என்னைப் பற்றி

புதன், மார்ச் 30, 2022

அரங்கு எப்போதும் கற்றலுக்குரியது

 


(எஸ்.ரி.அருள்குமரன்)


அத்தியாயம்1

  அரங்கு சார்ந்த பயணங்கள் எப்போதும் மகிழ்வளிப்பனவாகவும்,,கற்றுக்கொள்ளலுக்கான களவெளயினை ஏற்படுத்துவனவாகவும் அமைகின்றது.

யாழ்ப்பானப்பல்கலைக்கழகத்தில் கல்வி கற்ற காலத்தில் கலாநிதி க.சிதம்பரநாதனின் வழிகாட்டலில் நிகழ்த்திய அரங்க செயற்பாடுகள் பசுiமாயனதாகும்.

அவைபல கற்றுக்கொள்ளலுக்கும்புதிய சிந்தனையுடன் பயனிப்பதற்கும் நிகழ்த்தபட்ட அரங்க செயற்பாடுகளின் ஊடாக பலம்,பலவீனங்களை உய்த்துனர்ந்துஅடுத்த கட்ட நகர்விற்கு செல்லக்கூடியதாவும் அரங்கின் ஊடாக சமூகமாற்றத்திற்கும் சமூக ஊடாட்டத்திற்கும் வாய்ப்புக்கள் ஏற்படுத்தப்பட்டன.

சுனாமி எனும் இயற்கையின் கோரத்தாண்டவத்திற்கு மக்கள் முகம் கொடுத்து சொல்லொனாத்துயர்களை அனுபவித்த பொழுதுகளில் அம்மக்களது பிரச்சினைகளை தீர்த்துக்கொள்வதற்கும், அவர்களது உளவிடுதலைக்கான திறவுகோல்களை ஏற்படுத்துவதினை நோக்கமாக கொண்ட வகையில் அரங்க செயற்பாடுகள் மேற்கொள்ளப்பட்டன.

இடம்பெயர்ந்த மக்கள்  முகாம்வாழ்வில் இருந்து மீண்டு தமது சொந்த இடங்களில் மீளக்குடியமர்ந்த பின்னர் தமது தொழில்  சார்ந்த செயற்பாடுகளில் மீள   செயற்பட முயன்ற காலப்பகுதியில் பட்ட ஆற்றுகை நிகழ்த்தப்பட்டது.

அவ்வாற்றுகை செயற்பாட்டில் ஈடுபட்ட போது ஏற்பட்ட அனுபவம் வித்தியாசமானதாக அமைந்திருந்து.

காலை வேளையிலேயே  அரங்க செயற்பாட்டிற்கான தயார்ப்படுத்தல்கள் மேற்கொள்ளப்பட்டன.

கிராமிய விளையாட்டுக்கள் சிறுவர்களுடன் இணைந்து விளையாடப்பட்டதுடன் ஊர் மக்கள்,பெரியவர்களுடன்  பல விடயங்கள் கதைக்கப்பட்டன.

 கதைத்து பெறப்பட்டகதைகளின் ஊடாக ஆற்றுகை மேற்கொள்வதற்கான கருத்துப்படிமங்கள் உருவாக்கப்பட்டன.

மாலை வேளை  பருவரையாhன ஆற்றுகை திட்டமிடலுடன் ஆற்றுகை களத்திற்கு சென்றோம்.

  மக்கள் மீளவும் பயமற்று கடலுக்கு சென்று தொழில் மேம்பாட்டினை மேற்கொள்வதற்கான நம்பிக்கையினை அளிப்பதாக ஆற்றுகை மேற்கொள்வதற்காக திட்டமிடப்பட்டன.

 ஆற்றுகையின் ஆரம்பித்தில் கடலுக்குள்  மீன் பிடிக்க செல்வதாக ஆற்றுகையினை மேற்கொண்டபோது நண்பர் சுதன்   'நீ மீனா நடி. நாங்கள் மீன்பிடிப்பவர்களாக நடிக்கின்றோம் அதை வைச்சுக்கொண்டு ஆற்றுகையனை நகர்த்திச்செல்வோம்' என்றார்.

 அவரது கோரிக்கையினை ஏற்று நான் மீனாக ஆற்றுகைசெய்தபோது      மீனவர்கள் சுனாமி அடித்தபின்னர் கடலுக்குள் வருவதில்லை. நாம் எல்லோரும் சுதந்திரமாக திரிகின்றோம் என்பதாக  ஆற்றுகையினை மேற்கொண்டபோது மீனவர்களாக நடித்தவர்கள் எங்களை பிடித்து இழுத்துவந்து மக்கள் கூடி நிற்கின்ற இடத்தில் ஆற்றுகையினை மேற்கொண்டனர்.

இவ்வாற்றுகை மக்களுடன் ஊடாடி ,மக்களது கருத்துக்களை உள்வாங்கி செயற்படுத்துகின்ற ஆற்றுகை எனும் வகையில் மிகவும் அவதானமாக மேற்கொள்ளப்பட்டிருக்க வேண்டும். ஆனால் அத்தகையவகையில் நிகழ்த்தப்படவில்லைஎன்பதை இப்போது உணர்ந்துகொள்ள முடிகின்றது.

 மீனவர்களாக நடிக்கின்றவர்கள் மக்களோடு ஊடாடுகின்றபோது 'என்ன  நீங்கள் கடலுக்கு சென்று பிடிக்காமமையினால் மீன்கள் சுதந்திரமாக திரிகின்றன என குறிப்பிட்ட போது  பங்காளிச்செயலாளிகள் (ஆற்றுகையில் பங்குபற்றியவர்கள்) தமது உணர்வுகளினை வெளிப்படுத்தியதுடன் கருத்துக்களினை குறிப்பிட்டு ,மீனாக ஆற்றுகை மேற்கொண்டவர்களை பிடித்தனர்.

.

 அவ்வேளை அவர்களது பிடியில் இருந்து தப்பி ஓடுவதாகநான் பாவனை செய்தபோது ஒருவர் என்னை பிடித்தவர் தலையை பிடித்து மூன்று  முறை  மண்ணில் அடித்தார்.

அவரதுதாக்குதலுடன் மூச்சிறைத்துப்போன நான் அப்படியே கிடந்துவிட்டேன். என்ன செய்வது என்று தெரியவில்லை. 

ஆற்றுகை முடிந்தபின்னர் கருத்துக்கள் பல பகிரப்பட்டபின்னர் சுதாகரித்துக்கொண்டு எழுந்த எனக்கு என்னை தாக்கியவர் கை தந்து நன்றாக நடித்தீர்கள் எனக்குறிப்பிட்டார்.

எனக்கோ அவரது பாரட்டுதலை விட அடி வாங்கிய ஞபாகம் நினைவுக்கு வருகின்றது. அவர் ஏன் என்னை இவ்வாறு தாக்கினார் என்பதற்கான காரனத்தினையும் அறிந்துகொள்ள வேண்டும் என மனம் தவித்தது.

அதற்கான காரனத்தை அவர்களிடம் கேட்டபோது குறித்த மீன் ஒன்றினது பெரினை குறிப்பிட்டு அம்  மீனை  வலையை விட்டு வெளியே எடுத்த பின்னர் அதை மூன்று முறை தiலைப்பகுதியில் அடித்தால் அது உயிரற்று போய் விடும் எனக்குறிப்பிட்டார். அம்மீனாக உங்களை  பாவனை செய்து      உங்களையும் தாக்கியதாக குறிப்பிட்டார்

இந்தவிடத்தில் இருந்து நோக்கும்போது அரங்க செயற்பாடு மக்களிற்கானது, மகிழ்வளிப்பிற்குரிது, அவர்களது சிந்தனையில் மாற்றத்தினை கொண்டுவருவதற்கான தளம் என்பது மாற்றுக்கருத்திற்கு இடமில்லை. ஆனால் அவர்களுடன் ஊடாடு கின்ற போது பல எதிர் வினைகளிற்கு முகம் கொடுக்கின்ற வகையில்  எம்மை தயார்ப்படுத்திச்செயற்பட வேண்டும் எனும் பட்டறிவினை நான் உணர்ந்துகொண்டேன்.

  அரங்கு என்பது எப்போதும் திட்டவட்டமான வகையில் முன் ஆயத்தங்களுடன்  இயங்கவேண்டியதுடன் .மக்கள் பங்குகொள்வதற்கான வாய்ப்புக்கள் முன்திட்டமிடலுடன் வழங்கப்படவேண்டும் என்பதை எனது அரங்க செயற்பாட்டு வாழ்வில் கற்றுக்கொண்டேன்.

ஆற்றுகை தளம் மணல் என்பதால் நான் தப்பித்துக் கொண்டேன் மாறாக காயங்கள் ஏற்படக்கூடிய சூழல் உள்ள அற்றுகை தளம் எனில் பாதிப்பிற்கு முகம் கொடுக்க நோர்ந்திருக்கும்

ஆற்றுகையாளனுக்கும் பார்ப்போனுக்கும் இடையில் உணர்வு ரீதியான புரிதல் கட்டமைக்கப்படவேண்டும் என்பதில் மாற்றுக்கருத்துக்கு இடமில்லை மாறாக உணர்ச்சியுடனான ஊடாட்டம் வருகின்றபோது ஆற்றுகையாளனும் பார்ப்போனும் இடைவெளியற்ற வகையில் நெருங்குpன்றபோது அல்லது ஊடாடுகின்றபோது அசம்பாவிதங்கள் நிகழ்துவிடுவதற்கான வாய்ப்புக்கள் அதிகம். அதனை  எவ்வாறுகையாளவேண்டும் என்பதற்கான பயிற்சிகள் இன்றி ஆற்றுகை தளத்திற்கு செல்வது மிகவும் ஆபத்தானது.

 ஆற்றுகையினை தகவமைக்கும் போது அல்லது ஆற்றுகையினை மேற்கொள்கின்றபோது இத்தகைய விடயங்களை கவனத்தில் கொள்ள வேண்டும் என அனுபவ ரீதியாக உணர்ந்துகொண்டேன். இல்லையேல் வெறும் உணர்ச்சிவசமானதாக மாறிவிடுவுதுடன் பங்குபற்றுச்செயலாளி பங்குபற்றுகின்றபோது வெளிப்படுத்துகின்ற உணர்ச்சியானது ஆற்றுகையின் மையத்தினை சிiதை;துவிடுவதுடன் ஆற்றுகையாளனையும் பாதித்து விடும் என்பது மாற்றுக்கருத்திற்கு இடமில்லை. ஆற்றுகையில் மீனாக  நடித்த நண்பருக்கு முழங்கால் தாக்கப்பட்டது நினைவுக்கு வருகின்றது.

அரங்க என்பது  மக்களுக்கானது. மக்களுக்கான அரங்கசெயற்பாட்டை மேற்கொள்கின்ற ஆற்றுகையார்கள் மிக முக்கியமானவர்கள். அவர்களது பாதுகாப்பும் அவர்களிற்கான அங்கீகாரமும் அவசியம் என்பதை இச்செயற்பாட்டனுபவம் உணர்த்தியது.


கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக