என்னைப் பற்றி

ஞாயிறு, ஜூலை 14, 2013



                         நாடகவிழா             (S.T.Arul)

நாடகம் மக்களது வாழ்வியலில் வலிகளினை வெளிப்படுத்துவதுடன் அவர்களது  பிரச்சினைகளிலிருந்து விடுபடுவதற்கான வழிமுறைகளினை தகவமைத்து கொள்வதிலும் முதன்மை பெறுகின்றது.
 நாடக  அளிக்கையானது பார்ப்போருடன் நேரடித்தொடர்புடையனவாக காணப்படுவதினால் உயிர்ப்பான கலைவடிவமாக  விளங்குகின்றது.

 நாடக செயற்பாடு மாணவர்களது ஆளுமை வெளிப்பாட்டிற்கான களவெளிளினை தகவமைக்கின்றன.இச்செயற்பாட்டில் ஈடுபடுவதன் மூலம் மாணவர்களிடையே தாக்கவண்மைரீதியான தொடர்பாடல் திறன் விருத்தியடைவதுடன் தலைமைத்துவப்பண்பு, குரூரம்அற்ற தன்மை ,
பிற்போக்கு அற்றமனவுனர்வு ,தன்னலமற்ற நலநோம்பல் என்பன  அதிகரிக்கும்.

இப்பகைப்புலத்தில் நோக்கும்' போது நாடகங்களுக்கான களவெளிகளினை பாடசாலைகள் வழங்கி வருவதினை காணலாம்.குறிப்பாக விழாக்கள் அவற்றிக்கான அடிப்படைகளாகின்றன.. ஆயினும் நாடகங்களிற்கென தனியொரு நாள் ஒதுக்கி விழா நடாத்தப்படுவதென்பது குறைவாக உள்ளது.

 அவற்றிக்கு மாறாக மானிப்பாய் இந்துக்கல்லூரியில் நாடகங்களுக்குகென தனியன வகையில் நீண்ட காலமாக விழா நடத்தப்பட்டு வருகின்றன.
பாடசாலையின் நிறுவுனர் தினத்தினை அடிப்படையாகக்கொண்ட வகையில் இருதினங்களாக விழாக்கள் முன்னைய காலத்தில் ஜீலை மாதம் முதலாம் இரண்டாம் திகதிகளில் நிகழ்த்தப்படுவதாக குறிப்பிடுகி;னறனர் ஆயினும் நாட்டில் ஏற்ப்பட்ட போர்காரணமாக தொடர்நிலையாக இயங்குவதற்கான வாய்ப்புக்கள் தவிர்க்கப்ட்ட நிலையிலும் நாடக விழாவானது செயற்ப்பட்டு வருகின்றமை சிறப்பிற்குரிதாகும்
இம்முறைஅதன் அறாத்தொடர்ச்சியாக இம்முறை 57 ஆவது நாடக விழா   நிகழ்தப்பட்டமை குறிப்பிடத்தக்கது.

 நீண்ட காலத்திற்கு பின்பு நாடக விழாவானது  கடந்த ஆண்டு இரவுப்பொழுதில் நிகழ்த்ப்பட்டமை போன்று இம்முறையும் இராப்பொழுதொன்றில் இடம்பெற்றது.

இக்கல்லூரிக்கு நீண்ட கால கலைச்செழுமையுடன் கூடிய வரலாற்றுப்பாரம்பரியமும் கலைத்துறைக்கு செழுமையான பங்களிப்pபினை ஆற்றிய கலைஞர்களினை பிரசவித்த பெருமையும் உண்டு.
 அவ்வகையில் ஈழத்து நவீன நாடகத்தின் தந்தை எனப்போற்றப்படுகின்ற கலையரசு சொர்ணலிங்கம்  இலங்கை திரைப்படத்துறையில் சாதித்த சி.எஸ்.அருமைநாயகம்  வானொலி நாடகங்களில் சாதித்த மரிக்கார் இராமதாஸ் போன்ற பல கலைஞர்களினை வழங்கிய பெருமையுண்டு.

இப்பின்னனியில் நாடகவிழாவானது மாணவர்களின் கலைத்திறனினை வெளிக்கொணர வைப்பதினை நோக்காக கொண்டு செயற்ப்படுகின்றன. இதனடிப்படையில்  சம்பந்தர் ,சுந்தரர் ,மாணிக்கர் ,வாகீசர் எனும் நான்குஇல்லங்களுக்கிடையே போட்டிகள் நிகழ்த்தப்படுகின்றன.

வாகீசர் இல்ல மாணவர்களது நடிப்பில்  மெல்லதமிழ் இனி  சம்பந்தர் இல்ல மாணவர்களின் நடிப்பில் பொம்மலாட்டம் மாணிக்கர் இல்ல மாணவர்களின் நடிப்பில் இழப்பதற்கல்ல சந்தரர் இல்ல மாணவர்களது நடிப்பில்  மானுடம் எங்கே? ஆகிய நான்கு நாடகங்கள் நிகழ்த்தப்பட்டன.

போட்டியான வகையில் நாடக விழாவானது நிகழ்த்தப்படுகின்றதென்பதிற்க்கப்பால் காத்திரமான வகையிலான அரங்கப்பாரம்பரியத்தினை வளர்த்துச் செல்வதற்கான வகையில் விழா இடம் பெறுகின்றமை சிறப்பான விடயமாகும்.

    நான்கு இல்லத்தினை சேர்ந்த மாணவர்களும் ஒரே பாடசாலை சேர்ந்தவர்கள் எனினும்   அவர்களிடையே வெற்றி பெற வேண்டும் என்ற அவா மேலோங்கி காணப்படுவது தவிர்க்கவியலாது. ஆயினும் அவர்களிடையே பொறாமை உணர்வினை விடுத்து போட்டி மனோபவத்துடன் செயற்படுவதற்கு மாணவர்களினை வழிப்படுத்த வேண்டியது இல்லங்களின் பொறுப்பாசிரியர்களின் கடமையாகும்.

 நாடகப்போட்டியென்பது குதிரைப்பந்தயம் அல்ல மாறாக மாணவர்களிடையே ஒளிந்துள்ள கற்ப்பனா சக்தியி



னை வெளிக்கொணர்வதற்கும் தன்னை நம்பி இயங்குவதற்கான களவெளியினை ஏற்ப்டுத்திக் கொள்ளவதற்கான வாய்ப்பாகவும் அமையவேண்டும்.
 வெற்றி தோல்வி என்பது இயல்பானவிடயம் அவற்றினைவிட இயங்கியலுக்கூடாக கற்றுக்கொண்ட விடயத்தினை உய்த்துனர்ந்து கொள்வதற்கான வாய்ப்புக்களினை ஏற்ப்படுத்தி கொள்ளவதற்கான வாய்ப்பாகவும் அமையவேண்டும்.

 வெற்றி தோல்வி என்பது இயல்பானவிடயம் அவற்றினைவிட இயங்கியலுக்கூடாக கற்றுக்கொண்ட விடயத்தினை உய்த்துனர்ந்து கொள்வதற்கான வாய்ப்புக்களினை ஏற்ப்படுத்தி கொள்வது பொறுப்பானவர்களின் தலையாய கடமையாகும்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக