என்னைப் பற்றி

ஞாயிறு, செப்டம்பர் 26, 2021

S.T.ARULKUMARAN
ஆணை (நாடக பனுவல்) நவீன நாடக செல்நெறி ஈழத்து நவீன நாடகத்தின் தந்தை என சிறப்பிக்கப்படுகின்ற கலையரசு சொர்ணலிங்கத்துடன் ஆரம்பிக்கின்றது. கலையரசு புராணியகதைகளை நாடகமாக நடித்தார். அவர் கலையுலகின் குருவாக போற்றப்படுகின்ற பம்மல் சம்பந்த முதலியாரின் நாடக பனுவல்களை கொண்டே நாடகம் நடித்ததாக குறிப்பிடுவார்கள்;. பனுவல் பம்மல் சம்பந்த முதலியாருடையதாயினும்; படைப்பாக்க முறைமை இவருடையது என்பது சிறப்பிற்குரியது. அவரது ஈழத்தில் நாடகமும் நானும் என் அவருடைய சரித நூலினை படிக்கின்றவர்களால் அவருடைய நாடக முறைமையினை புரிந்துகொள்ள முடியும். அவர் தொடக்கி வைத்த நாடக வடிவம் பின்வரும் காலங்களால் உயிர்ப்;;பு வடிவமாக முகிழ்ந்தெழுந்ததினை அரங்க வரலாற்றோட்டத்தில் தரிசனம் கொள்ள முடியும். அவர் தொடக்கிவைத்த நவீன நாடகங்களின் பாணியினை பின்பற்றி பலரும் நாடகங்கள் மேற்கொண்டதை அறியமுடிகின்றது. அவரது வழிப்பணத்தினை பின்பற்றி தனக்குரிய தனித்துவத்துடன் இயங்குகின்ற அரங்க புலமையானாக சிவ வல்லிபுரம் ஏழுமலைப்பிள்ளையினை குறிப்பிடின் மிகையில்லை என நினைக்கின்றேன். தேர்ந்த நடிகராக கனிப்பிற்;குரிய பனுவல் ஆக்குனராக நாடகங்களை நெறியாழ்கை செய்த நெறியாராக பல துறைகளில் தன்னை புடம்போட்ட படைப்பாளியாக அவர் விங்குகின்றார். பனுவல் ஆக்குனரின் மொழிச்செழுமை அரங்கின் நடிகனை உயிர்ப்புடன் வைத்திருக்க உதவும். பனுவல் ஆக்குனரே nநியாராகவும் வருகின்ற போது அது மேலும் செழுமைப்படும். ஆனால் இவர் முத்துறைகளில் விளங்குகின்றார் அதாவது பனுவல் ஆக்குனர் நெறியாளர் நடிகர். ஈழத்து அரங்க வரலாறு அதிகாரத்தின் வரலாறு என்பது பலருடைய குற்றச்சாட்டு. வரலாற்றினை எழுதுபவர் தன் சரிதத்தினை மட்டுமே பதிவுசெய்கின்ற அவலம் இன்றுவரை தீர்க்கப்படாது தொடர்கின்ற தொடர்கதையாகிக்போகின்றது. இத்தகைய திட்டமிடப்பட்ட புலமைச் சகதிக்குள் பல ஆளுமையாளர்கள் அடிபட்டுப்போவது தவிர்க முடியாததாக இருக்கின்றது. கடந்த 50 வருடங்களுக்கு மேலாக அரங்கத்துறை சார்ந்து இயங்கிக்கொண்டிருக்கின்ற ஆளுமை இவர் என்பதை இவரது அரங்க படைப்பாக்க அனுபவங்கின் வாயிலாக கண்டுணர்ந்து கொள்ள முடிகின்றது. இவரது முதல் நாடக நூலான மகுடபங்கம் எனும் நூலிற்கான முன்னுரையினை எழுதித்தருமாறு அப்போது கரைச்சி பிரதேச செயலகத்தின் கலாசார உத்தியோகத்தராக கடமையாற்றிய றஐPவன் அண்ணா கேட்டுக்கொண்டதிற்கினங்க இவரது பனுவலை வாசித்திருந்தேன். அப்போது அந்த பனுவல் வித்தியாசமான மன உணர்வினை ஏற்படுத்தியிருந்தது. அதை அவ் நூலின் முன்னுரையில் பதிவு செய்திருந்தேன். பின்னர் அவரால் வெளியிடப்பட்ட வீரகாவியம், சதுரங்கவேட்டை,சத்தியவேள்வி போன்ற பனுவல்கள் அரங்க புலத்திற்கு இன்னொரு பரிமானம். இன்;று வெளியிடப்படுகின்ற ஆணை வேறொரு தளத்தில் தரிசனம் கொள்ள வேண்டியதாக இருக்கின்றது. இந்நூலில் முன்னுரையில் இவ்வாறு பதிவு செய்கின்றார். ஆணைகள்–புராணங்கள், இதிகாசங்கள் வரலாறுகளில் மண்ணுக்காகவும் பொன்னுக்காகவும் பெண்ணுக்காகவும் இலட்சியத்தி;காகவும் ஏவப்பட்டுள்ளன.... அதனால் நடந்த போர்களும்,அழிவுகளும்,துரோகங்களும் பழிக்குபழிகளும் ஏரபளம்ஏராளம்.... தேசத்தின் ஆணைக்காக மக்களின் அவலத்தைப்போக் போக்க சுதந்திரத்திற்காக போராடியவர்களும் உண்டு. இந்தவகையில் தமிழினத்தின் இருப்பிற்கு இத்தகைய வரலாற்று நாடகங்கள் மிகவும் இன்றியமையாதனவாகும் என்றஅடிப்டையில் என்னை கவாந்த ஏழு வரலாற்று ஆணைகளையும் முடிவுகளையும் வரலாற்று நாடகமாக யாத்திருக்கின்றேன். (பக் iஎ) கடந்த காலத்தின் கதைகளே வரலாறாகின்றன. அவற்றை படைக்கின்ற போது வரலாற்று நாடகங்களாகின்றன. ஒரே தலைப்பில்பல கதைகளின் கதைகள். நல்ல முயற்சி. ஆணை! பல ஆணை தந்தை மகனுக்குவழங்கிய ஆணை! சிறிய வசனங்களின் ஊடாக உரையாடல் நகர்கின்றது சிறப்பு. மேடைக்குறிப்புக்கள் உள்ளது நன்று. எழுத்துப்பிரதி என்கின்ற பனுவல் வாசிப்பதை இலக்காக கொண்டு முன்னர் படைக்கப்பட்டிருந்தததை அறியமுடிகின்றது. ஆனால் இப்பனுவல் வாசிப்தை தாண்டி ஆற்றுகையினை இலக்காகக்கொண்டு படைக்கப்பட்டமை சிறப்பு. பின்னனிக்குரலின் ஊடாக சொல்லப்படுகின்றமை சிறப்பு. இது இவருக்கான தனித்துவமாக இருக்கின்றது.இவருடைய பல நாடகங்களில் இப்பண்பினை பார்த்திருக்கின்றேன். சிறிய சம்பவங்களை கதைகளாக்கியுள்ளார். நல்ல விடயம். ஆணை காட்சி -03 பைங்கிளி: அவர்களும் தமிழர்களே தானே? குலோத்துங்கன்: ஆம்? பைங்கிளி: அவர்களைக்கொன்ற குலோத்துங்கன் அவர்தம் பெண்டீரை கற்பழிக்காமல் விடுவரா? குலோத்துங்கன்:தவறு.போர் ஒருமுறை!அதில் கொலை ஒரு கலை,போர் புரியும் எல்லோருமே நெறியழிக்கும் முறையற்றவர்கல்லர்.மாணத்தை மதிக்கும் மறவர்களிலே குலோத்துங்கனும் ஒருவன். (பக்09) தந்தையின் ஆணை சந்த சிம்மன்: ராணாவை உறங்க விடக்கூடாது.... மேவாரை அழிய விடக்கூடாது. ராச புத்திரர்களின் வீரர் செறிந்த வரலாற்றை நாம் பாதுகாக்க வேண்டும். நான் ராணா பிரதாப்புக்கு கொடுத்த வாக்குறுதியை நிறைவேற்ற வேண்டும். மேவாரின் மகுடத்தை சலும்பரா வம்சத்தினர் தான் காப்பாற்றினார்களென்று சரித்திரம் உதயமாக வேண்டும். சத்ருஞ்சயன்-(வியப்புடன்) தந்தையே நீங்கள்இடும் உத்தரவு ஓர் ஆண்மகனுக்கு இடும் உத்தரவு அல்லவே. அதுவும் ஒரு வீரனுக்கு இடும் உத்தரவாகவும் தெரியவில்லை பக் 24 சத்ருஞ்சயன்-தந்தையே ஒருபெண்ணை இஷ;ட விரோதமாகத் தூக்கி வருவது மொலாயர்களுக்கு சகஜம் ஆனால் இந்து சமுதாயம் இதனை ஏற்குமா? (பக்25) சத்ருஞ்சயன்: சீறிக்கிழம்பும் மொகலாயக்குண்டுகளை சிதறடித்த புத்திரர்களின் வாள் என்கை வாள்,இதைநான் என் உயிர்போனாலும் கைவிடமாட்டேன்... தந்தையின் ஆணைக்காக உங்களிடம் ஒப்படைக்கின்றேன் (சத்ருஞ்சயன் இடைக்கச்சையில் இருந்த வாளை எடுத்துக்கொடுக்கின்றான்) பக் 26 சந்திரமதி: அது மாற்றாருக்கு ,என்னைஅடையளாம் என் பெண்மையைக்கவரலாம் என்றுதுணியும் கயவர்களுக்கு....நான் ராட்சசி.எண்கணவருக்கு அடிமை. (பக் 37) வேங்கையின் ஆணை சக்தி வர்மன்: தங்களுடைய சைவ சமயத்தை நான் பின்பற்றும் போது என் தம்பி விமலாதித்தன் சமணமதத்தின் சம தர்மத்தைபின் பற்றுகின்றான். இராசராசன்: எம்மதமும் சம்மதம் என்று நினைப்பவன் இராசராசன்;: அரசியலுக்கும் மத்திற்கும் எவ்விதச்சம்மந்தமும் இல்லை. பக்54 விமலாதித்தன்: வானத்தில் என் குறிக்கோளாக என் சந்திரகுலம் வையத்தில் என் முன்னால் சூரிய குலம்.. இரண்டும் ஒன்றுகலந்தால் வைகறை உதயம். இரண்டும் ஒன்றோடொண்றுபிணங்கினால் அதுவே அந்தி நேரம்.... பக் 56 விமலாதித்தன்:நண்பன் என்றால் உற்றூழியும் கை கொடுக்கும் நண்பன்! பகைவன் என்றால் உயிர் போகும் வரை பகைவன்! (பக்63) விமலாதித்தன்: வீரன் எங்கிருந்தாலென்ன? சாவின் முனையில் கூட அவன் சாந்தமாய் சிரிப்பான்! இரசாரராசன்: நீ தோற்றவன் என்பது நினைவிருக்கட்டும்! விமலாதித்தன்;:வெற்றியும் தோல்வியும் ஒருவர் பங்கல்ல ஜெயங்கொண்ட சோழரே! தற்காலிகமாய் நீர் ஜெயித்தீர் : அவ்வளவுதான் இரசராசன்:வேங்கி நாடு அடிமைப்பட்டது.அடிமைக்குவாய் வீரம் வேறா? விமலாதித்தன்;: அடிமை..அடிமை என் (பக்80-81) வெற்றியின்ஆணை பிண்ணனிக்குரல்- அலெக்சாண்டருக்கு முன்னும் பின்னும்சரித்திரத்தில் பல வீரர்கள் தோன்றியிருக்கிறார்கள் பல வீரதீரங்களை புரிந்திருக்கிறார்கள் ஆனால் உலகின் சிறந்த ராணுவத்தபதியாக ஏன் சரித்திரம் புகழ்கிறது. அது அவனது இலட்சியம். பாத்திரச்சிறப்பு உரையாடலுக்கூடாகசொல்லப்படுகிது. அலெக்சான்டர்- பயமா? மசிடோனிய வீரர்களுக்கு பயமா? அதுவும் இருளைக்கண்டு கடும் குளரைக்கண்டு ஒன்றைச் சொல்கிறேன் பயப்படுபவர்களுக்கு இதைபோய் சொல்லுங்கள் பயப்படுபவர்களுக்கு இதை சொல்லுங்கள் (பக் 96) அலெக்சாண்டர்:இருளையும் ,குளிரையும் ஆபத்தையும் எதிரிகளின் எண்ணிக்கையையும் பார்த்து இந்த அலெக்சாண்டர் பயப்படமாட்டான் தளபதி பர்மீனியா,நீங்கள் சொல்வதைக்கேட்டால் எனக்கு நகைப்பாக இருக்கிறது. (பக் 97) பாத்திரத்தின் நல்ல பண்பு சுட்டப்படுகின்றது. அலெக்சாண்டர்: கவலையே வேண்டாம் மன்னர் டேரியசிடம் இருந்த போது எப்படி வசதியாக வாழ்ந்தீர்களோ அதில்கொஞ்சமும் குறைவில்லாமல் வாழ்வதற்கு தேவையான எல'லா வசதிகளையும நான் அளிக்கிறேன். டேரியசின் தாய்: நன்றி அரசே அலெக்சாண்டரின் மான்பு எதிரியின் மனைவியை கூட கௌரவமாக நடத்துகின்ற பண்பு. தேசத்தின் ஆணை சேதுபதி: நீ என்னை கைப்பிடித்த பிறகு, நான் உன்னை கைப்பற்றிய பிறகு! துரோகத்தின் முடிவுகளும் துரோகிகளுக்கு வெற்றியை கொடுத்ததாக வரலாறுகளே இல்லை.. இலட்சிய வீரர்களின் தியாகம் வரலாற்றில் தோற்றதாக உலகமே கூறவில்லை. தேசத்தின் ஆணை -2 பிகாட்பிரபு-: ஓ மதம் பிடித்த பேச்சுப் பேசினீர்களா? வரலாற்றுத்திரிபுகளை குறிப்பிடுகின்றார். மருதநாயகம் பற்றிய குறிப்பு உள்ளது. மருதநாயகம்: ஆமாம்! அல்லாவின் அருளால் என்னை யாருமே வெல்ல முடியாதுஅத்தா, நான் தொழுகை செய்வதில் தவறாதவன்.என்திறமையில் அசையாத நம்பிக்கை உள்ளவன்... பக்163) பழிக்கு பழி நீயூமா புரூட்டாஸ் துரோகம் நம்பிக்கை துரோகம் ;. புரூட்டாஸ்: விதியே! உன்விருப்பத்தை நாங்கள் அறிவோம்.உங்கள் முறை வருகிறபொழுது நாங்கள் சாவோம்.அது எங்களுக்கு தெரிகிறது.ஆனால் அந்தக்கால எல்லையும் நீளும் நாடகளும். பக்175) காசியஸ்: ஏன்.. வாழ்வில் இருபது வருடங்களைக்குறைத்துக்கொள்பவன் இருபது வருட மரண பயத்தைக் குறைத்துக்கொள்பவன் ஆகிறான் (பக் 176) அன்ரனி: நேற்று சீசரின் சொற்கள் இந்த உலகத்தையே எதிர்த்து நின்றன. ஆனால் இன்று அவன் கீழே விழுந்து கிடக்கின்றான்.அவனுக்கு மரியாதை செலுத்த இன்றுயாருமே இல்லை.நண்பர்கறே! உங்களுடைய மாணத்தையும் இதயத்தையும் கலக்கி ஒர புரட்சிக்குஉங்களைத் தூண்டுவேனாயின்... பக்189) அன்ரனி......... பரூட்டாஸ் அன்பில்லாமல் குத்தினாhனா? இல்லையா? என்று பார்ப்பதற்கு இரத்தம் அவ்வளவு வேகமாக வெளிவந்திருக்கிறது போலும். ................................................................................................................ இரத்தவெறி பிடித்த துரோகமே எம்மை வென்றது (பக் 192) காட்சி விரிகின்றது .மனக்கண்முன் வருகின்றது. நல்ல படைப்பு அதுதான். படைப்பை அவரவர் அவர்களுடைய கோணத்தில் வாசிக்கலாம் அதற்கு இப்பனுவல் உதவி செய்கின்றது. காலத்திற்கு ஏற்றவகையில் குறுகிய நேரத்திற்கு தயாரிக்கக்கூடிய நாடகங்கள்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக