என்னைப் பற்றி

ஞாயிறு, ஜூலை 21, 2013


                                                                முதலாம் இடம்

வாக்காளர் பதிவுக்கான விழிப்பூட்டல் என்னும் தொனிப்பொருளில் யாழ்ப்பாணம் கியூடெக் – கரித்தாஸ் நிறுனத்தினால் நடாத்தப்பட்ட தெரு வெளி நாடகப்போட்டியில் புத்தாக்க அரங்க இயக்கத்தினால் (ஐ.ரி.எம்) ஆற்றுகை செய்யப்பட்ட ‘வாழ்வதற்கு அவசியம்’ என்னும் தெருவெளி நாடகம் முதலாமிடத்தினைப் பெற்றுக்கொண்டுள்ளது. வாக்காளர்களாக பதிவு செய்யப்படவேண்டியதன் அவசியத்தினையும் வாக்களிப்பு முறைமையினையும் வாக்களிப்பின் அவசியத்தினையும் மக்களிடத்தில் ஏற்படுத்தும் நோக்கில் கரிதாஸ் நிறுவனத்தினால் திறந்த போட்டிப்பிரிவாக நாவாந்துறை சென் நீக்கலஸ் சனசமூக நிலைய முன்றலில் நடாத்தப்பட்ட மேற்படி போட்டியில் ‘வாழ்வதற்கு அவசியம்’ என்னும் தெருவெளி நாடகம் முதலாமிடத்தினைப் பெற்றுள்ளது.
இத் தெருவெளி நாடகத்திற்கான நெறியாள்கையினை புத்தாக்கஅரங்க இயக்கத்தின் பணிப்பாளரும் யாழ்ப்பாணம் மத்தியகல்லூரியின் நாடகத்துறை ஆசிரியருமான எஸ்.ரி.குமரன் புத்தாக்கஅரங்க இயக்கத்தின் நிர்வாகப்பணிப்பாளரும் மானிப்பாய் இந்துக்கல்லூரியின் நாடகத்துறை ஆசிரியருமாகிய எஸ்.ரி.அருள்குமரன் ஆகியோர் மேற்கொண்டிருந்தனர். ஆற்றுகையாளர்களாக த.துவாரகன் த.பிரவீன் பா.தாருஷன் கு.தவேன்சன் த.பிரியலக்ஷன் உ.கரீஸ் ஆகியோர் நடித்திருந்தார்கள். ஒப்பனையினை இ.பகீதரன் மேற்கொண்டிருந்தார். இத் தெருவெளி நாடகமானது கரிதாஸ் நிறுவனத்தின் அனுசரனையில் பல்வேறு பிரதேசங்களில் ஆற்றுகை செய்யப்படவுள்ளமை குறிப்பிடத்தக்கது.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக