளர்க்கும் நோக்கில் தழிச்சங்கம் அமைத்து பணியாற்றும் தருனத்தில் எதிர்காலத்தில் மேலும் சிறப்பான முறையில் மேற்கொள்வதுடன் மாணவர்களது இயங்கியலிற்கும் முத்தமிழிற்கும் முதன்மை கொடுத்து மேற்கொள்ளப்படவேண்டியதும் அவசியமாகும்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக