என்னைப் பற்றி

ஞாயிறு, மார்ச் 27, 2022

கலைச்செயற்பாடுகளிற்கான கருவூலமாகிய சுன்னாகம் பொது நூலகம்.

எஸ்.ரி.அருள்குமரன் (வாசகன். சுன்னாகம் பொது நூலகம்.) 


 காலம் தனக்கான இயங்கியல் பெறுமானத்தினை தர நிர்ணயம் செய்கின்றது. அத்தர நிர்ணயம் செய்வதற்கான தலைமைகளை அக்காலமே வழங்குகின்றது. இடத்தினை மாற்றியமைத்து அதனை அழகியலாக்கி செயல்முனைப்பிற்குரிய வெளியாக்குவதில் அவ்விடத்தினை தலைமைத்துவப்படுத்துபவர்களது சிந்தனையின் விரிகோட்டில் தங்கியுள்ளது. 

 சிந்தனையினை செயல் வடிவமாக்குவதற்காக தன்னுடன் இனைந்து பயணிக்கக்கூடியவர்களை இணைத்துக்கொண்டு இச்செயலினை உயிர்கொள்ளும் வகையயில் வடிவமாற்றம் கொடுக்கின்ற தலைமைகள் கிடைக்கின்றபோது அவ்விடம் செழுமைப்படுகின்றதுடன் சமூகமும் செழுமைப்படுகின்றது. 

 நூலகங்கள் வாசிப்பின்நுகர்ச்சியினை கண்டு கொள்வதற்குரிய இடம் மட்டுமன்று.மாறாக இயங்கியலுக்குரிய வெளியினைகொண்ட இடமாக பரினமிக்கின்றபோதே அதன் தாக்கப்பெறுமனம் உயர்ச்சிகொள்கின்றது. 

 சுன்னாகம் பொது நூலகம் மிக உன்னதமான பணியினைஆற்றிய நிறுவனம். 

வாசிப்பு தளத்திற்காக வந்தவர்களை இணைத்து செயல்தளத்திற்கானவர்களாக மடைமாற்றிய பணியினை நல்கிய நிறுவனம். வாசிப்பு மனிதனை பூரணமாக்குகின்றது.என்பதை செயன்முறைரீதியாக கண்டு கொள்வதற்குரிய தளமாக சுன்னாகம் பொதுநூலகம் இருந்தது.என்பதை எனது ஞாபகவங்கிகளில் இருந்து மீட்டுப்பார்க்கின்றேன். 

 சுன்னாகம் பொது நூலகத்திற்கும் எனக்குமான உறவு நீண்டது.உடுவில் வசித்த காலத்தில் பத்திரிகைகள் வாசிப்பத்காக வருவதுண்டு.ஆனால் புத்தகங்களை பெற்றுக்கொள்வதற்குரிய வாய்ப்பு இருக்கவில்லை.காரணம் நாம் இடம்பெயர்ந்து இருந்ததினால்அப்பிரிவில்நிரந்தர வதிவிடத்தை கொண்டவர்கள்; மட்டுமே புத்தகங்களை இரவல் எடுத்துச்செல்லக்கூடியதாக நூலக சட்டம் இருந்தது.
அது தவிர்க்கவியலாததும் கூட. உயர்தரம் கற்வேளையிலும் பல்கலைக்கழகத்திற்கு தெரிவு செய்யப்பட்ட பின்னர் கூட நூலகத்தின் சஞ்சிகைப்பகுதியில் சஞ்சிகைகளினை எடுத்து வாசிப்பதுண்டு அது ஏதே ஒருவகையில் மன நிறைவினை தருவதுண்டு. 

 பல்கலைக்கழகத்தில் கல்வி கற்றுக்கொண்டிருந்த காலப்பகுதியில் நாட்டில் ஏற்பட்ட யுத்தச்சூழ்நிலை காரணமாக பல்கலைக்கழகம் மூடப்பட்டிருந்த வேளையில் பெரும்பாலான பொழுதுகள் சுன்னாகம் பொதுநூலகத்தில் கழிந்தது. 

 அக் காலப்பகுதியில் நூலகராக மதிப்பிற்குரிய க.சௌந்தரராஐன் ஐயா கடமை பொறுப்பேற்றிருந்தார். ஒருநாள் வழமைபோல் நூலகத்திற்கு சென்றிருந்தபோது அவருடன் கதைக்கக்கூடிய சூழ்நிலை கிடைத்தது.அப்போது புத்தகங்கள் பெற்றுக்கொள்வதற்குரிய வாய்ப்பின்மை பற்றி குறிப்பிட்டபோது இப்போது நடைமுறையில் சில மாற்றங்களை கொண்டு வந்திருக்கின்றோம் இப்பிரதேசத்தில் நிரந்தரமாக வதிப்பவர்களது உறுதிப்படுத்தலுடன்இணைந்துகொள்ள முடியும் எனத்தெரிவித்தார். அது மகிழ்வான செய்தியாக இருந்தது. காரணம் பல்கலைக்கழகம் மூடுண்ட நிலையில் புத்தகங்களை பெற்றுக்கொள்ள முடியாத நிலையில் இச்செய்தி வரப்பிரசாதமானதாக இருந்தது. 

 நிரந்தர வதிவிடத்தாரின் உறுதிப்படுத்தலுடன் நூலக அங்கத்தவராக இணைந்துகொண்டதினால் நூல்களை வாசிப்பதற்குரிய வாய்ப்பு கிடைத்ததுடன் இயங்கியல் ரீதியாக பயணிக்கக்கூடிய களவெளிகள் ஏற்படுத்தப்பட்டன. நூலகர் சௌந்தரராஐன் ஐயா பல்பரிமான சிந்தனை உடையவராகவும் இளம் செயற்பாட்டாளர்களை ஊக்குவிக்கின்றவர். 

அவர் பணிக்காலத்தில் கலைத்துறைசார்ந்த பல செயற்பாடுகளை ஆக்கவியல் சார்ந்த பரிமானத்துடன் செயற்படுத்தியிருந்தார். 

இலக்கியம்,ஓவியம்,புகைப்படம் ,நாடகம் வில்லுப்பாட்டு கவியரங்கம் முப்பரிமான நூலகம்,சிறுவர்களுக்கான கதைசொல்லல் என கலைத்துறைசார் பல்பரிமான செயற்பாடுகளை மேற்கொண்டிருந்தார். அவருடன் இணைந்து பல செயற்பாடுகளில் ஈடுபட்டிருக்கின்றபோதும் நாடக செயற்பாட்டாளர் எனும்வகையில் நாடகசெயற்பாடுகளில் ஈடுபட்ட காலங்களில் பலவிடயங்களைகற்றுக்கொள்ளக்கூடியதாக இருந்தது.

 உலக நாடக தின விழா,நூல்வெளியீடு விழிப்புணர்வுச்செயற்பாடு என பல தளங்களில் நாடகங்கள் நிகழ்த்தப்பட்டது. 'நித்தம் நித்தம் சுத்தம்' எனும் தெருவெளி நாடகம் மருதனார்மட நூலகத்தின்பொதுவெளியில் இடம்பெற்றது. டெங்கு நோய்த்தாக்கம் தொடர்பான விழிப்புணர்வினை ஏற்படுத்துவதுடன் நாம் பயன்படுத்திவிட்டு வீசியெறிகின்ற பிளாஸ்ரிக்பொருட்கள் போன்ற பாவனைக்குதவாக பொருட்களில் தேங்கிநிற்கின்ற நீர் டெங்கு நுளம்பின் உற்பத்திக்கு சாதகமாக அமைகின்றது. 

நாம் சுத்தமாக இருக்க வேண்டும் எமது சுற்றுச்சூழலை சுத்தமாக வைத்திருக்க வேண்டும் எனும் கருத்தினை வலியுறுத்தி இவ்வாற்றுகை நிகழ்த்தப்பட்டது.இவ்வாற்றுகையினை ஐயாவுடன் இணைந்து நெறியாழ்கை செய்திருந்தேன். இவ்வாறு ஆரம்பித்த நாடகசெயற்பாடுகள் நூலகத்தின் பல நிகழ்வுகளில் நிகழ்த்தப்பட்டன. 

ஓவிய,புகைப்பட,நூல் கண்காட்சிகளுடன் நாடகமும் அரங்கியலும் பாடத்தில் பரீட்சைக்கு தோற்றுகின்ற மாணவர்களிற்கான கருத்தரங்கு நிகழ்த்தப்பட்டது. 

இக்கருத்தரங்கில்பு.கனேஷராஐh,எஸ்.ரி.குமரன்,எஸ்.ரி.அருள்குமரன்,எஸ்.மயூரன் ஆகியோர் வளவாராக கலந்துகொண்டு மாணவர்களிற்கான வழிகாட்டல்களை மேற்கொண்டிருந்தனர். இந்நிகழ்விற்கு பிரதம விருந்தினராக நாடகத்துறை விரிவுரையாளர் சி.ஜெயசங்கர் கலந்துகொண்டிருந்தார். அவர் குறிப்பிட்ட கருத்து மிக முக்கியமானது . 'நூலகம் இயங்குநிலையில் இருக்கவேண்டும் அதுதான் மாற்றத்திற்கானதாக இருக்கும்' என குறிப்பிட்டது நினைவுக்கு வருகின்றது. 

மாலைவேளை கலைமுகம் சஞ்சிகையின் அறிமுக நிகழ்வுஇடம்பெற்றது. அந்நிகழ்வில் திருமறைக்கலாமன்றத்தின் பிரதி இயக்குனர் யோன்சன் ராஐ;குமார்,கலைமுகம் சஞ்சிகையின் பொறுப்பாசிரியர் சி.செல்மர் எமில் ஆகியோர் கலந்துகொண்டிருந்தனர். 

 நிகழ்வொன்றில் எனது எழுத்துரு-நெறியாழ்கையில் சாட்சி எனும் நாடகம் இடம்பெற்றது.நகைச்சுவைக்கு முதன்மை கொடுக்கப்பட்டு நிகழ்த்தப்பட்ட நாடகம் பலரது பாராட்டினை பெற்றுக்கொண்டது. 

 உலக நாடக தின விழாவினை இப்பொது நூலகத்தில் நூலகர் க.சௌந்தரன் ஐயாவினது கோரிக்கைக்கமைவாக 2010ம் ஆண்டு கொண்டாடப்பட்டது. அந்நிகழ்வில் எஸ்.ரி.குமரன்,எஸ்.ரி.அருள்குமரன் ஆகியோரின் நெறியாழ்கையில் கூட்டசைவு எனும் அபத்த நாடகம் நிகழ்த்தப்பட்டது .இந்நாடகத்தின் மையப்பொருளாக அதிகார போட்டியும் அதன் இடர்பாடுகளும் ஊடுபொருளாக வெளிப்படுத்தப்பட்டது. 

பெண்வாழ்வின் தரிசனங்கள் எனும் நாடகமானது பாகீரதி கனேசதுரையின் எழுத்துருசட்டகத்தினை அடிப்படையாகக்கொண்டு எம்மால் நிகழ்தப்பட்டது. மகளீர் தினம் மற்றும் உலக நாடக தினக்கொண்டாட்டம் இணைத்து நிகழ்த்தப்பட்டபோது இவ் நாடகம் நிகழ்த்;தப்பட்டது. உதயசூரியன்சனசமூக நிலைய அங்கத்தவர்கள் இந்நாடகத்தில் பங்கெடுத்திருந்தனர். 

 செவிட்டு ராமு எனும் நகைச்சுவை நாடகம் மறுபாதி சஞ்சிகை அறிமுக நிகழ்வில் இடம்பெற்றது. இந்நாடகம் நூலகர் க.சௌந்தரராஐன் ஐயாவின் எழுத்தாக்கத்தில் நூலகர் க.சௌந்தரராஐன் ஐயா,எஸ்.ரி.குமரன்,எஸ்.ரி.அருள்குமரன்,த.துவாரகன்,மகழீசன் ஆகியோர் ஆற்றுகையினை மேற்கொண்டிருந்தனர். இந்நாடகம் பலரது பாராட்டினை பெற்றுக்கொண்டது. புத்தாக்க அரங்க இயக்க கலைஞர்களின் நடிப்பில் எஸ்.ரி.குமரன் ,எஸ்.ரி.அருள்குமரன் நெறியாழ்கையில் வாசிப்பதனால் மனிதன் பூரணமடைகின்றான் எனும் தெருவெளி நாடகமானது வாசிப்பின் மகத்துவத்தினை ஆற்றுகையாக வெளிப்படுத்தியிருந்தது. 


ஞான விலாசம் எனும் தொனிப்பொருளில் மாதந்தம் நூல்கள்பற்றிய அறிமுகங்கள்இடம்பெற்றிருந்தன.அவை எழுத்தாளர்களை சந்திப்பதற்கும்,அவர்களுடன் கலந்துரையாடுவதற்கும் வாய்ப்புக்களை உருவாக்கின. உலக புத்தக தின விழாக்கொண்டாட்டங்களில் வில்லிசை நிகழ்த்தப்பட்டிருந்தது. 


புத்தகம் தரும் வித்தகம் எனும் வில்லிசையானது நூலகர் சௌந்தரரன் ஐயா எழுத்து -நெறியாழ்கையினை மேற்கொண்டதுடன் அவரே முதன்மையான கதைசொல்லியாக செயற்பட்டிருந்தார் புத்தகம் வாசிப்பதன் முக்கியத்துவம் நூலினது வரலாறு என்பவற்றை இனிமையான பாடல்களின் ஊடாக நகைச்சுவைக்கூடாக கதை சொல்லப்பட்டது. அதன் காட்சிப்படிமம் இன்றும் மனக்கண்முன் நிற்கின்றது. புத்தக தின விழாவில் மிகச்சிறந்தமுறையில் ஏடுகள் ஊர்வலமாக புனிதத்துவத்துடன் எடுத்துவரப்பட்டு நிகழ்த்தப்பட்டது. இவ்வாறு சுன்னாகம் பொதுநூலகத்தில் நிகழ்த்தப்பட்ட கலைச்செயற்பாடுகள் பற்றிய நினைவுகள் வந்து செல்கின்றன. 

 சுன்னாகம் பொது நூலகத்தின் பணி சிறக்கட்டும்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக