என்னைப் பற்றி

ஞாயிறு, ஜூன் 23, 2013

குணமாக்கல் அரங்க செயற்ப்பாடும் அனுபவமும்.


குணமாக்கல் அரங்க செயற்ப்பாடும் அனுபவமும்.

 (எஸ்.ரி.அருள்)


குணமாக்கல் அரங்கு எனும் போது சமூகத்தில் இப்போது உள்ள நிலையில் (நாங்கள் சந்தித்த நிலையில் ) அவர்களது மனநிலை செயற்ப்பாடுகள் எவ்வாறு உள்ளதோ அவ்வாறான மனநிலை செயற்ப்பாடுகளில் மதற்றங்களினை கொண்டு வருவதாகும்.
இவ்வகையில் சுனாமி தாக்கம் ஏற்ப்பட்ட போது மக்கள் பயத்துடனும் பீதியுடனும் காணப்பட்ட போது அவர்களது மனங்னளில் மாற்றங்களினை கொண்டு வருவதற்காக அவல நீக்க ஆற்றுப்படை அரங்கு எனும் செயல்திட்டம் அரங்க செயற்ப்பாட்டு குழுவினாரல் மேற்க்கொள்ளப்பட்டது.
இவர்கள் யாழ்ப்பான பல்கலைக்கழக நாடக மாணவர்களினை இணைத்து இச்செயல் திட்டம் மேற்க்கொள்ளப்பட்டது.
இச்செயல்திட்டத்தினை நாடகத்துறை விரிவுரையாளார் கலாநிதி .க.சிதம்பரநாதன் வழிப்படுத்தியிருந்தார்.

இவ் அரங்க செயல்திட்டத்தில் ஈடுபட்டமை வித்தி யாசமான அநுபவமாக இருந்தது. 

சுனாமி எனும் இயற்கையின் கோரத்தாண்டவம் ஏற்ப்பட்டு தாயகப்பிரதேசம் எங்கும் மக்கள் சொல்லொன துயரங்களினை அனுபவித்த வேளை அவர்கள் என்னசெய்வது எனவும் எதிர்காலம் சூனியமாக்கப்பட்டதாகவும் உனரத்தலைப்பட்ட வேளையில் அவர்களது துயர்போக்கவும் அவர்களிடையே நம்பிக்கை எழுச்சியினை ஏற்ப்படுத்துவதினை நோக்கமாகக்கொண்டும் மேற்ப்படி அரங்க செயல்திட்டம் முனைப்புறுத்தப்பட்டது.

சுனாமி கோரத்தாண்டவம் இடம்பெற்றபோது உ  டனடி தேவைகளினை நிறைவு செய்யும் நோக்கில் உணவு ,உடைகள் என்பன பலராலும்வழங்கப்பட்டன. அவ் வேளை நாமும் அத்தகைய பணியில் பங்கெடுத்துக்கொண்டோம். ஆயினும் அவர்களது உளவியல் ரீதியான நோய்களிற்கு தீர்வு முன்வைக்க வேண்டியதும் அவர்களிடையே நம்பிக்கை ஊற்றினை ஏற்ப்படுத்த வேண்டியதும் அத்தகைய சூழ்நிலையில் மிகவும் அவசியமான செயல்ப்பாடாக இருந்தது. அப்பகைப்புலத்தில் அரங்க ஆற்றுகை நிகழ்வுகள் மூலம் மக்களிடையே இருந்த பயம், பீதி என்பன நீக்கப்பட்டன. இது புதுமையானதானவும் வித்தியாசமானதாகவும் காணப்பட்டது.

வழமையான அரங்க நிகழ்த்துகைகளில் இருந்து இது மாறுபட்டதாகவும் காணப்பட்டமு.காரணம் ஆற்றுகையாளனில் கைகளில் தான் அரங்க அளிக்கைக்கான தயார்ப்படுத்தலும் திட்டமிடலும் இருந்தது.

இவ்வரங்க நிகழ்த்துகைகளில் சிறுவர்களது இணைவும் அதனூடாக பெரியவர்களது இணைவும் முதன்மையானமதாக அமைந்தது.

எங்களுடைய செயற்ப்பாடுகள் மிகவும் எளிமையாக காணப்படும். குறிப்பாக சிறுவர்களது விளையாட்டுக்களான மாபிள்விளையாடுதல் கிளித்தட்டு என்பவற்றில் ஆரம்பித்து அரங்க ஆற்றுகை கனதியாக அமைந்து செல்லும்.

மக்கள் தமது உள்ளக்கிடக்கைகளினை எம்முடன் அன்னியேபன்னமாக பகிர்ந்து கொண்டனர்.குறிப்பாக மனல்காடு பிரதேசத்தில் அரங்க ஆற்றுகையின்பின்னர் ஒரு முதியவர் குறிப்பிடும்போது நாங்கள் பயத்தின்காரனமாக மனுசி பிள்ளையளுடன் முகாமின்ர கூரையினை பார்த்தபடி வெறுச்சிப்போய் கடதாசிப்பேப்பறுகளை கிழிச்சுப்போட்டுக்கொண்டு இருந்தம் நீங்கள் வந்து இந்த பிள்ளையளுக்கு விளையாட்டு சொல்லி குடுக்கேக்க சந்தோசமா இருக்கு இது எங்கட 'உள நோய்க்கு ஒரு மருந்தா இருக்குது' என்றார் இது அரங்க செயற்ப்பாட்டின் கனதியனை வெளிப்படுத்தியது எனில் மிகையில்லை..

சுனாமி காவு கொண்ட பிரதேநங்களான கரையோரப்பிரதேசங்களில் வடமராட்சி பிரதேசங்கள் முல்லைத்திவு பிரதேசங்களிற்கு எங்களது அரங்க பயனம் தொடர்ந்தது.

ஒவ்வொரு இடமும் எமக்கு புதுமையான அநுபவங்களினை ஏற்ப்படுத்தியதுடன் மனமகிழ்விற்க்குரிய களமாகவும் அமைந்தது.

 இத்தகைய வகையில் மாறுபட்ட புதுமையான அநுபவமாக இருந்தது.



கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக