என்னைப் பற்றி

வெள்ளி, ஜூலை 26, 2013

 
நாடகத்தின் பயன்பாடு  இலங்கை கல்வித்துறையில் இன்னும் சரியாகப் பயன்படுத்தப்படவில்லை.


கலாநிதி குழந்தை ம.சண்முகலிங்கம் தெரிவிப்பு

நாடகத்தின் பயன்பாடு  இலங்கை கல்வித்துறையில் இன்னும் சரியாகப் பயன்படுத்தப்படவில்லை.கற்றல் கற்பித்தல் செயற்பாடுகளில் நாடகத்தின் பங்களிப்பானது  தேவைப்பாடுடையதாக அமைகின்றது. இத்தேவைப்பாடுகளினை பூர்த்தி செய்கின்ற வகையில் கல்வித்துறையில் நாடகத்தின் பங்களிப்பு சரியாகப் பயன்படுத்தப்படவேண்டும். என ஈழத்து நாடகத்தின் மூத்த நாடகவியலாளர் குழந்தை ம.சண்முகலிங்கம் தெரிவித்தார்.

கோப்பாய் ஆசிரியர் கலாசாலையின் முத்தமிழ் விழாவின் நாடக விழா நிகழ்வுகள் கோப்பாய் ஆசிரியர் கலாசாலையின் பிரதி அதிபர் வீ.கருணலிங்கம் தலைமையில் இடம்பெற்ற போது அந்நிகழ்விற்கு இனிய விருந்தினராகக் கலந்து கொண்டு உரையாற்றும் போதே அவர் இவ்வாறு தெரிவித்தார்.

அவர் அங்கு மேலும் தெரிவிக்கையில் :

கல்வித்துறையின்கற்றல் கற்பித்தல் செயற்பாட்டில் நாடகத்துறையின் பங்களிப்பு பல்வேறு வகைகளில் பயன்படுடையதாக விளங்குகின்றது.. 
பல்வகைப்பயன்பாடுடைய  நாடகம் என்பது மேடையில் மட்டும் நடித்தல் அல்ல அதனையும் தான்டிய வகையில் நாடகத்தின் செயற்பாடு பரந்துது பட்டு காணப்படுகின்றது. 
ஆசிரியர்களது கற்பித்தல் செயற்பாட்டில் நாடகத்தின் பங்களிப்பானது மிக அவசியமானது. ஆசிரியர்கள் சிறந்த நடிகனாக விளங்கும் போதே மாணவர்களிடத்தில் கற்பித்தல் செயற்பாட்டினை இலகுவாக மேற்கொள்முடியும் நாடகமானது சமூகப்பயன்பாடுடைய சாதனமாக விளங்குகின்றது 

இன்றைய நாடக விழா நிகழ்வில் சிறப்பான நாடக அளிக்கைகள் ஆற்றுகை  செய்யப்பட்டுள்ளன. இந்நாடக நிகழ்வில் கலந்து கொண்ட அனைவரும் பராட்டுக்குரியவர்கள் நாடக நிகழ்வினை போட்டியாகக் கொள்ளாது நட்புறவாக நாடகச்  செயற்பாட்டில் ஈடுபட வேண்டும். இன்று நாடகமானது அனைத்துத்துறைகளிலும் பயன்பாடுடையதாக காணப்படுகின்றது. 

சமூகத்தில் உயர்ந்தவர்களாக விளங்கும் ஆசிரியர்கள் சமூகப்பொறுப்புணர்ந்தவர்களாக விளங்க வேண்டும். சமூகப்பொறுப்புணர்ந்து செயற்படுதிகின்ற ஆசிரியர்களினாலே சிற்ந்த கல்விச் சமுதாயத்தினை கட்டியெழுப்பமுடியும். 

ஆசிரியர்கள் வாசிப்புத்திறன் மிக்கவர்களாக விளங்க வேண்டும். வாசிப்பின் ஊடாக புதிய விடயங்களினை கற்று அவற்றினை மாணவர்களுக் போதிப்பவர்களாக விளங்க வேண்டும். கற்றல் கற்பித்தல் செயற்பாட்டில்  தேடல் அவசியமானது. ரவீந்திர நாத்தாகூருடைய சிந்தனைகளை ஆசிரியர்கள் கற்கவேண்டும். சிறுவர்களுடைய தளங்களுக்கு சென்று ஆய்வு செய்யப்பட்டு படைக்கப்பட்டவையாக ரவீந்திரநாத் தாகூருடைய படைப்புக்கள் விளங்குகின்றன.  இப்படைப்புக்களினை வாசிப்பதன் ஊடாக பல்வேறு விடயங்களினை அறிந்து கொள்ள முடிகின்றது. ஆசிரியர்கள் மாணவ சமுதாயத்தின் பொறுப்புணர்ந்து சமூக அக்கறை கொண்டவர்களாக விளங்க வேண்டும் என்றார். 

நன்றி யாழ்.தினக்குரல்

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக