என்னைப் பற்றி

புதன், மார்ச் 30, 2022

சிறுவர் நாடகங்கள் உள மாற்றத்திற்கும்களம் அமைத்து கொடுக்கும்.


(எஸ்.ரி.அருள்குமரன்)

அத்தியாயம் 2

சிறுவர் நாடகங்கள் பங்குபற்றுகின்ற மாணவர்களிடையே உள மாற்றத்திற்கும், கற்பனைரீதியான தேடலுக்கும் களம் அமைத்து கொடுக்கும்.

சிறுவர்களுடன்  இணைந்து அரங்க செயற்பாடுகள் மேற்கொள்வது அலாதியானது.மகிழ்ச்சிக்குரியது.பல விடயங்களை கற்றுக்கொள்வதற்கான சந்தர்பங்களினை ஏற்படுத்துகின்றன.

சிறுவர்களது மனோதிடம்,தொடர்பாடல் திறன்,ஆக்கவியல்செயற்பாடுகள் என்பவற்றினை கருத்தில் கொண்டு சிறுவர்களுடன் இணைந்து நாடகங்கள் தயாரிக்கின்றபோது கவனத்தில் கொள்ள வேண்டும்.

இப்பின்னனியில் சிறுவர் நாடகங்கள் பல இடங்களில் தயாரித்த போது பல்வேறு மாறுபட்ட அனுபவங்களினை பெற்றுக்கொள்ளக்கூடியதாக இருந்தது.

இந்வகையில் கீரிமலை நகுலேஸ்வரா ம.வியில் அப்போது  அதிபராக கடமையாற்றிய சு.ஸ்ரீ.குமரன் அவர்களின் வேண்டுகோளிற்கு இணங்க அவரது வழிகாட்டலில்  அப்பாடசாலை சிறார்களிற்கு நாடகம் பயிற்றுவிப்பதற்கான வாய்ப்பு ஏற்பட்டது.

அதிபர் மாணவர்களிடையே உள்ள திறன்களை வெளிக்கொனர்வதற்காக கலைத்துறை சாhந்த செயற்பாடுகள் மூலம் களங்களை திறந்திருந்தார்.அவரும் கலைத்துறையை சார்ந்;த எழுத்தாளளர் என்பதால்  சாத்தியமாகியது.

கற்றலில் மாணவர்கள் முதன்மை நிலையடைவதற்கு கலைத்துறை சாhந்த செயற்பாடுகளில் விரும்புடன் ஈடுபடுவதற்கு களங்கள் ஏற்படுத்தப்பட வேண்டும்.

 நாடகம் பழக்குவதற்கு ஆரம்பித்த வேளையில் மாணவர்கள் பலரும் ஒன்றுகூடியிருந்தார்கள்.நாடகம் பழக்கும்போது எம்போதும் மகிழ்வளிப்பிற்கு முதன்மை கொடுத்தவகையிலும்,சுயரீதியான நடிப்பிற்கு முதன்மை கொடுத்தவகையிலும் செயற்படுவது வழக்கம்.

நாடகம் சிறந்தமுறையில் வரவேண்டுமமாயின் ஒழுங்கானமுறையில் ஒத்திகைகளில் கலந்துகொள்வது வழங்கப்படுகின்றபாத்திரங்களினை உணர்ந்து நடிப்பது முக்கியம்.

 சிறுவர்களிற்கு நாடகம் பழக்குகின்ற போது இவற்றினை அவர்களிற்கு எற்றமொழியில் புலப்படுத்தி வெளிப்படுத்தவேண்டும். அவ்வாறு வெளிப்படுத்தகின்றபோதே நாடகம் சிற்பானதாக அமையும்.

நாடகம் நடிப்பதற்கு ஆர்வம் உள்ளவர்கள் இணைந்து விட்டால் நாடகத்தின் வெற்றி சாத்தியமாகின்றது.

பாத்திரங்கள் வழங்குகின்ற போது நடிப்பதற்கு ஆர்வம் உள்ளவர்களை இணைத்துக்கொள்ளவேண்டும.;

ஒருமாணவன் மிகவும் அமைதியாகவும்,அதிகம் கதையாதவனாவும் இருந்தான்.இவ்வாறு ஒதுங்கி இருப்பவர்களை இணங்கண்டு அவர்களிற்கான வாய்ப்பினைவழங்குகின்ற போது அவர்கள் ஆளுமையுள்ளவர்களாக மிளிர்வர்கள்

இந்தவகையில் அவனை நடிப்பதற்கு விரும்பம் உள்ளதாக எனக்கேடட்போது ஓம் என்றான். ஆனால் அவனால் உரையாடல்களை  உடனே பேசமுடியாது இருந்ததது. மிகவும் சிரமப்பட்டுத்தான் உரையாடலை மேற்கொண்டிருந்தான்..ஆனால் அவனது ஆர்வம் அப்பாத்திரத்தில் காட்டிய ஈடுபாடு நான் பழக்கி விட்டு வந்தபின்னர் அதனை மெருகேற்றுவதற்காக பொறுப்பாசிரியர் காட்டிய ஆர்வம் என்பன அவன் சிறந்த முறையில் நடிப்பதை சாத்தியமாக்கியது.


இம்மாணவன் பின்னர் வாசிப்பதில் சிரமமமற்று சிறப்பாக செயற்பட்டார்.

அதீத திறமையினை வெளிக்காட்டிக்கொண்டிருப்பவர்களைவிட திறமையினை வெளிக்காட்டவாய்ப்பற்று ஒதுங்கியிருப்பவர்களிடம் அசாத்திய திறன் ஒளிந்து காணப்படும்..அவற்றை இனங்கண்டு அவர்களது திறன்களினை வெளிக்கொணர்வதற்கு இத்தகைய செயற்பாடுகiளினை மேற்கொள்ள வேண்டும்.






கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக