என்னைப் பற்றி

புதன், நவம்பர் 02, 2022

(எஸ்.ரி.அருள்குமரன்) யாழ்ப்பாணப்பல்கலைக்கழக நாடக நினைவுகள் .... நினைவு  01 கனவுகளுக்கு களம் திறந்து விட்டிருந்தகாலம்.. கல்லாசனங்கள் பல தள கதையாடல்களிற்கும்இசிந்தனைத்திறப்பிற்கும்இ அறிவு விகாசிப்பிற்குமான தளங்களாக இருந்தன. அலப்பறைகளுக்கான இடமாக அல்லாது அறிவுத்திறப்பிற்கான வெளியாக மாற்றிக்கொண்டமை மனதிற்கு மகிழ்வானதாக இருந்தது. பல்கலைக்கழகமுதல் நாள் அனுபவம் நெஞ்சில் இருந்து அகலாத பசுமையாக இருக்கின்றது. அரங்கக்கற்கைகளுக்கான வாய்ப்பும் அங்கு அரங்கச்செயற்பாடுகளின் ஊடாக கற்றுக்கொண்ட அனுபவங்கள்இ பட்ட அவமானங்கள்இஎல்லாம் சேர்ந்து என்னை முழுமையாக்கியது. நாடகங்களில்  பங்குபற்றுகின்ற போது ஏற்பட்ட  மகிழ்ச்சிக்கும் அவை தந்த  அனுபவங்களுக்கும் ஈடாக எவற்றையும் வாழ்வில் பெற்றுக்கொள்ளவில்லை. அங்கு இடப்பட்ட விதை பல தடைகளை  தாண்டி இன்று விருட்சமாக இருக்கின்றது. என்னை உருவாக்கியவர் பலர். அரங்க துயைில் நான் உயிர்ப்புடன் இயங்குவதற்கு பலரது வழிகாட்டல்களும்இஅரவனைப்புக்களும் இருந்திருக்கின்றது. எனக்கு சிறு வயதில் இருந்தே நாடகங்களில் இருந்த பிரியம் அலாதியானது. ஆனால் அவற்றுக்கான களங்கள் இருந்ததில்லை.. பல்கலைக்கழகத்தில் கற்ற காலங்கள் நாடகத்தை கற்பதற்கும் அத்துறையில் இயங்குவதற்குமான வாய்ப்பாக இருந்தன. பல்கலைக்கழக்தில் நடித்த முதல் நாடகம் சிகப்பு விளக்கு எனும்நாடகம் ஆகும். இந்நாடகம் சீனா நாடகம். தமிழில் மொழி பெயர்த்தவர் குழந்தை ம.சண்முகலிங்கம்.. நெறியாளர் விரிவுரையாளர் க.ரதிதரன். இந்நாடகம் மூன்றாம் வருட மாணவர்கள்தமது  பயில் நிலை அனுபவத்தை பெற்றுக்கொள்வதற்காக தயாரிக்கப்பட்டநாடகம் ஆகும். மூன்றாம் வருட மாணவர்களுடன் கனிஷ்ர பிரிவினரும் பங்கு பற்றுவதற்கு வாய்ப்பு ஏற்படுத்தப்பட்டிருந்தது. இந்தவகையில் முதலாம்  வருடமானவர்களும்  சிறியபாத்திரங்களுக்காக உள்ளீர்க்கப்பட்டனர். அதன் அடிப்படையில் நாமும் இணைந்து பணியாற்றுவதற்கான சூழ்நிலை உருவாகியது. இந்நாடகத்தில் பொறுப்பாகவும் துனை நெறியாளராகவும் கேதீஸ் அண்ணா இருந்தார்.  அவர் மிகவும் இறுக்கமானவராக இருந்தார். அவரது கண்டிப்புடன்கூடிய  நடத்தல்கள் ஆரம்பித்தல் சலிப்பாகவும் அவர் மீது வெறுப்பாகவும் இருந்ததாலும் பிற்காலத்தில் நினைத்து பார்க்கின்றபோது பல கற்றுக்கொள்ளலுக்கான களங்களை திறந்து விட்டனவாக இருந்தது. நாடக ஒத்திகைகள் குறித்தநேரத்திற்கு ஆரம்பமாகி இடம்பெறும் அப்பொழுதுகள் மகிழ்ச்சிக்குரியனவாக இருந்தன. நாடகஒத்திகைகள்இடம்பெறுகின்ற ஒருநாள் ரதிதரன் சேர் ஒத்திகையின் நிறைவில் கலந்து கொள்கின்றார். அவர்குறிப்பிட்ட விடயங்கள் இன்றும் நினைவில் இருக்கின்றது. முதலாம் வருடத்தில் உள்ளவர்கள்  குறைந்தது சிறிய பாத்திரங்களாவது ஏற்று நடிக்கவேண்டும் பைனல் இயரில் வரும்போது பெரிய பாத்திரம் ஏற்று நடிப்பது உங்களது வளர்ச்சியினை காட்டும் என்றார். இவாலுவேசன் நடைபெறுகின்ற போது ஒவ்வொருவரையும் இன்றைய நாள் அனுபவங்கள் எப்படி என கேட்கிறார்.ஒவ்வொருவரும் குறிப்பிடுகின்றனர்.என்னுடைய முறை வருகின்றது. என்னால் அனுபவங்களை  குறிப்பிட முடியவில்லை. தயக்கமாக வும் ஒருவிதமான பயஉணர்வு காணப்பட்டபோது நான் ஒண்டும் சொல்லாமல் இருந்தேன். அப்போது பேசாது .. அவர்  சரி நீர் எல்லாரும் சொன்ன பிறகு சொல்லும் எண்று குறிப்பிட்டு விட்டு அடுத்தவரை கேட்டார். இந்த நிகழ்வு எனக்கு அவர் மீதான மதிப்பினைஏற்படுத்தியது. காரனம் திருப்பி கேட்டிருந்தால்  அல்லது பேசியிருந்தால்  பயத்தால அடுத்தநாள் றிகர்சலுக்கு போகாமல் விட்டிருக்க கூடும் மாறாக இப்பிடி நடந்து கொண்டது என்னிடையே தன்னம்பிக்கையினை ஏற்படுத்தியிருந்தது. இந்நாடக ஒத்திகை காலத்தில் முகுந்தன்இமதன் அண்ணாஇ ரதி அக்காஇ தர்மினி அக்காஇ அருந்தா அக்காஇ சந்திரிக்கா அக்காஇ எனபலரது அன்பும் வழிகாட்டலும் சிறப்பாக  இருந்தது. இந்நாடகத்தில் உளவாளி மற்றும் போர்வீரர் ஆகிய இரு பாத்திரங்களில் நடித்திருந்தேன். மேடை அளிக்கை எனும் வகையில் திட்டமிடப்பட்ட அசைவுஇ உரையாடல் வெளி என்பன காணப்பட்டன. ஒத்திகை காலங்கள் பல்வேறு அனுபவங்களை பெற்றுக்கொள்வதற்கான வாய்ப்பாக இருந்தது. ஆற்றுகையானது யாழ்.பல்கலைக்கழக முகாமைத்துவ கட்டடத்தொகுதியுடன் இணைந்தவகையில் காணப்படுகின்ற திறந்தவெளி அரங்கில் இடம்பெற்றது. குழந்தை ம.சண்முகலிங்கம் அவர்கள் நாடகத்தை பார்த்து நல்ல கருத்துக்களை குறிப்பிட்டிருந்தார். இந்நாடகத்தில் பங்குபற்றியமை சிறப்பானதாக இருந்தது. நாடகத்தை பார்வையிட்டபலரும் நாடகம் தொடர்பான நல் அபிப்பிராயங்களையும்இ திருத்தவேண்டிய விடயங்களையும் குறிப்பிட்டதுடன் நான் பங்குபற்றியபாத்திரங்கள் தொடர்பாகவும் குறிப்பிட்டிருந்தனர். இத்தகைய அனுபவங்கள் நாடக துறை சார்ந்த வகையில் இயங்குவதற்கான அடிப்படையில் தன்னம்பிக்கையினை வளர்த்து விட்டிருந்தது. (தொடரும்.........)

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக